Monday, October 05, 2015

அர்பன் விவசாயியின் அலட்டல்கள்.

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லைன்னு நம்மைவிட இந்த மரம் செடிகொடிகளுக்கு நல்லாவே தெரிஞ்சுருக்கு.  அதிலும் குறிப்பாக இந்தக் குளிர் காலம் முடிஞ்சு வசந்தகாலம் வருது பாருங்க.  அது என்ன கணக்கு வச்சுருக்குதுங்களோ!  இங்கே நியூஸியில் அஃபிஸியல் குளிர் காலம் ஆகஸ்ட் 31 முடியும். மறுநாள் செப்டம்பர் முதல் தேதி முதல் வசந்தம்.

எப்பவோ வாங்கி நட்டு வச்சுருந்த  பல்புகள் எல்லாம் வெளியே தலை காட்ட ஆரம்பிச்சுரும்.  அதிலும் டாஃபடில் என்னும் பூக்கள் இன்னும் கொஞ்சம் விவரமானதுகள்.  குளிர் முடியும் கடைசி ரெண்டு வாரங்களுக்கே   மஞ்சள் முகம் காட்டிக்கிட்டு நிக்கும். ஆகஸ்ட் கடைசி வெள்ளிக்கிழமை, இங்கே கேன்ஸர் சொஸைட்டி டாஃபடில் டேன்னு  ஊரின் பல இடங்களில்  புற்றுநோய் ஆராய்ச்சிகளுக்கு நிதி சேகரிப்பு வேண்டி ,  (செயற்கை) டாஃபடில் குவிச்சு வச்சுருப்பாங்க. அவுங்க  உண்டியலில்  கொஞ்சம் காசு போட்டுட்டால் நமக்கு ஒரு பூ கிடைக்கும். சட்டையில் குத்திக்கலாம். இந்த வசூல் எல்லாம் வாலண்டியர்கள் செஞ்சு கொடுப்பதுதான்.

எங்கூர் பொட்டானிக்கல் கார்டனில்  டாஃபடில் லான் என்றே ஒரு பரந்த  புல்வெளி உண்டு.  அங்கே கூட்டங்கூட்டமாய்  பூத்து நிற்கும் பூக்கள் சொல்லமுடியாத அழகு. இது நம்ம  வீட்டுப் பூ.  ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு மலர்ந்து நிக்குது பாருங்க.

ஏர்லி ச்சியர்ஸ்ன்னு இன்னும் ஒரு வகை இருக்கு.  ஒரு தண்டில் ஆறு அல்லது ஏழு பூக்கள் கொத்தாக வரும்.  மணமோ..... மனதைப்பிடித்து இழுக்கும். மல்லிப்பூ வாஸம்.

இலையுதிர் காலத்தில், இந்த பல்புகளை வாங்கி நட்டு வச்சுட்டு மறந்து போகலாம். குளிர்காலம் முடிஞ்சு வசந்தம் வந்ததும் எல்லோரும் தலை நீட்டி  எட்டிப் பார்த்துருவாங்க. இந்த வருசம் ஏப்ரலில் நான் ஏர்லி ச்சியர்ஸ் பல்புகளை மட்டுமே வாங்கி நட்டேன். அடுக்களை  ஜன்னலில் இருந்து பார்த்தால் இப்படி இருக்கு !

இந்தப் பூக்களைப் பறிக்காமல் செடியிலேயே விட்டு வச்சாலும் சரி, இல்லே கட் பண்ணி ஃப்ளவர்வாஸில் வச்சாலும் சரி ஒருபத்து நாளைக்கு வாடுவதே இல்லை. நாந்தான் ஒரு தப்பு செஞ்சுட்டேன்.  பல்புகளை  மூணு பங்காப் பரிச்சு ரெவ்வெண்டு வார இடைவெளியில் நட்டுருந்தால்  பூக்கள் தொடர்ச்சியா ஒரு ரெண்டு மாசத்துக்கு வந்துருக்கும்.  எல்லாத்தையும் ஒரேடியா நட்டதால் தோட்டத்தில் நிறையப் பூக்கள் இருக்கு இப்போதைக்கு!

ஹையாசிந்த்ன்னு  ஒரு வகை. இதுவும் டாஃபடில்போல் ஊருக்கு முன்னாலே பூத்துரும். நல்ல மணமும் உண்டு.  நம்ம வீட்டுலே நாலு வருசமா  இருக்கும்  பல்புகளில் இருந்து  வருசாவருசம் தவறாமல் முளைச்சு வந்து பூத்துட்டுப் போயிருச்சு.  கடமை தவறாத கண்ணியம்!

செர்ரி ப்ளாஸம்  சீஸனும்  இப்போதான்.  சமீபகாலமா ஊரெங்கும்  செர்ரி மரங்களை நட்டு வச்சுருக்காங்க.  முந்தியெல்லாம்  எங்க ஹேக்ளி பார்க்கை ரெண்டாப் பிரிச்சுப் போட்டச் சாலையின் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும். நம்ம பழைய வீட்டில்கூட ஒரு செர்ரி மரம் இருந்தது.  இந்த வகை மரங்கள்  வெறும் பூக்களுக்கு மட்டுமே.  தின்னும் செர்ரிப் பழம் இதுலே கிடைக்காது.
இந்த வசந்தத்துக்கு நாம் என்ன செஞ்சோமுன்னு பார்க்கலாம்.  முதல்மாசம் (செப்டம்பர்) முழுசும் உடம்பு சரியில்லாமப் போனதுடன், வெளியே தலை காட்டமுடியாதபடி தொடர்மழையும் குளிரும்  :-(   உருப்படியா ஒன்னுமே செய்யலை.

grow  bag ஒன்னு  வாங்கியது அப்படியே கிடக்கேன்னு  பிரிச்சுப் பார்த்தால்.....  அம்மாடியோவ்!   இதுக்கே  அஞ்சு பைகள்  பாட்டிங் மிக்ஸ் ( 40 லிட்டர் X 5 ) போடவேண்டியதாப்போச்சு !   தக்காளி, லெட்யூஸ் நட்டு வச்சுருக்கோம்.  செடிகளாகவே  வாங்குனதுதான்.
ECO Shopலே ஒரு பாத் டப் ஸ்டேண்டோடு கிடைச்சது. அதை வாங்கிவந்து  பாட்டிங் மிக்ஸ் ரொப்பி,  காலி ஃப்ளவர் (முதல்முறையாக)  சின்ன வெங்காயம், (இது ரெண்டும்   ரெடிமேட். குழந்தைச் செடிகளா வாங்குனது)  கூடவே ஒரு ஓரமா  Gherkins விதைகள்  போட்டுருக்கேன்.






நேத்துக் கடைக்குப்போனபோது கோபாலின் கண்ணில் வெண்டைக்காய் விழுந்துருச்சு.  மற்ற விதைகளைப்போல் இல்லாமல் ரெண்டு மடங்கு விலை. ஒரு  பத்துப்பனிரெண்டு விதைகள்கொண்ட பாக்கெட் இது.  ஆறு விதைகளை மட்டும் ஒரு தொட்டியில் நட்டு வச்சுருக்கேன். வருமான்னு தெரியலை.  விதைப் பாக்கெட்டிலும் நியூஸியின் வடக்குத் தீவில் மட்டும் முளைக்குமுன்னு படம்போட்டு வச்சுருக்கு. அப்ப ஏன் நம்மூர் கடைகளில் வச்சுருக்காங்க?


சமையலுக்கு வாங்கின பூசணியின்  விதைகளைப் போன சம்மரில் போட்டு வச்சுருந்தேன்.  அதுலே பூ பூத்து, ஒரு காய் கூட வந்துச்சு.  பிஞ்சாக இருக்கும்போதே   குளிர் வந்துட்டதால்  அப்படியே எல்லாம் கருகிப்போச்சு.  மார்ச் கடைசி வரை தாக்குப்பிடிச்சது பாவம்!  பாக்கி இருந்த விதைகளில் கொஞ்சத்தை இப்பவே தூவி விட்டுருக்கேன்.  பூ வந்தால் மார்கழிக் கோலத்துலே வைக்கலாம்!


குளிர்காலமா இருந்தாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியும் மனசுக்கு மகிழ்ச்சியையும் தரட்டுமேன்னு கடைகளில்  பூவோடு விற்கும் செடிகளை, குறிப்பாக  பாலியந்தஸ் வகைகளை   தட்டுக்கு ஒன்னா  அடுக்கி வைப்பது உண்டு.  இதுக்குன்னே ஒரு  மூங்கில் ஷெல்ஃப் வச்சுருக்கேன்.  வீட்டுக்குள்ளே கன்ஸர்வேட்டரியில் வைப்பதுதான்.

வருசத்துக்கு ஒரே பூ மட்டும் பூக்கும்  சாந்திச்செடி (Peace Lily)  இந்தமுறை அதிசயத்திலும் அதிசயமா ரெண்டு மொட்டுகளோடு வந்துக்கிட்டு இருக்கு.  பூத்து நிக்கும்போது  ரொம்ப  அழகா  இருக்கும்.   செடியிலேயே விட்டு வச்சால் பூவும் ஒரு மூணு வாரத்துக்குத் தாக்குப் பிடிக்கும்.

போனவருசம் நம்ம வெங்காயச்செடிகளில் பூக்கள் பூத்து  காய்ஞ்சு போனதும்  விதைகளை எடுத்து வச்சுருந்தேன்.  ஒரு பரிசோதனைக்காகக் கொஞ்சம் எடுத்து ஒரு தொட்டியில்  நட்டுவச்சதில்  புல்மாதிரி முளைச்சு வந்துருக்கு.

சமைக்க வாங்கி வச்சுருக்கும் வெங்காயங்களில்  சில  முளைக்க ஆரம்பிக்கும் பாருங்க.... அவைகளை அப்படியே நட்டு வைப்பதுதான் வழக்கம்.  அவைகளும் இப்போ நல்லாவே வளர்ந்து நிக்குதுகள்.


சமையலுக்கு வாங்கும்  காய்ஞ்ச மிளகாயில் இருக்கும் விதைகளையும் சின்னச்சின்ன தொட்டிகளில் விதைச்சுருக்கேன்.  வளர்ந்து  நாத்து பிடிச்சால் இடம் மாற்றி பெரிய தொட்டிகளில் நடணும்.

எங்கூர் மார்கெட்டில்  நாத்துகளே விலைக்கு வரும்.  ரெண்டு செடிகள்  இருக்கும்  சின்ன தொட்டிகள் ரெண்டு டாலர். கத்தரிக்காய், மிளகாய், வெள்ளரி எல்லாம் கிடைக்கும்.  ஆனால்  இன்னும் சரியான காலநிலை வரலை. அநேகமா அக்டோபர் கடைசியில்தான்  வருமாம்.


இன்னும்  அஞ்சு மாசம் வெயில் இருக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இன்னும் கொஞ்சம் செடிகளை நட்டு வைக்கணும். கிடைக்கும்  வகைகளைப்பொறுத்துதான் எல்லாமே!



விதைக்கிற காலத்தில் விதைச்சால்தான் அறுக்கிற காலத்துலே அருவாளைத் தூக்கமுடியுமாம்!  அதனால் கூடியவரை  விதைச்சு வச்சுருக்கோம்.

 பார்க்கலாம் எப்படி வரப்போகுது என்பதை!


22 comments:

said...

அர்பன் விவசாயி.....

செடிகள் பார்க்கும்போதே பரவசமூட்டுகின்றன.

தொடரட்டும் அலட்டல்கள்.....

said...

(y)

said...

வாவ் !! சூப்பர் சூப்பர் . துளசிதளம்ல ரொம்ப பிடிச்ச segment இந்த gardening . நான் தோட்டம் போட்டா என்ன feel பண்ணு வேனோ அதே சந்தோசம் உங்க தோட்டத்தை பார்க்கும் போதும் . அப்பபோ அப்டேட் படங்களோட பண்ணுங்க ப்ளீஸ் . காலிப்ளவர் , நானும் ஆவலோட இருக்கேன்.உங்க தோட்டத்தோட தீவிர ரசிகை நான் .கோபால் அவர்களுக்கும் சொல்லிடுங்க.அருமையான தண்ணீர் ஊற்றும் யானை can :))))

said...

எல்லா விவரமும் அசர வைக்கின்றன துளசி. வாசனை மலரைப் பார்த்ததும் ஒரே சந்தோஷம்.
தோட்டத்து பின்புறக் கண்ணாடியில் பெருமாள் மாலையோடு காட்சி தருகிறாரே.

பாட்டிங்க் பை ஏக பிரம்மாண்டம். வைத்ததெல்லாம் நன்றாக வரட்டும்..
தொங்க வைத்த சட்டிப் பாம்புகளைப் பார்த்தாலே சில்லுனு பயமாக இருக்கிறது..

வளமான விவசாயி உடல் நலத்தோடு நன்றாக இருக்கணும்.

said...

haiyoooooooooooooooooooooooo
டீச்சர், early cheers அற்புதம்; வெண்பட்டு வெள்ளை!
Daffodil & Hyacinth மலர்களும், எனக்கு ரொம்பப் பிடிக்கும்:)
தோட்டம் இருக்கு-ன்னு சொல்லியிருந்தீங்க-ன்னா, முன்னமே ஒங்க வீட்டுக்கு வந்திருப்பேனே? இப்போ Australia வரும் போது, அப்படியே கெளம்பி வரவா?:)
--

Urban விவசாயி ஆனாலும் ஆத்மார்த்த விவசாயி தான்!

வாழைப்பந்தல் கிராமத்தில் இருந்து நாங்க சென்னை குடிபெயர்ந்த போது, சிறு பையனாய், எனக்குச் சென்னை ஒட்டவே இல்ல!
அப்போ, ஒரே ஆறுதல்= தோட்டக் கலை & பூந்தொட்டிகள் தான்! மேல் மாடியில் முதலில் வைச்ச பூ= கனகாம்பரம் & முதலில் வைச்ச காய்= வெங்காயம்:))) வெங்காயத் தாள் வாசனை கிள்ளிப் பார்த்தாலே கிறுகிறுக்கும்!

பல பின்னூட்டங்களிலேயே பாத்திருப்பீங்க, பூக்கள் மேல் எனக்கோர் ஆரா ஆவல்:)
ஊருல, பசங்க கிண்டல் அடிப்பானுங்க!:)
இருப்பினும்.. மகிழம் பூ, செண்பகம், செவ்வந்தி, பிச்சிப்பூ, முல்லை, கனகாம்பரம் ரொம்பப் புடிக்கும்:)
நீங்க திருவரங்கம் கோயில், தாயார் சன்னிதியில், பூக்கடை படம் போட்டிருந்தீங்களே? அப்படியே சொக்கிப் போனேன்:)
--

அம்மா அப்பா, சென்ற ஆண்டு இங்கு வந்திருந்தாங்க! நான் தனியா இருப்பதைப் பார்த்துட்டு, அம்மா இங்க சின்ன தோட்டம் வச்சிட்டுப் போனாங்க.. அதைப் பராமரிக்கும் சாக்கிலாவது, கொஞ்சம் உற்சாகம் பிறக்கும்-ன்னு!

நாட்டு ரோஜாப் பூ/ செம்பருத்தி தான்; இப்போ பெருசா வளர்ந்து Climbing Rose ஆயிருச்சி:) ஒரு பெரிய சுழல்குழல் இருக்கு; சமையலறைக் குழாயில் பொருத்தி, இழுக்க இழுக்க வரும்! கொண்டு போய் நீர் ஊற்றலாம்:)
பல ரோஜாக்களைச் செடியிலேயே விட்டுருவேன்; முருகன் - பெருமாளுக்கு மட்டும் ரெண்டே ரெண்டு:)
--

Urban விவசாயி-ன்னதும் நினைவு வருது; என் தோழன், Flatலயே குட்டித் தொட்டியில் துளசி வளர்ப்பான்:)

Head Office Amsterdam போகும் போது, அங்கேயே மாத்தல் வாங்கிக்கிட்டுத் தங்கிறலாமா?-ன்னு தோனும்; அத்தனை விவசாய நிலம், ஊரை ஒட்டினாப் போலவே!
என் அலுவலக நண்பர்கள், வேளாண் வீட்டுல தான் 'ஒன்னா' வாழுறாங்க;
விவசாயம் பாத்துக்கிட்டே, வங்கி வேலைக்கு வருவாங்க!:) நான் போனா விட மாட்டாங்க; தோட்டத்து Salad சாப்பிடச் சொல்லியே மூழ்கடிச்சிருவாங்க:)

அவங்களைப் பார்க்கப் பார்க்க, அதே போல், வீட்டை ஒட்டிய வயலில் வாழ, ரொம்ப ஆசை வந்துருச்சி டீச்சர்:))

said...

அந்த யானை water can நான் பாத்துட்டேன்
அதே போலொரு மயில் water can வாங்கப் போறேன்:)

நீங்க துளசிப் பத்தி நட்டு வச்சி வளர்க்கலாமே? வீட்டுல ஒன்னுக்கு ரெண்டா துளசி இருக்கும்:))
பூசணிப் பூ அழகு!

//பிஞ்சாக இருக்கும்போதே குளிர் வந்துட்டதால் அப்படியே எல்லாம் கருகிப்போச்சு. மார்ச் கடைசி வரை தாக்குப்பிடிச்சது பாவம்!//

இந்த ஒரே பயம் தான் எனக்கு.
செடிக்கு ஏதாச்சும் ஆயிருச்சின்னா, மனசு கேட்காது; ரொம்ப வருத்தமான Moodக்குப் போயிருவேன்.
நாம இன்னும் பாதுகாப்பா இருந்திருக்கலாமோ? -ன்னு சுய விசாரணை ஆரம்பிச்சீரும்:)

செடி, Seasonal Plants கடந்து.. New Zealandஇல் மரம் வளர்க்க முயற்சி பண்ணி இருக்கீங்களா டீச்சர்?
எலுமிச்சை, கறிவேப்பிலை.. இப்பிடிக் குளிரில் அழிந்து விடாத மரங்கள்?

தோட்டத்தில், கோபால் சாருக்குப் பின்புறம் இருக்கும் சின்னப் படம்= திருச்செந்தூர் முருகனா?:)

said...

இருந்தாலும் அர்பன் விவசாயிக்குப் பாராட்டுகள். பள்ளியில் படிக்கும் போது ஆங்கிலக் கவிதை வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் எழுதியது சொனெட் வகை என்பார்கள் அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. கவிதை அல்ல 14 வரிகள் கொண்டது சோனெட் வகை என்பது.

said...

ஆஹா! உள்ளம் கொள்ளை போனதே .உங்களுக்கு வெயில் எங்களுக்கு autumn .வெந்தய கீரை மணத்தக்காளி எல்லாம் கிரீன் வீட்டில் வச்சிட்டேன் .
பல்ப் /2 வார இடைவெளி நல்ல ஐடியா .அக்கா ஒரு தொட்டியில் முளைக்கீரை போடுங்க க்விக்கா வரும் .மண த்தக்காளி வற்றல் பிச்சிபோட்டதில் நல்ல வந்தது .

said...

ஹைய்யா.. தோட்டப்பதிவுகள் வர ஆரம்பிச்சாச்சு :-))

தோட்டம் ஜிலீர்ன்னு இருக்கு. வேற என்னென்ன காய்கறிகள் விதைச்சிருக்கீங்க.

சாந்திச்செடி பூத்ததும் சொல்லியனுப்புங்க :-)

said...

அட ! என்ன அருமையான உணர்வுபூர்வமான அன்புடன் கூடிய ஒரு தோட்டம்...நம்ம சகோ ஏஞ்சலின் கூட இப்படித்தான்....

துளசிதரன்: எங்க வீட்டுலயும் தோட்டம் பெரிசு..கேரளா இல்லையா அதனால். நிறைய வீட்டுலயே முளைச்சுரும். பயறு, மிளகு, ஏலக்காய், சேம்பு, பப்பாயா, மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், இப்படி பல...அருமை....ரொம்பவே

கீதா: ஹும்...எனக்கு ஆசை ரொம்ப அதுவும் தோட்டம் ஆசை...எனக்குக் கொடுத்து வைக்கல எனக்குக் கொடுத்து வைக்கலனு அந்த தருமி மாதிரிதான்..அஹ்ஹஹ

இங்க சென்னைல என்ன பண்ணறது..காணி நிலம் வேண்டும் பராசக்தினு அவளக் கூப்பிட்டாலும், படத்துல வர மாதிரி "ஓடோடி வந்தேன் மகளே" அப்படினு கையை அபயஷஸ்தம் பண்ணிட்டா வராங்க...ம்ம்மஹஹ்...

ரொம்ப நல்லாருக்கு தோட்டம். குழந்தைகள் எல்லாம் நல்லா வளர்ந்து பூத்துக் காய்க்கணும்னு மேலருக்கறவனுக்கு பிரார்த்தனை மெயில் அனுப்பியாச்சு. பாருங்க நல்லா வரும்...காய்க்கும் போது எங்கள நினைச்சுட்டு சாப்பிடுங்க...ஓகேயா...

said...

அர்பன் விவசாயி நல்ல தலைப்பு வசீகரீகின்றது!!!

சரி பாலக் கீரை போடலாமே டக்னு பத்திக்கிட்டு வளந்துருமே....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவை வளரட்டும். அப்புறம் ஒருநாள் இன்னும் கொஞ்சம் அலட்டுவேன்:-)

said...

வாங்க உஷா.

நன்றீஸ் :-)

said...

வாங்க சசி கலா.

காலியில் பூ வரட்டும்!

இப்போதைக்குத் தக்காளியில் பூக்கள் வந்தாச்.

நம்ம தோட்டத்து பாலக் கீரையில் நேத்து பாலக் பனீர். வழக்கத்தைவிட சுவை அமோகம்!

said...

வாங்க வல்லி.

தினமும் மாலை நேரத்து தேநீர் இப்பெல்லாம் நம்ம க்ரீன் ஹவுஸ் பெஞ்சுலே உக்கார்ந்துதான்! நல்லா அனுபவிக்கிறேன் தோட்டத்தை!

அந்த மாலை.... துருபதன் அரண்மனை வாசலில் தொங்கும் மாலையாக்கும்:-))))
சட்டிப் பாம்பு.... ஹாஹாஹாஹா!

தோட்டக் கலைஞரின் தங்க்ஸ்க்கு தோட்டத்தின் அருமை தெரிஞ்சு இருக்கே! நன்றீஸ். பாரிஜாதத்தில் செடிகள் நலம்தானே?

said...

வாங்க கே ஆர் எஸ்.

மாதவிப் பந்தல்காரர், தோட்டப்பிரியராக இருப்பதில் வியப்பென்ன? :-)
இப்பத்தான் தெரிஞ்சுபோச்சே... தோட்டம் இருக்குன்னு. பேசாமக் கிளம்பி வாங்க! ஆனால் அக்டோபர் - ஃபிப்ரவரிக்குள்ளே வந்தால்தான் பூக்கள்!

நானும் இங்கே கஸாண்ட்ராவைத் தேடிக்கிட்டே இருக்கேன். அதான் கனகாம்பரம்! நாலு நாளைக்கு முன் கற்பூரவல்லி கிடைச்சது ஹெர்ப் செக்‌ஷனில். மதர் ஆஃப் ஹெர்ப் னு பெயர்!!!!

நான் பொதுவாப் பூக்களைப் பறிக்கவே மாட்டேன். பெருமாளுக்கு வேணுமுன்னா அவரே தோட்டத்தில் போய் பூவை ரசிக்கட்டும்!

துளசி ரெண்டுமுறை வச்சும், குளிர்காலம் ஆரம்பிச்சதும் ஒயிட் ஃப்ளை, ஆஃபிட்ஸ் பாதிப்பில் போயிருச்சு. வீட்டுக்கு ஒன்னு போதுமுன்னு விட்டே விட்டுட்டேன்:-)

கறிவேப்பிலையும், வாழையும் புனரபி மரணம், புனரபி ஜனனம் என்று இருக்கே! எலுமிச்சைக்கு இந்த வருசம் போர்த்திவிட்ட ஃப்ராஸ்ட் க்ளாத், தன் கடமையைச் செய்யத் தவறியதால் எலுமிச்சைச்செடி இப்போ நித்யசூரியா போயிட்டது. புதுச்செடி வாங்கிவந்து வச்சுருக்கேன்.

கடுமையான & கொடுமையான குளிரில் பாவம்.... செடிகள் :-(

said...

வாங்க ஜி எம்பி ஐயா.

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்.

said...

@ கே ஆர் எஸ்,

சொல்லவிட்டுப் போச்சு. அவர் புள்ளையார்!

said...

வாங்க ஏஞ்சலீன்.

இங்கே ஸ்பினாச் தவிர வேற கீரைகளே இல்லையேப்பா. ஒருமுறை எதோ ஒரு பண்ணையில் பிக் யுவர் ஓன் போனபோது அங்கே களைகள் என்று ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் நம்மூர் கீரை போல ஒன்னு பார்த்துட்டு, அந்த விதைகளைக் கொண்டு வந்தேன். அதுதான் இப்போ வருசாவருசம் வந்துக்கிட்டு இருக்கு. இளம் கீரையா இருக்கும்போதே சமையலுக்கு எடுத்துருவேன். நாலைஞ்சு செடிகளை மட்டும் விதைக்கு விட்டுருவேன். மணத்தக்காளி தானே முளைச்சு வருது. அது இந்த ஊரில் களையாம்! போதாததுக்கு அதை லேப் அனுப்பி டெஸ்ட் பண்ணி பாய்ஸன்ன்னு சொன்னாங்க ஒரு இலங்கைத் தோழி.

ஆகட்டும். செத்துப்போலாமென்னு ஒரு நாள் பருப்பு சேர்த்து சமைச்சேன். இன்னும் சாகலைப்பா 27 வருசமா!!!!

ஊரில் இருந்து கீரை விதை கொண்டு வரலாமுன்னா.... ஏர்ப்போர்ட்லே நாய் பிடிச்சால் பத்தாயிரம் அபராதம்:-(

said...

வாங்க சாந்தி.

வெண்டைக்காய்விதை பத்து நாட்களில் முளைச்சு வருது. வெள்ளரிக்காய்விதையும் போட்டு ஒரு அங்குல உயரச்செடிகள்.

சாந்தி அநேகமா இன்னும் ரெண்டுமூணு நாட்களில் மலர்ந்துரும்! கிளம்பி வாங்க:-)

கத்தரிக்காயும் மிளகாயும் நாத்து கிடைச்சது. நட்டாச்.

said...

வாங்க துளசிதரன் & கீதா.

காய்கள் பறிச்சவுடன் உங்களை நினைச்சுக்கிட்டே சமைச்சுருவேன்!

இங்கே நம்மூர் கார்டன் சிட்டி என்பதால் வீட்டு மனையில் 40% தான் வீடு கட்டிக்கணும். 60% தோட்டத்துக்குன்னு விட்டே ஆகணும். செடி வைக்கலைன்னா வெறும் புல் போட்டாலும் போதும்!

போனவருசம் போட்ட பாலக் மண்டையைப் போட்டுருச்சு. அந்த பாட்டிங் மிக்ஸை வேறொரு தொட்டியில் கொட்டி வச்சுருந்தேன். இப்ப என்னன்னா அதில் பாலக் அமோக விளைச்சல். நேத்து நம்ம வீட்டில் பாலக் பனீர்! ஜோர்!

said...

வாங்க ஜீவலிங்கம்.

வருகைக்கு நன்றி.