இன்றோடு நாலு வருசம் முடிஞ்சு அஞ்சாவது வருசம் ஆரம்பம் ஆச்சு. நிறைய எழுதுனேன்னு தெரியுது....ஆனால்.......... நிறைவா எழுதுனேனா?
பயனுள்ளதா இருந்துச்சா? வகுப்பு மாணவர்கள் எதாவது நல்லதைக் கத்துக்க முடிஞ்சதா? இல்லை, தூங்க வச்சேனா?
சொற்களைக் கொண்டு ஆடும் சித்து விளையாட்டு இன்னும் கைவசமாகலை. ஒவ்வொருத்தர் எழுதறதைப் படிக்கும்போது....ஹைய்யோ....
நாமும் எழுதறோமேன்னு இருக்கு.....
புள்ளிவிவரம் பார்க்காம இருக்க முடியாது என்பதால் இதுவரை எழுதுன பதிவுகள் இங்கே துளசிதளத்தில் 765.
கவுண்ட்டரின் சத்தியப்பிரமாணப்படி வந்து போனவங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துச் சொச்சம். நெசமா இருக்குமான்னு எனக்கு ஒரு சந்தேகம்தான். ஆனாலும் 208 வாரத்துக்குன்னு கணக்கெடுத்தால் இருக்க வாய்ப்பு உண்டு. ஆறுமாசத்துக்கும் மேலா 185597ன்னு நின்னா நின்ன இடத்தில். ஆனால் வாராவாரம் 800க்கும் 1100க்கும் இடையில் எதாவது நம்பர் 'கவுண்ட்டர்' அனுப்பும் தகவலில் இருக்கும். லாக் அளவை 500க்கு மாத்திக் கொடுத்துருக்காங்க. அது நிறைஞ்சு வழியுதேன்னு விண்ணப்பம் போட்டேன். அம்புட்டுதான். கை நீட்டாதே.... இனி கிடையாதுன்னு அருள்வாக்கு.
அதெப்படி செப்டம்பர் 24, 2004 சரியான தேதியை நினைவு வச்சுருக்கேன்னு கேப்பீங்க...... எனக்கும் மறதி வந்துறக்கூடாதுன்னுதான் ஆரம்பிக்கும்போதே மறுபாதியின் பொறந்தநாளொடு இதைக் கோர்த்துவிட்டுருக்கேன். ஆகக்கூடி இன்னிக்கு ரெண்டு பொறந்தநாட்கள் நமக்கு:-))))))
தனியாப் பூக்கள் வாங்கிப் பரிசும் பாராட்டுமாக் கொடுக்கணுமா? இருக்கவே இருக்கு 'நம்மாத்துப் பூக்கள்' னு அதுகளையே நாளைக்கு இங்கே போட்டால் ஆச்சு.
என்னுடைய அட்டகாசங்களையெல்லாம் சகித்துக்கொண்டு அன்பும் ஆதரவுமா இருக்கும் 'பின்னூட்டப் பிரேமன்' கோபாலுக்கு இனிய பொறந்தநாள் வாழ்த்து(க்)களை இங்கே சொல்லிக்கறேன்.
துளசிதளத்தின் ஆதரவாளர்களான சகபதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நட்புவட்டம் பெருசா வளர்ந்து இருக்கு. தொடர்ந்து அன்பைப் பொழியவேணுமுன்னு வேண்டுகின்றேன்.
என்றும் அன்புடன்,
துளசி.
Showing posts with label Birthday Wish. Show all posts
Showing posts with label Birthday Wish. Show all posts
Tuesday, September 23, 2008
நாலில் இருந்து ஐந்துக்கு ஒரு நகர்வு
Posted by
துளசி கோபால்
at
9/23/2008 09:42:00 PM
70
comments
Labels: Birthday Wish
Wednesday, April 09, 2008
வல்லிக்குப் பொறந்த நாளு மக்கா....
மக்கள்ஸ்,
இன்னிக்கு என் பெரியம்மா வல்லிசிங்கத்துக்குப் பொறந்தநாளுன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருக்காஹ.
அதான் மனுசங்க மாதிரி வாழ்த்துப் பாடலாமுன்னு தோணுச்சு.
நூறாண்டு காலம் வாழ்க
மியாவ்
நோய்நொடி இல்லாமல் வாழ்க
மியாவ்
பாடும் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரன் எட்டிப் பார்க்கிறான்.
இருங்க, போய் விரட்டிட்டு வந்து பாடறேன்.
ஹேப்பி பர்த்டே பெரிம்மா.......
இப்படிக்குப் பெரியம்மாவின் அபிமானி
ஜிகே
சுருக்கமாச் சொன்னா.......கோபால கிருஷ்ணன் :-)
Posted by
துளசி கோபால்
at
4/09/2008 01:09:00 PM
42
comments
Labels: Birthday Wish
Subscribe to:
Posts (Atom)
