Wednesday, May 21, 2008

புதிய மொந்தையில் பழைய கள்ளு

வெய்யில் வந்துருச்சாம்லெ! அது வீணாப் போகலாமோ?
பரீட்சை முடிஞ்சு பெரிய லீவு விட்டதும் ஒரு திருவிழா மாதிரிதான் நம்மூட்டுலே வத்தல் வடாம் போட ஆரம்பிச்சுருவாங்க. இதுக்குன்னே ஒரு ஈவெண்ட் கோஆர்டினேட்டர் வந்துருவாங்கப்பா ஊருலே இருந்து. எல்லாம் எங்க பெரியம்மாதான்.



பசங்க காக்காமாதிரி சுத்தறோமுன்னு எங்களை வச்சே காக்கா விரட்டப் போடும் திட்டம்தான் இது.



திட்டம் பக்காவா இருக்கும். அரிசியை மாவு மில்லில் கொடுத்து அரைச்சுவாங்கறதென்ன, அன்னிக்கு ராத்திரியே அதைக் களியாக் கிளறி
வைக்கறதென்னன்னு திமிலோகப்படும் வீடு. பச்சமிளகாய் அரைச்சுக் கொடுத்துட்டுப் பெரியக்கா 'ஐயோ அம்மான்னு' அலறிக்கிட்டேத் தேங்காயெண்ணையைக் கையில் பூசிக்கிட்டு நாட்டியம் ஆடுவாங்க.
அப்பெல்லாம் இந்த மிக்ஸியா பாழா? எல்லாத்துக்கும் அம்மியும் ஆட்டுக்கல்லும்தான்.



சலவையில் இருந்துவந்த பழைய வேட்டிகளையெல்லாம் எடுத்து அண்டாவில் ஊறவச்சுருவாங்க பெரியம்மா. எங்கே கட்டியிருக்கும் தன்னுடைய வேட்டியும் பறி போயிருமோன்னு அண்ணன் பதறிக்கிட்டு, அலமாரியில் இருக்கும் அவரோட வேட்டிகளை எடுத்துக்கிட்டுப்போய் தன்னுடைய படுக்கையில் ஒளிச்சுச் சுருட்டி வச்சுருவார். அண்ணன் அப்ப ஹைஸ்கூல் மாணவர்தான். ஆனாலும் ஊர்நிலவரத்தை அனுசரிச்சு வேட்டிதான் கட்டுவார். அப்பெல்லாம் வத்தலகுண்டுலே பேண்ட்ஸ் போட்டுட்டாலும்.....................




குட்டிச்சாத்தானுக்கு வேலை கொடுப்பதுபோல எனக்கும் ஒரு வேலை வந்துரும். எலுமிச்சம்பழத்தையெல்லாம் தரையில் அமுக்கி நசுக்கி உருட்டிக்கொடுக்கணும். அப்பத்தான் அதுலே இருந்து சாறு நிறைய வருமாம்.
வாசத்திண்ணையில் கருங்கல் போட்டுருக்கும். அங்கேதான் எனக்கு ட்யூட்டி.



மறுநாள் எதோ தீவாளிக்கு எந்திரிக்கிற மாதிரி, பொழுது விடியறதுக்குள்ளே எழுந்து குளிச்சு, காபித்தண்ணியெல்லாம் போட்டுக்குடிச்சுட்டு அக்காக்கள் தயாரா இருக்கணும். எல்லாம் ஈவண்ட் கோஆர்டினேட்டர் ஆட்டுவித்தலின் படி.




வெய்யில் வருமுன் பிழிஞ்சுறணுமுன்னு பெரியம்மா பிழிஞ்சு எடுத்துருவாங்க. வேலைக்கு உதவிசெய்ய வரும் முனியம்மா(க்கா எனக்கு மட்டும்) வந்து வேட்டிகளையெல்லாம் அலசிப் பிழிஞ்சுருவாங்க. பாயெல்லாம் மொட்டைமாடிக்குப் பறக்கும். காலையில் கண்ணைத்தொறந்து பார்த்தா நான் தரையிலே கிடப்பேன். உருட்டித் தள்ளிவிட்டுருப்பாங்க போல. கேட்டா வர்ற பதிலைப் பாருங்க.....'.நீ என்னிக்கு ஒழுங்காப் பாயிலே இருந்துருக்கே.... தெனமும் படுத்தப் பத்தாவது நிமிசம் உருண்டுக்கிட்டே போயிச் சுவத்துலே முட்டிக்கிறவதானே?'




பரபரன்னு முறுக்கு அச்சுலே மாவை நிறைச்சுக் கொடுக்கறதும், அதை அக்காக்கள் வாங்கிப் பாய்மேல் விரித்திருக்கும் ஈரவேட்டிகளில் பிழியறதும் ஜரூரா நடக்கும். பெரியம்மா பயங்கரி. இதுக்காகவே ஊரில் இருந்து வரும்போது கையோடு ரெண்டு மூணு முறுக்குப் பிழியும் தேன்குழல்படிகளையும் கொண்டுவர்ற ஆள்தான்.




எல்லா மாவும் தீர்ந்து இனிமேல் படியில் அடைக்க முடியாத நிலையில் வரும்போது அதையும் அடுக்கில் ஒட்டிப்பிடிச்சுக் கிடக்கறதைச் சுரண்டிவரும்
மாவையில் கலந்துக் கையால் கிள்ளிக்கிள்ளி சின்ன உருண்டைகளா ஒரு ஓரத்தில் அங்கங்கே முறுக்குக்களுக்கு இடையில் கிடைக்குமிடத்தில் வைச்சுருவாங்க.




இனிமேத்தான் என்னோட வேலை ஆரம்பிக்கும். நான் மொதநாளே என்னோட தோழியருக்குத் தகவல் சொல்லிட்டதாலே(அதான் எலுமிச்சம்பழம் உருட்டலின்போது) அவுங்களும் ஆஜராயிருவாங்க. அன்னிக்கு மட்டும் எங்க கூட்டத்துக்குச் சுதந்திரம் ஜாஸ்தி. காவல்காரிகள்!




முனியம்மாக்கா உதவியால் ரெண்டு பழைய நாற்காலிகளும் இன்னேரம் மாடிக்குப் போயிருக்கும். நாங்க நாலைஞ்சு பெட்ஷீட், நாலைஞ்சு அரைச்செங்கல் எல்லாம் எடுத்துக்கிட்டு மாடிக்குப் போவோம். பக்காவா ஒரு டெண்ட் போட்டுக்குவோம். படுக்கைவிரிப்பு எடுத்து ஒருபக்கமா ரெண்டு மூலைகளில் செங்கலைச்சுத்தி, மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவரில் வச்சுக்கணும். அடுத்தப் பக்கத்தை நாற்காலியின் முதுகுப்புறத்தில் மாட்டிவிட்டுத் துணிக்குப்போடும் கட்டைக்ளிப்பாலே இணைக்கணும். ஆச்சு நம்ம கூடாரம்.



படபடக்கும் காத்துலே பெட்ஷீட் அப்படியே தூக்கும்போதுச் செங்கல்லையும் இழுத்துத் தள்ளும். இந்தப் பக்கம் விழாமத் தெருப்பக்கம் விழுந்து, அந்தச் சமயம் யாராவது அங்கே போய்க்கிட்டு இருந்தா....... கடவுள்தான் அவுங்களைக் காப்பாத்தணும். கூடவே ரெண்டு குடைகளை விரிச்சு வச்சுக்குவோம்.




இதுக்குள்ளே வெய்யில் ஏறிவர ஆரம்பிச்சு மாவு உருண்டைகள் லேசாக் காஞ்சுவரும். சரியான சமயம் இதுவே. விரல்நுனியால் அசங்காம எடுத்து வாயில் போட்டுக்கணும். பிச்சுக்குன்னு நாக்குலே ஒட்டிக் கரையும். என் தோழிகள் கூட்டத்துக்கு இது ரொம்பப் பிடிக்கும். அவுங்க வீட்டுலே இதெல்லாம் செய்ய மாட்டாங்களாம். உருண்டை தீர்ந்ததும் முறுக்குவத்தலைத் திங்க ஆரம்பிப்போம். அதுக்குள்ளெ பெரியம்மா நாலைஞ்சுதடவை வந்து மிரட்டிட்டு, திங்க வேற எதுனாச்சும் கொண்டுவந்து தருவாங்க.




நாங்க போடும் கூக்குரலில் காக்காய்கள் பயந்துக்கிட்டு அந்தப் பக்கமே வராது. சாறு எடுத்த எலுமிச்சம்பழ மூடிகளையும் தொடப்பக் குச்சி, அக்கா போடும் லேஸுக்கான நூல்கண்டுலே இருந்து களவாண்ட நூல் எல்லாம் வச்சுத் தராசு செஞ்சு கடைவச்சு விளையாடுவோம். கடைக்கான பொருள், காசு எல்லாம் .....அதான் வடாம் காயுதுல்லே அதுதான்.




பதினொருமணியானதும் வெய்யில் கூடிப்போச்சுன்னு எங்களையெல்லாம் கீழே கூப்புட்டுருவாங்க. மாடியிலெ இருந்து இறங்கி வீட்டுக்குள்ளெ வந்தால் ஒரு அஞ்சு நிமிசத்துக்குக் கண்ணே தெரியாது. இருட்டிக்கிட்டு இருக்கும்.


அடிக்கிற வெயிலுக்குச் சீக்கிரமே வடாம் காய்ஞ்சுரும்போல. வேட்டிகளை அப்படியேச் சுருட்டிக்கிட்டு வந்து அதுலே பின்னம்பக்கம் லேசாத் தண்ணி தெளிச்சு வடாமெல்லாம் உதறி எடுத்துப் பெரிய பெரிய சுளகு, தாம்பாளம் எல்லாத்திலும் பரத்தி, வீட்டு முற்றத்திலேயே காயவிடுவாங்க பெரியம்மா. நம்ம ஆட்டம் க்ளோஸ். இனி அதுலே கைவைக்க முடியாது(-:


பெரியம்மா திரும்ப ஊருக்குப்போறதுக்குள்ளே பாவக்காய், சீனியவரைக்காய் வத்தல்,மோர்மிளகாய், வெங்காய வடகம் இப்படி எல்லாம் தயாராயிரும். இப்ப இந்தக் காலத்துலே யாராவது வேலைமெனெக்கெட இதையெல்லாம் போட்டுவைக்கிறாங்களான்னு இருக்கு. போனமுறை சென்னையில் சூப்பர்மார்கெட்டில் வடாம் பாக்கெட்டுகள் வச்சு இருந்ததைப் பார்த்தேன். ஹும் ............கொடுத்துவச்ச மக்கள்.

இங்கே நியூஸி வந்தபிறகு இதுக்கெல்லாம் ஏது வழி? கொஞ்சம் கொஞ்சமா இதையெல்லாம் மறந்துபோகும் நிலையில் இருந்தப்ப ஒரு டீஹைட்ரேடர் சேலில் அரைவிலையில் இருந்ததைப் பார்த்தேன். நமக்குத்தான் எதையாவது பரிசோதிச்சுப் பார்த்தே ஆகணுமே..... வாங்கிக்கிட்டேன். கூடவே கூடுதலா அஞ்சு தட்டுகள் உள்ள ஒரு பெட்டி. அம்பதும் பத்தும் அறுபது வெள்ளி. வாங்கும்போது கவனமா இவர் பார்வையைத் தவிர்த்ததையும் சொல்லணுமோ?:-) எங்கியோ பார்த்துக்கிட்டுச் செக்கவுட் கவுண்ட்டர்லே கொண்டுவந்து வச்சுறணும்!

அடுத்து இந்த மாவு கிளறும் வேலை. யாராலே களிக்கிண்டிக்கிட்டு இருக்கமுடியுது? நாமோ புதுமைப்பெண். புதுவழி கண்டு பிடிக்கலைன்னா எப்படி? மாவு வெந்து இருக்கணும். அதுதானே முக்கியம்?
அரிசியை வேகவச்சு அதை அரைச்சாக் களி வந்துறாதா? சோறுன்றதைத்தான் கவுரவமாச் சொல்றேன். மைக்ரோவேவில் சோறு ஆக்கிக் கொஞ்சம் ஆறுனதும் அதைப் ஃபுட் ப்ராஸசர்லே போட்டு நாலுசுத்து சுத்துனதும் களி மொத்தை வந்துருச்சு. ஆஹா.....இனி நம்ம கற்பனைக் கொடியைப் பறக்க விட்டால் ஆச்சுன்னு......கொஞ்சம் உப்பு, சீரகம் ரெண்டுமூணு பச்சமிளகாயைச் சேர்த்துக்கூடவே அரைச்சேன். மொளகாய்தான் சரியாக அரைபடாமல் திப்பித் திப்பியா இருந்துச்சு.

டீஹைட்ரேட்டர் தட்டில் தேன்குழல்படியில் மாவு நிறைச்சுப் பிழிஞ்சு பார்த்தேன். மொளகாய்த் திப்பிகள் ஓட்டையில் அடைச்சுக்கிட்டுக் கஷ்டமாப் போச்சு. அதுக்கென்ன? கிள்ளிவச்சால் ஆச்சு. ஒரு கப் அரிசிதான் என்றதால்
ரெண்டு தட்டுக்குத்தான் மாவு வந்துச்சு. அடுக்கிவச்சு ஸ்விட்ச் போட்டுவிட்டேன். ஒருமணி நேரம் கழிச்சுப் பார்த்தால் லேசாக் காஞ்ச உருண்டைகள். ஹைய்யோ...... கொசுவர்த்தி ஏத்திருச்சு. கொஞ்சம் தின்னு பார்த்தேன். நாட் பேட் அட் ஆல்:-))))

மறுநாள் காய்ஞ்சு இருந்ததை வறுத்துத் தின்னா, சூப்பரா இருக்கு. இப்பத்தான் வழிமுறை தெரிஞ்சுருச்சே. இன்னும் ரெண்டு கப் அரிசியைச் சோறாக்கி எடுத்துக்கிட்டேன். சட்னி ஜாரில் மிளகாய், பெருங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து மைய்ய அரைச்சுக்கிட்டு அதையும் சோறோடு சேர்த்து ஃபுட் ப்ராஸசர்லே களியாக்கி முறுக்கு அச்சில் போட்டுப் பிழிஞ்சுட்டேன்.
எட்டுமணி நேரத்தில் நல்லாக் கலகலன்னு காஞ்சுபோச்சு. அடுத்தடுத்த முறைகளில் யார் பச்ச மிளகாயை அரைச்சுக்கிட்டுன்னு சோம்பல் வந்ததில்,
ஓமம் போட்டது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், வெறும் சீரகம் இப்படி ஒவ்வொரு தட்டுக்கும் ஒரு வகைன்னு நிறைய முன்னேறியாச்சு.
படங்கள்: பொரிக்குமுன்
பொரித்த பின்:-)
வேலைமெனெக்கெட அதுக்குன்னு யார் சோறாக்கணும்? நேத்து மீந்த சோறு இருந்தால் ஆகாதா? இப்படி முன்னேற்றமோ முன்னேற்றம். இதோட சோதனையை நிறுத்தினால் நான், நானா?

கொத்தவரங்காய் கொஞ்சம் கூடுதலா வாங்கிவந்து பாதியைச் சமைச்சுட்டு மீதியை கொதிக்கும் வெந்நீரில் கொஞ்சம் உப்புச்சேர்த்து அதில் காயைப் போட்டு ஒரு கொதி வந்ததும் எடுத்து வடியவிட்டேன். ஈரம் கொஞ்சம் உலர்ந்ததும் எடு அந்த டீஹைட்ரேட்டரை......

கொத்தவரங்காய் வத்தல் ரெடி!

பாவக்காய் கிடைக்கும்போது அதை வாங்கி வட்டம்வட்டமாய் நறுக்கி கொஞ்சம் உப்புப் போட்டுப் பிசறி வைக்கணும். பத்து நிமிசத்துலே தண்ணீர்விட்டிருக்கும். அதை ஒட்டப் பிழிஞ்சுட்டு மேலே சொன்னபடிக் காயவச்சு எடுத்துக்கிட்டா..... பாவைக்காய்க் கொண்டாட்டம். எண்ணெயில் பொரிச்சு எடுத்தா கசப்பே கிடையாது.

இப்பெல்லாம் சோறு மீந்துபோச்சுன்னாக் கவலையே இல்லை:-)))))

ஜவ்வரிசி வடாம் இதுலே சரிப்படாது. தட்டிலிருக்கும் ஓட்டையில் நிக்காம வழியுது(-: அதையும் விடாம பிஸ்கெட் பேக் பண்ணும் ஷீட்டில் 'எழுதி' அவன்லே 50 டிகிரியில் வச்சு எடுக்கலாம்தான். உடம்பு வணங்கலை
என்ன ஒன்னு, பழைய அட்மாஸ்ஃபியர் வேணுமுன்னா.....காக்காயைத்தான் கண்ணுலே காணலை(-:

58 comments:

said...

காக்கா இல்லாம வடாம் காய போட்டா இரு ஃபீலே இருக்காதுங்க.

said...

////என்ன ஒன்னு, பழைய அட்மாஸ்ஃபியர் வேணுமுன்னா.....காக்காயைத்தான் கண்ணுலே காணலை(-:////

சனீஸ்வரன்கிட்டே மனுக்கொடுத்தேன்.
அந்தக் குளிருக்கு காக்காய் எல்லாம் வராதுன்னுட்டார் டீச்சர்!

said...

மாவாத் திங்கணும், பிழிஞ்சு திங்கணும், அரைகுறையா காஞ்சு திங்கணும், நல்லாக் காஞ்சு திங்கணும், பொரிச்சு திங்கணும். கொஞ்சம் வித்தியாசம் அப்படின்னு சொல்லிக்கிட்டு நல்லாக் காஞ்சதை தண்ணியில் ஊற வெச்சுத் திங்கணும்.

ம்ம்ம்ம். அது ஒரு அது ஒரு கனாக்காலம்....

said...

ஆஹா, பிரமாதமா (நான் தானே சொல்லிக்கணும்;) அவியலும் பொரித்த வடகம் அப்பளம் செய்து வந்தால் இந்த பதிவு.

வடகத்து மாவுன்னா பைத்தியம். (மசக்கைக்க்கு அது தான் கேட்டு சாப்பிட்டேன், ஹிஹி). இந்த டிஹைட்ரேட்டர்ல செய்யலாம்னு இந்த வாரம் தான் என் தோழிகளோடு ப்ளான்... எப்படி வருதுன்னு பாக்கலாம். நீங்க வேறு இந்த பதிவு போட்டு நல்ல சகுனம் காட்டியிருக்கீங்க.

said...

வடகத்தின் சரித்திரப் பெருமைதனை உலகுக்கு எடுத்துச்சொன்ன
உங்களுக்கு ஒரு புக்கர் ப்ரைஸ் தரலாம் !
எதற்கும் காபி ரைட் மற்றும் பேடன்ட் உரிமை பெற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் பதிவுக்கு வரும் ரசிகர் பெருங்குடி மக்களுக்கு
ஒரு சாம்பிள் பாக்கெட் வடகம் இலவசமாக‌
அடுத்த 48 மணி நேரம் தொடர்ந்து கிடைக்கும் என
பி.பி.சி. ந்யூசில் சொல்லுகிறார்களே !
நிசமாவா ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

said...

வாங்க இளா.

ஃபீலுக்காக என்னெல்லாம் பண்ணவேண்டி இருக்குன்னு பாருங்க.

கடல் காக்கா நிறைய இருக்கு. அதுக்கு நம்ம 'வடாம்' டேஸ்ட் தெரியாது.

க---வுக்குத் தெரியுமா க.....வாசனை?

said...

வாங்க வாத்தியார் ஐயா.

சனீஸ்வரன் இங்கே வேற ரூபத்துலே இருக்கார்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

இதுக்குமா 'அங்கே' தடா?

பொரிக்கவேணாம். அப்படியே தின்னக்கூடாதா?

said...

வாங்க கெக்கேபிக்குணி.

உங்க வெர்ஷன் பதிவுக்கு வெயிட்டீஸ்:-))))

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

இந்த பி பி சி. காரனுக்கு வேற வேலை இல்லை போல.

வடாம் வடாமுன்னு அலையறான்:-)))

'ன்' ன்னை 'ர்'ராப் பாவிச்சுக்கணும் மனசில்:-)

said...

பொரிக்கும் முன் பொறித்த பின் :-)))

நல்லா சாப்பிடுங்க.. எங்களை விட்டுட்டு சாப்பிடரதுனால வயித்த வலி வந்துட போகுது ;) இப்படி படத்தை வேற போட்டு மனுசனை டென்ஷன் பண்ணுறீங்க :(

said...

அரிசி வெல ஏறிக்கெடக்குற இந்த நேரத்துல மீந்து போனதை வீணாக்கக்கூடாதுங்கறீங்க..சுவையான பாடம்தான்:-))))

said...

வாங்க கிரி.

அதான் செராங்கூன் ரோடுக் கடைகளில் எக்கச் சக்கமா கொட்டிவச்சுருக்கே. பார்க்கலையா?

அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது கவனிச்சுப் பாருங்க.

அப்புறம் நோ வயித்துவலி:-))))

நம்ம பதிவின் பெயரை மாத்திக்கலாமா?

'படம் பார்த்துக் கதை சொல்'

சரிவராது?:-)

said...

வாங்க தங்ஸ்.

//அரிசி வெல.....//

அட! இந்தக் கோணத்தில் நான் பார்க்கத் தவறிட்டேனே....

நாக்குக்கு ரொம்பத்தான் ஆகிக்கிடக்கு.

தேங்க்ஸ்ப்பா.

said...

மைக்ரோவேவில் வைத்து வடாம் சாப்பிட அனுமதி உண்டு. ஆனால் மாவாய் திங்க எல்லாம் எங்க போக!! (மீண்டும் நியூசிக்கு வர நீங்கள் டிக்கெட் அனுப்ப வெயிட்டிங்!) :))

said...

கொத்ஸ்,

//மீண்டும் நியூசிக்கு வர நீங்கள் டிக்கெட் அனுப்ப வெயிட்டிங்!) :))//

'முதல் சொல்'லை மக்கள்ஸ் கவனிச்சுக்கிட்டே இருக்காங்க.

ஒரு சனிக்கிழமை வரட்டும். அனுப்பிறலாம்:-)

said...

நினைத்ததை முடிப்பவள்.... :)

said...

சித்திரை மாதம் ஸ்கூல் லீவு விட்டா வர இந்த வடாம் கொண்டாட்டத்தை அப்படியே கண்ணில/நினைவில கொண்டுவந்துட்டீங்க. அந்த தேங்குழல் வாடாம் மாவோட கொஞ்சம் தேங்கா என்ண்ணை கலந்து சுடசுடச்சாப்பிடற ருசி இப்ப வேற எதிலயும் இல்ல. வாடாத்தை விட ருசியா இருக்கு அதப்பத்தி நீங்க எழுதினது...

said...

முன்னேல்லாம் நானும் என் மகளும் சேர்ந்து கூழ்வத்தல் எங்க ப்ளாட் மொட்டை மாடியில்..மூன்று மாடி ஏறி அதிகாலையில் போடுவோம். இப்போ முடியவில்லை.
கொசுவத்தி ஏத்திட்டீங்க. ஒரு பதிவுக்கு மேட்டர் தேத்தியாச்சு. டாங்ஸ்!!

said...

எங்க பாட்டியும் இப்படி தான் பென்டு நிமித்துடுவாங்க. கூழ் வடாம் டேஸ்ட்டே தனி தான்.

Anonymous said...

அரிசி வடகத்தை பாத்ததும் ஒரே ஜொள்ளுதான். டீஹைட்ரேட்டர் என்னா மாடல். ஒரு போட்டொ புடிச்சு போட்டிருக்கலாமே டீச்சர்,

said...

வாங்க கயலு.

இல்லேன்னா..... இத்தனைவருசம் 'வெற்றிகரமாக் குப்பை கொட்டி இருக்க'முடியுமா?

said...

வாங்க கிருத்திகா.

வீட்டுவீட்டுக்கு நடந்த (திரு)விழாக்கள்
ஆச்சேப்பா.... மறக்கமுடியவில்லை(-:

said...

வாங்க நானானி..


மேட்டர் கொடுத்ததுக்கு மீட்டர் கொடுக்கணும். ஆமா..:-)

சீக்கிரம் பதிவைப் போடுங்க.

said...

வாங்க அம்பி.

போன தலைமுறைகள் எல்லாத்தையும் ஒரு ராணுவ ஒழுங்கோடு செஞ்சுவச்சாங்க.இல்லே?

said...

வாங்க சின்ன அம்மிணி.

நல்லா மாட்டிக்கிட்டீங்க?

பதிவைப் 'பார் மகளே பார்'

கண்ணைத் திறந்து கொண்டு பார்க்கணும்.ஆமா....

said...

வணக்கம் டீச்சர்,

The 'vadaam' journey was enlightening.Hi...Hi..Hi...:D :D

ஏன்னா எங்க, மெட்ராஸ் ஒண்டுக் குடித்தினத்தில் அப்போ இதுக்கெல்லாம் இடம் இல்லை.இப்போ உங்கப் பதிவுல தான் அப்பிடியேக் கண் முன்னாலக் காட்சியாப் பாக்குறேன்.

ரொம்ப நல்லா எழுதிநிருக்கீங்க :))

said...

மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுன்னு கேக்காத வரை சேரி....!!!

said...

என்ன சொல்லுங்க..வத்தல் வடாம் ருசியே தனிதான்..ஞாபகப் படுத்திட்டீங்களா..இதோ அடுப்புல வாணலி வச்சாச்சு..புகுந்து வெளயாட வேண்டியதுதான்..

said...

அட அட துளசி மேடம்! இதை எல்லாம் சொல்லி கெளரி விடரீங்களே! வடாம் போடர அன்னிக்கி தான் எனக்கு படிக்க நெரைய்ய இருக்கும், வீட்ல ஒரே சத்தமா இருக்கும், மாடில ஒக்கார்ந்து படிச்சா தான் கவனமா படிக்க முடியும் ;-)
காக்கா எல்லாம் நமக்கு தோஸ்த்! 50-50 Partner ஆச்சே!

said...

நவீன முறையில் கூழ் கிளற மட்டும் சொல்லிக் கொடுக்கலை மேடம்! பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த பலரது பழைய நினைவுகளையும் கிளறி விட்டிருக்கிறீர்கள். அதன் தாக்கத்தில் நானானி போல எனக்கும் சின்னதா ஒரு பதிவிட matter கிடைத்தாற் போலிருக்கு. போட்ட பின் வந்து அழைப்பு வைக்கிறேன்:-)))!

said...

கண்ணுக்கு விருந்து கொடுத்த வள்ளலே வாழி வாழி. அம்மா இப்படியா சுத்துவாங்க...
ரொம்ப ஃபீலிங்காப் போச்சுப்பா.
கூழ் வாசனை இங்க வருது. அது அதான் அந்த மஷின் சிகாகோல கிடச்சா பொண்ணுக்குப் போட்டுக் கொடுக்கிறேன்.
நாங்க ரோட்டோரத்தில குடி இருக்கிறதனால தூசி அண்டிடும்.
விலாவாரியா கதை எழுதற துளசிப்பாட்டி வாழ்க.வாழ்க,

கொத்ஸ்..முடிஞ்சா உங்களுக்கும் மாவு அனுப்பறேன்.:)காய்ஞ்சும் காயமயும்,முறுமுறுப்பா...ம்ம்ம்ம்.

said...

வாங்க புதுவண்டு.

அப்ப இல்லேன்னா எப்பவும் இல்லையா?

இனி ஒரு நாள் செஞ்சுதான் பாருங்க. அந்த அனுபவம் புதுமைதான்:-)

said...

நானானி,

மீட்டர் ஒழுங்காக் கிடைக்குதான்னு பார்த்துக்கிட்டு, அப்புறம் 'மேலே' போட்டுக் கேக்கலாமுன்னுதான்.......

said...

வாங்க பாசமலர்.

எண்ணெய்ச் சட்டி அடுப்பில் இருக்கும்போதுக்கொஞ்சம் கவனமா இருக்கணுமாம்.

வெள்ளாட்டு அப்புறம்..திங்கச்சொல்ல:-)))

said...

வாங்க ரம்யா.

இப்ப மொட்டையும் இல்லை மாடியும் இல்லை.

அடுக்களையில் பெஞ்ச்டாப் மேலே உக்காந்து படிச்சுக்கிட்டே.......:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வடாத்துக்குக் கூழ் கிளறும்போது இவ்வளோ மனங்களையும் கிளறுவேன்னு தெரியாமப்போச்சு:-)))

said...

வாங்க வல்லி.

நமக்கும் தூசு அலர்ஜிப்பா. அதான் ஆஸ்த்துமா புடுங்குதே(-:

வெய்யில் துளி மேலே படாமத்தான் இப்ப 'எல்லாக் காரியமும்':-)

said...

சுப்பராஅ ஸ்டேஜ் பை ஸ்டேஜ் எழுதி கலக்கிட்டீங்க டீச்சர், இப்பவும் எங்க வீட்டுல நடக்குது... :)

எங்கம்மா மாவு கிண்டும் முறை கொஞ்சமே, கொஞ்சம் வித்தியாசம்.
இப்பவும் என்னை காக்காஇ விரட்டச் சொல்றதுதான் கொடுமை...முன்னே ஏதாவது வாயனம் லஞ்சமா வரும்..
இப்போ இந்த கம்ப்யூட்டரை மாடில்லெ இருக்கற ஷெட்டுல வச்சு தட்டுடாங்கறாங்க... :)

என்ன முந்தி எல்லாம் இது ஊர் ஊரா போகும், இப்போ பெங்களூர்க்கும், அக்காவீட்டுக்கும் மட்டுமே ! :)

said...

மேடம்...

நான்தான் வெங்கி (from பெர்த்).. முன்ன கிரி யோட வலை போவில சந்திச்சிருக்கோம்.. நம்ம பூவுக்கும் கொஞ்சம் வந்துட்டு போங்க...

http://keysven.blogspot.com

said...

அடடா!என்னமா வர்ண்ச்சீட்டிங்க! நானே வடாம் போட்ட மாதிரி பீலிங் hydrater innovative user னு

ஒரு அவார்டு தரலாம்

said...

//காக்காயைத்தான் கண்ணுலே காணலை(-://

காக்காய் மட்டுமா டீச்சர்...?
அந்தச் செங்கலு,எலுமிச்சம் பழ மூடி,பாய்,வேட்டி அப்புறம் அந்தக் கொல வெறிச் செங்கல் இதெல்லாம் கூடத்தான் மிஸ்ஸிங்..

ஆனா,இன்னிக்குத்தான் ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்.
நிறையப் பெண்மணிகள் ஷாப்பிங்ல வச்சு எங்கேயோ பார்த்துட்டே சாமான்களைக் கொண்டு வந்து கௌண்டர்ல வைக்கிறதுக்கும்,வீட்டுக்காரர் பார்வையைத் தவிர்க்கிறதுக்கும் காரணம் தெரியுது இப்போ..

நன்றிங்க டீச்சர்...கல்யாணமானா உபயோகமாயிருக்கும் ல.. :)

said...

வாங்க மதுரையம்பதி.

'அம்மாவின்'வித்தியாசமான ரெஸிபியைக் கொஞ்சம் கேட்டுத்தான் சொல்லுங்களேன்.

அதையும் செஞ்சு பார்த்துடலாம்.

said...

வாங்க வெங்கி.

உங்க 'வீட்டு'க்கு போயிருந்தேன்:-)

said...

வாங்க உமாகுமார்.

அவார்டுகள் நிறைய வச்சுருக்கீங்க போல!

இதுமட்டுமில்லைங்க. இன்னும் ஷார்ட்கட் வேலைகள் நிறையச் செஞ்சுருக்கேன்:-))))

said...

வாங்க ரிஷான்.

எப்பப்ப 'ஐ காண்டாக்ட்' ஆபத்துன்றது 'தங்குகளுக்கு' நன்றாகவே தெரியும்.

உங்களுக்கு 'நேரம்'வரும்போது கண்ணைக்கட்டிக் கூட்டிட்டுப் போகமாட்டீங்கதானே?

said...

\\அப்பெல்லாம் வத்தலகுண்டுலே பேண்ட்ஸ் போட்டுட்டாலும்.....................
\\
நீங்கள் வத்தக்குண்டை சேர்ந்தவரா? (திண்டுக்கல் மாவட்டம்) நாங்கள் (பெற்றோர்) இப்போது நடுத்தெருவில் இருக்கிறோம். நான் சென்னையில் இருக்கிறேன்

said...

நடுத்தெருவில் வசிக்கிறோம் என்று சொல்ல வந்து (சே இப்படியா தெருப்பெயர் வைப்பாங்க) படிச்சுப்பார்த்தா வேற மாதிரி அர்த்தம் வருது. இன்னும் இங்கே மொட்டைமாடி வடகம் திருவிழா நடந்துகிட்டுத்தான் இருக்கு

said...

வாங்க முரளிகண்ணன்.

நீங்களுமா வத்தலகுண்டு!!!!

எனக்குத் தெரிஞ்சு மூணாவது நீங்க:-))))

என்னுடைய நாடோடி வாழ்க்கையில்

முதல் பத்தில் 4 வத்தலகுண்டு.

ரெண்டுவருசமுன்பு வத்தலகுண்டைப் பார்க்கப்போனோம்.

என் 'குண்டு' காணாமப் போச்சு.

ஊரே அடையாளம் தெரியலை, ஹைஸ்கூல் கட்டடம் தவிர்த்து(-:


முடிஞ்சாஇங்கெ பாருங்க

said...

ரொம்ப சந்தோஷம். ஊர் நிறைய மாறிவிட்டது கடந்த 15 ஆண்டுகளில்.

said...

நீங்களாவது சொல்லுங்க முரளிகண்ணன்.

ராஜாஜி மைதானம் இன்னும் இருக்கா இல்லையா?

said...

கடந்த 20 வருடங்களாக அந்த பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. என் தந்தையிடம் இப்போது கேட்டேன். இப்பொது மேலமந்தை என்று அழைக்கப்படும் மாரியம்மன் கோவிலை (பேருந்து நிலையத்துக்கு அருகில்) ஒட்டிய திடலே ராஜாஜி மைதானம் என்று முன்னர் அழைக்கப்பட்டுருக்கலாம் என்று சொன்னார். வேறு ஏதும் மைதானம் இங்கு இல்லை.நான் பிறந்த ஊர் வத்தலக்குண்டு என்றாலும் தந்தையின் பணி காரணமாக கடந்த 18 ஆண்டுகளில் பல ஊர்களில் நாடோடி வாழ்க்கை. (பெரியகுளம்,திருமங்கலம்,அருப்பக்கோட்டை,விருதுநகர்,திண்டுக்கல்,கோவை)

said...

விவரமான பதிலுக்கு நன்றிங்க முரளிகண்ணன்

said...

கண்ணாடியை வெயில்ல வச்சு காக்காய் விரட்டின காலமெல்லாம் கண்ணுல நிழலாடுது. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுட்டீங்க...

said...

கூழோடு சேர்த்து மனங்களையும் நீங்கள் கிளற, கிளம்பிய நினைவுகளிலிருந்து சொன்ன மாதிரி கூழ் பதிவொன்று இட்டும் விட்டேன்.

said...

வாங்க சுந்தரா.

கூழுன்னாக் கிளறிதானே ஆகணும்? :-)))

கண்ணாடியை ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி.

அச்சச்சோ..... எப்படி மறந்தேன்?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இப்ப எல்லாமே அளவு சுருங்கிப்போச்சு.

இனிமே உங்க தங்கை விரும்பினாலும் சறுக்க முடியாது:-)))))

said...

நல்லா இருக்கு நினைவலைகள். எங்க வீட்டிலே எங்களை எல்லாம் உட்கார்த்தி வைச்சதில்லை. அம்மாவே போய் இருப்பாங்க. அல்லது அப்பாவோட சித்தி போய்க்காவல் காப்பாங்க. :))) ஏணி வைச்சுத் தான் மொட்டை மாடியிலே ஏறணும். அதனால் தானோ என்னமோ எங்களை அனுப்பியதில்லை. எனக்கு வடாம் மாவும் பிடிக்காது. அரைக்காய்ச்சல் வடாமும் பிடிக்காது. அதனால் அந்த அனுபவமும் இல்லை. :))))

ஆனால் உங்கள் பதிவு சுவையாக இருக்கிறது. டி ஹைட்ரேட்டரில் வடாம் காய வைச்சது நல்ல யோசனை தான். ஆனால் பழைய சாதத்தில் வடாம் போடுவது என்பது பல வருஷங்களாக உள்ளதே! :))))) அது மட்டும் புதுசு இல்லை. :)))))