Friday, September 24, 2010

இந்த நாள் .......இனிய நாள்.

நீங்கதான் சொல்லணும் தலைப்பு சரியா இருக்கான்னு. சரியா ஆறு வருசத்துக்கு முந்தி..............என்னவோ ஒரு 'வீக் மோமெண்ட்'லே ஆரம்பிச்சது இந்த துளசிதளம். ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்னு நம்ம கோபாலின் பொறந்தநாளும் அன்னிக்குத்தான்.

வாழ்க்கையின் ரெண்டு முக்கிய விஷயங்களை ஒன்னோடொன்னு முடிச்சுப்போட்டு வச்சுக்கிட்டால் பின்னாளில் தடுமாற்றம் வராது பாருங்க. அதுக்குத்தான் இந்த உபாயம்:-)

பரவாயில்லாம வண்டி ஓடுது. இதுவரை சம்பாரிச்சது உலகெங்கும் இருக்கும் நட்புகள். இதைவிட வேறென்ன பெரிய பரிசு இருக்கு ஒரு எழுத்துக்காரிக்கு?
உங்கள் அன்பும் ஆதரவும் வழக்கம்போல் இந்த ஏழாம் வருசமும் தொடர்ந்து கிட்டும் என்ற நம்பிக்கையில், 'துளசிதளம்' மகிழ்ச்சியோடு அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி மக்களே.

என்றும் அன்புடன்,
துளசி கோபால்.


55 comments:

ராமலக்ஷ்மி said...

துளசி தளத்துக்கும் திரு. கோபால் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

Thekkikattan|தெகா said...

வாழ்த்துக்கள்! Enjoy the Journey :)...

சாந்தி மாரியப்பன் said...

பொறந்த நாள் வாழ்த்துக்கள்.. வலைப்பூவுக்கும்,.. கோபால் அண்ணாவுக்கும் :-))

மணிநரேன் said...

வாழ்த்துக்கள்..:)

M.Rishan Shareef said...

வாழ்த்துக்கள் டீச்சர்..அண்ணாவுக்கும் எனது வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.

ஒரே 'கேக்'குக்கு ரெண்டு பேரா?
சிக்கனமா சமாளிச்சுடுறீங்க டீச்சர் :-)

Viji said...

Birthday wishes to Sir!
And Congrats on 7th year!!!!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. இனியநாளே தான்..:)

கோபால் சாருக்கும் வாழ்த்துக்கள்..

கிரி said...

உங்கள் தளத்திற்கும் கோபால் சார் அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

Paleo God said...

வாழ்த்துகள் டீச்சர்.

-வேணும் ஆசிர்வாதம்! :))

பினாத்தல் சுரேஷ் said...

தோ பாருங்க.. உங்க வயசைக் குறைச்சுக்காட்டிக்கணும்னு 6 ந்னு சொல்லாதீங்க. ஆறு முடிஞ்சு ஏழு ஆரம்பிக்குதுன்னு முழுசா சொல்லுங்க.. எங்க சீனியாரிட்டிலே கைவைக்காதீங்க..

சரியா 15 நாள்தான் சீனியரா நீங்க எனக்கு :-)

வாழ்த்த வயதில்லை :-)

சங்கத்தலைவர் கோபால் இன்றுபோல் என்றும் வாழ்க!

வடுவூர் குமார் said...

எங்களுக்காக ஊர் ஊராக சுற்றி அதை எழுத்திலும் போட்டு அனுபவிக்க வைக்கிறீர்களே அதற்கு நாங்கள் தான் நன்றி சொல்லனும்.
திரு கோபாலுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிக்கும் துளசிதளத்துக்கும், துளசியின் கோபாலுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.இனிய வாழ்க்கைக்கும், இனிய தளத்துக்கும்,கோபாலின் வளமான வாழ்க்கைக்கும் உங்கள் பெருமாளூம்,முருகனும்,தும்பிக்கை ஆழ்வாரும் அருள் புரியட்டும்.

சாராம்மா said...

Happy birthday to gopal sir.Many many more happyyyyyyyyyyyy returns of the day.Congrats for Ur blog.

Vidhoosh said...

:) என் நமஸ்காரத்தையும் சார்-கிட்டே சொல்லிடுங்க அம்மா.. :)

ஸ்ரீ.... said...

ஆறு வருடங்கள் மிகப்பெரிய சாதனை. மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் பல காலம் இணையத்தில் மிளிர்வதற்கு!

ஸ்ரீ....

நன்மனம் said...

டீச்சர் ! வாழ்த்துக்கள், தளத்துக்கும், தலைக்கும்.:-) தங்களால் கற்றது ஏராளம். இன்னும் பல கற்க காத்திருக்கிறேன்.

Anonymous said...

இந்த துளசிதளம். ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்னு நம்ம கோபாலின் பொறந்தநாளும் அன்னிக்குத்தான்//
செண்டிமெண்ட் டச்சிங்கா இருக்குங்க்...இருவரும் நீடூழி வாழ்க...

Menaga Sathia said...

துளசிதளத்துக்கு வாழ்த்துக்கள்!!

கோபால் மாமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பிரகாசம் said...

மிக்க மகிழ்ச்சி. கோபால் சாருக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள். நான் சில மாதங்களாகத்தான் தங்கள் பதிவை வாசித்து வருகிறேன். இன்னும் தங்களது பதிவுகள் பலவற்றைப் படிக்கவில்லை. இருந்தாலும் 6 வருடங்கள் இவ்வளவு பதிவுகள் வெளியிட்டிருப்பது மிகவும் பிரமிப்பாக உள்ளது. தங்களைப் போல் இன்னும் ஓரிருவர் இருந்தால் சுற்றுலாத்துறை படுத்துவிடும் (நாங்களெல்லாரும்தான் உங்கள் செலவில் ஓசியில் உலகம் முழுதும் பார்த்துவிடுகிறோமே)
மேன்மேலும் ஆயிரக்காண பதிவுகள் வெளியிட தங்களை அனுமதிக்க உலகம் சுற்றும் வாலிபரிடம் வேண்டுகிறோம்

குமரன் (Kumaran) said...

சாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளும் தளத்துக்கு தோன்றிய நாள் வாழ்த்துகளும் அக்கா! :-)

மாதேவி said...

திரு + திருமதிகோபால் + துளசிதளம்
இனிய வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

துளசி தளத்திற்கு வாழ்த்துக்கள்!

திரு.கோபல்சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மதுமிதா said...

இந்த இனிய நாளில் மூணு வாழ்த்துகள் சொல்லிக்கிறேன் துள்சி:) கோபாலுக்கும் வாழ்த்தைச் சொல்லிடுங்க. ஏழாவது வருடத்தில் இது எத்தனையாவது பதிவு துள்சி?

Unknown said...

துளசி தளத்திற்கும், சாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து டீச்சர்:))))

Vidhya Chandrasekaran said...

இருவருக்கும் வாழ்த்துகள் டீச்சர்:))

Santhiya said...

Happy Birthday to the Blog ! Many more happy returns of the day to Gopal Sir!

TBR. JOSPEH said...

பரவாயில்லாம வண்டி ஓடுது.//

எனக்கு தெரிஞ்சி ஆறு வருசமா தொடர்ந்து பதிவுகள் போட்டு சக பதிவர்களுடைய ஆதரவு பெற்றுக்கிட்டிருக்கறதும் நீங்க ஒருத்தர்தான்.

இதுவரை சம்பாரிச்சது உலகெங்கும் இருக்கும் நட்புகள். இதைவிட வேறென்ன பெரிய பரிசு இருக்கு ஒரு எழுத்துக்காரிக்கு?//

இது ஒன்னே போறுமே. அத விட இதுவரைக்கும் எந்த சிக்கல்லயும் சிக்கிக்காகம உங்களுக்குன்னு ஒரு தனி ரசிக கூட்டத்தையும் சம்பாதிச்சிருக்கீங்களே அதுவே உங்க எளிமையான, இயல்பான, மிகவும் யதார்த்தமான எழுத்துக்கு கிடைச்ச வெற்றி.

தொடர்ந்து எழுதுங்கள்....

அன்புடன்,
டிபிஆர்.

சௌந்தர் said...

இந்த தளத்திற்கும் கோபால் சாருக்கும் வாழ்த்துக்கள்

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள்! :)

ஆயில்யன் said...

வாழ்த்த வயதில்லை :-)



ஆசீர்வதியுங்கள் டீச்சர் :)

cheena (சீனா) said...

அன்பின் துளசி

என்ன இது இவ்வளவு சாதாரணமாக - ஒரு உலக சாதனையினையும் - ஒரு மாமனிதரின் பிறந்த நாளினையும் - வெளி இட்டிருக்கிறீர்கள். கொண்டாடி இருக்க வேண்டாமா ? ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் துளசி - துளசி தளம் மேன் மேலும் வளர நல்வாழ்த்துகள்

கோபாலிடம் எங்களது உளங்கனிந்த வாழ்த்துகளையும் அன்பினையும் தெரிவிக்கவும்.

சீனா - செல்வி ஷங்கர்

உண்மைத்தமிழன் said...

வலையுலக டீச்சரின் ஏழாண்டு சாதனை மலைக்க வைக்கிறது..! உங்களைப் போல் நீங்கள் ஒருத்தர்தான் இங்கே இருக்கிறீர்கள்..!

கோபால் ஐயாவுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

உங்களுடைய சிறப்பு வாய்ந்த துளசிதளத்திற்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்..!

Ganesan said...

ஏழு வருடமா? great teacher, congrats

shansnrmp said...

These words from the bosom cometh

beholdin tis wondrous dancing world
Gopal weaveth legends in His camera...
And readers are thumpeth by thee!
Thulasi is the name of travel..
Dhalam gets fortunate by her!

Words from your pages roll..
Hearts from the hearth of the world gather..
Thou paveth a path global
A mesmerising window to the world

Cambodia to Amritsar..a voyage of excitement
Many miles and many peoples
Oh! you have crossed the line of success..
Thulasi and Gopal you are an endless story !

sivashanmugam
krr/6.26am

virutcham said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். கோபால் சாருக்கும் துளசி தளத்துக்கும்.

உங்க பூர்விகம் கேரளமா இருக்கும்னு நினைக்கிறேன். துளசி என்ற பெயரும் உங்கள் எழுத்தில் அப்போ அப்போ அடிக்கும் மலையாள வாடையும் சொல்லுது.

☀நான் ஆதவன்☀ said...

ஆறாவது வருசமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!

தொடர்ந்து ஆறு வருசமா இயங்குறது எவ்ளோ பெரிய விசயம். வாழ்த்துகள் டீச்சர் :)

☀நான் ஆதவன்☀ said...

கோபால் சாருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)

கானா பிரபா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்

(காதலா காதலா கமல் குரலில்) ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

சுந்தரா said...

துளசி தளத்திற்கும் கோபால் ஐயாவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!

மோகன்ஜி said...

துளசி தளத்திற்கும் கோபால் சார் அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை!

துளசி கோபால் said...

வாங்க வாங்க.

வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் துளசிதளமும், கோபாலும் நன்றியை இங்கே சொல்லிக்கறோம்.

ராமலக்ஷ்மி, நன்றிப்பா

தெகா, நன்றி

அமைதிச்சரல், நன்றி

மணிநரேன், நன்றி

ரிஷான், நன்றி. ஒரே கேக் இல்லை.ஒரே இட்லியை வெட்டிக் கொண்டாடியாச்சு:-)

துளசி கோபால் said...

விஜி, நன்றிப்பா.

கயலு, நன்றிப்பா.

கிரி, நன்றி.

ஷங்கர், நன்றி. ஆசிகளை அனுப்பி இருக்கேன்.

பினாத்தலாரே, நன்றி.
இப்படி வயசைப் போட்டுடைக்கலாமா?:-)

துளசி கோபால் said...

குமார், நன்றி.

வல்லி, அருளாசிகளுக்கு நன்றிப்பா.

சாராம்மா, நன்றிப்பா

விதூஷ், நன்றிப்பா

ஸ்ரீ, நன்றி. நமக்கும் சீனியர்ஸ் இருக்காங்க.

துளசி கோபால் said...

நன்மனம், நன்றி.

சதீஷ்குமார், நன்றி.

மேனகா, நன்றிப்பா.

பிரகாசம், நன்றி. ஆற அமரப் படிங்க.சுற்றுலாதான் நிறைய இருக்கும்.

குமரன்,நன்றி. பிறந்த வீட்டு சீர் உங்க வாழ்த்து:-)

துளசி கோபால் said...

மாதேவி, நன்றிப்பா

கோமதி அரசு, எல்லாம் உங்க ஆசி.


கவிதாயினி மது, நன்றிப்பா. ஏழாவதில் இதுதான் முதல் பதிவு:-)))) ஆமாம், அதென்ன மூணு வாழ்த்து?

சுமதி, நன்றிப்பா.

வித்யா, நன்றிப்பா

துளசி கோபால் said...

சந்தியா, நன்றிப்பா.

டி.பி.ஆர், நன்றி.

சிக்கலில் சிக்கிக்கவும் நேரமும் தைரியமும் வேணுமே! மல்லுக்கட்ட நம்மாலே ஆகாது. அவுங்கவுங்க கருத்தை அவரவர் சொல்லட்டும். அதுக்குத்தானே வலை உலக சுதந்திரம் இருக்கு.

சௌந்தர், நன்றி.

ஊர்சுற்றி, நன்றி.

shansnrmp said...

ENANGA ENAKU ENGEY NANDRI SOLAMA VITUTEENGA.?UNGALUKUM GOPAL SIR AVARGALUKUM MENAKETU NITE KANVILUCHU ORU POEM ELUTHI POST PANIRUKEN..ANTHA POEM GOPAL SIR PIRANTHA NAAL VAZLTHUTHANGA..NAMA THULASIDHALAM SERTHU THANGA..HAHAHA

துளசி கோபால் said...

ஆயில்யன், நன்றி.

வயசு எதுக்கு? மனம் இருந்தால் போதும். ஆசிகள்.

சீனா & செல்வி, நன்றிகள்.

உண்மைத் தமிழன், நன்றி.

காவேரி கணேஷ், நன்றி.

துளசி கோபால் said...

சிவஷன்முகம், நன்றி. உங்களுக்கு ஆயுசு நூறு. இப்பதான் நன்றிகளைத் தட்டச்சு செய்துகிட்டு இருக்கேன். வார இறுதி கொஞ்சம் பிஸியாப் போச்சு.

உங்க கவிதைக்கும் நன்றி. ரெண்டாவது வரியில் ஒரு பொருட்பிழை வந்துருக்கு:-) Gopal weaveth legends in His camera.. பதிவுக்கு ஒரிஜனல் போட்டோகிராஃபர் அடியாள்(?!) தானாக்கும்.

துளசி கோபால் said...

விருட்சம், நன்றி.

//உங்க பூர்விகம் கேரளமா இருக்கும்னு நினைக்கிறேன். துளசி என்ற பெயரும் உங்கள் எழுத்தில் அப்போ அப்போ அடிக்கும் மலையாள வாடையும் சொல்லுது.//

ஆணோ? ஆய்க்கோட்டே....எனிக்கு விரோதம் ஒன்னுமில்லையாக்கும்,கேட்டோ:-))))

துளசி கோபால் said...

நான் ஆதவன்,நன்றிகள்.

கானாபிரபா, நன்றி.

ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா..... பிரபுதேவா சொல்றதுபோல...கொஞ்சம் திக்கித்திக்கிச் சொல்லுங்க:-)

சுந்தரா, நன்றிப்பா.

மோகன் ஜி, நன்றி

Unknown said...

Teacher,

Hearty birthday wishes to both Thulasidhalam and Gopal Saar. We expect more visual treats in coming days.

Best wishes again.

-Sri

sindhusubash said...

நா தான் கடைசி போலிருக்கு. கோபால்ஜிக்கும், துளசி தளத்துக்கும் வாழ்த்துக்கள் டீச்சர்.

Aravinthan said...

எனது வாழ்த்து(க்)கள். பிந்திய வாழ்த்து(க்)களுக்கு மன்னியுங்கள்.

/*இதுவரை சம்பாரிச்சது உலகெங்கும் இருக்கும் நட்புகள். */

எங்கேயோ ஈழத்தில் ஒரு மூலையில் பிறந்து சிட்னியில் வசிக்கும் எனக்கு , கிறைஸ் சேர்ச்சில் நல்ல நண்பி கிடைத்ததற்கு மகிழ்ச்சி.

துளசி கோபால் said...

வாங்க வாங்க.

ஸ்ரீநிவாஸன், சிந்து & அரவிந்தன்,
அன்பான வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

தாமதமான பதிலுக்கு மாப்பு ப்ளீஸ்.