மூச்சுக்கு முன்னூறுதரம், தமிழ்நாடு, தமிழ்ன்னு முழங்கற ஊரில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் தமிழுக்குச் சான்ஸே இல்லையாமே.....
சமீபத்தில் கோபால் சென்னை வழியா ஓமான் போயிருந்தார். சிலமணி நேரமுன்னாலும் ராத்திரி எப்படியும் ஒரு தங்கல் சென்னையில். அதிகாலையில் ஆறுமணிக்கு மறுபடியும் செக்கின் செஞ்சுட்டு, லவுஞ்சுக்குள்ளே போயிருக்கார்.
யாருமே இல்லாத இடத்தில் காட்டுக்கத்தலா ஒரு வெஸ்டர்ன் ம்யூஸிக் முழங்கிக்கிட்டு இருக்காம். காலங்கார்த்தாலே இனிமையா ஒரு தமிழ்ப்பாட்டோ, இல்லை ஏதாவது, வீணை, புல்லாங்குழல், வயலின் இப்படி வாத்திய சங்கீதமோ போடக்கூடாதா? இவர் போய் கேட்டதுக்கு அங்கிருந்த பொண்ணு திருதிருன்னு முழிக்குதாம். வச்சிருக்கும் குறுந்தட்டெல்லாம் மேல்நாட்டு இசைமட்டும்தானாம்.
தொலையட்டும், ஒன்னும் இல்லைன்னா அதை ஆஃப் பண்ணி வச்சாலும் போதுமுன்னு நிறுத்தச் சொல்லி, கொஞ்ச நேரம் அமைதியாவாச்சும் இருக்கலாமுன்னு ஆச்சாம். எதாவது காலை உணவு எடுத்துக்கலாமுன்னு போனால் அங்கேயும் சாண்ட்விச், மஃப்பின், ம்யூஸ்லி, க்ரஸாண்ட் மட்டுமே. வயித்துக்கு ஆபத்தில்லாத ஒரு இட்லியோ தோசையோ வைக்கக்கூடாதான்னா அதுக்கும் மிரண்டுபோய் முழிக்குதாம்ப்பா அந்தப் பொண்ணு.
இங்கே வரும் ஆட்களெல்லாம் இதைத்தான் சார் விரும்பித் தின்னுறாங்கன்னு கூடவே ஒரு கொசுறுத் தகவல். தமிழ்நாட்டுலே உள்ளூர் சாப்பாடு, இசைன்னு இருந்தா..... விலைபோகாதா? மற்ற நாடுகளில் இருக்கும் லவுஞ்சுகளில் எல்லாம் அந்தந்த ஊர் மணம்தானே எல்லாத்திலும்..... அதென்ன இந்தியாமட்டும் அமெரிக்காவா ஆகிருச்சு?
எல்லாத்துலேயும் ஆங்கில மோகம் இருக்குன்னா என்னத்துக்குத்தான் சுதந்திரம் வாங்குனாங்களாம்? என்னமோ போங்க.
விமானநிலையத்துப் புத்தகக்கடையில் மட்டும் ஒரு சில தமிழ்ப்புத்தகங்கள் இருக்குன்னு பார்த்துட்டு, எனக்கொரு எஸ்.ரா வாங்கி வந்தார். நெடுங்குருதி.
பகல்கொள்ளையா விலை. பதிப்பகம் வச்ச விலையை மறைச்சு அங்கே 580 ரூபாய்ன்னு ஒட்டிவச்சுருக்கு. இந்த அதிகப்படி வரும்படி எழுத்தாளருக்குப் போகாதில்லையா?
படிக்க ஆரம்பிச்சேன்...... வெய்யில் அப்படியே கசிந்து ஊர்ந்து, கூடவே வந்துக்கிட்டு இருக்கு...... கதையின் நாயகனே இந்த வெய்யில்தானோன்னு ஒரு பிரமை.
ஓமானின் யானை
மசாலா இல்லாத வாழ்க்கையா? நெவர்..... (ஓமானில் ஒரு கடை)
திரும்பி வரும்போதும் மூணே மணிநேரம்தான் கிடைச்சது. கொஞ்சமாவது தமிழ்நாட்டு உணர்வு வேணுமுன்னு குட்டி இந்தியாவுக்குப் போயிட்டு வந்தாராம். தீவுளிக்கான அலங்காரம் தெருவெங்கும் ஜொலிக்குதாம். பெருமாள் கூப்பிட்டுத் தன்னைத் தூக்கிட்டுப்போகச் சொன்னாராம். தோள் கொடுத்துட்டு, இறக்கிவச்சு ரெண்டு படமும் புடிச்சுக்கிட்டு வந்தார்.
சிராங்கூன் ரோடு தீபாவளிக்குத் தயார்.
தாயார்களுடன் தகப்பன்
வந்துசேர்ந்த ஒன்னரை மணி நேரத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம். நகரத்தந்தையும், தாயுமா வந்துட்டுப்போனாங்க. தாலப்பொலியுடன் வரவேற்றோம். வழக்கம்போல பதினெட்டுவகையுடன் ஓண சத்யை.
பூக்களம்.
தாலப்பொலி
சேச்சிமாரின் நடனம்
நான் தமிழ்நாட்டைப்பற்றிப் புலம்பியது கூடிப்போச்சோன்னு நினைக்கும்விதமா, ஓணக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட கொச்சியில் இருந்நு வந்ந 'அச்சன்' , மாவேலி வந்ந சமயம் கேரளாவே இல்லைன்னு போடு போட்டார். பரசுராமர் உண்டாக்கிய நாடுதான் கேரளம். வாமன அவதாரம் பரசுராமருக்கு முந்திய அவதாரம். அப்ப எப்படி கேரளம் இருந்திருக்கும் என்பது அவரோட வாதம். கேரளமுன்னு பெயர் இல்லாத ஒரு நாடா அப்ப அது பூமியில் இருந்திருக்காதா........ அப்புறம் அச்சனோடு ஒன்னு விஸ்தரிச்சு ஒன்னு விவாதிக்கணும். சோதிச்சு அறிஞ்ஞால் வல்ல தெற்று உண்டோ? இப்பப் பற்றிய சமயமில்லே.......ஆட்டே பின்னொருக்கில்.
இவர் ஊரில் இல்லாத சமயமா நானும் ஓசைப்படாமல் ஒரு ஊர்த் திருவிழாவில் கலந்துக்க வேண்டியதாப் போச்சு. தவுல் இசைதான் ஒரு பத்து நாளா........ இருமலும் காய்ச்சலுமா ஃப்ளூ கொண்டாட்டம்.
காணோமென்னு கேட்டுத் தனிமடலில் விசாரிச்ச நண்பர்களுக்கு நன்றி.
பதிவு எழுதுவதனால் பயன் என் கொள் வாலறிவன்....
Showing posts with label Little India Singapore. Show all posts
Showing posts with label Little India Singapore. Show all posts
Wednesday, September 17, 2008
சென்னை, தமிழ்நாட்டிலேயா இருக்கு?
Posted by
துளசி கோபால்
at
9/17/2008 11:24:00 AM
63
comments
Labels: Little India Singapore, Oman, Onam
Subscribe to:
Posts (Atom)
