Friday, October 02, 2015

நான் செஞ்ச ஒரே தப்பு கண்ணை மூடிக்காமல் இருந்ததுதான்....... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 83)

கோவிலைத் தேடிப் போகும்போது வேடிக்கை எதுக்கு?  கலங்கரை விளக்கு பார்த்ததும்,  இந்தப்பக்கம் வந்ததே இல்லையேன்னு  இறங்கிப்போனோம். ஒரு பாறையையும் சும்மா விட்டு வைக்கலை பாருங்களேன்!

உச்சியில் அமர்ந்து நாட்டுநடப்பை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தார் நம்ம ஆஞ்சி ஒருத்தர்!



மஹிஷாசுரமர்த்தினி  மண்டபம்.  ஒருபுறம்  மஹிஷனுடன் சண்டை, இன்னொரு புறம் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டவன்.  பெரிய சிற்பத்தொகுதி!  கல்லைக்குடைந்து  கருவறை. உள்ளே சுவரில், காளை வாகனத்தில் சிவன்! கூடவே சக்தியும் சின்ன உருவமாக! தரையில் சிவலிங்கம்  வைக்கறதுக்கான குழி. ஆனால் லிங்கத்தைக் காணோம்.  இந்த மண்டபத்துக்கு மேலேயும்  இன்னொரு மண்டபம் இருக்கு. அவ்ளோ உயரத்துக்கு ஏறவேணாமுன்னு இருந்தேன்.







இன்னொரு பக்கம் ஒரு பெரிய பாறையின்மேல் கலங்கரை விளக்கு.  சின்னச்சின்னதா உயரம் குறைஞ்ச படிகள். ஒரு இருபத்தியஞ்சு இருக்கலாம். ஆளுக்குப் பத்துன்னு கட்டணம் உள்ளே போய்ப் பார்க்க. அங்கேயும் படிகள் ஏறணுமே....   வேணாம். வெளியே இருந்தே அக்கம்பக்கம் பார்த்தாலாச்சு. ஒரு ம்யூஸியம் கூட  இதுக்குள்ளே இருக்கு.




இதுக்கு எதிரில் இந்தப் பக்கம் பூராவும் சிற்பக்கூடங்களும், கலைப்பொருட்கள் விற்கும் கடைகளுமா  இருக்கு.  நாம் சும்மா ஒரு பார்வையோடு சரி.  திகிலோடு இருக்கும் நம்மவரை  சும்மாச்சும்மா பயமுறுத்தினால் எப்படி? ஒரு பாம்பு    அட்டகாசமா இருந்துச்சு.




அங்கே இருந்த இளநிக்காரம்மாவிடம்  கோவிலுக்குப்போகும் வழியைக் கேட்டுக்கிட்டேன்.  மூணு பேருக்கும் இளநி வெட்டிக் கொடுத்தாங்க.
கோவிலைத் தேடிப் போனோம்.

 குடவரைக்கோவில். ஸ்ரீ ஆதிவராஹப்பெருமாள். வலப்பக்கத் தொடையில்   மஹாலக்ஷ்மியை உக்கார்த்தி வச்சுருக்காராம். திருவலந்தை என்று சொல்றாங்க.




நாகரும், பலிபீடமும் கோவில் வாசலுக்கு முன்னால்  கம்பிச் சட்டத்துக்குள்.  கோவில் வாசலும் பூட்டியே இருக்கு.  கம்பிக் கதவுக்குப்பின்னால் இருக்கும் மரக்கதவுகளும் மூடித்தான்  .....  ப்ச்....  பட்டர்ஸ்வாமிகள் எப்போ வருவாருன்னு தெரியலை.


ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் விசாரிச்சுட்டு வந்துருக்கலாம். அப்பத் தோணலை பாருங்க.  இதுக்கிடையில் கலங்கரை விளக்கம் பார்க்கிறேன்னு  அங்கேபோய் ஒரு அரைமணி நேரம்  செலவாகிருச்சு.  இது திறந்த வெளியில் உள்ளது என்பதால்  எப்ப வேணுமுன்னாலும் பார்த்திருக்கலாம்.  நம்ம டைம் மேமேனேஜ்மெண்ட் சரி இல்லைப்பா....


ஆதிவராஹருக்கு ஒரு கதை கூட இருக்கு. இந்தக் கோவிலில் இருக்கும்  வராஹரை அனுதினமும் பூஜித்தபிறகுதான்  பகல் உணவு சாப்பிடும் வழக்கம் இருந்துருக்கு  மன்னர் ஹரிகேசனுக்கு. ஒருநாள்  கோவிலுக்குப் புறப்படும் சமயம் கிழவர் ஒருத்தர் வர்றார். எனக்குப் பசியா இருக்கு. அன்னம் வேணுமுன்னு சொல்றார்.  பூஜையை முடிச்சுட்டு வந்து விருந்து வைக்கிறேன் என்று மன்னர் சொல்ல,  அவ்வளவு நேரம் என்னால் பசி பொறுக்கமுடியாது. இப்பவே சாப்பாடு வேணுமுன்னு நிர்ப்பந்தம் பிடிக்க, இந்த பேச்சுவார்த்தைகளில் கோவிலுக்குப்போக நேரமாகிருது.


என்ன செய்யலாமுன்னு யோசிச்ச  அரசர், இந்தக் கிழவரையே ஆதிவராஹனா நினைச்சு  சமைச்சு வச்சுருந்த சாப்பாட்டை படையல் போட்டுட்டார்.  கிழவருக்கு மனம் பூராவும் மகிழ்ச்சி. தன்னுடைய சுய உருவைக் காமிச்சார். சாக்ஷாத்  எம் பெருமாள் வராஹக் கோலத்தில்.  அங்கே இவரைத்தேடி வந்த மஹாலக்ஷ்மியை அப்படியே வாரியெடுத்து  வலப்பக்கத் தொடையில் அமர வைத்து, காட்சி கொடுத்துருக்கார்.  அதே கோலம்தான் கோவிலுக்குள்ளும்.   அடுத்த முறை நல்லா விசாரிச்சுக்கிட்டுக்கோவில் திறந்திருக்கும்போது உள்ளே போய் தரிசனம் செஞ்சுக்கணும்.  பெருமாள் வழி காட்டாமலா போயிருவார்?


கிளம்பி வரும்வழியில்  இன்னொரு பெரிய பாறையில்  கோவர்தனகிரி மண்டபம் அருகில் இருக்கும் பகீரதன் தபஸ் போலவே  இங்கேயும் செதுக்கி  இருக்காங்க.  எப்படி வருமுன்னு பார்க்க  ட்ரயல் செஞ்சாங்களோ என்னவோ! இது லைட் ஹவுஸ் அருகில் இருக்கு.

மேலே படம்:  மாதிரி பார்த்தது:-)

கீழே படம்:  பகீரதன் தவம்

அடுத்த ரெண்டு நாட்கள்  இன்னொரு ஸ்பெஷல் இடத்துலே தங்கப்போறோம். மதியம்  மூணு மணிக்கு வந்துருவோமுன்னு சொல்லி இருந்தோம்.

இப்போ இன்னும்   கொஞ்சநேரம் சுமார் மூணு மணி நேரம் கைவசம் இருப்பதால் கோபால் பார்க்காத  ஒரு இடத்துக்குப் போகலாமுன்னு முடிவு செஞ்சேன். எனக்கு அங்கே இது மூன்றாம் முறையாக்கும், கேட்டோ !

தொடரும்........... :-)


9 comments:

said...

டீச்சர், பதிவும் படங்களும் அற்புதம். Similar to your last photo, i have done a painting. will share in FB when possible.

said...

பதிவைப் படிக்கும்போது நிழல் நிழலாய் நினைவுகள் “ பார்த்த ஞாபகம் இல்லையோ” என்று கேட்கிறது

said...

நாங்களும் வல எந்தையையைத் தரிசித்தோம். மாமல்லரைப் பற்றியும் மகேந்திரவர்மனைப் பற்றியும் எங்க சித்ரா மாதவன் பேசி இருப்பது யு டியுபில்
இருக்கு. அது பாண்டவ ரதம் இல்லையாம். ஐந்து கடவுள்களுக்காக அமைத்த கோவில்களாம்.
நீண்ட பெருமூச்சு வருகிறது இத்தனை அழகு சிற்பங்களைப் பார்த்து. மிக நன்றி துளசிமா.

said...

விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

பணம்அறம்

நன்றி

said...

மாமல்லி துளசி மாதேவி அவர்களை
மாமல்லன் புரத்துக்கு
வருக வருக என வரவேற்கிறேன் டீச்சர்:)

said...

வாங்க சதங்கா.


ஓவியத்துக்கு வெயிட்டீஸ். சீக்கிரம் போடுங்க.

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

மறக்கக்கூடிய இடமா இது? அதுதான் “ பார்த்த ஞாபகம் இல்லையோ” ஒலிக்கிறது :-)

said...

வாங்க வல்லி.

உங்க சித்ரா மாதவன்.... யாருப்பா? சுட்டி ப்ளீஸ்.

அஞ்சு கடவுளா? ஒன்னுன்னா ஒரு சிலை கூட இல்லையேப்பா. ஒரே ஒரு கோவிலில்தான் பள்ளிகொண்டவன் பாதி உடைஞ்ச நிலையில் :-(

said...

வாங்க கே ஆர் எஸ்.

வரவேற்புக்கு நன்றி.

மேலே பாருங்க.... பணம் அறமாம்!!!!! எல்லாக் கொடுமையும் இதால்தான்... இல்லையோ!