குட்டிக்குட்டியாக் குண்டுகுண்டா இருக்கும் கத்திரிக்காயைப் பார்த்ததும் எங்க ரெண்டு பேருக்கும் எப்பவுமே வரும் எண்ணம் இப்பவும் வந்துச்சு. லா.ச.ராவின் கத்தரிக்காய்க் கதை!
ரொம்ப வருசங்களுக்கு முந்தி எங்கியோ (விகடன், குமுதமா இருக்கலாம்) படிச்சோம். அப்பெல்லாம் நம்ம வாசிப்புகள் இந்த ரெண்டையும் விட்டால் மூணாவதா கல்கி.
"வறுமை நிறைந்த குடும்பத்திலே, சாப்பிட ஏதுமில்லாமல் குழந்தைகள் எல்லாம் போய் எங்கியோ வேலி ஓரத்தில் முளைச்சுக்கிடக்கும் கத்தரிச்செடியில் இருந்து பறிச்சுவந்த கத்தரிப்பிஞ்சுகளைக் கறியாக்குவாங்க அம்மா. கொழந்தைகள் எல்லாம் வெறுமனே அதை மட்டும் தட்டுலே போட்டு வழிச்சுத் தின்னுட்டுத் தரையில் உருளுங்கள்.''
மனசை விட்டு அகலாத கதை. இதை ஒருசமயம் சொல்லப்போய், நம்ம கீதா சொன்னாங்க அவுங்க மனசுலே இதைப்போல நிற்பது 'வளை'ன்னு. நானோ ஒரு திண்டிப்போத்து. அதான் தின்னும் சமாச்சாரம். அவுங்கவுங்களுக்கு ஏதுவா ஏதோ ஒண்ணு:-)
கத்தரிக்காயிலும் நீட்டுக்கத்தரி எனக்குப் பிடிக்காது. உருண்டையா இருக்கணும்.
கோல்கோல்வாலா ச்சாஹியே. லம்பாவாலா பஸந்த் நை.
இது நம்மக் கடைக்காரம்மாவுக்கும் நல்லாவே தெரியும். எல்லாம் ஃபிஜியில் இருந்து வருவதுதான்.
இன்னிக்கு என்னவோ ஏறக்குறைய ஒரே மாதிரி அளவில் கிடைச்சது. பொடி அடைச்சு முழுசா வதக்கித் தரவான்னு கேட்டதும் கோபாலுக்கு வாயெல்லாம் பல் & மனசெல்லாம் ஜில்.
நம்ம 'தனி' வழியில் அடுப்பு & மைக்ரோவேவ் அடுப்புக் காம்பினேஷனில் சமைச்சு எடுத்தேன். எண்ணெய் ரொம்பச் சேர்க்காமல் நேரம் ரொம்பச் செலவாகாமல் செஞ்சது.
முழுக்கத்தரிக்காய் எண்ணெய்க் கறி.
கத்தரிக்காய் - 8
மிளகாய் வத்தல் 8
தனியா விதை 2 டேபிள் ஸ்பூன்
உ. பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
க. பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் அரைத் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் 1 மேசைக்கரண்டி( கொத்ஸ்க்கு இது மைனஸ்)
எண்ணெய் 1 தேக்கரண்டி
இன்னும் ரெண்டு மூணு தேக்கரண்டி எண்ணெய் வேணும். எதுக்குன்னு அப்புறமாச் சொல்றேன்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயில் தனியாவிதை, பருப்புகள் சேர்த்து வறுக்கணும். முக்கால் வாசி வறுபட்டதும் மிளகாய் சேர்க்கணும். கூடவே பெருங்காயத்தூள். கடைசியா அந்தத் தேங்காய்த்துருவல்.
அடுப்பை அணைச்சுட்டுக் கத்தரிக்காயை நறுக்க ஆரம்பிங்க. பாவாடை(?) இல்லாமல்தான் இங்கே வருது. காம்பை நறுக்கிட்டு, நாலாப் பிளந்துக்கணும். அடிவரை நறுக்க வேணாம். பார்க்க முழுசா இருக்கணும். ஆனால் நாலுபாகமாத் திறக்கவும் வரணும்.
புழுப் பூச்சி இருக்கான்னு பரிசோதிச்சுக்குங்க.
நறுக்குனதை தண்ணீரில் போட்டு வையுங்க.
வறுத்துவைத்திருக்கும் சாமான்களைச் சட்னி ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி ஆம்ச்சூர் ( பயந்துறாதீங்க. காய்ஞ்ச மாங்காய்த் தூள்தான் இது. இந்தியன் கடைகளில் கிடைக்கும். நானே ஒரு காம்ச்சோர். அதான் ஆம்ச்சூர். கிடைக்கலைன்னா கவலையை விடுங்க. கொஞ்சூண்டு புளி சேர்த்துக்கலாம். கொட்டையை எடுத்துறணும்) சேர்த்துப் பொடிச்சுக்கணும்.
வாணலியைக் கழுவ வேணாம்:-) இன்னொருக்கா அதுக்கு வேலை இருக்கு.
கத்தரிக்காய் மிதக்கும் தண்ணீரை வடிச்சுட்டு, அதை ஒவ்வொண்ணா எடுத்துத் திறந்து இந்தப் பொடியை அடைக்கணும். மீதி இருக்கும் பொடியை ஒரு குட்டிக் கண்டெயினரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கணும். அதை இன்னொரு சமையலுக்கு எடுத்துக்கலாம்.
பொடிஅடைச்ச காய்களை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் அடுக்கி ஒரு 25 மில்லித் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் 100 சதமானம் பவரில் அஞ்சு நிமிஷம் வச்சு எடுங்க.
அந்தக் 'கழுவாத' வாணலியை மீண்டும் அடுப்பில் ஏத்தி, அந்த ரெண்டுமூணு தேக்கரண்டி எண்ணெய் ஊத்திக் காய்ஞ்சதும் அரைடீஸ்பூன் கடுகு, ஒரு இணுக்குக் கறிவேப்பிலை சேர்த்துக் கடுகு வெடிச்சதும் வெந்தக் கத்திரிகளை அலுங்காம நலுங்காம வாணலியில் ஒவ்வொண்ணாச் சேர்த்து மிதமான தீயில் வதக்கணும். அப்பப்பத் திருப்பி விடுங்க. எல்லாப் பக்கமும் வறுபட்டு, ப்ரவுண் நிறமா வரணும். இதுக்கு ஒரு அஞ்சு நிமிசம் எடுக்கும்.
ரொம்ப மெனெக்கெடாம, சீக்கிரம் செஞ்சு வச்சுட்டேன்.
நல்லா இருந்துச்சாம்........
நானாக நொய்நொய்ன்னு கேட்டபிறகு சொன்னார்:-))))
Showing posts with label eggplant. Show all posts
Showing posts with label eggplant. Show all posts
Monday, May 12, 2008
கத்தரிக்கா.....குண்டு கத்தரிக்கா
Posted by
துளசி கோபால்
at
5/12/2008 09:56:00 AM
34
comments
Labels: eggplant, சமையல் குறிப்பு
Subscribe to:
Posts (Atom)
