Monday, September 29, 2008

ஆரம்பிச்சுட்டாங்கையா....ஆரம்பிச்சுட்டாங்க.

நியூஸியில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் இதுதான். பகல்நேர சேமிப்பு. என்னத்தை சேமிச்சு........ எங்கேன்னு சேர்த்துவச்சு......


ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுசனையும் கடிச்சுக்கிட்டே வந்து இப்ப வருசத்துக்கு 27 வாரம் (பாதி வருசத்துக்கும் மேலே) சேமிப்பாம்.
கடிகாரத்தையெல்லாம் ஒரு மணி நேரம் முன்னோக்கி வச்சுரணும். இப்ப உண்மையில் ஏழு மணியா?.... அப்ப இனிமேல் எட்டு.

யோவ்...... கடிகாரத்தை திருப்பிட்டா எல்லாம் அப்படியே மந்திரம் போட்டாப்புலே மாறிருமா? காலையில் காப்பித்தண்ணிக்குப் பரவாயில்லே... குடிச்சுவச்சுருவோம். மத்தபடி காலை உணவு வழக்கத்தைவிட ஒரு மணி முன்னாலே திங்கணுமுன்னா....... அதுக்கு வயிறு ரெடியா இருக்கவேணாமா? தொலையட்டும், ரெண்டு ஸ்லைஸ்க்குப் பதிலா ஒரு ரொட்டித் துண்டு. பகல் சாப்பாட்டுலேதான் இருக்கு........... 11 மணிக்குப் ஃபுல்கட்டு கட்ட முடியுமா?


பெரியவங்களை விடுங்க. நமக்கு ஏதோ (???)புரியுது (!!!) அளவைப் பாதியாக் குரை(!!வள்வள்ன்னு)ச்சுக்கிட்டுத் தின்னோமுன்னு பெயர் பண்ணிறலாம். புள்ளைங்க? இதுகளை நல்ல நாளிலேயே காலையில் பள்ளிக்கூடத்துக்கு எழுப்பறது கஷ்டம். இப்ப ஒரு மணி நேரம் முன்னாலே எழுப்புனா எப்படி? தூக்கச்சடவோடுத் தூங்கிக்கிட்டே ரொட்டியை முழுங்கிட்டுப் பள்ளீக்கூடம் போய் அங்கேயும் 'க்ரம்பி'யா உக்காந்து பாடம் படிச்சுட்டு 12 மணிக்கு (பழைய 11 மணிக்கே) பகலுணவுன்னா எப்படி?


மூணுமணிக்கு விடும் பள்ளிக்கூடம் வீட்டு வீட்டுக்கு வரும்போது உண்மை மணி ரெண்டு. இங்கே மாலை ஏழரைமணிக்குப் புள்ளைங்க படுக்கை போடும் நேரம். அப்போ உண்மையில் ஆறரை. தூக்கம் என்ன ஸ்விட்ச் போட்டவுடன் வரும் சமாச்சாரமா?

அரசாங்கம் பண்ணும் அக்கிரமஅட்டகாசத்தில் மனுசனின் உடம்புக் கடிகாரம்( பாடி க்ளாக்) தறிகெட்டு ஓடுது. இப்படி அப்படின்னு மாத்தி மாத்திவச்சா அதுக்குத் தகுந்தபடி ஆட அதுக்கு என்ன பைத்தியமா? கொஞ்சம் கொஞ்சமாப் பழகிக்கும் உடம்புக்கு இன்னொரு அதிர்ச்சி இந்த சேமிப்பு முடிஞ்சதும் வரும். அப்ப ஒருமணிநேரம் தாமதமா எல்லாம்.....
விக்கிரமாதித்தன் இங்கெல்லாம் வந்து கடாறு நாடாறு ஆறாறுன்னு சொல்லிக் கொடுத்திருப்பானோ?.... என்னதான் சொல்லுங்க வெள்ளைக்குக் கொஞ்சம் புத்திமட்டுதான்........ என்ன ஏதுன்னு தீர ஆராயாமல் 'இட்ஸ் க்ரேட்'ன்னு ஆரம்பிச்சுருவாங்க.

சட்டம் போட்டு மாத்திவச்ச புண்ணியவான்கள், கடைசிநாள் பார்லிமெண்ட் கூட்டம் முடிச்சு லீவு விட்டுக்கிட்டாங்க. கடைசிநாளுன்னு பாராளுமன்றத்தில் செஞ்ச கூக்குரல்கள் எல்லாம் பள்ளிக்கூடத்துப்பசங்கள் கெட்டதுபோங்க. இனி நவம்பர் எட்டுக்கு வரும் தேர்தல் முடிஞ்சுதான் எல்லாம். அதுவரை அவிழ்த்துவிட்ட.......கள்.

இவுங்க எப்படித்தான் எனர்ஜியை சேமிப்பாங்கன்னு புரியலையே...... விவசாயிகளுக்கும், பண்ணை ஆட்களுக்கும் நல்லது(??) செய்றோமுன்னுதான் இதை ஆரம்பிச்சாங்களாம். இப்பப் பண்ணை ஆட்களே இருட்டுலே போய்ப் பால் கறக்க முடியலை. கொஞ்சம் தாமதமானாலும் பால் வண்டிகள் வந்து காத்துக்கிட்டு இருக்கு. அது வரும்போது கறந்தபால் ரெடியா இருக்கணுமுன்னுதான் ஒப்பந்தம். பேஜாரா இருக்குன்னு சொல்றாங்க.


பாவம் மாடுகள்! அதுகளையும் தூங்கவிடாம வழக்கத்துக்கு ஒரு மணிநேரமுன்னமே பாலைக் கொடு பாலைக்கொடுன்னு பிடுங்குனா அதுகள்தான் என்ன செய்யும்? அதோட பாடி க்ளாக்கையும் முறுக்குனா எப்படி?


வழக்கமா ஆறுமணிக்கு எழுந்திருக்கும் குடும்பங்களில் இப்ப அஞ்சு மணிக்கே எழவேண்டி இருக்கு. இருட்டுலே தடவித்தடவி வீட்டுவேலை செய்ய முடியுமா? விளக்கைப் போட்டுக்கத்தானே வேணும். இன்னும் குளிர்விடாமத் துரத்துவதால் ஹீட்டர்களையும் ஓடவிடணும். எல்லாருக்கும் ஆன் பண்ணத்தான் தெரியும். ஆஃப் பண்ணத் தோணாது..... பத்துமணி ஆகும்போது பார்த்தால் குளியலறை ஹீட்டர்கள் ஜெகஜ்ஜோதியா ....... இந்த அழகுலே 'அந்த சேமிப்பு' எங்கே இருக்கு?


மாலை ஆறுமணி செய்தியை அஞ்சுமணிக்கேப் பார்த்து, பெரியவங்களுக்கானப் பத்துமணிப் படுக்கைக்கு ஒம்பது மணிக்கே போய்...... ஐயோ......இப்படிப் புலம்பவச்சுட்டாங்களே வருசாவருசம்..........

வடகோளத்தில் டே லைட் சேவிங் இப்ப அநேகமா முடிஞ்சுருக்குமுன்னு நினைக்கிறேன். அந்தப் பகுதியில் இருக்கும் பதிவுலக அன்பர்கள் இதன் பலாபலன்களைக் கொஞ்சம் சொல்லுங்கப்பா. உண்மையில் இதனால் ஏதாவது பயன் உண்டா? குளிர்காலம் முடிஞ்சதும் இயற்கையாவே காலையில் கொஞ்சம் சீக்கிரம் விழிப்பு வருவது உண்டுதான். அப்பச் சீக்கிரம் எழுந்துக்கும் மக்கள் அந்த நேரத்தை உடற்பயிற்க்கோ, நடைப்பயிற்சி, தோட்டவேலை இப்படி எதுக்காவதுத் தாமாய்ப் பயன்படுத்திக்குவோம்தானே...... ஒன்னுமே செய்யலைன்னாலும் கொஞ்சம் ரிலாக்ஸா வேலைக்கோ, வெளியிலோ, பள்ளிக்கூடத்துக்கோக் கிளம்பலாம். யாரையும் அவுங்கவுங்க விருப்பத்துக்குச் செயல்படவிடாம அரசாங்கம் செய்யும் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்டணுமுன்னு (என்னைத்தவிர) யாருக்கும் தோணலையே.....

இப்போதைக்குப் புலம்பலை ஒதுக்கிவச்சுட்டுக் கொலு வேலையைப் பார்க்கப்போறேன். ராகு காலம்கூட ஒரு மணி நேரம் பிந்தி வருது! எல்லோருக்கும் ஏழரை ஒன்போதுன்னா எங்களுக்கு எட்டரை பத்து.

23 comments:

said...

வழக்கம் போல நாந்தான் முதலா?

said...

me the second

said...

ஐரோப்பாவிலும் அதேதான், என்ன எனக்கு இந்தப் பிரச்சினை எல்லாம் கொஞ்சம் கூட பேஜார் பண்ணாது. என் ரங்கமணியில் இருந்து எல்லாரும் என்னை பார்த்து வயிரெரிவாங்க:):):) ஆனா எங்க அம்மா அப்பாக்கு தான் என்னோட பேசற டைம் மாறுவதால் கஷ்டம், குழப்பமெல்லாம்.

said...

///ஒன்னுமே செய்யலைன்னாலும் கொஞ்சம் ரிலாக்ஸா வேலைக்கோ, வெளியிலோ, பள்ளிக்கூடத்துக்கோக் கிளம்பலாம். யாரையும் அவுங்கவுங்க விருப்பத்துக்குச் செயல்படவிடாம அரசாங்கம் செய்யும் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்டணுமுன்னு (என்னைத்தவிர) யாருக்கும் தோணலையே.....///
:))))

said...

சே இப்படி ஆடு, மாடு,மனுசன்னு எல்லாருக்கும் பாடி கிளாக்கை மாத்த வச்சிட்ட்டாங்களே... என்னய்யா சிஸ்டம் இது..
ராகு பகவான் என்ன பாவம் பண்ணினார்? அவருக்குமா இந்த “நேர சேமிப்பு”... என்ன கொடும சாமி

said...

ரொம்பக் கொடுமை ரீச்சர்!

said...

:-))

said...

அப்பச் சரி இனிமே மதியம் 12 மணிக்கே துளசியைப் பார்க்கலாம்:)

இவங்க கூத்து இப்ப ஆரம்பிக்க மாட்டாங்கன்னு நினைக்கீறேன். நம்ம ஊருல தான் சூரியனும் சந்திரனும் கடியாரங்கள். நிம்மதி:)

said...

// எல்லாருக்கும் ஆன் பண்ணத்தான் தெரியும். ஆஃப் பண்ணத் தோணாது//


கரெக்டா சொன்னீங்க.! எங்க வீட்டு அம்மாவும் செள்ன்ட் பாக்ஸை ஆன்
பண்ணிட்டாங்கன்னா ஆஃப் பண்ணத்தோணவே தோணாதுங்க...

அங்க எப்படி !!!

சுப்பு தாத்தா.
சென்னை.

said...

//இப்போதைக்குப் புலம்பலை ஒதுக்கிவச்சுட்டுக் கொலு வேலையைப் பார்க்கப்போறேன். ராகு காலம்கூட ஒரு மணி நேரம் பிந்தி வருது! எல்லோருக்கும் ஏழரை ஒன்போதுன்னா எங்களுக்கு எட்டரை பத்து.//

இது தான் டாப்பு !

:)

said...

// ராகு காலம்கூட ஒரு மணி நேரம் பிந்தி வருது! எல்லோருக்கும் ஏழரை ஒன்போதுன்னா எங்களுக்கு எட்டரை பத்து.//


இப்ப‌தான் இது க‌ண்ணுலே ப‌ட்டுது. உங்க‌ ஊரு க‌டிகார‌த்தை முன்னையோ
பின்ன‌யோ த‌ள்ளி வ‌ச்சா அதுக்குத்த‌கு ந்தாப்போலே ராகு கால‌த்தையும்
மாத்திக்க‌க்கூடாது.

உங்க‌ ஊரிலே, எங்க‌ ஊரிலேயோ, யார் ஊரிலேயும் ராகு கால‌ம் இப்ப‌டித்தான்
க‌ண‌க்கு ப‌ண்ண‌னும் அப்ப‌டின்னு விதிக‌ள் இருக்கு.

சூரிய‌ன் உதிக்கிற‌ நேர‌ம் க‌ரெக்டா பாத்துண்டு, அது இன்னிக்கு 6.05 அப்ப‌டின்னா,
ஏழ‌ரை டு ஒன்போது, ஏழு முப்ப‌த்தைஞ்சு டு ஒன்போது அஞ்சு.

ஒரே இட‌த்திலே கூட‌ ராகுகால‌ம் ம‌ட்டும‌ல்ல‌, எம‌ க‌ண்ட‌ம், குளிகை எல்லாமே
இப்ப‌டித்தான் க‌ண‌க்கு ப‌ண்ண‌னும்.

ஆக‌வே உங்க‌ ஊர் அன்னி அன்னிக்கு சூரியோத‌ய‌ம் ஒரு ர‌ஃப் ஆ பாத்துக்க‌ங்க‌.
அதுக்கு த‌கு ந்தாப்போல‌ ராகு கால‌ம் .

இது உங்க‌ ந்யூ ஸீ க்கு ம‌ட்டும‌ல்ல‌, உல‌க‌த்திலே எல்லா நாடுக‌ளுக்கும் இ ந்த‌
ஃபார்முலா தான். ச‌ந்தேக‌மே வேண்டாம்.


சுப்பு தாத்தா.
த‌ஞ்சை.

said...

வாங்க வாங்க சுப்புரத்தினம்.

முதல்லே உங்களுக்கு பதில் சொல்லிட்டுத்தான் மறுவேலை.

இன்னிக்கு சூரிய உதயம் காலை 7.05 .

அதாவது உண்மையான நேரம் அப்ப 6.05தான்.
எந்தெந்த நாடுகளில் இருந்தாலும்
சூரிய உதயம் ஆனபிறகும் அஸ்தமிக்கும் வேளைக்கும் இடைப்பட்டப் பகல் பொழுதுகளில் அந்தந்த குறிப்பிட்ட நேரங்களில் ராகு குளிகை எமகண்டம் எல்லாம் வருமுன்னு இருந்தாலும் இவுங்க இஷ்டத்துக்கு நேரம் மாத்திக்கிட்டா ராகுவும் கேதுவும் இவுங்க இஷாராவுக்கு ஆடுமா?

பிள்ளைங்க பிறக்கும் நேரத்தையும் இந்தப் புதிய மணிகளில்தான் குறிச்சுடறாங்க. இவ்வளோ என்னத்துக்கு புதுவருஷக் கொண்டாட்டம்கூட பழைய 11 மணிக்கு, அதான் புது நேரம் 12 காமிக்குதே அதுலே கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.

ஃபிஜி நாட்டுக்கும் நியூஸிக்கும் ஒரே ரேகையில் இருப்பதால் ஒரே நேரம்தான். அது ட்ராப்பிகல் நாடு. நேரம் மாத்துவது இல்லை. இங்கே நேரம் மாத்துவதால் இங்கே 10 மணின்னா அங்கே 9 தான்.

இதெல்லாம் வேண்டாத வேலை இல்லையா? நம்மூருக்கு ஆறரைமணி வித்தியாசம் இவுங்க நேரம் மாத்துவதுவரை ஏழரை.

ஏழரை புடிச்சுருச்சோன்னு இருக்கு(-:

said...

வாங்க குடுகுடுப்பை.

நீங்கதான் முதல்!

நான் பதிவுபோடும் நேரம் 'விழித்திருக்கும் இடங்களில்' நீங்க இருப்பதும் ஒன்னு:-))))

said...

வாங்க ராப்.

எப்படீங்க...... எப்படி?

எப்படிச் சமாளிக்கிறீங்கன்ற ரகசியத்தைச் சொல்லுங்கப்பா.

ரிட்டயர்ட் லைஃப்ன்னாலும் பரவாயில்லை. இன்னும் அதுக்கு அஞ்சாறு வருசம் ஆகணுமே(-:

said...

வாங்க தமிழ் பிரியன்.

இந்தப் புலம்பல் 27 வாரம் தொடரும். பயந்துறாதீங்க.....அது பதிவில் இல்லை:-))))

said...

வாங்க கொத்ஸ்.

கொடுமைதான். கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா......

said...

வாங்க சந்தனமுல்லை.

இதுக்கும் சிரிப்பா??????

ஐயகோ.......

said...

வாங்க வல்லி.

அங்கே குளிர் முடியணுமே. அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும். ஆனாலும் இங்கே அரைவருசத்துக்கு மேல் மாத்துவது அநியாயம் இல்லை????

said...

வாங்க சுப்பு.

இங்கே சவுண்ட் பாக்ஸ் இல்லை. அல்வா செஞ்சு கொடுத்த நாளில் இருந்து கப்சுப்:-)))))

said...

வாங்க கோவியாரே.

ராகு காலமுன்னு எழுதுனப்ப உங்க நினைவு வந்ததென்னவோ உண்மை:-)

said...

//என்ன ஏதுன்னு தீர ஆராயாமல் 'இட்ஸ் க்ரேட்'ன்னு ஆரம்பிச்சுருவாங்க.
//

ROTFL :))

இதுக்கு தான் ஆற்காட்டார் ஒரு நிரந்தர தீர்வு காட்டி இருக்காரே. :p

said...

வாங்க அம்பி.

ஆற்காட்டார் சொல்படி ப்ளாக் அவுட் பண்ணுனா பதிவே எழுத முடியாது(-:

said...

எனக்கு ஹெட் ஆபீஸ் ஐரோப்பாவில் மொனாகோவில் இருக்குது. எங்க மேனேஜரோட ஆன்லைன் டிஸ்க்கஷன் போது டைம் செட் பண்ணுறதுதான் பெரும் கஷ்டம்.