Tuesday, October 13, 2015

நவராத்ரி சுபராத்ரி

இந்த வருசத்து நவராத்ரி விழாவுக்கு நம்ம வீட்டுலே  மூணு அம்மன்கள் வந்துருக்காங்க.  சாந்த முக துர்கையைப் பார்த்துருக்கீங்களோ!

கொஞ்சம் மெனெக்கெட வேண்டிவந்துச்சு. பெண்களூரில் இருந்து  தங்கை சாந்தி (மச்சினர் மனைவி) வாங்கிக் கொடுத்த திருமுகங்கள். முதலில் பெரிய தேவியை மட்டும்  புடவையால் அலங்கரிச்சு நெருங்கிய தோழிகளுக்கு அனுப்பி குற்றம் கடியச் சொன்னேன்.

'உயரம் அதிகம்,  தொம்பரக் கூத்தாடி போல் தோளைஅகலமா விரிச்சு வச்சுருக்கள்.  முகம் சாந்தமா இருக்கு.  ஆனால் கைகளைக் காணோமே..... இதுக்கெல்லாம் உனக்கு ஏது நேரம்? 'இப்படி எல்லாம் வீசப்பட்டக் கேள்விகளுக்கு  ஒண்டிக்கு ஒண்டியா ஈடு கொடுத்து சாக்குபோக்கு பதில்கள் எல்லாம்  கொடுத்து ஒரு வழியா பெரிய அம்மனை வழிக்குக் கொண்டு வந்தாச்.  இன்னொரு அம்மன் கொஞ்சம் சுலபமாகவே  முடிஞ்சது. நம்மவரின் அறுபதுக்கு வச்ச கலசம் இருக்கே!  மூணாவதா நம்ம கும்பவாஹினி. நம்ம தளத்தின் வாசகர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவள்.  உண்மையில் இவள்தான் மூத்தவள் இல்லையோ!

தாயாரும் பெருமாளுமா  புது உடைகள் மாற்றி முதல்படியிலே வந்து நின்னாங்க மரப்பாச்சிகள். கூடவே பூரணப்ரம்மம் அண்ட் குழலூதும் கிருஷ்ணன். இந்தப் பயணத்தில் நியூஸிக்கு வரணுமுன்னு அடம்பிடிச்சு வந்தவங்க இவுங்க:-)

ரெண்டாவது படியில் சரஸ்வதி,  புள்ளையார், லக்ஷ்மி இவர்களுடன், பள்ளிகொண்ட பெருமாள்,  லக்ஷ்மி ஹயக்ரீவர், நின்றவர், குழலூதும் கண்ணன் இவர்களுடன் ரெண்டு யானைகள்.

மூணாவதில்....  ஆனந்த நிலையம், புதுக்கல்யாண ஜோடி, இசைக்குழுவினர் இவர்களுடன் (வியட்நாம்)தர்மராஜா! ஆரஞ்சுக் கலர் பொம்மை, நம்ம  சென்னை வீட்டுப் பாப்பா நமக்குக் கொடுத்த ரிட்டர்ன் கிஃப்ட்!

நான்காவது படியில்.... பாகிஸ்தான் மார்பிள் பழத்தட்டு, யானைகள், கொஆலா, கிவிப்பறவை,  பஞ்சவர்ணக்கிளி, ஜப்பான் வராக ஜோடி, எறும்புத்தின்னி, குகனின் உதவியால் கங்கையைக் கடக்கும் ராமனும் சீதையும், லக்ஷ்மணனுடன்.

அஞ்சாவது  மட்டும் வழக்கம்போல் நம்ம தீம் ஆன யானையும் பூனையும் மட்டும் இல்லாமல் சின்ன மாற்றத்தோடு கல் கொலு.  கடவுள் அமைத்த இயற்கைக் கற்கள் வரிசை.

கடைசியாகத் தரையில்  மனிதன் செஞ்ச கண்ணாடிக் கற்கள்.கோலம். நந்தி தேவர். இரவில் தேவியர் விளையாடப் பல்லாங்குழி, தாயக்கட்டைகள்.
இவர்களுடன், நம்ம ஜன்னுவும் க்ருஷ்ணனும்.

இப்படியாக வெரி சிம்பிள் கொலு.

வாசக அன்பர்கள், நண்பர்கள்  அனைவருக்கும் நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்துகளை துளசிதளம் தெரிவித்துக் கொள்கிறது.

நம்ம வீட்டுத்தாயாருக்கும் பெருமாளுக்கும் புது உடுப்பு!  ரெண்டுமுழ அகல ஜரிகை போட்ட பட்டுப்பாவாடை! (தாயார் கையால் ரெண்டு முழம்!)

அனைவரும் வருக, வருக!




33 comments:

sury siva said...

துர்கை அம்மன் ஆவாஹனம் அற்புதம்.

பெருமாள் பிரசன்னமாகி இருக்கிறார். அது ஆனந்தம்.

என்றும்

துளசி கோபால் இருக்கும் இடம் எல்லாமே

துர்கை அம்மன் சன்னதி தானே.



தூயவன் மாயவன் திருத்தலம் தானே.



சுப்பு தாத்தா.

மீனாக்ஷி பாட்டி. .

Unknown said...

சிம்பிள் கொலு இல்லப்பா , சிம்ப்ளி க்ராண்ட் !!
அழகு கொலு . கண்ணாடி கற்கள் மனசை அள்ளுது .நந்திதேவர் செம்ம கெத்து :)
சூப்பர் கொலு . உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள் !!

sury siva said...

துர்கை அம்மன் ஆவாஹனம் அற்புதம்.

பெருமாள் பிரசன்னமாகி இருக்கிறார். அது ஆனந்தம்.

என்றும்

துளசி கோபால் இருக்கும் இடம் எல்லாமே

துர்கை அம்மன் சன்னதி தானே.




தூயவன் மாயவன் திருத்தலம் தானே.




சுப்பு தாத்தா.

மீனாக்ஷி பாட்டி. .

sury siva said...

தங்கள் வீட்டு, நவராத்திரி விழா வுக்கு பாட,

கவிநயா அவர்கள் இயற்றிய பாடலுக்கு,

சுப்பு தாத்தா பாட துவங்கி விட்டார்.



வாருங்கள். கேளுங்கள்.

www.subbuthathacomments.blogspot.com

சாந்தி மாரியப்பன் said...

முப்பெருந்தேவியர் அட்டகாசம்.. அழகா இருக்காங்க. உங்க வீட்டுப் பெரிய சைஸ் குத்துவிளக்குதான் அம்பாளா அவதாரமெடுத்துருக்குன்னு நினைக்கிறேன். :-)

Anuprem said...

நவராத்திரி விழா வாழ்த்துக்கள் அம்மா ....

பெருமாள் மற்றும் தாயார் ஆஹா அழகு..கொலு படிகள் நேர்த்தியான அழகு...

Babu (பாபு நடராஜன்} said...

பெருமாள் தாயார் உயிர்ப்போடு இருக்கிறார்கள்.............பாட்டி?

ராமலக்ஷ்மி said...

அருமையான அலங்காரங்கள். படங்களை பெரிது படுத்திப் ஒவ்வொரு படியாக உங்கள் பட்டியலையும் சரிபார்த்து இரசித்தாயிற்று:). நந்தி தேவர், பள்ளி கொண்ட பெருமாள், ஹயக்ரீவர் போன்ற வெண்கலச் சிலைகளின் வேலைப்பாடு கவருகிறது. விழாக்கால வாழ்த்துகள்!

கோமதி அரசு said...

அருமையான அழகான கொலு.முப்பெருந்தேவியர் அழகு.

G.Ragavan said...

அழகான கொலு. தாயார்-நாராயணர் அலங்காரம் மிக அருமை. துர்கையோட அலங்காரங்களும் ரொம்பப் பொருத்தம். சுருக்கமா நிலக்கடலைச் சுண்டலும் கரண்டி கேசரியும் பண்ணீட்டீங்க. அருமை.

என்னுடைய உளமார்ந்த நவராத்திரி வாழ்த்துகள் :)

G.M Balasubramaniam said...


கொலுவில் இருக்கும் அமனுக்கு தினம் உடை மாற்று வீர்களோ அருமை வாழ்த்துகள் இந்த ஆண்டு எங்கள் வீட்டில் இரு மரப்பாச்சி களுடன் ஒரு ஆனை முகனும் மட்டுமே மற்றவை எல்லாம் பூ சையில் இருக்கும் படங்கள் மட்டுமே

G.M Balasubramaniam said...

என் மனைவி கொலுவைப் பார்த்து மிகவும் பாராட்டினாள் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டதாகவும் எழுதச் சொன்னாள்

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.

ஒவ்வொன்றும் அழகு. இன்றைக்கு நண்பர் வீட்டில் எடுத்த படங்களைப் போட வேண்டும். அங்கேயும் இப்படி அலங்கரித்த மரப்பாச்சி பொம்மை உண்டு! அதைப் பார்த்த போது உங்கள் பதிவில் நீங்கள் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

mera balaji said...

அழகா இருக்கு கொலு.அம்மன் அழகான அலங்காரம்.குழலுதும் கண்ணன் பெருமாள் தாயார் பட்டு பாவாடை ஜோர்.கலர் கல் படி ஜொலிக்குது.பிரசாதம் எடுத்தாச்சு

துளசி கோபால் said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா,

பெரியவங்க வந்ததே பெருமாள் வந்தமாதிரி! அதில் கொலுவுக்கும் பாடி அன்பு காட்டியதை பெரும் பேறுன்னு சொல்லிக்கறேன்.

துளசி கோபால் said...

வாங்க சசி கலா.

ஒவ்வொன்னா ரசிச்சதுக்கு நன்றீஸ்ப்பா!

துளசி கோபால் said...

வாங்க சாந்தி.

குத்துவிளக்கு இல்லைப்பா. தனிக்கதை. விழா முடியட்டும் பிஹைண்ட் த கொலுவில் ரகசியத்தை உடைச்சுடலாம்:-)))

துளசி கோபால் said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா.

துளசி கோபால் said...

நன்றி பாபு.

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

நந்தி மாத்திரம் வெண்கலச்சிலை. மற்றபடி ஹயக்ரீவரும் பள்ளிக்கொண்டானும் ஃபைபர் சிலை. அதுக்குக் கொடுத்த கலர் அப்படி உலோகமாத் தெரியுதுப்பா.

துளசி கோபால் said...

வாங்க கோமதி அரசு.


முதல்முறை அம்மன் நிற்கும் அலங்காரம் நம்ம வீட்டில்!

ரசித்தமைக்கு நன்றிகள்.

துளசி கோபால் said...

வாங்க ஜிரா.

இங்கே நம்ம ரெண்டுபேருக்கு பெருசா செஞ்சால் சாப்பிட வேற யார் இருக்கா?

ஆமாம்... அதென்ன கரண்டி கேசரி?

தாயாருக்குப் புதுப்பாவாடை தைச்சுப்போட்டேன். அதான் அழகு தூக்கலா இருக்கு:-)

துளசி கோபால் said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கொலுவில் மரப்பாச்சிகள்தான் ரொம்பவே முக்கியம் என்று சொல்வாங்க. நான் இதனாலேயே பலவருசங்களாத் தள்ளிப்போட்டு, 2003 தான் மரப்பாச்சி வாங்கி வந்து கொலுவைக்க ஆரம்பிச்சேன். அதுக்கு முன்பு, நவராத்ரிக்கு ஸ்பெஷலா பூஜைன்னு இல்லாமல் தினப்படி கும்பிடுவதுதான். 1999 இல் பெருமாள் தாயார் விக்கிரகம் வந்தபின் விஜயதசமி மட்டும் கொஞ்சம் சிறப்பாக செய்துவருகிறோம்.

தங்கள் மனைவிக்கு என் அன்பு. நன்றி சொல்லிக்கறேன்.

அம்மனுக்கு தினம் உடை மாற்றுவது இல்லை. இந்தப்புடவை கட்டிவிடவே தவிச்சுத்தண்ணி குடிக்கவேண்டியதாப் போச்சு!

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்கள் படங்களுக்கு வெயிட்டிங்.

ஒருமுறை நவராத்திரி சமயம் ஸ்ரீரங்கம் போகவேணும்!

துளசி கோபால் said...

வாங்க மீரா.

ஒவ்வொன்னா ரசிச்சதுக்கு நன்றீஸ்ப்பா.

sri said...

after a long time, reading ur blogs again. Happy Navrathri teacher :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அம்மன் அழகு!
அந்த நந்தியும் அழகு!
கொலு அழகு!
நம்பெருமாள் போல் உம்பெருமாள், டீச்சர்:)
உம்பெருமாளும் தாயாரும் அழகு!

ஆனாலும் எல்லாத்த விட அழகு.. நான் முன்பே உங்களிடம் சொன்ன..
அந்தக் குட்டி Bucket தான்:))))
என்னமா இருக்கு அந்த ஏனம், பொதிஞ்சி வைச்சாப் போல!

என்னைக்காச்சும் ஒரு நாள், அதை வாங்கியே தீருவேன்:)
தோழனுக்குப் பரிசாக் குடுத்தா, வீட்டுல வைச்சிக்குவான்
இனிய ஒன்பதிரா (நவராத்திரி) வாழ்த்துக்கள், டீச்சர்:)

Thulasidharan V Thillaiakathu said...

ஹே ரொம்ப அழகா இருக்கேப்பா கொலு....ரொம்பவே....ஃபோட்டோஸ் அழகு...ஹும் சுண்டல்தான் இல்லை அப்படியே வெர்சுவலா அனுப்பிருங்க....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நவராத்திரி வாழ்த்துகள்!

துளசி கோபால் said...

வாங்க ஆராவமுதன் ஸ்ரீவத்ஸன்.

நலமா?

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

துளசி கோபால் said...

வாங்க கே ஆர் எஸ்.

கோபால் பகல் உணவுக்கு வீட்டு வந்தவுடன் போய் சாமி நமஸ்காரம் பண்ணிட்டு, சுண்டல் பக்கெட்டைத் தூக்கி வருவார்! பிரசாதம் சாப்பிடணுமுல்லே:-)))))

துளசி கோபால் said...

வாங்க கீதா.

ஆஹா... அது சுண்டல் அடுப்பில் வெந்துக்கிட்டு இருக்கும்போது எடுத்த படமோ!!!! போய்ப் பார்த்தேன். ஊஹூம்....

குட்டி பக்கெட்டில் வேர்க்கடலை சுண்டல் இருக்கே!

துளசி கோபால் said...

வாங்க துளசிதரன்,

வாழ்த்துகளுக்கு நன்றி.