Friday, September 13, 2013

Dataran Merdeka (மலேசியப் பயணம் 17 )


அடுத்த நிறுத்தம் எங்களுக்கு மெர்டெகா சதுக்கம். மலே(ய்)  சொல் மெர்டெகாவுக்கு சுதந்திரம் என்று பொருள்.  சுதந்திரச் சதுக்கம். இங்கே நெடுநெடுன்ற உசரத்தில் ஒரு கொடிக்கம்பம்.   இந்தக் கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த  ப்ரிட்டிஷாரின் கொடியை  1957 ஆகஸ்ட் 30, நள்ளிரவு 12.00 க்கு இறக்கிட்டு  சுதந்திர மலேசியாவின் கொடியை 12.01 மணிக்கு  உச்சிக்கு ஏற்றிப் பறக்கவிட்டுருக்காங்க. ஆகஸ்ட் 31  நாட்டின் சுதந்திரத் திருநாள்.

இந்த சதுக்கத்தில்தான் சுதந்திரதின அணிவகுப்பு , மரியாதைகள் எல்லாம் நடக்கும். முப்படையினரும் அணிவகுக்க,  மன்னர், பிரதமர் மற்ற எல்லா  முக்கிய அங்கங்களும் கலந்துகொண்டு  கொண்டாடுவர்.

பிரிட்டிஷார் காலத்தில் இது அவர்களின் க்ரிக்கெட் மைதானம். ஒரு பக்கம்  ஸ்டேண்டு போட்டு வச்சுருந்தாங்க.  மற்ற சீஸன்களில்  இங்கே கால்பந்து, ஹாக்கி போன்றவைகளை விளையாடி மகிழ்வார்களாம்.


உச்சாணிக் கொம்பில்  மலேசியக்கொடி கம்பீரமாப் பறந்துக்கிட்டு இருக்கு. உயரம் காரணம்  வெகுதூரத்துக்கு கண்ணில் படுகிறது. உலகின் உயர்ந்த கொடிமரமாம்! நூறு மீட்டர் உசரம்!

சுதந்திரச் சதுக்கத்தில்  இதுவரை  ஆட்சியில் இருந்த /இருக்கும் பிரதமர்களின் படங்களை வரிசையா வச்சுருக்காங்க. மொத்தம் ஆறு பேர்.. தற்சமயம்  2009 முதல்  பதவியில் இருப்பவர்  திரு நஜீப் ரஸாக்.


நாட்டின் அரசர்  Yang di-Pertuan Agong  என்ற பதவியில் இருக்கார்.   பட்டத்து ராணிக்கு   ஸுல்த்தானா Raja Permaisuri Agong  என்ற  பெயர்.  (அட! ராஜ பரமேஸ்வரி !!!) இப்போதைய அரசர் டுவான்கு அப்துல் ஹலீம் அவர்களுக்கு  பெருமை சேர்க்கும் விஷயமா ரெண்டு முக்கியத்துவம் இருக்கு. இவர்தான் இதுவரை ஆண்ட அரசர்களில்  வயதில் மூத்தவர். (86 நடக்குது இப்போ!)  அஞ்சு வருசத்துக்கு ஒரு அரசர் என்ற  வகையில் இவர் ஒருவரே இப்போ ரெண்டாம் முறையா அரசாள்கிறார்.  ராணியம்மா சின்னவயசா இருக்காங்களேன்னு பார்த்தால், இவர்  ரெண்டாவது மனைவியாம். முதல்ராணி சாமிகிட்டே போய் வருசம் பத்தாகுது.



சதுக்கத்தில் இந்த  இடம்ரொம்பவே அழகான பலவகை நிறமுள்ள செடிகளுடன் பளிச்ன்னு இருக்கு.பக்கத்தில் ஒரு  செயற்கை நீரூற்று. இதுவுமே சரித்திரத்தில் இடம் பிடிச்சதுதான். Horse Fountain என்று பெயர். 1887 இல் கட்டி இருக்காங்க.  இங்கிலாந்தில் இருந்து  இறக்குமதி.  முதலில்  செண்ட்ரல் மார்கெட்  நாற்சந்தியில்  இருந்ததை, போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குன்னு பொலீஸார்  சொல்ல, அதன் பிறகு இங்கே இடம் மாத்தி இருக்காங்க. சுத்திவரக் குதிரைகள் நிற்க  அவற்றின் வாயில் இருந்து  தண்ணீர் பொழிவது போன்ற அமைப்பு.  நாம் பார்த்த சமயம் பராமரிப்புக்காக தண்ணீரை நிறுத்தி இருந்தாங்க:(

சதுக்கத்தின் எதிர்ப்புறம்  ஸுல்தான் அப்துல் ஸமத்  கட்டிடம் ஒன்னு கலை அழகோடு இருக்கு. ஆதிகாலத்தில் அரசாங்க அலுவலகங்களா  இருந்து அப்புறம்  வழக்காடு மன்றமா இருந்து, இப்போ சரித்திரச் சான்றா ஆகிக்கிடக்கு.  இந்த ஏரியாவில் ஆற அமரப் பார்க்க ஏராளமான  இடங்கள், கட்டிடங்கள் எல்லாம் உண்டு. நடந்து போகும் தூரம்தான்!  முந்தாநாள்  நாம் பார்த்த செண்ட்ரல் மார்கெட் கூட ரொம்பப் பக்கமே!
















சதுக்கத்தின்  மேற்கே ஒரு சர்ச். செயிண்ட் மேரீ'ஸ். புகிட் அமான் என்ற சின்னக் குன்றின் மேல்  1887 வது ஆண்டு வெறும் மரப்பலகை வச்சுக் கட்டுனது .  சர்ச்சுக்கு வரும் கூட்டம் அதிகமானதும் இடம் பத்தலைன்னு  தேடுனப்ப,  வெள்ளையர்களின் க்ரிக்கெட் மைதானத்துக்கு அருகில்  கொஞ்சம் இடம் கிடைச்சது.   1895 ஆம் ஆண்டு  இங்கே செங்கல்வச்சுக் கட்டுனதுதான் இப்போ நாம் பார்க்கும் சர்ச்.  சாமி கும்பிட்டு முடிச்சுட்டு விளையாடலாம். இல்லேன்னா விளையாடி முடிச்சுட்டு சாமி கும்பிடலாம். நல்ல சௌகர்யம் இரண்டுக்குமே!  அப்போ இருந்த ப்ரிட்டிஷ் அரசாங்கம்,  சர்ச் கட்ட அஞ்சாயிரம்  டாலர்கள் கொடுத்துச்சாம்.


சர்ச் உள்ளே ஆரம்பகால இருக்கைகள், அலங்காரங்கள் எல்லாம் அப்படிக்கப்படியே  இருக்கு. பழமைமாறாமலே பழுது பார்த்துருக்காங்க. ரொம்பப் பெருசு ஒன்னும் இல்லை. நடுத்தர அளவுதான். 180 நபர்கள் உட்காரமுடியும்.

 புனித நீர் வைக்கும்   தீர்த்த ஸ்டேண்டு.

கருவறைக்கூரை  நல்ல உயரம்!


செலாங்கூர் க்ளப்  ( The Royal Selangor Club) வழியாகப் போறோம்.  1884 இல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மலேயா ப்ரிட்டிஷாரின் வசம் இருந்துச்சே. அவர்களுக்கு ஒரு சோஸியல் க்ளப் வேணும். சீமான்களும் சீமாட்டிகளும்  சந்திச்சு அளவளாவ ஒரு இடம் வேணுமே!  நல்ல படிப்பும் சமூக அந்தஸ்த்தில்  மேல்தட்டில் இருக்கும்  வெள்ளைமக்கள் மட்டுமே அங்கத்தினராக முடியும். இந்தக் கணக்கில் 140 நபர்கள் மட்டுமே  பதிவாகி இருந்தாங்க. க்ளப்புக்கு  வரலைன்னாக்கூட  மெம்பர்ஷிப் எடுத்தவர்களும் உண்டு. ப்ரெஸ்டீஜியஸ் க்ளப் ஆச்சே!



ஜப்பான்காரர்களின் பிடியில் மலேயா வந்தபோது  க்ளப்பில் இருந்த ஆவணங்களை அழிச்சுட்டாங்க. மிச்சம்மீதி தப்பிப் பிழைச்சதை 1970 தீ, தின்னு முடிச்சுருச்சு.

இந்த க்ளப்புக்கு  'ஸ்பாட்டட் டாக்' ( Spotted Dogs) என்ற செல்லப்பெயர்  மக்களால் வைக்கப்பட்டிருந்துச்சு:-)  இன்னும் சுருக்கி 'த டாக் '  என்றும் சொல்லிக்குவாங்க. காரணம்?  இதன் ஸ்தாபகரின் மனைவி இங்கே வரும்போதெல்லாம்  அவருடைய செல்லங்களான ரெண்டு டால்மேஷியன் நாய்களைக் கூடவே கூட்டி வந்து வெளியே காவல்காரர் அருகில் கட்டி விட்டுருப்பாராம்.

ப்ரிட்டிஷார்  வெளியேறின பிறகும்,  செலாங்கூர்  ஸுல்த்தான் அவர்களின்  ஆதரவால்  சரித்திர முக்கியம் உள்ள இது இருந்துட்டுப்போகட்டுமுன்னு  விட்டு வச்சுட்டாங்க.  நூறு வயசைத் தாண்டிய க்ளப் இது. இதுவும் ஆரம்ப காலத்தில் மரக்கட்டிடமா இருந்து அப்புறம் செங்கல் கட்டிடமா ஆனதே.

இந்த மெர்டெகா சதுக்கத்தைச் சுத்தி பழமை மாறாத கட்டிடங்கள்  அப்படியே இருக்க இவைகளுக்கு அரணாக  வானைத்தொடும் உயரக்கட்டிடங்கள்  வரிசை கட்டி நிற்பது கூட பார்க்க நல்லா இருக்கு!

இன்னும் கொஞ்ச தூரம் போனால் லிட்டில் இந்தியா பகுதி.

லிட்டில் இந்தியாவுக்குள் நுழையறோம். வளைவு டிஸைகள் வரவேற்கின்றன.  யானைக்காரிக்கு வரவேற்பு  தரும் யானை நீரூற்று. 7.6 உச ரம்.  யானையும் மயிலுமா பார்க்க அழகா இருக்கு. ஆனாலும் யானைகள் என்னவோ போஷாக்கா இல்லையாக்கும்:( ஒல்லி உடம்பு!

இந்த லிட்டில் இந்தியாப் பகுதியை அழகுபடுத்த  35 மில்லியன்  ரிங்கிட் செலவு செஞ்ச மலேசிய அரசு, நம்ம இந்தியப் பிரதமர்  டாக்டர் மன்மோஹன் சிங் அவர்களை அழைச்சு அவர் கையால்  திறப்பு விழாவை நடத்தி இருக்கு.  இந்திய மலேசிய உறவு பலப்பட்டுப் போச்சு!


லிட்டில் இந்தியாப் பகுதியில்  சனிக்கிழமைகளில்  இலவசமா  வாக்கிங் டூர்  கூட்டிப்போய் காண்பிக்க அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செஞ்சுருக்கு.  காலை 9 மணிக்கு விவேகானந்தர்   ஆச்ரமம் வாசலில் இருந்து கிளம்பினால்  பகல் 11.30  க்கு  திரும்பிடலாம். நமக்கு சனி கிடைக்கலை:(

இந்தியான்னதும் அந்தப்பகுதி கலகலன்னு  இருக்கு. துணிமணி நகைநட்டு, சாப்பாடுன்னு எல்லாமே  கிடைக்குது. நாம் வழக்கம்போல்(!!!) சரவணபவன் வாசலில் இறங்கிக்கிட்டோம்.  மரத்தாண்டவரை  சாப்பிடக் கூப்பிட்டால்  அன்போடு மறுத்துட்டார். அவர் சேவை முடிஞ்சது.

நேத்துப் போலவே  இலை போட்ட சாப்பாடு. ஆனால் நேற்றைய சுவை இல்லை. எல்லாமே கொஞ்சம் காரம் அதிகம். கல்லாவிலிருந்தவரிடம் புது சமையல்காரரான்னேன். இல்லையாம். நேற்று சமைச்சவர்தானாம்.

"ஓ... அப்ப வீட்டுலே சண்டையா இருக்கும்."

"இல்லீங்க. அவர் குடும்பம் ஊருலே இருக்கு."

"அதனால் என்ன ? ஃபோனில் சண்டை போட முடியாதா?"

"ஙே"    (இது கல்லாக்காரர்!)

தொடரும்...........:-)





15 comments:

said...

பளிச் பளிச் படங்கள் !!! எவ்ளோ details தரீங்க துளசி !!


//"ஙே" (இது கல்லாக்காரர்!)//

:) சுஜாதாவை நினைக்க வெச்சுடீங்க

said...

Raja Permaisuri

என்னது ? பரமேஸ்வரியா ?

நான் பெருமை சூரி என்று படித்து ஆஹா என்று கத்திவிட்டேன்.

என்ன என்ன என்று என்று கேட்டுக்கொண்டே இல்லக்கிழத்தி ஓடி வந்தாள்.

இதோ பார் இந்தோனேஷியாவிலும் என் பெயர்.

சூரி என்றால் கூர்மையானவன் அப்படின்னு இந்தியிலே பொருளாம்.
கத்திக்கும் சுரி என்று சொல்வார்களாம்.
பெண்னுக்கு சூரி என்று பெயரிட்டால் சுடுபவள் என்று பொருளாம்.

அப்ப உனக்குத் தான் அந்த பெயர் பொருத்தம் என்றேன்.

முறைத்துவிட்டு நீயா நானா பார்க்க திரும்பினாள்.

சுப்பு தாத்தா.

said...

//
"ஓ... அப்ப வீட்டுலே சண்டையா இருக்கும்."

"இல்லீங்க. அவர் குடும்பம் ஊருலே இருக்கு."

"அதனால் என்ன ? ஃபோனில் சண்டை போட முடியாதா?"//

அடடா..டீவி சீரியல் பார்த்துப் பார்த்து ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டீங்க டீச்சர் ;-)

said...

"ஓ... அப்ப வீட்டுலே சண்டையா இருக்கும்."

"இல்லீங்க. அவர் குடும்பம் ஊருலே இருக்கு."

"அதனால் என்ன ? ஃபோனில் சண்டை போட முடியாதா?"//

முதாலளி ஊருக்குப் போகவிடுமுறை தரவில்லை என்பதால் அவர் மேல் கோபமாய் சமைக்கவும் வாய்ப்பு இருக்கே துளசி.

பயணக் கட்டுரை படங்கள் செய்திகள் எல்லாம் மிக அருமை.

said...

// பட்டத்து ராணிக்கு ஸுல்த்தானா Raja Permaisuri Agong என்ற பெயர். (அட! ராஜ பரமேஸ்வரி !!!) //

அடா அடா அடா! என்னவொரு ஆராய்ச்சி. சூப்பர் டீச்சர். :)

// "அதனால் என்ன ? ஃபோனில் சண்டை போட முடியாதா?"

"ஙே" (இது கல்லாக்காரர்!) //

டீச்சர், சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு :)

said...

Sasi,
Don't u remember Rajendrakumar?

said...

கட்டிடங்கள் எல்லாம் பெரிதாக அழகாக இருக்கின்றன.

சண்டை ...ஹா...ஹா

said...

வாங்க சசி கலா.

ஙே...... இது ராஜேஷ் குமார் ஆச்சே!!!!

said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா.

எங்க மீனாட்சி அக்காவை உங்களால் ஜெயிக்கவே முடியாது:-))))

said...

வாங்க ரிஷான்.

தங்கம், திருமதி செல்வத்துலே மாட்டிக்கிட்டு நொந்து நூடுல்ஸ் ஆனதை எதுக்கு நினைவுபடுத்தறீங்க:-))))

இப்பெல்லாம் நோ டிவி சீரியல்ஸ்!

பக்தியா இப்ப மஹாபாரதம் பார்க்கிறேன்:-)

said...

வாங்க கோமதி அரசு.
அட! லீவு தரலைன்ற காரணம் பொருத்தமா இருக்கே!!!!

said...

வாங்க ஜி ரா.

வாய்விட்டுச் சிரிச்சா ரொம்ப நல்லது:-))))

said...

வாங்க எழிலரசி.

சசிக்கு பதில். நன்றீஸ்.

said...

வாங்க மாதேவி.

இவ்வளவு அழகான கட்டிடங்களை சென்னையில் பார்த்த நினைவில்லையேப்பா:(

புது சட்டசபைன்னு ஒன்னு சிலவருசங்களுக்கு முன் பார்த்தேன். ஐ ஸோர்:(

said...

sorry instead of rajesh kumar I typed sujatha (sujatha is My favourite writer )