வருசாவருசம் கொழக்கட்டை என்றபெயரில் புள்ளையாரைக் கொடுமைப்படுத்திக்கிட்டே இருக்கோமேன்ற கவலையில் நானா உக்கார்ந்து யோசிச்சு இந்த வருசம் புதுமாதிரி கொழக்கட்டைகள் செஞ்சு அவரைக் குஷிப்படுத்தி இருக்கேன்.
இனிப்பு மோதகம், காய்கறி மோதகம், பால்கொழுக்கட்டை, கார்ன் & பட்டாணி சுண்டல், பழங்கள்.
பனைவெல்லம் சேர்த்த பூரணம்.
பனைவெல்லம், தேங்காய்த்துருவல், முந்திரித்துருவல், சுல்த்தானா ( உலர்ந்த திராக்ஷை)ஏலக்காய் சேர்த்து பூரணம் கிளறிக்கணும்.
மேல்மாவுக்கு ஒரு கப் அரிசி மாவு. அரிசிமாவில் ஒரு கப் கொதிக்கும் தண்ணீரை ஊத்தி கால் டீஸ்பூன் உப்புத்தூள் சேர்த்து நன்றாக பிசைஞ்சு வச்சேன்.
காய்கறிக்கொழுக்கட்டைக்கு புட்டுமாவு ஒரு கப். நம்மூரில் இப்போ மயில் மார்க் புட்டுமாவு கேரளத்தில் இருந்து இறக்குமதி. அரைத்தேக்கரண்டி உப்புத்தூள் சேர்த்த கொதிக்கும் தண்ணீர் ஊற்றி பிசைஞ்சு உருட்டிவச்சேன் ஒரு கால்மணி நேரம். அரைக் கப் தேங்காய்த்துருவல், அரைக் கப் பச்சைபட்டாணி, துருவிய கேரட் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து பிசைஞ்சு வச்ச மாவை உதிர்த்து அதில் சேர்த்துக் கலந்து வச்சேன்.
சண்டிகரில் வாங்குன ஒரு ரைஸ்குக்கரில் ஸ்டீமர் பாத்திரம் ஒன்னு வச்சுருந்தாங்க. அதில் ஒரு துண்டு ச்சீஸ் க்ளாத்தை நனைச்சுப் பரத்திட்டு, சென்னையில் வாங்கிய ஒரு மோதக அச்சு (கேட்ஜட் ட்ராவில் தேடிக்கண்டு பிடிச்சேன்) கொண்டு காய்கறி சேர்த்தமாவில் மோதகம் செஞ்சு ஸ்டீமரில் அடுக்கி வச்சேன் ஃப்ரோஸன். பத்து நிமிசத்தில் ஆவி வந்து வெந்தும் போச்சு.
மேல்மாவு எடுத்து வச்சுப்பிசைஞ்சால் கையில் ஒட்டாமல் அட்டகாசமா இருக்கு. மோதக அச்சைத் திறந்து ரெண்டு பக்கமும் கொஞ்சம் மேல்மாவு வச்சு நடுவில் கொஞ்சம் பூரணம் சேர்த்து அச்சைக் கெட்டியா மூடித்திறந்தால் ..... ட்டாய்ங்! மேஜிக் போல மோதகம் தயார். எண்ணி ஏழு இதேபோல் செஞ்சு அதையும் ஸ்டீமரில் ஆறு நிமிட் வச்சு எடுத்தேன்.
கொதிக்கும் வெந்நீரில் ஃப்ரோஸன் கார்ன் & க்ரீன்பீஸ் , அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து ரெண்டு மினிட் வேகவச்சு தண்ணீரை வடிச்சுட்டு ஒரு டீஸ்பூன் நெய்யில் சீரகப்பொடி அரைத்தேக்கரண்டி சேர்த்து சூடாக்கி வெந்திருந்த மக்காசோளம், பச்சைப்பட்டாணி சேர்த்து ஒரு கிளறு. சத்தான சுண்டலும் ரெடி.
மேல்மாவு செஞ்சு வச்சுருந்தேன்பாருங்க. அதில் கொஞ்சம் எடுத்து மணத்தக்காளிக் காய் சைஸில் மணிமணியா உருட்டி வச்சேன். அரை க்ளாஸ் தண்ணீரும் ரெண்டு க்ளாஸ் பாலும் சேர்த்து அடுப்பில் வச்சேன். கொதிக்கும் பாலில் மாவு மணிகளைச்சேர்த்து பத்து நிமிட் வேகவிட்டேன். அப்பப்ப லேசா கிளறிவிட்டேன். உடையாமல் கரையாமல் நீட்டா வ(வெ)ந்துச்சு. அரைக் கப் சர்க்கரை, ஏலக்காய் தூள், கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்துக் கலந்தபின் சுண்டவச்ச பால் ஒரு டின் சேர்த்துச் சூடாக்குனதும் பால்கொழுக்கட்டை தயார்.
இந்த வருசம் புள்ளையாரை ரொம்பப் படுத்தாமல் சத்துள்ள நைவேத்தியங்கள் செஞ்சு படைச்சு, தின்னும் ஆச்சு. புள்ளையார் கோலம்கூட போட்டாச்சு!
நம்ப இவனுக்கு குங்குமப்பூ வாசனை ரொம்பப்பிடிக்குது போல! ஸ்ரீகண்ட் செஞ்ச நாள் அடுக்களையை விட்டு நகராமல் இருந்தான்னு பார்த்தால் இன்னிக்குப் பால்கொழுக்கட்டை வாசனை புடிச்சுக்கிட்டு சாமி அறைக்குள் போக தவம் செய்யறான்.
அனைவருக்கும் புள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
PIN குறிப்பு: அதெப்படி குழப்பம் ஒன்னுமே வராமப்போச்சு?
அதானே?
இன்னிக்கு கேரமலைஸ்ட் தேங்காய் பர்பி(யும்) செஞ்சேனே:-)))))
இனிப்பு மோதகம், காய்கறி மோதகம், பால்கொழுக்கட்டை, கார்ன் & பட்டாணி சுண்டல், பழங்கள்.
பனைவெல்லம் சேர்த்த பூரணம்.
பனைவெல்லம், தேங்காய்த்துருவல், முந்திரித்துருவல், சுல்த்தானா ( உலர்ந்த திராக்ஷை)ஏலக்காய் சேர்த்து பூரணம் கிளறிக்கணும்.
மேல்மாவுக்கு ஒரு கப் அரிசி மாவு. அரிசிமாவில் ஒரு கப் கொதிக்கும் தண்ணீரை ஊத்தி கால் டீஸ்பூன் உப்புத்தூள் சேர்த்து நன்றாக பிசைஞ்சு வச்சேன்.
காய்கறிக்கொழுக்கட்டைக்கு புட்டுமாவு ஒரு கப். நம்மூரில் இப்போ மயில் மார்க் புட்டுமாவு கேரளத்தில் இருந்து இறக்குமதி. அரைத்தேக்கரண்டி உப்புத்தூள் சேர்த்த கொதிக்கும் தண்ணீர் ஊற்றி பிசைஞ்சு உருட்டிவச்சேன் ஒரு கால்மணி நேரம். அரைக் கப் தேங்காய்த்துருவல், அரைக் கப் பச்சைபட்டாணி, துருவிய கேரட் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து பிசைஞ்சு வச்ச மாவை உதிர்த்து அதில் சேர்த்துக் கலந்து வச்சேன்.
சண்டிகரில் வாங்குன ஒரு ரைஸ்குக்கரில் ஸ்டீமர் பாத்திரம் ஒன்னு வச்சுருந்தாங்க. அதில் ஒரு துண்டு ச்சீஸ் க்ளாத்தை நனைச்சுப் பரத்திட்டு, சென்னையில் வாங்கிய ஒரு மோதக அச்சு (கேட்ஜட் ட்ராவில் தேடிக்கண்டு பிடிச்சேன்) கொண்டு காய்கறி சேர்த்தமாவில் மோதகம் செஞ்சு ஸ்டீமரில் அடுக்கி வச்சேன் ஃப்ரோஸன். பத்து நிமிசத்தில் ஆவி வந்து வெந்தும் போச்சு.
கொதிக்கும் வெந்நீரில் ஃப்ரோஸன் கார்ன் & க்ரீன்பீஸ் , அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து ரெண்டு மினிட் வேகவச்சு தண்ணீரை வடிச்சுட்டு ஒரு டீஸ்பூன் நெய்யில் சீரகப்பொடி அரைத்தேக்கரண்டி சேர்த்து சூடாக்கி வெந்திருந்த மக்காசோளம், பச்சைப்பட்டாணி சேர்த்து ஒரு கிளறு. சத்தான சுண்டலும் ரெடி.
மேல்மாவு செஞ்சு வச்சுருந்தேன்பாருங்க. அதில் கொஞ்சம் எடுத்து மணத்தக்காளிக் காய் சைஸில் மணிமணியா உருட்டி வச்சேன். அரை க்ளாஸ் தண்ணீரும் ரெண்டு க்ளாஸ் பாலும் சேர்த்து அடுப்பில் வச்சேன். கொதிக்கும் பாலில் மாவு மணிகளைச்சேர்த்து பத்து நிமிட் வேகவிட்டேன். அப்பப்ப லேசா கிளறிவிட்டேன். உடையாமல் கரையாமல் நீட்டா வ(வெ)ந்துச்சு. அரைக் கப் சர்க்கரை, ஏலக்காய் தூள், கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்துக் கலந்தபின் சுண்டவச்ச பால் ஒரு டின் சேர்த்துச் சூடாக்குனதும் பால்கொழுக்கட்டை தயார்.
இந்த வருசம் புள்ளையாரை ரொம்பப் படுத்தாமல் சத்துள்ள நைவேத்தியங்கள் செஞ்சு படைச்சு, தின்னும் ஆச்சு. புள்ளையார் கோலம்கூட போட்டாச்சு!
நம்ப இவனுக்கு குங்குமப்பூ வாசனை ரொம்பப்பிடிக்குது போல! ஸ்ரீகண்ட் செஞ்ச நாள் அடுக்களையை விட்டு நகராமல் இருந்தான்னு பார்த்தால் இன்னிக்குப் பால்கொழுக்கட்டை வாசனை புடிச்சுக்கிட்டு சாமி அறைக்குள் போக தவம் செய்யறான்.
அனைவருக்கும் புள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
PIN குறிப்பு: அதெப்படி குழப்பம் ஒன்னுமே வராமப்போச்சு?
அதானே?
இன்னிக்கு கேரமலைஸ்ட் தேங்காய் பர்பி(யும்) செஞ்சேனே:-)))))
43 comments:
எனது அன்பு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
Pillayar kolam looks awesome :)))
நினைச்சேனே...
வல்லி அம்மா வலைலே கோவில் லஸ் கார்னர் கணபதி பார்க்கும்போதே
அவங்க பேஸ்ட் பிரண்டு துளசி மேடம் என்ன பண்ணப்போராகளோ அப்படின்னு எண்ணினேன்.
அப்படி ஒரு திவ்யமா நாமத்தை போட்டு விட்டேளே ...
அமக்களமா இருக்கார் எங்க விநாயகர்.
திருஷ்டி சுத்தி போடணும் போல இருக்கு.
அது என்ன கொழக்கட்டை எல்லாம் கம்ப்யுடர் செஞ்ச மாதிரி பர்பெக்டா இருக்கு...
எங்க வீடு கொழக்கட்டை, மஞ்ச பிள்ளையாருக்கு முன்னாடி, வந்து
கோபாலும் நீங்களும் வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கங்க..
மீனாட்சி பாட்டி.
www.vazhvuneri.blogspot.com
www.menakasury.blogspot.com
இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
தலையானையன் அருளால் நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகிறேன்.
கொழுக்கட்டைகள் அழகோ அழகு. அதிலும் அந்த பச்சை மணிகள்.
பிள்ளையார் நின்னுக்கிட்டே இருக்காரே. கால் வலிக்கப் போகுது. உட்காரச் சொல்லுங்க :)
Amsterdam க்கு பணி நிமித்தமாய் வந்துள்ளதால், முன்னிரண்டு பதிவுகளைத் தவற விட்டுட்டேன்; பிள்ளையார் கொட்டு போட்டுக்கறேன் டீச்சர்:)
//காய்கறி மோதகம்//
//கார்ன் & பட்டாணி சுண்டல்//
Sooperu!
அப்படியே எள்ளுக்குப் பதில் Oats?:))
//பனைவெல்லம் சேர்த்த பூரணம்//
கருப்பட்டி தினமுமே சேர்த்துக்கலாம்; நல்லது:)
-------
மோதக அச்சு is really cute:)
//மேல்மாவு செஞ்சு வச்சுருந்தேன் பாருங்க. அதில் கொஞ்சம் எடுத்து மணத்தக்காளிக் காய் சைஸில் மணிமணியா உருட்டி பாலும் சேர்த்து//
டீச்சர்,
நீங்க ஏன் ஒரு பெரிய ஓட்டலில் Chief Chef-ஆ போகக் கூடாது?
பால் கொழுக்கட்டை Reusable Recipe அட்டகாசம்:)
ஒரே மேல்மாவில் இத்தனை அவதாரங்களா?:)
----
Btw, Liked the Last & First fotos:)
Did u ask piLLaiyaar permission for putting naamam on his head?:))
உங்க பூசை மேடையில் உள்ள பலரையும் திருவான்மியூரிலேயே சந்திச்சிருக்கேன்:)
Hello everybody, All Gods:)
நடுநாயகமான அம்மா-அப்பா எப்பமே அழகு!
ஆனாலும், எல்லாரையும் விட, "புது மெருகில்", பத்துமலை முருகன் தனியாத் தெரிகிறான்!
So Happy to see him, "New" in the list of your friends!:)
விநாயகருக்கும் எங்களுக்கும் இனிய விருந்து தான்.
அசத்திட்டீங்க போங்க !
கொழுக்கட்டை செய்ய இவ்வளவு பாடா?? :)))) எனக்கு இந்த வருஷம் செய்ய முடியலையேனு வருத்தமா இருந்துச்சு. நெய்க்கொழுக்கட்டையாச் செய்து பிள்ளையாருக்குக் கொடுத்தாச்சு. :)))
yammaadiyoo.
சூப்பர் துளசிமா. என்ன அழகு. பிள்ளையார் தும்பிக்கை ஆழ்வார் ஆகிட்டார்.
விதவிதமா கொழுக்கட்டைகள்.அவர் இன்னும் சாப்பிட்டு முடித்திருக்க மாட்டார்.
ஏன்னால் நான் இன்னும் பார்த்தே முடிக்கலை. கண்ணபிரான் சொல்கிற கைவசம் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு. பயண கைட்,ஹோட்டல் நடத்தறது,வரலாறு எழுதுவது,அப்பப்போ கதைகள் வேறு..
கலர்ஃபுல் பிள்ளையாரும் அவரின் குடும்பமும் ஜொலிக்கிறார்கள்.
இனிய வாழ்த்துகள் துளசி.
என்ன சொல்லுங்க! கொழுக்கட்டை ஆத்துக்காரி பிடிச்சு செய்தால் தான் நல்லா இருக்கும். அதுக்கு டேஸ்டே தனி! (வேற வழி!).
எனக்கு தெரிந்து இங்கே வந்து வீட்டில் என் மனைவி கும்பிட்டா மாதிரி நியாபகம் இல்லை. அவர்களே மறந்து விட்டார்கள். எப்பவாவது கோவிலுக்கு போவதோட சரி!
எள்ளுரண்டை சாப்பிட்டகாலம் எல்லாம் போயே போயிந்தி!
புதுமாதிரியான கொழுக்கட்டைகள் அசத்தல். இந்த வருஷம் பிள்ளையாருக்கு பெரும் விருந்துதான். எங்களுக்கும் (கொழுக்கட்டை செய்ய) நிறைய ஐடியா கிடைக்கிறது. நன்றி டீச்சர். பிள்ளையார் கோலம் அழகுக்கோலம்.
பிள்ளையார் கோலம் அருமையாக உள்ளது.
வாவ். வாழ்த்துக்கள் டீச்சர்.
டீச்சருக்கு சுத்திப் போடணும்.
கோபால் அண்ணா என்ன சொன்னார்? :-)
(இவை எதையுமே நான் இன்னும் சாப்பிட்டதில்லை என்பதையும் இங்கே சொல்லிக்கிறேன் :-( )
.
சூப்பர் பிள்ளையார் . அம்சமா இருக்கார் !! நாமம் added அழகு
வாழ்த்துக்கு நன்றி.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீ.
இன்ஸ்டண்ட் ரங்கோலின்னு சல்லடைத்தட்டு போல் ஒன்னு கிடைச்சது சென்னையில்.
அதான் வகைக்கு ஒன்னு வாங்கியாந்தேன்.
என்ன பண்டிகையோ அதுக்கேத்த கோலம்.
கார்பெட்டில் போடமுடியாதுன்னு கோலத்துக்கு ஒரு தட்டு:-)
வாங்க மீனாட்சி அக்கா.
யார் வீட்டுக்கு(ள்) வந்தாலும் நாமம் சாத்திருவேனாக்கும்:-)))
கொழுக்கட்டை என்னதான் இருந்தாலும் ஃபாரின் மேட் இல்லையா? அதான் சீனாக்காரன் செய்வதுபோல் ஒரே அச்சில் வார்த்துட்டேன்:-)
உங்க மஞ்சப்பிள்ளையாரின் ஆசிகள் கிடைச்சது. நன்றிக்கா.
வாங்க ஜிரா.
புள்ளையாருக்குப் பதினாலு வருசமா நின்னே பழகிப் போச்சாம்.
நோ ஸிட்டிங் என்கிறார்.
நம்மது மரகதம் பதிச்ச கொழுக்கட்டையாக்கும்:-)
வாங்க கேஆர் எஸ்.
நீங்க ஆரம்பிக்கப்போற ஃபைவ் ஸ்டார் ஹொட்டேல் ரெஸ்ட்டாரண்டுக்கு நாந்தான் ஆலோசனையாளர். கோபால் எனக்கு அசிஸ்டெண்டா இருப்பார். ஓக்கேவா?
திருவான்மியூர் இல்லை.பெஸண்ட் நகர் ஆக்கும், கேட்டோ!
என்னோடு சென்னைக்கு வந்தவுங்க நாலே பேர்தான். இப்ப இருப்பதுதான் மொத்தமா கூட்டுக் குடும்பம்.
வாங்க ஸ்ரவாணி.
விருந்தை ரசித்தமைக்கு நன்றி.
வாங்க கீதா.
என்ன இப்படி சுலபமாச் சொல்லிட்டீங்க!!!
கொழுக்கட்டை எனக்குப் பெரும்பாடு. ஆனாலும் விடமாட்டேன். பிள்ளையார் கதறக் கதற கல்கொழக்கட்டை தின்னால்தான் ஆச்சு.
பல வருசங்களுக்கு முன் சந்திராக்காவின் தங்கை கல்யாணி மாமி (அதென்ன அக்காவின் தங்கை மாமி? அப்படியே கூப்பிட்டுப் பழக்கமாகிருச்சு) ஊறவச்ச அரிசியைக் கல்லுரலில் ஆட்டி நிமிஷமாக் கொழுக்கட்டை செய்வாங்க. அப்ப பக்கத்தில் இருந்து பார்க்காமல் போயிட்டோமேன்னு ஒவ்வொரு புள்ளையார் சதுர்த்திக்கும் நினைப்பேன்.
ஆன்னா ஊன்னா அங்கே கொழக்கட்டைதான். வாரம் ரெண்டுமுறையாவது இருக்கும். அப்படி என்ன வேண்டுதலோ?
வாங்க வல்லி.
வாழ்த்துகளுக்கு நன்றி.
'விட்டேனா பார்' வகைதான் :-)))
வாங்க நம்பள்கி.
வெளிநாடுகளில் கோவில்களில் கொண்டாட்டம் வைப்பதால் நமக்கு எளிதாக இருக்கே!
நோகாம நோம்பு கும்பிடலாமே:-)
வாங்க கீத மஞ்சரி.
பிள்ளையாரே எளியவர். அதான் அவரே ஐடியா கொடுத்துத் தன்னைக் காப்பாத்திக்கிறார், என் கொடுமையில் இருந்து:-)
கோலமும் அச்சு கொழுக்கட்டையும் அச்சு:-)
வாங்க பாலாஜி பாரி.
அது ஒரு அச்சுக்கோலம்!
வாங்க ரிஷான்.
பேசாமக் கிள்ம்பி வாங்க. கையில் லிஸ்டு இருக்கட்டும்.
ரெண்டு பேருமாச் சேர்ந்து சமைச்சு உங்க கோபாலண்ணாவை அசத்திப்புடலாம்!
வாங்க சசி கலா.
கல்லு வச்ச நாமம்! அதான் அழகு அள்ளிக்கிட்டுப் போகுது!
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
வாழ்த்துகளுக்கு நன்றி.
' ரசித்தேன்' ஜோதிஜிக்கு இரவல் கொடுத்துட்டீங்க போல!
மரகதம் பதிச்ச கொழுக்கட்டை புள்ளையாருக்குப் பிடிச்சிருந்ததாமா :-))
சுண்டலை மட்டும் மும்பைக்கு அனுப்புங்க போதும் :-))
பிள்ளையார் தப்பித்தார்.:)) வாழ்த்துகள்.
விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம்.
//கேரமலைஸ்ட் தேங்காய் பர்பி//
இதப்பத்தி ஒண்ணுமே சொல்லலியே? ஒரு படம்கூட போடல?? :-)))
வாங்க அமைதிச்சாரல்.
சுண்டல் பார்ஸல் கிடைச்சதா?
வாங்க மாதேவி.
உங்க வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாராம் புள்ளையார்.
(கனவில்) வந்து சொல்லிட்டுப்போனார்.
வாங்க ஹுஸைனம்மா.
அடடா.... படம் எடுக்ஜக விட்டுப் போச்சே:(
செய்முறை இதோ!
இனிப்புப் பூரணத்துக்கு துருவிய முந்திரி, கிஸ்மிஸ் பழங்கள் எல்லாம் சேர்த்தோம் பாருங்க. அந்தக் கலவையை சின்ன பர்னர் உள்ள அடுப்பில் சிம்மில் வச்சுட்டு வேற வேலை, ஒரு ஃபோன்காலோ, இல்லை இமெயில் செக் பண்ணுவதோ இப்படி எதாவது செஞ்சுட்டு வந்துடலாமுன்னு போய் மறந்தே போகணும் அடுப்பு சமாச்சாரத்தை.
லேசா தீயும் வாசனை வந்தாட்டு, ஓடோடிப்போய் பார்க்கணும். உலர்ந்த திராக்ஷை எல்லாம் உருகி அப்படியே ஒட்டும் பதம். நான் ஸ்டிக் வாணலி என்பதால் பிரச்சனை இருக்காது. சட்னு எடுத்து ஒரு பீங்கான்/ கண்ணாடி தட்டில் ஊத்திட்டால் அஞ்சு நிமிசத்தில் கேரமலைஸ்டு தேங்காய் பர்ஃபி ரெடி.
பதற்றத்தில் நான் தட்டில் கொஞ்சம் நெய் தடவ மறந்துட்டேன். அது கட்டியா இறுகி அப்புறம் மைக்ரோவேவில் 15 வினாடி வச்சு பெயர்த்து எடுக்கும்படியா ஆச்சு. ஒரே தூளாகிப்போனதால் இங்கே வறுத்த அவல் கிடைச்சதேன்னு வாங்கியாந்தேனே.... அதில் கலந்து வச்சேன்.சூப்பர் ஸ்நாக்:-))))
நீங்க என்ன வேணா சொல்லுங்க. கோவிலில் மடப்பள்ளியில் வாங்கித் தின்னும் கொழுக்கட்டை மோதகம் சுண்டல் ருசியை எங்கேயாவது பார்த்து இருக்கீங்களா?
// ஊறவச்ச அரிசியைக் கல்லுரலில் ஆட்டி நிமிஷமாக் கொழுக்கட்டை செய்வாங்க. அப்ப பக்கத்தில் இருந்து பார்க்காமல் போயிட்டோமேன்னு ஒவ்வொரு புள்ளையார் சதுர்த்திக்கும் நினைப்பேன். //
இதே, இதே, இம்முறையில் தான் நான் செய்வதும், வெகு எளிது. :)))
//ஆன்னா ஊன்னா அங்கே கொழக்கட்டைதான். வாரம் ரெண்டுமுறையாவது இருக்கும். அப்படி என்ன வேண்டுதலோ? //
ஆமால்ல, நம்ம வீட்டிலே அஞ்ச மாட்டோமே! ஆயிரத்தெட்டு கொழுக்கட்டையெல்லாம் பண்ணறது உண்டே. :)))) இதெல்லாம் ஜுஜுபி!
[[துளசி கோபால் said...
வாங்க மீனாட்சி அக்கா.
யார் வீட்டுக்கு(ள்) வந்தாலும் நாமம் சாத்திருவேனாக்கும்:-)))]]
இது தான் நகைச்சுவையின் இலக்கணம்!
அவர்கள் சைவரை வைஷ்ணவராக்கியதை ஒரு வரியில் யார் மனதும் புண்படாமல் சொல்லிவிட்டார்கள்.
_____________
பிள்ளையாருக்கு போட்ட நாமத்தை பார்த்தேன். இது திருப்பதி தும்பிக்கை ஆழ்வார் after effect--ஆ?
கடவுளுக்கு வேஷம் போடுவது நடைமுறை தானே! மொட்டையாண்டி ராஜா வேஷத்தில் காட்சி அளிப்பார்--பழனியில்!
முருகப் பெருமான் திருப்பதியில் சங்கு சக்கரம் வைத்து வேஷம் கட்டவில்லையா என்ன?
அப்புறம் துளசி கோபால் வீட்டில் பிள்ளயார் நாமம் போட்டால் என்ன?
பிள்ளையாருக்கு சத்துள்ள கொழுக்கட்டை செய்திருப்பது நல்ல யோசனை. நாம் சாப்பிடுவதை ஸ்வாமிக்கு அமுது செய்துவிட்டு சாப்பிடுவது டூ-இன்-ஒன்!
நமக்கும் ஆச்சு, அவருக்கும் ஆச்சு!
தும்பிக்கை ஆழ்வாரை ரசித்தேன்!
வாங்க நம்பள்கி.
ஆதரவு தரும் பின்னூட்டத்துக்கு நன்றீஸ்.
வாங்க ரஞ்ஜனி.
கோவிலாழ்வாருக்கே பெரிய நாமம் போட்டவளாக்கும் நான்:-))))))))
Post a Comment