Monday, September 29, 2008

வாங்க வாங்க. இந்த வருசத்துக்கான கொலு வச்சாச்சு.

எல்லாரும் ஒன்பது இரவுகள் கொண்டாடும் நிலையில் வழக்கமாப் பத்து இரவுகள் கொண்டாடும் வீட்டில் இந்த வருஷம் பனிரெண்டு இரவுகளாம். விஜயதசமிப் பூஜை இந்த முறை விஜயதுவாதசிப் பூஜையாக மாறுகின்றது.

கொலுப் படிக்கட்டு வைக்க இந்த முறை கூடுதலா ரெண்டு கைகள். மகள் வீட்டில் இருந்து இங்கே வந்த ரெண்டு மர ஷெல்ஃப்களைப் பார்த்ததும் ஐடியா மனசுக்குள்ளே வந்துருச்சு. கொலுவுக்கான வழக்கமான இடம் பத்தாது,ஆனா அங்கே இருக்கும் சோஃபாவை நகர்த்துனா(??) அலங்கரிச்சுடலாம். எல்லாம் அளந்து பார்த்துருவொம்லெ.

அப்படியே நடுங்கிட்டார் கோபால். இந்த சோஃபாவை என்னாலே நகர்த்த முடியாது. தெரியும்....எனக்கு நல்லாவே தெரியும். 'வெஜிடேரியன் பலமில்லை':-) அன்னிக்கு(போனவாரம்) 'யாங்' வந்துருந்தப்பவே உதவிக்கு வச்சுக்கிட்டு இதையெல்லாம் செஞ்சுருக்கலாம். சொல்லவும் செஞ்சேன். அடுத்தவாரம்தானே..... நான் எல்லாத்தையும் செட் பண்ணித்தரேன்னு வாக்குறுதி.

இப்ப 'செகண்ட் பெஸ்ட்' என்னன்னு பார்த்தால் ஷோகேஸ் அருகில் இருக்கும் இடம் ஓரளவு சரியாகும். ஏற்கெனவே இருக்கும் அலங்காரப் பொருட்களுடன் கொஞ்சம் கூட்டமாத் தெரியும். இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் ஆகுமா?

இந்த முறை வீடியோ காஸெட்டுகளுக்கு வேலை இல்லையா? ஊஹூம்....அதெப்படி? அது இல்லாம வேலை நடக்காது. இந்த ஷெல்ஃப் மூணு படிகள்தான். நமக்கோ குறைஞ்சது அஞ்சு வேணும். ஆகி வந்த நம்பர். வீடியோ காஸெட்கள் வச்சு உயரம் சரிபார்த்தாச்சு. ஐடியா நல்லாவே லட்டாட்டம் ஒர்க்கவுட் ஆகுதே. பக்கத்துலே ஷோகேஸ் கண்ணாடிக்கதவு இருக்கு. காஸெட் நழுவுனா ஆபத்தாச்சே! 'கவலையை விடு. பக்காவாப் பொதிஞ்சு தரேன்'னு உக்காந்தார். எவ்வேழு காஸெட்கள். அதுக்கேத்த அளவில் தபால்பெட்டிக்கு வந்துசேரும் உள்ளூர் ஓசிப் பேப்பர். சரியாவருதான்னு பக்கத்துலேயே இருந்து கவனிக்க ஒருத்தரை நியமிச்சேன்:-)

கீதாவேற இன்னிக்கு கொலு இல்லைன்னு எழுதி இருந்தாங்க வேறொரு குழுமத்தில். நம்ம கேலண்டர் சொல்லுது நவராத்திரி ஆரம்பம்ன்னு. சந்தேகமே வேணாமுன்னு அம்மாவாசைக்கு முன்னேயே முந்திரிக்கொட்டையாட்டம் கொலுப்படி அடுக்குன அன்னிக்கே ஒரு பொம்மையை சாஸ்த்திரத்துக்குன்னு எடுத்து வச்சுட்டொம்லெ.பலகை பக்கவாட்டில் தெரியாமல் மறைக்கவும் ஒரு யானை வேலைப்பாடு செஞ்ச சுவரலங்காரத்துணி கிடைச்சது.


இந்தவருசம் கொலுவுக்கான தீம் வழக்கம்போல் யானை & பூனை.
யானைமுகத்தோனும் கலந்துகட்டி அடிச்சு ஆடறார்.அஞ்சு படிக்கட்டில் முதல் படி:

மரப்பாச்சியில் ஆவாஹனம் செஞ்ச விஷ்ணு & லக்ஷ்மி.இரண்டாம் படி : பிள்ளையார்ஸ் & தேவதைகள்
மூன்றாம் படி: யானைகள்

நாலாவது

நாலாம் படி : யானைகள்
அஞ்சாம் படி: பூனைகள். எகிப்தின் பூனைச்சாமிகள்.
தரையில்: குழந்தைகளுக்கான புத்தகங்கள்( மார்ஸிபானில் செஞ்சது)
பக்கவாட்டில் யானைகள் வரிசை.பண்டிக்கைக்கு அநேகமாச் சுண்டல் செய்யும் உத்தேசம் இப்போதைக்கில்லை. பழங்களே போதுமுன்னு சாமி சொல்லிட்டார். சரியா வந்துருக்காம். இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சது.
பொம்மைகள் அடுக்குனது ரொம்பக் களைப்பான வேலையாம்! சாமிக்குப் பின்னால் போய் ஒரு குட்டித்தூக்கம்.

நீங்க வந்தீங்கன்னா சுண்டல் ஐடியாவை மறுபரிசீலனை செய்வதாக உத்தேசம்.

கொலு ஆரம்பமாயிருச்சு. ஸ்டார்ட் ம்யூஜிக்......

எல்லாரையும் அன்புடன் அழைக்கிறேன். கொலுவுக்கு வாங்க.

அனைவருக்கும் பண்டிகை & விழாக்கால வாழ்த்து(க்)கள்.
நண்பர்களின் விருப்பத்தை நிறைவேத்தணுமே......சுண்டல் ( இன்னிக்குள்ளது) படம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆமாம். இது ப்ளாக் ஐ பீன்ஸ் சுண்டல்தான். குளோஸப்புலே பார்த்தால் பெயர்ப்பொருத்தம் சூப்பரா இருக்கு. கண்ணும் அதைச் சுற்றி இருக்கும் இமைகளும் அட்டகாசம் இல்லே!!!!!!

66 comments:

said...

துளசி அம்மா,

இப்பதான் கொண்டாடிய மாதிரி இருந்தது, அதற்குள்ளே ஆண்டு ஓடிப்போச்சா ?

இரண்டு ('G' க்கள்) பேரு கருப்பு நிறத்தில் காட்சி தருகிறார்களே, கறுப்பு வண்ணம் உங்க வீட்டு சீருடையா ?

said...

எங்களுக்கு நாளை தான் ஆரம்பமாம் :)
கொலு வைக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் இல்லை.
ஆனால் மிக சுவாரசியமாக உள்ளதால் எனக்கு ஆசை உண்டு.

said...

வந்துட்டோம் டீச்சர்!

சுண்டல் இருக்குல்ல!

said...

கொலு பாட்டு மட்டும் மிஸ்ஸிங்... அதையும் பாடி ஒரு சுண்டல் படத்தையும் போட்டிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்

said...

நல்லா கொண்டாடுங்க ரீச்சர்..

சுண்டலும், பொரி கடலையும் அங்க கிடைக்குமா? அதுக்கு என்ன பண்றீங்க..?

பாவம் கோபால் ஸார்.. இப்படியெல்லாமா மனுஷனை கஷ்டப்படுத்துறது..?

said...

போங்க டீச்சர் சுண்டல் இல்லாம அது என்ன கொலு?

said...

ஆ இந்தா வந்துட்டேன்.. நீங்க கேசட் ஆ நான் புக்ஸ் ...நேத்து சாஸ்திரத்துக்கு ஆரம்பிச்சாச்சு இன்னைக்கு மகளுக்காக வெயிட்டிங்க் அவ வந்தாதான் மேற்கொண்டு..இந்த முறை நாங்க சபரியோட புத்தக அலமாரியை மேல்படியா உபயோகிக்க இருக்கோம்..

said...

சரியான ஜூப்பர்வைசர்.

கொலு அருமையாக உள்ளது.

ஒரு சந்தேகம்
கொலு எல்லொரும் வைக்கலாமா.
esp. non-brahmins.

said...

ஒவ்வொரு வருடமும் நானும் கொலு வைப்பேன். இன்றுதான் ஊரிலுருந்து வந்த + பல காரணத்தினால் கடைசி 3 நாள் மட்டும் கொலு வைக்கப்போறேன்.

நீங்க வெச்சிருக்கும் கொலு சூப்பர்.

சுண்டல் பத்தி பரிசீலனை செய்ங்க. அப்படியே கொஞ்சம் ஸ்வீட்டும் இருந்தா வேணாம்னு சொல்ல மாட்டேன். :)

said...

சுண்டலுக்காக வரலாம்னு இருந்தேன். ம்ம்..ம்.. இப்ப என்ன பண்றது? நீங்களே கொண்டாடிக்கங்க...

said...

ஆனையும் பூனையுமா அட்டாகாசமா இருக்கு கொலு.

//தரையில்: குழந்தைகளுக்கான புத்தகங்கள்//

சரஸ்வதி தேவிக்கு மரியாதை.

//சுண்டல் ஐடியாவை மறுபரிசீலனை//

செய்யவும்:)!

சூப்பர்வைஸர் பாவம்! கடைசியிலே அலுத்துக் களைத்து கண் அசந்தே போனார், அதுவும் யாரும் டிஸ்டர்ப் செய்திடக் கூடாதுன்னு சரியான இடத்தில் :))!

said...

கொலு சூப்பர்
//போங்க டீச்சர் சுண்டல் இல்லாம அது என்ன கொலு?//

ரிப்பீட்டேய்

said...

எங்க வீட்டுலயும் கொலு வைச்சாச்சு ஏழு படி. "அமாவாசைக்கு படியும் இரண்டு பொம்மைகளும் வைச்சிடு. செவ்வாய்க்கிழமையிலிருந்து கொலு தொடங்கு"ன்னு மாமியார் சொன்னாங்க. மறுக்காது செய்தாச்சு. வீட்டில் இருக்கும் மேசைகள் அவை மேல் அட்டைப் பெட்டிகள் = படிகள்:)

நீங்க வந்தால், சுண்டலும் ஸ்வீட்டும் (ஸ்வீட்டனர் போட்ட இனிப்பும்) கிடைக்கும். வாங்க!

// AMIRDHAVARSHINI AMMA said... ஒரு சந்தேகம்// :-(((( குழந்தைகள் நம் பண்பாடு கற்றுக் கொள்வதற்காகச் செய்வது - இதிலே என்னங்க சாதி பேதி? உங்க‌ளுக்கு இஷ்ட‌ம் இருந்தா தொட‌ங்கிடுங்க‌.

said...

வாழ்த்துக்கள் டீச்சர் ;)

said...

கொலு ரொம்பப் பிரமாதமா வந்துருக்குங்க. வாழ்த்துகள்.

பலர் Goluன்னு உச்சரிப்பாங்க. அது தவறு. Koluன்னுதான் உச்சரிக்கனும். கொலுவீற்றிருந்தான்னு சொல்வாங்கள்ள. அதே மாதிரி Koலுசை Goலுசுன்னும் தப்பாச் சொல்றாங்க.

எல்லாம் நல்லா அமைஞ்சிருக்கு டீச்சர்.

போன வருசந்தான் முருகனையும் மயிலையும் விட்டுட்டீங்கன்னு பாத்தேன். இந்த வருசமும் விட்டுட்டீங்களே!

said...

மார்சிபான் புத்தகங்கள்,

said...

ரீச்சர், சூப்பர்வைசர் நல்லா வேலை பார்க்கறாரு!! :))

said...

துளசி,
ஐந்து படிக்கும் நிறைவா பொம்மைகள் வச்சிருக்கீங்கப்பா.
தாயாரும் பெருமாளும் சூப்பராக் காட்சி அளிக்கிறாங்க.
அந்த தேவதைகளின் அழகே அழகு.
ஜிகேயும் கோபாலும் உழைத்த்தது வீண் போகலை.

said...

அமிர்தவர்ஷினி அம்மா, கொலு எல்லோரும் வைக்கிற வழக்கம்தான்பா.
நல்லா வைங்க. வர்ஷினி எஞ்சாய் செய்வா.

said...

அன்பின் துளசி

அருமை அருமை - கொலுவும் அருமைஇ - அதனைப் பற்றிய துளசி டச்சுடன் கூடிய பதிவும் அருமை

கோபாலைக் கூட விட வில்லையே - வேலை வாங்கி விட்டீர்கள்


சுண்டல் இல்லையா - ஸ்பெசலா போட்டு ஒரு பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

said...

வாங்க கோவியாரே.

நியூஸிக்கு தேசிய வர்ணம் கருப்புத்தான்.

அதான் எல்லாரும் அநேகமா எப்பவும் கருப்பில் காட்சி அளிப்போம்.

அதுவும் பார்ட்டி நடக்குதுன்னா ஒரே சபரிமலைக் கூட்டமா இருக்கும்!

said...

வாங்க தூயா.

பழக்கம் இருந்தால்தான் வைக்கணுமுன்னு இல்லைப்பா. பிடிச்சிருக்கு. மனமகிழ்ச்சியைத் தருதுன்னா யார் வேணுமாலும் வைக்கலாம்.

said...

வாங்க சிபி.

சுண்டல் வேணாமுன்னுதான் முதலில் நினைச்சேன். அப்புறம் மக்கள்ஸ் வேண்டுகோளை முன்னிட்டு அதைமட்டும் ஏன் விட்டு வைப்பானேன்னு செஞ்சுட்டேன்.

நேத்து வேர்க்கடலை (மைக்ரோவேவில் செஞ்சாச்சு) சுண்டல்.

இன்னிக்குக் காராமணி.

said...

வாங்க நான் ஆதவன்.
நம்ம பதிவுலக நட்புகள்தான் வாய்ஸ்மெயிலில் பாடி அனுப்புவாங்க. இன்னும் வல்லியிடமிருந்து 'பாட்டு' வரலை.

சுண்டல் வந்தாச்சு மெனுவில்.
படம் போட்டுறலாம். பிரச்சனை இல்லை:-)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

சுண்டலாக் கிடைக்காது. நாம்தான் கொண்டைக்கடலையை வாங்கி ஊறவச்சு சுண்டல் செஞ்சுக்கணும்(-:

பொரிகடலை எல்லாம் இப்பத் தாராளமாக் கிடைக்குது ஒரு கடையில்.

வெத்தலை பாக்குக் கூட பாட்டிகள் உரலில் இடிச்சுத் தின்னும் பக்குவத்தில் கிடைக்குதுப்பா.

said...

வாங்க புதுகை அப்துல்லா.

டோண்ட் ஒர்ரி.....சுண்டல் வந்தாச்சு:-)

said...

வாங்க கயலு.

மாதினியின் புத்தகத்தை வச்சுட்டா அப்புறம் 10 நாளுக்குப் படிக்க வேணாமா?

சீக்கிரம் படத்துடன் பதிவைப் போடுங்க.
தக்ஷின்சித்ரா ஸ்பெஷல்:-)

said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மக்கள்.

தாராளமா வைக்கலாம்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நேற்றைய ஆரம்பத்தில் ஒரு இனிப்பும் இருந்துச்சு. மூங்தால் ஹல்வா. இதைத்தானே நம்ம பக்கத்தில் 'அசோகா'ன்னு சொல்றோம்.

Gits நல்லாவே இருக்கு. வேர்க்கடலைச் சுண்டலும் ஆச்சு.

said...

வாங்க தருமி.
இப்படியெல்லாம் சொல்லப்பிடாது. பாருங்க, சுண்டல்களைச் சேர்த்தாச்சு. அதுவும் உங்களுக்காகவே.

சீக்கிரம் கிளம்பி வாங்க.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

oops....தரையில் உள்ள தாம்பாளத்தில் வச்சு ஏந்தியிருக்கேன் புத்தகங்களை. கன்னத்தில் போட்டுக்கவா....அப்புறம் படிப்பு வராமப் போயிறப் போகுது நம்ம ஜிகேவுக்கு!!!!

த ரிட்டர்ண் ஆஃப் த சுண்டல் ன்னு ஒரு பதிவு எழுதணுமா?

said...

வாங்க தெய்வசுகந்தி.

பரிசீலிக்கப்பட்டு
வெற்றி அடைந்தது
சுண்டல்:-)

said...

வாங்க கெக்கேபிக்குணி.

ஸ்வீட்னர் போட்ட இனிப்பு சூப்பரு:-)

இங்கே ரெண்டுபேருக்காக மெனெக்கெடணுமான்னு இருந்துடறதுதான் சிலசமயம்.

சாதியும் வேணாம்.*தியும் வேணாம்.:-)

said...

வாங்க கோபி.

நன்றிப்பா.

said...

வாங்க ராகவன்.

நான் எங்கேப்பா முருகனை விட்டேன்? கடைசிப்படியில் மகிஷாசுரமர்த்தினிக்கு இடப் பக்கம் சரஸ்வதியும் முருகன்& மயில். வலப்பக்கம் லக்ஷ்மி, புள்ளையார் இருக்காங்களேப்பா.

தனியா முருகன் சிலை இல்லை. ஒன்னு வாங்கிக்கணும்.

said...

வாங்க வல்லி.

பாட்டுப்பாடி வாய்ஸ் மெயிலில் அனுப்புங்கப்பா. நீங்க பாடினால்தான் உண்டு.

ஆமாம் கோபால் & ஜிகே ரொம்பவே 'உழைச்சாங்க' !!!!!

நேத்து சீரியல் லைட்ஸ் போட்டுக் கொடுத்தார்ப்பா. எங்கியோ பார்த்துக்கிட்டு வந்து மார்ஸிபான் தட்டில் ஒரு தட்டல். எகிறிப்போச்சுல்லே, புக்வொர்ம் தலை!

நமக்காக ப்ளூடாக் கண்டுபிடிச்சவ மகானுபாவன் நல்லா இருக்கணும்.

said...

வாங்க சீனா.

இந்த வருசம்தான் முதல்முதலா கொலுப்படிக்கட்டு கட்ட உதவி இருக்கார். அதுவும் உள் ஊரில் இருந்ததால்.

வேலை வாங்கிட்டேன்னு பழி சுமத்தக்கூடாது ஆமாம்:-)

said...

வாங்க கொத்ஸ்.

சூப்பர்வைசர் தினம் அஞ்சாறுமுறை எல்லாம் சரியா இருக்கான்னு சூபர்வைஸ் பண்ணிக்கிட்டே இருக்கார். நடுநடுவில் கொஞ்சமா ஓய்வு.

ஆனால்.....சுண்டலிடம் இருந்து தப்பிச்சுடறார்:-))))

said...

அசத்தலான கொலு.நான் இந்த ஆண்டு வாஷிங்டனில் என் மகள் வீட்டுக்கு வந்திருப்பதால் கொலு மிஸ்ஸிங்.
உங்க பதிவை பார்த்ததும் கொலு வைத்த திருப்தி ஏற்பட்டுவிட்டது

said...

அடடே...... வாங்க காஞ்சனா.
வராதவுங்க வந்துருக்கீங்க!!!!!
நலமா?

எல்லாம் கொலுவின் மகிமை:-)))))

நானும் உங்க சமையலைப் படிச்சே சாப்பிட்டத் திருப்தி அடைஞ்சுப்பேன்.

said...

இதுவரை நான் பார்த்து மற்றும் கேள்விப்பட்ட வரையில்
பிராமணர்களே கொலு வைப்பார்கள். நான் சென்று மற்றும் பங்கும் கொலுவில் பங்கும் பெற்றிருக்கிறேன்.
இப்பொழுது என் வீட்டில் என் பெண்ணுக்காக கொலு வைக்கலாம் என்று ஆசையாக இருந்த காரணத்தினால் என் மாமியாரிடம் கேட்ட பொழுது நாமெல்லாம் வைக்க கூடாதுமா. அதுக்கெல்லாம் பழக்கம் இருக்கனும் ரொம்ப சுத்த பத்தமாக இருக்கனும்னு சொன்னாங்க.
அதனாலதான் நான் அப்படி கேட்டு இருந்தேன். மற்றபடி வேறு எந்த அர்த்தமும் இல்லை.

துளசி அம்மா, வல்லி அம்மா இருவரின் பதிலுக்கும் நன்றி.

கெக்கேபிக்குணி நீஙக தான் கொஞ்ஜம் மனசு கஷ்டப்படுத்திட்டீங்க.

said...

பந்திக்கு முந்துன்னு சொல்வாங்களே, சுண்டல் இன்னும் இருக்கா டீச்சர்.

said...

என்னங்க அமிர்தவர்ஷினி அம்மா(அ.அ) இதுக்கெல்லாம் மனக்க்ஷ்டப்படலாமா?

டேக் இட் ஈஸி......

said...

வாங்க குடுகுடுப்பை.

சுண்டல் தாராளமாவே இருக்கு நோ ப்ராப்ளம்:-)

said...

நண்பர்களே,
சுண்டல் விநியோகம் தொடங்கிருச்சு.

கண் இமைகளுடன்
கொட்டக் கொட்ட முழிக்கும்
கறுப்புக் கண் காராமணி :-)

said...

சுண்டல் ரெடியா....இதோ வரேன்

கொலு அருமையாக இருக்கு

:)

said...

//ஆனால்.....சுண்டலிடம் இருந்து தப்பிச்சுடறார்:-))))//

சுண்டலிடம் இருந்தா சுண்டெலியிடமிருந்தா? :)))

said...

வாங்க பரத்.

உங்களுக்கில்லாத சுண்டலா?

வாங்க வாங்க.

said...

வாங்க கொத்ஸ்.

கொலுவில் ஒரு சுண்டெலி வச்சுருக்கேன். கலர்லெஸ். அதான் கோகிக்குக் கண்ணுலே படலை:-)))

said...

டீச்சர், கொலு சூப்பர். ஒரு சுண்டல் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

said...

ஹலோ மேடம்,சுவையான பதிவுகளை வழங்குறிரிர்கள், வாழ்த்துக்கள்.நானும் உங்கள் அண்டை நாட்டுக்காரி தான்.

said...

//சரியான ஜூப்பர்வைசர்.

கொலு அருமையாக உள்ளது.//

rippiteyyyyyyy, 3 நாளா வர முடியாமல் போச்சு! எல்லாம் இணையப் பிரச்னை தான், நேத்திக்குத் திறக்கவே அடம் உங்க வலை, அப்புறம் பார்த்தா மீன் தொட்டி அழுத்தி இருக்கும் போல! இன்னிக்கு வந்துட்டோம்ல! சூபர்வைசர் சரியான ஆளுதான்! :)))))

//ஒரு சந்தேகம்
கொலு எல்லொரும் வைக்கலாமா.
esp. non-brahmins.//

வேறே யாரு என்ன பதில் சொல்லி இருக்காங்கனு தெரியலை, எல்லாரும் கொலு வைக்கலாம், நான் சின்ன வயசில் இருந்தே பார்த்துட்டு இருக்கேன், பல்வேறு இனத்தவரும் வைக்கும் கொலுவை. போயிட்டும் வந்திருக்கோம்.

said...

//"அமாவாசைக்கு படியும் இரண்டு பொம்மைகளும் வைச்சிடு. செவ்வாய்க்கிழமையிலிருந்து கொலு தொடங்கு"//

இதே, துளசி, நான் சொன்னது. அமாவாசைக்குப் படி கட்டி இங்கேயும் கொலு வைச்சாச்சு. ஆனால் தொடங்கினது என்னமோ செவ்வாயில் இருந்து தான்.

said...

அருமையான கொலு.

நான் அறிய கொலுவில் புத்தகங்கள் வைத்த முதல் ஆள் நீங்க தான். அதற்குப் பாராட்டுக்கள்.

நான் அந்தப் படத்தைப் பெரிது பண்ணிப் பார்க்கும் போது அருகில் இருந்த ஜூனியர், "ரத்னேஷ்க்கு, ரத்னேஷ்க்கு" என்று கணினித் திரையைப் பறிக்க ஆரம்பித்து விட்டான். உங்களிடம் தான் டேமேஜ் க்ளெய்ம் பண்ண வேண்டும்.

said...

கொலு சூப்பர் ரீச்சர். சுண்டல் இல்லைன்னா என்ன, பழங்கள் வாங்கிட்டு போறேன் :)

said...

வாங்க ப்ரசன்னா.

வந்து ஒரு பாட்டுப் பாடுங்க. இப்ப எல்லாம் கொலு,நவராத்ரி எல்லாம் பெண்களுக்களுக்கு மட்டுமே ஆன பண்டிகை இல்லையாக்கும். நாங்க உங்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுத்தாச்சு:-))))

சுண்டல் ரெடி:-)

said...

வாங்க பானு.

அண்டைஅசலையும் கொலுவுக்கு அழைக்கணும். அவுங்களும் பிகு பண்ணிக்காம வரணும் என்ற நியதியைக் காப்பாத்திட்டீங்க.

ஆஸியில் எங்கேன்னு சொல்லுங்க.

said...

வாங்க கீதா.

இணையப் பிரச்சனையைப் பாராட்டாமல் வருகை தந்ததுக்கு நன்றிப்பா.

உங்க கொலுப் படிக்கட்டை(!!) பார்க்கும் ஆசை கூடிக்கிட்டே வருது:-)

அமிர்தவர்ஷினி அம்மாவுக்குச் சொன்ன பதில் சூப்பர்.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

எங்க லைப்ரெரியில் ( குழந்தைகளுக்கானது) பொன்விழா கொண்டாடுனப்ப கேக் டெகரேஷனா இருந்த புத்தகங்கள் அவை. மார்ஸிபானில் செஞ்சது. அசல் புத்தகங்களின் அட்டைப் படங்களையே இதுக்கும் வரைஞ்சுதந்தாங்க.
நிறம் உட்பட அச்சு அசல். ஆனா மினியேச்சர். திறந்துள்ள பக்கங்களில் இருக்கும் படங்களும் அந்த ஒரிஜனல் புத்தகத்தில் அந்தப் பக்கங்களில் இருக்கும் படமும் எழுத்துக்களும். ரொம்பவே கவனம் எடுத்துத் தயாரிச்சு இருந்தப் புத்தகங்களைத் தின்ன மனசு வருமா? யாருக்காவது தின்ன ஆசை இருந்தாலும் நான் விட்டுருவேனா? :-))))

விழாவில் கேக் வெட்டியதும்( ஓரமாத்தான் வெட்ட விட்டேன்) மேலே இருந்த அலங்காரத்தையெல்லாம் எடுத்து ஒரு டிஸ்ப்ளே செஞ்சு லைப்ரெரியில் வைக்கணுமுன்னு திட்டம் போட்டுருந்தேன்.

இந்த லைப்ரெரி ஆரம்பமுதலே வாலண்டியர்களால் மட்டுமே நடத்தப்பட்டு இருக்கு. இதன் கடைசி காலக்கட்டங்களில் நான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன் (13 வருசமா). சிட்டிக்கவுன்ஸில் எங்க ஏரியாவில் ஒரு புதுக் கிளை ஆரம்பிச்சாங்க. ரெண்டு லைப்ரெரிக்கும் 500 மீட்டர் தூரம்தான். அதனால் எங்களுக்கு ஃபண்டிங் இல்லைன்னதும் வேற வழி இல்லாம மூடவேண்டியதாப் போச்சு. அந்த இடத்தை ஒரு Toy Libraryக்குக் கொடுத்துட்டோம்.

இங்கே பாருங்க.</A

கட்டிடத்தைக் காலி செஞ்சப்ப, மார்ஸிபான் புத்தகங்கள் எனக்கே அன்பளிப்பாய்க் கிடைச்சது. (அதுக்குத்தான் முன்னாலே இருந்தே அடிபோட்டுக்கிட்டு இருந்தேனே!)

இங்கே ஒரு தாம்பாளத்தில் வச்சு அலங்கரிச்சாச்சு. நம்ம ஷோகேஸ் ஐட்டமாவும் இருக்கு. வருசாவருசம் கொலுவுக்கும் வந்துருது:-))))


டேமேஜ் க்ளெயிம் பண்ணிக்குங்க. பிரச்சனை இல்லை.
ஆனா ஒரே ஒரு கண்டிஷன். நேரில் வந்து வசூலிச்சுக்கணும்,அதுவும் டேமேஜ் செஞ்சவரோடு:-))))

said...

வாங்க மதுரையம்பதி.

உலர்ந்த பழங்களும் ரெடி.

காஞ்சுபோன வாழைப்பழமா? :-))))

said...

தாமதமா வந்தா படத்தில இருக்கும் சுண்டல் குடுத்துடமாட்டீங்களே துளசி...

பாட்டு பாடிட்டு கிளம்பறேன்.
... பழம் தரூவீங்கல்ல்ல்ல்ல...

யானையும் பூனையும் புள்ளையாருமா... அதுவும் கொலுக்கு பாதுகாப்பா சைடிலும் அணிவகுத்துட்டு யானைங்க சூப்பரா யானையாரம்மா...

(டீச்சரம்மாவுக்கு புது பட்டம் உதயம். உபயம் - மதுமிதா)

said...

சொதப்பிடுச்சே துளசிம்மா... இந்த போன கமெண்ட் போடறதுக்குள்ளே மூணு தபா ரீ ஸ்டார்ட் செய்து வரவேண்டியதா போச்சு. துளசின்னு வந்துடுச்சே.

said...

வாங்க மது.

கவிதாயினி சொன்னதுக்கு மறுபேச்சுப் பேசலாமா?

ஆமாம். அது என்ன 'அம்மா'வை விட்டதுக்கு அப்படி ஒரு பதற்றம்?

அதிலும் சோகக்குறி ஒன்னையும் காணொமே!!!!

ச்சும்மா உலுலுலுலுவா? :-)))))

இன்னிக்கு துர்காஷ்டமி. அதானால் 'ஏய்'ன்னு காளி ஆடிண்டு இருக்காள். பழைய சுண்டல் உங்களுக்கு இல்லை. புதுசா(????) உலர்த்திய பழங்கள்:-)

said...

போன வருடத்தில் நாங்க எல்லாம் காஃப்பி ஷாப்பில் உட்கார்ந்து கலாட்டா பண்ணிட்டு இருந்தப்போது , தெரிஞ்ச ஆண்டி ஒருவர் தயங்கி தயங்கி வந்து " கொலுவுக்கு வாங்கம்மா" என்று சம்பிரதாயத்துக்கு எங்களை அழைக்க, என் ப்ரெண்ட் ஒருத்தி "சுண்டல் தருவீங்கல ஆண்டி?" என்று கேட்டு மானத்தை வாங்கினால். அந்த ஆண்டி இந்த ஆண்டு கூப்பிடவில்லை :(

உங்க வீட்டு கொலு அழகா இருக்கு, முக்கியமா உங்க கோகி ரொம்ப க்யூட். மார்சிபான் சாக்லெட்டுகள் பக்கத்தில் இருக்காரா, சாப்பிடமாட்டாரா?

said...

வாங்க க.ஜூ.

கோகி இனிப்பு சாப்பிடமாட்டார். டயட் கண்ட்ரோல். அவருக்கு சக்கரை இருக்கு உடம்பிலே. (நெசமாத்தான் சொல்றேன்)

said...

//இந்த முறை வீடியோ காஸெட்டுகளுக்கு வேலை இல்லையா? ஊஹூம்....அதெப்படி? அது இல்லாம வேலை நடக்காது. இந்த ஷெல்ஃப் மூணு படிகள்தான். நமக்கோ குறைஞ்சது அஞ்சு வேணும். ஆகி வந்த நம்பர். வீடியோ காஸெட்கள் வச்சு உயரம் சரிபார்த்தாச்சு. ஐடியா நல்லாவே லட்டாட்டம் ஒர்க்கவுட் ஆகுதே. பக்கத்துலே ஷோகேஸ் கண்ணாடிக்கதவு இருக்கு. காஸெட் நழுவுனா ஆபத்தாச்சே! 'கவலையை விடு. பக்காவாப் பொதிஞ்சு தரேன்'னு உக்காந்தார். எவ்வேழு காஸெட்கள். அதுக்கேத்த அளவில் தபால்பெட்டிக்கு வந்துசேரும் உள்ளூர் ஓசிப் பேப்பர். சரியாவருதான்னு பக்கத்துலேயே இருந்து கவனிக்க ஒருத்தரை நியமிச்சேன்:-)//

இதை விளையாட்டா வாசிச்சாலும் செய்யும்போது மனசு எவ்வளவு வலிச்சிருக்கும்னு உணர முடியுது மேடம்..:-((