நிதானம் ப்ரதானமுன்னு இன்னிக்கு எல்லாமே கொஞ்சம் தாமதம். நம்ம அறை எதிர்த்த வரிசையில் இருந்துருந்தால் கோபுரதரிசனமாவது கிடைச்சிருக்கும். இப்ப ரேஸ்கோர்ஸ் சாலைக்கு எதிர்பக்க மைதானம்தான் முதல்காட்சி. இதுதான் அந்த ஃபேர்ரர் பார்க் போல! போகட்டும் அட்லீஸ்ட் பச்சை. கண்களுக்கு இதம்.
கோவிலுக்குள் நுழையும் முன் இடப்பக்கம் செரங்கூன் சாலையில் இருந்து பிரியும் சாலைக்கு பெருமாள் ரோடுன்னு பெயர்! மணி ஒன்பதரை ஆகி இருந்துச்சு. கோவிலுக்குள்ளே நல்லகூட்டம். யாக குண்டத்தில் தீயும் புகையுமா இருக்க ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் ஜோடிகளா மாலையும் கழுத்துமா இருக்காங்க. கம்யூனிட்டிக் கல்யாணமோ ன்னால்.... இல்லையாம். அன்றைக்கு யாகத்துக்கு டிக்கெட் வாங்குனவங்களாம். ஒரு மாசத்துக்கு முன்னேயே பதிவு செஞ்சுக்கணுமாம். கடைசி நேரத்தில் போனா..... நோ டிக்கெட். ஹௌஸ் ஃபுல் ஆகிருது! ஒரு மேடையில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கும்பம்!
கோவிலுக்கு வருமானம் வரட்டுமே! பக்கத்துலே இருந்த ஹாலை இடிச்சுட்டு புதுக் கட்டிடம் எழுப்பிக்கிட்டு இருக்காங்க. செலவு நிறைய இருக்குல்லையா? வரவர மக்கள்ஸ்க்கு பக்தி கூடிக்கிட்டே வருதுன்னு புரிஞ்சுக்க முடியுது. யாக குண்டம் ரெண்டுவிதமா இருக்கு போல. அன்னிக்கொருநாள் பார்த்தது அழகா வட்டமா இருந்தது. இன்னிக்கு சதுரமான ஒன்னு.
சாமி ப்ரீதிக்கு வட்டம். ஆசாமி ப்ரீதிக்கு சதுரம். இருக்குமோ என்னவோ?
ஆனால் யாகசாலைன்னு ஒன்னு தனியா இல்லை. நல்லவேளைன்னு நினைக்கணும். இல்லேன்னா அந்த அறை கரிபிடிச்சுக் கிடக்கும்!
மொத்த கூட்டமும் யாக குண்டத்தைச் சுற்றி இருப்பதால் கோவிலில் மற்ற சந்நிதிகளெல்லாம் அமைதியாக் கிடக்கு. சாமிகள் மட்டும் தேமேன்னு இருக்காங்க மூலவர் உட்பட! நாங்களும் ஆற அமர ஒவ்வொரு சந்நிதியாப்போய் கும்பிட்டோம். மூலவருக்கு முன் மண்டபத்தில் உற்சவர் அலங்காரத்தோடு எங்கோ வெளியில் புறப்படத் தயாரா இருக்கார். (ஓ...அதனா குடைகூட விரிச்சு வச்சு ரெடியா இருப்பது? வழக்கமான பெருமாள் குடை இல்லை. கொஞ்சம் சின்னதுதான்! ) பக்கத்தில் இன்னொரு செட் உற்சவர்கள் திருமஞ்சனம் செஞ்சுக்க ரெடியா நிக்கறாங்க. எதிர்ப்பக்கம் பெரிய திருவடி கூப்பின கைகளும் மலர்மாலைகளுமா விநயத்தோடு.
நம்ம இடம் இன்னிக்கு நமக்கில்லை என்பதால் நாங்க ஆஞ்சநேயடு சந்நிதிக்குப்போய் மண்டபத்தின் ஓரமா உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சோம். யாகக் குழுவினரின் பதின்மவயதுப் பிள்ளைகள் நம்ம ஆஞ்சி மண்டப ஓரத்தில் இடம்பிடிச்சு செல்லும் கையுமா பிஸியா இருக்காங்க. திடீர்னு பக்தர் ஒருத்தர் வந்து ஆஞ்சி வடை விநியோகம் செஞ்சார்.
நம்ம வாசிப்பு முடிஞ்சதும் நாளைக்கும் வரேண்டான்னு சொல்லிட்டு நேரா முஸ்தாஃபா கடைக்குப் போனோம். 24 மணி நேரமும் திறந்து இருப்பதால் கொஞ்சம் மேனேஜபிள் கூட்டமா இருக்கு. கோபாலுக்கு ஷர்ட்ஸ் வாங்கிக்கணுமாம். இவர் துணிகளை செலெக்ட் செய்வதைப் பார்த்தால் எனக்கு கண்ணீர் வரும். அதுவும் ரத்தக் கண்ணீர். அழுதுவடியும் கலரில் ஒரே மாதிரி ரொம்பச் சின்ன வித்தியாசங்களோடு எடுத்திருப்பார். கையில் உள்ள கலரும், டிஸைன்ஸ் எல்லாம் ஆயிரம் முறை நான் துணிகளை வாஷிங் மெஷீன்லேபோடும்போது பார்த்திருப்பேன். இதே மாதிரி ஏற்கெனவே இருக்கேன்னா...... அதுலே கொஞ்சம் பெரிய கோடு. இது நல்ல ஃபைன் கோடு பாரும்பார். ஆமாம் அது 0.005 மிமீ என்றால் இப்போ கையில் உள்ளது 0.004 ஆக இருக்கும். இதுலே ஒவ்வொன்னா போட்டுப் பார்த்து சரியா இருக்கான்னு நம்ம அபிப்ராயம் வேற கேட்பார். ஒரே அழுக்கு க்ரே, நீலம், வெள்ளையில் அழுக்குக்கோடு, நீலக்கோடு இவைகளைப் பார்த்துப்பார்த்து என் ஓட்டைக் கண்களே பூத்துருமுன்னா பாருங்க. பிஸினெஸ் ஷர்ட்ஸ்தான் இப்படின்னா, கேஷுவலா போட்டுக்க நல்ல பளிச்சுன்னு வாங்கிக்கப்டாதோ? இல்லையே:( அதுக்கும் இப்படி அழுதுவடியும் கலர்ஸ்தான்! ஆனா சின்னதாக் கட்டம் போட்டுருக்கும்:-) இவ்ளோ ஏன்? இப்பக்கூட இப்படி லைட் நீலத்துலே ஒரு கோடுதான் போட்டுக்கிட்டு இருக்கார்:-)
ஆம்பளைகளுக்குக் கொஞ்சம் கலர் ப்ளைண்ட்னஸ் உண்டு என்பதால் முகத்தில் எந்த உணர்வும் வராமலிருக்க நான் பாடுபடுவேன். 'நோக்கக் குழையும் கணவர் ' என்று வேற தாடி சொல்லிவச்சுருக்காரே!
ஷர்ட்ஸ் செ(ல)க்ஷனில் நேரம் போனதே தெரியலை(யாம்) செல்லில் கால் வருது தோழி வந்து ஹொட்டேல் லாபியில் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு! இன்னிக்கு இன்னொரு எழுத்தாளர் தோழி வர்றாங்க . ஷர்ட்ஸ் எங்கே போகப்போகுது?அப்புறம் பார்த்துக்கலாமுன்னு அப்படியே கிளம்பி அரக்கப்பரக்க ஓடுனோம்.
சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். 23 வருசமா சிங்கை வாசம். வருசத்துக்கு குறைஞ்சது மூணு புத்தகம் வெளியீடு. எல்லா உள்ளூர் வெளியூர் பத்திரிகைகளிலும் கதை கட்டுரைன்னு விடாம எழுதறாங்க. இவுங்களைப் பற்றியும் இவுங்க எழுத்துக்களைப்பற்றியும் எழுதப்போனா சுமார் 10 இடுகை கேரண்டீ. இவுங்களும் நம்ம மரத்தடி காலத்துத் தோழிதான். இவ்ளோ பெரிய எழுத்தாளர் என்ற தலைக்கனம் சிறிதும் இல்லாதவர்.அதனாலென்ன? எனக்கு அந்தத் தலைகனம் இருக்கே...... இம்மாம் பெரிய ஆள் என் தோழின்னு:-)))
மேலே அறைக்குப்போய் ( கடந்த எட்டு மாசத்தில் விட்டுப்போன) அரட்டையைத் தொடர்ந்தோம். சிங்கை(யின் ஒரே) தமிழ் தினசரியில் இப்போ வேலை செய்யறாங்க. புது வேலை கிடைச்சதைக் கொண்டாட இன்னிக்கு விருந்து கொடுக்கறாங்க நமக்கு!
ஒரே மாதிரி சாப்பாடு வேணாமேன்னு ரேஸ் கோர்ஸ் சாலைக்குப்போனோம். ஹொட்டேல் பின் தெருதான். ஒரு சர்ச் கண்ணில் பட்டது. ஃபூச்சௌ என்ற பெயரைப் பார்த்ததும் நம்ம பூச்ச (பூனை, மலையாளம்) நினைவுக்கு வந்துட்டான். உள்ளெ போனோம். நல்ல அழகா அம்சமா இருக்கு. கீழ்தளத்தில் ஹால். மேல்மாடியில் வழிபாட்டுக்கான ஆல்ட்டர் & இருக்கை அமைப்புகள்.
1890களில் தென் சீனா ஃபூச்சௌ வட்டத்திலிருந்து இந்தப்பகுதிக்கு வந்து குடியேறிய மக்களில் மெத்தடிஸ்ட் சர்ச் மக்கள் பலர் இருந்துருக்காங்க. பெரும்பாலோருக்கு கைவண்டி இழுப்பது, கூலி வேலை , முடி திருத்துவது போன்ற தொழில்களே. தங்களுக்குள் ஒன்னு சேர்ந்து சாமி கும்பிட்டுக்க ஒரு திருச்சபை வேணுமுன்னு அவுங்க ஆரம்பிச்சதுதான் இது. மதபோதகர் ஆண்ட்ரீ சென் உதவியால் 1897 இல் திருச்சபை ஆரம்பிச்சு, மேற்படி அங்கத்தினர்களுக்கு எழுதப்படிக்க,பாட்டுப் பாடன்னு சொல்லிக் கொடுத்துருக்காங்க. நல்லதொரு சமூக சேவை.
ஒரு நாப்பது வருசம்போல வாடகைக் கட்டடத்தில் சர்ச் நடந்துக்கிட்டு இருந்துருக்கு. இங்கே அங்கேன்னு மூணுமுறை வெவ்வேற இடமுன்னு மாத்தி இருக்காங்க.ஒரு கட்டத்தில் சொந்தமா ஒரு இடம் இருக்கணுமேன்னு நிதி சேகரிச்சு இந்த ரேஸ்கோர்ஸ் ரோடிலே இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் கட்டிடத்தை 1937 இல் வாங்கிட்டாங்க. சர்ச் இங்கே நல்லா நடக்குது. உலகப்போர் நடந்தப்ப இதன்மேல் குண்டு விழுந்து முன்பக்கம் இடிஞ்சு போச்சு:( கஷ்டப்பட்டு மீண்டும் முன் இருந்த மாதிரியே எடுத்துக் கட்டிட்டாங்க. இப்ப இந்த சர்ச், சிங்கையின் பாரம்பரியக் கட்டிடத்தில் ஒன்னா இருக்கு! ரொம்ப நல்ல பராமரிப்பு. படு நீட்.
இருக்கைகளின் முதுகில் சர்ச்சில் பாடும் பாட்டுகள் உள்ள புத்தகமும், பைபிளும் வச்சுருக்காங்க. எடுத்து வாசிச்சுச் சாமி கும்பிட்டதும் திருப்பி வச்சுட்டு போனால் ஆச்சு. கையை வீசிக்கிட்டுக் கோவிலுக்குப்போகலாம்:-)
படங்கள் அப்போ & இப்போ!
ஸ்பைஸ் ஜங்ஷன் என்று ஒரு ரெஸ்ட்டாரண்ட் கண்ணில் பட்டது. கேரள யானைகளின் முகபடாம் பார்த்ததும் சட்னு உள்ளே நுழைஞ்சோம். தமிழ்மொழி விழா, டேஸ்ட் ஆஃப் ஹெரிடேஜ். புட்டும் கடலைக்கறியும் என்று படம் போட்டுருக்கு.
ஓக்கே..... இன்னு அதுதன்னே அய்க்கோட்டே! மெனு பார்த்தால் எல்லாம் கேரளா ஸ்டைல்களே! ஆப்பம், அவியல், கப்ப புழுங்கியது, புட்டு, கடலைக்கறின்னு வாங்கினோம். பரவாயில்லாம சுமாரா இருந்துச்சு.
தொடரும்..............:-)
23 comments:
எங்க அவர் கலர் சென்ஸ் பத்தித் தப்பாப் பேசாதீங்க ரீச்சர்! அவர் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கோம்.
புட்டு கடலைக்கறி - எனக்கு ரொம்பப் பிடிச்ச காம்போ. எங்க ஊரில் மல்லு உணவுதான் கிடைக்க மாட்டேங்குது. :(
ஆண்களுக்கு கலர் ப்ளைண்ட்னெஸ்... :)
இருக்கறதே கொஞ்சம் கலர் தான்! இதுல எங்கே :)
தலைக்கனம் சிறிதும் இல்லாததால் தான் உண்மையான எழுத்தாளர்...
ஆண்களுக்கு கலர் ப்ளைண்ட்னெஸ்//
கன்னாபின்னா ஆமோதிப்பு டீச்சர். அதுல இன்னொரு மேட்டர் இருக்கும் இவங்க தான் சூப்பரா மேட்சிங் பாத்து எடுத்திக்கிட்டா மாதிரி வீராப்பு பார்வை ஒண்ணு வீசுவாங்க பாருங்க...... என ஒரு காம்பினேஷன்னு பாக்கறவங்க குழம்பணும்
இருக்கறதே கொஞ்சம் கலர் தான்! இதுல எங்கே :)//
சகோ இருக்கற கொஞ்ச கலர்லயும் வெரைட்டி காட்டறதுதான் அழகுக்கு அழகு சேர்க்கும். :))
//சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர பெரிய எழுத்தாளர் என்ற தலைக்கனம் சிறிதும் இல்லாதவர்.// dito dito இப்போ ஜெயந்தி எப்படி இருக்காங்க துளசி ? பேசி வருடகணக்காகிறது :((
மொத்த கூட்டமும் யாக குண்டத்தைச் சுற்றி இருப்பதால் கோவிலில் மற்ற சந்நிதிகளெல்லாம் அமைதியாக் கிடக்கு. சாமிகள் மட்டும் தேமேன்னு இருக்காங்க மூலவர் உட்பட! நாங்களும் ஆற அமர ஒவ்வொரு சந்நிதியாப்போய் கும்பிட்டோம்.//
ஆற அமர இறைவனை கும்பிடுவதே இப்போது பெரிய விஷயமாய் இருக்கும் போது ஆற அமர கும்பிட்டோம் என்று சொல்வதை கேட்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
கோவில் எல்லாம் கூட்டம், வரிசை, வாங்க,வாங்க வெளியே எனும் சத்தம் இடும் ஆட்கள் இல்லாமல் தரிசிப்பது மகிழ்ச்சிதான்.
ஆனால் யாகசாலைன்னு ஒன்னு தனியா இல்லை. நல்லவேளைன்னு நினைக்கணும். இல்லேன்னா அந்த அறை கரிபிடிச்சுக் கிடக்கும்!
இங்கே யாக சாலையில் யாக குண்டத்தின் மேல் எக்ஸாஸ்ட் ஃபேன் வைத்து புகைபோக்கி அமைத்திருக்கிறார்கள்..
தூய்மையாக இருக்கிறது ..
கரி படிவதில்லை..!
அன்பின் டீச்சர்,
//ஆம்பளைகளுக்குக் கொஞ்சம் கலர் ப்ளைண்ட்னஸ் உண்டு//
இப்படியெல்லாம் சொல்லப்படாது. நல்ல 'கலர்'களைப் பார்த்தா உடனே திரும்புறது நம்ம பசங்கதான் ;-)
எனக்கும் ட்ரஸ் செலக்ஷனுக்கு நேரம் எடுக்கும். எல்லாக் கலர்களிலும் இருக்கு. இப்ப எல்லாம் செலக்ஷனை நம்ம ஃபேஷன் டிசைனர் பார்த்துக்குறார். அதனால நேரம் மிச்சம். :-)
இனிமே கோபால் அண்ணாவுக்கு ஷர்ட் வாங்க விடாதீங்க டீச்சர்..நீங்களே செலக்ட் பண்ணி வாங்கிக் கொடுங்க. பதிலுக்கு போனாப் போகுது.. உங்க துணிமணியெல்லாம் அவர் செலக்ட் பண்ணட்டி வாங்கித் தரட்டும். ;-)
எப்படி ஐடியா நல்லாருக்கா டீச்சர்? :-)
உங்களவர் ஷர்ட் செலெக்ட் செய்த விதத்தை உங்கள் எழுத்துக்களில் ரசித்துப் படித்தேன்!
திருமதி ஜெயந்தி சங்கர் பற்றித் தெரிந்து கொண்டேன். அவரது புத்தகங்கள் இந்தியாவிலும் கிடைக்கிறதா?
துளசி,
நான் இவருக்கு ஷர்ட் எடுப்பதையே விட்டுவிட்டேன். நான் வாங்கின சட்டை எல்லாம் புத்தப் புதுசா அப்படியே பீர்ரொவில் இருக்கும். வெளிறின வெள்ளை,பழைய சட்டையோன்னு நினைக்கிற மாதிரி ஒரு பழுப்பு வண்ணம்.
ஜயந்தி சங்கர் விவரம் மிக்க மகிழ்ச்சி தருகிறது.எளிமையான பெண்ணாகச் சந்தித்த நினைவு விலகவில்லை.
கேரளாசாப்பாடு அங்கே கிடைத்தது விசேஷம் தான்.
வாங்க கொத்ஸ்.
அவருக்குப் பின்னாலேயா??அவரைப் போலவே இருக்கோமுன்னு சொல்லி இருக்க வேண்டாமோ!!!
ஆஹா..... அதெப்படி மல்லு உணவு கிடைக்காமப்போச்சு?
நான் வர்றேன். மல்லு ஸ்பெஷல் உணவு கடை தொடங்கறோம். சரியா?
வாங்க வெங்கட் நாகராஜ்.
அதென்ன கொஞ்சம் கலர்தானா?
சிங்காரச்சென்னையில் பார்க்கலையா?
கேஷுவல்ஸ்க்கு எக்கச்சக்கக் கலர்ஸ் இருக்கே!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
அவுங்க சொல்றாங்க, தலைக்கனம் இல்லைன்னு சொல்றதைக்கேட்டே போரடிச்சுப் போச்சாம்:-))))
இதுலே முடியை வேற வெட்டிக்கிட்டாங்க!
வாங்க புதூகைத்தென்றல்.
நம்ம வீட்டுலே இன்னொரு கொடுமை என்னன்னா, புதுச்சட்டையை வாங்குனவுடனே நனைச்சு உலர்த்தி அயர்ன் பண்ணிப் போட்டுக்குவார்.
ரொம்ப 'மடி' இல்லையோ:-)))))
வாங்க ரவியா.
அட! எவ்ளோ நாளாச்சு உங்களை இங்கே பார்த்து!!! நலமா?
ஜெ, நல்லா இருக்காங்க.
விசாரிப்புக்கு நன்றி.
வாங்க கோமதி அரசு.
கூட்டம் அங்கே சிலநாட்களில் அம்முது. நாலைஞ்சு நாளுக்குமுன் புரட்டாசி (ரெண்டாம்) சனிக்கிழமை அப்படி ஒரு கூட்டமாம். கோபால் அன்னிக்கு அங்கே இருந்தார்.
மக்கள்ஸ்க்கு வரவரபக்தி பெருகிக்கிட்டே போகுது!
இலைபோட்ட சாப்பாடு கோவிலில். ஒரு பிடி பிடிச்சுட்டு படங்கள் எடுத்து வந்தார்.
எனக்கொரு லட்டு கோவில் ப்ரசாதமாக் கிடைச்சது.
வாங்க இராஜராஜேஸ்வரி.
ஆஹா...நல்ல சேதி! விழிப்புணர்வு வருது போல!
வாங்க ரிஷான்.
என்ன... என் ட்ரெஸை அவர் செலக்ட் செய்யணுமா? வெளியூர்களில் தனக்கு(மட்டும்) வாங்கும்போது மனசாட்சியின் தொல்லை தாங்காமல் எனக்கு(ம்) லேட்டஸ்ட் டிஸைன்னு அப்பப்ப வாங்கி வருவார்.
கடைக்காரருக்கும் விலை போகாத சரக்கைத் தலையில் கட்ட ஆள் வேணுமா இல்லையா?
தனியா ஒரு அலமாரி இதுக்கு ஒதுக்கிட்டேன்:-)
ஒரு முறை ரொம்ப நல்லா இருக்குன்னு ஒரு வெளிறின க்ரீமிஷ் க்ரீன் ஷர்ட் (3000 ரூ) வாங்கிக்கொடுத்தால் கடையில் ஒன்னும் வாயைத்திறக்காம இருந்துட்டு வீட்டுலே அதை ஒளிச்சு வச்சுட்டார்.
சென்னை வீட்டைக் காலி செய்ய வந்த பேக்கர்ஸ் ஒருத்தருக்கு அன்பளிப்பாப் போச்சு அது:(
இனி எடுப்பேன்? ஊஹூம்......
வாங்க ரஞ்ஜனி.
சென்னையில் அநேகமா எல்லாப் புத்தகக்கடைகளிலும் கிடைக்குதுப்பா.
புத்தக உலகம் ஒரு முறை விஜயம் செய்யுங்கள். சென்னை தி நகர் நார்த் உஸ்மான் ரோடில் பாலத்துக்கீழே இருக்கு.
வாங்க வல்லி.
முதலிலேயே வேணாமுன்னு சொல்லிட்டா நமக்கும் இன்னும் நாலு ட்ரெஸ் எடுத்துக்கலாம் இல்லையா?
நீங்களும் ஒரு அலமாரி ஒதுக்கிட்டீங்கதானே?
the answer given to Mrs Ranjani narayanan was very helpful for me too . thank you . and one more information Please . can you give me the title of your chioce so that i can get from the library . ( ippodhaikku cant buy books , so thought of getting it from the library .
ஆண்களுக்கு கலர் ப்ளைண்ட்னெஸ்//
சரியாகச்சொன்னீர்கள்.
ஒரே கலரில் இருந்த மூன்று சேட்டையும் ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டேன் அப்படியாவது புரிகிறதா பார்ப்போமென்று :))
ஜெயந்தி சங்கர் இனிய நட்பு மகிழ்ச்சி தருகின்றது.
Post a Comment