Saturday, September 04, 2010

நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் நகரில் நிலநடுக்கம்.


நலம் நலம் நலம்



அன்பு நண்பர்களே,


அனைவரும் நலம். மகளிடம் இப்போதுதான் தொலைபேசினோம்.
அதிகாலை நாலரைக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.4 ரிக்டர் அளவு.

இப்போது அங்கே மதியம் ஒன்னரை மணி. ஏராளமாக ஆஃப்டர்ஷாக் வந்துகொண்டு இருக்கிறதாம்.

நகரின் மையத்தில் கட்டிடங்கள் இடிஞ்சு பாதிப்பு அதிகமாம். ஆனால் உயிரிழப்பு ஒன்றும் இல்லை. கடவுளுக்கு நன்றி.

விமானநிலயம் மூடப்பட்டுள்ளது.


காலையில் கணினி திறந்ததும் நம்ம கே ஆர் எஸ், குமரன், இலா, மற்ற அமெரிக்கத் தோழிகள் விசாரித்து மடல் அனுப்பி இருந்தார்கள். அப்போதுதான் விஷயமே எனக்குத் தெரிந்தது.



மகளும் இப்படி ஒரு மடல் அனுப்பி இருந்தாள் சம்பவம் நடந்த உடனே.

We had an earthquake this morning, 4.30am
Mag 7.4, 30km west and 10km down.
Lots of aftershocks, upto 5.2 mag
Central city damage.
House is ok. Power only just came back. Only a few things broken. Watching tv bulletin.
Civil defence think central city will be evacuated later today


அன்பான விசாரிப்புகளுக்கு நன்றி.



பின் குறிப்பு: இன்று மகளின் பிறந்தநாள்.

40 comments:

- யெஸ்.பாலபாரதி said...

தகவலுக்கு நன்னி.

எங்க சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளை பரிர்ந்துக்கொள்ளுங்கள். :))

ராமலக்ஷ்மி said...

நலம் அறிந்து நிம்மதி.

மகளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Anonymous said...

நியூஸில் பாத்தேன். பெரிய அளவு நடுக்கம். உயிரிழப்பு இல்லாததுக்கு கடவுளுக்கு நன்றி.
பொண்ணு ஆக்லந்துல இருக்கறதா சொன்னீங்கன்னு ஞாபகம். பிறந்த நாள் வாழ்த்துகள்

துளசி கோபால் said...

வாங்க பாலா, ராமலக்ஷ்மி & சின்ன அம்மிணி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

பொழுதுவிடிஞ்சு சேதி பார்த்ததும் 'ஆடி'ப்போயிட்டேன்:)

சின்ன அம்மிணி,

அவள் கிறைஸ்ட்சர்ச்சுக்கு நாங்க அங்கிருந்து கிளம்பு முன்னேயே வந்துட்டாள்ப்பா.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அன்பு அம்மா,



மகள் நலமதானே?.

எங்க பிறந்த நாள் வாழ்த்துகள்..


வருத்தமா இருக்கே .. தனியா சமாளிக்கிறாங்களே.. பரவாயில்லை..


சிறப்பாக எம் ஜெபத்தில் வேண்டிக்கிறோம் அம்மா...

கவலைப்படாதீர்கள்..

seethag said...

மகளுக்கு வாழ்த்துகள்.

.நல்லகாலம் உயிரிழப்பு இல்லை

நன்மனம் said...

டீச்சர், மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

கவனமாக இருக்க சொல்லுங்கள்.

துளசி கோபால் said...

வாங்க புன்னகைதேசம்.

உங்கள் பரிவு மன ஆறுதலைத் தருதுப்பா. நன்றி.

துளசி கோபால் said...

வாங்க திரு.

நலமா?

உயிர்ச்சேதம் ஒன்னுமில்லை. ஆனால் பலருக்குச் சின்னச்சின்ன அடி, காயங்கள் என்பதால் எல்லா மெடிகல் செண்டர்களையும் திறந்து வைக்கணுமுன்னு அரசு சொல்லி இருக்கு. (வழக்கமா இங்கே சனி & ஞாயிறு மூடிருவாங்க)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல ஊரை நோக்கி கொடுங்காற்று ஒன்னு வருதாம் மணிக்கு 130 கி,மீ. வேகத்தில்:(

வானிலை அறிக்கை வந்துருக்கு:(

வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க நன்மனம்.

வாழ்த்துகளுக்கு நன்றி. மகளுக்குச் சொல்லிட்டேன்.

கவனமா இருக்கணும்தான். மேலே திருவுக்கு சொன்ன பதிலைப் பாருங்க.

வடுவூர் குமார் said...

இன்று மகளின் பிறந்தநாள்.-----


வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

மகளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

நலமாக இருப்பது குறித்து சந்தோஷம்.

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள

ராம்ஜி_யாஹூ said...

தகவலுக்கு நன்றிகள்,happy to hear that all r fine. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

மகள் நலமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், மறக்க முடியாத பிறந்தநாளாகிவிட்டது. கவனமாய் இருக்கச் சொல்லுங்கள். ரொம்பவே கவலையாவும் வருத்தமாயும் இருக்கு, உங்க மடல் பார்த்ததும் தான் அவருக்கும் சொன்னேன் பத்திரமாய் இருக்காங்களாம் என்று. :((((((((

ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

Ganesan said...

அம்மா,
டிவியில் செய்தி பார்த்தவுடன், உங்களைதான் நினைத்தேன்.

நல்ல வேலை, நீங்களே பதிவு போட்டீர்கள்.

நிம்மதி.

சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, அனைவருடைய பிரார்த்தனைகளும் வீண்போகாது. உங்கள் வீடும் நாடும் நலமாக இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

மதுரை சரவணன் said...

happy birth day to ur daughter. thanks for sharing.

கிரி said...

செய்தியில் பார்த்ததும் உங்கள் நினைவு தான் வந்தது...

உங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

Thank Goodness!

Best wishes to your Daughter akkaa!

Unknown said...

உங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து டீச்சர். நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம் டீச்சர்.

நாகு (Nagu) said...

செய்தியைக் கேட்டதும் டீச்சர் நினைவுதான் வந்தது. அனைவரும் நலம் என்று கேட்டு மகிழ்ச்சி. மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

வாங்க வாங்க வாங்க.

குமார்

ஜோதிஜி

புதுகைத்தெறல்

கயலு

ராம்ஜி_யாஹூ

கீதா

காவேரி கணேஷ்

வல்லி

மதுரை சரவணன்

கிரி

குமரன்

சுமதி

நாகு

அன்பான விசாரிப்புகளுக்கும். மகளுக்குப் பிறந்தநாள் கூறியதுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Thekkikattan|தெகா said...

Thought of you when we heard the news, right away. Knowing that you are in India, but daughter is in Auckland we are kind of at ease. However, it is good to know that NOT so much of human loss.

Thanks for letting us know.

Porkodi (பொற்கொடி) said...

நீங்க எப்படியும் தகவல் சொல்வீங்க, ஏற்கனவே நிறைய பேரு கேட்பாங்க, நாமளும் கேட்க வேண்டாம்னு கம்முனு இருந்தேன், தகவலுக்கு மிக்க நன்றி.

sury siva said...

ந்யூ சீயில் நில நடுக்கம் என்று பி.பி.ஸி யில் செய்தி சொன்ன உடனேயே உங்களை கைப்பேசியில்
தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அன்ரீச்சபிள் என்றே செய்தி வருகிறது.

எல்லோரும் நலம் என்ற உங்கள் பதிவு நிம்மதியைத் தருகிறது.

ஒரு சில மணித்துளிகள் மட்டுமே நாம் சந்தித்திருந்தபோதிலும் எங்கள் வாழ்விலே அது
அந்த நாள் , நீங்கள் எங்கள் இல்லத்திற்கு திரு.கோபாலுடன் வந்திருந்த நாள், எங்களால்
மறக்க முடியாத பொன்னாள்.

உங்கள் பெண்ணுக்கு இன்று பிறந்த நாளா !!
எங்களது ஆசிகள்.

சுப்பு ரத்தினம்.
மீனாட்சி பாட்டி.

துளசி கோபால் said...

வாங்க பொற்கொடி.

அரசு உடனே நகரின் உடனடித் தேவைகளைக் கவனிக்க ஆரம்பிச்சு வேலைகள் ஜரூரா நடக்குதுப்பா.

இன்னும் ரெண்டு மூணு நாளில் சகஜ நிலைக்கு வந்துரும்.

ஐநூறுக்கும் அதிகமான கட்டிடங்கள் இடிஞ்சுருச்சு. அவைகளை மீண்டும் சரிப்படுத்தக் கொஞ்ச நாள் செல்லும்.

வங்கிகள், வீட்டுக்கடன்கள் கொடுத்த வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுருந்தால் உதவி செய்வதாகச் சொல்லி இருக்கு.

நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க மீனாட்சி அக்கா * சுப்பு ரத்தினம் ஐயா.

அந்த செல் எண் சென்னை ஏர்டெல். இங்கே சண்டிகர் வந்தபின் சென்னையிலிருந்து யார் கூப்பிட்டாலும் அல்லது நாங்கள் இங்கிருந்து அங்கே நண்பர்களிடம் பேசினாலும் ரெண்டு பக்கமும் சார்ஜ் செய்ஞ்சுடறாங்க ஏர்டெல்காரர்கள்.

அதனால் இங்கே உள்ளூரில் ஒரு வோடஃபோன் லைன் வாங்கிக்கிட்டேன்.

அதுலே என்னன்னா அல்லும் பகலும் ஒரே ஜங் கூவல்கள். தாங்க முடியலை. எப்பவும் ஸ்விட்ச் ஆஃப்லே கிடக்கு அது:(

எங்களை நினைவு வச்சுருப்பதுக்கு நன்றி. சென்னை திரும்பிவிட்ட்டீர்களா? உங்கள் வீட்டுக்கு வந்து உங்களைச் சந்திச்சது எனக்கும் மறக்கமுடியாத இனிய நாளே!

மகளுக்கு அனுப்பிய ஆசிகளுக்கு மிகவும் நன்றி.

கோபால் உங்கள் இருவருக்கும் அவரது அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்கச் சொன்னார்.

என்றும் அன்புடன்,.
துளசி.

துளசி கோபால் said...

வாங்க தெ கா.

நலமா? குழந்தை எப்படி இருக்காள்?


ஆக்லாந்து பிடிக்கலைன்னு மகள் கிறைஸ்ட்சர்ச்சுக்கே போன வருச ஆரம்பத்தில் வந்துட்டாள்.

சம்பவம் நடந்ததும் பவர் போயிருச்சு. மீண்டும் வந்தவுடன் முதல்வேலையா எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தாள். அந்தவரைக்கும் அப்படிச் செய்யணுமுன்னு தோணுச்சேன்னு எனக்கு மகிழ்ச்சி.

பரிவாக நினைச்சதுக்கு நன்றி தெ கா.

சாந்தி மாரியப்பன் said...

மறக்கமுடியாத பிறந்தநாளாகி விட்டது உங்கள் மகளுக்கு..

என்னுடைய வாழ்த்துக்களும்..

எம்.எம்.அப்துல்லா said...

நலமோடு இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
பிறந்தநாள் வாழ்த்துகள்.

Santhiya said...

We are glad to know that all are fine. Belated Birthday Wishes to your daughter!

shansnrmp said...

அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம்.
தங்களின் '' இபோதுதான் மகளிடம் ....'' கடிதம் கண்டு நிம்மதி அடைந்தோம் . மகளுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

துளசி கோபால் said...

வாங்க அமைதிச்சாரல்.

அவள் ப்ளோக் எழுத வந்தால் கொசுவத்திக்குப் பஞ்சமே இருக்காது:-))))

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க அப்துல்லா.

உங்களைப்போன்று பரிவோடு நினைக்கும் நண்பர்கள் இங்கே இருப்பதால்தான் உடனே நலம் என்று பத்துவரி எழுதிப்போட்டேன்.

மகளுக்கு உங்கள் வாழ்த்துகளையெல்லாம் அனுப்பிக் கொண்டிருக்கிறென் ரெண்டு நாட்களா.

ரொம்ப நன்றி.

துளசி கோபால் said...

வாங்க சந்தியா.

நன்றிப்பா.

பாவம் இந்த கலாட்டாவில் அவளுக்குத் தன் பொறந்தநாளே மறந்து போச்சாம்!

துளசி கோபால் said...

வாங்க ஷண்முகம்.

வணக்கம்.

நினைவு கூர்ந்ததுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

(அம்ரித்ஸர் தொடர் பார்த்தீங்களா? )

மாதேவி said...

காத்த இறைவனுக்கு நன்றி.

மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

வாங்க மாதேவி.

வருகைக்கும் வாழ்த்து(க்)களுக்கும் நன்றிப்பா.