Wednesday, April 09, 2008

வல்லிக்குப் பொறந்த நாளு மக்கா....

மக்கள்ஸ்,


இன்னிக்கு என் பெரியம்மா வல்லிசிங்கத்துக்குப் பொறந்தநாளுன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருக்காஹ.


அதான் மனுசங்க மாதிரி வாழ்த்துப் பாடலாமுன்னு தோணுச்சு.


நூறாண்டு காலம் வாழ்க


மியாவ்


நோய்நொடி இல்லாமல் வாழ்க


மியாவ்


பாடும் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரன் எட்டிப் பார்க்கிறான்.

இருங்க, போய் விரட்டிட்டு வந்து பாடறேன்.


ஹேப்பி பர்த்டே பெரிம்மா.......


இப்படிக்குப் பெரியம்மாவின் அபிமானி




ஜிகே

சுருக்கமாச் சொன்னா.......கோபால கிருஷ்ணன் :-)

42 comments:

said...

இனிய பிறந்த நாளுக்கான மனம் கனிந்த வாழ்த்து(க்)கள் வல்லி.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லி.....!!

said...

அக்காவுக்கு பெரியம்மான்னா, நமக்கும் பெரியம்மாதான் :)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியம்மா!

said...

வாங்க ராதா.

அவுங்க சார்பில் நன்றிப்பா:-)

said...

தஞ்சாவூரானுக்கு ரொம்பத்தான் ஆகிக்கிடக்கு.

எனக்குத்தான் அவுங்க பெரியம்மா.

அவுங்க உங்களுக்கு அநேகமா தங்கச்சியா இருப்பாங்க.

பதிவு எழுதுனது கோபால கிருஷ்ணன் சொற்படிக்கு எங்க அம்மா. அந்தக் கணக்குலே நான் உங்க அக்கா மகன்:-))))

said...

சகோதரி வல்லி சிம்ஹனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

said...

பெரியம்மாவின் பிறந்த நாளை - அம்மாவின் மூலமாக - நினைவு படுத்திய ஜீகேக்கு நன்றி

said...

வெறும் பொறந்த நாளா? என் கணக்குப்படி 60 ஆச்சே!! :))

வணக்கங்கள் வல்லிம்மா!!:)

said...

//அவுங்க உங்களுக்கு அநேகமா தங்கச்சியா இருப்பாங்க.//

யக்கா, அப்பிடி இப்பிடின்னு என்னோட வயசை ஒரு 70-க்கு தள்ளிட்டீங்களே? :)

சீனா அய்யா/அண்ணா/தாத்தா/நண்பரே, உதவிக்கு வாங்க :))))

said...

வாழ்க வளமுடன் , வல்லி வாழ்த்துக்கள்.

said...

காற்றில் வந்த செய்திப்படி வல்லியம்மாவுக்கு இன்று சஷ்டி அப்த பூர்த்தி......

'சுமங்கலி வதுரிமாஹும்' என்று சொல்ல ஆசைதான் ஆனா, வயதின் காரணமாக வல்லியம்மாவிற்கு நான் இதை சொல்ல முடியாது. அவருக்கு எல்லா நலன்களையும் அருள இறைவனை வணங்குகிறேன்.

said...

வாங்க சீனா.

நன்றி. பெரியம்மா சார்பில் இன்னிக்கு நாந்தான் ஓடியாடணும் போல:-))))

said...

வாங்க கொத்தனாரே.

ஆடிட்டர்ன்னா எல்லா'கணக்கை'யும் ஞாபகமா வச்சுக்கணுமா?

பொதுவா, பொம்பளைங்க வயசைச் சொல்றதில்லையாமே:-)))

said...

குசும்பு தஞ்சைக்கு மட்டுமா? :-))))

said...

வாங்க கயல்விழி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க மதுரையம்பதி.

இப்படிப் பொட்டுன்னு உடைச்சுச் சொல்லிட்டீங்க........

சரி. என் வயசை மனுச வயசுலே சொல்லுங்க பார்ப்போம்.

இத்தனைக்கும் நான் மேக்கப் போட்டுக்கற வழக்கமே இல்லையாக்கும்:-)

said...

வாங்க டாக்டரம்மா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

இன்னிக்கு நாந்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா:-))))

said...

vallikku meenachi paattiyin
aneka nal vazhthukkal.

http://www.youtube.com/watch?v=4byUlyh3npk

meenachipaatti
thanjai.
http://paattiennasolkiral.blogspot.com

said...

//////துளசி கோபால் said...
வாங்க டாக்டரம்மா.
வாழ்த்துகளுக்கு நன்றி.
இன்னிக்கு நான்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா:-))))//////

யக்கோவ்...என்னிக்குமே நீங்கதான் ஆல் அழகுராஜா.....ச்சே...தட்டுதே....ரா' விற்குப்பக்கத்தில ணி' சேர்த்துக்குங்க!

அழகோட கூட ஒருத்தர் இருப்பாரே! அதான் பெட்ரமாக்ஸ் காண்டிலைப் போக்கடிச்சாரே ....அவர் ரோலிற்கு...
ஹி,ஹி, நான் சொல்லக்கூடாது. உங்களுக்கே தெரியும் - அவரையே போட்டுக்குங்க!

அதென்ன நியூசிலாண்டா அல்லது மியாவ்லாண்டா? ஒரே தொல்லையா இருக்கே! சகுனம் பார்க்கற வழக்கமெல்லாம் விட்டாச்சா?

வல்லியக்காவிற்கு என்னுடைய வாழ்த்தைச் சொல்லிடுங்க!

said...

வல்லிக்கு

இனிய பிறந்தநாள்வாழ்த்துகள்!

said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா ;))

said...

வாங்க மீனாட்சிப்பாட்டி.
வணக்கம். நல்லா இருக்கீங்களா?
எல்லாம் உங்க ஆசீர்வாதம். வல்லி அமோகமா இருப்பாங்க. இருக்கணும்.

said...

வாங்க வாத்தியார் ஐயா.

//அழகோட கூட ஒருத்தர் இருப்பாரே! அதான் பெட்ரமாக்ஸ் காண்டிலைப் போக்கடிச்சாரே ....அவர் ரோலிற்கு...
ஹி,ஹி, நான் சொல்லக்கூடாது. உங்களுக்கே தெரியும் - அவரையே போட்டுக்குங்க!//

இது என்னன்னு புரியலையே.......

டிவியில் வந்ததா?
நாங்க யாரும் டிவி பார்க்கறதில்லை.

எங்க வீட்டில் நான் முன்னாலே வந்தால்தான் அம்மா வீட்டைவிட்டுக் கிளம்புவாங்க:-)))

வ(ல்)லியம்மேக்கு பறஞ்சேக்காம்.. நந்நி.

said...

வாங்க சிஜி.

அவுங்க சார்பில் நன்றி.

said...

கோபி வாங்க. என்ன லேட்?

வல்லியம்மா இன்னிக்குப் பயங்கர பிஸி:-))))

நாங்க போய்ச் சொல்லிடறோம்:-)

said...

//////துளசி கோபால் said...
வாங்க வாத்தியார் ஐயா.
//அழகோட கூட ஒருத்தர் இருப்பாரே! அதான் பெட்ரமாக்ஸ் காண்டிலைப் போக்கடிச்சாரே ....அவர் ரோலிற்கு...
ஹி,ஹி, நான் சொல்லக்கூடாது. உங்களுக்கே தெரியும் - அவரையே போட்டுக்குங்க!//
இது என்னன்னு புரியலையே.......
டிவியில் வந்ததா?
நாங்க யாரும் டிவி பார்க்கறதில்லை./////

என்ன டீச்சர் ஆல் இன் அழகு ராஜா' வை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு, எப்பவும் படங்களில் அவருக்கு நண்பராக வருபவரைத் தெரியவில்லை என்கிறீர்கள்! கவுண்டரைத் தெரியும் - செந்திலைத் தெரியாதா?

அழகுராஜவைத் தெரிந்திருந்தால், 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில், ”என்னண்ணே, இதைப்போய் எரியும்
என்கிறீர்கள்?” என்று சொல்லிப் பெட்ரொமாக்ஸ் விளக்கின் காண்டிலைப் போக்கிவிடும் செந்திலைத் தெரியாதா?

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வல்லி, 60 முடிவிலேயாவது உங்க உடல்நிலையிலே கொஞ்சம் கவனமும் வேணும். இறைவன் எல்லா நலங்களையும் தர வேண்டுகிறேன்.

said...

அன்பு துளசி இப்போதான் தெரியும்.ரவி,திராச கீதா எல்லாரும் சொன்னாங்க. இந்த அன்புக்கு என்ன பதில் சொல்ல முடியும் அனைத்து நட்புகளும் அப்படியே வளம் குன்றாமல் இருக்கணும்.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.

said...

கொத்ஸ், சிஜி சார், சுப்பையா சார், மௌலி,கோபிநாத்,சீனா சார், தஞ்சாவூர் அண்ணா,மீனாட்சிப்பாட்டி,

கயல்விழி,டெல்ஃபின் எல்லோருக்கும் மனசு நிறைஞ்ச நன்றி சொல்லிக்கிறேன்.

said...

வாழ்க வல்லியம்மா தீர்க சுமங்கலி பவா.இதே இனிமையான பேச்சுடன் நீடுழி வழட்டும் என்று இந்த அ ண்ணன் வாழ்த்துகிறேன். டீச்சர் உங்களுக்கு தெரியுமா இன்று மாலை நானும் கேஆர்ஸும் வல்லியம்மாவை நேரில் போய் வாழ்த்தி விட்டு வந்தோம்.சகோதரன் சீரும் கொடுத்தாச்சு. வல்லியம்மா எங்களுக்கு மைசூர்பாகு,சமோசா,முறுக்கு தட்டை எல்லாம் கொடுத்தாங்களே. பாவம் டீச்சர்.வாயிக்கு வாய் உங்களைப் பற்றித்தான் வல்லியம்மா பேச்சு

said...

ஆடிட்டர்ன்னா எல்லா'கணக்கை'யும் ஞாபகமா வச்சுக்கணுமா

கொத்ஸு டீச்சர் கிட்டே சொல்லு இங்கேயும் ஒரு ஆடிட்டர் கணக்கு சரியா போட்டு வெச்சி இருக்கார்ன்னு

said...

வல்லிம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீடு வாழவும் பீடு வாழவும் முருகப்பெருமானை வணங்குகிறேன்.

said...

அக்கா!
வல்லி அக்கா சிறப்புடன் தான் வாழ்கிறார். அவர் மேலும் சிறப்புடன்
வாழ எங்கள் நல்லூர் முருகனை வேண்டுகிறேன்.
நாங்கள் நாய்க்குத் தான் பெயர் வைப்போம் .
உங்கள்..கோ.கி கொடுத்து வைத்தவன்.

said...

வாத்தியார் ஐயா,

வைதேஹி காத்திருந்ததைக் கவனிக்கவே இல்லை(-:

ஆனா செந்திலைத் தெரியும்:-)

said...

வாங்க வல்லி.

வந்துட்டீங்களா....அப்பாடா......

ஜிகே ஓடியோடி உபசரிச்ச களைப்பில்
படுத்துருக்கான்ப்பா:-))))

said...

வாங்க ராகவன்.

இந்திய விஜயம் முடிஞ்சதா?

said...

வாங்க யோகன்.

நாய்க்கு மட்டும்தான் பெயரா? ஏன்? ஏன்? ஏன்னு கேக்கிறேன்?

நம்ம வீட்டில் எல்லாத்துக்கும் பெயர் இருக்கு. முதலில் பெயர் அப்புறம்தான் அது ஆணா பொண்ணான்னு பார்க்கிறதுகூட:-))))
அதனாலே சில சமயம் பெண்கள் பெயர் ஆண்களுக்கும் போயிரும்:-)

பொம்மைகளுக்கும் பெயர் வச்சுருக்கேன். சொல்லப்போனா பாத்திரங்களுக்கும் ஒரு செல்லப் பெயர் இருக்கு:-))))

said...

தம்பி யோகனுக்கும், அன்னா தி.ரா.சவுக்கும்,ராகவனுக்கும்மென் நன்றிகள். நீங்க எல்லோரும்வளமோடு வாழ என் வாழ்த்துகள்

said...

வல்லிம்மாக்கு வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்...பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

said...

வாங்க கீதா.

எல்லோருக்கும் வல்லியே நன்றி சொல்லிருவாங்கன்னு சொல்லிட்டுப்போயிட்டான் இந்த ஜிகே.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க தி ரா ச.

//மைசூர்பாகு,சமோசா,முறுக்கு தட்டை எல்லாம் கொடுத்தாங்களே. பாவம் டீச்சர்.வாயிக்கு வாய் உங்களைப் பற்றித்தான் வல்லியம்மா பேச்சு//

ஹைய்யா மெனுவும் பிடிச்சிருக்கு. அந்தப் 'பேச்சு'ம் பிடிச்சிருக்கு:-))))

said...

வாங்க மங்கை.

வருகைக்கும்
வாழ்த்து(க்)கும்
வல்லியின் சார்பில்
நன்றி:-)