Sunday, April 13, 2008

ஒரு சாண் வயிறே இல்லாட்டா......

இந்த உலகத்தில் ஏது கலாட்டா?



யானையும் மனுசனும் ஒரே நிறம்.






'கோட்டி வித்தலு கூட்டுக் குறக்கு'ன்னு எங்க பாட்டி சொல்வதுதான் நினைவுக்கு வருது.

கோடிக்கணக்கான வித்தைகள் செய்வது எல்லாம் சாப்பாட்டுக்காகத்தான் என்பது பொருள்.
தேரடி வீதி தேவதன்?
பதிவர் ஆகணுமுன்னு இப்படி ஒத்தைக்காலில் நின்னா எப்படி?
கிட்டே வந்தா போட்டுத் தள்ளிருவேனாக்கும். நானும் தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சதால் வந்த வினை.
டப்பாவுலே டப்பு போடுங்கப்பா. நேரா அது என் தலைக்குள்ளே போயிரும்!
சீக்கிரம் பின்னூட்டுங்க. எவ்வளோ நேரம் இப்படியே நிக்கிறது?
எங்கே போறேனா? தங்கமரம் தேடி:-)
பட்டாம்பூச்சிகள்.
கடன் கொடுத்தவர் வரார். கொஞ்சநேரம் காணாமப் போகட்டா?
ஏங்க....தமிழ்மணத்துக்குப் போகும் வழி இதா?
அதோ அங்கேபோய்க் கேளுங்க.
காலங்காலமாய்க் காத்திருந்ததுக்கு இப்பத்தான் சைக்கிள் சவாரி கிடைச்சது.
கால் வலிக்குதுப்பா. கொஞ்சம் உக்காந்துக்கவா?
பார்ஸிலோனா நகரில் படங்களை எடுத்தவர் நம்ம பதிவர் பயிற்சிப் பள்ளியின் புது மாணவர்.:-))))

44 comments:

said...

படங்கள் எல்லாம்
வித்தியாசமா இருக்கு துளசி
நல்ல கமெண்ட்டும் குடுத்திருக்கீங்க

said...

வாவ்!
அவ்வளவும் அழகாக இருக்கு.
யாருங்க அந்த புதிய பயிற்சி பதிவர்?

said...

அம்மா!
நல்ல படங்களைத் தேடிப்பிடித்துப் போட்டு அதற்குத் தகுந்த நையாண்டியான விளக்கமும் கொடுத்திருக்கிறீர்கள், நல்லா இருக்கு!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

உள்ளேன் ரீச்சர்

said...

படமெல்லாம் நல்லா இருக்கு துளசியக்கா.

said...

வாங்க மாதங்கி.

எத்தனை வேசங்கள் பாருங்க. இவுங்களுக்கு 'பஸ்கர்ஸ்'ன்னு பெயர்.
இங்கே நியூஸியில் ஃபிப்ரவரி மாதத்தில் சர்வதேச பஸ்கர் திருவிழா நடக்குது.

என்னதான் இது ஒரு கலைன்னு வேசங்கட்டி ஆடுனாலும், இவுங்களைப் பார்க்கும்போது நம்மூர் பிச்சைக்காரர்கள் நினைப்பு மனசில் வருவதைத் தடுக்க முடியலை(-:

said...

வாங்க குமார்.

நிஜமாவே இந்த அப்ரண்டீஸை உங்களுக்குத் தெரியலையா? :-)))))

சரியா ஃபோகஸ் பண்ணும் கலையையும் மத்த விசயங்களைப் படிக்கவும் இவரை நம்ம PIT வகுப்புலேயும் சேர்த்துவிட்டுருக்கேன்:-)

said...

வாங்க ஜோதிபாரதி.

படம் பார்த்தீங்கல்லே.... இதையே ஒரு கவிதையா எடுத்து விடவேண்டியதுதானே? :-)

said...

வாங்க KK.

பதிவேட்டில் 'ஆஜர்' போட்டாச்சு.

said...

வாங்க குமரன்.

எல்லாம் எடுத்தது கோபால்தான்.

said...

ஹா...எல்லாமே வித்தியாசமாக் கிடக்குது. நல்லா இருக்குது.

ஆமா..இது எல்லாம் வயித்துப் பிழைப்புக்குத்தானா...அல்லது சர்க்கஸ்காரங்க மாதிரி ஏதாவது நிகழ்ச்சியா..

இப்பிடி வேற வேறயா வடிவத்துல வரவே அவங்களுக்கு நிறைய காசு முடியுமே..

வரவு எட்டணா செலவு பத்தணா ன்னு இருந்துடப் போவுது.

said...

//பார்ஸிலோனா நகரில் படங்களை எடுத்தவர் நம்ம பதிவர் பயிற்சிப் பள்ளியின் புது மாணவர்.:-))))//

//எல்லாம் எடுத்தது கோபால்தான்.//

தான பாத்தேன்.. என்னடா இது நம்ம டீச்சரம்மாவுக்கு நமக்குத் தெரியாமயே புதுசா ஒரு ஸ்டூடண்ட் கிடைச்சிருக்காருன்னு..

கோபால் ஸாருக்கு இப்ப இப்படியொரு தண்டனையா..?

எனது ஆழ்ந்த அனுதாபங்களைச் சொல்லிவிடவும்.

பட்.. படங்கள் துல்லியமாக, பளீரென்று உள்ளன. சற்று வித்தியாசமான படங்கள்தான்..

எங்களூரிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று நடைபெறும் உறியடித் திருவிழாவில் ஆளாளுக்கு அவரவர்க்குப் பிடித்தமான இது போன்ற விதவிதமான வேடங்களை அணிந்து வந்து கலாட்டா செய்வார்கள்..

நினைவுக்கு வந்து தொலைகிறது.

இப்போது அது அத்தனையும் காணாமல் போய், அவரவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு பள்ளி விழாக்களில் மட்டும் வேஷம் போட டிரெயினிங் கொடுக்கிறார்களாம்..

காலத்தின் கொடுமை..

said...

சூப்பர் படங்கள் டீச்சர் ;))

said...

//எவ்வளோ நேரம் இப்படியே நிக்கிறது? //

என்ன ஆச்சு ! இப்படி கோவிச்சுக்கிட்டு, கோபாலு நிக்கறாரு !

அவர் பக்கத்திலே போய் எதுக்கு ஐயா இப்படி நின்னுகிட்டே இருக்கீகன்னு
கேட்டுபுட்டேன். பதில் சொல்லாமே ஒரு பாட்டை முணுமுணுத்துகிட்டே
இருக்காரு.. காது கொடுத்து கேட்டேன் பாருங்க...

அட ... அது உங்களைப் பத்தி தான் . நீங்க வருவீகன்னு காத்துகிட்டு இருக்காரு.

' நின்னு கோரி ..ஈ.. ஈ... வரணும் ...
வரணும்..
என்னைத் தேடி ... நீ வரணும்

...." அப்படின்னு பாடிகினே கீராரு.

போய் சமாதானம் பண்ணிக் கூட்டிக்கினு வாங்க..
வந்து சந்தோசமா ஒரு கப் டீ சாப்பிடுங்க..

மேனகா
தஞ்சை.

said...

//கால் வலிக்குதுப்பா. கொஞ்சம் உக்காந்துக்கவா?//

அங்க கோபாலு நின்னுகினே இருக்காருன்னு மட்டும் சொன்னீங்க..
இங்க பாருங்க.. துளசி டீச்சர் காலு வலிக்குதுன்னு உட்கார்ந்து இருக்காங்க.

இவரு எப்ப எழுந்துண்டு போய் கோபாலுவை கூட்டிக்கிட்டு
வீட்டுக்கு வருவாரோ தெரியலையே !

" டீச்சரம்மா ! ரொம்ப நேரமாச்சுன்னா எங்க வீட்டுக்கு வந்துடுங்க..
எல்லாரும் சேந்து ஒரு டின்னர் சாப்பிட்டு விட்டுப்போலாம்." அப்படின்னு
டீச்சர்ட்டே சொல்லிட்டு வா. சீக்கிரம்.

வா..வா ...அவங்க வர்றதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போய்
நல்லா சமையல் பண்ணி வச்சுடுவோம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

said...

ஆனைபடமா என்று பார்க்க இன்னும் பல படங்களும் இருக்கு, வாவ்!
இங்கே ஆனைக்கதை ஒண்ணு சொல்லறாங்க, நீங்க இன்னும் வரலையே? (எலே, டீச்சருக்கு தெரியாத கதையா என்றொரு குரல் வருவது கேட்கிறது!)

Anonymous said...

உங்க அப்ரென்டிஸை கூட ஒரு ப்ளாக் திறக்கச்சொல்லுங்க. நிறையா இடத்துக்கு பயணம் போறாரு. வித்தியாசமா எங்க இருந்தாலும் படம் புடுச்சுத்தள்ளிப்புட்டாரு.

said...

ரீச்சர் நான் போட்ட பின்னூட்டத்தைக் காணுமே. என்ன சொன்னேன்னு வேற மறந்து போச்சு. என்ன சொல்லி இருக்கப் போறேன். உள்ளேன் ரீச்சர்! அம்புட்டுதானே!! அதையே திரும்பச் சொல்லிக்கிறேன். :))

said...

காலதாமதா வந்த பதிவுக்கு கண்டிக்கிறேன். போன மாசம் போட்டு இருந்தா வ.வா.ச பிரம்ம ரசத்துக்கு செம போட்டியா இருந்து இருக்கும். நல்ல படங்கள் /வசனங்கள்.

said...

அக்கா!
இங்கும் இப்படி வேசமிடுவோர் உண்டு.
உங்கள் விமர்சனம் பிரமாதம்

said...

துள்சி!
இப்படி விதவிதமா வேசங்கட்டி அங்கங்கே நின்னுகிட்டு கௌரவமா
பிச்சை எடுப்போரை நிறையா பாத்துருக்கேன். வேடங்கள் போட எடுத்த சிரமங்களுக்கே காசு போடலாம்.
படங்கள் நல்லாருக்கு அதைவிட வசனங்கள்....டீச்சருக்கு சொல்லித்தரணுமா? மாணவர் கோபால் அவர்கள் தேறிட்டாரா? மதிபெண்கள் போட்டாச்சா? எல்லாம் சூப்பர்!

said...

// இப்படி ஒத்தைக்காலில் நின்னா எப்படி?//

டீச்சர் ! கோபாலுக்கு கோபமாம் ..
நீங்க வந்து கூப்பிட்டாத்தான் வர்றதைப்பத்தி யோசிப்பாராம்.
அதுசரி, பொண்ணாய்பிறந்தாச்சு ! கோபப்பட்டு முடியுமா ?
எத்தனை நேரம் அங்கனவெ உட்கார்ந்துகிட்டு இருப்பீக ...

எதுக்கும் அந்தகுவளையத்தான், அதான் உங்க முன்னாடி வச்சிருக்கிறத,
குடுங்க. சரவணாவிலே ஒரு காபி வாங்கி அய்யாகிட்டே கொடுத்துட்டு
வர்றேன்.

மீனாட்சி பாட்டி.
சென்னை.
http://paattiennasolkiral.blogspot.com

said...

படங்கள்,உங்க விமர்சனங்களுடன் நல்லா இருக்கு.
<== கோட்டி வித்தலு கூட்டுக் குறக்கு'ன்னு எங்க ==>
இது என்ன மொழி? தெலுங்கா?
பயிற்ச்சிப்பள்ளியின் புது மாணவரோட கமெண்ட்ட காணோம்? (அதத்தேன், நீங்களே போட்டுக்குவீங்களே? =))) )

said...

வாங்க கௌபாய்மது.

இது ஒரு கலை. இப்படி வேசங்கட்ட எவ்வளோ பொறுமை வேணும்!!!

அதுக்கப்புறம் இதையெல்லாம் கலைச்சு, மேலே இருக்கும் வர்ணத்தையெல்லாம் எடுக்கவும் நேரமும் செலவும் கூடுதல்தானே?

கலை ஆர்வம் கொண்டு இப்படிச் செஞ்சுக்கறாங்களாம்.

வரவு அநேகமா ரொம்ப இருக்காதுதான்.

said...

வாங்க உண்மைத்தமிழன்.

முந்தியெல்லாம் (அதாவது டிஜிடல் கேமெரா வராத காலத்திலேன்னு நினைக்கிறேன்) பயணக்கட்டுரை எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் பயணத்தின்போது கூடவே ஒரு ஃபோட்டோகிராஃபரையும் கூட்டிக்கிட்டுப் போவாங்க.

அப்பத்தானே ----- முன்னால், ---- உடன்,------ நாட்டில் கட்டுரை ஆசிரியர்ன்னு படம் போட முடியும்.


இப்பக் காலம் மாறிட்டதாலே புகைப்படக்காரரை மட்டும் ஊர்சுத்த அனுப்பிட்டு, அந்தப் படங்களுக்குக் கட்டுரை எழுதலாமான்னு நினைக்கிறேன். அதற்கான புது முயற்சி இது:-)))))


பாருங்க, உங்களுக்குப் பதில் எழுதுனாக்கூட அதுவும் நீண்டு போகுது:-))))

said...

வாங்க கோபி.

நான் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருந்த போது......ன்னு ஆரம்பிச்சிருக்கலாம்.இல்லே?:-))))

said...

வாங்க மேனகா.

//நின்னி கோரி.....//யா?

அப்ப அது நிச்சயம் கோபால் இல்லை.

அவர் முணுமுணுக்கும் பாட்டு ஒண்ணே ஒண்ணுதான்:-))))

அது
'எல்லோரும் கொண்டாடுவோம்'

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

ஆஹா.....அது நாங்க இல்லைன்னாலும், 'டின்னருக்கு' கூப்பிட்டதாலே மறுக்க முடியாம இருக்கு. இதோ கிளம்பிட்டோம்.

கிடைச்ச வாய்ப்பை விட்டுருவேனா? வரவர சமைக்கச் சோம்பலா இருக்கு:-)))

said...

வாங்க ஜீவா.

எங்கேயும் சேர்க்கலையா??? அதான் கண்ணுலே படலை. ஆனா கதை கருத்துலே முந்தியே ப(டிச்)திஞ்சதுதான்.

ஆரம்பம் நல்லா இருக்கு. கூகுளில் போட்டு வைக்கிறேன்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

ரிட்டயர் ஆனபிறகு தனி ப்ளொகா இல்லை சன் டிவியான்னு சீட்டுக் குலுக்கிப் பார்த்துட்டு அதுலே அவரைச் சேர்த்து விட்டுறணும்.

இப்போதைய பயிற்சி, எனக்குப்பிறகு துளசிதளத்தின் பராமரிப்புக்காக.

said...

வாங்க கொத்ஸ்.

சரியான தூக்கமில்லாம பின்னூட்டக் கனாவெல்லாம் வருது போல! போய் கொஞ்சம் ஓய்வு எடுங்க.

ஆஜர் போட்டாச்சு.

said...

வாங்க இளா.
வ.வா.ச.வுலேதான் சாம்பாரும்,ரசமுமா ஓடிக்கிட்டு இருந்துச்சேப்பா:-))))

said...

வாங்க யோகன்.

வெள்ளையருக்கு எல்லாம் கலைதான். buskers festival கூட நடக்குதே.

said...

வாங்க நானானி.

வேசங்கூடக் கட்டிறலாம். ஆனா ஆடாம அசையாம சிலை போல நிக்கணுமுன்னு நினைச்சால்தான்.....

இங்கே எங்க ஊர்லே ஒரு பையன் 'சார்லி சாப்ளின்' வேசங்கட்டிக்கிட்டு சூப்பர்மார்கெட் வாசலில் நிற்கும்.

காசு போட்டவுடன், தொப்பியைத் தலையில் இருந்து எடுத்து நன்றின்னு ஆட்டிட்டுத் திருப்பித் தலையில் வச்சுக்கும்.

பலசமயம் பாவமாத்தான் இருக்கு.

said...

வாங்க மீனாட்சி பாட்டி.

சரவணாஸ்லே காஃபி வேணாமாம். அங்கே 'ஒருத்தர்' ப்ளொக்லே காஃபியை அனுபவிச்சுக் குடிச்சுக்கிட்டு இருக்கார். நானும் காலைக் காபியோட கணினி திறந்ததும் பார்த்தேன்.

அவர் நரசூஸ் போல, பேஷ் பேஷா இருக்கு. அவர் வீட்டுலே இருந்தே கொண்டுவந்துருங்க:-))))

said...

வாங்க சாமான்யன் சிவா.

ஆமாங்க அது தெலுங்குதான்.

புது மாணவர் கமெண்டை நேரில்தான் சொல்றார்.

இன்னும் கலப்பையைப் பிடிக்கச் சொல்லித் தரலை:-)

said...

அன்புத்தோழிக்கு செல்லாவின் காலை வணக்கம். தங்கள் தளத்தின் இணைப்பை

href="http://poovaasam.blogspot.com/">“பூவாசம்”
பக்கத்தில் வெளியிட்டுள்ளேன்.
தங்கள் வரவை விரும்பும்...
ஓசை செல்லா

said...

துளசி,
கோபால்
ரொம்ப நல்லா எடுத்திருக்காரு.
அதுக்கு கமெண்ட்ஸ் சூப்பர்.
லைட்ட்டிங் கலர் எல்லாமே அழகா வந்திருக்கு.

said...

படங்கள் அருமை - மாணவர் தேறி விடுவார் - டீச்சர் பேரக் கெடுக்க மாட்டார்

said...

டீச்சர் படம் எல்லாம் நல்லா இருக்கு. ஒருவாட்டி, திருக்காளஹஸ்தி போனோம். அங்க ஒரு காந்தி தாத்தா செல இருந்தது. இடுப்பு வேட்டி, கடிகாரம், முகக் கோடுகள் அத்தனையும் அருமை.கோவிலுக்கு போயிட்டு திரும்பி வந்தா, சிலை பூரி சாப்டுட்டு இருந்தது. அப்ப தான் புருஞ்சது எனக்கு.

இந்தப் படங்கள் பாக்கும் போது அந்த நினைவும் வந்துச்சு.

அப்புறம் டீச்சரி உங்க கிளாசுக்கு நான் லேட் அட்டனஸ். உங்க 'பீர்க்கங்காய் - வாட் எவர் இட் ஸ்' எல்லாம் ருசுச்சு சாப்டுட்டு, பின்னூட்டத்தையும் ஏப்பம் விட்டுட்டேன்.ஸாரி...:D :D

எங்க ஃப்ளாகுக்கு வாங்க டீச்சர்....:)

said...

வாங்க வல்லி.

வாரிசு குடும்ப அரசியலில் மட்டுமா? :-))))))

said...

வாங்க சீனா.

தேறாத மாணவர்க்குத் தண்டனை உடனே:-))))

said...

வாங்க புதுவண்டு.

நம்ம யானையை இப்படிக் கூட்டில் வச்சுட்டீங்களே:-)

said...

//சீக்கிரம் பின்னூட்டுங்க. எவ்வளோ நேரம் இப்படியே நிக்கிறது?//

இதோ வந்துகினே இருக்கேன் :)) (...கொஞ்சம் லேட்டா பூட்டுது)போட்டோ அசத்தல், அதவுட கமெண்டு அசத்தல்!!!
அதெப்பிடிங்கோ இவ்ளோ விலாவாரியா பதிவு போடறீங்கோ? படீக்க வேண்டிது நெறய கீதுனு புரீது!

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு