Friday, October 30, 2015

எளக்கிய வியாதிகளின் ஒன்றுகூடல் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 91)

ரொம்பவே சம்பவங்கள் இல்லாமல் கடந்துபோன நாளா இதைச் சொல்லலாம். மரத்தடி மகளிர் ஒன்று கூடல் வச்சுக்கலாமுன்னு....   எல்லா இந்தியப் பயணங்களிலும்  ஒருநாளை இப்படி நேர்ந்துவிடுவது வழக்கம்தான். சரியான நாளா அமைவதுதான்  கொஞ்சம் கஷ்டமாப் போயிரும். ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு நடுவில் இலக்கியம் வாசிப்பதும், எழுத்தாளினிகளா இருப்பதும் சுலபமா என்ன?

இந்த ஒன்றுகூடலுக்கு  எனக்கு சப்போர்ட் வேணுமேன்னு  எப்பவும் நம்ம அண்ணனையும் அண்ணியையும் சேர்த்துக்குவேன்:-)  நம்ம அண்ணிக்கும் மற்ற தோழிகளுக்கும் பத்துப் பொருத்தம் என்பதால்  ஜமா சேர்ந்தால் ஜாலிதான்.
 தமிழ்குஷி எஃபெம் ரேடியோன்னு ஒரு இண்டர்நெட் ரேடியோ வருது தெரியுமோ?  அதுக்கான பேட்டி ஒன்னு எடுத்துக்கணுமுன்னு  கவிதாயினி மதுமிதா  கொஞ்சம் சீக்கிரமா வந்தாங்க.  ஆட்டோகிராஃப் என்னும் நிகழ்ச்சி.  அட! பேட்டி கொடுக்கும் அளவுக்குப் பெரிய ஆளா ஆகிட்டேனே!!!!!!
டிசம்பர் 19 அன்று ஒலிபரப்பினாங்க. அப்புறமும் எதோ ஒலிபரப்பில் குழப்பம் என்று  இன்னொருநாளும் வந்ததாம்:-)

ஒருமணி நேரம் இப்படி ஓடுனதும் மற்ற தோழிகளும் அண்ணன்,அண்ணியும் வந்தாங்க.  நம்ம லோட்டஸில்தான் சந்திப்பு.   ரெண்டு அறை இருப்பதால் மகளிர் அணியும் மகனர் அணியும் தனித்தனியான உரையாடல்களில்.

அன்பளிப்பு. எதோ சேதி சொல்லுதோ?
அரட்டைக் கச்சேரியைப் பாதியில் நிறுத்திட்டு கீழே இருக்கும் சென்னை 24 இல் சாப்பிடப்போனோம். அங்கேயும் அணிகள் தனித்தனியாகவே:-)


அவரவருக்கு  விருப்பமான சாப்பாடு. எனக்கு தென்னிந்திய தாலி:-)

ரெண்டு மணி ஆச்சு நாங்க சாப்பிட்டு முடிக்க. இன்னும் கொஞ்சநேரம் இருந்தால் கட்டிடமே இடிஞ்சு விழுந்திருக்கும் என்றார் நம்ம கோபால். மனைவி கொஞ்சம்கூடத் திரும்பிப் பார்க்காமல் பேச்சுகளில் மூழ்கிப்போனதைக் கவனிச்ச அண்ணனுக்கு வியப்பு!!!!
மாடித்தோட்ட மக்கள் என்னமோ சீரியஸா பேசிக்கிட்டு இருந்தாங்கதான்!
அறைக்குப்போய் இன்னும் கொஞ்சம் கதைகள்  பேசிகிட்டு இருந்தோம்.  கோபாலும் அண்ணனும் தையக்கடைக்குப்போனாங்க. தைக்கக் கொடுத்திருந்த துணிகளை வாங்கிக்கணும். பையைக் கொண்டு வந்து வச்சதும்  எண்ணிக்கை சரியா இருக்கான்னு பார்த்தப்ப, உஷா கேலி பண்ணறாங்க, எல்லாமே ஒரே பப்பளபளபளன்னு  இருக்குன்னு. என்னோடது நாலு செட் தாங்க. ஸில்க் காட்டன். அதிலும் போனபயணத்தில் எடுத்துப்போன அதே நிறத்தில் அதே ஸ்டைலில் இப்பவும் ஒன்னு எப்படியோ வாங்கி இருக்கேன். இன்றைக்குப் போட்டுக்கிட்டு இருப்பது அதுதான். இப்பல்லாம் கவனக்குறைவும்,ஞாபக மறதியும் அதிகமாப்போச்சு :-(


இங்கே நியூஸியில் விசேஷங்களுக்குப் போகும்போது நல்லா உடுத்துப் போனால்தானே மனசுக்கு திருப்தியா இருக்கும். அதுவுமில்லாமல் சென்னையா இது? எப்பப் பார்த்தாலும் வேர்த்து விறுவிறுத்து வேர்வையில் ஊறிப்போய்க் கிடக்க?

என்னால் அழுதுவடியும் நிறத்தில் உடுத்திக்க முடியாது? பளிச்ன்னு இருந்தால்தான் பிடிக்கும். அதிலும் பச்சைன்னா விடமுடியுதா சொல்லுங்க? அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டுமுன்னு விட்டுட்டேன்!

இன்னொன்னும் சொல்லணும். ஸில்க் காட்டன் சல்வார் கமீஸ் துணிகள் கிடைப்பது ரொம்பக் கஷ்டமா இருக்கு. அப்படியே கிடைச்சாலும்  நல்ல வண்ணங்கள்  கிடைப்பது குறைவு.  ஒரே டிஸைன்தான். சின்ன பார்டர். துப்பட்டா மட்டும் ரொம்ப சூப்பரா அமர்க்களமா இருக்கு.  அடுத்தமுறை காஞ்சீபுரத்தில்தான் தேடணும். நம்ம பாண்டவதூதனைப் பார்க்கப் போகணும்தானே?

மூணு மணிக்குத் தோழிகள் ஒவ்வொருத்தராக் கிளம்புனாங்க. ஆரம்பிச்சு வச்சது நம்ம லக்ஷ்மிதான்.  கனியை பள்ளிக்கூடத்தில் இருந்து பிக் பண்ணனும். பறவைக் கூட்டத்தில் சின்னக் கல் எறிஞ்ச எஃபெக்ட்லெ எல்லோரும் பறந்தே போயிட்டாங்க.

அண்ணன் சொல்றார்.....   'லேடீஸ் இப்படியெல்லாம் ஜாலியா என்னா சத்தம் போட்டு பேசறீங்க!'  இன்னும் நம்ம சுயரூபம் அவருக்குக் காமிக்கலை. அடுத்தமுறை வச்சுக்கலாம்:-)

தோள்வலின்னு  நம்ம லோட்டஸ்க்கு  ரெண்டு பில்டிங் தள்ளி ஒரு அக்கூப்ரெஷர் சிகிச்சைக்குப் போய் வந்தது பற்றி ஏற்கெனவே இந்தத் தொடரின் ஆரம்பத்தில் (பகுதி 17) சொல்லி இருந்தேன். ஊர்ப்பயணம் முடிச்சதும் ஊருக்குத் திரும்புமுன் ஒருமுறை வந்துட்டுப்போங்கன்னு சொல்லி இருந்தாங்க.

நம்ம அண்ணிக்கும் முழங்காலில் ஒரு பிரச்சனை ஆயிருச்சு. வட இந்தியப்பயணம் போன இடத்தில் ரயிலைப்பிடிக்க ஓடிப்போய் ஏறும்போது   கால் சட்னு மடங்கி இருக்கு. லிகமெண்ட் போயிருச்சுன்னு  மியாட்லே  சிகிச்சை எடுத்துக்கிட்டாங்க. இன்னும் லேசா வலி இருக்கேன்னு அவுங்களுக்கும் ஒரு அக்கூப்ரெஷர் சிகிச்சை எடுத்துக்கலாமேன்னு சொல்லி அவுங்களோடு டாக்டர் ஜெயலக்ஷ்மியைச் சந்திக்கப் போனோம். நாம்  பெற்ற இன்பம் அவுங்களும் பெறட்டுமேன்னு! (எங்க பாட்டி இருந்துருந்தா.... வேற பழமொழி சொல்லி இருப்பாங்க. 'தான் ச்செடின கோத்தி, வனமந்த்தா ச்செடிபிந்திண்ட்டா' !!!! )

அவுங்களுக்கு  தனியா சிகிச்சை. என்ன, எங்கெ  எத்தனை முறை  நரம்புகளில்  அழுத்தம் கொடுக்கணுமுன்னு  சொல்லித் தந்தாங்க.  நான் அங்கே இப்போ பழைய  பேஷிண்ட் :-)   அவுங்க சொன்னதைத் தொடர்ந்து பயணகாலத்தில் செஞ்சதால் உண்மையிலேயே பலன் கிடைச்சது என்பதும் உண்மை. தோள்வலி குறைஞ்சுருக்கு. எங்களுக்கு நாலைஞ்சு யோகா பயிற்சி செய்யச் சொல்லித் தந்தாங்க.

நாலரை மணி ஆச்சேன்னு  அண்ணனும் அண்ணியும் கிளம்புனாங்க. நேரம் ஆக ஆக ட்ராஃபிக் அதிகமாப் போயிருதே!

நாங்களும்  அடையாறு அநந்தபதுமனை ஸேவிச்சுக்கிட்டு,  மகளுக்காக சிலபொருட்களை வாங்கிக்கலாமுன்னு கிளம்புனோம். லோட்டஸுக்கு வெளியே வந்தால்  எதிரில் நின்னுக்கிட்டு இருந்த ஆட்டோக்காரர் ஓடிவந்து கோபாலிடம், 'ஸார் நிஜமாவே அவ்ளவுதான் சார்ஜ்'ன்னார். இவரும்  அம்பது ரூ எடுத்துக் கொடுத்துத்தார். நன்றி சொல்லி அதை வாங்கிக்கிட்டுப் போனார் ஆட்டோக்காரர்.

நாந்தான் 'ஙே'ன்னு முழிச்சேன். அப்புறம்தான் கதை  தெரியவந்தது:-)

காலையில் எங்கும் போகவேண்டி இருக்காதுன்னு நம்ம சீனிவாசனை மாலை நாலுமணிக்கு வரச்சொல்லி இருந்தாராம். மதியம் சாப்பாட்டுக்குப் பின் தையற்கடைக்குப் போனாங்க பாருங்க. அப்ப அண்ணன் வண்டியில் போகாம  இங்கே ஆட்டோ எடுத்துருக்காங்க. பார்க்கிங் பிரச்சனை. எப்படியும்  அங்கே ஒரு  கால் மணியாவது  ஆகும்தானே ?ஆட்டோக்காரருன்னா எப்படியாவது  எங்கியாவது பார்க் பண்ணிருவாரே. போகவரன்னு சொல்லி இருக்காங்க.

டெய்லருக்கும் வர்றதாத் தகவல் சொல்லிட்டதால் அவர் எல்லாத்தையும் எடுத்து ரெடியா வச்சுருந்தாராம்.( இதுவே ஒரு அதிசயம்தான் போங்க!) ராம்ஸ் பில்டிங் போனதும்  துணிகளுக்குக் கணக்கை செட்டில் செஞ்சுட்டு உடனே  வந்துட்டாங்க. ஆட்டோக்காரர் அம்பதுன்னு சொன்னதுக்கு  அண்ணன், அதெல்லாம் ரொம்பவே அதிகம். அதிகநேரம் வெயிட்டிங் கூட இல்லை. நாப்பதே அதிகமுன்னு எடுத்துக் கொடுத்துருக்கார்.  ஆட்டோக்காரர், அம்பதுதான்னு கேட்டுப்பார்த்துட்டு,  எனக்கு வேணாம் சார்ன்னு காசை வாங்கிக்கலையாம். நம்மை அடையாளம் வச்சுருந்துருக்கார் போல. அதான் இப்போ நாம் வெளியே  வந்ததும் கேட்டுருக்கார்! கிடைச்சுருச்சு. என்னைக்கேட்டால் அம்பது ஓக்கேன்னுதான் இருக்கு. ஒருநாள்  பாண்டிபஸார் சரவணபவன் போக நாப்பது கொடுத்தமே.  இப்ப போகவர அம்பது சரிதானே?

அண்ணன்  ஆட்டோவில் போயே பலவருசங்களாச்சு.  பூனாவில் ஒரு  காலத்தில் (ஒரு  நாப்பது நாப்பத்தியஞ்சு  வருசங்களுக்கு முன்) போயிருப்பார். அப்புறம் ராஜ்தூத்,  ஸ்டேண்டர்ட், மாருதி என்றானபின்  ஆட்டோ பிடிக்கச் சான்ஸே இல்லை.  அந்த ஸ்டேண்டர்ட் காரை ஓட்டிப் பழகுனபோது  தைரியமா அவர்கூட வண்டியில் போன வீரன் நம்ம ச்சிண்ட்டு என்பதையும் சொல்லத்தான் வேணும்:-)

 சென்னைக்கு வந்தபிறகு  மாருதி போய், ஹூண்டாய்  வந்தது. இப்படியாக  இருக்கும்போது செய்திகளில் ஆட்டோக்காரர்கள் ரொம்பவே மோசம் என்றதையெல்லாம் கேட்டுட்டார் போல!  ஒரு சிலர் நியாயமா இருக்கத்தான் செய்யறாங்க. அந்த சிலர் யாருன்னுதான் நமக்குத் தெரியமாட்டேங்குது!

தொடரும்............  :-)







11 comments:

said...

சுயரூபம் வேறா...? ஹா... ஹா...

said...

இப்பொழுதெல்லாம் வயதான மனிதர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கின்றேன். அவர்களின் நடைமுறை வாழ்க்கை, எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இடைவெளி என்று எல்லா விதங்களிலும். இங்குள்ள புகைப்படங்களில் அத்தனை இடங்களிலும் இளமை ததும்பி வழிகின்றது. உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அழகான உடைகள், பாவனைகள் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே ஒரு புகைப்படம் மட்டும் உங்கள் ஃபேஸ்புக் முகப்பு படமாக போடுவதற்கு அழகாக அம்சமாக வந்துள்ளது.

said...

மாதாமகியைப் பிதாமகி எனச் சொல்லி இருக்கும் தமிழ்குஷி.காமுக்கு மாணவர்கள் சார்பாக என் வன்முறையான கண்டனங்கள். அது என்ன தூ1?

said...

பெண்கள் குழு .. super

இப்போது சில்க் காட்டன் எல்லா நிறங்களையும் கிடைக்கிறது... அடுத்த முறை முயற்சி செய்யுங்க ...


said...

மகளிர் அணியின் அமர்க்களம் அசத்தல்!

said...

வெகு நாட்களுக்குப் பிறகு உங்களின் தளத்திற்கு வந்தேன். இந்தப் பதிவைப் படிக்கப்படிக்க என்னுள்ளும் ஒரு உற்சாகம். இதுபோல நானும் உங்களை ஒருமுறை சந்திக்க வேண்டும். சீக்கிரம் அந்த நாள் வரட்டும். உங்களுடன் கூட வல்லியையும் பார்க்க வேண்டும்.

said...

ஒரு வருஷமும் ஆச்சு. நல்ல சாப்பாடு நல்ல நாள்.ரஞ்சனி அடுத்த தடவையாவது பார்க்கலாம்.

said...

You are lucky; the auto driver contacted you and you paid him. My late uncle (let peace be on him) was stinking rich, no kids but an extreme miser in spite of being a cancer patient. He came for Kochi to his relative’s house on auto; refused to give the charge the auto driver asked (which was reasonable). The auto driver refused to accept the payment, cursed him and took off.
He later came to the charge was reasonable and took a taxi and searched for the auto driver, but could not find him! My uncle had the guilty feeling and have to die with that. It added more pain to his Kemo.

said...

ஆகா... இப்பிடியொரு சந்திப்பு நடந்திருக்கா? அடுத்த வாட்டி நீங்க வர்ரப்போ எனக்கும் சொல்லுங்க. சந்திப்போம். சஷ்டியப்தபூர்த்தியில் பாத்தது :)

said...

அந்த நல்ல ஆட்டோ ஓட்டுனருக்கு ஒரு வாழ்த்து!

சந்திப்பு மிகவும் சந்தோஷமாக இருந்ததை படங்கள் பறை சாற்றுகின்றன....

said...

அஹா மகளிர் அணி.. சூப்பர் சந்திப்பு துள்சி :)