Friday, May 02, 2008

இன்றே இப்படம்(படங்கள்) கடைசி:-))))

இன்னிக்கு நாம் இங்கே இருந்து கிளம்பறோம். டூர் முடியப்போகுது. இந்த ஆத்தையும் அதுலே படகுகள் மிதக்கறதையும் பார்த்தா...... ஹூம்ம்ம்....... என்னிக்கு நம்ம 'கூவம்' இப்படி ஆகப்போகுதுன்ற பெருமூச்சுதான் வருது.







இங்கேயும் ஏழ்மை இல்லாமல் இல்லை.





நதிக்கரையின் ஓரங்களில் நடைபாதை மாதிரி இருக்கும் இடங்களில் நிதியில்லாதவர் வசிக்கிறாங்கதான். சின்னச்சின்னதா வியாபாரமும் இருக்கு. ஆனாலும் கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்கு எல்லாம். ஏன் நம்மூர்லே கொஞ்சமாவது சுத்தம் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க
மாட்டேன்றோமுன்னும் மனசு அடிச்சுக்குது.





பாலத்துக்குமேல் கார் ஓடும் அதிர்வைத் தடுக்கவா இந்த ரப்பர் விரிப்பு போட்டுருக்கு?


ஈ மொய்க்காத பண்டம் வேணுமா?










பருந்துப் பார்வையில் 'பறக்கும் ரயிலடி'.


















புத்தருக்கு ஏந்தான் முட்டைகளா வச்சுப் படைக்கிறாங்கன்னு தெரியலையே.....

பாவம் இவரும் இப்படித் தோலுரிஞ்சு கிடக்கறார்.








போயிட்டு வரோம் பூதகணங்களே..... பொழைச்சுக்கிடந்தா இன்னொருக்கா வந்து போறோம். டாடா பைபை

25 comments:

said...

முடிஞ்சுதா? அடுத்தது என்ன?

said...

வாங்க கொத்ஸ்.

பதிவு ஒரு வாரம் வருமுன்னு சொன்னாலும் அதைக் கண்டுக்காம எப்ப முடிக்கப்போறேன்னு கேக்கறதும், கடைசிப் பகுதி போட்டவுடன் அடுத்து என்னன்னு துளைக்கிறதுமா இருக்கீங்க.

இருக்கறதை விட்டுட்டுப் பறக்கறதைப் புடிக்கும் பழக்கத்தை எப்பதான் விடப்போறீங்களோ? :-)))))

said...

படங்கள் எல்லாம் அசத்தலா இருக்கு.

said...

mmmm கூவம்ம்.

ஏன் தோலுரிஞ்சு கிடக்கிறாரு இந்தப் புத்தர்?கவரிங்கோ..

கலை நயம் என்னமா இருக்கு. படம் எடுத்தவருக்கு நன்றி சொல்லுங்கோ. ஊருக்குப் போகாமலேயே பாங்காக் பார்த்துட்டோமே;)

ஏகத்துக்கு அழகு.

said...

ம்ம்..எல்லா இடத்தையும் பைசா செலவு இல்லமால் சுற்றி பார்த்தாச்சி..

படங்கள் எல்லாம் ரொம்ப நன்றாக வந்திருக்கு...வாழ்த்துக்கள் சொல்லிடுங்க டீச்சர் ;)

said...

வாங்க பிரேம்ஜி.

நானும் நம்ம கோபால்கிட்டே இதைத்தான் சொன்னேன்:-))))

said...

வாங்க வல்லி.

முட்டை ரொம்ப ஆச்சுன்னா இப்படித் தோல் உரியுமோ என்னவோ? :-))))

படம் எடுத்தவருக்கு இப்பப் பூரண திருப்திப்பா.

said...

வாங்க கோபி.

அதெல்லாம் உடனே சொல்லியாச்சு.

நன்றின்னு சொல்லச் சொன்னார்.:-)

said...

//////இலவசக்கொத்தனார் said...
முடிஞ்சுதா? அடுத்தது என்ன?/////

அடுத்தது பீட்ரூட் கட்லெட் & காளான் பிரியாணி
(பதிவில்: செய்முறை விளக்கப்படங்களுடன்.)
நேரில்: முதலில் வரும் மூன்று பேர்களுக்கு கைமேலும் கிடைக்கும்!

said...

ஆஹா.. படங்கள் சூப்பரேய்ய்ய்ய்:)))))
விளக்கமும் நல்லாயிருக்குங்க அக்கா:)

said...

துளசி அக்கா..,இதெல்லாம் கோபால் மாம்ஸ் எடுத்துக்குடுத்த போட்டோஸ் தானே..:P கலக்கல். விளக்கங்களும் அருமை:))

said...

வாவ்..மிக அழகுப் படங்கள் டீச்சர்..
அடுத்ததா இலங்கை வரணும் என்ன?

வீட்டுக்காரர்கிட்ட இப்பவே சொல்லிடுங்க..

என் வீட்டுக்குப் பக்கத்துலயே புத்தர் கோவிலும்,யானைகள் சரணாலயமும் உள்ளது.
மறக்காம கேமரா எடுத்துட்டு வாங்க :)

said...

ஒரு டூர் போய் அதை எல்லார்க்கிட்டயும் இவ்வளவு ரசனையா பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றிம்மா!

said...

நதிக்கரையின் ஓரங்களில் நடைபாதை மாதிரி இருக்கும் இடங்களில் நிதியில்லாதவர் வசிக்கிறாங்கதான

கவிதை எழுத டூஷனுக்கு போகிறீர்களா??
:-))

said...

படம் எடுக்கறதோட சுவாரசியமான விசயங்கள்ன்னு தேர்ந்தெடுத்தக்கறதும் முக்கியமாச்சே.. அதானால் சாருக்கு ஒரு நன்றி. ஊரு சுத்திக்காமிச்ச துளசிக்கும் நன்றி.

said...

டீச்சர்,

பதிவைப் படித்து விட்டு, உங்க ரைம்மிங்கான லைனை காப்பி பண்ணி, பின்னூட்டங்களைப் படித்துக் கொண்டே வந்தால், வடுவூர் குமார் அவர்களும் நான் நினைத்ததையே சொல்லியிருக்கிறார்.

//நதிக்கரையின் ஓரங்களில் நடைபாதை மாதிரி இருக்கும் இடங்களில் நிதியில்லாதவர் வசிக்கிறாங்கதான்.//

சூப்பர்.

said...

இங்க ஆம்ஸ்டர்டாம்லயும் படகு வீடுகள் உண்டு. ஆனா அதுக்குக்க் கரெண்ட்டு...கேஸ் எல்லா கனெக்ஷனும் இருக்கும். அரசாங்கத்துல பதிவு செய்யப்பட்ட வீடுகள். ஆனா அதுல ஏழைகள்தான் குடியிருக்காங்களான்னு தெரியலை.

said...

படங்களும் comments-ம் அருமை. எந்த ஊரிலும் ஏழ்மையின் காயங்கள் இருக்கத்தான் செய்கின்றன! அத்தனை படங்களுக்கும் நடுவில் வடுவூர் குமாருக்கும் சதங்காவுக்கும் அந்த காயத்தின் வலி பளிரெனத் தெரிந்திருக்கிறது.

said...

"படம் எடுத்தவருக்கு இப்பப் பூரண திருப்திப்பா"
கோபால் சாருக்கு அடுத்த வெளிநாட்டுப்
பயணம் எப்போ?

said...

வாங்க சுரேகா.

நம்ம ஸ்பெஷலே பயணக்கதைகள் தாங்க:-))))

அப்படி இருக்கக் கிடைச்ச வாய்ப்பை விடமுடியுதா? :-))))

said...

வாங்க குமார்.

'எல்லாம் அப்படியே வர்றதுதான்' இல்லே?:-))))

said...

வாங்க கயல்விழி.

கூடவே வந்ததுக்கு நானும் ஒரு நன்றி சொல்லிக்கவா?:-)))

said...

வாங்க சதங்கா.

எழுத ஆரம்பிச்ச நாலு வருசத்துலே கொஞ்சம் முன்னேற்றம் தெரியுதுன்னு தெரிஞ்சுக்கிட்டதில் எனக்கே வியப்பா இருக்கு:-))))

said...

வாங்க ராகவன்.

இங்கே இந்தப் படகில் சுற்றுலாப் பயணிகளை ஏத்திக்கிட்டுப் போறாங்க.

ஆம்ஸ்டர்டாம் படகுலே நாங்களும் ஒருமுறை போய்வந்தோம்.

அங்கே வீடுகளா இருக்கும் படகுகளை ஒரே இடத்தில் நிறுத்தி அதில் தோட்டமெல்லாம் வச்சுருக்காங்களே அதை ரசித்தேன்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வணக்கம்.நலமா?

முதல்முறையா வந்துருக்கீங்க போல இருக்கு! நன்றிங்க.

உங்க வீட்டுக்கும் போய்வந்தேன். கவிதைகளா இருக்கு. படங்கள் நீர்வீழ்ச்சிகள் அருமை. ஆனா எனக்கும் கவிதைக்கும் இடையில் கொஞ்சம் அதிகமான தூரம் விழுந்துருச்சுங்க.

இனிமேப்பட்டு கொஞ்சம் தைரியமாப் படிக்க நான் ஆரம்பிக்கணும்.:-))))

கோபால் அடிக்கடி போய்க்கிட்டுதான் இருக்கார்:-))))