Monday, September 16, 2013

மாவேலிக்கொரு தாலப்பொலி

நம்மைக்காண மாவேலித் தம்புரானுக்கு  ஆவல் அதிகமானதால்  திருவோணத்துக்கு வரவேண்டியவர் ரெண்டு நாள் முன்னதாக்கிளம்பி பூராடத்துக்கு வந்து சேர்ந்தார்.  பாதாளலோகத்தில்  பசுமை அதிகமோ என்னவோ.... ஆளைக் கண்டாலே மனஸிலாயி அவிடே எல்லாம்  இஷ்டம்போலேன்னு! ( மாவேலி = மஹாபலி. ப்ரஹலாதனின் பேரன்)

தங்கக்குடை பிடிச்சு தம்புரான் வர அவரை வரவேற்கும் மங்கையர் தாலப்பொலித் தட்டுகளுடன் பின்னாலே ஓடிவரும்படி ஆச்சு.


வெள்ளிக்கிழமை இரவு சமையல் செய்யத்தொடங்கி சனிக்கிழமை காலை  ஒன்பது வரை ஆக்கலோ ஆக்கல். எனக்கு  இந்த வருசமும் ரஸம்.  விருந்தினர்  வருகை  வழக்கத்தைவிடக் கூடுதல் என்றபடியால்  அது அஞ்சில் தொடங்கி பத்துன்னு முடிவாச்சு. கடைசியில் செலவானது எட்டு. லிட்டர் கணக்கைச் சொன்னேன்.

க்ருத்யம் பத்து மணிக்குப் பரிபாடி என்றதால்,  காலை  ஒன்பதுக்கு  ரஸம் செஞ்சு  தாளிப்பு முடிச்சதும்  கோபால் ஹாலுக்குக் கொண்டு போய் வச்சுட்டு வந்தார்.. சமையல் செய்வதைவிட அதைக் கொட்டிக் கவிழ்க்காமல் ஹாலுக்குக் கொண்டு போக அதிகம் திறமை வேண்டித்தான் இருக்கு.  ஒரு பெரிய அட்டைப்பெட்டியில்  ரெண்டு டவல்ஸ் விரிச்சுப்போட்டு அதன் மேல் நியூஸ் பேப்பர்ஸ் கத்தைகளை அடுக்கி அதன் மேல்  க்ளாட்ராப் சுத்தின பாத்திரம், அதை அசையவிடாமல் நிறைய அட்டைப்பெட்டிகளை அண்டக்கொடுத்து ஒரு வழியாக பத்திரமாய் சேர்ப்பிச்சுட்டு வந்துட்டார்.'நீ கூடவராததால் கத்தல் இல்லாம அமைதியாக் கொண்டுபோனேன்'னு எனக்கு பாராட்டு வேற:-)

ஜீவிச்சிருந்நெங்கில் அடுத்த கொல்லம் வேறேதாவது  செய்யக் கிடைக்கணும் பகவானே!  ரஸம் உண்டாக்கி மடுத்து:(

முதல்நாள் இரவே பூக்களம் தயாராகத் தொடங்கியது.  நாங்களும்  கறிவைப்பினு  சஹாயிக்கான் போயி.  கொஞ்சம் லேட்டாப்போயிட்டோம். அதுக்குள்ளே  காய்கறிகள் வெட்டி முடிச்சு முக்கால்வாசி சமையலே முடிஞ்சு போயிருந்தது. ஸ்டேஜ் அலங்காரம், பலூன் ஊதிக் கட்டுதல்,  சமைக்கும் இடத்தைச் சுத்தப்படுத்தி, பாத்திரங்களைக் கழுவி ஒழுங்கு செய்துன்னு  முக்கிய வேலைகளை எல்லாம் ஆண்கள் கூட்டம் ஏற்றெடுத்து.

மறுநாள் (சனிக்கிழமை)  காலையில் பத்துக்குப் போனால்  ஓணம்விழா நடக்கும் சர்ச் முன்புறத்து ஹாலில் கோலம் தேமேன்னு இருக்கு. நிலவிளக்கைக் காணோம். ஐஸ்வர்யக் கேடல்லோன்னு விசாரிச்சால் குத்துவிளக்கு உள்ளே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே இருக்காம்.

தென்னை மரத்துலே தேங்காய் உண்டல்லோ:-)

இதோ இப்ப அஞ்சு மினிட்டில் தொடங்காம் போகுன்னுன்னு  சொல்லிக்கிட்டே  இருக்காங்க.  ம்யூஸிக் சிஸ்டம்  சரியில்லை. எதோ குழப்பம்.  க்ருத்தியம் பதினொன்னுக்கு ஆரம்பிச்சாங்க.  மேடம் ப்ரெஸிடெண்ட் எல்லோரையும் வரவேற்றாங்க.  நம்ம நேரம் பாருங்க.....  22  ஸ்டேஜ் ஐட்டம்ஸ் இருக்கு.  ஓணவிருந்தே 21 ஐட்டம்தான். இது அதையும் பீட் பண்ணிருச்சு.


மாவேலித் தம்புரான் விளக்கு  ஏற்றி ஆரம்பிச்சு வச்சார்   திருவாதிரைக்களி நடனமும், நாடன்பாட்டுகளும் சினிமாப் பாட்டும் குத்தாட்டங்களுமா எல்லாம் கலகல.  இதுக்கிடையில்  க்ளப்புக்கு நிதி சேர்க்க   லக்கி டிப் பரிசுச்சீட்டு குலுக்கல் நடந்தது.  நம்ம கோபால் மேடைக்குப்போய்  பரிசுக்குரிய ரெண்டு சீட்டுகளை எடுத்தார்.  12 அண்ட் 13 !  என்ன குலுக்கலோ!!!



எனக்கும் மேடையேற ஒரு சான்ஸ் கிட்டி.  ஓணம் வாழ்த்துகளை எஸ் எம் எஸ் அனுப்பினவர்களில் ரேண்டம் முறையில் ஒருவரைத் தெரிவு செய்தனர்.  வாழ்த்து அனுப்பிய எண்களில் ஒன்றை நாம் திருப்பிக்  கூப்பிட்டபோது  செல்லை எடுத்துப் பேசியவருக்கு  ஒரு பரிசு. அதை வழங்கியது துளசிதளம் ப்ளொக் உரிமையாளர்:-)  கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்குக் கொடுத்தது போல!

இப்ப நம்ம கேரளா அசோஸியேஷனில்  வயசன்மாரா இருப்பது  நாம்தான்! அதற்குரிய மரியாதை:-)





 பெஸ்ட் ட்ரெஸ்ஸுடு  மலையாளி மங்ககளும் மங்கன்களும்  போட்டி:-)




இடைக்கிடையில்  சின்னச் சின்ன கேள்விகள் சில.

மாவேலி  ஆட்சி செய்ததாகச் சொல்லப்படும் பகுதி தற்போதைய கேரளத்தில் எங்கே?

த்ருக்காக்கரா  (Thrikkakkara)   இங்கே வாமன மூர்த்திக்கு ஒரு கோவிலுண்டு அந்த 108 இல் ஒன்னு.)

எந்த ஆண்டு முதல் ஓணம் தேசிய விழா என்று அறிவிக்கப்பட்டது?

1960

பூக்களம் வரைகிறோமே அது எதற்காக?  எது அதன் குறியீடு?

Unity (மாவேலி வருந்ந திவஸம் மனுஷ்யரெல்லாம் ஒன்னு போல!)

பத்து நாள் ஓணம் என்பது எந்த நாள் துடங்கி எந்த நாள் வரை?

அத்தம்,  சித்திர, சோதி, விசாகம், அனிழம், கேட்ட,மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம்

(ஹஸ்தம், சித்திரை , சுவாதி, விசாகம், அனுஷம்,  கேட்டை ,மூலம் , பூராடம், உத்திராடம் .திருவோணம்)

'காணம் விற்றும்  ஓணம் உண்ணனும்' என்ற பழமொழியில் காணம் என்றால் என்ன ?

காணத்துக்குப் பொருள்?  பொன் பொருளேதான். பொன்/ தங்கம்

இப்படி நாலைஞ்சு.

தமிழ்சினிமா குத்துப்பாட்டுகள் கேரளத்து மக்கள்ஸ்க்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.    நேரம் (பிஸ்தா ), சென்னை எக்ஸ்ப்ரெஸ் (லுங்கி)  ஒன்  டு த்ரீ ஃபோர், துப்பாக்கி  ( கூகுள் ) எல்லாம் மேடையில்  அதிரும்போது,இவுங்களுக்குன்னே பாடல்கள் தமிழ் சினிமாவுலே வருதோன்னு தோணுச்சு/

கிளாஸிகல் நடனம்(பரதநாட்டியம்)  ஒன்னு.அதன்பின்  செமி க்ளாஸிகல் என்று ஒரு ஃப்யூஷன் ம்யூஸிக்.பாட்டு என்ன சொல்லுங்க பார்க்கலாம்? எந்தரோ மஹானுபாவலந்திரிக்கு வந்தனமு!!!


பாய்ஸ் திருவாதிரைக்களி. ரெண்டு வருசம் முன்னே செய்த நடனத்தின்  திருத்தி அமைக்கப்பட்ட  ஐட்டம்:-) அப்போ பார்க்காதவர்களுக்காக இந்தச் சுட்டி.





கடைசி ஐட்டம் பாட்டுன்னு  அறிவிச்சவுடன்,  எல்லோருக்கும் போய்க்கிட்டு உசுரு மீண்டும் வந்தாப்போல்  ஆனது மெய்.



 இனி ஓண சத்ய!  வழக்கம்போல்(!) இலை போட்ட சோறு!  பருப்பு, நெய், எரிசேரி, காளன், ஓலன், தோரன், சக்கரைவரட்டி,ஏத்தக்காய் சிப்ஸ், இஞ்சிக்கறி, அவியல், பீட்ரூட் மெழுக்குபுரட்டி,  அச்சாறு, பப்படம், சாம்பார், ரஸம்,பச்சமோரு, ரெண்டுகூட்டம் பாயஸம் ( அடப்ரதமன், பருப்பு  ) மோர்மிளகாய்,  பழம்,  குடிக்கான் சீரகவெள்ளம் இப்படி மெனு!
சும்மா சொல்லக்கூடாது. மொத்தப்பொறுப்பும் இளைஞர் கையில். 'எந்து வேணும் ஆண்ட்டி, எந்து  வேணும் அங்கிள்'னு பாய்ஞ்சு பாய்ஞ்சு பரிமாறின வேகத்தைப் பார்க்கணுமே!!  வெல்டன் பாய்ஸ்!



சாப்பிட்டு  முடிச்சு கைகழுவி வந்தப்ப ஒரு குழந்தை என் கைக்கு வந்தாள். பெயர் மேக்னா.  ஒரு ஆறேழு  மாசம் இருக்கலாம்.  யாரோட குழந்தைன்னு விசாரிச்சவங்களுக்கு ஒரே பதில்....' யாருக்குத் தெரியும்?'

வயிறும் மனசும் நிறைஞ்சு வழியக்  காலிப் பாத்திரத்தை (ரஸம் கொண்டு போனது)  எடுத்துக்கிட்டு வீடு வந்தப்ப மணி க்ருத்தியம் மூணே கால்.

இன்று  ஓணப் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் துளசிதளத்தின் மனமார்ந்த ஓணம் வாழ்த்து(க்)கள்.

எல்லாம் நன்னாயி வரட்டேன்னு ஈஸ்வரனோடு ப்ரார்த்திக்குன்னு.



32 comments:

said...

அங்கு மொத்தமாக சேர்த்தால் வாழும் மலையாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு டீச்சர்.

said...

படங்கள் அருமை... ஓணம் வாழ்த்துக்கள்...

said...

ஹாப்பி ஓணம் .

ஓணம் சுந்தர கோலத்து நடுவிலே
சுந்தரனும் சுந்தரியும்....

ஆஹா. ஆஹா.
யுக யுகமா இந்த அன்பு பந்தம் தொடரட்டும்.

வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.
www.subbuthatha.blogspot.com

said...

சமையல் செய்வதைவிட அதைக் கொட்டிக் கவிழ்க்காமல் ஹாலுக்குக் கொண்டு போக அதிகம் திறமை வேண்டித்தான் இருக்கு. //

சிரத்தையான பங்களிப்பு .. பாராட்டுக்கள்..!

இனிய ஓணம் வாழ்த்துகள்.

said...

Thank u teacher...and wish u the same.setudutha teacher sundariyaitu undee.

said...

padangal arumai- onam nalvalthukkal

said...

மலையாளத்தில பின்னூட்டணுமோ துளசி. அப்போ அடிப்பொலிதான் சொல்லணும்:)
சூப்பர் கொண்டாட்டம் . கேரள மக்கள் எப்போழும் கூடிக் களிப்பதில் வல்லாள் அல்லே.
சூப்பர் ஓண வாழ்த்துகள்.

said...

துளசி .....சுந்தரி .உங்க ரெண்டு பேரோட படம் அழகு .


// .'நீ கூடவராததால் கத்தல் இல்லாம அமைதியாக் கொண்டுபோனேன்'னு எனக்கு பாராட்டு வேற:-)// :)))).
ரசம் எப்பிடி இருந்ததுன்னு தெரியலை (போட்டோ இல்லாததால ) ஆனா உங்கள் புடவை blouse ( வித்தியாசமான blue combination) சூப்பர்

said...

//ஓணம் வாழ்த்துகளை எஸ் எம் எஸ் அனுப்பினவர்களில்//

யாருக்கு அனுப்பியதுன்னு சொல்லலையே..

ஆமா,. டெலிபதியில் அனுப்பினவங்களுக்குப் பரிசு கிடையாதா :-))

ஓணசத்ய ஜூப்பரு. போன வருஷம் இதைச் சாப்பிட உங்கூரு வி.ஐ.பிக்கு நீங்க க்ளாஸ் எடுத்தது நினைவுக்கு வந்தது :-)

said...

ஓணம் வாழ்த்துகள்.

விருந்துண்டு மகிழ்ந்தோம்.

said...

பொன் ஓணம் நல்வாழ்த்துகள்.....

வளர நன்னாயிட்டுண்டு ஈ ஓணம் செலிப்ரேஷன்ஸ்.... :)

said...

அந்த ஓணம் சேலை எனக்கு வளர பிடிச்ச்சிருக்காக்கும் :)

ஓணம் வாழ்த்துகள்.

கடைசி வரைக்கும் அந்தக் குழந்தை யாருடைய குழந்தைன்னு தெரியலையா?????

கடைத்தேங்காய் வழிப்புள்ளையாரு எனக்கு இஷ்டமாயல்லோ

said...

உங்களோடு இணைந்து நாங்களும் ஒணக்களியாட்டங்களில் கலந்துகொண்டோம். நன்றி டீச்சர்.

said...

my comment has come through my daughterRamya's ID . after publishing only I have noticed .
sasikala

said...

ஐயோடா! துளசி சேச்சி ஓணம் சேலையில் எத்தர அழகாயிட்டு!
பொன் ஓணம் வாழ்த்துக்கள்!

said...

அட்டகாசம்.

said...

வாங்க ஜோதிஜி.

எண்ணிக்கை சுமார் ஆயிரம் இருக்கலாம். ஊரின் மொத்த ஜனத்தொகை மூணரை லட்சம்தான்.

சென்ஸஸ் எடுக்கும்போது இண்டியன்ஸ் எவ்வளவுன்னுதான் கேட்பாங்க. மொழிவாரிப்பிரிவுகள் இல்லை.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சேர்ப்பிக்கும் வரை திக் திக்தான்:-)))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க சிந்து.

நலமா? ஆளையே காணோமே:(

அது செட் இல்லைப்பா.ஸாரி தன்னே.

முந்தானையில் ரெண்டு க்ருஷ்ணன் படங்கள் உண்டு. அது தெரியும்படி படம் எடுக்கலையேன்னு இப்ப நினைக்கிறேன்:(

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ரசனைக்கும் வருகைக்கும் நன்றீஸ்.

said...

வாங்க ரம்யா கீதாஞ்சலி.

முதல் வருகைக்கு நன்றி.

சரிக்கும் பார்த்தால் புடவை பார்டர் வேற ஒரு ப்ளூவா இருக்கு. ப்ளவுஸ் மாறிப்போச்சோன்னு இப்ப சம்ஸயம்:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

எஸ் எம் எஸ் , அனுப்ப வேண்டியது மாஸ்டர் ஆஃப் செரிமனிக்குத்தான்:-)

இந்த வருசமும் ஸ்பூன் வச்சு இலையில் சாப்பிட்டவங்க உண்டு.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரு எட்டு கொல்லமா ஓண சத்யா உண்டு இவிடே:-)

said...

வாங்க கவிதாயினி.

ஓணக்கோடி இஷ்டப்பட்டோ:-)))

நல்ல குழந்தை. அழ ஆரம்பிக்கறவரை குழந்தைகளை எனக்கு ரொம்பப் பிடிக்கும் கேட்டோ:-)))))

said...

வாங்க கீதமஞ்சரி.

விழாவில் கலந்துகொண்டதுக்கு நன்றிப்பா.

said...

சசி கலா,

நோ ஒர்ரீஸ்ப்பா!

said...

வாங்க ரஞ்ஜனி.

இஷ்டப்பட்டோ???? வளரே நன்னி.

said...

வாங்க குமார்.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க வல்லி.

விழாக்களை மட்டும் அவுங்க விட்டுக்கொடுக்கறதே இல்லையாக்கும் கேட்டோ!!!

பயங்கர சிஸ்டமாடிக் எல்லோரும். நாம் படிக்கவேண்டிய அம்சம் நிறைய உண்டு.