Tuesday, September 03, 2013

பதிவர் மாநாட்டில் ஏமாற்றம் :(

நேரலை ஒளிபரப்பு வருதுன்னு லேப் டாப்பில் தேவுடு காத்தேன். அங்கே காலை  ஒன்பது என்றால் எங்களுக்கு அது  பிற்பகல் மூணரை. ரொம்ப வசதியான நேரம்.

ஆனால்...... ஒன்னும் வரலை.   துண்டுதுண்டாக  ஒரு ரெண்டு நிமிசம்படம் கலங்கலாத் தெரிஞ்சது. ஆடியோ....   சுத்தம்.ஸீரோ.

யார் யார் யாரென்பதும் என்னதான் சொல்றாங்க என்பதும்  கண்டும் கேட்டால்தானே ஆனந்தம்?

ஒரு சமயம் நம்ம மோகன் குமார் என்னவோ வாயை அசைத்தார். ஆளைத் தெரியும் என்பதால்  அவர்தான் எனக் கண்டுபிடிக்க முடிஞ்சது!

யாராவது  யூ ட்யூபில்  நிகழ்ச்சியை வலை ஏத்தி இருக்காங்களா?  இல்லைன்னா தனிப்பட்ட முறையில்  வீடியோ எடுத்தீங்களா?

புண்ணியவான்கள் யாராவது  ரெக்கார்ட் செஞ்சு இருந்தால் சுட்டி ப்ளீஸ்.

ஏமாந்து போய் மண்டை காய்ஞ்சு நிக்கறேன்:(

15 comments:

said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

said...

நானும் பதிவர் மாநாட்டைப் பார்க்க ஆவலாய் இருந்தேன்.

said...

படங்கள் காண

http://schoolpaiyan2012.blogspot.com/2013/09/2013.html

said...

அச்சச்சோ! பாவம்ம்மா நீங்க!!

said...

நானும் தான் பாவம்,.
வீடியோ வந்தாலும் ஆடியோ வரவில்லை.
நன்றி ஸ்கூல் பையன் உங்கள் பதிவிற்கு வருகிறோம்.

said...

விரைவில் வரும்... pl.wait...

said...

தொழில் நுட்பம் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த நண்பருடன் நானும் உட்கார்ந்து இருந்தேன். கடைசி வரைக்கும் கண்கட்டி வித்தை போல ஆகிவிட்டது. சில சமயம் வந்தது. முழுமையாக இல்லை. ஏமாற்றம் தான்.

said...

கூட்டம் நடந்த இடத்தின் வெப்பம் மிகவும் அதிகம். கரெண்ட் கட் நான்
என்னை அறிமுகம் செய்துக்கொள்ளும்போது கூட.

சரியாத்தான் இருக்கு. நமக்கு வூட்டிலே தான் பவர் இல்லயே, அப்படின்னு இங்கன வந்தா இங்கேயும் பவர் நான் பேசும்போது தான் போகனுமா ?

வகுத்தான் வகுத்த வகை அல்லான் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

அப்படிங்கற வள்ளுவன் வாய்மொழி தான் நினைவுக்கு வந்தது.

திரு. பாமரன் அவர்கள் சொற்பொழிவு நேரத்தில் அவையில் உட்கார இயலாத
அளவுக்கு உஷ்ணம். ஒரே ஆறுதல் அவரது இதமான உரை.

அதுதான் கணினியில் நேரடியாக வருமே என்று, இடை வேளை ஓசி சாப்பாட்டைக்கூட தியாகம் செய்து விட்டு வீட்டுக்கு வந்தால்,

பிளாக்கர் சுத்தமாக திறக்கவில்லை. மற்ற எல்லா வலைகளும் திறக்கின்றன.

விழாவுக்கு வந்திருந்த பால கணேஷ், சசிகலா, பிரகாஷ், மதுமதி, தருமி, புலவர் இராமானுசம் , பித்தன், கனடா விலிருந்து வந்திருந்த செல்லப்பா, ராஜி ( பாவம், இவரை பேசவே விடவில்லை ) ரமணி, திண்டுகல் தனபாலன், வேங்கட நாகராஜ், அவர்களும் அவர்கள் மனைவி, குழ்ந்தை கோவை டு தில்லி, கௌதமன் ,பழனிசாமி, ஆகிய வரையும் பாத்து ஒரு இரு வார்த்தை பேசும் வாய்ப்பு கிடைத்தது. சுரேகா அவர்கள் காம்பியர் செய்த விதம் நன்றாக இருந்தது.

விழா பொதுவாக ஒரு பொதுக் கூட்டம் போன்று தான் இருந்தது. பதிவாளர்களுக்கு பெரியதொரு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று பலர் நொந்துகொண்டு இருந்தனர். பதிவாளர்கள் தம்மிடையே கருத்துப்பரிமாற்றம் ஏற்படுத்திக்கொள்ளும் சூழ்நிலையும் வாய்ப்பும் தரப்படும் என்று ஒரு பக்க சாரார் நினைத்திருக்கவும் கூடும்.


நான் எதிர்பார்த்த பலர் வரவில்லை. மகளிர் பதிவர்கள் ஒற்றை இலக்கிலே தான் இருந்தனர். உங்கள் கணவர் அறுபது வயது நிறைவு விழாவுக்கு வந்திருந்த பலரை நான் எதிர்பார்த்தேன்.

சென்னை பித்தன் அவர்கள் பிறகு எழுதிய பதிவிலே சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிரார்கள். அவற்றிலே எல்லாமே எல்லாரும் நினைத்ததுவே.

விழா முழுக்க முழுக்க தமிழில் நடைபெற்றது என்பதைத் தவிர குறிப்பிடும் வகையில் ஒன்றுமில்லை. ஒரே ஒரு நிகழ்ச்சி தான் மனதை நெகிழச் செய்ததது.
புலவர் இராமானுசம் அவர்களது உரை.

அவர் தனது உரையில் காட்டிய கோட்டிலே இந்த மா நாடு சென் றிருந்தால்,
இன்னமும் சிறப்புற்று இருக்கும்.

சுப்பு தாத்தா.

said...

உண்மைதான். நானும் காலையில் மட்டும் பங்கேற்றுவிட்டு ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டேன். அங்குபோய் லாப்டாப், டெஸ்க்டாப் எல்லாவற்றையும் பயன்படுத்தியும் ஒன்றிலும் ரிலே சரியாக வரவில்லை. சென்னையிலேயே இப்படியென்றால் வெளிநாட்டில் கேட்க வேண்டுமா? ஒளிபரப்பிய தளத்தின் சர்வர் அத்தனை வேகம் இல்லைபோலும்.

said...

விரைவில் வீடியோ பகிர விழாக்குழுவிடம் சொல்கிறேன்.

said...

ஏமாற்றங்கள் நிறைந்திருந்தது. நேரடி ஒலிப்பரப்புதான் இருக்கே...அதிலேயே பார்த்துக்கிடலாம் என்று நானும் கூட பதிவர் சந்திப்புக்கு செல்லாது கணினியே தவமாக இருந்தேன்... கடந்த ஆண்டு கூட ஓரளவிற்கு நிகழ்ச்சிகளை காண முடிந்தது..

இந்த ஆண்டு பதிவர் சந்திப்பு குறித்த பதிவுகள் கூட தாமதமாகவே வந்துகொண்டுள்ளது...ஒவ்வொரு பதிவாய்த் தேடி தேடி படித்து ஏக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை..

பொறுத்திருப்போம்.. எதிர்பார்த்த பதிவுகளும், நிகழ்வுகளும், அனுபவங்களும் நிச்சயம் நம்மை பதிவுகளாய் வந்தடையும்....!!

அனைத்தையும் காத்திருந்துதான் பெற முடியும் போலிருக்கிறது...

said...

Mam, You can see the photos of most of the bloggers who participated in the event.

http://aathimanithan.blogspot.in/2013/09/visual-replay.html

said...

https://www.youtube.com/user/kavimadhumathi/videos துளசி மெடம் இப்போதைக்கு போன வருசம் நடந்த பதிவர் சந்திப்பு வீடியோக்களை மேலுள்ள லிங்கில் விரும்பின் பார்த்துக்குங்க....

said...

எங்களுக்கு பொறுமை இருக்கிறதா? என சோதித்துப் பார்த்திருக்கின்றார்கள். :)

said...

நண்பர்களே!

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

எல்லோரும் ஒரே (மாதிரி) படகில்தான் பயணம் செஞ்சுருக்கோம் போல!

இன்னும் காத்திருக்கேன்..... வலை ஏத்துவாங்களான்னு...

ஆறுன கஞ்சி பழங்கஞ்சி ஆயிறாது?