Monday, April 07, 2008

மெமெரி லேன்

"நாளைக்குப் பகல்நேரம் என்ன செய்யப்போறே?"

த்தோடா..... இப்ப ராத்திரிச் சாப்பாட்டுக்கு என்ன செய்யப்போறென்னே இதுவரை முடிவு செய்யலை. இதுலே நாளைக்குப் பகலா?

"ம்ம்ம்.... ஒன்னும் விசேஷமா இல்லை. எதுக்குக் கேக்கறே? நீ வர்றதா இருந்தா வாயேன்."


"அதுக்குத்தான் கேக்கறேன். "

"பகல் சாப்பாடுக்கு வர்றீயா?"

"ம்ஹூம்.... காஃபிக்கு வர்றேன். கூடவே நான் முந்தி சொன்ன என் தோழியும் உண்டு."


"பிரச்சனை இல்லை. எத்தனை மணிக்கு?"


"பகல் ஒரு மணிக்கு"


என்னங்கடா கதை..... பகல் ஒரு மணிக்குக் காஃபி நேரமா? இங்கே பசங்க எல்லாம் ஃப்ளாட்டிங் செய்யறேன்னு பெற்றோரைவிட்டுப் போயிருதுங்க. அதுக்கப்புறம் அவுங்க இருக்கும் பரபரப்பில் நமக்கு(ன்னு) நேரம் ஒதுக்கறது சிரமம்தான். கிவி ஸ்டைல் வாழ்க்கை இல்லையோ? இப்படித் தானே வரேன்னு சொல்லும்போது நாம வேணாங்கலாமா?காஃபிக் கூடவே எதாவது திங்கக் கொடுக்கணுமேன்னு யோசிச்சப்ப, (இப்பெல்லாம் மெனெக்கெட முடியல்லே) வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கும் ஒரு பேக்கரியில் இருந்து எதாவது வாங்கிக்கலாமுன்னு இருந்துச்சு. பகல் சாப்பாட்டுக்கு இவர் வந்தப்ப, எதாவது வாங்கியாங்கன்னு விரட்டுனேன். கப்பச்சீனோ மஃப்பின்ஸ் கிடைச்சது.டாண்னு சொன்ன நேரத்துக்கு வெள்ளைக்காரங்க போல(??) வந்தாங்க ரெண்டு பேரும். இவர் அதுக்குள்ளே பகல் சாப்பாட்டை முடிச்சுட்டுக் கிளம்பிக்கிட்டு இருந்தார். ஹை, பை எல்லாம் ஆச்சு:-)ரெண்டு பொண்களும் யானை வேட்டைக்குக் கிளம்புச்சுங்க. கணக்கெடுப்பு. எண்ணி வைக்கப்போறாங்களாம். ஒரு அஞ்சு நிமிசத்தில் யானையை ' அம்போ'ன்னு விட்டுட்டுப் பூனையைப் பார்க்க ஆரம்பிச்சாங்க. ஷோகேஸிலே இருக்கும் சில பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சி.


"அம்மா..என்னோட மஸக்காரி எங்கே?"


"கராஜ்லே புக்ஷெல்ஃப் மேலே ஒரு அட்டைப்பெட்டியில் இருக்கு"


(நம்ம வீட்டில் மஸக்காரி, கொண்டைக் கச்சான் இப்படி சில மலேய்ச் சொற்கள் புழக்கத்தில் உண்டு. மகளின் சிறுவயது தோழியின் உபயம்)
ஊஞ்சலில் உக்காந்து ஒவ்வொண்ணையும் மகள் கையிலெடுத்து விளக்கம் சொல்லச் சொல்லத் தோழிக்கு ஆச்சரியம்.
நான் ச்சின்னப் பிள்ளையா இருந்த காலத்துலே நல்ல வர்ணங்கள் அடிச்ச மரச்சொப்புகள் மதுரை கோயில்கடைகளில் வாங்குவோம். இவை எல்லாம் போய் எவர்சில்வர் செட் ஆகிப்போச்சு மகள் காலத்தில். இப்ப என்னவா மாறி இருக்கோ?


இங்கே நியூஸியில் 'ட்டீஃபெல் ப்ராண்ட்' செட்(Tefal) கிடைக்குதாம். பயங்கர விலை. என்னோட அக்காவின் குழந்தைக்கு வாங்கலாமுன்னு கடைக்குப் போனப்பப் பார்த்தேன். விலையைப் பார்த்துட்டு பயந்துட்டேன்'' என்றாள் தோழிப்பெண்.


இப்ப மார்கெட்டில் என்ன வகை பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள் இருக்குன்னு நான் கவனிக்கறதே இல்லை. ஒரு நாள் போய்ப் பார்க்கணும்.அடுத்து 'பார்பி' பொம்மைகளை எடுத்துக் காமிச்சுக்கிட்டு இருந்தாள் மகள். அசல் மைசூரு சில்க்குப் புடவை கட்டிய இண்டியன் பார்பி.
"அதென்ன இண்டியன் பார்பின்னு சொல்றீங்க முகம் மட்டும் இவ்வளோ வெள்ளையா இருக்கே!"

'பவுடர் ரொம்பப் போட்டுக்கிட்டு இருக்காள். ஹிஹி' நான் சமாளிச்சேன்.


இந்தப் பவுடரைப் பத்தியும் கொஞ்சம் புலம்பல் இருக்கு என்னிடம். அது என்னங்க நம்மூர்லே பவுடர்ன்னாவே ஒரே வெள்ளையா சுவத்துக்குச் சுண்ணாம்பு அடிக்கிறதுதானா? இத்தனைக்கும் நம்மூர்லே அதுவும் குறிப்பாத் தமிழ்நாட்டுலே நாமெல்லாம் மாநிறமாத்தானே இருக்கோம். இதுவரை ஒரு காஸ்மெடிக் கம்பெனியாவது நம்ம நிறத்துக்குப் பொருந்துவது போல பவுடர் செஞ்சு விக்கறாங்களா? 'லக்மே'யில் கொஞ்சம் கிடைக்குதுன்னாலும் நிறம் ரொம்பவே குறைஞ்ச பெண்களைக் கணக்கில் எடுத்துக்கறதில்லை போல(-:"இண்டியன் பார்பின்னா இந்திய ஸ்டைல் உடையில் இருக்கும் பார்பின்னு வச்சுக்கணும். பார், நகை நட்டெல்லாம் போட்டுப் பொட்டெல்லாம் வச்சுருக்கேன்:-) "


கப்போர்டில் அடிச்சுப்பிடிச்சு உக்கார்ந்திருக்கும் பொம்மைக் கூட்டங்களைப் பார்வையிட்டாங்க.

கன்ஸர்வேட்டரிக்கும் அவளைக் கூட்டிட்டுப்போய் ஒவ்வொரு செடியாகக் காமிச்சுக்கிட்டு இருந்தாள் மகள். தளதளன்னு வளர்ந்து நிக்கும் காஃபிச் செடியைக் காட்டினப்ப, 'இதுலே இருந்து எடுத்த காஃபியைத்தான் நீங்க குடிக்கப் போறீங்க'ன்னு ரீல் விட்டேன்:-) பாவம், பொண்ணு நம்பிருச்சு ஒரு வினாடி. அப்புறம் பின்புறத் தோட்டத்தில் ஒரு நடை.

திரும்ப உள்ளே வந்த வேகத்தில் போட்டோ ஆல்பங்களை மேய ஆரம்பிச்சாங்க. பிறந்தவேளை முதல் எடுத்த படங்கள் ஒரு நாப்பதம்பது ஆல்பங்களில் கிடக்கு. டிஜிட்டல் கேமெரா (நம்மிடம்)வராத காலகட்டங்கள்.


திடீன்னு 'குரங்கு எங்கே?' என்றதும் எந்தக் குரங்கைச் சொல்றாளோன்னு இருந்துச்சு:-)))) நாலைஞ்சு குரங்கு வரிசையா இருக்குமே, அது வேணுமுன்னு சொல்றாள். எங்கே இருக்கோ? தேடிப் பார்க்கலாம்.மகளுக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஒரே ஒரு வயசுதான் வித்தியாசம். மகள் சின்னவள். இருபத்தியஞ்சும் இருபத்தினாலுமா இந்த வயசுலே எதைப் பத்திப் பேசுவாங்க, எதுலே ஆர்வமுன்னு ஒரு தோணல் எனக்கு. நான் பாட்டுக்குக் கடமையே கண்ணுன்னு தமிழ்மணத்தில் உலாத்திக்கிட்டே 'அங்கே'யும் 'கவனமா' இருந்தேன்."அம்மா, நீங்க பத்து செகண்டிலே செய்வீங்களே அந்த ஸ்வீட்டைச் செஞ்சு தர்றீங்களா?"


தூக்கிவாரிப்போட்டது எனக்கு! பத்து செகண்டுலே இனிப்பு வச்சுருக்கும் டப்பாவைத் திறந்து பரிமாறலாம். அவ்வளவே......."பத்து செகண்டுலே எப்படி முடியும்? கூடிவந்தால் மைக்ரோவேவில் அஞ்சாறு நிமிசத்துலே திரட்டிப்பால் செய்யலாம். அதுவும் அதுக்குண்டான சாமான்கள் இருந்தால்தான்""அதையே செய்யுங்க ப்ளீஸ்"அம்மாவின் சமையலைப்பத்தி இன்னும் என்னென்ன ஓதி வச்சுருக்காளோ தோழியிடம்!


"ஷீ லைக்ஸ் குக்கிங்"ஹா....எனக்கு வந்த கொடுமை. அதெல்லாம் அந்தக் காலம். இப்பெல்லாம் எப்படிச் சமையல் செய்யாமலேயே தப்பிக்கலாமுன்னுதான் கள்ளமா நினைக்கிறேன்.
"என்னோட முதல் 'ட்ரெஸ்' வச்சுருந்தீங்களே அது எங்கே இருக்கு?"

கஜானாவில் இருந்து ஒரு பையை எடுத்துக் கொடுத்தேன். அதில் மகள் அணிந்த முதல் உடுப்பு, காது குத்தல் மொட்டை, முதல் பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்குப் போட்டுருந்த சிலன்னு பாதுகாத்து வைத்திருந்தேன்.

'இது எல்லாமே அம்மாவே தைச்சது. ஹைஸ்கூல் முடியும்வரை பள்ளிக்கூட யூனிஃபாரம்கூடத் தச்சுக் கொடுத்தாங்க."


விழிகள் விரிய எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருந்தாள் மற்றவள்.
தோழியின் பெற்றோர் வேறு ஊரில் (இதே நாட்டில்தான்) இருக்காங்க. இங்கே வேலை கிடைத்துவிட்டதால் தோழி மற்ற தோழியருடன் வீடு எடுத்துத் தங்கியிருக்கிறாள்.இதுக்குள்ளே திரட்டுப்பால் செஞ்சாச்சு.செய்முறை தேவைப்படுபவர்களுக்கு:

கண்டெண்ஸ்ட் மில்க் - ஒரு டின்

நெய்- ஒரு டீஸ்பூன்

தயிர்- ஒரு டேபிள் ஸ்பூன்.


எல்லாத்தையும் ஒண்ணா ஒரு மைக்ரோவேவ் ப்ரூஃப் பாத்திரத்தில் போட்டு ரெண்டு நிமிசம், ரெண்டு நிமிசம், ஒரு நிமிசம் 100 பவரில் வச்சு எடுக்கணும்.


முதல் ரெண்டு நிமிசம் முடிஞ்சதும் ஒரு கிளறு, அப்புறம் அடுத்த ரெண்டு நிமிசமானதும் இன்னொரு கிளறு.

ஏலக்காய் தூவினால் அருமை. ஆனால் இந்தப் பொண்ணுக்கு ஸ்பைஸ் வாசனையே பிடிக்காதாம்., satay கூட சாப்பிடமாட்டாளாம்! ஏலக்காயைக் காமிச்சு மணம் காட்டி, போடவான்னு கேட்டுக்கிட்டேன். ( எனக்கு ஸ்பைஸ் இல்லேன்னா வாழ்க்கையே இல்லை)

கஸாவா சிப்ஸ், கப்புச்சீனோ மஃப்பின், காபி, திரட்டுப்பால் எல்லாம் சாப்பிட்டாங்க. பேச்சு, சிரிப்பு, வேடிக்கைன்னு மூணுமணி நேரம் போனதே தெரியலை. இன்னிக்குத்தான் தோழிக்கு இங்கத்து ஆசுபத்திரியில் சிகிச்சையின் முதல் செஷனாம். மகள்தான் கூட்டிப்போய் வந்தாளாம். அவளைக் கொஞ்சம் உற்சாகப்படுத்தலாமுன்னு வீட்டுக்குக் கொண்டு வந்துருக்காள். எவ்வளவு நேர சிகிச்சைன்னு கேட்டேன். ஒரு மணி நேரமாம். இனி ரெண்டு வாரத்துக்குத் தினமும் சிகிச்சைக்குப் போகணுமாம். பயப்படவேணாமுன்னு எனக்குத் தெரிஞ்ச ஆறுதல்மொழிகளைச் சொன்னேன்.அனுவின் நினைவு வந்துச்சு. தோழிக்கு மார்பகப் புற்றுநோய். ஆரம்பக் கட்டம்.


இன்றையதினம் நான் கவனிச்சதில் சில.

Atheist ன்னு தன்னைச் சொல்லிக்கும் என் மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் உதவக்கூடிய நல்ல மனசு இருக்கு. அது போதுமே. இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்குப் பெற்றோர்களிடம் இதமா நடக்கத் தெரியுதோ இல்லையோ நண்பர்களிடம் அன்பா, ஆதரவா இருக்காங்க. பெற்றோர்களிடத்தில் அன்பை வெளிப்படையாச் சொல்லலைன்னாலும் உள்மனசில் நம்மை நல்ல இடத்தில்தான் வச்சுருக்காங்க. 'பளிச்'ன்னு சொல்லத் தெரியலை. போனாப் போட்டும்.(நாமும்தான் நம்மைப் பெத்தவங்களுக்கு இதுவரை 'ஐ லவ் யூ மாம்' சொல்லி இருக்கோமா?)நம்மைப்போலவே கொசுவத்தி இவுங்களுக்கும் இருக்கு.அதுவும் இந்த வயசிலேயே:-))))))


விடைபெறும்போது, வழக்கப்படி மகளை அணைச்சுக்கிட்டேன். தோழியிடம் கை நீட்டியதும், இதுக்காகவே காத்திருந்தமாதிரி கட்டிப்பிடிச்சது பொண்ணு. எனக்குத்தான் கண்ணுலே ஈரம் கலங்குச்சு. பாவம் பொண்ணு. அம்மாவை நினைச்சுக்கிட்டது போல."தேங்க்ஸ் ஃபார் ஹேவிங் மீ""இட்ஸ் மை ப்ளெஷர். டேக் கேர் அண்ட்
தேங்க்ஸ் ஃபார் டேக்கிங் மீ இன் டு 'மை' மெமெரி லேன்"தேடிப்பார்த்ததும் கிடைச்ச குரங்கு இதுதான். இதுதானா அதுன்னு கேக்கணும்.:-)

41 comments:

said...

/////கப்பச்சீனோ மஃப்பின்ஸ் கிடைச்சது.////

ஆகா பேரே அசத்தலாக இருக்கிறது டீச்சர்.

இதோ புறப்ப்ட்டு விட்டேன். அடுத்த ஸ்டாப் உங்க வீடுதான்.

நல்ல வேளை கொத்தனார் இன்னும் வரவில்லை! அதற்குள் நான் வந்து விடுகிறேன்.

எனக்குப் போட்டி அவர்தான்;
அவர் வந்தால் தட்டு காலியாகிவிடும்:-)))))

said...

அடடா! நான் தான் முதல் போணியா?

அப்ப இன்னொரு பிளேட் 'கப்பச்சீனோ மஃப்பின்ஸ்' டீச்சர்!

said...

துளசி மேடம்,

இப்பவெல்லாம் உங்க பதிவை பார்த்த உடனே சமைக்க ஆரம்பிச்சிடறோம். திரட்டுப்பால் சாப்பிட்டு வந்துர்றேன்.

said...

பெண்ணின் முதல் ட்ரெஸ்யை பார்த்ததும் என் அம்மா எனது ட்ரெஸ்யை பாதுகாப்பாக வைத்திருந்ததையும், அதை நான் என் பெண்ணிற்கு போட்டு பார்ததும் நினைவுக்கு வருகிறது. நீங்களும் உங்கள் பேத்தீக்கு போட்டு அழகு பார்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை :)

said...

ஏதாவது கடிக்கலாம்னு பாத்தேன்.. ஆனா 'டச்சிங்கா' முடிச்சிட்டீங்க...

திரட்டுப்பால் - தங்கமணி குறிச்சிக்கிட்டாங்க...:-)

said...

மெமரி லேன்னு பாத்துட்டு கானா பிரபா கிட்ட சொன்ன "36 வருஷத்துக்கு முந்தைய பாட்டு" பத்தி நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லி ("என்ன அந்த நாள் நினைவா"ன்னு) உங்களை கலாட்டா செய்யணும்னு வந்தா, இப்படி கண்கலங்க வைச்சுட்டீங்களே!

மகளை நல்லவராக வளர்த்ததற்கு வாழ்த்துக்கள்.

என் தோழி வீட்டுல நேத்திக்கு இதே முறையில் திரட்டுப்பால் செஞ்சுருந்தாங்க (நல்லா இருந்தது, உங்க வீட்டுல தான் தின்னேன்னு நினைச்சுக்கறேன்!), தின்னுட்டு "இப்ப செஞ்சு கொடு" ந்னு நிக்குது எங்க வீட்டுச் சின்னது. செய்யணும்.

said...

வாங்க வாத்தியார் ஐயா.

கொத்ஸ்க்கு தடா போட்டுருக்காங்க அவரோட தங்கமணி.
உங்களுக்கு ரெண்டு என்ன நாலு ப்ளேட் கொடுத்தா ஆச்சு.

நீங்க மட்டும் இங்கே வந்தீங்கன்னா 'மஃப்பின் ப்ரேக்'ன்னு ஒரு இடத்தில் கொண்டுபோய் விட்டுருவேன். வகைவகையா இருக்கு.

நாமே கூட செய்யலாம். சுலபம்தான்.

said...

வாங்க பிரேம்ஜி.

ஆட்டோ அனுப்பும் தூரத்தில் இல்லை என்றுதான் ரெஸிபியை அள்ளிவிடறேன்:-)

said...

வாங்க PVS.

அதென்ன பேத்தின்னு சொல்றீங்க?

பேரனா இருந்தாலும் இதே ட்ரெஸ்தான்.

எல்லாம் யூனிசெக்ஸ் மாடல் உடுப்பு:-)

said...

வாங்க ச்சின்னப்பையன்.

இதை ரங்கூஸ்களும் செய்யலாம்:-)

இவ்ளோ செஞ்சவங்க இதைச் செய்யமாட்டீங்களா?

அதென்ன தங்கமணி மட்டும் குறிச்சுக்கறது?

said...

வாங்க கெக்கேபிக்குணி.

அடிக்கடி செஞ்சாலும் பசங்களுக்குப் போரடிச்சுரும். மாசம் ஒரு நாள். அவுங்களையே இந்த ஆக்டிவிடிக்கு உதவி செய்யச் சொல்லிச் செய்யலாம்.

said...

அந்த புடவை பார்ப்பி அட்டகாசமாக இருந்தாலும்....கராத்தே ஸ்டைலில் கை இருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்க்கனும் போல தோனிற்று.
சுருள் கத்தி வீசாதவரைக்கும் நல்லது.
:-)
சில இடங்கள் நெகிழ்வாக இருக்கு,தொடர்ந்து உங்கள் பதிவை படிப்பவர்களுக்கு புரியும்.

said...

//பெற்றோர்களிடத்தில் அன்பை வெளிப்படையாச் சொல்லலைன்னாலும் உள்மனசில் நம்மை நல்ல இடத்தில்தான் வச்சுருக்காங்க. 'பளிச்'ன்னு சொல்லத் தெரியலை. போனாப் போட்டும்.//

நல்ல புரிஞ்சு வெச்சுருக்கீங்க டீச்சர், இதுக்காகவே உங்களுக்கு ஒரு 'ஓ' போடலாம் !

ஒரு பண்டிகை வந்தா கூட கடைக்கு போய் தான் ஸ்வீட் வாங்கணும் னு ஒரு நிலைமையில் தான் இவ்ளோ நாள் இருந்தேன். இப்போ ஒண்ணு ஈசி-யா சொல்லி இருக்கீங்க. கன்னி முயற்சி தமிழ் வருஷப் ...அவ்.....அதாவது முன்பு தமிழ் வருஷப் பிறப்பா இருந்த அன்னிக்கு செஞ்சு பாத்துற வேண்டியது தான்..! :)

said...

நெகிழ்வான பதிவு தான்... \\இந்த வயசிலேயே// ஆமாம் துளசி என்பொண்ணு இப்பவே கொசுவத்தி சுத்தறா ....

said...

கடைசி வரிகளில் இருக்கும் மானுடம் சார்ந்த நெகிழ்வுதான் திரட்டுப்பால்,குரங்குகளை எல்லாம் விட மிக அருமை !
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் தன்னைவிட உயர்ந்ததான பண்புகளுடையதான தன்னைப் போன்ற உயிரியை உருவாக்குவதில்தான் கவனம் செலுத்துகின்றன;மனிதர்களில் மட்டுமே தன்னைவிடக் கீழான பண்புகளையுடைய மனிதர்களையே பெரும்பான்மையாக உலகில் விட்டுச் நிலை இருக்கிறது' அப்படின்னு ஒஷோ ஒரு உரையில் சொல்லுவார்.

இந்த விதயத்தில் சிறுபான்மை வட்டத்தில் நீங்கள் இருப்பது மகிழ்வானது...

said...

வாங்க குமார்.

சின்னச்சின்னச் சம்பவங்கள் தினமும் நிறைய நடந்துக்கிட்டே இருக்கு.

சிலது மனசை அப்படியே நெகிழவைக்குது. மற்ற சில கோபம், மகிழ்ச்சி, வெறுப்புன்னு பலவித உணர்ச்சிகளையும் கொண்டுவந்து கொட்டிட்டுப் போயிருதே.

வாழ்க்கை என்பதே அனுபவம்தான். இல்லீங்களா?

said...

வாங்க வந்தியத்தேவன்.

இன்னும் சில சுலபமாச் செய்யும் இனிப்பு வகைகளையும் பதியும் எண்ணம் இருக்கு.

நீங்கெல்லாம்தான் செஞ்சுபார்த்துத் தின்னுட்டுச் சொல்லணும்:-)

said...

வாங்க கயல்விழி.

கொசுவத்திக்கு நாந்தான் ஹோல்சேல் கடை வச்சுருக்கேன். மகளிடம் கேட்டு ஆர்டர் அனுப்புனா வசதியா இருக்கும்:-)

said...

வாங்க அறிவன்.

'மனுசந்தான் தெ மோஸ்ட் டேஞ்சரஸ் க்ரீச்சர்'னு சொல்வாங்க.

மனுசன் மனுசனா இருப்பதே அதிசயமுன்னு இருக்கும் காலத்தில் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.

உதவி செய்யலைன்னாலும் உபத்திரவம் செய்யாம இருந்தாவே போதும்தானே?

said...

// பகல் சாப்பாட்டுக்கு இவர் வந்தப்ப, எதாவது வாங்கியாங்கன்னு விரட்டுனேன்.//

பாவமா இருக்குங்க .. வந்த உடனேயா விரட்டணும் ?
சாப்பிட்ட பிறகாவது விரட்டியிருக்க கூடாதா ?

மேனகா
தஞ்சை.
பி.கு. நேரமிருந்தால் வாருங்கள்:
http://vazhvuneri.blogspot.com
http://paattiennasolkiral.blogspot.com

said...

என் மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் உதவக்கூடிய நல்ல மனசு இருக்கு. அது போதுமே. //

ஆமா ... சரியா சொன்னீங்க.

தோழிப்பெண்ணின் உடல் நலம் தேறட்டும்.

said...

துலசி, உங்கபொண்ணுக்கு ந்ஏசம் இல்லாட்டாத்தான் அதிசயப் ப்அடணும் நல்லா இருக்கட்டும் ரெண்டு பொண்ணுங்களும்.

இத்தனை பொம்மைகளையும் நினைவுகளையும் பார்த்தால் வாழ்க்கையை அணூஅணு வா ரசிக்க,நேசிக்கத் தெரிந்த ஒரு பெண் தான் கண்ணில் படுகிறார். அருமை துளசி!!!

said...

really enjoyed this piece....apologize for not being able to type in tamizh..."kosuvathi" puriyavillai indha "tubelightukku"...Please explain...

said...

வாங்க மேனகா.

சாதாரண விரட்டுதாங்க. மஞ்சுவிரட்டை நினைச்சுக்கிட்டீங்களா?:-)

கடைக்குக் காரில் போனா ஒரு ரெண்டு நிமிஷம்தான் ஆகும். வீட்டுக்குள்ளே வர்றதுக்கு ஷூ கழட்டும் நேரத்துக்கு போயிட்டே வந்துறலாம்.

சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செஞ்சுக்கிட்டு வேலைக்குப் போனால் போதுமேன்னு தான் முன்னாலே 'விரட்டு'னது:-)

கல்மனசுக்காரின்னு என்னத் திட்டாதீங்க ப்ளீஸ்.....

said...

வாங்க வல்லி.

உங்க ஆசிகளுக்கு நன்றி. பொண்கள் நல்லா இருக்கணும். அதிலும் தோழிப்பெண்ணுக்கு நலம் விரைவில் கிடைக்கணும்.

said...

வாங்க ராம்.

கொசுவத்தி..... தெரியலையா? :-))))))

வலதுகையை நீட்டுங்க. ஆள்காட்டி விரலை விட்டுட்டு மத்த 4 விரல்களை மடக்கிக்குங்க. சரியா?

இப்ப அந்த விரலால் காற்றில் சுழிச்சுழியா டார்ட்டாய்ஸ் கொசுவத்தி டிஸைன்லே சுத்துங்க.

ம்ம்ம்ம்ம் அப்படித்தான்.....

ஃப்ளாஷ் பேக் வருதா..... அம்புட்டுதான்:-))))

said...

ரீச்சர், நான் வந்தாச்சு.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பெர்மிஷன் வாங்கியாச்சு. ஒரு கப் திரட்டுப்பால், ஒரு ப்ளேட் மப்பின்ஸ் குடுங்க. :))

said...

கொசுவத்தி சுத்த வைச்சிட்டீங்களே துளசி - மனம் மகிழ்கிறது - நெகிழ்கிறது - அழுகிறது ( ஏன் ?).

ம்ம்ம்ம்ம்ம் 0 அம்மா - மகள் - ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டாலும் - வெளியில் காண்பித்துக் கொள்வதில்லை.

கை கொடுக்கும் போது கட்டி அணைத்த, மகளின் தோழி மகளாகவே தோன்றுவாளே !

மார்பகப் புற்று நோய் - நெஞ்சம் பதறுகிறது.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

//பெற்றோர்களிடத்தில் அன்பை வெளிப்படையாச் சொல்லலைன்னாலும் உள்மனசில் நம்மை நல்ல இடத்தில்தான் வச்சுருக்காங்க. 'பளிச்'ன்னு சொல்லத் தெரியலை. போனாப் போட்டும்.//


அருமை அருமை

said...

வாங்க தருமி.

ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு!!!

நலமா?

மனிதம் போற்றும் மகள் என்ற மனநிறைவு எனக்கு இருக்கு.

தோழிப்பெண் சரியான வழியில்தான் சிகிச்சையை ஆரம்பிச்சுருக்காங்க.

கூடியவிரைவில் நலம் பெறணும்.
தங்கள் அன்புக்கு அவுங்க சார்பில் என் நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

வகுப்பை விட்டு எங்கே போயிட்டீர்?

இப்பப் பாருங்க உங்க பங்கையெல்லாம்
வாத்தியார் ஐயா எடுத்துக்கிட்டார்:-)

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கலைன்ற கதைதான்!!!!!

said...

வாங்க சீனா.
உங்க பின்னூட்டமும் அருமைதான்.

அனுவின் பதிவைப் படிச்சதின் பாதிப்பு அன்றைக்கு நிறையவே இருந்தது.

நலம் பெற வேண்டும்.

said...

//ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு!!!//

அடடா! என்ன இது? இப்பத்தான் நம்ம பெனாத்தலாரும் இதையே சொன்னாரு. எனக்கு என்ன ஆச்சு? இப்பதான் நான் ரொம்ப நம்ம மக்கள்ஸை கண்டுக்காம சோம்பேறியா ஆயிட்டேனோன்னு தோணுது.

ம்ம்..ம்ம்.. இனிம பாருங்க...

said...

தருமி,

நாங்க சொந்தமா யோசிச்சுக் கேட்டிருக்கோம். மண்டபத்தில் யாரும் சொல்லித்தரலை:-)))))

said...

//மண்டபத்தில் யாரும் சொல்லித்தரலை:-))))) //

அந்தக் /கொடுப்பினை' தருமி மாதிரி எல்லாத்துக்குமா கிடைக்கும்னு நினச்சீங்க ...
ஹூம்...

:)

said...

i like the choppu saamaan.. enakku piditha kuzanthaigalukku vaangi kodukkaa aasai vanthathu..

i really like your blog.I will reply soon in tamil...

ila( ilakkumi)

said...

/////துளசி கோபால் said...
வாங்க கொத்ஸ்.
வகுப்பை விட்டு எங்கே போயிட்டீர்?
இப்பப் பாருங்க உங்க பங்கையெல்லாம்
வாத்தியார் ஐயா எடுத்துக்கிட்டார்:-)
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கலைன்ற கதைதான்!!!!!////

எல்லாம் தங்கமணியக்கா தயவால கிடைச்சுதாக்கும். இல்லேன்னா கொத்தனாரண்ணன்
என்னைக்கு என்னை உள்ள விட்டிருக்காரு?

இவருக்குத் தடா போட்டு உள்ள வச்சிருந்தவங்க எதுக்கு வெளியே விட்டாங்க டீச்சர்?

said...

துள்சி!
நெழ்வான பதிவு! பிள்ளைகள் நம்மை நல்லஇடத்தில்தான் வைத்திருக்கிறார்கள் என்ற நினைவே போதும். வெளிக்காட்டிக்கவேண்டிய அவசியமில்லை. ரொம்ப சரி! உங்க கொசுவத்தி கலக்ஷன் சூப்பர். நானும் இதுபோல் பிள்ளைகளின் ஆரம்பகால பொருட்களையெல்லாம் சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் ஊர் ஊராக டேரா போட்டதில் ஆங்காங்கே சிதறிவிட்டது.

said...

ஆமாங்க தருமி.

மதுரைக்காரவுகளுக்குத்தான் கொடுப்பனை இருக்கு. மண்டபம் இருப்பதும் அங்கேதானே:-))))

said...

வாங்க இலா என்னும் லக்குமி.

ஊருலே குழந்தைகளுக்காப் பஞ்சம்? ஆசைபட்டதை வாங்கிக் கொடுத்துருங்க.

கொடுக்கணுமுன்னு நினைச்சா உடனே கொடுக்கணும். ஆறப்போட்டா வேளை மட்டுமில்லை மனசும் வராது(-:

said...

வாத்தியார் ஐயா,

தங்கமணி நல்ல மூடில் இருக்காங்க. அதான் விட்டுப்பிடிக்க நினைக்கிறாங்க போல :-)

said...

வாங்க நானானி.

//ஆனால் ஊர் ஊராக டேரா போட்டதில் ஆங்காங்கே சிதறிவிட்டது//

உண்மையோ உண்மை. என் சொப்புகள் எல்லாம் போன இடம் தெரியலை. அதான் மகளோடதை சேர்த்து வச்சுருக்கேன்.

ஒவ்வொண்ணுக்கும் ஒரு கதையும் இருக்கு:-)))))