Thursday, September 02, 2010

யே பாரத் தேஷ் ஹமாரா.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 3)

சரியா 25 கிலோமீட்டர் மேற்கே போகணும். நடுவில் ஒரு இடத்தில் டோல் கட்டணும். நாலரைக்கு கேட் திறப்பாங்கன்னு 'சிறுமுயற்சி'க்காரவுஹ எழுதி இருந்தாங்க. பார்த்து வச்சுக்கிட்டேன். ஆனா............

வாகா எல்லையில் (WAGHA Border)தேர்த்திருவிழா மாதிரி கூட்டம் நெரியுது. 'கணகண டணடண'ன்னு இரும்பு வாணலியில் இரும்புச் சல்லடையால் அடிச்சு நொறுக்கறாங்க. படபடன்னு பாப்கார்ன் துள்ளித்துள்ளிப் பொரியுது. ஏகப்பட்ட தீனிக் கடைகள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வரிசை..
நடுவிலே கார் போக ஒரு இடம் விட்டு நீண்டு போகும் வரிசைக்கு வந்தப்ப மணி 4. நம்ம ட்ரைவரும் இதுவரை உள்ளே போய்ப் பார்த்ததில்லை என்றதால் அவரையும் வலது பக்கம் கார் பார்க்லே வண்டியை நிறுத்திட்டு வந்து வரிசையில் சேர்ந்துக்கச் சொல்லிட்டோம்.
அதுக்குள்ளே ஒருத்தர் வந்து 'உள்ளே ஹேண்ட்பேக் கொண்டுபோகக் கூடாது. இங்கே ஒரு இடம் இருக்கு. அங்கே கொடுத்தால் நீங்கள் வரும்வரை பாதுகாத்து வச்சுருப்பாங்க'ன்னார். அறிவிப்பு எங்கே இருக்குன்னு கண்ணைச் சுழற்றினால் அப்படி ஒன்னும் காணோம்.

இது என்ன புதுவகை வழிப்பறியோன்னு சம்ஸயம் எனக்கு. 'கேமெராவும் செல் ஃபோனும் கையிலே எடுத்துக்கலாம்' ன்றார். அட ராமா....... சிறுமுயற்சி இப்படிச் சொல்லாம விட்டுட்டாங்களே:(

நம்ம பேங்க் ஏடிஎம் கார்டு, க்ரெடிட் கார்டுன்னு ஏகப்பட்ட அட்டைகளும் பயணத்துக்குன்னு எடுத்த காசு முழுசும் அதுலே இருக்கே. என்னடா செய்யறதுன்னு ஆண்கள் வரிசையில் இருக்கும் கோபாலிடம் போய் விஷயத்தைச் சொன்னால்..... பேசாம வண்டியிலே வச்சுப் பூட்டிறலாமுன்னு சொன்னார். நான் கார் பார்க் போனா அங்கே ட்ரைவரைக் காணோம்! இதுக்குள்ளெ திமுதிமுன்னு கூட்டம் வரிசைகளில் ரொம்பிக்கிட்டே இருக்கு. என் இடமெல்லாம் போச்சு. இவரிடம், ட்ரைவரைக் கண்டுபிடிக்க முடியலைன்னதும், செல்லில் கூப்பிடறேன்னு நம்பரை அமுக்குனா.... என் கூடவே இதுவரை வந்துக்கிட்டே இருந்த அந்த நபர், 'இங்கே செல் வேலை செய்யாது. பார்டர் ஏரியா'ன்றார்.

பையில் இருக்கும் முக்கிய சாமான்களை(!!) இவரிடம் கொடுத்துட்டுப் பையை அந்த நபரிடம் கொடுக்கலாமுன்னு ஐடியா வந்துச்சு. கோபால் வரிசையில் இருந்து ஒரு எட்டு வெளியில் கால் வச்சு என்னிடமிருந்து பொருட்களை வாங்கிக் கால்சராய் பையில் திணிக்கும்போதே அவர் இடமும் பறிபோயிருச்சு. திரும்ப வரிசையின் கடைசிக்குப்போய் நின்னார்.

நான் பையை அந்த நபர் சொன்ன இடத்தில் ஒப்படைச்சதும் ஒரு காகிதத்தில் 19 ன்னு எழுதுன பக்கத்தை எனக்குக் கிழிச்சுக் கொடுத்துட்டு பையை வாங்கி கிழிச்ச தாளின் அடுத்த பகுதியை பையின் zip இல் சொருகி வச்சார்.

ஒரு கையில் கேமெரா. இன்னொரு கையில் சின்னக் காகிதம் வச்சுக்கிட்டு அந்த காகிதத்தை எங்கே பத்திரப்படுத்துவதுன்னு யோசிக்கும்போது கோபால் மறுபடி வரிசையை விட்டு வந்து 'எங்கிட்டே கொடு'ன்னு வாங்கிக்கிட்டார். மறுபடி அவருடைய இடம் போயிருச்சு!


இதென்னடா...இப்படி ஒரு கூட்டம். பேசாம திரும்பிப்போயிரலாமான்னு கூட ஒரு நிமிசம் நினைச்சேன்னா பாருங்க. மறுபடியும் ஆண்கள் வரிசை பென்கள் வரிசைன்னு பிரிஞ்சு போய் கடைசியில் நின்னோம். வெய்யில் வேற உக்கிரமா போடுது! கூட்டம் இன்னும் கூடக்கூட ஒரே இரைச்சல். எங்களுக்குப் பின்னே ஹனுமன் வால் போல் ஒரு வளர்ச்சி! கோபாலை சட்னு அடையாளம் காணமுடியலை. அவருக்குப்பின்னே ரெண்டாள் தள்ளி ஒரு முட்டாய் பிங் தலைப்பாகை . அதை அடையாளமா வச்சுக்கிட்டேன்.

இந்தியன் கொடி, கொடி படம் போட்ட சன் வைஸர், டி ஷர்ட், தண்ணீர் பாட்டில், பாப்கார்ன் எல்லாம் விற்பனை செய்யும் சிறுவர்கள் குறுக்கும் நெடுக்குமாப் பாய்ஞ்சு போறாங்க.

4.20க்கு கேட்டைத் திறந்து முதலில் பெண்கள் வரிசையை மட்டும் உள்ளே விட்டாங்க. கேட்டைக் கடந்ததும் வரிசையா இல்லாம கும்பலாப் போக ஆரம்பிச்சது நம்ம கூட்டம். நல்ல அகலமான பாதை. நடுவிலே வரிசையா செடிகள் வச்சுப் பிரிச்சு இருந்துச்சு.
கொஞ்ச தூரத்துலே இடப்பக்கம் ஒரு கோவில். முகப்பிலே ஹனுமார், இடக்கையில் சஞ்சீவி மலையையும் வலக்கையில் கதையையும் தூக்கிட்டு நிக்கறார். கோவிலுக்குள்ளே மூன்று தெய்வங்கள். பிள்ளையார், சிவன் & சக்தி. எல்லை தெய்வங்களோ? கொஞ்ச தூரத்தில் வலது கைப்பக்கம் பொற்கோவிலின் மாடல் ஒரு பீடத்தில் வச்சு இருக்காங்க.

ரொம்ப தூரத்துலே இண்டியான்னு போட்ட தோரணவாயில் தெரியுது. மறுபடி வரிசையில் நிக்கச் சொன்னதில் சிங்கிள் ரோவா வரிசையில் நின்னோம். எங்க வரிசைக்கு வலப்பக்கத்தில் ரெண்டு அட்டகாசமான குதிரையில் ராணுவத்தினர் ரெண்டுபேர் அடுத்தடுத்து நின்னு நடுவில் கொஞ்சம், ஒரு ஆள் போகுமளவு இடைவெளி விட்டாங்க.

பெண்கள் வரிசை அப்படியே நிக்க ஆண்கள் வரிசை நகரத்தொடங்கி அவுங்களும் வந்து ரெண்டு குதிரைகளுக்கிடையில் புகுந்து போய்க்கிட்டு இருக்காங்க. இந்த வரிசைகளுக்கிடையில் உள்ள போர்டில் பிக்பாக்கெட் இருக்காங்க. கவனமா இருங்கன்னு எழுதி வச்சுருக்கு! அரசியல்வியாதிகளையாச் சொல்றாங்க? ராணுவத்தின் கெடுபிடியில் இருக்குமிடத்தில் ஜேப் கத்ரோவா????? ஒருவேளை, திருடனைப்பிடிக்கும் அதிகாரம் போலீஸுக்கு மட்டுமோ? மொபைல் ஃபோன் ஆல்ஸோ அலௌடு. லக்கேஜ் பேக்ஸ் ஆர் நாட் அலௌடுவாம். ஒரு சாதாரண ஹேண்ட் பேக் லக்கேஜ் பேகா ஆயிருச்சா என்ன?

இருவது நிமிசமாச்சு. பெண்கள் வரிசை அப்படியே கிடக்கு. ஆண்கள் மட்டும் போய்க்கிட்டு இருக்காங்க. கோபால் எங்கிருக்காருன்னு தெரியலை. பிங்க் தலைப்பாகை அடையாளம் ஒன்னுத்துக்கும் பயன் படலை. பத்துப் பதினைஞ்சு பிங்க் இருக்கு. எதுன்னு நான் கண்டேன்?

நாங்கள் நகரத்தொடங்கி ஒரு எலெக்ட்ரானிக் கேட்டுலே நுழைஞ்சோம். இடப்பக்கம் கேன்வஸ் தடுப்பு வச்ச ரெண்டு இடத்தில் பெண்களுக்கான உடல் பரிசோதனை. ரெண்டு பெண் வீரிகள் . எனக்கு ஏகத்துக்கு இருக்கும் பிபியை அவுங்க கண்டுபிடிக்கலை.:)

அங்கே வேலியில் ஒரு அறிவிப்பு பை கொண்டு போகக்கூடாதுன்னு . இதை ஒழுஙகா வெளியில் ஆரம்பிக்கும் கேட்டில் வச்சுருக்கக்கூடாது?
தோரணவாயிலை நெருங்கினேன். பெரிய அகலமான, உயரமான வாசல்.
இடப்பக்கம் இருக்கும் கட்டிடத்தின் ரெண்டு பக்கமும் மாடிப்படிகள். இதுலே இடப்புற மாடிப்படி பெண்களுக்கு. மேலே ஏறிப்போனால் காலரி மாதிரி படிகள் வரிசை இருக்கு. மேலிருந்து மூணாவது வரிசையில் எனக்கு இடம் கிடைச்சது. வலதுகைப்பக்கம் இந்தியா வாசலும் இடதுகைப்பக்கம் கொஞ்சதூரத்தில் பாகிஸ்தான் வாசலுமா இருக்கு.

ஆண்கள் பக்கம் இவரைத் தேடுனா..... ஊஹூம்.
மக்கள் கூட்டம் கடலெனத் திரண்டதால் அலையோசை ரொம்ப இரைச்சலா தலையில் இறங்குது. நம்ம இந்தியா சைடுலே நாலு கேலரி ஸ்டேண்டு இருந்தாலும் நிரம்பி வழியுது. இது இல்லாம முன்னால் தரையில் பாதையில் ரெண்டு பக்கங்களிலும் மக்களை கடைசியில் உக்கார அனுமதிக்கிறாங்க.
என் கணக்குப்படி ஒரு இருபதாயிரம் பேர் இருக்கலாம். ஆனால் கோபால் சொல்றார் அம்பதாயிரம் ஈஸியாம்! இவருக்கு அஞ்சாம் வாய்ப்பாடும், எனக்கு ரெண்டாம் வாய்ப்பாடும் ரொம்ப சுலபம்:-)))))))))))நமக்கு முன்பாக எதிரில் 'பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸி'ன் கட்டிடம். மிடுக்கான ராணுவ உடை அணிஞ்ச வீரர்கள் விசிறித்தொப்பியுடன் இங்கே அங்கேன்னு ஓடி ஓடி மக்களை உக்காரவைச்சு ஒழுங்கு படுத்த முனைகிறார்கள். ஆனால்...நம்ம மக்கள் வெள்ளம் இதுக்கெல்லாம் கட்டுப்படுமா? பெரிய ஸ்பீக்கர்களை கட்டிடத்தின் மேல் வச்சுருக்காங்க. முதல் தேசபக்திப் பாடலா 'யே பாரத் ஹை ஹமாரா' ஒலிக்க ஆரம்பிச்சது. இந்த மாதிரி இடங்களில் போனால்...... அதுவும் கொஞ்ச நேரமுன்புதான் ஜாலியன்வாலா பாக் துக்கத்தைச் சுமந்த நெஞ்சு சும்மா இருக்குதா?

கட்டிடத்துக்குள்ளே இருந்து வந்த சிவில் ட்ரெஸ் போட்ட நபர்தான் இன்றைய நிகழ்ச்சிக்கு ஆங்கர் போல! பாரத் மாதா கி ன்னதும் கூட்டம் 'ஜே' போடுது. 'வந்தே' ன்னதும் 'மாத்ரம்' னு கூட்டம் மீதியை முடிச்சுவைக்குது.

அப்போ ஒரு பஸ் நம்ம நுழைவு வாசலில் உள்ளே நுழைஞ்சது. அம்ரித்ஸரில் இருந்து லஹோர் போகும் வண்டி. வெளியே இருக்கும் இம்மிகிரேஷன் செக்கப் முடிஞ்சு எல்லையைக் கடக்கப்போகுது. சரியான டைமிங்க்! படபடன்னு கைதட்டி, கைகளை ஆட்டி அவுங்களை உற்சாகப்படுத்த, பஸ்ஸுக்குள்ளில் இருந்த மக்களும் கைகளை ஆட்டி நமக்கு பதில் மரியாதை செய்ஞ்சாங்க. பஸ்ஸுக்கு அடியில் கண்ணாடி எல்லாம் வச்சு நல்லாப் பரிசோதனை செஞ்சு அனுப்புனாங்க. ( இதுகூட பார்ட் ஆஃப் த ஷோ வாக இருக்கலாம்)
மெள்ள ஊர்ந்து வண்டி கேட்டுக்குப் போச்சு. கேட்டுகள் திறக்கப்பட்டன. இதுலே நம்ம கேட்டுக்கு அடுத்து அவுங்களுது. நம்மது ரெண்டு பகுதியா ரெண்டு பேர் பிடிச்சுத் திறக்கணும். அவுங்கது ஜாலியா ஸ்லைடிங் டோர். இந்தப் பாய்ண்ட்டில் இருந்து லஹோர் வெறும் 31 கி.மீட்டர்தான். பொடிநடையா நடந்துகூடப் போயிறலாம், இல்லே?
அங்கே பாகிஸ்தான் பக்கம் கேலரி காலியா இருக்கு. எல்லாம் புள்ளகுட்டிகளை வளர்த்துப் படிக்க வச்சுக்கிட்டு இருக்காங்க போல.

இங்கே நம்ம பக்கம் 'தேஷ் கே தர்த்தி, மேரே வதன் கி லோகோ'ன்னு பாட்டுகள் அடுத்தடுத்து ஒலிக்க அதையும் மீறின பேச்சு சத்தங்கள். நம்ம மக்களால் அஞ்சு நிமிசம் பேசாம இருக்க முடியாது. அதேபோல் எங்கியாவது போனா எதையாவது வாயில் போட்டு மில் மாதிரி அரைச்சுக்கிட்டே இருக்கணும். அப்புறம் எல்லாத் தீனிப்பொதிகளின் உறைகளைக் குப்பையாத் தெளிச்சுட்டு வரணும். ஒரு பார்க்குக்குப் போனால் மிஞ்சி மிஞ்சி ஒரு மணி நேரமோ இல்லை ஒன்னரைமணி நேரமோதானே இருப்போம். அங்கேயும் வாயைப் பயன்படுத்திக்கிட்டே இருக்கணும். இவுங்களுக்காகவே தீனி விக்கிறவங்க வட்டம் போட்டுக்கிட்டே இருக்காங்க. நல்லவேளை இங்கே தீனிக்கு உள்ளெ அனுமதி இல்லை. அதான் வேணுங்கறதை வாசலிலே வாங்கிட்டு வந்துட்டாங்களே! சிடி விக்கறவங்கதான் புகுந்துபுகுந்து போய்க்கிட்டே இருக்காங்க. வாங்கிக்கலாமுன்னா வெறுங்கையால்லே இருக்கேன்:(


முக்கிய நிகழ்ச்சி ஆரம்பிக்கும்வரை கூட்டத்தை உற்சாகமா, ஆரம்ப ஆர்வம் குறையாம வச்சுக்கணுமே! ரெண்டு பெரிய இந்தியன் கொடிகளைக் கொண்டுவந்து ரெண்டு இளைஞர்களிடம் கொடுத்து எதிர்கேட் வரை ஓடிட்டு வரச் சொன்னாங்க. இதுக்குள்ளே மற்றவர்களும் அங்கே போய் ரெவ்வெண்டு பேரா நின்னதும் ரிலேரேஸ் ஆகிப்போச்சு.
இன்னமும் எதிர்(ரி)ப்பக்கம் அனக்கம் ஒன்னும் இல்லை. இங்கே கூச்சலும் கும்மாளமுமா இருக்கு. அஞ்சரை மணி ஆகப்போகும் நேரம் சில பெண்கள் அந்தப்பக்கம் கேலரியில் வந்து உக்கார்ந்தாங்க. ஒரிருவரைத்தவிர யாரும் புர்க்கா ஒன்னும் போட்டுக்கலை. கலர்ஃபுல் ஆடைகளில்தான் வந்தாங்க. அங்கேயும் பாட்டு ஒலிக்கத் தொடங்குச்சு. அங்கே ஆண்கள் வரிசை நாம் இருந்த பக்கத்திலேயே மேற்கில் இருந்ததால் ஆண்கள் வருகை என்னன்னு தெரியலை.
'பாக் 'லேடீஸ்

கொடியோட்டம் முடிஞ்சதும் எல்லோரையும் ஆடவிட்டாங்க. ஒலிக்கும் பாட்டுக்கு ஏற்ப(??!!) இங்கே கண்டமானம் ஆட்டம். ஆடுனதெல்லாம் பெண்களே! ஆண்கள் கூட்டம் விஸிலடிச்சுப் பாராட்டிக்கிட்டு இருந்துச்சு.


காம்பியரான சிவில் ட்ரெஸ் பார்ட்டி, அப்பப்ப மைக் பிடிச்சுக் கூட்டத்தை உசுப்பேத்திக்கிட்டு இருந்தார். இந்தப் பெருங்கூட்டத்தைக் கையை விரிச்சுக் காமிச்சு எதிர்பக்கம் கை நீட்டுனதும் மொத்தக்கூட்டமும் ஊளையிட்டுச்சு. இதெல்லாம் கூட்டத்துக்குன்னே இருக்கும் குண விசேஷங்கள்.

பாவம். அங்கே வெள்ளப்பெருக்கு, கனமழை, சாவுன்னு அல்லாடிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாம இங்கே பாட்டும் கூத்துமா இருந்துச்சு. அதுகூடப் போனாப்போகட்டுமுன்னு விடலாம். இங்கே இருக்கும் ராணுவ அதிகாரி ( சீருடை இல்லாம சிவில் ட்ரெஸ் போட்டுக்கிட்டு நிகழ்ச்சியை நடத்தும் நபர்) அந்தப் பக்கம் கையைக் காமிச்சு கூட்டமே இல்லைன்னு உதட்டைச் சுளிச்சு கை காமிச்சதும் நம்ம பக்கம் ஜனங்கள் 'ஹோ'ன்னு ஆரவாரம் பண்ணறதும், அந்தப் பக்கம் தன் காலை உயர்த்தி உதைவிடுவது, கையால் குத்துச்சண்டை போடுவதுபோல் காமிப்பது எல்லாம் இவர் செஞ்சு காமிக்கும்போது மக்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமப்போவதும்............ கோஷம் வானைப் பிளக்குது. எனெக்கென்னமோ இந்த எள்ளல் ரொம்ப அசிங்கமா இருந்துச்சு:(

ரொம்ப சாதாரணமா ஆரம்பிச்ச இந்த கொடியை இறக்கும் நிகழ்ச்சி இப்போ பயங்கர டூரிஸ்ட் அட்ராக்ஷன். பேசாம தலைக்கு பத்து ரூபான்னு டிக்கெட் வச்சா தினம் ஒரு லட்சம் வசூலாகிரும். இதையே ராணுவவீரர்கள் நிதிக்கு வச்சுக்கலாம்.

அஞ்சே முக்காலுக்கு ரெண்டு ஜெர்மன் ஷெப்பேர்ட்கள் வந்து கீழ்வரிசை ஆட்களை மோந்து பார்த்துக்கிட்டே ரோந்து போச்சு. சடங்குகள் ஆரம்பமாயின. ரெவ்வெண்டு ராணுவ வீரர்களா மார்ச் செஞ்சுக்கிட்டு காலை ஓஓஓஓஓஓஒங்கி நெஞ்சுவரை உயர்த்தி வச்சுப்போனாங்க.


ஒருத்தர் நல்லா தம் கட்டப் பழகி இருக்கார். 'ஹோ'ன்னு ரெண்டு நிமிசம் விடாமக் கத்தறார். அவருக்கு மைக் பிடிக்கும் ஆங்கர்!


சரியா ஆறு மணி பத்து நிமிசத்துக்குக் கொடிக்கம்பக் கயித்தைப் பிடிச்சாங்க. அவுங்கது நம்மதுன்னு தோரண வாசல்களில் ஒவ்வொன்னு, ரெண்டு கேட்டும் சந்திக்கும் இடத்தில் பக்கத்துக்கு ஒன்னுன்னு மொத்தம் நாலு கொடிகள். ஒரே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக் கீழே இறக்கறாங்க. கேட்டுக்குப் பக்கம் இருக்கும் ரெண்டு கொடிகளும் ஒரு சமயம், ஒன்னை ஒன்னு தொட்டு நிற்பதுபோல் ஒரு வினாடி நின்னுச்சு..
கொடி கீழே வந்ததும் அவிழ்த்து எடுத்த அடுத்த நொடி ரெண்டு கேட்டையும் சாத்திட்டாங்க. ஆறே கால். அஞ்சே நிமிஷம். ஷோ முடிஞ்சது. நான் கிடுகிடுன்னு படி இறங்கி வெளியே வந்துட்டேன். கூட்டமெல்லாம் ரெண்டு கேட்டுகளும் இருக்குமிடத்துக்குப் பாயுது.

மக்கள்ஸ் எல்லாம் அமைதியா நிகழ்ச்சி முடியும்வரை உக்கார்ந்திருந்தா எல்லோருக்கும் நல்லாவும் தெரிஞ்சுருக்கும். படங்களை நல்லா எடுக்கவும். முடிஞ்சுருக்கும். எழுந்து நின்னு காட்சிகளை மறைச்சும் தள்ளியும் இடிக்கவும் ஆரம்பிச்சதுதான் கொஞ்சம் எரிச்சல்.. என் பாஸ்போர்ட்டைக் கையோடு கொண்டு போயிருந்தால் வெளிநாட்டினருக்கான வரிசையில் இடம் கிடைச்சுருக்கும்:(

திரும்பி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து கேட்டுக்கு வந்தேன். வரும்வழியில் இருந்த ராணுவ வீரிகளிடம் தினமும் இவ்வளவு கூட்டம் வருமான்னா...... இன்னிக்குக் கம்மி. நாளைக்கு சண்டே. இதுபோல டபுள் வருமுன்னு சொன்னாங்க.
ரெண்டு நாட்டுக்கிடையிலும் இருக்கும் நோ மேன்ஸ் லேண்டில் முள் கம்பிச்சுருள்களைப் பரப்பி மின்சார வேலி போட்டு வச்சுருக்காங்க.

வெளியே வந்துட்டேன். இவரைக் காணோம். ஹேண்ட் பேகை எடுக்கணுமுன்னா துண்டுக்கடுதாசி இல்லையே! நம்பர் பத்தொன்பது வேணுமுன்னு சொன்னால்..... கடுதாசி இல்லைன்னா 25 ரூபான்றார். ஓ..... இதுக்குக் கட்டணம் வேற கொடுக்கணுமா? காசுதான் ஒரு பைசா இல்லாம அம்போன்னு நிக்கிறேனே! சேர் ஒன்னை இழுத்துப்போட்டு 'உக்காருங்க. உங்க கணவர் வரும்வரை'ன்னு உபசாரம் வேற!

கோபாலே நம்மைக் கண்டுபிடிக்கட்டுமுன்னு நடு ரோடில் இருந்த ஐலண்டில் ஏறி நின்னு ஜனங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். இருவது நிமிஷம் ஆச்சு இவரைக் கண்டுபிடிக்க. எனக்காக உள்ளே காத்துருந்தாராம்!

துண்டுக்கடுதாசி கொடுத்ததும் கைப்பை கிடைச்சது. இருபது ரூபாய் பாதுகாப்புக் கூலி. .

காஷ்மீர் தொடங்கி குஜராத் வரை எல்லைக்கோடு பிரிச்சு இருந்தாலும் இந்த வாகா எல்லை எப்படியோ பரிசைத் தட்டிக்கிட்டு போயிருச்சு. லஹோருக்கு பக்கத்துலே இருப்பதாலா? இதைவச்சு எவ்வளவு வியாபாரிகள் பிழைக்கறாங்க பாருங்க!


பார்க்கிங்லே இருந்து வண்டி எடுக்கவே பதினைஞ்சு நிமிசமாச்சு. அப்படி ஒரு நெருக்கல். சாலையைத் தொட்டதும் வேகமெடுத்து அறைக்கு வந்து சேர்ந்தோம். ஏழரை மணி. ஒரு குளியல் போட்டுட்டு எட்டரைக்குக் கிளம்பணும் பொற்கோவிலுக்கு.


தொடரும்..................:-)

14 comments:

said...

நானும் டி.வியில் பார்த்திருக்கிறேன் டீச்சர் கொடி இறக்குவதை. திருவிழாக் கூட்டம் நன்றாக உள்ளது டீச்சர். நீங்கள் அங்கங்கே சொல்லும் கருத்தும் நன்றாக உள்ளது டீச்சர்:)))))

said...

//இவருக்கு அஞ்சாம் வாய்ப்பாடும், எனக்கு ரெண்டாம் வாய்ப்பாடும் ரொம்ப சுலபம்:-)))))))))//

ரசித்தேன். நன்றி

said...

பொற்கோவிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

said...

டீச்சர் கூட சேர்ந்தும் இந்த இடத்தை பார்த்தாச்சி ;)

\\அட ராமா....... சிறுமுயற்சி இப்படிச் சொல்லாம விட்டுட்டாங்களே:(\\\

அவுங்க சிறுமுயற்சி தானே டீச்சர் அதான் முழுசாக தெரியல போல! ;))

said...

இப்படி வெளியே இருந்தே க்யூ அப்ப இருக்கல துளசி..அண்ட் பெண்கள் ஆண்கள் தனியா பிரிப்பதும் இல்லை. நாங்கள் குடும்பமாத்தான் உக்காந்தோம்..
அப்பறம் இந்த பேக் விசயம் இருக்கே.. எங்க வீட்டுக்காரங்க காருல( அன்னிக்கு ஆட்டோ தான்வாகாக்கு) எல்லாம் விட்டுட்டு அப்படியே இறங்குவது தான் வழக்கம்.. கைய வீசிக்கிட்டு.. நான் ஒன்லி கேமரா அண்ட் வாட்டர் பாட்டில்.. அதனால் எனக்கு தெரியலயோ என்ன்வோ அல்லது இப்ப புது வழக்கமா இருக்கலாம்.. அப்ப பஸ் எல்லாம் விடல நிறுத்தி வச்சிருந்தாங்க.நீங்க பஸ் வரதெல்லாம் பாத்திருக்கீன்க சூப்பர்..

அந்த அடுத்த பக்கத்த சொல்லி கேவலப்படுத்தறது மட்டும் காலத்துக்கும் மாறலை பாருங்க.. :(

said...

Teacher,

Thanks for a live relay, discovery travel and living channel partha madhari yerundhadhu.

Neenga sollrathu correct, rendu desathu makkals kittayum ennum konjam understanding varanum, ennum kaniva nadanthukanum.

-Sri

PS: Porkovil ponal marakame periya kitchen (where they prepare free meal) parthutu vaanga.

said...

வாங்க சுமதி.

கூடவே வந்து கருத்தும் சொல்வதற்கு நன்றிப்பா.

said...

வாங்க நன்மனம்.

பெருக்கல் வாய்ப்பாடுன்னு சொல்ல மறந்துட்டேனே:-))))))

said...

வாங்க சரவணகுமரன்.


அடுத்த இடுகை பொற்கோவில்தான்.

said...

வாங்க கோபி.

சிறுமுயற்சியை அப்படியே மனப்பாடம் செஞ்சுக்கிட்டு அசால்ட்டாப் போயிட்டேன்ப்பா:-))))

said...

வாங்க கயலு.

நல்லா உருப்போட்டுக்கிட்டுப் போயிட்டேன்ப்பா. திடீர்னு விதிகள் வேறா இருந்துச்சு. ஒரே குழப்பம்.

எப்படியோ நானும் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்!

கட்டக் கடைசியில் வந்தவங்களை எதிரில் இருந்த காலரியில் ஆணும் பெண்ணும் தனித்தனின்னு இல்லாம அப்படியே விட்டுட்டாங்க.

அடுத்தமுறை(???) கடைசியில் போகணும்:-)))))

said...

வாங்க ஸ்ரீர்நிவாஸன்.

சின்னக்குழந்தைகள் எவ்வளோபேர் இருக்காங்க அந்தக் கூட்டத்தில். இப்படி எள்ளி நகையாடினா அந்த விஷம் அதுங்க மனசுலே பதிஞ்சுறாதா?

இப்போதிலிருந்தே கனிவு, அன்பு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வளர்க்கலாம் இல்லையா?

காலம் பூராவும் அண்டை நாட்டுடன் விரோதமாவே இருக்கணுமா?

said...

நல்ல பார்டர் நல்ல மக்கள் போங்க. கட்டுப்பாடுன்னு ஒண்ணு முன்ன பார்க்கும்போது (ஏதோ சினிமால)தெரிஞ்சது. இப்ப ம்மறிடுச்சோ. எங்க இருந்தாலும் தேசத்துக்கு உண்டான மரியாதையைக் காக்க வேண்டாமா. என்னவோப்பா. இதுக்காக வெய்யில்ல போயிட்டு வந்த உங்களைத்தான் பாராட்டணும்.

said...

வாங்க வல்லி.

எல்லாம் ஒரு ஊராத்தானேப்பா இருந்துச்சு. குறுக்கே ஒரு வேலி போட்டு நாட்டை பிரிச்சுட்டாங்களே:(

வெயிலைப் பார்த்தால் கிடைக்கும் ச்சான்ஸ் போயிறாதா?

அதான் உஸ் உஸ்ன்னுக்கிட்டே போயிட்டு வரேன்:-))))