நம்ம சண்டிகர் வாழ்க்கையில் அங்கே இருக்கும் முருகன் கோவிலைப் பத்தியும், லார்ட் முருகன் பக்த சமாஜின் உயிர்நாடியா இருக்கும் முருகனின் காரியதரிசி ஆல் இன் ஆல் ராஜசேகரைப் பற்றியும் கேக்கறவங்க காது அறுந்துபோகும் அளவுக்குச் சொல்லி இருந்தேனே.... யாருக்காவது ஞாபகம் இருக்கோ? இன்னும் சுருக்கமாச் சொல்லணுமுன்னா முருகனின் பி ஆர் ஓ இவர்! அட்டகாசமான நிர்வாகி! அதான் 'ஆல் இன் ஆல்'னு நானே ஒரு பட்டம் அளித்தேன்!
அவருடைய மூத்த மகளுக்குக் கல்யாணம். 'ராதா கல்யாணத்துக்கு வாங்க'ன்னு நமக்குப் பத்திரிகையை முருகனே அனுப்பி இருந்தார். நம்ம இந்தியப் பயணம் இந்தசமயத்தில்தான் என்றாலும் சிங்கம்புணரியில் நடக்கும் கல்யாணத்துக்குப் போகமுடியுமுன்னு தோணலை. அசல் செட்டிநாட்டு அதென்டிக் கல்யாண அனுபவத்தை மிஸ் பண்ணிட்டேனே :-(
திரும்ப எல்லோரும் சண்டிகர் போகுமுன் சென்னையிலே(யும்) ஒரு வரவேற்பு வச்சுருக்காங்க. அதுக்கும் போகும் ஐடியா இன்று மதியம் வரை இல்லை. இங்கே ஆஸ்ரமத்தில் பாபாவின் விருந்தினராக இருக்கப்போறோம். அவர் என்ன திட்டம் வச்சுருக்காருன்னு தெரியலை பாருங்க.
ஆனால்... இப்ப பாபா ஊரில் இல்லை. பூஜைகள் எல்லாம் நேத்தும் இன்றுமா அனுபவிச்சுக்கிட்டு இருக்கோம். பேசாம இங்கிருந்தே அந்த ரிஸப்ஷனுக்குப் போயிட்டு வந்தால் என்ன? அதுதான் சரின்னு நம்ம சுசீலாவிடம், மாலை வெளியே போய்வரும் திட்டம் சொல்லிட்டுக் கிளம்பினோம்.
மணி இப்போ நாலு. விழா ஆறரைக்குத்தான். அதுக்குள்ளே நேரா அடையார்போய் அனந்தபதுமனைத் தரிசனம் செஞ்சு, கேரளா & தமிழ்நாடு பயணம் நல்லபடியா முடிஞ்ச சேதியைச் சொல்லிப்பிட்டு, நம்ம சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷின் பெற்றோர்களைப் போய்ப் பார்த்துக்கலாமுன்னு முடிவு.
இவுங்க எனக்கு இன்னொரு அப்பா அம்மாதான். நம்ம வீடு என்ற உரிமையில் போவேன். ஆனால் மாமின்னு கூப்பிடும் வழக்கம்:-) முதலில் மாமி வீட்டுக்குப் போயிடலாமுன்னு நம்மவர் சொல்லிப்பிட்டார். பெரியவங்களைப் பார்த்தால் பெருமாளைப் பார்த்தமாதிரிதானே! அப்படியே ஆச்சு. ஒருமணி நேரம் ஓடியே போச்சு.
அங்கிருந்து நேரா அனந்தபதுமன். கோவிலில் கொஞ்சம் கூட்டம். இஷ்டசித்தி விநாயகருக்கு ஒரு கும்பிடு. பதுமனிடம் கொஞ்சம் பேச்சுன்னு வழக்கம்போல் எல்லாம்.
அங்கிருந்து கிளம்பி வேளச்சேரி அடையார் ஆனந்தபவன். இங்கே மாடியில் இருக்கும் பிருந்தாவன் ஹாலில்தான் விழா.
ராஜசேகர் குடும்பத்துக்கு நம்மைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி! கூட்டத்தில் கொஞ்சம்பேர் நமக்கு ஏற்கெனவே தெரிஞ்சவங்கதான்! மத்தவங்களுக்கு எழுத்தாளர்னு அறிமுகப்படுத்தி வச்சார்! உடனே என்னமோ ஒரு மரியாதை அவர்கள் கண்களில் தெரிஞ்சதா எனக்கொரு தோணல். (நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குதோ!)
ரெண்டு சம்பந்திகளும்! வெறும் வெள்ளை சட்டை நம்ம ராஜசேகர்!
பொண்ணு மாப்பிள்ளை ஜோடி பிரமாதம்! சின்னப்பொண்ணு ராதா! அதுக்குள்ளே கல்யாணமான்னு வியப்புதான் எனக்கு! சொல்லவும் செஞ்சேன். ஆச்சே இருபத்தியொன்னுன்னாங்க பொண்ணோட அம்மா:-)
வரவேற்புன்னதும் சத்தமா ம்யூஸிக், சினிமாப் பாட்டுக்கச்சேரின்னு இரைச்சலைக் கூட்டலை! முக்கியத்துவம், வரும் விருந்தினர் அனைவரோடும் கலந்து உரையாடவும், பொண்ணு மாப்பிள்ளையை ஆசீர்வதிக்கவும் மட்டுமே! எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சுன்னு தனியாச் சொல்லணுமா?
பழைய நண்பர்களை இப்படி விழாக்களில் சந்திக்கும்போது எவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கு!
சாப்பாடு அட்டகாசம்! கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து வந்துக்கிட்டே இருந்தது! எக்கச்சக்க ஐட்டங்கள்.
எட்டரைக்குக் கிளம்பி ராமராஜ்யத்துக்குத் திரும்பி வந்தோம். இன்றைக்குக் கிருத்திகை என்றபடியால் பழனி கார்டனில் முருகனுக்கு மாலையிலும் ஒரு விசேஷ பூஜை. அதிகாலையில் அபிஷேகம் பார்த்தமே அவருக்குத்தான். அதுமுடிஞ்சு இங்கே பெரிய கோவிலில் பூரணப்ரம்மத்துக்கும் பூஜைகளுண்டு.
எல்லாம் இந்நேரம் முடிஞ்சு இருக்குமேன்னு நினைச்சு வந்தால்..... வாசல் கேட்டிலேயே தகவல் வந்துருச்சு. இப்பதான் பழனி கார்டனில் இருந்து எல்லோரும் திரும்பி வந்தாங்கன்னார் செக்யூரிட்டி. ஆஹான்னு நேராப் பெரிய கோவில் போனோம்.
'நல்ல சமயத்துக்கு வந்துட்டீங்க'ன்னு சுசீலா சொன்னாங்க. "அங்கே பழனி கார்டனில் பூஜைகள் விரிவா நடந்ததால் அதை முடிச்சுட்டு இப்பதான் வந்தோம்!"
பாபா ஊரில் இருக்கும் நாட்களில் அவரும் வந்துருவார். சத்சங்கம் கூடிரும்! நமக்குத்தான் இதை அனுபவிக்கக் கொடுத்துவைக்கலை போல :-(
வழிபாடுகள் முடிஞ்சது. அர்த்தஜாம பூஜை முடிச்சு, அலங்காரங்கள் எல்லாத்தையும் அவிழ்த்துக் கொடுத்துட்டு ஹாயா இருக்கப் போறேன்னுட்டார் பெருமாள்! எவ்ளோ அழகு! ஸ்வீட் அண்ட் சிம்பிள்!
சந்நிதியை மூடியாச்சு! குறைஞ்சபட்சம் கம்பிவழியாகத் தரிசனம் கிடைக்கும் எப்பப்போனாலும், இல்லே!
நிலா வெளிச்சம் ! மெள்ள நடந்து அறைக்குப்போனோம். வழியில் கோகுலத்தில் படுக்க ரெடியா பசுக்களும் கன்றுகளும். பளிச் லைட்டை அமர்த்திட்டு ஒரு நைட் லேம்ப் மட்டும் போடுவாங்கன்னு நினைக்கிறேன்.
நாமும் படுக்க வேண்டியதுதான். நாளைக் காலை ஆறுமணிக்கு யாகம் நடக்குது. நாமும் கலந்துக்கப் போறோம்!
தொடரும்........:-)

9 comments:
இன்று ஒரு ஆச்சரியமான ஒற்றுமை
இருவரும் இன்ப அதிர்ச்சியினை குறித்து
எழுதி இருப்பது
தங்கள் அற்புதமான படங்கள் மற்றும்
விளக்கங்கள் மூலம் நாங்களும் தரிசித்தோம்
மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
எங்க ஊர்க்காரங்க... அவங்களைப் பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி! :)
படங்கள் அனைத்தும் அழகு.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.
வாங்க ரமணி.
உங்களை இங்கே பார்த்ததும் இன்ப அதிர்ச்சிதான் :-)
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க வெங்கட் நாகராஜ்.
அட! உங்க ஊர்க்காரவுகளா? ஆஹா ஆஹா!
அந்த நேரத்தில் மதுரைப் பதிவர் விழாவுக்குப் போகும் முஸ்தீபுகளில் இருந்தேன் உங்கள் பதிவு என்றால் உம்மாச்சி மற்றும் தின்பண்டப் புகைப்படங்களே நினைவுக்கு. வாழ்த்துக்கள்.
பெண்ணும் மாப்பிள்ளையும் அலங்காரங்களும் ரெம்ப அழகு. அவர்களுக்கு எங்கள் ஆசிர்வாதங்களும் சொல்லி விடுங்க! அப்புறம் இத்தனை நாள் கழித்தும் நினைவில் வைத்து அருமையாய் எழுதிய உங்கள் எழுத்துக்கள் இன்னும் ரெம்ப ரெம்ப அழகும்மா. உணவுப்படையெடுப்பில் குட்டிகுட்டியாய் வட்டமாய் வெட்டி வைத்திருப்பதன் பெயர் என்னவோ?
மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்! ராதா கல்யாண வைபோகத்தை அழகாகக் காணத் தந்திருக்கிறீர்கள்:).
மணமக்களுக்கு வாழ்த்துகள். எல்லா வளமும் இன்பமும் பெற்று வாழ்க.
அடையாறு பத்து கோயில்.. டீச்சர் ரொம்பப் பக்கம் வந்திருக்கீங்க. அடுத்த வாட்டி வரும் போது சொல்லுங்க :)
அடையாறு ஆனந்தபவன் இந்த ஏரியால ஒரு நல்ல சைவச் சாப்பாட்டுக்கடை. எண்ணெய் வழியும் சங்கீதாவை விட ஆனந்தபவன் எவ்வளவோ மேல்.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
முருகன் P.R.O தம்பதிகளான, அப் பெற்றோர்க்கும் வாழ்த்துக்கள்:)
கல்யாணச் சமையல்-ன்னாலே, அதுல ஒரு தனி வாசம் தான்:) எனக்கு ரொம்பப் புடிக்கும், கல்யாணச் சாப்பாடு மட்டும்:)
உருளைக் கிழங்கு பொரியல் பாக்கவே நல்லா விறுவிறு-ன்னு இருக்கு! ரசஞ் சோறுக்கு ஆகும் ஆகும்-ன்னே ஆக்கிப்பேன்:)
அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டீர்களா, டீச்சர்?:)
மேடையில் எல்லாரும் புடைவையில் எளிமையா இருக்க..
எங்க டீச்சர் மட்டும் நீலப் பட்டுச் சல்வாரில் மின்னுறாக!:)))
Post a Comment