Thursday, April 03, 2008

ரெண்டும் சொல்வது ஒன்றுதான்.

புதுவாழ்வுக்கானக் கருத்து நிறைஞ்ச பண்டிகைகள் இதுன்னு சொன்னார் இப்போதையத் தலைவர். மக்கள்ஸ் ஒரு எம்பத்தியஞ்சு பேர் கூடி இருந்தோம். நியூஸிக் கணக்குக்கு நல்ல(!) கூட்டம்தான்.

கேரள சங்கத்தின் ஈஸ்டர் & விஷூ கொண்டாட்டம். இந்தமுறை சாப்பாடுக்கு வெளியில் ஒரு ஏற்பாடு. புதுசா இங்கே சாப்பாட்டுக் கடை வச்சிருக்கும் வட இந்தியத் தமிழர்னு சொல்லலாமா? ஹிமான்ஷு தமிழ்நாட்டுலே இருக்கும் ஏராளமான வட இந்தியர்கள் குடும்பமொன்றின் வாரிசு. நல்லாத் தமிழ் பேசறார். அவர் மனைவி மும்பைப் பொண்ணு. (உண்மையாவே இப்பச் )சமீபத்துலேதான் கடை ஆரம்பிச்சுருக்கார். அஞ்சுமாசமாச்சு.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யும் மீட்டிங்கில் வந்த அவர் மனைவி, நாங்கள் சொன்ன மெனுவுக்கும் விலைக்கும் சாப்பாடு தர ஒத்துக்கிட்டாங்க.
சாதம், நான், ரைத்தா, பப்படம், சிக்கன் கறி, லேம்ப் கறி, வெஜிடபிள் கறின்னு மொத்தம் ஏழு அயிட்டம். சாதம் மட்டும் பாசுமதி அரிசி இல்லைன்னு சொன்னாங்க. எங்களுக்கும் பாசுமதி போரடிச்சுப்போச்சு. சரின்னுட்டோம்.
பதிவு செய்த சங்கம், ச்சும்மா நடத்தும் குழுன்னு இங்கேயும் ரெண்டுபட்டுக் கிடக்கு. குழு இடம் புக் செய்ய முந்திக்கிட்டதால் அவுங்க பகல்நேர விழாவாகவும், சங்கத்து விழா மாலைநேர விழாவாகவும் ஒரே அரங்கில் ஏற்பாடு. அவுங்க 7 மணிவரை இடம் எடுத்துருந்தாங்க.நாங்க ஏழரைக்கு ஆரம்பிக்கலாமுன்னு இருந்தோம். முதலில் சாப்பாடு. ஆறிப்போனா நல்லா இருக்குமா? நாங்க போனப்ப ஹிமான்ஷூம் அவர் மனைவியும் சாப்பாடெல்லாம் தயாரா மேசைமேல் எடுத்து வச்சுக்கிட்டு இருந்தாங்க. ரெண்டு பக்கமும் மேசைகளில் அதே அயிட்டங்கள். சீக்கிரம் சாப்பாட்டு வேலையை முடிச்சுக்கிட்டுக் கலைநிகழ்ச்சியை ஆரம்பிக்கணும். ரொம்ப நெர்வஸா நின்னுக்கிட்டு இருக்காங்க. இதுதான் முதல்தடவையா கேட்டரிங் செய்றிங்களான்னு கேட்டேன். ஆமாவாம். பயப்படாதீங்க. பார்க்கறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. மூடிகளைத் திறந்ததும் படம் எடுத்து நம்ம பதிவில் போட்டுறலாம்னேன். என்ன தோணுச்சோ, சட்னு காலைத் தொட்டுக் கும்பிட்டுட்டாங்க. எனக்கு பேஜாராப் போச்சு. நான் 'அம்மா'வோட 'ட்வின்' னு சொல்லிக்கிட்டு இருப்பேன். அது நிஜம்தான் போல:-)))) நல்லா இருங்கன்னு ஆசிகள் வழங்குனேன். பெரியமனுஷ லட்சணம் வேணாமா?ம்யூஸிக் சிஸ்டம் வச்சு சவுண்ட் சரிபார்த்துக்கிட்டு இருந்தாங்க. பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஆடியோ சிஸ்டமே போதும். அது என்னவோ கூடுதல் செலவில் வெளியாட்களைக் கூப்புட்டுச் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. என்னத்தை வெளியாட்கள்? எல்லாம் நமக்குத் தெரிஞ்ச ஃபிஜி இந்தியர்கள்தான்.

இவ்வளவு ச்சின்ன ஹாலுக்கு இத்தனை அமர்க்களம் தேவையில்லைதான் மக்களே............


கேரள இளைஞர்கள் மேடையில் எல்லாம் ஒழுங்குபடுத்திக்கிட்டு இருந்தாங்க. ஆர்க்கெஸ்ட்ரா....தபேலா, கீ போர்டு, எலெக்ட்ரானிக் ட்ரம்ஸ், கிட்டார்ன்னு சிலது.சாப்பாடு நல்லாவே இருந்துச்சு. டிஸர்ட்டுக்கு ஐஸ்க்ரீம். வெளுத்துக்கட்டிட்டு, அமெரிக்கையா அரங்கில் உட்கார்ந்தோம்.ஒரு நண்பரின் மகள் கடவுள் வாழ்த்து பாடியதும் தலைவர் வரவேற்றுச் சொன்னதுதான் பதிவின் முதல் வரி. ஈஸ்டர் & விஷூ மெசேஜ் கொடுக்க உங்கள் அனைவரின் சார்பில்'' நான் மேடைக்குப் போனேன். மொதல்நாள் வரை என்ன பேசப்போறொமுன்னு முடிவு செஞ்சுக்கலை. அப்புறம் கொஞ்சம் யோசிச்சப்ப(???) இது என்னடா எனக்கு வந்த சோதனைன்னு இருந்துச்சு. ஸ்பீச் யார் கொடுக்கப்போறாங்கன்னு ஆளைத் தேடுனப்பக் கோபால்தான் ச்சும்மா இருக்காம என்னை இழுத்துவிட்டுட்டார். மனுஷியைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விட்டாலும்......
நம்ம கேரள சங்கத்தில் மூணு குடும்பம் தவிர மற்றவர்கள் எல்லாமே கிறிஸ்துவமதத்தைச் சேர்ந்தவர்கள். கொல்லன் தெருவிலே ஊசி விக்கப் போன கதையா இருக்கேன்னு நினைச்சேன். அதையே பிடிச்சுக்கிட்டு 'என்னைவிட உங்களுக்கே ஈஸ்டரின் மகிமை நல்லாத் தெரியும். ஏசுநாதரின் வாழ்க்கையில் அவர் கடைப்பிடிச்ச விஷயங்களான பொறுமை, அயல்வாசிகளோடு உள்ள நட்பு, அன்பு, கடவுள் நம்பிக்கை இவைகளை நாமும் நம் வாழ்க்கையில் கூடியவரை செயலாக்கணும். பெருசா ஒண்ணும் செய்ய முடியலைன்னாலும், நம்மைச் சுற்றி இருக்கும் மற்ற உயிர்களோடு கொஞ்சம் அன்பா இருக்க முடியாதா? விஷூன்னு சொல்லும் புதுவருச ஆரம்பத்திலும், மனுசன் தன்னுடைய எதிர்காலம் இந்த வருசம் நல்லா இருக்கும் என்ற நம்பிக்கையோடுதானே காலையில் எழுந்து கடவுளைக் கும்புடறான். அந்த மாதிரி நம்பிக்கைதான் வாழ்க்கை. இல்லீங்களா? . மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கத்தான் இந்தமாதிரி பண்டிகைகள் வருது, அவைகளை நாமும் கொண்டாடுறோம்'னு கொஞ்சமா மசாலா சேர்த்து கழிச்சுக்கூட்டி ஆவுன்னத்ரம் ஒன்னு பிரசங்கிச்சு.ஆட மாட்டாதவளுக்குக் கூடம் கோணல்ன்னு சொல்றதுபோல மைக் செட் பாடாப்படுத்திருச்சு. நிகழ்ச்சி ஆரம்பத்துலே இருந்தே தகராறு. பாதிநேரம் வேலையே செய்யலை. சுத்தம்.....தோழியின் மகள் ( மருத்துவர்) ரெண்டு பாட்டு பாடுனாங்க. ஒன்னு ஆங்கிலம், மற்றது ஹிந்தி. நண்பர் ஒருத்தர் 'கருத்த பெண்ணே'ன்னு ஒரு மலையாளப் பாட்டு. இந்த கரியோக்கி சிடிகள் கிடைக்க ஆரம்பிச்சபிறகு மேடைப் பாட்டுக்கள் போரடிக்காமக் கொஞ்சம் கலக்கலாத்தான் இருக்கு. இதுக்கப்புறம் வந்த எல்லாமேத் தமிழ்ப்பாட்டுக்களும், அதுக்குண்டான நடனமும்தான். இவருடைய குடும்பமேக் கலைக்குடும்பமுன்னு சொல்லணும். இளைய மகள் ஆடுனது ' கண்ணன் எங்கள் கண்ணனாம்' பாட்டுக்குன்னா, அதனோட அக்கா ஆடுனது 'ஜெயஜெய தேவி துர்காதேவி சரணம்' என்றதுக்கு.'சின்னச் சின்ன ஆசை'


அந்த அரபிக் கடலோரம்


'தேவுடா தேவுடா' ன்னு ஒரே தமிழ் முழக்கம்தான்:-))))இந்த வருசம் இங்கே படிப்புக்காகப் புதுசா வந்த இளைஞர் கூட்டம் நிறைய 'டேலண்ட்ஸ்' உள்ளதா இருக்கு. அதான் இந்த ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் வந்துருக்கு. ஒருத்தர் தனி ஆவர்தனமாத் தபேலா வாசிச்சாரு. பரவாயில்லை. நல்லாத்தான் இருந்துச்சு. தனியா வாசிச்சுக்கிட்டு இருக்கார், மக்கள்ஸ் யாராவது ஊக்கப்படுத்தவேணாமா? எல்லாம் 'ஆ'ன்னு இருக்காங்க. நாந்தான் இடைக்கிடைக்கு 'வா(ஹ்)' சொல்லிக்கிட்டு இருந்தேன்:-))))


நாலைஞ்சுபேர் ஊர்லே இஞ்சிநீயரிங் பட்டப் படிப்பு முடிச்சுட்டு, இங்கே ஃப்ளையிங் கோர்ஸ்லே சேர்ந்துருக்காங்க. இந்தியாவில் விமானிகள் வேலைக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்காமே!!! யார்யாருன்னு பார்த்து வச்சுக்கிட்டேன். அந்த ப்ளேன்லே ஏறாம இருக்கத்தான்:-)))
அடுத்த விழா ஓணம் பண்டிகைக்கு. இப்படி இந்துப்பண்டிகை, கிறிஸ்துவப்பண்டிகைன்னு வித்தியாசம் காமிக்காம எல்லாத்தையும் கலந்தே கொண்டாடும் கேரளா க்ளப் நடபடிகள் நமக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. வளரே நன்னாயி.இரண்டுக்கும் பொதுவா நடுவில் போட்டுருக்கேன். இப்படிப் பதினொண்ணு அப்படிப் பதினொண்ணு நாட்கள்.அதெல்லாம் ரொம்ப நியாயஸ்தின்னு சொல்ல (சொல்லிக்க) இதைவிட வேறு ஆதாரம் வேணுமா? :-))))))

21 comments:

said...

நிகழ்ச்சியை நல்லா கவ ரேஜ் பண்ணியிருக்கீங்க. உங்களுக்கு மலையாளமும் தெரியுமா?

said...

வாங்க பிரேம்ஜி.

வாயிக்கானும், எழுதானும், பறயானும் கொறைச்சொக்க அறியாம்:-)))

said...

kalakkal ;)

said...

அதான் எங்களுக்குத் தெரியுமே!! :))

said...

உங்க செல் போன் கேமிரா பக்கத்தில் உள்ளதை மட்டும் நன்றாக எடுக்கிறது போலும்.
அந்த சிகப்பு தொட்டியின் மேல் அவ்வளவு எண்ணையா? தாங்காது!!!

said...

அதான் எங்களுக்குத் தெரியுமே!! :))


இது என்ன முதல் பின்னூட்டத்துக்கு பதிலா? :-)

said...

ரிப்போர்ட்டிங் பாகுந்தண்டி!
தானிக்கண்டே Dishes சால பாகுந்தண்டி!

said...

/////Blogger இலவசக்கொத்தனார் said...

அதான் எங்களுக்குத் தெரியுமே!! :))////

ஆ, இய்னா ஒச்சேசாரா? அதே ச்சூசுஸ்துன்னானு! மஞ்சிவாடண்டி.
எக்குவா மாட்லாடராரண்டி! அதே பாதா!

said...

ஆஜர்! ஆனை டான்ஸ் ஆடுதா இல்லை புட்பாலா? அப்புறம் ஆன்டாஸிட் ஒரு பாட்டில் வாங்கி அனுப்புங்க!

said...

கலக்குறிங்க டீச்சர் ;))

said...

டீச்சர்,நானும் அட்டெண்டண்ட்ஸ் போட்டுக்கிறேன்.

said...

வாங்க பிரபா.

கலக்கித்தானே ஆகணும்:-)))

said...

வாங்க கொத்ஸ்.

புது மாணவர்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பு உண்டோ?

இப்படிச் சொல்லிக்கிட்டாத்தான் உண்டு:-))))

said...

வாங்க குமார்.

இது செல் கேமெரா இல்லை. நல் கேமெராதான்.

இன்னும் இதோட மேன்யுவலைப் படிக்கலை. வாங்கி ரெண்டரை வருசம்தான் ஆச்சு:-))))

செட்டிங்ஸ் சரியா செஞ்சுக்கலை.

பலசமயம் இப்படிக் காலை வாரிக்கிட்டு இருக்கு.

said...

ரண்டி ரண்டி மாஸ்டர் 'காரு'

இப்புடு சூடண்டி மன பிரேம்ஜி 'காரு' கொஞ்ச்சம் கன்ஃப்யூஸூ அய்போத்தாரு காதா?


மன லீடரு பாத காதண்டி.மனசூ மஞ்சிதே. ஒதிலேயண்டி:-))

said...

வாங்க திவா.

ஆன்டாஸிட் தேவைப்படும் அளவுக்கா ஆகிப்போச்சு?:-))))
அடடடா......

said...

வாங்க கோபி.
கலக்குனாதானே 'தெளிவு' பிறக்கும்:-)))))

said...

வாங்க சாமான்யரே.

பதிஞ்சாச்சு:-))))

said...

சாப்பாடு போட்டோல்லாம், சூப்பரு..:))

said...

மாம்ஸ் ஸ்டெயிலா கலக்கறாரு :)

said...

வாங்க ரசிகன்.

உங்க ரசிப்புக்கு ஒரு நன்றி.

மாம்ஸ் ஸ்டெயி மன்னராச்சே.

படம் எடுக்கும்போது ஸ்டையிலா கண்ணாடியைக் கழட்டி வச்சுக்குவார்.
அப்பத்தானே இளலுக் வரும்:-))))