Wednesday, September 17, 2008

சென்னை, தமிழ்நாட்டிலேயா இருக்கு?

மூச்சுக்கு முன்னூறுதரம், தமிழ்நாடு, தமிழ்ன்னு முழங்கற ஊரில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் தமிழுக்குச் சான்ஸே இல்லையாமே.....

சமீபத்தில் கோபால் சென்னை வழியா ஓமான் போயிருந்தார். சிலமணி நேரமுன்னாலும் ராத்திரி எப்படியும் ஒரு தங்கல் சென்னையில். அதிகாலையில் ஆறுமணிக்கு மறுபடியும் செக்கின் செஞ்சுட்டு, லவுஞ்சுக்குள்ளே போயிருக்கார்.

யாருமே இல்லாத இடத்தில் காட்டுக்கத்தலா ஒரு வெஸ்டர்ன் ம்யூஸிக் முழங்கிக்கிட்டு இருக்காம். காலங்கார்த்தாலே இனிமையா ஒரு தமிழ்ப்பாட்டோ, இல்லை ஏதாவது, வீணை, புல்லாங்குழல், வயலின் இப்படி வாத்திய சங்கீதமோ போடக்கூடாதா? இவர் போய் கேட்டதுக்கு அங்கிருந்த பொண்ணு திருதிருன்னு முழிக்குதாம். வச்சிருக்கும் குறுந்தட்டெல்லாம் மேல்நாட்டு இசைமட்டும்தானாம்.

தொலையட்டும், ஒன்னும் இல்லைன்னா அதை ஆஃப் பண்ணி வச்சாலும் போதுமுன்னு நிறுத்தச் சொல்லி, கொஞ்ச நேரம் அமைதியாவாச்சும் இருக்கலாமுன்னு ஆச்சாம். எதாவது காலை உணவு எடுத்துக்கலாமுன்னு போனால் அங்கேயும் சாண்ட்விச், மஃப்பின், ம்யூஸ்லி, க்ரஸாண்ட் மட்டுமே. வயித்துக்கு ஆபத்தில்லாத ஒரு இட்லியோ தோசையோ வைக்கக்கூடாதான்னா அதுக்கும் மிரண்டுபோய் முழிக்குதாம்ப்பா அந்தப் பொண்ணு.

இங்கே வரும் ஆட்களெல்லாம் இதைத்தான் சார் விரும்பித் தின்னுறாங்கன்னு கூடவே ஒரு கொசுறுத் தகவல். தமிழ்நாட்டுலே உள்ளூர் சாப்பாடு, இசைன்னு இருந்தா..... விலைபோகாதா? மற்ற நாடுகளில் இருக்கும் லவுஞ்சுகளில் எல்லாம் அந்தந்த ஊர் மணம்தானே எல்லாத்திலும்..... அதென்ன இந்தியாமட்டும் அமெரிக்காவா ஆகிருச்சு?

எல்லாத்துலேயும் ஆங்கில மோகம் இருக்குன்னா என்னத்துக்குத்தான் சுதந்திரம் வாங்குனாங்களாம்? என்னமோ போங்க.

விமானநிலையத்துப் புத்தகக்கடையில் மட்டும் ஒரு சில தமிழ்ப்புத்தகங்கள் இருக்குன்னு பார்த்துட்டு, எனக்கொரு எஸ்.ரா வாங்கி வந்தார். நெடுங்குருதி.
பகல்கொள்ளையா விலை. பதிப்பகம் வச்ச விலையை மறைச்சு அங்கே 580 ரூபாய்ன்னு ஒட்டிவச்சுருக்கு. இந்த அதிகப்படி வரும்படி எழுத்தாளருக்குப் போகாதில்லையா?

படிக்க ஆரம்பிச்சேன்...... வெய்யில் அப்படியே கசிந்து ஊர்ந்து, கூடவே வந்துக்கிட்டு இருக்கு...... கதையின் நாயகனே இந்த வெய்யில்தானோன்னு ஒரு பிரமை.



ஓமானின் யானை





மசாலா இல்லாத வாழ்க்கையா? நெவர்..... (ஓமானில் ஒரு கடை)

திரும்பி வரும்போதும் மூணே மணிநேரம்தான் கிடைச்சது. கொஞ்சமாவது தமிழ்நாட்டு உணர்வு வேணுமுன்னு குட்டி இந்தியாவுக்குப் போயிட்டு வந்தாராம். தீவுளிக்கான அலங்காரம் தெருவெங்கும் ஜொலிக்குதாம். பெருமாள் கூப்பிட்டுத் தன்னைத் தூக்கிட்டுப்போகச் சொன்னாராம். தோள் கொடுத்துட்டு, இறக்கிவச்சு ரெண்டு படமும் புடிச்சுக்கிட்டு வந்தார்.



சிராங்கூன் ரோடு தீபாவளிக்குத் தயார்.





தாயார்களுடன் தகப்பன்


வந்துசேர்ந்த ஒன்னரை மணி நேரத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம். நகரத்தந்தையும், தாயுமா வந்துட்டுப்போனாங்க. தாலப்பொலியுடன் வரவேற்றோம். வழக்கம்போல பதினெட்டுவகையுடன் ஓண சத்யை.



பூக்களம்.



தாலப்பொலி




சேச்சிமாரின் நடனம்



நான் தமிழ்நாட்டைப்பற்றிப் புலம்பியது கூடிப்போச்சோன்னு நினைக்கும்விதமா, ஓணக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட கொச்சியில் இருந்நு வந்ந 'அச்சன்' , மாவேலி வந்ந சமயம் கேரளாவே இல்லைன்னு போடு போட்டார். பரசுராமர் உண்டாக்கிய நாடுதான் கேரளம். வாமன அவதாரம் பரசுராமருக்கு முந்திய அவதாரம். அப்ப எப்படி கேரளம் இருந்திருக்கும் என்பது அவரோட வாதம். கேரளமுன்னு பெயர் இல்லாத ஒரு நாடா அப்ப அது பூமியில் இருந்திருக்காதா........ அப்புறம் அச்சனோடு ஒன்னு விஸ்தரிச்சு ஒன்னு விவாதிக்கணும். சோதிச்சு அறிஞ்ஞால் வல்ல தெற்று உண்டோ? இப்பப் பற்றிய சமயமில்லே.......ஆட்டே பின்னொருக்கில்.

இவர் ஊரில் இல்லாத சமயமா நானும் ஓசைப்படாமல் ஒரு ஊர்த் திருவிழாவில் கலந்துக்க வேண்டியதாப் போச்சு. தவுல் இசைதான் ஒரு பத்து நாளா........ இருமலும் காய்ச்சலுமா ஃப்ளூ கொண்டாட்டம்.

காணோமென்னு கேட்டுத் தனிமடலில் விசாரிச்ச நண்பர்களுக்கு நன்றி.


பதிவு எழுதுவதனால் பயன் என் கொள் வாலறிவன்....

63 comments:

said...

பதிவு எழுதுவதால் பயனென்....இதென்னப்பா.
துளசி ஏன் எழுதலைன்னு அலையா அலைய வச்சிட்டீங்க.!!

திருமலையான் படம் நேர்த்தி. ஒமான் மசாலா சமாசாரங்கள் இங்க கொஞ்சம் அனுப்புங்க.நல்லா இருக்க்கு படம்.
தமிழ்நாட்டுக் காப்பி கிடைத்திருக்குமே. கோபால் போன நேரம் சரக்கு மாஸ்டர் வந்தீருக்கமாட்டார்:)

said...

பாருங்க தமிழ் பாட்டு கேட்க முடியாது தமிழ் சாப்பாடை பார்க்கக் கூட முடியாது போனது என்ன சந்தேகத்தை கிளப்புகிறது என..:)?

படங்கள் அருமை.

உடல் நலம் பரவாயில்லையா, மேடம்?

said...

ரீச்சர், வந்தாச்சா!! வாங்க வாங்க. உடம்பு எல்லாம் சரியாப் போச்சா?!

இந்த வாமனன் - கேரளா - பரசுராமர் லாஜிக் நான் எங்க வீட்டில் கேட்டு இருக்கேன். ஆனால் பதில் வந்ததில்லை!! :))

மத்தபடி வழக்கம் போல கோபால் உசுவ வா இருக்கார். நல்லது!! :))

said...

ஓ. டீச்சருக்கு உடல்நலம் சரி இல்லையோ? நாம் ஓமன் டூர் கிளம்பிட்டாங்க.. பயணக்கட்டுரை வரும் என்று நினைத்திருந்தேன்... உடல்நலத்தைப் பேணிக் கொள்ளுங்கள்!

said...

வெளி நாட்டு மோகம் சென்னையில் அதிகம். சிட்னி, ரொரன்ரோ, இலண்டன் நகரங்களை விட..., காதலர் தினம் சென்னைப் பக்கம் போனால் உறுதிப்படுத்தலாம்

said...

விமான நிலையத்தில் நம்மூர் ஆட்கள் எதுவும் வாங்கி சாப்பிடுவது இல்லையென்பதால் அப்படி இருக்கலாம்..... இது போன்ற ஐட்டங்களை வாங்கி உண்பது தான் ஸ்டைல் என்று நினைத்துள்ளோமோ என்னவோ? (நான் இதுவரை எதுவும் வாங்கி உண்டதில்லை)

said...

வன்மையான கண்டனம் !
சிங்கை வழியாக போய் இருக்கார், எனக்கு ஒரு போன் போடக் கூடாதா ? சும்மா இருந்திருந்தால் போய் அவர் கூட சுற்றிக் கொண்டு இருந்திருப்பேன்.

ஹூம், எங்களையெல்லாம் நினச்சு பார்க்கமாட்டேன்கிறிங்க. :(

said...

ஆஹா.. டீச்சர்.. உங்க பயணக்கட்டுரை ஆர்வத்துக்கு அளவில்லாம போயிடுச்சே.. நீங்க போனது மட்டுமில்லாம மத்தவங்க போனதுக்கெல்லாம் "அங்கே போனாராம், இங்கே வந்தாராம்"னு எழுத ஆரம்பிச்சிட்டீங்க :))))

அப்புறம் போட்டோல்லாம் அருமை. அதிலயும் 11:15க்கு எடுத்திருக்குற போட்டோ..ஹி..ஹி..ஹி..

said...

//மூச்சுக்கு முன்னூறுதரம், தமிழ்நாடு, தமிழ்ன்னு முழங்கற ஊரில்//

ஹி ஹி ஹி ஹி முழங்கிறதோட சரி

//யாருமே இல்லாத இடத்தில் காட்டுக்கத்தலா ஒரு வெஸ்டர்ன் ம்யூஸிக் முழங்கிக்கிட்டு இருக்காம்//

யாருமே இல்லாத கடையில யாருக்கோ டி ஆத்துற மாதிரியா :-))))

//இவர் போய் கேட்டதுக்கு அங்கிருந்த பொண்ணு திருதிருன்னு முழிக்குதாம்//

ஒருவேளை யாருமே இது மாதிரி கேட்டு இருக்க மாட்டாங்களோ!

மேடம் இப்ப லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டங்கள் படத்தில் இருப்பது போல தொடங்கி விட்டது

said...

கோபால் போன ஓட்டல் எதுன்னு சொன்னா தேவலை.

ஏன்னா எனக்கு தெரிஞ்சவரைக்கும் இட்லி, தோசை இல்ல்லாத நட்சத்திர விடுதிகள் சென்னையில் மிகவும் குறைவு.

வட இந்திய அல்லது இண்டர்நேஷனல் தொடர் விடுதிகளைத் தவிர தமிழகத்தை சார்ந்தவர்களால் உ.ம். GRT, Residency, Woodlands ஆகிய விடுதிகளில் நிச்சயம் சாஸ்த்ரிய இசைக்குத்தான் முதலிடம்.

கோபாலகிருஷ்ணனின் புல்லாகுழலில் மூழ்கி உணவருந்திக்கொண்டே பிசினஸ் டிஸ்கஸ் செய்யும் வசதிகள் உண்டு. உங்களவரின் துரதிர்ஷ்டம் அதுபோன்ற விடுதியில் சிக்கியிருக்கிறார்.

ஆகவே தமிழக விடுதிகளில் இன்னும் தமிழிசையும் தமிழர் உணவும் இருக்கத்தான் செய்கிறது.

said...

என்னோட ரீடர்ல டீச்சரை ரொம்ப நாளாக் காணோமேன்னு யோசிச்சிட்டே இருந்தேன். காய்ச்சல் இப்ப எப்படி இருக்கு டீச்சர்?

said...

மேடம்,

தமிழ்நாடு, சென்னை விமான நிலையத்தில் இல்லை. அவ்வளவு தான்.

உடல் நலம் பேணுங்கள்.

படங்கள், உங்கள் ஆதங்கமான கேள்விகள் எல்லாம் வாயடைக்க வைத்து விட்டன.

said...

அதென்ன இந்தியாமட்டும் அமெரிக்காவா ஆகிருச்சு?


NANUM ITHE THAN KETUKINU IRUKKEN
:(

said...

சென்னை கிடக்கு கழுத, அத விடுங்க. கிறிஸ்ட் சர்ச் கொண்டாடங்கள் அமர்களம். :))

எனக்கு தான் ஆணி, வார இறுதியில உங்க எல்லா பதிவையும் படிக்கலாம்னு நினைச்சா, அட பாவமே! சுக்கு கஷாயம் வெச்சு குடிங்க.

சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்ல, சுப்ரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்ல. :D

said...

கடைசி 2 படங்களையும் இன்னும் க்ளோஸ் அப்ல படம் புடிச்சி போட்டிருக்கலாம்.. :P

said...

நான் இந்த வருஷம் போனப்போ அனைத்து போண்டா வகைகளும் கிடைச்சுது. ஆனால் அது இரவு நேரம். நீங்கள் குறிப்பிடும் காலை வேளைகளில் நான் சென்றதில்லை. அதனால் தெரியலை. ஆனா நான்கூட முதல்லல்லாம் ரொம்ப அதிசயப்பட்டேன், ஏன் நம்மோட சிற்றுண்டி வகைகள் இல்லைன்னு. இவங்க சொல்ற காரணம் ஏத்துக்கற மாதிரி இல்லைங்களே. இவங்க அவைகளை விற்பனைக்கு வெச்சாத்தானே மக்கள் விரும்புறாங்களா இல்லையான்னு தெரியும்.

சீக்கிரம் உடல்நலமடைய வாழ்த்துக்கள் :):):)

said...

//எனக்கொரு எஸ்.ரா வாங்கி வந்தார். நெடுங்குருதி.
பகல்கொள்ளையா விலை. பதிப்பகம் வச்ச விலையை மறைச்சு அங்கே 580 ரூபாய்ன்னு ஒட்டிவச்சுருக்கு. இந்த அதிகப்படி வரும்படி எழுத்தாளருக்குப் போகாதில்லையா?
//

நெடுங்குருதியை வாங்கியாச்சு.. இன்னும் ரெண்டு நாள்ல படிக்க ஆரம்பிச்சுடுவேன்னு நினைக்குறேன் :). ஆனா விலை 350 ரூவாதான்னு நினைக்குறேன். வாங்கிட்டு வந்த கோபிநாத்க்கு ஒரு ஸ்பெசல் ஓ :)

said...

சென்னையில இதெல்லாம் பார்த்து பார்த்து பழகிடுச்சி....லூசுல விடுங்க ;)

உடல் நலத்தை பார்த்துக்கோங்க.

said...

உடல் நலம் விசாரிக்க மறந்துட்டேன்பா. நல்லா குணமாயிடுச்சா.
இல்ல லொக் லொக் மட்டும் இருக்கா.

said...

சென்னை என்ன தமிழ் நாட்டிலேயா இருக்குன்னு நல்ல கேள்வி கேட்டுட்டீகளே !

சிறிசுகள் என்ன ! பெரிசுகள் கூட இப்ப நம்ம மரபு, பண்பு, கலாசாரம், மொழி எல்லாத்தையும்
விட்டுட்டு ரொம்ப தூரம் போயிட்டாக..

அப்பப்ப இந்த மாதிரி ஒரு பண்டிகை வருதோ, நம்ம என்னன்னு அப்பவாச்சும்
புரியுது !

இங்க பாருங்க .. சென்னைலே ஒரு இடம் !

டாப்லஸ் ஆட்டமாம் ! ஆடுறாங்க.. அதையும் ஒரு
பெரிசு ரசிச்சுகினு இருக்குது !!

மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
http://menakasury.blogspot.com

said...

சேச்சிகள் படம் ஜூப்பரோ ஜூப்பர் !!! வாழ்க கேரள மணித்திரு நாடு..!!!

said...

சென்னையில் நான் சாப்பாடு கெடச்சி அனுபவிச்சேன், கோபால் சார் கெடக்காம அனுபவிச்சிருக்காரு.

said...

என்னது சென்னை ஏர்ப்போர்ட்டுல இட்லி தோசை கெடைக்கலையா? கெடைக்குதுங்களே. நானே பாத்திருக்கேனே. ஆனா கோபால் ஏதாச்சும் ஹைபை லௌஞ்சுக்குப் போயிருப்பாரு. :)

அந்த ஓமன் மசாலா அருமையோ அருமை. பாக்கவே அழகா இருக்குது. எவ்ளோ ஏலக்கா...எவ்ளோ கிராம்பு... எவ்ளோ சுக்கு.... எவ்ளோ சோம்பு.... ஆனா இதுல எதுவுமே மேலுக்கு நல்லதில்லைங்குறாங்களே!!!

ஆனா..அந்தக் கேரளத்தைப் பத்தி நீங்க கேக்குறது சரியாத்தான் இருக்கு. ஏதோ குண்டக்க மண்டக்க கதை சொல்லி வெச்சுட்டாங்க. மன்னிச்சு விட்டிருங்க.

said...

புக்கு என்ன, அங்க கோபால் சார் காஃபி சாப்பிடலையா? காஃபி விலை ஒரு டாலர் அல்லது ஒரு பவுண்ட். அதாவது, நீங்க எந்த கரன்சி கொடுத்தாலும் மிச்சம் தரமாட்டாங்களாம் :0( என்ன ஒரு நேர்மை!

நீங்க கேரளா பத்தி சொல்ற கதை எனக்கு புதுசு. ஆனா, பூமி ஆரம்பிச்சதுல இருந்து நிலம் அங்க தான இருக்கு. வேற பேர்ல இருந்திருக்கலாம் இல்ல பேரே இல்லாம இருந்திருக்கலாம் :0)

சென்னை ஏர்போர்ட்ல அறிவிப்பே தமிழ்ல சொல்லமாட்டாங்க. இங்கிலிபீசுலயும், இந்திலயும் தான். நான் போயிருந்தப்ப துபாய் போக வேண்டிய ஒருத்தரு லண்டன் போர்டிங் கேட்ல எங்களோட நின்னுட்டிருந்தாரு, பாவம். தமிழ்லயும் சொன்னா என்ன கொறஞ்சா போயிடுவாங்க? எவ்வளவு பேரு ரொம்ப டென்ஷனா கஷ்டப்படுறாங்க!

said...

//என்னது சென்னை ஏர்ப்போர்ட்டுல இட்லி தோசை கெடைக்கலையா? கெடைக்குதுங்களே//
அப்படியா ராகவன்? நான் பார்த்தவரையிலும் இல்லையே.

said...

வாங்க வல்லி.

இப்பெல்லாம் ஃபில்டர் காஃபிக்கூட பெர்குலேட்டர் காஃபியா ஆகி இருக்கேப்பா. அதுபாட்டுக்கு ஹாட்ப்ளேட்லே சூடாகிக்கிட்டே இருக்கு. மணம் குணம் எல்லாம் காணோம்(-:

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கடைசிப் படங்கள் 3 தவிர ஓமான் சிங்கை எல்லாம் கோபால் உபயம்:-)

உடல்நிலை பரவாயில்லை. பத்தியமா மூணு நேரம் பதிவுகள் படிக்கணுமாம். அதுவும் இல்லாமப் போயிருந்தா..... அம்பேல்தான்:-)

said...

வாங்க கொத்ஸ்.

உடம்பு இன்னும் 'புதிர் விடுவிக்கும் அளவு'க்குச் சரியாகலை:-)

கோபால் உசுகி ஆக இருக்கார். ஆமாம் கி என்பதுக்கு வயசு எத்தனை ஆகி இருக்கணும்?

தமிழ்ப்பத்திரிக்கைச் செய்திகளில்' 45 வயது முதியவர்'ன்னு வந்துகிட்டு இருக்கே...... இருக்குற சந்தேகம் போதாதுன்னு இப்படியும் வருதேப்பா.....

பரசுராமர் வருமுன்பு வேற ஏதாவது யுகம் நடந்துருக்காதா என்ன?

said...

வாங்க தமிழ் பிரியன்.

முதலில் படைகளை அனுப்பி ஊர் சரியா இருக்கா..... நம்ம வி(ஷ)ஜயத்துக்குத் தோதுப்படுமான்னுப் பார்த்துக்கிட்டுத்தான் அதிகாரபூர்வமான நல்லெண்ண( எண்ணெய் இல்லை)நல்லுறவு வளர்க்கக் கிளம்பணும்:-)


ஆமாம்....விமானநிலையத்தில் நம்மூர் ஆட்கள் ஒன்னும் வாங்கிச் சாப்புடறதில்லையா? சரியாப்போச்சு........ அடுத்தமுறை கண்ணைச் சுழட்டிப் பாருங்க:-))))

said...

வாங்க காரூரன்.

உங்க வாயிலே சக்கரையைப் போடணும். சரியாச் சொல்லி இருக்கீங்க.

said...

வாங்க கோவியாரே.

அடிபட்ட கால் குணமாச்சா? இவர் எப்படியும் மாசம் ரெண்டுமுறை சிங்கை வந்துக்கிட்டுத்தான் இருக்கார். இங்கே இருந்து மேற்கே போகும் பயணத்துக்கெல்லாம் ட்ரான்ஸிட் உங்க ஊர்தான். நண்பர்களைச் சந்திக்கன்னு நேரம் ஒதுக்க முடியாமப்போயிருதாம். அவர் வரும் நேரமெல்லாம் உங்களுக்கு அலுவலகப்பணி நேரமாத்தான் இருக்கும்.

கண்ணுக்குப் பட்டை போட்ட குதிரை மாதிரி, வேற எங்கேயும் வேடிக்கை பார்க்காமல் கிடைக்கும் ரெண்டு மூணு மணிநேரத்துக்கு சீனுவைப் பார்த்துட்டுக் கோமளாவையும் சந்திச்சுட்டு வரமட்டும் சரியாப்போயிருதாம்:-)

நான் வந்தாத்தான் ரெண்டு நாள் தங்கி எல்லாரையும் பார்க்கணுமுன்னு இருப்பேன். அவரவருக்கு அவரவரின் ப்ரயாரிட்டி வேற வேற!

said...

வாங்க வெண்பூ.

மறுபாதி போன பயணம் நம்ம கணக்குலே வராதா? :-))))))

said...

வாங்க கிரி.

உங்கூர்லே கொண்டாட்டம் தொடங்கியாச்சுன்னு எனக்குச் சொல்லத்தான் அந்தப் படங்களை எடுத்தாராம்:-)))))

said...

வாங்க டிபிஆர்.

கோபால் இரவு தங்குனது ட்ரைடெண்ட்லே. அங்கே ஒன்னும் பிரச்சனை இல்லை. காலையில் விமானநிலையத்துக்கு வந்தபிறகு போன லவுஞ்சுதான் இந்த லட்சணத்துலே இருந்துருக்கு.

வெளிநாடுகளுக்கும் நம்நாடுகளுக்கும் உள்ள தொடர்புலே, நுழைவுவாசலா முதல்லே இருப்பது இந்த பன்னாட்டு விமான நிலையங்கள்தானே. இங்கே நம்முடைய பெருமைகளைக் கொஞ்சம் கோடிகாட்டுனா என்னன்னுதான் நினைப்பு.

said...

வாங்க ரிஷான்.

இப்பக் காய்ச்சல் விட்டுருச்சு. மழைவிட்டும் தூவானம் விடலை என்பது போல் கொஞ்சமா லொக் லொக்:-)

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

//தமிழ்நாடு, சென்னை விமான நிலையத்தில் இல்லை. அவ்வளவு தான்.//

அப்படிப்போடுங்க அருவாளை. இப்படி சிம்பிளா எடுத்துக்கிட்டாப் பிரச்சனையே இல்லை:-)))))

எதிர்ப்பார்ப்பு இருந்தாலே ஏமாற்றம்தான். இது இங்கேயும் பொருந்துது பாருங்க:!!!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இன்னும் உங்க புலம்பலைப் பார்க்கலை.

இனிமேத்தான் பத்துநாள் பாக்கியைப் பிரிச்சு மேயணும்:-)

said...

வாங்க அம்பி.
அதான் ஒரு குட்டிச்சாக்கு நிறையச் சுக்கைப் படம் எடுத்துப்போட்டாச்சு.

கிறைஸ்ட்சர்ச் கொண்டாட்டத்துக்குக் கேக்கணுமா? இப்பெல்லாம் ரொம்ப(வே)முன்னேறிட்டோமாக்கும்:-)

said...

வாங்க சஞ்ஜெய்.

ஆமாம்லெ! எல்லாரும் அடங்கணுமேன்னு இப்படி எடுத்தேன். கொஞ்சம் பிக்காஸோவில் போட்டு எடுத்தால் நல்லா இருக்கும்.

செஞ்சுறலாம்:-)

said...

வாங்க ராப்.

விற்பனைக்கு வைக்கறதில்லையே இங்கே. இது அங்கத்தினர்களுக்கான எக்ஸ்க்ளூஸிவ் லவுஞ் ஆச்சே.

விற்பனைன்னதும் நினைவுக்கு வருது. இந்திய ரெயில்வே சாப்பாடு அட்டவணை பார்த்தீங்களா?

அங்கேயும் வெஸ்டர்ன் ஸ்நாக்ஸ்தான் பூந்துருக்கு(-:

said...

வாங்க சென்ஷி.

உயிர்மையின் விலை 275 தான். சிங்கையில் தமிழ்ப்புத்தகங்களை ஒரு டாலர் கூடுதலாக் கொடுத்து வாங்கிக்கலாம். நம்ம எருமைத்தெருவில் ஒரு இடத்தில் கிடைக்குது:-)

கதையைப் பரபரன்னு படிக்க முடியலை. ஆரம்பம் முதலே வெய்யில் காயுது.....ஊர்ந்து படிக்கணும்.

said...

வாங்க கோபிநாத்.

நன்றிப்பா. இனிமேப்பட்டு கண்ணும் தெரியலை, காதும் கேக்கலைன்னு இருக்கப் பழகணும்:-)

said...

வல்லி,
அவ்ளோ சீக்கிரம் லொக் லொக் போயிருமா?

ஆனால்...வேகம் குறைஞ்சுருக்கு:-)

ஃபாஸ்ட் பௌலர்கள் வீசும் ஸ்பீடெல்லாம் இதுக்கு முன்னாலே நிக்குமா?

said...

வாங்க மீனாட்சி அக்கா.

வரவர ரொம்பத்தான் கெட்டுக்கிடக்கு உலகம் இல்லே?

ஆனாலும் 'அந்த டாப்லெஸ்' ரொம்பவே க்யூட்.

வெளியே சொல்லாதீங்க. நானும் ரசிச்சேன்:-)

said...

வாங்க செந்தழல் ரவி.

மின்மரத்தடியில் நின்னாலும் திருநாட்டை வாழ்த்திப்பாடத் தோணுதில்லே?

உடம்பு கொஞ்சம் பூசுனமாதிரி இருக்கே:-))))

said...

வாங்க குடுகுடுப்பை.

இந்த முறை சென்னையில் 6 மணி நேரம்தானாம்:-))))

said...

வாங்க ராகவன்.

//ஆனா கோபால் ஏதாச்சும் ஹைபை லௌஞ்சுக்குப் போயிருப்பாரு. :)//

அதே அதே.

மசாலா மேலுக்கு நல்லதில்லையா? அப்ப எப்படிப் பிரியாணி போடறீங்க?

குறைஞ்ச பட்சம் ஏலக்காயை வச்சுக்கலாமா?:-))))

said...

வாங்க அதுசரி.

நீங்க சொன்ன ஒரு டாலர் காஃபியை பாம்பே (அப்ப மும்பை ஆகாத காலம்)ஏர்ப்போர்ட்டில் ஒருமுறை குடிச்சேன்.

பறக்குமுந்தியே, தரையில் இருக்கும்போதே இந்தியக் காசு இந்தியாவில் செல்லாதுன்னு சொன்னப்ப எரிச்சலா வந்துச்சு.

said...

துளசியம்மா,

ஆகா! சிங்கப்பூர் குட்டி இந்தியாவிற்கும் வந்து போயிருக்கார். அவரின் மூலமாக ஒரு பதிவு போட்டு கலக்கி விட்டீர்கள். நடப்பு நிலவரங்களை அடுக்கி...!

said...

டீச்சர், ஏர்போர்ட்ல...ஏன் கேக்குறீங்க வயித்தெரிச்சலை. லவுஞ்ச்ல பிசினஸ் கிளாஸ்க்கு மட்டு்ம்தான் அனுமதி. நண்பன் ஒருத்தன் அங்க குப்பை கொட்டுறான். அவன் தயவுல ஒரு நா அதிகாலையில போய் உக்கார்ந்துகிட்டு (4.30 பிளைட்) என்னடா இருக்குன்னு சாப்பிடன்னு கேட்டா. நீங்க சொன்ன பிச்சா, சாண்ட்விச் ரகங்கள். நான் பழைய சோறு பார்ட்டி. தாங்குமா? என்ன பண்ண அன்னைக்கு காலையில விரதம்.

பெங்களூர் ஏர்போர்ட் புதுசா கட்டியிருக்காங்களேன்னு போனேன். பொதுவா இந்த மாதிரி போனா, வாயை, வயித்தை கட்டுறவன் நான். கூட வந்த புண்ணியவான் ஒரு டீ'ன்னான். சரின்னு போய் கேட்டா, அவன் சொன்ன விலை, ஜென்மத்துக்கும் டீ குடிக்கும் எண்ணத்தையே போக்கிடுச்சு. நம்புங்க 75 ரூபாய்.
சென்னையில இருக்கிற 5 ஸ்டார் ஹோட்டலான க்ரீன் பார்க்லயே டீ 45.50 பைசாதான். இந்த கொள்ளைய எங்க போய் சொல்ல?

ஏர்போர்ட்டுனா, வர்றவங்க வெளிநாட்டுக்காரங்க, நல்லா சம்பாதிக்கிறவங்க அப்படிங்கற நினைப்பு. என்ன பண்றது டீச்சர்.

said...

என்ன ஆச்சு உடம்புக்கு ...? நானும் சென்னை மாயவரம் ரவுண்ட் அடிச்சிட்டு பேக் டு தில்லி.. ஆனா இங்கே உங்க அண்ணாச்சிக்கு அட்மிசன் டைம் டென்சனில் இருக்கேன்.. நீங்க எத்தனை பதிவெழுதி இருக்கீங்களோ ன்னு நினைச்சிட்டே வந்தேன்..

said...

வாங்க ஜோதிபாரதி.

வெளிநாடாவும் இருக்கணும், அதுலேயும் தமிழ்நாடாவும்(??)இருக்கணுமுன்னா அதுக்கு சிங்கையைவிட்டா வேறு என்ன இருக்கு!

நமக்கு சிங்கைவழிப் போக்குவரத்துதான்
27 வருசமா.

said...

வாங்க ஆடுமாடு.

//ஏர்போர்ட்டுனா, வர்றவங்க வெளிநாட்டுக்காரங்க, நல்லா சம்பாதிக்கிறவங்க அப்படிங்கற நினைப்பு. என்ன பண்றது டீச்சர்.//

ஆமாங்க. நீங்க சொல்றதுதான். ஆனா இது ஒரு தப்பான எண்ணம் இல்லையோ(-:

said...

வாங்க கயலு.

அடுத்தவருசத்துக்கு இப்பவே அட்மிஷன் வாங்கிறணுமா?

ஊர் விஸிட் எல்லாம் எழுதுங்க.

கொஞ்சம் இந்த வருசம் உடம்பு சரியில்லாமப் போச்சு. இப்ப பரவாயில்லைப்பா.

said...

சுகந்தன்னே ...?

said...

வாங்க தருமி.

பனியொக்க மாறி. இப்போள் இத்திரி பேதம் உண்டு. பயங்கர க்ஷீணம்.

ச்சோதிச்சதினு வளரே நந்நி.

said...

என்னங்க ஆளாளுக்கு பயமுறுத்துறீங்க? அந்த பக்கம் என்னன்னா ஒருத்தர் வைரஸ் காய்ச்சல்ங்கறாரு. நீங்க ப்ளூன்னு சொல்றீங்க. ரெண்டு பேருக்கு விபத்து நடக்குது. என்னடா இந்த பதிவர்களுக்கு வந்த சோதனைன்னு கேக்கணும் போலிருக்கே.

தவில் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சதுல்ல?

said...

//பனியொக்க மாறி. இப்போள் இத்திரி பேதம் உண்டு. பயங்கர க்ஷீணம்.

ச்சோதிச்சதினு வளரே நந்நி. //

(தலையை சுவற்றில் முட்டிகொண்டு..) எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

அந்த கடைசி வரி மட்டும் மனசிலாயி...

said...

வாங்க குமரன்தம்பி.

தவுல்காரர் அடங்கிட்டார். ஆனால் இந்த 'ஜால்ரா' மட்டும் சன்னமாத் தட்டிக்கிட்டே இருக்கு!

said...

தருமி,

பேராசிரியருக்கு வகுப்பு எடுக்கும்படி ஆகிருச்சே!!!

பனியொக்க மாறி= காய்ச்சல் விட்டுருச்சு.

இப்போள் இத்திரி பேதம் உண்டு= இப்ப கொஞ்சம் பரவாயில்லை


பயங்கர க்ஷீணம்= ரொம்ப பலஹீனமா இருக்கு.

இப்ப எல்லாம் மனசிலாயி.அல்லே?:-))))

said...

//இப்ப எல்லாம் மனசிலாயி.அல்லே?:-))))//

இப்ப இதுக்கு 'ஆயி..ஆயி..' சொல்லணுமா, இல்லை. 'அல்லே..அல்லே' அப்டின்னு சொல்லணுமா..........
:(

said...

என்னங்க தருமி, இப்படிக் குண்டக்கமண்டக்கன்னு கேட்டா என்னன்னு சொல்றது?:-)))))

இப்பப் புரிஞ்சதில்லே? ன்னு கேட்டாப் புரிஞ்சது ஆமாம்னு சொல்லவேணாமா?

ஆயி ஆயின்னு பறஞ்ஞால் மதி:-)

said...

ஆயி .. ஆயி ..

'மதி கொஞ்சம் கம்மி' அதுதன்னே இப்படி :(