அதென்ன டீ தானே? எத்தனையோ டீ குடிச்சிருக்கோம். இதைக் குடிக்கமாட்டமா?
அடக் கடவுளே..... இது ஒரு செடிங்க.
ப்ரொட்டீயா (Protea)ன்னு செல்லமாக் கூப்புட்டுக்கலாம்:-)
இதுலே 9 வகைகள் இருக்குன்னு இந்த ப்ரொடீயா சொஸைட்டியில் போட்டுருக்கு. கனமான மலர்கள். சின்ன மரமா வளர்ந்துருக்கு நம்ம பழைய வீட்டில். அப்போவெல்லாம் இதை நான் அவ்வளவாக் கண்டுக்கலை. பூச்சாடியில் வைக்கலாமுன்னா இந்தக் கனத்தைத் தாங்கும் அளவில் நம்மகிட்டே சாடிகள் கிடையாதுன்றதும் ஒரு காரணம். எல்லாம் 'கிண்'ன்னு இருக்கு ஒவ்வொண்ணும்:-)
இதோட சொந்த நாடு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியாம். இந்தச் செடிதான் இப்போ உலகில் இருக்கும் செடிகளுக்கு எல்லாம் மூத்த பாட்டி/தாத்தாவா இருக்கலாம். ஏன்னா இது கண்டங்கள் 'சமீபத்தில் பிரிவதற்கு முன் இருந்த கோண்டுவானாக் காலத்தில் இருந்தே இருக்காம். அதாவது ஜஸ்ட் 300 மில்லியன் வருசங்களுக்கு முன்புதான்.
ஒருமுறைச் சந்தைக்குப் போனப்ப அங்கே வித்துக்கிட்டு இருந்தாங்க. மக்களும் ஆர்வமா வாங்கிக்கிட்டுப் போறாங்க. அப்பத்தான் தெரிஞ்சது இதைப் பூச்சாடியில் அலங்காரமா வைக்கலாம் என்றதே. '
இதுலே 9 வகைகள் இருக்குன்னு இந்த ப்ரொடீயா சொஸைட்டியில் போட்டுருக்கு. கனமான மலர்கள். சின்ன மரமா வளர்ந்துருக்கு நம்ம பழைய வீட்டில். அப்போவெல்லாம் இதை நான் அவ்வளவாக் கண்டுக்கலை. பூச்சாடியில் வைக்கலாமுன்னா இந்தக் கனத்தைத் தாங்கும் அளவில் நம்மகிட்டே சாடிகள் கிடையாதுன்றதும் ஒரு காரணம். எல்லாம் 'கிண்'ன்னு இருக்கு ஒவ்வொண்ணும்:-)
இந்தச் செடிக்கு நாம் வழமையாத் தோட்டத்தில் போடும் உரங்கள் எதுவுமே தேவை இல்லையாம். அப்படிப் போடுன்னானாம். ஆஹா..... நமக்கு வேண்டியது இதுதான். மெனெக்கெட்டு உரங்கிரமெல்லாம் வாங்கிட்டாலும்.....இந்தப் பூ காஞ்சு போச்சுன்னாலும் அப்படியே இருக்குமாம். அதையுந்தான் பார்த்துருவோமுன்னு அங்கே இருந்து நாலைஞ்சை எடுத்துக்கிட்டு வந்தேன்.
மரத்திலேயும் சில வருசமாக் காஞ்சுப்போய்க் கிடக்கறதையெல்லாம் பிச்சுப்போட்டுட்டுக் கொஞ்சம் மரக்கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்திட்டு வந்தேன்.
மரத்திலேயும் சில வருசமாக் காஞ்சுப்போய்க் கிடக்கறதையெல்லாம் பிச்சுப்போட்டுட்டுக் கொஞ்சம் மரக்கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்திட்டு வந்தேன்.
எனக்குத்தான் எது கையில் கிடைச்சாலும் வளருமான்னு சோதிச்சுப் பார்க்கும் குணம் இருக்கே. ஒரு சின்னக் கிளையைக் கொண்டுவந்துத் தொட்டியில் வச்சுருக்கேன். அதுலே ஒரு மொட்டும் இருக்கு.
மற்ற பூக்களை ஒரு சாடியில்(அன்பளிப்பா வந்தது) வச்சுட்டேன். அட! நல்லாத்தான் இருக்கு.
செடிகளை நடும்போது நல்ல காத்தோட்டமான, சூரிய வெளிச்சம் நிறைய வரும் இடத்தில் நடணும். பூமத்திய ரேகைக்கு தெற்கே இருக்கறவங்க மறந்தும் இதை வீட்டின் தென் பகுதியில் நட்டுறக் கூடாதாம். நல்லா வேர் பிடிச்சு வளர்ந்துச்சுன்னா, மூணாம் வருசத்திலே இருந்து பூக்க ஆரம்பிச்சுரும்.
ஆஸ்தராலியாவில் இந்தச் செடிகளும், விதைகளும் விற்பனைக்குக் கிடைக்குதாம். இங்கே நியூஸியில் அவ்வளவா இல்லை. இந்த ஒரு காரணம் போதாதா..... ஓடிப்போய் உபச்சாரம் செய்ய:-)))
ஆஸ்தராலியாவில் இந்தச் செடிகளும், விதைகளும் விற்பனைக்குக் கிடைக்குதாம். இங்கே நியூஸியில் அவ்வளவா இல்லை. இந்த ஒரு காரணம் போதாதா..... ஓடிப்போய் உபச்சாரம் செய்ய:-)))
இள அரளிப்பூ நிறத்தில் மேலே சின்ன இறகுகள் மாதிரி வெள்ளையா பட்டுப்போல இருக்கு. கூடவே கரும் புள்ளிகளும்.
போனவாரம் நம்ம ரமண் பையா மனைவி ( அண்ணின்னு கூப்புடுவேன்) வந்துருந்தாங்க. இதைப் பார்த்துட்டு 'இந்தச் செடியைத் தோட்டத்தில் கூட தரையில் நடலாம் தெரியுமா'ன்னாங்க. 'ஆமாம்'ன்னேன்.
"அட! பரவாயில்லையே..... தொட்டியில் சின்னச் செடியா இருந்தாலும் மொட்டு கூட வந்துருக்கே. எப்போ இருந்து வளர்க்கிறே?"
"மூணு நாளா "
!!!!
:-)))))))))))
சரியா மூணுவாரத்துக்குப் பிறகு ஜாடியில் உள்ள பூக்களின் நிலை.
30 comments:
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியினரைப் ப்ரோடீயாஸ் என அழைப்பார்கள். அதனால் அது அங்குள்ள பூவின் பெயர் என்பது வரை தெரியும். அதனைப் பார்த்தது இல்லை. இன்று வகுப்புக்கு வரும் வரை!! :))
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் மல்லிகை, நந்தியாவட்டை, அரளி, செம்பருத்தி, செவ்வந்தி
இப்படி லோக்கல் பூக்கள்தான்.
நீங்கள் விதவிதமான பூக்களை அறிமுகப்படுத்துகிறீர்கள்.
இந்த மாதிரிப் பூக்கள் எங்களுக்கு
ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் டீச்சர்!
//////Blogger இலவசக்கொத்தனார் said..
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியினரைப் ப்ரோடீயாஸ் என அழைப்பார்கள். அதனால் அது அங்குள்ள பூவின் பெயர் என்பது வரை தெரியும். அதனைப் பார்த்தது இல்லை. இன்று வகுப்புக்கு வரும் வரை!! :))////
எப்படி அடித்துப் பிடித்து வகுப்பிற்கு வந்தாலும் கொத்தனார் முந்திக்கொண்டு விடுகிறார்.
இதைப் பீட் செய்வதற்கு எதாவது உபாயம் இருக்கிறதா டீச்சர்? அதற்கு ஒரு பதிவு போடுங்களேன்.
துளசி மேடம்! புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.
அடுப்புக்கு பக்கத்தில் வைத்தால் ஏதாவது புது மாதிரி வாசனை கொடுக்குமா?? :-)
இந்த மலரை இப்ப தான் முதலில் பார்க்கிறேன்.
வாங்க கொத்ஸ்.
அப்ப இது பயனுள்ள பதிவுதான்:-))))
வாங்க வாத்தியார் ஐயா.
உலகம் முழுசும் எப்பேர்ப்பட்ட அழகை இயற்கை நமக்காகப் படைச்சுவச்சுருக்குன்னு பாருங்க.
அழகுகள் கொட்டிக்கிடக்கு.
நம்ம வீட்டில் 'கெமீலியா'ச் செடி (மூணுவருசமாச்சு நட்டு) முதல்முறையாப் பூத்து இருக்கு. என்ன நிறம் வரப்போகுதோன்னு நினைப்பேன். நமக்கு ஏத்தமாதிரி இது வெள்ளை நிறப் பூவா மலர்ந்துருக்கு.
நாம்தான் 'சமாதானப் புறாக்களாச்சே':-))))
அசப்பில் பார்க்க ரோஜா மாதிரியும், தொட்டுப்பார்க்கும்போது அடுக்கு நந்தியாவெட்டை மாதிரியும் இருக்கும் பூ இது. அஞ்சாறு கலர்களில் வருது.
கொத்ஸ், வகுப்பு லீடர். எல்லாருக்கும் முன்னாலே வகுப்புக்கு வரணும் இல்லையா? சில சமயம் டீச்சர் வருமுந்தியே கூட வந்தாகணும்:-)))))
வகுப்பை ஒழுங்குபடுத்த லீடரை விட்டா வேற ஆள் எது?
வாங்க பிரேம்ஜி.
எல்லாம் நான் பெற்ற இன்பம்.... தான்.
வருகைக்கு நன்றி.
// "ப்ரொ டீ" அதென்ன டீ தானே? எத்தனையோ டீ குடிச்சிருக்கோம். இதைக் குடிக்கமாட்டமா?
அடக் கடவுளே..... இது ஒரு செடிங்க.//
நான் கூட சரி செடிய பற்றி நிறைய சொல்லிடோம்னு நினைத்து "பொறை" "டீ" பற்றி சொல்ல போறீங்களோன்னு நினைத்தேன்? :)))
அதிமுக கலர்கோட் இருக்கு..நிச்சயம் அம்மா பூதான்..
வாங்க குமார்.
அதுவா? பூவின் நிறம் பளிச்சுன்னு தெரிய 'பேக்ட்ராப்' தேடுனதில் அடுப்படியின் 'ஸ்ப்ளாஷ் கார்ட்' கண்ணாடிதான் அகப்பட்டது:-))))
வாங்க கிரி.
'பொறை டீ'யை ஞாபகப்படுத்திட்டீங்களே......
அடுத்தமுறை, சென்னையில் ஜமாய்ச்சுடணும்:-)
வாங்க தங்ஸ்.
அதிமுக கலரா? நெசமாவாச் சொல்றீங்க?
அம்மாப் பூவா இருந்து என்ன பயன்?
'தலை'யில் சூட்டிக்க முடியாதே(-:
இந்த பூவை பலமுறை பாத்திருக்கேன். பேருக்கெல்லாம் மெனக்கெடற ஆளா நாம. விவரங்களுக்கு நன்றி டீச்சர்
மூனு நாளா? தமிழ் சினிமாவுல காட்ற மாதிரி (ஒரே பாட்டுலேயே அல்லது ஒரு சக்கரத்தை சுத்துவாங்க,) வளந்துடும் போலிருக்கே! :))
இதே மாதிரி மனுஷங்களும் வளர்ந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?
ப்ரிகேஜி, எல்கேஜி, அட ராமா நெனச்சாலே கண்ண கட்டுதே! :p
பூவும், படங்களும் ரொம்ப நல்லாருக்கு டீச்சர் ;))
\\\அடுத்தமுறை, சென்னையில் ஜமாய்ச்சுடணும்:-)\\
எப்போ!??
<== மற்ற பூக்களை ஒரு சாடியில்(அன்பளிப்பா வந்தது) வச்சுட்டேன். அட! நல்லாத்தான் இருக்கு ==>
ஏன் டீச்சர், காதுல(ர.மணிக்குத்தான்!) வைக்கிறத்துக்குன்னு உள்ள பூ இல்லையா இது? =)))
வாங்க சின்ன அம்மிணி.
பார்த்தாப்போதுமா? கொஞ்சம் 'ஆராய'க்கூடாதா? :-)
வாங்க அம்பி.
அண்ணியின் அதிர்ஷ்டம் மூணு நாள் கழிச்சு வந்தாங்க.
மறுநாளோ இல்லை அன்னிக்குச் சாயந்திரமோ வந்திருந்தாங்கன்னா....
தமிழ்ச் சினிமாதான்:-))))
வாங்க கோபி.
எப்போன்னு தெரியாது. ஆனா 'இப்போ' என் சார்பில் ஒருத்தரை 'அங்கே' அனுப்பி இருக்கேன்:-))))
//தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியினரைப் ப்ரோடீயாஸ் என அழைப்பார்கள். அதனால் அது அங்குள்ள பூவின் பெயர் என்பது வரை தெரியும். அதனைப் பார்த்தது இல்லை. இன்று வகுப்புக்கு வரும் வரை!! //
Repeate
வாங்க சாமான்யன்.
உங்களுக்காகவே அதாவது ரங்குகளுக்காகவே வேற ஒரு பூ இன்னும் 'கனம்' கூடியது தேடணும்.
காதுலே வச்சப்பிறகு தலையைத் தூக்க முடியாத அளவுலே இருக்கணுமுன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்:-))))
நான் எப்போதும் கடேசி பெஞ்ச்தான்.கூடிய சீக்கிரம் கொத்தனாரையும் மிஞ்சப் பார்க்கிறேன்.
பூக்கள் எல்லாம் கொள்ளை அழகு!!
கண்களுக்கு நல்விருந்து.
இங்கே காணக் கிடைகாதவைகளையெல்லாம் நல்லாவே அறிமுகப் படுத்துகிறீர்கள்..டீச்சர்!!!
வாங்க நானானி.
//இங்கே காணக் கிடைகாதவைகளையெல்லாம் நல்லாவே அறிமுகப் படுத்துகிறீர்கள்..//
சொல்லிட்டீங்கல்லே!!!
நு.த.வா.கெ : பழமொழி
சொ.செ.சூ : வலைமொழி
:-))))))))))))
என்னங்க டீச்சர்..பூச்சாடியை வைக்க வேற இடமா கிடைக்கல?
அடுப்புக்குப் பக்கத்துல வச்சதால இப்படிக் கருகியிருக்குமோ என்னமோ?
ஒருவேளை விதைகள் சாமந்திப் பூப் போல காய்ந்த பூவுக்குள்ள இருக்குமோ என்னமோ?கொஞ்சம் உதிர்த்துப் பாருங்க டீச்சர்.. :)
வாங்க ரிஷான்.
அது சும்மா ஃபோட்டோ எடுக்க பேக்ட்ராப் வேணுமுன்னு அடுப்புலே வச்சேன். அடுப்பு அணைஞ்சுதான் இருந்துச்சு.
அதுக்கப்புறம் அது ஸிட்டிங் ரூமுக்கு இடம் மாறியாச்சு:-)
பார்த்தவரை விதை ஒன்னும் இல்லை. ஆனா இன்னும் ஒருமாதிரி நல்ல ஷேப்லே இருக்கு. முழுசும் காய்ஞ்ச பிறகு வேணுமுன்னா உதிர்த்துப் பார்க்கலாம்.
உருப்படியான தகவல்களுடன் அழகான படம்.
பூ அருமையாக இருக்கு டீச்சர்.
வாங்க முரளிகண்ணன்.
'வத்தலகுண்டு'க்காரர்ன்னு நிரூபிச்சுட்டீங்க:-)))))
புரியலையா?
அந்த ஒரு சொல்....
//உருப்படியான//
ஆஹா....
வாங்க குசும்பரே.
தங்கமணிகள் தலைகளுக்கு ஏற்ற பூவா இல்லையேப்பா(-:
வாழைப்பூன்னாலும் ஆக்கியாவது தின்னலாம்:-)
Post a Comment