நாளும்பொழுதும் யாருக்காகவாவது காத்து நின்னதுண்டோ? காலஓட்டத்தில் அப்படியே அடிச்சுக்கிட்டு போகுது நாட்களும் வருடங்களும். அந்தக் கணக்குப்படி இன்று ஒன்பது கழிஞ்சு பத்தாம் வயசு ஆரம்பம் நம்ம துளசிதளத்துக்கு!
பத்து டிகிரி இன்னிக்கு.ஆனாலும் பூத்துக்குலுங்குது:-)
(ஆஃப்ரிக யானை. தோழியின் பரிசு)
வின்னராக ஓடி ஜெயிக்க முடியலை என்றாலும் இன்னும் மெது ஓட்டத்தில் ஓடிக்கிட்டு இருக்கு. திரும்பிப் பார்த்துக்கறதும் அப்பப்ப உண்டு. செய்யும் தொழிலில் கொஞ்சம் நேர்மையும் உழைப்பும் வேணும்தானே? அதை மனசாட்சிக்கு பங்கம் வராமல் காப்பாத்திக்கிட்டு இருக்கும் முயற்சியும் தொடர்ந்தே வருது.
நல்லதும் கெட்டதுமா, உருப்படியும் மொக்கையுமாக் கணக்குப் பார்த்தால் இந்த இடுகைக்கு 1490ன்னு ப்ளொக்ஸ்பாட் சொல்றார்.
தளத்தின் புரவலர், பயணக்கதைகளுக்குக் காரணகர்த்தா , பின்னூட்டப்ரேமி கோபாலுக்கும் இன்று பிறந்தநாள். எல்லா நன்மைகளும் பெற்று அவர் நீடூழி வாழ்கவென்று மனதார வாழ்த்துகின்றேன்.
அன்பும் ஆதரவுமா வாசிக்கும் , பின்னூட்டமளிக்கும் நண்பர்களுக்கும் ஓசைப்படாமல் வந்து போகும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அனைவருக்கும் என் அன்பு. நல்லா இருங்க மக்கள்ஸ்.
ஃப்ளவர் லைக்கிங்? ஸேம் ஸேம்....
பத்து டிகிரி இன்னிக்கு.ஆனாலும் பூத்துக்குலுங்குது:-)
(ஆஃப்ரிக யானை. தோழியின் பரிசு)
நல்லதும் கெட்டதுமா, உருப்படியும் மொக்கையுமாக் கணக்குப் பார்த்தால் இந்த இடுகைக்கு 1490ன்னு ப்ளொக்ஸ்பாட் சொல்றார்.
தளத்தின் புரவலர், பயணக்கதைகளுக்குக் காரணகர்த்தா , பின்னூட்டப்ரேமி கோபாலுக்கும் இன்று பிறந்தநாள். எல்லா நன்மைகளும் பெற்று அவர் நீடூழி வாழ்கவென்று மனதார வாழ்த்துகின்றேன்.
அன்பும் ஆதரவுமா வாசிக்கும் , பின்னூட்டமளிக்கும் நண்பர்களுக்கும் ஓசைப்படாமல் வந்து போகும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அனைவருக்கும் என் அன்பு. நல்லா இருங்க மக்கள்ஸ்.
ஃப்ளவர் லைக்கிங்? ஸேம் ஸேம்....
76 comments:
துளசியின் தளத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்; துளசியின் கண்ணனுக்கும் [கணவருக்கும்} பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பின்குறிப்பு: பின்னூட்டப்ரேமி...என்றால் என்ன அர்த்தம்.
கோபாலுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாங்க நம்பள்கி.
வாழ்த்துகளுக்கு நன்றி.
பின்னூட்டப்ரேமி = பதிவைப்பற்றிக் கவலை இல்லை. பின்னூட்டம் மட்டுமே அதுவும் எண்ணிக்கை முக்கியம் என்று நினைக்கும் ஒரு ஜீவன்:-)
ஒன்னும்பாதியுமா பதிவைப் படிச்சுட்டு என்னம்மா பின்னூட்டம் ஒன்னும் வரலையேன்னு புலம்புவதும் இல்லாமல், வரும் பின்னூட்டங்களுக்கும் பிட்வீன் த லைன்ஸ் கண்டுபிடிச்சு இப்படி அதுக்கு அர்த்தம் அப்படிச் சொல்றாங்கன்னு வியாக்யானம் வேற அடிஷனல் பாய்ண்ட்ஸ் சொல்லுவதும் உண்டு:-))))))))))
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
கோபால் சார்பில் நன்றிகள்.
வாழ்த்துக்கள்(2)
வாழ்த்துக்கள்
1490 க்கு இனிய வாழ்த்துகள்..
பத்தாம் ஆண்டிற்குள் வெற்றிகரமாக
அடி எடுத்து வைத்திருக்கும் துளசிதளத்திற்கு
மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..
பின்னூட்டப்ரேமி கோபாலுக்கு இனிய் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!
பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் துளசி தளத்திற்கு வாழ்த்துகள்......
உங்களவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்றைய நாளும், வரும் நாட்களும் இனிதாக அமையட்டும்......
கோபால் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!
இப்போ தான் எனக்கு ஒரு வருடமாக துளசிதளம் பரிச்சயம் ஆனாலும் நெடுநாள் பழகியது போல் ஓர் உணர்வு. படிச்சுக்கிட்டே இருக்கேன்.1490 க்கு வாழ்த்துக்கள் (எப்போ முடிப்பேன் தெரியல )
துளசிதளம் மேன்மேலும் வளர்ந்து சரித்திரம் படைக்க துளசிக்கு வாழ்த்துக்கள் .
//வரும் பின்னூட்டங்களுக்கும் பிட்வீன் த லைன்ஸ் கண்டுபிடிச்சு இப்படி அதுக்கு அர்த்தம் அப்படிச் சொல்றாங்கன்னு வியாக்யானம் வேற அடிஷனல் பாய்ண்ட்ஸ் சொல்லுவதும் உண்டு:-))))))))))//
:)
அது என்னனு தெரிஞ்சுக்க பெரும் ஆவல்...
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ஜோக்காளிக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகவில்லை ...வாழ்த்த வயதில்லை !வணங்குகிறேன் !
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், கோபால் சாருக்கும் துளசி தளத்துக்கும்:)!
பத்தாம் ஆண்டிற்குள்
அடி எடுத்து வைத்திருக்கும் துளசிதளத்திற்கு
இனிய நல்வாழ்த்துகள்.
கோபால் சாருக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.
துளசி தள பத்தாம் வருடத்திற்கு உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பத்தாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் துளசிதளம் & கோபால் ஐயாவிற்கும் இனிய மகிழ்ச்சியான மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்
தலைவருக்கு வாழ்த்துகள் தேவையில்லை. உங்களை பத்து வருடமாக இயல்பாக இயங்க வைத்தமைக்கு, எழுத உதவ காரணமாக இருந்தவருக்கும், உலக சுற்றுலா அரசி என்றுபெயர் வாங்கி தந்தமைக்கும் சேர்ந்து இந்த பத்தாவது ஆண்டில் என் மனைவி சார்பாக குழந்தைகள் சார்பாக நன்றி.
இவங்க தானே என்னையும் எழுத வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இருவரும் நீண்ட நாட்கள் ஆண்டுகள் சேர்ந்திருந்து எங்கள் எல்லோரையும் எப்போதும் போல மகிழ்ச்சியிலும் அதிசயத்திலும் ஆழ்த்துக் கொண்டிருக்கவேண்டும்.
அபூர்வ தம்பதிகளும் துளசிதளமும் எந்நாளும் வாழ வாழ்த்துகள்.
வாழ்த்துகள்..:) பின்னூட்டப்ப்ரேமி..அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்..:)))
பத்தாண்டுகள்பதிவைத் தொடர்தல் என்பதும்
இன்னும் சுவார்ஸ்யம்
குறையாமல் இளமைத் துடிப்புடன்
விஷய கனத்துடன் பதிவைத் தருதல்
என்பது சாதாரண விஷயமில்லை
நிச்சயம் இது இமாலயச் சாதனையே
துளசிதளத்திற்கும் அதற்குத் துணையாய் இருக்கும்
கோபால்சாருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் எழுத்தை படித்து வரும் வாசகன் தொடர்ந்து எழுதுங்கள் எழுதுவதை விட்டு விடாதீர்கள் நன்றி
பத்து வருஷமா!! பிரமிப்பாக இருக்குது. மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் டீச்சர். எங்களைப் போன்ற ”யூத்”களுக்கு முன்னோடி நீங்க!!
அன்பின் டீச்சர்,
துளசி தளத்துக்கும், துளசியின் தலைவருக்கும் (நம்ம கோபால் அண்ணாவைச் சொன்னேன்) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்ன பரிசு கொடுத்தீங்க டீச்சர் அவருக்கு?
அப்றம் என்ன சமையல் இன்னிக்கு?
ஒரு பதிவாப் போட்டுடுங்க..காத்துட்டிருக்கேன்ல ;-)
வாழ்த்துகள், வாழ்த்துகள், தளத்துக்கும், தளத்தின் புரவலர் கோபாலுக்கும், மனமார்ந்த வாழ்த்துகள். இது போல் மேலும் பல பத்துக்காணவும் வாழ்த்துகள். விரைவில் 2,000 பதிவுகளைக் காணவும் வாழ்த்துகள்.
= பதிவைப்பற்றிக் கவலை இல்லை. பின்னூட்டம் மட்டுமே அதுவும் எண்ணிக்கை முக்கியம் என்று நினைக்கும் ஒரு ஜீவன்:-)//
ஹாஹா,இங்கே நேர்மாறாகப் பதிவு மட்டுமே போடுவோம். பின்னூட்டம் பற்றிக் கவலையே இல்லை! :)))) ஏதோ நமக்கும் ஓடிட்டு இருக்கு, முடியப் போறது ஏழாவது வருஷமுல்ல!
long live gopal
long live thulasidhalam
long live thulasi
long live fellow readers of this blog
வாங்க அரவிந்தன்.
ரெட்டை விழாவுக்கு ரெண்டு பின்னூட்ஸ்.
நன்றிகள்.
தளத்துக்கும் புரவலருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துகள். விருந்தில் இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? :-)
வாங்க இராஜராஜேஸ்வரி.
அன்புக்கு நன்றிப்பா.
வாங்க வெங்கட் நாகராஜ்.
வாழ்த்துகளுக்கு நன்றீஸ்.
வாங்க சசி கலா.
ஒரு வருசம்தானே ஆச்சு.நிதானமா படியுங்க. தினம் காலை ஒன்னு மாலை ஒன்னுன்னு ரெண்டு டோஸ்:-)
அடிஷனல் பாய்ண்ட்ஸ்க்குத் தனிப்பதிவே போடணும்!
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
தொடர்ந்த ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க ஜோக்காளி.
வாழ்த்த மனம் இருந்தால் போதும். வயசு எதுக்கு?
வணக்கத்துக்கு நன்றியும் வணக்கமும்.
வாங்க ராமலக்ஷ்மி.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வாங்க காஞ்சனா.
வணக்கம். நலமா? ரொம்பநாளாக் காணோமே?
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க புதுகைத் தென்றல்,
அன்பான வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வாங்க வேல்.
வாழ்த்துகளுக்கு நன்றி. அந்த (வேல்)முருகனே வந்து வாழ்த்தியதாக நம்புகிறேன்.
வாங்க ஜோதிஜி.
உண்மைதான்.குடும்பம் சப்போர்ட் செய்யலைன்னா நம்ம பாடு திண்டாட்டம்தான்.
தேவியரின் வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க ஜோதிஜி.
உண்மைதான்.குடும்பம் சப்போர்ட் செய்யலைன்னா நம்ம பாடு திண்டாட்டம்தான்.
தேவியரின் வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க வல்லி.
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வாங்க கயலு.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
வாங்க ரமணி.
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க வடிவேலன்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
முடியும்வரை எழுத்துப்பணியை(?!) தொடரத்தான் வேண்டும்:-)
வாங்க ஹுஸைனம்மா.
என்னை இப்படிப் பழம்பெ'று'ம் யூத்தா ஆக்குனதுக்கு ஸ்பெஷல் நன்றிப்பா:-))))
வாங்க ரிஷான்.
பரிசு அவரல்லவா எனக்குக் கொடுக்கணும்! அநேகமா நொறுக்குத் தீனியாக இருக்கலாம். அடுத்த வாரம் தெரியும்
உங்க அண்ணன் ஊரில் இல்லை. சாப்பாட்டுக் கொடுமைக்கு பயந்தே தப்பிச்சுப் போயிட்டார்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க கீதா.
வாழ்த்துகளுக்கு நன்றி.
என் கடன் எழுதுவது. அவர் கடன் எண்ணுவது:-)
எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கப்போகும் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.
வாங்க சிஜி.
அனைவரின் சார்பிலும் நன்றி, நன்றி நன்றி நன்றி.
வாங்க அமைதிச்சாரல்.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
இன்றைய ஸ்பெஷல் கேழ்வரகு அடை.
மூளைக்கு நல்ல சத்துணவு:-)))
துளசி தளத்திற்கும் துளசி மணாளருக்கும் அன்பான வாழ்த்துகக்ள்.
வாங்க ஸாதிகா.
வாழ்த்துகளுக்கு நன்றி.
எப்படிப் பொருத்தம் பாருங்க!!
நீங்க நம்மூட்டுக்கு வந்துருக்கீங்க.நான் உங்கூட்டுக்குப் போயிருக்கேன்:-)
பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் துளசி தளத்துக்குப் பாராட்டுகள் தெரிவிப்பதை விடவும் நன்றி தெரிவிக்கவே விரும்புகிறேன்.
எவ்வளவு தகவல்திரட்டுகள். ஒவ்வொன்றும் ஏனோ தானோ என்றில்லாமல் சுவையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்வகையில் எழுதுவது என்பது அசாத்தியம். பலருக்கும் ஒரு சமயத்தில் சோர்வு வந்து எழுத்து தடைபட்டுவிடும். ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் எழுத்திலோ எண்ணத்திலோ சோர்வின்றி உற்சாகத்துடன் எழுதுவது ஒரு வரம். அந்த வரத்தை வாசகர்களுக்கும் வழங்கி உற்சாகமூட்டும் தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் டீச்சர்.
கோபால் சாருக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
அன்பு துளசி , 1490 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
துளசிதள பத்தாம் ஆண்டு தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
கோபால் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
//ஓசைப்படாமல் வந்து போகும் அன்பர்களுக்கும் //
hahah! :D :D Happy birthday to Thulasidhalam and Gopal sir! (just re-reading veedu kattum series for the nth time!)
-porkodi
கோபால் சாருக்கு பிறந்த நாள் அப்படின்னு வல்லி அம்மா சொல்லி ரொம்ப சந்தோஷம்.
அடையார் அனந்த பத்ம நாப பெருமாள் ஆசிர்வாதத்திலே எல்லா நல்லதும் எப்போதும் நடக்கும்
நடக்கட்டும்
அப்படின்னு சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் வாழ்த்துக்கள் சொல்லும்போது,
துளசி மேடத்துக்கு இந்த புது டிசைன் வந்திருக்கே...
கோபால் சார் கிட்டெ காமிச்சீங்களா...
என்னது பார்க்கலையா...
இங்கே அவரையும் கூட்டிக்கிட்டு போங்க..
வல்லி அம்மா ஊட்டுக்கு எதிரிலே ரங்காசாரி கடைலே இருக்குது.
டிசைன் செஞ்சது ரஞ்சனா க்ராஃப்ட்.. ..
அங்கே இன்னும் பல பல டிசைன் கீது.
www.menakasury.blogspot.com
தளத்திற்கும் எங்கள் அவருக்கும் ரீச்சருக்கும் மாணவர்கள் சார்பாக என் வாழ்த்துகள்!
பத்தாம் வருட கொண்டடத்தின் சார்பாக பஸ் டே கொண்டாட்டம் இருப்பதால் அதில் கலந்து கொண்டு பின் மீண்டும் வருகிறேன்!
துளசி தளத்திற்கும், அதன் கர்த்தா திருமதி துளசியின் துணைவர் திரு கோபாலுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இதேபோல பல பல ஆண்டுகள் பல பல பிறந்தனாட்களைக் மகிழ்ச்சியுடன் கொண்டாடி அவற்றைப் பற்றிய பதிவுகளைப் போட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்க வேண்டுகிறேன்.
தளத்தின் புரவலர், பயணக்கதைகளுக்குக் காரணகர்த்தா , பின்னூட்டப்ரேமி கோபாலுக்கும் இன்று பிறந்தநாள். எல்லா நன்மைகளும் பெற்று அவர் நீடூழி வாழ்கவென்று மனதார வாழ்த்துகின்றேன். :)
தளத்தின் புரவலர், பயணக்கதைகளுக்குக் காரணகர்த்தா , பின்னூட்டப்ரேமி கோபாலுக்கும் இன்று பிறந்தநாள். எல்லா நன்மைகளும் பெற்று அவர் நீடூழி வாழ்கவென்று மனதார வாழ்த்துகின்றேன். :)))))
இரட்டை வாழ்த்துகள் டீச்சர்
இரட்டை வாழ்த்துகள் டீச்சர்
துளசி தளத்திற்கும், கோபால் சாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
துளசி+ கோபால் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.
>> ஓசைப்படாமல் வந்து போகும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி <<
:)
வாழ்த்துகள், நன்றிகளும்.
உளம் மகிழ்ந்த வாழ்த்துகள் :)
எதை எழுதுறதுன்னு எழுத்தாளர் கூட அப்பப்போ யோசிச்சிருப்பாங்க. ஆனா யோசிக்காம எதையும் எழுதுறவங்க நீங்க. உங்களையும் கோபால் சாரையும் நினைவில் வாழும் கோகியையும் நாங்க மறக்கதான் முடியுமா?!?
முருகன் அருளால் நீடூடி வாழ்கவென்று வணங்குகிறேன். :)
வாங்க கீதமஞ்சரி.
உங்கள் பின்னூட்டம், இன்னும் நல்லா எழுதணும்' என்று என்னை ஊக்குவிக்கும் ஊட்டமா இருக்கு!
இனிய நன்றிகள்.
வாங்க கோமதி அரசு.
அன்பான வாழ்த்துகள் அனைத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
வாங்க பொற்கொடி.
வீடு கட்ட முடிவானதும் சொல்லுங்க வந்துடறேன். ஆலோசகர் உங்களுக்கு வேணும்தானே?
ஊஞ்சல் சங்கிலி வேற டிஸைனில் வாங்கிக்கலாம். ஓக்கேவா?
சைலண்ட் ரசிகைக்கு நன்றீஸ்.
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.
எல்லாம் உங்க ஆசீர்வாதம்.
நாட்டியாஞ்சலின்னு புது டிஸைன்லே பாவை விளக்கு நடனமங்கையர் எல்லாம் போட்ட புடவை ரொம்ப வருசத்துக்கு முன்னே வாங்கியாச்சு. நல்ல கனம்!
வல்லி வீட்டுக்கு முன்னாலேயா? அப்ப வல்லியம்மா வாங்கியாச்சான்னு கேக்கணும்.
ஆமா...மீனாட்சி அக்கா என்னடிஸைன் வாங்கினாங்க? அதைச் சொல்லவே இல்லையே!
வாங்க கொத்ஸ்.
உங்க ஊரில் பஸ் மேலே ஏறவிடுவாங்களா?
இல்லைன்னாச் சொல்லுங்க. ஒபாமாகிட்டே பேசலாம்!
இதெல்லாம் கல்ச்சார் சார்ந்த விவகாரம். லேசில் அப்படியெல்லாம் விட்டுடமுடியாது ஆமாம்.
வாழ்த்துகளுக்கு நன்றீஸ்.
வாங்க ரஞ்ஜனி.
அன்பான வாழ்த்துகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகல்.
வாங்க நட்ராஜ்.
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு எங்கள் இனிய நன்றீஸ்.
வாங்க மலைக்கோட்டை மன்னன்.
ரெட்டையாக வந்த ரெட்டை வாழ்த்துகளுக்கு ரெட்டை நன்றீஸ்.
வாங்க அகிலா.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க மாதேவி.
தொடர்வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிப்பா.
வாங்க வாசன்.
நலமா? பார்த்து ரொம்பநாளாச்சே!
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க ஜி ரா.
அந்த முருகனே உங்கள்மூலம் அனுப்பிய வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.
Post a Comment