Tuesday, September 23, 2008

நாலில் இருந்து ஐந்துக்கு ஒரு நகர்வு

இன்றோடு நாலு வருசம் முடிஞ்சு அஞ்சாவது வருசம் ஆரம்பம் ஆச்சு. நிறைய எழுதுனேன்னு தெரியுது....ஆனால்.......... நிறைவா எழுதுனேனா?
பயனுள்ளதா இருந்துச்சா? வகுப்பு மாணவர்கள் எதாவது நல்லதைக் கத்துக்க முடிஞ்சதா? இல்லை, தூங்க வச்சேனா?

சொற்களைக் கொண்டு ஆடும் சித்து விளையாட்டு இன்னும் கைவசமாகலை. ஒவ்வொருத்தர் எழுதறதைப் படிக்கும்போது....ஹைய்யோ....
நாமும் எழுதறோமேன்னு இருக்கு.....

புள்ளிவிவரம் பார்க்காம இருக்க முடியாது என்பதால் இதுவரை எழுதுன பதிவுகள் இங்கே துளசிதளத்தில் 765.

கவுண்ட்டரின் சத்தியப்பிரமாணப்படி வந்து போனவங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துச் சொச்சம். நெசமா இருக்குமான்னு எனக்கு ஒரு சந்தேகம்தான். ஆனாலும் 208 வாரத்துக்குன்னு கணக்கெடுத்தால் இருக்க வாய்ப்பு உண்டு. ஆறுமாசத்துக்கும் மேலா 185597ன்னு நின்னா நின்ன இடத்தில். ஆனால் வாராவாரம் 800க்கும் 1100க்கும் இடையில் எதாவது நம்பர் 'கவுண்ட்டர்' அனுப்பும் தகவலில் இருக்கும். லாக் அளவை 500க்கு மாத்திக் கொடுத்துருக்காங்க. அது நிறைஞ்சு வழியுதேன்னு விண்ணப்பம் போட்டேன். அம்புட்டுதான். கை நீட்டாதே.... இனி கிடையாதுன்னு அருள்வாக்கு.

அதெப்படி செப்டம்பர் 24, 2004 சரியான தேதியை நினைவு வச்சுருக்கேன்னு கேப்பீங்க...... எனக்கும் மறதி வந்துறக்கூடாதுன்னுதான் ஆரம்பிக்கும்போதே மறுபாதியின் பொறந்தநாளொடு இதைக் கோர்த்துவிட்டுருக்கேன். ஆகக்கூடி இன்னிக்கு ரெண்டு பொறந்தநாட்கள் நமக்கு:-))))))

தனியாப் பூக்கள் வாங்கிப் பரிசும் பாராட்டுமாக் கொடுக்கணுமா? இருக்கவே இருக்கு 'நம்மாத்துப் பூக்கள்' னு அதுகளையே நாளைக்கு இங்கே போட்டால் ஆச்சு.

என்னுடைய அட்டகாசங்களையெல்லாம் சகித்துக்கொண்டு அன்பும் ஆதரவுமா இருக்கும் 'பின்னூட்டப் பிரேமன்' கோபாலுக்கு இனிய பொறந்தநாள் வாழ்த்து(க்)களை இங்கே சொல்லிக்கறேன்.

துளசிதளத்தின் ஆதரவாளர்களான சகபதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நட்புவட்டம் பெருசா வளர்ந்து இருக்கு. தொடர்ந்து அன்பைப் பொழியவேணுமுன்னு வேண்டுகின்றேன்.
என்றும் அன்புடன்,
துளசி.

70 comments:

said...

துளசி,வாழ்த்துகிறேன் சிறந்தோங்க!

"கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு"-வள்ளுவம்.

said...

வாவ்... கலக்கிட்டீங்கம்மா..

துளசிதளத்தில் 4 வருடங்கள் முடிந்ததற்கும், திரு.கோபால் அவர்களுடைய பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள்......

said...

ஜூப்பரு!!

தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!! அவரு எங்கிட்டு இருந்தாலும் என் சார்பில் ஒரு சாக்லேட் சாப்பிட அனுமதி குடுங்க! :))

அப்படியே நீங்களும் ஒண்ணு வாயில் போட்டுக்குங்க.

அது என்ன 'பின்னூட்டப் பிரேமன்' அப்படின்னு பட்டம்? நல்லாவே இல்லை!! நல்ல பட்டமா பார்த்துக் குடுங்க.

கோகி பேரைச் சொல்லவே இல்லை!! மாட்னீங்க!!

வாழ்த்துகள் ரீச்சர்!

said...

வாழ்த்துக்கள் துளசி. கோபாலுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லுங்க.

said...

Happy Anniversary to Thulasi & Gopal

said...

உங்களுக்கு என்னோட முதல் வாழ்த்துக்கள்:):):) அப்புறம் திரு.கோபால் அவர்களுடைய பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள்

said...

கோபால் சாருக்கு என் பிறந்ததின வாழ்த்துக்கள். நாலின் நிறைவுக்கும் ஐந்தின் ஆரம்பத்துக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

//வகுப்பு மாணவர்கள் எதாவது நல்லதைக் கத்துக்க முடிஞ்சதா? //

நிறைய நிறைய...
அதற்கும் இங்கே என் நன்றிகள்!

said...

வாங்க ஸ்ரீரங்கன்.

வள்ளுவரையும் கூடவே கூட்டிவந்து வாழ்த்தியதுக்கு நன்றி.

said...

வாங்க ச்சின்னப் பையன்,

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

சாக்லேட் எல்லாம் 'லேட்' ஆகிப்போச்சு. அதுதான் (ஃப்ரோஸன்) கேஸரி ஒரு விள்ளல்.

ஒரு எதுகைமோனையாவும் இருக்கணும் அதே சமயம் பிரேமிக்கு ஆண்பாலாவும் இருக்கட்டுமேன்னுதான்.

கோகியை எங்கே விட்டேன்? 'நம்மாத்துப் பூக்கள்' கூட்டத்தில் இருக்கான்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க பத்மா.

நலமா? எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?

ஆணி ரொம்பக் கூடிப்போச்சா?

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க தெய்வா.

வாழ்த்துகளுக்கு நன்றி. கோபாலும் நன்றி சொல்லச் சொன்னார்.

said...

வாங்க ராப்.

ரொம்ப நன்றிங்க.

said...

வாங்க தெய்வசுகந்தி.

அப்ப்ப்ப்ப்ப்பா..... பேருலேயே சாமி வாசனை!!!!

நம்மவீட்டுலே பயன்படுத்தும் ஊதுவத்தி மணத்துக்கு 'சாமி வாசனை'ன்னுதான் பெயர்:-)))

நன்றிப்பா

said...

கோபால் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ஐந்தாம் வருட ஆரம்பத்திற்கும் வாழ்த்துக்கள்.. :)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

வகுப்புலே இதுவரை நீங்க ஒருத்தர்தான் எதோ கத்துக்க முடிஞ்சுதுன்னு சொல்லி இருக்கீங்க. மத்தவங்க?

கப்சுப்.....தூக்கமா இருக்குமோ?:-)))))

இல்லே இருந்தாத்தானே சொல்லணுமுன்னு இருக்காங்களோ?

said...

வாங்க தமிழ் பிரியன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

பிபி அப்புறமா ஆஃபீஸ்விட்டு வந்து படிப்பார்:-)

said...

மேடம்,

சாருக்கும் துளசிதளத்துக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//நிறைய எழுதுனேன்னு தெரியுது....ஆனால்.......... நிறைவா எழுதுனேனா?
பயனுள்ளதா இருந்துச்சா? வகுப்பு மாணவர்கள் எதாவது நல்லதைக் கத்துக்க முடிஞ்சதா? இல்லை, தூங்க வச்சேனா?//

என்ன, இப்படிச் சொல்லி விட்டீர்கள்? உங்கள் பதிவுகள் பற்றிய கமெண்ட்டை நேற்றே சொல்லி விட்டேன். அது இன்று சொல்லப்பட்டிருந்தால், பொருத்தமானதாக இருந்தாலும் வாழ்த்து என்பதில் அனுமதிக்கப்படுகின்ற மிகையாகப் போயிருக்கலாம். நேற்றே சொன்னதில் உண்மையின் வெளிப்பட்டாகத் தானே இருந்திருக்க முடியும்?

பல்லாண்டுகல் வாழ்க, எழுத்தலங்காரத்துடன்.

said...

ஐந்து...வருடமா.....!!!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் டீச்சர்...

said...

இன்னிக்கு எனக்கும் ஆணி நிறைய இருந்ததால லேட் பா. துளசி வாழ்த்துகள் முதலில் கோபாலுக்கு.

அப்புறம் உங்க ஐந்தாவது ஆண்டுக்கு:)
நீங்கள் இருவரும் அமைதியும் ஆரோக்கியதோட நல்லா இருக்கணும்.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

சார் என்ன சார்? பேசாமக் கோபால்னு சொல்லுங்க.

நல்லவேளை . ஒரு 'வு'மட்டும் கூடப் போட்டுருந்தால் நான் அம்பேல்;-))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

பல்லாண்டு வேணுமான்னுதான் யோசனை!!!

said...

வாங்க தமிழன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

said...

வாங்க வல்லி.

ஆசிகளுக்கு நன்றிப்பா. இதைவிட வேறென்ன வேணும்!!!

said...

நேத்து தான் நான் புதுப்பதிவர்னு ஒரு இடத்துல பின்னூட்டம் போட்டிருந்த நினைவு ;)

துளசிதள ஐந்தாம் ஆண்டு ஆரம்பத்திற்கும், கோபால் அவர்களின் பிறந்த நாளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!!!!

PIT வகுப்பில் படிச்சு, படம் நல்லா எடுத்திருக்கீங்க.

said...

//ஆகக்கூடி இன்னிக்கு ரெண்டு பொறந்தநாட்கள் நமக்கு//

டச் பண்ணிட்டீங்க போங்க. ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்.

ட்ரீட் கிடையாதா? நான் வேற என்ன கேக்க போறேன்?

//அதுதான் (ஃப்ரோஸன்) கேஸரி ஒரு விள்ளல்.
//

அதான், அதே தான்! :)))

said...

வாழ்த்துக்கள் துளசி.. அவரும் செப் 23ஆ ... பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் துளசி & கோபால்

said...

BELATED BIRTHDAY WISHES.

said...

congrats Gopal sir.......
thulasi madam, oru nalla teacherku neenga nalla utharanam....
neriya kathukaraom.....
valthukal....

said...

ஆஹா... துளசி கோபால் ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள். :)

டீச்சர், அட இன்னிக்காவது லீவு விட்டுட்டு அவரு கூட நேரம் செலவழிக்கக்கூடாதா? அவரும் பாவம்தானே?? :))))

said...

வாழ்த்துக்கள் ரீச்சர்..

எவ்ளோ வேண்ணாலும் நீங்க அடிச்சு ஆடுங்க.. பதிவு போடுறோமோ இல்லையோ.. துளசியம்மாவுக்கு ஒரு கமெண்ட் போடலைன்னா எங்களுக்கு மண்டை காயுது..

//என்னுடைய அட்டகாசங்களையெல்லாம் சகித்துக்கொண்டு அன்பும் ஆதரவுமா இருக்கும் 'பின்னூட்டப் பிரேமன்' கோபாலுக்கு இனிய பொறந்த நாள் வாழ்த்து(க்)களை இங்கே சொல்லிக்கறேன்.//

ஆஹா.. கோபால் ஸாருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து விடுங்கள்..

வாழ்க வளமுடன்..

said...

குருவே!வாழ்த்துக்கள்...
சாருக்கு குடுத்துட்டீங்களா? அன்னைக்கே குடுத்தேனே வாழ்த்து.

\\வகுப்புலே இதுவரை நீங்க ஒருத்தர்தான் எதோ கத்துக்க முடிஞ்சுதுன்னு சொல்லி இருக்கீங்க. மத்தவங்க?

கப்சுப்.....தூக்கமா இருக்குமோ?:-)))))

இல்லே இருந்தாத்தானே சொல்லணுமுன்னு இருக்காங்களோ?//

டீச்சர்ன்னு பட்டம் கொடுத்த வகுப்பறை ஆளுங்களை.. நீங்க இப்படி சந்தேகப்படலாமா?

said...

இரண்டு பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள் அம்மா!

said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள் ;))

said...

அட! நான் ரொம்ப லேட்டு......
வாழ்த்துகள் துள்சி!
கோபாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்!

said...

வாழ்த்துகள் டீச்சர் :)

said...

வாங்க வெயிலான்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

PITல் சேர்ந்தபிறகு ஏதோ எடுத்தோமுன்னு இல்லாமக் கலைக்கண்களோடு கெமெராவழியாப் பார்க்கும் வழி புரிஞ்சுபோச்சு!!!!

said...

வாங்க அம்பி.
சொன்னா நம்பணும். செஞ்ச அன்னிக்கும் தின்ன அன்னிக்கும் உங்களை நினைச்சுக்கிட்டேன்.

ஒரு பரிசோதனைக்காக ஃப்ரீஸ் செஞ்சு பார்த்தேன். அட்டகாசமா இருக்கு. அரைமணி நேரம் வெளியே எடுத்துவச்சுட்டு மைக்ரோவேவில் 20 வினாடி வச்சால்...அடடா...... சூப்பர்.

said...

வாங்க மங்கை.

கோபால் உங்களைவிட ஒரு நாள் சின்னவர்:-)))))

டில்லி அண்ணாத்தை என்னைவிட ஒரு மாசம் மூத்தவர்!!!

said...

வாங்க நான் ஆதவன்.

முதல்முறையா வந்துருக்கீங்க போல?
வணக்கம். நலமா?

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

லேட்டே இல்லை. சரியா 'டான்'ன்னு அதே நாளில்தான் வாழ்த்தி இருக்கீங்க.
நாந்தான் லேட்டா பதில் போட்டுக்கிட்டு இருக்கேன்.

நன்றிங்க.

said...

வாங்க குணசேகர்.
நல்லா இருக்கீங்களா? 'பார்த்து' ரொம்பநாளாச்சே....

வாழ்த்துகளுக்கு நன்றி.

அடிக்கடி வந்து போங்க.

said...

வாங்க வெண்பூ.

நான் மட்டும் லீவு விட்டு என்ன ஆகப்போகுது?

ஆணிகள் பிடுங்கணுமுன்னு ஓடிட்டாரே!!!

மாலையில் கோயிலுக்குப்போயிட்டு அப்படியே லிட்டில் இந்தியாவில் சாப்பாடும் ஆச்சு. தினம்தினம்தான் துளசிவிலாஸில் சாப்புடுறாரேன்னு ஒரு சேஞ்சுக்கு.


வாழ்த்துகளுக்கு நன்றி.

பிகு: எங்கூரிலும் ஒரு கோயில் & லிட்டில் இண்டியா இருக்கு:-))))

said...

வாங்க உண்மைத் தமிழன்.
நலமா? ஆணி ரொம்பவோ? பதிவுகள் ஒன்னும் காணோம்!!!!

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க கயலு.
அதெல்லாம் பொழுது விடிஞ்சதும் கொடுத்தாச்சு:-)

யார்மேல் சந்தேகம் வந்தாலும் வகுப்பு மாணவர்கள் மேல் சந்தேகம் வரக்கூடாதோ?
அதுவும் ஞாயம்தான்.

said...

வாங்க கவிநயா.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க கோபி.

நன்றிகள் பல.

said...

வாங்க சிஜி.

காசியில் (உங்க ) நினைவுகளை விட்டுட்டாங்களோன்னு நினைச்சேன்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி. சொல்லிடறேன்.

said...

வாங்க கப்பி.

நன்றிப்பா.

said...

வாழ்த்துக்கள் துளசி,ப்ரமிப்பா இருக்கு......!!! கோபாலுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லுங்க.

said...

ஆகா அருமை.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு தொடர்ந்து நீங்கள் எழுதி வர வேண்டும் அக்கா.

கோபால் சாருக்கு அடியேனின் பிறந்த நாள் வணக்கங்கள் வாழ்த்துகளுடன்.

said...

வாங்க ராதா ஸ்ரீராம்.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா

said...

வாங்க குமரன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

பல்லாண்டு என்னத்தை எழுதறதாம்?

இப்பெல்லாம் 'எழுத்துக்கு மதிப்பீடு, வாசனை அப்படி இப்படி'ன்னு என்னமோ இருக்காமே. இந்த அழகில் நாம் எங்கெ நிக்கறோமுன்னே தெரியலையேப்பா:-)))

said...

வலையில் (நான்கு வருடம்)ஆண்டு(வந்து) விழா கொண்டாடும் எங்கள் டீச்சருக்கும், பிறந்தநாள் காணும் கோபால் சாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன் சற்றுத் தாமதமாக....

said...

பூக்கள் எல்லாமே கொள்ளை அழகு.... நிறைய பூக்களுக்கு எனக்கு இன்னிக்குதான் பேரே தெரிஞ்சிருக்கு....நன்றி டீச்சர்...

said...

பல வலைப்பூங்கொத்துகளோடு பெருந் தோட்டம் போட வாழ்த்துகள் துளசியக்கா!

-மானஸாஜென்.

said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் டீச்சர்...

Sridhar

said...

பின்னாடியே வந்துட்டிருக்கேனாக்கும்...நாலாவது வருசமா...

இன்னும் நெறய வருசம் போக வேண்டிருக்கு....துளசீம்மா...

போவோம்...

வாழ்த்துகள்....

-யட்சன்.

said...

வாங்க தமிழ்ப்பறவை.

உங்களுக்குப் பதிலும் ரொம்பத் தாமதமாகவே எழுதும்படி ஆகிருச்சு. ஆணிகள் கொஞ்சம் அதிகம்(-:

வாழ்த்துகளுக்கு நன்றி.

பெயர் ரொம்ப முக்கியமில்லையா? அதுதான் பெயரையும் சேர்த்தேன்:-)

said...

வாங்க மானஸாஜென்.

உங்க பெயரைப் பார்த்தவுடன் ஆடிப்போயிட்டேன். வராதவங்க வந்தவுடன் கையும் ஓடலை காலும் ஓடலை.

கணினி அறையில்
கண் முன்னால்
மீரா


:-))))

said...

வாங்க நன்மனம்.

உங்க மனசுக்குத் தகுந்தாப்புலேச் சொல்லிட்டீங்க.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க யட்சன்.

தொடரும் தொடர்கதைகள்தானே?

அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.

said...

5ம் வருடத்தில் கால்பதித்திருக்கும் டீச்சருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் :)

கோபால் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

(டீச்சர் ட்ரீட் எங்கே? )

said...

வாங்க ரிஷான்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க போல:-)

ட்ரீட்? பிரச்சனை இல்லை?

நீங்க கிளம்பிவாங்க. ஜமாய்ச்சுறலாம்:-)

said...

வாழ்த்து(க்)கள் ரீச்சர்.

said...

பொறந்தநாள் வாழ்த்துக்களை கண்டிப்பாச் சொல்லுங்க..

said...

வாழ்த்துக்கள் மேடம். மென்மேலும் சிறப்பான பதிவுகளை தர வேண்டுகிறேன்.

said...

வாங்க இளா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

நீங்க அனுப்புன பொறந்த நாள் வாழ்த்தை நான் சொல்லணுமுன்னு இல்லை. பின்னூட்டப் பிரேமன் தானே படிச்சுட்டார்:-)

நட்சத்திரவாரத்தில் பழசையும் புரட்ட நேரம் இருக்கா?

said...

வாங்க கிரி.

'பதவி உயர்வு வந்த பெருமையான தருணத்திலும்' நேரம் எடுத்து வந்து வாழ்த்தியதற்கு நன்றிப்பா.