Wednesday, April 30, 2008

அரண்மனையில் ஒரு மர'கதம்'

இன்னிக்கு எல்லாரும் அரண்மனைக்குப் போறோம். மதில்சுவரைக் கடக்கணும். நல்லா உசரமா கோட்டையாட்டம் கட்டி வச்சுருக்காங்க. பின்னே அரண்மனைன்னாச் சும்மாவா?
வரவேற்பு ரொம்பவே பலமா இருக்கு. அடடா..... நமக்குச் சிவப்புக் கம்பளம் எங்கே?
நமக்குப் பத்து பத்.......ஆனால்.....
தாய்களுக்கு இலவசம். அடடா...கேக்கவே எவ்வளவு சுகமா இருக்கு. அதானே உள்ளூர்க்காரன் பொழுதண்ணிக்கும் காசு கொடுத்துப் பார்க்கணுமுன்னா நடக்குமா?


ஹூம்.... பெருமூச்சு விடத்தான் முடியுது. மத்த நாடுகள் படிக்க வேண்டிய பாடம் இது.


இந்தக்கூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
அரண்மனையின் உள்ளே இருக்கும் மரகதப் புத்தர் கோயிலுக்கு வாங்க.
(முழு விவரம் அடுத்த பதிவில்)
நம்ம கும்மிகள் இதுகளுக்கும் தெரிஞ்சுருச்சு....:-)))

யானைக் கும்மி......கும்மியடி கும்மியடி......வீரமிருந்தா என்னைக் கடந்து போ......


ஏனிப்படிக் கோவணத்தோடுத் துண்டு கொண்டு வீற்றிருக்கும் ஆண்டி ஆனாய்????????கொல்லிப்புற வாசலுக்கு இந்த அலங்காரமா? அச்சச்சோ.....

ராஜாராணி 'வீடு' இதுதானாம்.

படங்கள் பிடிச்சிருக்கா?

இன்னொரு விசயம் உங்ககிட்டே கேட்டுக்கவா?

தொழில் நுட்பக் கேள்வி:

படத்தில் 'க்ளிக்' செய்தால் பெருசாத் தெரியுமுன்னு பல இடங்களில் வருதே.

அதுக்கு எப்படிப் படங்களை வலை ஏத்தணும்?

டீச்சருக்கு 'ஹெல்ப் ப்ளீஸ்'

19 comments:

Anonymous said...

அரண்மணைன்னா இதுல்ல அரண்மனை, தேர் மாதிரியெல்லாம் என்னனமோ வடிவத்துல நல்லாத்தான் இருக்கு, ஆன கோவணாண்டி ஏன் வந்தாரு அங்கே.

said...

படத்த க்ளிக் நல்ல சந்தேகம்.. :)

said...

மூன்று இடுகைகளிலும் படங்கள் அருமையாக இருந்தன அக்கா.

said...

அம்மிணீ அதாவது போட்டு இருக்காரே:)

அது என்ன கலர்ப்பா இந்த ஊரு.
தங்கம் பச்சை யானை தந்தம்னு கண்ணு மிரளுது.
அச்சோ எப்ப பாக்கப் போறேனோ தெரியலையே!!!

said...

பிகாசாவில் பதிஞ்சுட்டா படங்களைப் பெரிசா பார்க்கலாம்னு நினைக்கிறேன் துளசி.

said...

தாய்லாந்து சுற்று பயணத்திற்கு எங்களையும் அழைத்து செல்வதற்கு நன்றி.
//அதுக்கு எப்படிப் படங்களை வலை ஏத்தணும்?//

உங்க படமெல்லாம் 300 x 400 pixel 24 KB அளவுலதான் இருக்கு. அதனால அதுக்கு மேல பெரிசா தெரியாது. நீங்க வலையேற்றும் போது 600x800 இல்லே, இன்னும் பெரிசா ஏற்றலாம். எவ்வளவு பெரிசா ஏற்றினாலும் Blogger அதை வலைப்பூவில் காட்டும் போது அதை குறுக்கியே காட்டும். படம் பெரிதாக இருப்பதனால் தானே பெரிதாக காட்டுவதற்கான இணைப்பையும் கொடுக்கும். :)) அப்போது படத்தை சொடுக்கினால் பெரிய படம் தெரியும்.

said...

ரீச்சர், இன்னும் எத்தனை நாள் இப்படி சித்திரத் தாய்லாந்து போட்டு ஓட்டறதா கணக்கு? இந்த வல்லிம்மா கூட சேராதீங்கன்னு சொன்னாக் கேட்டாத்தானே!!

said...

வாங்க சின்ன அம்மிணி.
இவர் உண்மையில் ஒரு 'டாக்டர்' முனிவர்.

நமக்கு எடுத்துக்க வேண்டிய மருந்துகளை இவர் முன்னால் வச்சுக் கும்பிட்டுக்கிட்டு முழுங்குனா சீக்கிரம் நோய் குணமாகுமுன்னு ஒரு நம்பிக்கையாம்.

இவர் பக்கத்திலே மருந்து அரைக்கும் பளிங்குக் கிண்ணம் கூட இருக்கு!

said...

வாங்க கயல்விழி.
நம்ம கபீரன்பன் பதில் சொல்லி இருக்கார்,பாருங்க.

said...

வாங்க குமரன்.

படங்கள் எல்லாம் கோபால் எடுத்தார்ப்பா.

said...

வாங்க வல்லி.

நீங்க இங்கே நியூஸி வரும் வழியில் அங்கே போயிட்டும் வரலாம். எப்படியும் இந்த டிசம்பர் பயணம் உறுதிதானே?

said...

வாங்க கபீரன்பன்.

இந்தக் க.கை.நாவுக்கு ஐயம் தெளிவு படுத்தியதுக்கு நன்றிங்க.

said...

வாங்க கொத்ஸ்.

ஸ்லீப்லெஸ் நைட்டு ஆனதால் வகுப்பில் இப்படி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தா எப்படி?:-)

அதான் இந்த வாரம் தாய்லாந்து வாரமுன்னு சொல்லி இருக்கேனில்லெ?
இவ்வளவு தூரம்போயிட்டு ஒரே பதிவோட நிறுத்த முடியுமா?

படங்கள் இந்த முறை ரொம்ப பெர்ஃபெக்ட்டா வந்துருக்கு. அதை வகுப்புலே காமிச்சே ஆகணுமுன்னு மரகத புத்தருக்கு வேண்டுதல் வச்சுருக்கேன்.

said...

எனக்கும் பல முறை இந்த சந்தேகம் இருந்தது..ஏன் உங்கள் பதிவு படங்களை சொடுக்கி பெரியதாக பார்க்கமுடியவில்லை என்று!!
கபீரன்பன் தெளிவுபடுத்திட்டார்.

said...

வாங்க குமார்.

அடுத்தமுறை குட்டியூண்டா ஒரு படம் போட்டுட்டு க்ளிக் செஞ்சாவருதான்னு பார்க்கணும்:-)

said...

வணக்கம் துள்சி!
என் மகன் இப்பத்தான் தாய்லாந்து சென்று வந்தான். கம்பெனியில் ஒரு கான்பெரன்ஸ் பிளஸ் ஜாலி டூர்.
ரொம்ப நல்லாருந்துதுன்னு சொன்னான்.
உங்க படங்கள் வேற உசுப்பிடுச்சா...
போணும்ன்னு ஆஹா!..வந்துருச்சு..!

said...

படமும் பயணமும் ரொம்ப ஜோர்!kalyanakamala.wordpress.com க்கும் வருகை தாருங்கள்.
அன்புடன்
கமலா

said...

வாங்க நானானி.

இப்படி உசுப்பேத்தியே வாழ்க்கை நடக்குதோன்னு நான் நினைக்கிறென்:-)))))

கட்டாயம் ஒருக்காப் போய்ப் பார்க்க வேண்டியதுதான் இந்த இடங்கள் எல்லாம்.

said...

வாங்க கமலா.

வருகைக்கு நன்றிப்பா.