Tuesday, April 01, 2008

சவுண்டான சவுண்டு இங்கே:-)

மார்ல்பரோ சவுண்டுக்குப் போலாமா? இங்கேதான் தெற்குத்தீவின் வடகிழக்கு மூலையில் இருக்கு. போறவழியில் எங்கே பார்த்தாலும் திராட்சைத் தோட்டங்கள்தான். 'குடி' ஒரு பெரிய வியாபாரம்.


மலைகளை ஒட்டிய பள்ளத்தாக்குகளில் கடல் உள்ளே வந்து நிரம்பி இருக்கு. திட்டுத்திட்டாக் குட்டிக்குட்டி இடங்கள். தீவுன்னு சொல்லிக்கலாம்.
கடலிலும் கூட்டம் கூட்டமா டால்பின். இந்தப் பகுதியில் மூணு இடங்கள் ரொம்பப் பேர் வாங்கியிருக்கு.


The Queen Charlotte Sound


Kenepuru Sound


Pelorus Sound


சுற்றுலாப் பயணிகள் இங்கே வாடகைக்குப் படகு எடுத்துக்கிட்டு நீ(ஊ)ர் சுத்தலாம். நடக்கறதுக்காகவே நிறையப்பேர் போறாங்களாம்.மலைவழிப் பாதையில் சரிஞ்சு, ஏறின்னு போகணும். ஆச்சரியங்களை எதிர்நோக்கத் தயாரா இருந்தீங்கன்னா இது உங்களுக்கான இடம்.(எதிர்பாராமக் கிடைச்சாத்தான் ஆச்சரியமுன்னு யாரும் சவுண்டு விட வேணாம்.)




ஏற்கெனவே கூட்டம் குறைச்சல். இந்த அழகில் இங்கே இன்னும் சுத்தம். பேசக்கூட ஆள் இருக்காது...... அப்புறம் எங்கே சத்தம்?. நெருங்கிய நண்பர் இப்பத்தான் போன வாரம் (ஈஸ்டர் விடுமுறை) போய்வந்தார். புகைப்படக்கலையில் ஆர்வம் அதிகம் இருப்பவர். அவர் எடுத்த படங்களைத்தான் உங்க பார்வைக்கு வச்சுருக்கேன். சூரிய உதயம் அருமையா இருக்கு.











கூகுளிச்சுப் பார்த்தால் கொட்டிக்கிடக்கு இங்கே:-)

இதே போல இந்தத் தெற்குத்தீவின் தென்மேற்குப் பகுதியிலும் Milford sound, Doubtful Sound ன்னு எக்கச்சக்க சவுண்டுகள். இதைப்பத்திச் சவுண்டு விட இன்னொருத்தரை ஏற்பாடு செஞ்சுருக்கேன்:-)))))

ஆமாம்.....சத்தமே இல்லாத இடத்துக்கு எதுக்கு சவுண்டுன்னு பெயர் வச்சுருக்காங்க? ஒருவேளை அப்படிச் சொல்லிப் பார்த்தாலாவது கொஞ்சம் சத்தம் வருமேன்னா?



27 comments:

இலவசக்கொத்தனார் said...

கப்புன்னு ரெண்டு படத்தை சுருட்டி இந்த மாத பிட் போட்டிக்கு அனுப்புங்க ரீச்சர்.

இந்த மாதம் ஒண்ணுதானே அலவுட் அப்புறம் எதுக்கு ரெண்டுன்னு எல்லாம் கேட்கக்கூடாது.

ஒண்ணு உங்க பேரில் அடுத்தது என் பெயரில்! :))

ILA (a) இளா said...

அட அட அட அசத்துது படங்கள்.

SathyaPriyan said...

Awesome pics.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் படங்கள். படத்திலும் ஒரு அமைதி தெரிகிறது.

கானா பிரபா said...

ARUMAI ARUMAI

பிரேம்ஜி said...

விடுமுறையை அனுபவிக்க அருமையான இடம்.

மலைநாடான் said...

போகனும் போலிருக்கே..சுவிற்சர்லாந்து ஏரிகளும் இதுபோன்ற அழகைத்தரும், என்றாலும் சூரிய உதய அஸ்தனக் காட்சிகள் காண்பதரிது.

படங்கள் மிக அருமை.

Anonymous said...

//இதே போல இந்தத் தெற்குத்தீவின் தென்மேற்குப் பகுதியிலும் Milford sound, Doubtful Sound ன்னு எக்கச்சக்க சவுண்டுகள். இதைப்பத்திச் சவுண்டு விட இன்னொருத்தரை ஏற்பாடு செஞ்சுருக்கேன்:-)))))
//புரிஞ்சுது. கூடிய விரைவில் வரும்னு நினைக்கறேன். அடுத்த வாரம் மெல்பர்ன் பயணம் இருக்கு. முடிஞ்சுதான் வரும்னு பதிவர் சொல்லச்சொன்னார்.

Anonymous said...

//சத்தமே இல்லாத இடத்துக்கு எதுக்கு சவுண்டுன்னு பெயர் வச்சுருக்காங்க? ஒருவேளை அப்படிச் சொல்லிப் பார்த்தாலாவது கொஞ்சம் சத்தம் வருமேன்னா//
அப்படீன்னா நீரும் காற்றும் சேர்ந்து வடித்த மலைகள், பாறைகள் அப்படீன்னு பொருள் கொள்ளலாம்னு சுற்றுலா வழிகாட்டி சொன்னார்.

பாச மலர் / Paasa Malar said...

அழகான படங்கள்...

sury siva said...

// இந்த அழகில் இங்கே இன்னும் சுத்தம். பேசக்கூட ஆள் இருக்காது...... அப்புறம் எங்கே சத்தம்?. //

உங்களுக்கு சத்தம் வேணுமின்னா என்னைக்கூட கூட்டிகிட்டு போயிருக்காம்லே !
http://www.youtube.com/watch?v=HWD6SI3Orc0

சுப்புரத்தினம்
தஞ்சை.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
இங்க லஸ் சர்ச் ரோடில ரெண்டு மணிநேரம் இருந்தாப் போதும். அப்புறம் சத்தமில்லாத உலகம் கேட்டேன்னு பாட ஆரம்பிச்சுடுவீங்க:)

படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.
சூப்பரோ சூப்பர்.
என்ன்ன கலர்ப்பா!!!!!அற்புதம்.

மணியன் said...

உலவும் தென்றல் காற்றினிலே, ஓடமிதில் நாமிருவர்..னு பாடலாம்போல இருக்கு. அருமையான படங்கள்.

Sound பற்றி வெப்ஸ்டரில் இப்படி சொல்லியிருக்கிறார்கள்:
5sound
Function:
noun
Etymology:
Middle English, from Old English sund swimming, sea & Old Norse sund swimming, strait; akin to Old English swimman to swim
Date:
14th century

1 a: a long broad inlet of the ocean generally parallel to the coast b: a long passage of water connecting two larger bodies (as a sea with the ocean) or separating a mainland and an island

துளசி கோபால் said...

வாங்க கொத்ஸ்.

இது பிட்டுக்கு உதவாது. (எடுத்தவர் வேற ஆள் )

நான் அவரில்லை:-)

துளசி கோபால் said...

வாங்க வாங்க வாங்க..
இளா,
சத்தியப்பிரியன்
யோகன்
பிரபா
பிரேம்ஜி,
மலைநாடான்,
பாசமலர்,
வல்லி,

உங்க பாராட்டுகளை சேரவேண்டியவருக்கு இதோ சேர்த்துட்டேன்.

நான் வெறும் விளம்பர இலாகாதான்:-))))

துளசி கோபால் said...

வாங்க சுப்பு ரத்தினம்.

இவரை நானும் ஒரு பதிவிலே போட்டுருந்தேனே:-))))

நீங்க பார்க்கலையா?

நம்ம பக்கத்து வீட்டு 'பூனி' ஆடுது:-)

துளசி கோபால் said...

வாங்க சின்ன அம்மிணி.

மெல்பேர்னா? ஜமாய் ராணி ஜமாய்:-)

துளசி கோபால் said...

வாங்க மணியன்.

இது...இது....இதைத்தான் எதிர்பார்த்தேன்.


நம்மாட்களுக்கு இப்ப நல்லாவே புரியுமுன்னு ஒரு நம்பிக்கைதான்.

மிகவும் நன்றி

(ரொம்ப ஃபார்மலா இருக்கோ?)

SP.VR. SUBBIAH said...

இரண்டாவது படம் அசத்தலாக உள்ளது!

SP.VR. SUBBIAH said...

///////இலவசக்கொத்தனார் said...
கப்புன்னு ரெண்டு படத்தை சுருட்டி இந்த மாத பிட் போட்டிக்கு அனுப்புங்க ரீச்சர்.
இந்த மாதம் ஒண்ணுதானே அலவுட் அப்புறம் எதுக்கு ரெண்டுன்னு எல்லாம் கேட்கக்கூடாது.
ஒண்ணு உங்க பேரில் அடுத்தது என் பெயரில்! :))

அப்ப மூனா அனுப்பிவைங்க ரீச்சர்!
கொத்ஸ் அநியாயத்துக்கு என்னை விட்டுட்டாரு!:-)))))

துளசி கோபால் said...

வாங்க வாத்தியார் ஐயா.

படம் சொந்தமா எடுத்துருக்கணுமாம்.

இப்படி என்னைத் 'தனிமை'யில் புலம்ப வச்சுட்டாங்களே...... 'பிட்'டருங்க.

இத்துப்போன ரீல் said...

நேத்தியிலிருந்து நான் பாக்கிறதெல்லாம் ஒரே தண்ணிமயமா
இருக்கு!இருந்தாலும் இந்த தண்ணி
ரொம்ப அழகு!

இத்துப்போன ரீல் said...

என்னுடைய பதிவிற்கு வந்ததற்கு
ரொம்ப நன்றிங்கம்மா. துளசியம்மா
புதிய பதிவர்களை வரவேற்பார் என்று
கேள்விபட்டிருக்கிறேன். அதை நேரிடையாக அனுபவித்தேன்.நன்றி!

துளசி கோபால் said...

வாங்க இத்துப்போன ரீல்.

தண்ணிமயமா இருக்கா?

தகராறே அதனால்தானே (-:

துளசி கோபால் said...

வருகை தந்த அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளைத் தெரிவிக்கச் சொல்லி இருக்கார் உபயதாரர்.

நண்பரே, இன்னும் நல்ல படங்களா எடுத்து எங்கிட்டே கொடுங்க.

பதிஞ்சுருவொம்லெ:-)))))

Unknown said...

அக்கா, படங்கள் அனைத்தும் அருமை! சம்பந்தப் பட்டவருக்கு குடோஸ் :)

மார்ல்பரோ 'லைட்ஸ்' கேள்விப்பட்டிருக்கேன், மார்ல்பரோ 'சவுண்டு' இப்பதான் கேள்விப்படறேன் :))

துளசி கோபால் said...

வாங்க தஞ்சாவூரான்.

சொல்லியாச்சு.அவரும் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லச் சொல்லியிருக்கார்.

(எனக்கு இப்படி ஒரு போஸ்ட் உமன் வேலை கொடுத்துட்டாங்க:-)