எச்சரிக்கை: இது பெண்களுக்கான பதிவென்று நினைத்துப் பயப்படவேண்டாம்:-)
கம்பி மாதிரி இருக்கும் ரெண்டைவச்சுச் சொக்காய் பின்னிக்கலாமாம். பழைய காலத்து இந்தி சினிமாவுலே 'மா பன்னே வாலி'ன்னு நாயகனுக்குத் தெரிவிக்க, நாயகி பின்னிக்கிட்டு இருப்பாங்க. அங்கே குளிர் கூடுதல். பின்னுறாங்க. ஆனா நம்ம பக்கம் அடிக்கிற சூட்டுக்கும் தமிழ்ப்பட நாயகி இதையேதான் செய்யறதா சில படங்களில் காமிச்சுக்கிட்டும் இருந்தாங்க. முக்கியமா இது எல்லாம் மேல்தட்டு வாழ்க்கையை வாழும் படங்களில்தான். பணக்கார நாயகன் ட்ரெஸ்ஸிங் கவுன் போட்டுக்கிட்டு வாயில் பைப் வச்சுக்கிட்டு இருப்பார். அது நிற்க....
எங்க சின்ன அக்கா இந்தப் பின்னும் விசயத்தில் பயங்கரி. நிட்டிங், உல்லன் சமாச்சாரமெல்லாம் கிடையாது. குரோஷா ஊசின்னு முனையில் கொஞ்சமா வளைஞ்ச ஒத்தை ஊசி இருக்கும். அதுக்குன்னு இருக்கும் விசேஷ நூல் கண்டை வச்சுக்கிட்டு வாசப்படிக்குப் போடும் திரைச்சீலை, மேசை விரிப்பு ரகங்கள் செய்யுறது மட்டுமில்லாம 'பெர்சனல் டச்'க்காக உள்பாவாடை ஓரங்களில் பின்னுவாங்க. ரொம்ப லேசான காரியமுன்னு நான் நினைப்பேன். இதுக்குப் பேரே லேஸ் என்றதாலே. நடக்கும்போது புடவைக்கரைக்குக் கீழே கொஞ்சமா அசப்புலே பளிச்ன்னு தெரியும்விதம் கொஞ்சம் அகலமாப் பின்னுவாங்க. கூடவே உள் பாடிஸ்க்கும் குட்டிக் கரைபோல அந்த வளைவை ஒட்டியே பின்னுவாங்க. அப்பெல்லாம் பிரா என்ற சமாச்சாரம் புழக்கத்தில் அவ்வளவா இல்லையாம்.
இந்த மேற்படி விசயத்தைப் பத்தி ஒண்ணு இங்கே(யே)நான் சொல்லிக்கவா?
இப்பச் சின்னக்காவைப் பார்க்கலாம். தலையணை உறைகளில் கொஞ்சும் கிளிகள் குட்நைட் சொல்லும். படுக்கை விரிப்புகளில் ஒரே மலர்கள் கொட்டிக் கிடக்கும். கெட்டிக்காரி. இதுகளில் மட்டும் கண் பார்த்தாக் கை செய்யும். அக்காவுக்குத் தெரியாதுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருப்பது இந்த நிட்டிங்தான்.
அக்காவைப் பத்தி இங்கே சொல்லியிருக்கேன் முந்தி. இன்னொரு பதிவும் இந்த அக்காவைப் பத்தி எழுதி இருந்தேன். இந்த ரெண்டையும் படிச்சவுடன் அக்காவைப்பத்தி உங்களுக்கே நல்லாப் புரிஞ்சுரும்:-)அக்கா தன் குழந்தையைச் சுமக்கும் காலங்களில் கூட சினிமாவில் வர்றதுபோல 'பூட்டீஸ்' பின்னுனது இல்லை. அக்காவுக்குத் தெரியாத ஒரு கலையை நான் அடிச்சுப்பிடிச்சுக் கத்துக்கிட்டேன். இதுலே நிட், பெர்ல் ன்னு ரெண்டே தையல்(?) கத்துக்கிட்டேன். ஊசியை இடப்பக்கம் இருக்கும் ஊசியில் இருக்கும் வுல்லன் நூலின் அடிப்பக்கம் செலுத்திக் கோர்த்து எடுத்தா நிட். அதையே மேல்பக்கம் செருகினா பேர்ல். இம்புட்டுதானா விசயம். பின்னிட்டா ஆச்சு!
விக்கியிலே இருக்கு விளக்கம்.
தமிழ்நாட்டைவிட்டு பூனாவுக்கு வந்த புதிதில் நாகரிக பழக்கவழக்கத்தைக் கத்துக்கணுமுன்னு நானும் ஆரம்பிச்சது இப்படித்தான். ஆரம்பிச்சதை முடிச்சேனான்னு யாரும் கேக்கப்பிடாது...ஆமாம். அதெல்லாம் பக்கத்துவீட்டு அக்கா முழுசாப் பின்னியே கொடுத்துட்டாங்க:-))))
மகளுக்குப் போட்டுக் கொடுத்தாச்சு. விலை குறைய ஆரம்பிச்சது. 15லே ஒண்ணு, 12 லே ஒண்ணு, 9 லே ஒண்ணுன்னு ஆகி இப்ப 3 லே ஒண்ணு செஞ்சுக்கிட்டு இருக்கேன்:-)
கழுதை தேய்ஞ்சுக் கட்டெறும்பா ஆனது.
நம்ம மாடல் இருக்காரு பாருங்க அவருக்கும் போட்டுப் பார்த்தால் அழகாத்தான் இருக்கு. அவரும் உலகத்தில் யாருக்குமேக் கிடைக்காத ஒரு கவுரதை கிடைச்சாபோலே அதை ஏத்துக்கிட்டு பெருந்தன்மையா போஸ் கொடுப்பார்.
இந்த பின்னுவது என்றது ஒரு தெரபியாம். ச்சின்ன கைவேலைகளில் கவனம் செலுத்தும் அந்தக் கணம், மனசை லேசாக்கிருமாம். பொழுதன்னிக்கும் கணினித் திரையை மொறைச்சுக்கிட்டு இருக்கும் கண்களுக்கு அப்பப்ப ஓய்வு கொடுக்கும்போது, இதுபோல எதாவது அவசரமில்லாத ஹாபியை வச்சுக்கிட்டா டூ இன் ஒன்.
இந்தப் புசுபுசு நூலில் இன்னொரு வசதி என்னன்னா.... நாம பின்னும்போது சிலசமயம்(??) தப்பாக் கோத்து வாங்கினாலும் பிரச்சனை இல்லை. யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முதல்லே தப்பா இருக்குன்னு நமக்கே புரியணுமுல்லெ?:-)))
ரோம ஆடைகளுக்காக மிருகங்களைக் கொன்னோமென்ற பழிபாவமும் இல்லை. சோப்புத் தண்ணியில் அலசிக் காயவச்சுக்கலாம். மெஷீன்லே டெலிகேட் செட்டிங்ஸ்லே துவைச்சுக்கலாம். கலர் ஃபுல்லா இருக்கும் இதோட கலர் போறதில்லை.
ஒண்ணு மட்டும் கவனத்துலே வச்சுக்கணும். 28 தையல்ன்னு சொன்னதைத்தான். இது அகலமா வேணுமுன்னா கொஞ்சம் கூடவே 40 வரை வச்சுக்கலாம். பின்னிக்கிட்டே வரும்போது ரெண்டு மூணு நாளைக்கு ஒருமுறை ஊசியில் எத்தனை இருக்குன்னு எண்ணிக்கணும். அதென்னன்னு தெரியலைங்க எப்பவும் நாலைஞ்சு எண்ணிக்கை கூடிப்போயிரும். நமக்கென்ன சமாளிக்கத் தெரியாதா?
அடுத்தவரியில் அங்கங்கே ரெண்டு வளையத்தைச் சேர்த்து பின்னி அதை மறுபடி ஆரம்பிச்ச எண்ணிக்கைக்கே கொண்டு வந்துறலாம். உல்லன் நூலுலே அசிங்கமாத் தெரிவதுபோல நம்ம புசுபுசுவில் தெரியாது:-)
அதுவும் எவர்சில்வர் ஊசி:-)))) (இந்தக் கடைகளைப் பத்தியும் ஒரு பதிவு போடலாம். இதுலே அவ்வளோ விஷயம் இருக்கு)
முக்கியமான ஒன்னை மறந்துட்டேனே....... பின்னல் வேலைக்கான வுல் கண்டை ஒரு 'நெகிழிப் பை'யில் போட்டுவச்சுக்குங்க. சிக்கில்லாம அதுவழியாவே இழுத்துப் பின்னலாம். அழுக்கும் ஆகாது. எல்லாத்துக்கும் மேலே ஆர்வம் அதிகமான ஒருத்தர் அது எப்படி இருக்குன்னு பார்க்கறேன்னு கடிச்சுக் குதறி வைக்க வழி இருக்காது:-))))
கடைசியா ஒரு வார்த்தை. உங்களுக்குப் பின்னவருமா வராதான்னு சுலபமாத் தெரிஞ்சுக்க ஒரு வழி இருக்கு. ரெண்டு கம்பி இருக்கான்னு பாருங்க. இல்லையா..... பிரச்சனை இல்லை. ரெண்டு பென்ஸில் இருந்தா எடுத்துக்குங்க. கூடவே ஒரு(முழம்) மெலிசான கயிறு. சின்னதா ஒரு சுருக்கு முடிச்சுப் போட்டு ஒரு பென்ஸிலில் மாட்டுங்க. இப்ப அந்த முடிச்சுலே அடுத்த பென்ஸிலை கீழ்ப்பக்கமா நுழைச்சு, பாக்கி நீளமா இருக்கும் நூலை ஒரு அரை எட்டு வடிவமா சுத்தி வலதுகைப் பென்ஸிலால் இழுங்க.
அட! உங்களுக்கும் பின்ன வந்துருச்சே!!!!!!
இவ்வளோ செஞ்சவுங்க இதைச் செய்யமாட்டீங்களா என்ன? அதெல்லாம் பின்னிறலாம் வாங்க:-))))
பில்கேட்ஸ் யுகத்தில் ஆணென்ன பெண்ணென்ன? பேதம் பார்க்கத் தேவை இல்லைன்னு 'வாத்தியார் ஐயா' சொல்லிட்டார்.
கம்பி மாதிரி இருக்கும் ரெண்டைவச்சுச் சொக்காய் பின்னிக்கலாமாம். பழைய காலத்து இந்தி சினிமாவுலே 'மா பன்னே வாலி'ன்னு நாயகனுக்குத் தெரிவிக்க, நாயகி பின்னிக்கிட்டு இருப்பாங்க. அங்கே குளிர் கூடுதல். பின்னுறாங்க. ஆனா நம்ம பக்கம் அடிக்கிற சூட்டுக்கும் தமிழ்ப்பட நாயகி இதையேதான் செய்யறதா சில படங்களில் காமிச்சுக்கிட்டும் இருந்தாங்க. முக்கியமா இது எல்லாம் மேல்தட்டு வாழ்க்கையை வாழும் படங்களில்தான். பணக்கார நாயகன் ட்ரெஸ்ஸிங் கவுன் போட்டுக்கிட்டு வாயில் பைப் வச்சுக்கிட்டு இருப்பார். அது நிற்க....
எங்க சின்ன அக்கா இந்தப் பின்னும் விசயத்தில் பயங்கரி. நிட்டிங், உல்லன் சமாச்சாரமெல்லாம் கிடையாது. குரோஷா ஊசின்னு முனையில் கொஞ்சமா வளைஞ்ச ஒத்தை ஊசி இருக்கும். அதுக்குன்னு இருக்கும் விசேஷ நூல் கண்டை வச்சுக்கிட்டு வாசப்படிக்குப் போடும் திரைச்சீலை, மேசை விரிப்பு ரகங்கள் செய்யுறது மட்டுமில்லாம 'பெர்சனல் டச்'க்காக உள்பாவாடை ஓரங்களில் பின்னுவாங்க. ரொம்ப லேசான காரியமுன்னு நான் நினைப்பேன். இதுக்குப் பேரே லேஸ் என்றதாலே. நடக்கும்போது புடவைக்கரைக்குக் கீழே கொஞ்சமா அசப்புலே பளிச்ன்னு தெரியும்விதம் கொஞ்சம் அகலமாப் பின்னுவாங்க. கூடவே உள் பாடிஸ்க்கும் குட்டிக் கரைபோல அந்த வளைவை ஒட்டியே பின்னுவாங்க. அப்பெல்லாம் பிரா என்ற சமாச்சாரம் புழக்கத்தில் அவ்வளவா இல்லையாம்.
இந்த மேற்படி விசயத்தைப் பத்தி ஒண்ணு இங்கே(யே)நான் சொல்லிக்கவா?
இங்கே கடைகளில் இந்த விசயத்துக்குன்னு ஷாப்பிங் போனோமுன்னா அப்படியே வவுறு எரிஞ்சு போயிரும். வாழ்க்கையில் எது உண்மையிலேயே முக்கியமுன்னு புரிஞ்சுக்கமுடியாத மக்கள்ஸ் & டிசைனர்ஸ், வியாபாரிகள்ன்னு இருந்தா இந்தக் கதிதான். 150 டாலருக்குக் கூசாம விலைபோட்டு வச்சுருக்காங்க சிலதை. காசு கொடுக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும், கம்ஃபர்டபிளாவது இருக்கான்னு கேட்டால் 'பெப்பே'தான். இதுபற்றி இன்னொரு நாள் விலாவரியாப் புலம்பட்டுமா?
இப்பச் சின்னக்காவைப் பார்க்கலாம். தலையணை உறைகளில் கொஞ்சும் கிளிகள் குட்நைட் சொல்லும். படுக்கை விரிப்புகளில் ஒரே மலர்கள் கொட்டிக் கிடக்கும். கெட்டிக்காரி. இதுகளில் மட்டும் கண் பார்த்தாக் கை செய்யும். அக்காவுக்குத் தெரியாதுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருப்பது இந்த நிட்டிங்தான்.
அக்காவைப் பத்தி இங்கே சொல்லியிருக்கேன் முந்தி. இன்னொரு பதிவும் இந்த அக்காவைப் பத்தி எழுதி இருந்தேன். இந்த ரெண்டையும் படிச்சவுடன் அக்காவைப்பத்தி உங்களுக்கே நல்லாப் புரிஞ்சுரும்:-)அக்கா தன் குழந்தையைச் சுமக்கும் காலங்களில் கூட சினிமாவில் வர்றதுபோல 'பூட்டீஸ்' பின்னுனது இல்லை. அக்காவுக்குத் தெரியாத ஒரு கலையை நான் அடிச்சுப்பிடிச்சுக் கத்துக்கிட்டேன். இதுலே நிட், பெர்ல் ன்னு ரெண்டே தையல்(?) கத்துக்கிட்டேன். ஊசியை இடப்பக்கம் இருக்கும் ஊசியில் இருக்கும் வுல்லன் நூலின் அடிப்பக்கம் செலுத்திக் கோர்த்து எடுத்தா நிட். அதையே மேல்பக்கம் செருகினா பேர்ல். இம்புட்டுதானா விசயம். பின்னிட்டா ஆச்சு!
இப்ப ரெண்டு வருசமா புசுபுசுன்னு செயற்கை இழையால் செஞ்ச நூலு(?) ஒண்ணு கிடைக்குது. இதுலே டபுள் கலர், ட்ரிபிள் கலர்ன்னு வகைவகையாவும் இருக்கு. குளிர் தேசத்துக்குப் பொருத்தமா ஸ்கார்ஃப் பின்னிக்கலாமுன்னு இதுக்குண்டான கடைகளில் விளம்பரம் பார்த்தேன். அவுங்களே பின்னியும் வச்சுருக்காங்க. 40 டாலர். மனசு வந்துருமா?
அங்கேயே விசாரிச்சப்ப நூலும் விக்கறாங்களாம். மூணு கண்டு போதுமாம். பின்னத் தெரிஞ்சா 18 லே வேலையை முடிச்சுக்கலாம். வெறும் நிட் மட்டும்தானாம். 28 எண்ணிக்கை. அம்புட்டுதான். விடமுடியுதா? வாங்கினேன்.
மகளுக்குப் போட்டுக் கொடுத்தாச்சு. விலை குறைய ஆரம்பிச்சது. 15லே ஒண்ணு, 12 லே ஒண்ணு, 9 லே ஒண்ணுன்னு ஆகி இப்ப 3 லே ஒண்ணு செஞ்சுக்கிட்டு இருக்கேன்:-)
கழுதை தேய்ஞ்சுக் கட்டெறும்பா ஆனது.
நம்ம மாடல் இருக்காரு பாருங்க அவருக்கும் போட்டுப் பார்த்தால் அழகாத்தான் இருக்கு. அவரும் உலகத்தில் யாருக்குமேக் கிடைக்காத ஒரு கவுரதை கிடைச்சாபோலே அதை ஏத்துக்கிட்டு பெருந்தன்மையா போஸ் கொடுப்பார்.
இந்தப் புசுபுசு நூலில் இன்னொரு வசதி என்னன்னா.... நாம பின்னும்போது சிலசமயம்(??) தப்பாக் கோத்து வாங்கினாலும் பிரச்சனை இல்லை. யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முதல்லே தப்பா இருக்குன்னு நமக்கே புரியணுமுல்லெ?:-)))
ரோம ஆடைகளுக்காக மிருகங்களைக் கொன்னோமென்ற பழிபாவமும் இல்லை. சோப்புத் தண்ணியில் அலசிக் காயவச்சுக்கலாம். மெஷீன்லே டெலிகேட் செட்டிங்ஸ்லே துவைச்சுக்கலாம். கலர் ஃபுல்லா இருக்கும் இதோட கலர் போறதில்லை.
ஒண்ணு மட்டும் கவனத்துலே வச்சுக்கணும். 28 தையல்ன்னு சொன்னதைத்தான். இது அகலமா வேணுமுன்னா கொஞ்சம் கூடவே 40 வரை வச்சுக்கலாம். பின்னிக்கிட்டே வரும்போது ரெண்டு மூணு நாளைக்கு ஒருமுறை ஊசியில் எத்தனை இருக்குன்னு எண்ணிக்கணும். அதென்னன்னு தெரியலைங்க எப்பவும் நாலைஞ்சு எண்ணிக்கை கூடிப்போயிரும். நமக்கென்ன சமாளிக்கத் தெரியாதா?
அடுத்தவரியில் அங்கங்கே ரெண்டு வளையத்தைச் சேர்த்து பின்னி அதை மறுபடி ஆரம்பிச்ச எண்ணிக்கைக்கே கொண்டு வந்துறலாம். உல்லன் நூலுலே அசிங்கமாத் தெரிவதுபோல நம்ம புசுபுசுவில் தெரியாது:-)
தையல்களை, (தையல்ன்னே சொல்லிக்கிட்டு இருக்கேனே..... இதுக்கு வேற பொருத்தமான பேர் இருக்கா? தெரிஞ்சாச் சொல்லுங்களேன்) கோர்த்து வாங்கும்போது ரொம்ப இறுக்கமாவோ அல்லது ரொம்பத் தளரவோ போடாதீங்க. நடுத்தர டென்ஷன்லே லேசான தளர்வாவே இருக்கட்டும்.
புதுசா ஊசிகளைத் தேடிவாங்கணுமுன்னுகூட இல்லை. ஒரு டாலர் கடைகளில் கிடைப்பதே போதும். நான் இவ்வளவுகூட எதுக்குன்னு சால்வேஷன் ஆர்மி, ரெட்கிராஸ் நடத்தும் ஆப்பர்ச்சூனிட்டிக் கடைகளில் 20 செண்டுக்கு வாங்குனேன்.
புதுசா ஊசிகளைத் தேடிவாங்கணுமுன்னுகூட இல்லை. ஒரு டாலர் கடைகளில் கிடைப்பதே போதும். நான் இவ்வளவுகூட எதுக்குன்னு சால்வேஷன் ஆர்மி, ரெட்கிராஸ் நடத்தும் ஆப்பர்ச்சூனிட்டிக் கடைகளில் 20 செண்டுக்கு வாங்குனேன்.
அதுவும் எவர்சில்வர் ஊசி:-)))) (இந்தக் கடைகளைப் பத்தியும் ஒரு பதிவு போடலாம். இதுலே அவ்வளோ விஷயம் இருக்கு)
முக்கியமான ஒன்னை மறந்துட்டேனே....... பின்னல் வேலைக்கான வுல் கண்டை ஒரு 'நெகிழிப் பை'யில் போட்டுவச்சுக்குங்க. சிக்கில்லாம அதுவழியாவே இழுத்துப் பின்னலாம். அழுக்கும் ஆகாது. எல்லாத்துக்கும் மேலே ஆர்வம் அதிகமான ஒருத்தர் அது எப்படி இருக்குன்னு பார்க்கறேன்னு கடிச்சுக் குதறி வைக்க வழி இருக்காது:-))))
அட! உங்களுக்கும் பின்ன வந்துருச்சே!!!!!!
இவ்வளோ செஞ்சவுங்க இதைச் செய்யமாட்டீங்களா என்ன? அதெல்லாம் பின்னிறலாம் வாங்க:-))))
26 comments:
துளசி அம்மா,
உங்க ஜிகே டெஸ்ட் ட்யூப் பேபியா ?
சோதனைகளெல்லாம் பண்ணி பாக்கிறிங்க.
ப்ளூக்ராஸ் உங்கள் ஊரில் சரிவர இயங்கவில்லையா ? அல்லது மேனகா காந்தி மாதிரியாரும் இல்லையா ?
அதப் பாருங்க எதும் பேச முடியாமல் தேமேன்னு நிக்குது !
:-)
உங்க மாடல் என்னவோ பெருந்தன்மையாக இருப்பதாக் தெரிந்தாலும்....கன்ணு சொல்லுது எதுக்கும் 10 அடி தள்ளி நில்லு,என்று.
:-)
ரொம்ப சுலபமா'பின்'னிட்டீங்களே!
தலைப்பைப் பார்த்து உண்மையிலேயே பயந்துட்டேன் ட்டீச்சர்!
அப்புறம்தான் தெரிந்தது, நீங்கள் சொல்ல வந்தது வேற மேட்டர்ன்னு!
ஆமா, பின்னிருவோம்ல' என்று சொல்லும்படியாக வேறு உப தொழில்கள் ஏதாவது உள்ளதா? (அடி, உதையைத் தவிர!):-)))))
ஆகா நீங்களும் பஞ்ச் டைலாக் விடுறீங்களான்னு பார்த்தா, இது பஞ்சு நூல் டைலாக்கா ;-)
//கோவி.கண்ணன் said...
துளசி அம்மா,
உங்க ஜிகே டெஸ்ட் ட்யூப் பேபியா ?
சோதனைகளெல்லாம் பண்ணி பாக்கிறிங்க.
ப்ளூக்ராஸ் உங்கள் ஊரில் சரிவர இயங்கவில்லையா ? அல்லது மேனகா காந்தி மாதிரியாரும் இல்லையா ?
அதப் பாருங்க எதும் பேச முடியாமல் தேமேன்னு நிக்குது !
:-)
//
:))
//கானா பிரபா said...
ஆகா நீங்களும் பஞ்ச் டைலாக் விடுறீங்களான்னு பார்த்தா, இது பஞ்சு நூல் டைலாக்கா ;-)
//
:)))))))))))))))
அக்கா.. அந்த கரும்பூனை உடை போஸ் சூப்பரு..:)))))))
வாங்க கோவியாரே.
இங்கே ப்ளூ கிராஸ் நல்லாவே வேலை செய்யுது. இங்கே இருப்பது வெறும் எஸ்பிசிஏ இல்லை. ராயல் எஸ்பிசிஏ வாக்கும்:-))))
நம்ம வீட்டு மனேகா நாந்தான்:-)
வாங்க குமார்.
நம்மாளு பரம சாது. பார்வையாலேயே மயக்கிருவான்:-)
வாங்க சிஜி.
பின்னுவது சுலபமுன்னா அதைப் பிரிச்சு எடுக்கறது அதைவிட சுலபம்:-)
வாங்க வாத்தியார் ஐயா.
உப தொழில்கள் ஏராளம் கைவசமிருக்கு:-)
அதெல்லாம் பின்னிருவொம்லெ:-)
வாங்க பிரபா.
//பஞ்சு நூல்.....//
ஹை....பிடிச்சிருக்கு:-)
வாங்க சென்ஷி.
பிரபா சொன்னதை நானும் ரசித்தேன்.
வாங்க ரசிகன்.
'உடை' மட்டுமா?
இவர் அக்காவின் 'கருப்புப்பூனைப் படை'யின் தலைவர்:-)
இந்தக் காலத்துல ஜிகே மாதிரி பொறக்கறதுக்கும் கொஞ்சம் கொடுத்துதான் வைச்சிருக்கணுமாக்கும்..
வாவ் ரெட்கார்பெட் ல வர் ஹாலிவுட் நடிகை மாதிரி என்ன ஒரு பளபளப்பு பூனைக்கு .... :)
//ஆகா நீங்களும் பஞ்ச் டைலாக் விடுறீங்களான்னு பார்த்தா, இது பஞ்சு நூல் டைலாக்கா ;-)//
:)) nice!
அக்கா, பின்னிட்டீங்க. அப்பிடியே, பின்னி பெடலெடுக்குறது என்னன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க :)
இந்த நிட்டிங்க பழகனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை..அதை பழகீட்டேனா பெரிய சாதைனு நினச்சுட்டு இருக்கேன்.. அம்மம க்ரோஷா, நிட்டிங் எல்லாம் நலா அழகா போடுவாங்க..நாம தான் பொறுமையின் திலமாச்சே...நோகாம நோம்பி கும்பிட்டே பழக்கம் ஆயுடுச்சு..:-))
உள்ளேன் ரீச்சர். (அதாவது அடுத்ததாக இந்த தையல் செய்யும் தையலுக்கு மாடலாக..)
வாங்க உண்மைத்தமிழன்.
இங்கே பூனையாப் பிறந்தா அதிர்ஷ்டம்தான். நாய்ன்னா ஏகப்பட்ட கண்டிஷன் இருக்கு. ராத்திரி 10 மணிக்கு மேல் ஆனா நாய் குலைக்கக் கூடாதுன்னு சட்டம்.
பாவம், நாய்க்கு மணிபார்க்க இன்னும் சொல்லிக்குடுக்கலை((-:
வாங்க கயல்விழி.
ஏங்க பூனைகளுக்கு ப்ளூ கார்பெட் போட்டுறலாமா?:-)
வாங்க தஞ்சாவூரான்.
நீங்கதான் இப்ப நாடுமாறும் ஆள். போய், அங்கே பின்னிப் பெடல் எடுங்க.
சரியா பின்னுனீங்களான்னு வந்து பார்க்கிறேன்:-)
வாங்க மங்கை.
அவுங்க பின்னும்போது பார்க்க ஆசையாத்தான் இருக்கு. ஆனா........
நமக்கு ப்ளொக் படிக்க எழுதவே நேரம் போதலை. இதுலே எங்கே எக்ஸ்ட்ரா நேரம்?
யாராவது பின்னிக்கொடுத்தா வாங்கிக்கலாம் இல்லை?
இங்கே நிறைய ஆண்கள் இதை ஒரு தெரபியா செய்யராங்கப்பா!!!
வாங்க கொத்ஸ்.
நீங்க மாடலா வாங்க. உங்களுக்காகவே 'கிம்பர்லி'ன்னு ஒரு புது நிறமான புசுபுசு வாங்கியாந்துருக்கேன்( சேல் முடிஞ்சுருமே)
அதைப் போட்டுக்கிட்டா 'மல்டி கலர் மாடர்ன் மேன்' ஆக இருப்பீங்க.
( இப்பப் பின்னுவதின் நிறம் 'டெனிம்')
Nice Ma
Post a Comment