Friday, September 20, 2013

வெள்ளிக்கிழமை விரதம்! (மலேசியப் பயணம் 19)

முக்கால்மணி நேரமா லவுஞ்சில்  காத்திருக்கோம்.  சிகப்போ நீலமோ எது இருந்தாலும் கவலை இல்லை!  நீங்க எதுக்கு இங்கே ? உள்ளே போய் உக்காருங்க. டெக்ஸி வந்தவுடன்  நான் ஏத்தி விடறேன் என்கிறார்  ஹொட்டேல் (தமிழ்) பணியாளர்.

'வெள்ளிக்கிழமை பாருங்க..... அப்படித்தான் இருக்கும் ' என்றார்.

"வெள்ளிக்கிழமை என்ன விசேஷம்?"

"தொழுகைக்குப்  போவாங்களே."

"ஆனா... அது பகல் 12 மணிக்குத்தானே?"

'மலாய்க்காரனுங்க வெள்ளிக்கிழமை வந்தாவே எங்கியும் போகமாட்டாங்க '(காவல்காரர் முணுமுணுக்கிறார்.


நேரமோ ஓடுது. நமக்குப் பொறுமை வேணுமே!  எவ்ளோ நேரம்தான் லாபியில் இருக்கும் மலர்களை க்ளிக்குவது.
இத்தனைக்கும் சீக்கிரம் எழுந்து, குளியல், ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாத்தையும் முடிச்சுட்டு எட்டரைக்கு  கீழே வந்து ஹொட்டேல் கணக்கையும் செட்டில் பண்ணிட்டுக் காத்திருக்கோம்.

ஒரு வழியா ஒன்பது பத்துக்கு  ஒரு டெக்ஸி கிடைச்சது. சீனப்பெரியவர். ரெட் டெக்ஸி.  ஃபிக்ஸட்  ப்ரைஸ். 100 ரிங்கிட். வழியில் டோல் உள்பட.  இதாவது கிடைச்சதேன்னு மகிழ்ச்சிதான். இன்னும்  ஒரு அரைமணி முன்னால் கிடைச்சிருந்தா புத்ரஜெயாவை ஒரு சுத்து சுத்திட்டுப் போயிருக்கலாம். புது ஏரியா.அலுவலகங்கள் பலதும் இங்கே மாத்தி வச்சுருக்காங்க. எல்லாமே விதவிதமான அழகுள்ள புதுக்கட்டிடங்கள்.  நெவர்மைண்ட் நெக்ஸ்ட் டைம்!

புத்ரஜெயா டோல்கேட்டுக்குள்ளே புகுந்து போகுது சாலை.  அங்கங்கே தெர்ஞ்ச ஒன்னு ரெண்டு  கட்டிடங்கள் நல்லாதான் இருக்கு.

பத்தரைக்கு  அந்த லோ காஸ்ட் விமானநிலையம்  வந்து சேர்ந்தோம்.  12க்கு ஃப்ளைட் . சிங்கப்பூர்  போறோம்.   ஒருமணி நேர ஃப்ளைட். ஆனால் ஏரேஸியாவின் வழக்கம்போல் லேட்டாக் கிளம்புச்சு.


டெர்மினல் சந்தைக் கடையாட்டம்  இருக்கு.  பழவகைகள் நறுக்கி விற்பனைக்கு வச்சுருக்காங்க. ஒரே ஈ:(  கரும்பு ஜூஸ் கிடைக்குமான்னு பார்த்தால் கரும்பு மட்டும் காத்திருக்கு. கடைக்காரரைக் காணோம்.


ட்யூட்டிஃப்ரீ கடைகளைப் பார்வையிட்டேன்.  போறது சீப்  லோ (க்ளாஸ்) காஸ்ட்  டிக்கெட்டுலே , இதுலே ட்யூட்டி ஃப்ரீ வேற கேக்குதா என்ற  வகையில்  இருக்கு பொருட்கள். நமக்கான கேட்டுக்குள்  உள்ளேபோனால் திரும்பிவரமுடியாது.   நோ பாத்ரூம் என்ற எச்சரிக்கை வேற ! (கொடுக்கற காசுக்குக் கழிப்பறை கேக்குதோ?)  சின்னப்பிள்ளைகள் வச்சுருப்பவர் பாடு திண்டாட்டம். வேளைகெட்ட நேரத்தில்தான்  பசங்களுக்கு  'வரும்'! இமிக்ரேஷன் & கைப்பை, ஹேண்ட் லக்கேஜ்  செக்கிங்லே மறக்காமல் தண்ணி பாட்டில்களைப் பிடுங்கிக் கடாசினாங்க. நல்ல ஒரே விஷயம் என்னன்னா..... மலேசியாவில்  உள்ளே போறதுக்கோ (ஐ மீன்  நாட்டுக்குள்ளே)  நாட்டை விட்டுப் புறப்படும்போதோ  விஸா, ஏர்போர்ட் டாக்ஸ் இப்படி ஒன்னும் இல்லை.

நல்லவேளையா அதிகம் நடக்க வைக்கலை. மழை வந்துச்சுன்னா.... நனையாமப்போக குடை ஸ்டேண்டு வச்சுருக்காங்க. நல்லவேளையா மழையும் இல்லை!

சிங்கப்பூர் வந்து இறங்கினால்  இமிக்ரேஷனில்  திருவிழாக் கூட்டம்.  கோபாலின்  APEC Card  இருந்ததால் சட்னு வெளியே வரமுடிஞ்சது.  அதென்னவோ சிங்கை மண்ணை மிதிச்சதும் ஒரு பாதுகாப்பு உணர்வு வந்துருது.   அக்கம்பக்கம் திருட வர்றானான்னு பயந்து பயந்து சாக வேணாம் பாருங்க!  அதே கிராண்ட் சான்ஸ்லர் (செரங்கூன் ரோடு) போய்ச் சேர்ந்தோம்.  இதுக்கே ரெண்டு மணி ஆயிருச்சு.  வழக்கமா  பகல் மூணு மணிக்கு செக்கின் என்பவர்கள்  பெரும்கருணை வச்சு அறை ரெடியா இருக்குன்னு உடனே கொடுத்தார்கள்.நம்ம திட்டம் எல்லாம் முழுக்க முழுக்க  ஜகா வாங்குன நாள்! ஒரு மணிக்கு லேண்டிங்.  டாக்ஸி பிடிச்சு நேரா ஹொட்டேல் ஒன்னரை மணிக்குள். மூணுமணி செக்கின் என்பதால் பொட்டிகளைப்  போட்டுட்டு நேரா கோமளவிலாஸ். பகல் சாப்பாடு எப்படியும் ஒன்னேமுக்காலுக்குள்  ஆரம்பிக்கலாம்.  இன்னிக்கு ரொம்ப சீக்கிரமா காலைஉணவு ஆச்சு.  லோ காஸ்ட்லேயும்  ஸ்நாக் ஒன்னும் இல்லை.

அறை  போனவுடனே கிடைச்சதால், அறையில் கொண்டு போய் பொட்டிகளைப் போட்டோம். நான்ஸ்மோக்கிங் ஃப்ளோர் என்ற பெயரே தவிர  என்னமோ ஒரு நாத்தம்:( அறையிலும் குளிமுறியில் அதே துர்நாத்தம்.  வெளியில் காரிடாரில் இருந்த  க்ளீனிங் (சீன) பெண்மணியிடம்  கொஞ்சம் சுத்தப்படுத்தித் தாங்கன்னு  சொன்னதுக்கு   தலையாட்டும்போதே என்னமோ கொஞ்சம் முறைப்பாப் பார்த்தமாதிரி இருந்துச்சு.  ஒரு வேளை கொலைப்பசியில் அப்படி நமக்குத் தோணுச்சோ?

கோமளவிலாஸை நெருங்கும்போதுதான்  சிங்கைக் காசு கையில் இல்லைன்னு  ஏடிஎம் தேடி ஓடறார் இவர். இதுலே 'நீ போய் ஆர்டர் கொடுத்துட்டு சாப்பிட ஆரம்பி. நான் வந்து சேர்ந்துக்கறேன் ' வேற!

அடராமா..... சிஸ்டம் எல்லாம் மாறி ரொம்பநாளாச்சே.... இப்பெல்லாம்  டிஃபன்  மட்டு சாப்பிட்டபிறகு பில் வரும். சாப்பாடுன்னா.... முதலில்  காசைக் கட்டுனால்தான்  வாயில் புவ்வா.

முஸ்தாஃபா பக்கம்தான்  மணி சேஞ்ச் செஞ்சுக்க  ஏழெட்டு இடங்கள் இருக்கே தவிர  இந்தப்பக்கம் டெகா மால் சைடில்  பார்த்த நினைவில்லை.  கோபால் வரும்வரை நம்ம வீரமாகாளியம்மன் வாசலில் நின்னப்ப,  காளி எனக்கு ஸீன்ஸ் காமிச்சாள். சுற்றுலாப்பயணிகள்  சைக்கிள் ரிக்‌ஷாவில்  செராங்கூன் ரோடைச் சுற்றிப் பார்க்கிறார்கள்.இலையில் கை வச்சப்ப சரியா ரெண்டே முக்கால்.  சுமாராத்தான் இருக்கு ருசிகூட.  பழைய கோமளவிலாஸ் போல இனி வராது:(  அறைக்குத் திரும்ப வந்து கொஞ்சநேரம் ஓய்வு.

மாலை  அஞ்சுக்குக் கிளம்பி அதே கோமளவிலாஸில் ஒரு காஃபி மட்டும் குடிச்சுட்டு டன்லப் தெருவழியா நடந்து போறோம். தளதளன்னு  பச்சைக் காய்கறிகள் கண்களை  இழுக்குது.  கத்திரி முருங்கை இருக்கட்டும், வாழைப்பூ வச்சுருக்காங்க!

அப்துல் கஃபூர் மசூதியைக் கடந்து போறோம்.   105 வருசப் புதுசு. நல்லா பளிச்ன்னு இருக்கு. வெளிப்புற சுவர்களில்  நட்சத்திரங்களும் பிறை நிலாவுமா  டிஸைன் வரைஞ்சுருக்கு.  நான் இதுவரை எங்கேயும் இப்படி டிஸைன் போட்ட மசூதிச் சுவர்களைப் பார்த்ததே இல்லை.
சிங்கையின் பாரம்பரியக் கட்டிடங்களிலிந்த மசூதியும் ஒன்னு.

ஸிம்லிம் ஸ்கொயர்  கடந்து  வாட்டர்லூ தெரு கிருஷ்ணனைப் பார்க்க போய்க்கிட்டு இருக்கோம்.  கிருஷின் யானைகளைப் பார்க்கணும் எனக்கு. அப்படியே பக்கத்தில் இருக்கும் சீனக்கோவிலுக்கு போகணும். இது வழக்கமான ரவுண்டுதான் நமக்கு.

சீனக்கோவிலில் (Kwan Im Temple)  குலுக்கு ஆரூடம் பார்த்துக்கிட்டோம்.  (விவரம் வேணுமுன்னா இங்கே  பாருங்க. ரெண்டு வருசத்துக்கு முந்தி எழுதி இருக்கேன்) சீனமாதா ( Guanyin, the Chinese Goddess of Mercy) சொல்லுவது சரியா இருக்காதா? 1884 இல் கட்டப்பட்ட கோவில் இது.


கிருஷ்ணா கிருஷ்ணா இக்கடச்சூடண்டி கிருஷ்ணா

இந்தக் கோவிலில் எப்பவும் கூட்டம் அலைமோதும்.  வாசலில் இவுங்க குவிச்சு வச்சுருக்கும் ஊதுபத்திகளில்  சில எடுத்து நாமே கொளுத்திவச்சுக் கும்பிடலாம்.

ஸ்ரீ கிருஷ்ணர் வழக்கம்போல் புல்லாங்குழலும் கையுமா இருக்கார்.  கருவறை முன் மண்டபம்தான் இங்கே அட்டகாசமா இருக்கும்.  இந்தக் கோவிலுக்கு போனமுறை வந்திருந்தப்பதான்  தூண்களுக்கு யானை செஞ்சு பொருத்திக்கிட்டு இருந்தாங்க.  எப்படி இருக்கு பசங்கள்னு பார்த்தால்..... தூண்களுக்கெல்லாம்  துணி  உறைகள்:(  அழகா திருமண், சங்கு சக்கரம், யானை, அன்னம், பூக்கள் என்று டிஸைன் இருந்தாலும்   அழகான தூணுக்கு எதுக்கு மறைப்புன்னு தெரியலை:(


யானைத்தூண்கள். இங்கே:-)


கொஞ்சம் படங்களைக் க்ளிக்கிட்டு கோவிலை வலம் வந்தோம். பெருமாள் பாம்புப் படுக்கையில் தேமேன்னு படுத்துருக்கார்.  நம்ம ஆஞ்சி செல்லம்போல் இருக்கார் . Study Award  கொடுக்க ஆரம்பிச்சுருக்கு கோவில்  நிர்வாகம்.  ரொம்ப நல்ல சமாச்சாரம். அங்கிருந்து கிளம்பி பூகீஸ் போனோம். வழியெல்லாம்  கடைகளோ கடைகள்.  இந்தச் சதுக்கம் எப்பவுமே கலகலன்னுதான் இருக்கும்

அப்படியே காலாற பூகீஸ் தெரு ஷாப்பிங்  சென்டர் பக்கம் காலை வீசிப்போட்டோம்.  வழியெல்லாம்  கடைகளோ கடைகள். சிங்கையின் மிகப்பெரிய  ஷாப்பிங் பகுதி இது.

பழங்கள்தான் பார்க்கவே அமர்க்களம். பூகீஸ் மாலுக்குள் நுழையும்போதே மழை பிடிச்சுக்கிச்சு.  மகளுக்கான ஒரு மேக்கப் சாமானைத் தேடிக்கிட்டு இருக்கோம். சிவப்புத்தோல்களுக்குன்னே கிடைக்குதே தவிர, மாநிறத்துக்கு ஒன்னுமே இல்லை. இந்தியாவில் குறிப்பா சென்னையிலு இதே கதைதான்.   பொதுவா தமிழர்கள்  மாநிற  மக்களே. ஒரு 25 சதம் மக்கள்  வெளுப்பா இருப்பாங்க. அப்ப மற்ற 75 சதம் மக்களுக்குன்னு ஒன்னுமே தயாரிக்க மாட்டாங்களா என்ன?  அநியாயமாத் தோணுது எனக்கு?  இல்லேன்னா சிகப்பழகு க்ரீம் போட்டு ஏழே நாளில் சிகப்பாயிருவோம் என்ற நம்பிக்கையா?

கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்துட்டு, மழை நின்னதும் கிளம்பி மார்கெட் ஏரியாவில் போய் பழவகைகள்  மூணு ட்ரே பத்து டாலருன்னு வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பினோம்.  வழியில் ஒரு ப்ரௌஸிங் செண்டர்.  மெயில் செக் பண்ணலாமான்னு  கேட்டார் கோபால்.  வாழைப்பழம் வேணாமுன்னும் குரங்கு உண்டோ?  அரைமணிக்கு ஒரு வெள்ளி. இன்னொரு முறை சாப்பாட்டுக்குன்னு வெளியே போக சோம்பல். பஃபெல்லோ ரோடு கோமளவிலாஸில்  இட்லி வாங்கிக்கிட்டோம் கையோடு.

நம்ம கோவியாருக்கு சிங்கை வந்த விபரம் சொல்லி ஒரு சேதி அனுப்பிட்டு சாப்பாட்டை முடிச்சுட்டு பழப்பொதியைத் திறந்தால்.......
 யக்:(   பலாப்பழம் கெட்டுப்போய் இருந்துச்சு.

மாம்பழமும் கொய்யாவும்  ஓக்கே!

தொடரும்.............:-)


21 comments:

said...

சிங்கப்பூர் வந்தாச்சா, ரைட்டு.

said...

சிம் லிம் ஸ்கொயர் பக்கம் எல்லாம் தோண்டிக்கிட்டு இருக்காங்க. என்னுடைய பேவரைட் பாசார் மலம் ஹோ கயா!!
நானும் ஏடிம் க்கு அலை அலை என்று அலைந்தேன்.

said...

பயணமும் படங்களும் மிகவும் அருமை அம்மா...

said...

அப்பாடா, சிங்கப்பூரும் பார்த்தாச்சு.படங்களும் கதை பேசுதே.

said...

படங்களும் தகவல்களும் அருமை..

said...

படங்களும் தகவல்களும் அருமை..


ரிப்பீட்டு

said...

அழகழகு படங்கள்..ஆஹா..நேரில் பார்த்ததிப்போல் ஓர் உணர்வு..அட மலேஷியாவில் நம்மூர் நுங்கு.அதிலும் உரித்தே வைத்திருக்கின்றார்களே..நோகாமல் சாப்பிடலாம்./.ஆனால் அங்கே மொய்த்த ஈக்களை நீங்கள் சொல்லும் போது....

said...

APEC Card

இதைப்பற்றி கொஞ்சம் விபரம்.

said...

சென்னையிலும் கோமளவிலாஸ் வந்திருக்கு அப்படின்னு போனால் ஏமாற்றமோ ஏமாற்றம்! வேறு கைகளுக்குப் போய்விட்டதோ?
எப்படியோ, மலேசியாவில் இருந்து சிங்கைக்கு வந்தாகிவிட்டது நல்லபடியா.

தொடர்ந்து வருகிறேன்.

said...

மலேசியா முடிஞ்சு சிங்கப்பூரா...

பூகி ஸ்ட்ரீட்டுக்கு எப்பயோ போன நினைவு. சரியாத் தெரியல. பேர் மட்டும் மூளைல இருக்கு.

அந்த மசூதி படம் மிக அழகு. பளிச்சுன்னு இருக்கு. நல்ல பராமரிப்புன்னு தெரியுது.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

சிங்கையில் ரொம்ப ஹோம்லியா, பாதுகாப்பான உணர்வு வந்துருச்சு. ஆனா ஊர்சுத்த நேரமில்லை:(

said...

வாங்க குமார்.

அங்கங்கே தோண்டினாலும் பாதசாரிகளுக்கு இடையூறு வராமப் பார்த்து வலைகள் போட்டு வச்சுடறாங்களே!

அந்த பாதுகாப்பு உணர்வு நம்மூரில் இல்லையேன்னுதான் மனவருத்தம்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

சிங்கையில் கண்களால் பேசும் ஒருவரைக் கண்டேன்:-))

விவரம் வரும் பதிவுகளில்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றிப்பா!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

எல்லாமும் நீங்கள் போய்வந்த இடங்கள் அல்லவோ!

said...

வாங்க ஸாதிகா.

மார்கெட்களில் அழகாப் பொதிஞ்சு வச்சுருக்காங்க. விமானநிலையத்தில்தான் இப்படித் திறந்து போட்டு.......

க்ளிக்க நல்லா க்ளியரா வருதுன்னாலும்.....

பாங்காக்லே கண்ணாடிப்பொட்டிக்குள் படு சுத்தமா இருக்குப்பா.

said...

வாங்க ஜோதிஜி.

Asia-Pacific Economic Cooperation தான் சுருக்கத்தில் APEC.

பிஸினஸ் ட்ராவலர்ஸ் பயன்படுத்தும் ப்ரீ அப்ரூவ்டு சமாச்சாரம். இதுலே இப்ப 21 நாடுகள் இருக்கு. இந்த கார்டு இருந்தால் இந்த 21 நாடுகளில் எதுக்கு வேண்டுமானாலும் விஸா இல்லாமல் பயணிக்கலாம்.

1989 லே 12 நாடுகளுடன் ஆரம்பிச்சது இப்ப இன்னும் ஒன்பது சேர்ந்து 21 ஆகி இருக்கு.

பஸிஃபிக் சமுத்திரத்தைத் தொட்டு இருக்கும் நாடுகள். இந்த நாடுகளின் விமானநிலையத்திலும் கார்டு உள்ளவர்களுக்கு தனி வசதிகள் உண்டு.

இந்த21 இல் இந்தியா சேர்த்தி இல்லை:(

said...

வாங்க ரஞ்ஜனி.

சென்னையில் கோமளவிலாஸ் வந்த புதுசிலே எல்லாமே நல்லா இருந்துச்சு. நாங்களும் தைரியமாப்போய் சாப்பிடுவோம்.

அப்புறம் வரவர..... கழுதை போலாச்சு கதைதான்:(

பழைய சாப்பாடு படமிங்கே:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2007/02/3.html

said...

வாங்க ஜி ரா.

ஹெரிடேஜ் பில்டிங் என்றதும் கூடுதல் கவனமெடுத்துப் பராமரிக்குது அரசு.

பூகீஸ்லேகூட முந்தி தாய்லாந்து இளநீர் ஒரு டாலருக்குக் கிடைக்கும். இப்ப என்னன்னா..... கண்ணுலேயே காணோம்:-(

said...

சிங்கையும் கிருஷ்ணாவும் நம்மையும் இழுத்துப் பிடிக்கின்றது.