Monday, September 22, 2008

உண்மையைச் சொல்லு..... காலண்டர் வச்சுருக்கேதானே?....

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைன்னு புளுகாதே. அதெப்படிச் சொல்லி வச்சமாதிரி ஒரே நாளில் இப்படிப் பூத்துக்குலுங்க முடியுது? இல்லேன்னா ரகசியமொழி உங்களுக்குள்ளே இருக்கா?

செர்ரீப் பூக்கள்

வசந்தம் வந்துச்சுன்னு உள்ளூர் நாள்காட்டியில் சொன்னாலும் உடம்புக்கு இன்னும் குளிர் விட்ட பாட்டைக் காணோம். ஆகஸ்ட் மாசம் கடைசிநாட்களில் 'கொல்'ன்னு 'டாஃபோடில்'கள் பூத்து நிக்குதுங்க. வெள்ளை நிறம் இருக்குன்னாலும் மஞ்சள் கூட்டம்தான் கூடுதல். நம்ம ஊர் வேற தோட்ட நகரம் என்ற அந்தஸ்தோட இருக்கே. அந்தப் பெருமையைக் காப்பாத்திக்கணுமுன்னா மரஞ்செடிகளும் ஒத்துழைக்க வேணுமே.டாஃபோடில்வருசாவருசம் மறக்காமக் கவனம் வச்சு ஒரே மாதிரி ஒரே நாளில் உலகத்து அழகையெல்லாம் கொண்டுவந்து கொட்டிட்டுப்போகும் சூட்சமம் என்ன?நம்ம வீட்டுக்கு எதிர்வரிசையில் நிற்கும் மக்னோலியா மரம்.கிட்டேபோய்ப் பார்த்தால்ரொம்பக் கிட்டேயா?


நாலாவது வீட்டு வாசலில் இன்னொரு மக்னோலியா


இந்தப் பூவுக்கு என்ன பெயர் ? கடற்கரைமணலில், கல்லிடுக்குகளில் வேர்பிடிச்சு நிற்கும் செடியே.... காட்டுப்பூவே நீ யார்?கொஞ்சம் பக்கத்தில் வரவா?
ஹைய்யோ........
குன்றின் சரிவெல்லாம்.....கொண்டாட்டம்தானோ?

42 comments:

said...

சொல்லி வச்ச மாதிரி பூத்துக் குலுங்கிய அழகையெல்லாம் அள்ளி எடுத்து வந்து எங்கள் பார்வைக்குத் தந்தமைக்கு மிக்க நன்றி!

said...

எழுத்தை விட்டுட்டு
ஒளிஓவியம் தீட்ட
ஆரம்பிச்சுட்டீங்களா?
படங்கள் எல்லாமே அருமை!

said...

படங்களெல்லாம் சூப்பரா இருக்கு... ஒரே நாளில் வசந்தம் வந்து விடுமா?... வசந்தகால வாழ்த்துக்கள்!

said...

அருமையான படங்கள் டீச்சர். காணும்போதே கண்களில் குளிர் அடிக்கிறது :)))

said...

மாண்புமிகு ரீச்சர்
தோட்ட நகரம்
நியூசி

ரீச்சர்,

படமெல்லாம் அழகாக இருக்கு. ஆனால் கதை சொல்வதை விட்டு இப்படிப் படம் காட்டுவது ஏமாற்றமாகவே இருக்கிறது. படம் போட எத்தனையோ பேர் இருந்தாலும் உங்களைப் போல கதை சொல்ல யாரும் இல்லையே.

மீண்டும் கதைசொல்லியாக மாற என் விண்ணப்பங்கள்.

இவண்
கொத்ஸ் (வகுப்புத் தலைவன்)
தோட்ட மாநிலம்
புதரகம்

said...

beautiful...

said...

கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள்! பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் எல்லோரும் குளிருக்கு தயாராகும் நேரத்தில் உங்களுக்கு வசந்தமா, வாழ்த்துக்கள்!

said...

மனுசனுக்கே வேண்டாத இடங்கள்ல பறவைகள் வருஷம் தவறாம வந்து போகுதே அதுங்கள என்ன சொல்றது. குளிர்காலம் வந்ததுமே ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் பறவைகள் இந்தியா வந்து டெண்ட் அடிக்கறது எப்படி? அதுதான் இறைவனின் செயல்.

said...

flickr la podunga/ ராமலக்ஷ்மி said...

சொல்லி வச்ச மாதிரி பூத்துக் குலுங்கிய அழகையெல்லாம் அள்ளி எடுத்து வந்து எங்கள் பார்வைக்குத் தந்தமைக்கு மிக்க நன்றி!//


ஆமோதிக்கிறேன்

said...

உங்களுக்கு வசந்தம் வந்தாச்சா? நல்லது அக்கா. இங்கே மரங்கள்ல இருந்து இலையெல்லாம் விழத் தொடங்கியாச்சு. இனிமே ஒரு மாசம் இலைகளைக் கூட்டிப் பெருக்கிறது தான் வேலையே. அப்புறம்? அப்புறம் என்ன? மொட்டை மரத்தைப் பாத்துக்கிட்டு குளிரைத் தாங்கிக்கிட்டு வாழ வேண்டியது தான். அதுக்குள்ள வேனில் முடிஞ்சிருச்சான்னு கடியா இருக்கு.

said...

\\ இலவசக்கொத்தனார் said...
மாண்புமிகு ரீச்சர்
தோட்ட நகரம்
நியூசி

ரீச்சர்,

படமெல்லாம் அழகாக இருக்கு. ஆனால் கதை சொல்வதை விட்டு இப்படிப் படம் காட்டுவது ஏமாற்றமாகவே இருக்கிறது. படம் போட எத்தனையோ பேர் இருந்தாலும் உங்களைப் போல கதை சொல்ல யாரும் இல்லையே.

மீண்டும் கதைசொல்லியாக மாற என் விண்ணப்பங்கள்.

இவண்
கொத்ஸ் (வகுப்புத் தலைவன்)
தோட்ட மாநிலம்
புதரகம்
\\\

ரீப்பிட்டே ;))

அமிரகத்தில் இருந்து ;)

said...

மாஅனோலியாஅ சூப்பர். மனசை அள்ளிக் கொண்டு போகிறது.

அந்தக் குட்டி(ஐய்யோ அது இல்லமா)டாஃபடில் மஞ்சளைக் கொட்டுகிறதே.
இங்க குளிர் ஆரம்பிக்கிறதாம்.
சென்னையில் புரட்டாசி கொளுத்துகிறதாம்:)
என்ன உலகம்டா இது:)

said...

அடடா ஒரு பாட்டு நினைவுக்கு வருது...

பூக்களே வண்ணவண்ணக் கவிதைகள் படிக்கும்..பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்....

கண்ணே கனியமுதே-ங்குற படத்துப் பாட்டு.

ஒங்களுக்கு வசந்தம் தொடங்குது. எங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்ள இலையுதிர்க்காலம் வந்துரும். குச்சிகுச்சியா மரமெல்லாம் நிக்கும். குளுரும்.

ஜோசப் சார் சொன்னாப்புல ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது. ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது.

said...

//அருமையான படங்கள் டீச்சர். காணும்போதே கண்களில் குளிர் அடிக்கிறது :)))
//

மங்களூர் சிவா

said...

டீச்சர் மொத்த அழகையும் ஆண்டவன் உங்க ஊர்லேயே கொட்டிட்டானோ? :)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அள்ளி எடுத்தது சுமார் ஒரு வீதம்தான்.

எங்கெங்கு காணினும் பூக்களடா.....ன்னு பாடணும்.

எங்கூரு உங்க ஊருக்குத் தங்காச்சி. அது தெரியுமா உங்களுக்கு?

சொந்தக்காரங்க ஆகிட்டோம்:-)

said...

வாங்க சிஜி.

எங்கே தீட்டுறது?

இடம் அருமையா இருக்கு. அதனால் படமும் அருமையா விழுந்துருது.

இதுலே என் கை வண்ணம் ஒன்னுமே இல்லை:-)

said...

வாங்க தமிழ் பிரியன்.

ஒரே நாளில் வராதுதான். ஆனால் வசந்தமுன்னு நாட்டு அறிவிப்பு வந்தாத்தானே வெளியில் தலை காமிப்போம். அதுவரை ஹைபர்நேட்.

குளிருன்னாவே எங்கியும் போகாமல் ஆண்ட்டி சோசியலா ஆகிருதே....

said...

வாங்க வெண்பூ.

குளிர் அடிக்குதா? அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க.

கழுத்தைப் பிடிச்சுத் தள்ளினாலும் போகமாட்டேன்னு அடம்புடிச்சு உக்கார்ந்துருக்கும் இங்கத்துக் குளிர்.

said...

வாங்க கொத்ஸ்.

கதைசொல்லி கதை சொல்லியாவே இருக்கணுமா? இருந்துடலாம். பிரச்சனை இல்லை. ஆனால்..... இந்தப் புகைப்படக் கலை வகுப்பு மாணவியாவும் இருந்து தொலைக்கிறேனே.....

அதான்..... இதெல்லாம் ஹோம்வொர்க் கணக்கில் வரவு வச்சுக்கலாம்.

said...

வாங்க அமுதா.

அழகுக்கு அழகென்றே பெயர் வாய்த்திருக்கு!

said...

வாங்க சுந்தர்.

தென் கோளத்தில் இப்பத்தான் குளிர்காலம் முடிஞ்சு வசந்தம் எட்டிப்பார்க்குது.

said...

வாங்க டிபிஆர்.

இந்த இயற்கையை மிஞ்சுன கடவுள் உண்டா?

எல்லாம் அது அது அந்த அந்த நேரத்துலே 'டாண்'ன்னு நடக்குது இல்லையா?

நமக்குமட்டும்தான் கிழமை என்னன்னு பார்க்கவும் காலண்டர் தேவைப்படுது. ஏன்னா.... நமக்குத்தானே ஆறறிவு!!!!

said...

வாங்க ஜீவ்ஸ்.

ஃப்ளிக்கர் கணக்கை அடியோடு மறந்துட்டேன். போட்டால் ஆச்சு.

நன்றிப்பா.

said...

வாங்க குமரன்.

நானும் பக்கத்துவீட்டு மர இலையை எல்லாம் கூட்டிப் பெருக்கினேன்.

மெயிண்ட்டனன்ஸ் ஃப்ரீன்னு ஒன்னுமே இல்லைன்னு புரிஞ்சுருச்சு. நம்ம வீட்டுலே மரம் ஒன்னும் வச்சுக்கலை.

ஸ்ப்ரிங் க்ளீனிங் ஒன்னு பாக்கி இருக்கே(-:

said...

வாங்க கோபி.

எழுதியே ஆகணுமுன்னா..... எழுதிருவேன்.
ஹூம்..உங்க தலைவிதியை யாரால் மாத்தமுடியும்?:-))))

said...

வாங்க வல்லி.

முந்தியெல்லாம் மக்னோலியா சோப் ஒன்னு கிடைக்கும். வாசனை ஆளைத் தூக்குமே. நினைவு இருக்கா?

ஆனா இந்த நிஜப் பூக்களில் வாசம் நஹி(-:

said...

வாங்க ராகவன்.

குளிர்காலத்தை எப்படியாவது ஓட்டிமுடிக்கணும். உங்களுக்குப் பொழுதுபோக்கா அந்த பரமாணு உடைப்பு நிகழ்ச்சிதான் அக்டோபர்லே நடக்குதே உங்க பக்கத்தில்.

மூணுமாசம் பல்லைக் கடிக்கணும். இளரத்தமுன்னா குளிர் தெரியாது.

ஆனால்.....சூரியனைப் பார்க்காமல் மனசுதான் கொஞ்சம் படுத்திரும்.

said...

வாங்க குடுகுடுப்பை.

நீங்கதான் மங்களூர் சிவாவா?

ஒன்னும் புரியலையேப்பா....

said...

வாங்க புதுகை அப்துல்லா.

கொட்டிட்டு அப்படியே விட்டுவைக்காம மார்ச் மாசம் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிருவார் அந்த ஆண்டவர்(-:

said...

படங்க நல்லா இருக்கு.

said...

களங்கமற்ற நிஜ அழகின் தரிசனம் தியானத்துக்கு ஈடு. நியூஸிலாந்து வாழ்க்கையில் அதற்கான வாய்ப்புகள் நிறைய என்று தெரிகிறது. உங்கள் பதிவுகளில் வெளிப்படும் பாசாங்கு இல்லாத மென்மைக்கு சூழலும் ஒரு காரணமோ?

said...

துளசி, மக்னோலியா,வினோலியா,ரெமி
ம்ம்ம்.
வாசனையெல்லாம் அம்மா ஞாபகம்தான்.:)
இப்பக்கூட நாலு வருஷம் முன்னால மதுரைல ரெமி ஸ்னோ பார்த்தேன். வாசனை இல்லை:(

said...

வாங்க குடுகுடுப்பை.

நீங்கதான் மங்களூர் சிவாவா?

ஒன்னும் புரியலையேப்பா....

// ரீப்பீட்டேய் க்கு பதிலா அவர் பேர போட்டேன் டீச்சர்.

said...

வாங்க சிவமுருகன்.

அழகு, அழகா இருப்பதில் என்ன கஷ்டம்?

ரசிச்சதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

சூழல்ன்னு சொன்னால்..... கூட்டம் இல்லாமல் இருப்பதே ஒரு அமைதியா இருக்கு.

மனம் போடும் கூச்சலை அடக்கத்தான் இயற்கை அழகை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கோம்.

அன்ஸ்பாயில்ட் ப்யூடிதான் பல இடங்களில்.

இன்னும் நகர்ப்புறத்தைவிட்டுக் கொஞ்சம் விலகினால்....ஏகாந்தம்தான்.

said...

வல்லி,

ஸ்நோ கிடைக்குதா இப்பவும்!!!

ஹிமாலயாஸ்ன்னு ஒன்னு இருக்குமேப்பா....

said...

என்னங்க குடுகுடுப்பை.

புது மாப்பிள்ளையை இப்படிக் கலாய்ச்சுட்டீங்களே.....

இனிமேல் அவரும் பிஸி ஆகிருவார்.அவரோட மறுபாதி சொல்றதுக்கெல்லாம் 'ரிப்பீட்டேய்' போடணுமேப்பா.:-))))

said...

நாங்க போட்டோவில் பார்ப்பதை
நீங்க
நேர்லயே பாக்குறீங்கன்னு
நினைக்கும்போது
கொஞ்சம் பொறாமையா இருந்தாலும்
மகிழ்ச்சியை பகிர்ந்துக்கிட்டீங்கள்ல!
அதனால்...
சூப்பர்!

said...

சுரேகா,

எல்லாம் 'நான் பெற்ற இன்பம்' தான்.

மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிட்டா அது பலமடங்கு கூடுதில்லே!!!!

said...

ayyoo.. beauty..:-)

I am very upset ... I thought I saw the best magnolia flowers in Mississipi, but .. but .. these are magnificent..:-)

said...

வாங்க வெற்றிமகள்.

பொட்டானிக்கல் கார்டனுக்குப் போயிருதால் இன்னும் அழகான பூக்கள் படம் எடுத்துருக்கலாம்.
நான் நம்ம தெருவில்மட்டுமே எடுத்தேன்ப்பா.

ரசிச்சதுக்கு நன்றி.