Thursday, September 23, 2010

ராவணனின் மாமனார் ( போன பகுதியின் தொடர்ச்சி)

நாம் போகும் வழியில் Zirakpur ட்ஸிரக்பூர் என்ற ஊர் இருக்கு. சண்டிகர் எல்லையைக் கடந்து ஒரு அஞ்சு கிலோமீட்டரில் இருக்கும் இந்த ஊரில்தான் ஷாப்பிங் செய்யன்னு அடிக்கடி வந்து போவோம். பெரிய வளாகத்தில் பலதரக்கடைகளும், முக்கியமாக 'Bபிக் பஸாரும்' இருக்கு. அரிசி பருப்பு வாங்க இங்கே வரும்போது சகிக்க முடியாத ஒரு கஷ்டம் என்னன்னா...... பப்ளிக் அட்ரெஸிங் சிஸ்டமுன்னு தொணதொணன்னு ஸேல் அயிட்டங்களைக் கூவிக்கிட்டே இருப்பாங்க. ஒரு தடவை ரெண்டு தடவைன்னு பத்து நிமிச இடைவெளியில் சொல்லக்கூடாதா? வாடிக்கையாளர்கள் காது அறுந்து கீழே விழணுமுன்னு எஜமான்கள் முடிவு எடுத்துட்டா...... மைக்லே சொல்லும் ஆட்கள், கட்டளையை மீற முடியுமா? காதுக்குள்ளே வச்சு அடைச்சுக்கும் இயர் ப்ளக் எடுத்துக் கைப்பையில் வச்சுக்கிட்டுத்தான் கடைக்கே கிளம்பணும்.

என்ன ஒரு ஆறுதலுன்னா..... உப்புப்புளி மிளகாய் வாங்கும் கையோடு தங்க வைர நகைகளையும் பிக்பஸாரில் வாங்கிக்கலாம். குஜராத் ஜாம்நகரில் அம்பானி சாம்ராஜ்யத்தில்தான் இப்படி ஒன்னு பார்த்தேன். அப்போ....அம்பானியால் இதெல்லாம் முடியுமுன்னு ஆச்சரியப்படாமல் நகர்ந்து போனதென்னமோ நிஜம்.. இப்போ.... பிக் பஸாரில்.......மக்களுக்கு 'வாங்கும்' திறன் கூடி இருக்குன்றதுக்கு இதைவிட வேற ஆதாரம் தேவையா?

ஊருக்குள் நுழையாமல் டெல்லி போகும் வழியில் இருக்கும் மேம்பாலத்தில் சுற்றுமுற்றும் இருக்கும் காட்சிகளைப் பார்த்துக்கிட்டே பிள்ளையார் 'விர்'ன்னு வேகம் எடுத்தார். நேஷனல் ஹைவே 21. தமிழர் குடியிருப்பில் இருந்து கிளம்புன நாப்பதாவது நிமிசம் நாங்களும் 22 கிலோமீட்டர் வந்துட்ருக்கோம். Gagar ககர் நதியின் குறுக்கே போகும் மேம்பாலத்தைக் கடந்து இடதுபக்கம் ஜகாவாங்கி பாலத்துக்கடியில் போய்ச் சேர்ந்தோம். ஒரு சின்னக் கூட்டம் அங்கே புள்ளையாரை நதியில் முக்கி எடுப்பதுபோல 'பாவனை' காமிச்சுக்கிட்டு இருக்காங்க.
மூணுமுறை இதோ இதோன்னு பாவ்லா காமிச்சுட்டு அவரைக் கொண்டுபோய் வண்டியில் வச்சுட்டு, சின்னதா ஒரு புள்ளையாரை பழம் வெத்தலைபாக்கு, அகல்விளக்கோடு ஒரு தட்டில் வச்சு கேமெராவுக்குப் போஸ் கொடுத்துட்டு தட்டோடு தண்ணீரில் மூழ்கடிச்சாங்க. ஏற்கெனவே மூணுநாலு இளைஞர்கள் நடு ஆத்தில் தண்ணீரில் நின்னுக்கிட்டு பிள்ளையார் கரைப்பவர்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இன்னிக்குக் கொஞ்சம் காசு பார்த்துடனும்தானே?
அப்போதான் கவனிச்சேன் இன்னொரு கூட்டம் கொண்டுவந்து வச்சுருந்த சிலையை. அட! யானை இருக்கேன்னு பார்த்தால் அழகான அம்சமான முகம் உள்ள சாமி யானை வாகனத்தில் சாய்ஞ்சு நிக்கறார். யார்ரா இதுன்னு யோசிக்கும்போதே இவரைப்போல இன்னும் ரெண்டு மூணுபேர் வந்து இறங்கிட்டாங்க. கையில் தராசு, ஏதோ கருவிபோல ஒன்னு இப்படி விதவிதமா இருக்கு.
ஜிலுஜிலுன்னு கோட்டுப்போட்ட பேண்ட் வாத்திய கோஷ்டி ஒன்னு அப்பப்ப வாசிச்சுக்கிட்டு இருக்காங்க. நம்ம புள்ளையாரை வண்டியில் இருந்து இறக்கி ஆத்தங்கரையில் ஒரு பக்கம் வச்சோம். மத்த சாமிகள் எல்லாம் கொட்டுமுழக்கோடு போகும்போது நம்ம சாமி? இன்ஸ்டண்ட்டா பேண்ட் வாத்திய கோஷ்டியை வாடகைக்குப் பிடிச்சோம். ஹிந்திப் பாட்டு முழங்க, நம்மாட்கள் ரெண்டு குத்தாட்டம் போட புள்ளையாருக்கு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
கரடுமுரடாய் கல்லும் மண்ணும் நிறைஞ்ச ஆற்றின் கரையில் நம்ம புள்ளையாரைத் தூக்கிக்கிட்டு நம்ம சனம் கஷ்டப்பட்டு மெள்ள மெள்ள நீருக்கு அருகில் கொண்டு போனாங்க. பயங்கர கனம் நம்மாளு. வெறுங்களிமண்ணும் வைக்கோலுமா வச்சு. மரச்சட்டத்தில் நிக்க வச்சுச் செஞ்ச அஞ்சடி உருவம்.
கடைசிநாளில் எல்லோரையும் சேர்த்தே ஆற்றுக்குக் கொண்டு போகலாமுன்னு நம்ம புள்ளையாருக்குத் துணையா வீடுகளில் வச்சு வணங்கிய சின்ன சைஸ் பிள்ளையார்கள் கோவிலில் ஒரு ஒம்போது வந்து சேர்ந்திருச்சு. அவுங்களையும் ஆளுக்கொன்னாப் பிடிச்சுத் தூக்கிக்கிட்டுப் போனோம்.
குருக்களைக் கூடவே கொண்டுபோயிட்டதால் செய்யவேண்டிய சாஸ்திரங்களைச் செய்து தீபாராதனை காமிச்சு எல்லோரும் வணங்கி விடை கொடுத்தோம். 'மூஷிக வாகன மோதக ஹஸ்த...' பாடினேன்(மெள்ள எனக்கு மட்டும் கேக்கும்படி) இத்தனைநாள் தினமும் பார்த்தவரைப் பிரியணுமேன்னு சின்னதா ஒரு சங்கடம். நதிநீர் பாய்ஸ்கிட்டே சொல்லி நல்ல ஆழத்துலே கரைக்க ஏற்பாடு செஞ்சுட்டு ஆண்கள் எல்லோருமா சேர்ந்து புள்ளையாரைத் தூக்கிக்கிட்டுத் தண்ணீரில் இறங்குனாங்க.
தண்ணீர் வேகம் நிறைய இருந்துச்சு. அதான் ஒரு மாசமா மழை விடாமப் பேய்ஞ்சுக்கிட்டு இருக்கே! தண்ணீரில் விட்ட புள்ளையாரைப் பசங்க ஆழமான பகுதிக்கு அப்படியே தள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க.
தண்ணியில் விடப்போறோம்

கோஷங்கள் முழக்கம் கேக்குதேன்னு தலை உயர்த்திப் பாலத்தைப் பார்த்தா..... ஏராளமான வண்டிகளில் மக்கள்ஸ் சிலைகளோடு வந்துகிட்டு இருக்காங்க. தலையில் உடம்பில் முட்டாய்க்கலர் குங்குமமும், பிச்சுப்போட்ட பூவிதழ்களுமாக!
இத்தனை கலாட்டாவில் சின்னதா ஒரு பந்தல் போட்டுக்கிட்டு முட்டைகளை அவிச்சுச் சுடச்சுட விற்பனை நடக்குது! ஒரு ஒம்போதுநாள் இருந்த வெஜ் விரதத்தை முடிச்சுவைக்க நான் வெஜ் ஐட்டம்?
யானைச்சாமி என்ன ஏதுன்னு விசாரிக்கணுமே? இவர் விஸ்வகர்மாவாம். யூ மீன் தேவ தச்சன். தேவ்லோக்கா கார்பெண்டர்?''

'கார்பெண்டர் நை. யே தேவ்லோக் கே சோனார்!' இவர் நகையை தராசுலே வச்சு எடை பார்க்கிறார். இன்னொரு விஸ்வகர்மாவுக்குக் கையிலே ஒரு உளி மாதிரி ஒன்னு. இப்பப் புரிஞ்சு போச்சு. அவரவர் தொழில் அனுசரிச்சு அவர் கையிலே ஆயுதம், கருவிகளைக் கொடுத்துருக்காங்க.

அப்போதான் சொல்றார் கோபால்...... முந்தாநாள் எங்க ஃபேக்டரியில் கூட ஏதோ பூஜைன்னு வேலை நடக்கலை. அப்படியா? விசாரிச்சுருவோம்....

ஈரேழு உலகின் கட்டிடக்கலையின் தலைமை ஆர்க்கிடெக்ட் இந்த விஸ்வகர்மா என்னும் மயன். தேவதச்சன்ன்னு இங்கே நம்ம பக்கங்களில் சொல்றோம். இவர்தான் ராவணனின் மாமனார். மண்டோதரியின் தந்தை. பொண்ணுக்கு சீர் வரிசையாத்தான் ராவணனுடைய மாளிகைகளைக் கட்டிக் கொடுத்துருக்கார். அந்த மாளிகைகளின் அழகை சுந்தரகாண்டத்தில் வர்ணிச்சிருப்பாரு பாருங்க வால்மீகி......அடடான்னு இருக்கும்.

சுவர்க்க லோகத்தை, சத்திய யுகத்திலும் நிர்மாணிச்சவர் இவர். த்ரேதாயுகத்தில் இலங்கையில் மாளிகைகளை கட்டுனார். அதுக்குப் பின்னே த்வாபர யுகத்தில் த்வாரகையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுக்கு அரண்மனைகளைக் கட்டித்தந்தார். மகா பாரதத்தில் வரும் ஹஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம் நகரங்களை நிர்மாணிச்சவரும் இவரே. இவை எல்லாம் இவருடைய மாஸ்டர் பீஸ்களில் சில! பூரியில் இருக்கும் ஜகந்நாத் கோவிலையும் இவர்தான் கட்டித் தந்தாராம்!

இவரை விசேஷமா இங்கே இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், திரிபுரா, மாநிலங்களிலும் ஹரியானா உத்தர்கண்ட் மாநிலங்களிலும் கொண்டாடுறாங்க. தச்சுவேலை, இரும்பு வேலை, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பல்வேறு ஊழியர்கள், கைவினைப்பொருட்கள் செய்யும் கலைஞர்கள், தங்கம் வெள்ளி வேலை செய்யும் சமூகத்தினர் இப்படி தொழிற்கருவிகளை வச்சு வேலை செய்பவர்கள் அனைவரும் வழிபட்டு வர்றாங்க.
இவருக்கு வாகனம் நம்ம யானை! ஒரு கோவிலில் (பாபா ரத்னசாமி கோவில்) இவரோட சந்நிதி ஒன்னு பார்த்தேன். அப்போ இவர் யாருன்னே எனக்குத் தெரியாது, வயசான வெண்தாடிச் சாமி ஒரு அன்னப்பக்ஷியுடன் இருந்தார். பீஷ்மரோன்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா யானை வாகனமும் இளவயதுத் தோற்றமாவும் இருக்கார்.
எல்லாத்தையும் ஜஸ்டிஃபை பண்ணிருவேனே. அதன்படி இளவயதில் முறுக்கா இருந்தப்ப யானை வாகனம். தாவி ஏறி கட்டடங்களைக் கட்டித் தூள் பரத்தி இருப்பார். வயசானதும் ரிட்டயர் ஆகி உக்காரும்போது நிதானமா நடக்கும் அன்னப்பறவையை வாகனமாக்கிக்கிட்டார். தியரி சரி வருதுங்களா?
விருந்தும் மருந்தும் சாமியும் பக்தியும் மூணுநாள் என்ற கணக்கின்படி அவரையும் கரைக்க ஆத்துக்குக் கொண்டுவந்துட்டாங்க. இன்னிக்கு ஞாயித்துக்கிழமையா வேற ஆகிருச்சு பாருங்க. அதான் கூடுதல் கூட்டம்.
கதையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு பாக்கி இருந்த பாதி பக்கெட் சுண்டலை எல்லோருக்கும் கொடுத்து, நாங்களும் தின்னுட்டு பொழைச்சுக்கிடந்தா அடுத்த வருசம் வந்து பார்க்கலாமுன்னு சொல்லிட்டு வீடுவந்து சேர்ந்தோம்.முதல் முறையா கணபதி கரைக்கப்போன அனுபவம்....... நல்லாவே இருந்துச்சு.

அனைவருக்கும் 'வி'நாயகனின் அருள் கிடைக்க வேண்டுகின்றேன். வணக்கம்.====================================

24 comments:

said...

ஹை நானும் மொதோ தபா பிள்ளையாரை வழியனுப்ப போயிருந்தேன். பதிவும் போட்டாச்சு. ராவணனின் மாமனார் குறிப்பு எடுத்துகிட்டேன். எனக்கென்னவோ இது தான் அரைப்பரிட்ச்சைக்கு முக்கியமான பாடமா தோணுது!!

said...

//அப்போதான் கவனிச்சேன் இன்னொரு கூட்டம் கொண்டுவந்து வச்சுருந்த சிலையை. அட! யானை இருக்கேன்னு பார்த்தால் அழகான அம்சமான முகம் உள்ள சாமி யானை வாகனத்தில் சாய்ஞ்சு நிக்கறார். யார்ரா இதுன்னு யோசிக்கும்போதே இவரைப்போல இன்னும் ரெண்டு மூணுபேர் வந்து இறங்கிட்டாங்க. கையில் தராசு, ஏதோ கருவிபோல ஒன்னு இப்படி விதவிதமா இருக்கு.//

அது என்ன சிலை அம்மா?விநாயகர் மாதிரியே இல்லையே?

said...

சென்னையில் பிள்ளையார் கூட்டத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. நீங்க விசர்ஜன் வரை போய் வந்திருக்கிறீர்கள். எதையும் முழுமையாக முடிக்க பிள்ளையார் எப்பவும் உங்கள் பக்கம் இருப்பார். விஸ்வகர்மாவுக்கும் கோவில் எடுத்துக் கொண்டாடும் அருமை.தொழிலைப் பூஜிப்பவர்களுக்குத்தான் வரும். அப்புறம் முதலில் த்ரேதா யுகம்,ராவணன்,லங்கா மாளிகை.
அப்புறம்தான் இந்திரப் பிரஸ்தம் துவாபரயுகம்னு நினைக்கிறேன்.

said...

சூப்பர்ர் பதிவு அக்கா!!..படங்கள் அருமை...

said...

பாண்ட் வாத்திய கோஷ்டியுடன் ஆடுபவர்கள் சூப்பர்.

இறுதியில் இரண்டுபெண்கள் சிலைகள் அழகாகஇருக்கின்றன.

said...

வணக்கம்...வணக்கம் ;)

ரெண்டு பதிவும் படிச்சிட்டேன். படங்களும் விளக்கமும் சூப்பர் ;)

said...

சிலைகள் அனைத்தும் நன்றாக உள்ளது டீச்சர். நீங்கள் சொன்ன விஸ்வகர்மாவின் யானை, அன்னம் கதையும் நன்றாக உள்ளது டீச்சர்:))))

said...

//த்ரேதாயுகத்தில் இலங்கையில் மாளிகைகளை கட்டுனார். அதுக்கு முன்னே த்வாபர யுகத்தில் த்வாரகையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுக்கு அரண்மனைகளைக் கட்டித்தந்தார்.//

இந்த sequence சரியா?
த்ரேதாக்கு அப்புறம் தான் த்வாபர அதாவது ராமனுக்கு பின் தானே கிருஷ்ணன்

ராவணனின் மாமனார் விஸ்வகர்மா என்ற மயன் என்பது எனக்குப் புது செய்தி. ம்ம்... இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது நிறையத் தான் இருக்கு.

said...

போன இடத்துலயும் ஒரு கதை கிடைச்சிருக்கு பாருங்க..
எல்லாம் எங்க யோகம்.....

ஆமா அந்த பெண்கள் யாரோ..

said...

அன்புள்ள ஆசிரியருக்கு//முதல் முறையா கணபதி கரைக்கப்போன அனுபவம்....... நல்லாவே இருந்துச்சு.

அனைவருக்கும் 'வி'நாயகனின் அருள் கிடைக்க வேண்டுகின்றேன்.//

நன்றி ..படங்கள் அருமை
அன்புடன் சிவஷன்முகம்

said...

வாங்க புதுகைத் தென்றல்.

உங்க புள்ளையார் பதிவும் சூப்பர். ஏழுநாளும் விருந்தா.....வயிறு நிறைஞ்சே போச்சு!

said...

வாங்க ஜிஜி.

பதிவு முழுசும் வாசிக்கலையா? நம்ம வகுப்பில் புதுமாணவி வேற நீங்க.கவனம் சிதறத்தான் செய்யும். மத்த பசங்க வாலுங்க:-)))))

அவர்தான் விஸ்வகர்மா.

said...

வாங்க வல்லி.

பின்னேயை முன்னேன்னு தவறா அடிச்சு இப்படி முன்னும் பின்னுமா ஆகிப் பின்னூட்டம் வாங்கிட்டேன்:-)

டீச்சருக்கே வகுப்பில் கவனம் இல்லை பாருங்க!!!!!

கவனிச்சதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க மேனகா.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

அன்னிக்கு அங்கே ஒரே ஆட்டம்தான். சிலர் வண்டிகளில் ப்ரமாண்டமான பெரிய ஸ்பீக்கர்களை வச்சு பாட்டு முழங்க நாய்ஸ் பொல்யூஷன் பண்ணிக்கிட்டே வந்தாங்க. சாமி சைஸ் ஸ்பீக்கர் சைஸில் பத்தில் ஒன்னு.

ரெண்டு பெண்கள் மயனின் மனைவிகள்.

said...

வாங்க கோபி.

ஆஹா..... புள்ளையாரின் அருள் பரிபூரணமா கிடைச்சுருக்கு உங்களுக்கு. வர்ற வருசம் முதல் ........ ஜோடியா சாமி கும்பிட வாழ்த்துகின்றேன்.

said...

வாங்க சுமதி.

இப்படி ஒரு விழா இருக்குன்னே அன்னிக்குத்தான் தெரிஞ்சது எனக்கு.

said...

வாங்க விருட்சம்.

ஆமாம். ராமகிருஷ்ணன்தான் சரி.

கற்றது வெறும் கைம்மண் அளவுன்னு அந்தக் காலத்துலே சொல்லி வச்சதுதான் இப்பவும்.

வாழ்க்கை முழுசும் கல்விதான். சமயம் வாய்க்கும்போதெல்லாம் தெரிஞ்சுக்கணும்.

said...

வாங்க கயலு.

கண்ணையும் காதையும் திரந்து வச்சால் கதைக்கா பஞ்சம்?

விடிய விடிய ராமாயணம் கேட்டு......

அதான் சவுத்தின்னுட்டாரேப்பா.

விஸ்வாவின் மனைவிகள்.

said...

வாங்க சிவஷன்முகம்.

தொடர்ந்து வருவதற்கு என் நன்றிகள்.

said...

எங்கூர்லயும் விசர்ஜன் அமர்க்களமா, நடந்து முடிஞ்சிடுச்சு.. நியூஸி போனப்புறம் இந்த நினைவுகள் இந்தியாவின் மீதான ஹோம்சிக்கை கொண்டுவருமோ என்னவோ :-))))

said...

இது உங்கள் பார்வைக்கு மட்டுமே.. பிரசுரிப்பது உங்கள் விருப்பம் :-)

விசர்ஜன்போது டான்ஸ் ஆடுற கலாச்சாரத்தை கிண்டல் செஞ்சு செமவாலு பள்ளிப்பிள்ளைகள், ஒரு கடிஜோக் சொல்லும். கேக்கும்போது, என்னடாயிதுன்னு தோணினாலும், இந்தக்காலத்துப்பிள்ளைகளின் கற்பனைத்திறனை வியக்காமல் இருக்க முடிவதில்லை.ஜோக்குன்னு வந்துட்டா இதுங்க வாயில் விழாதவங்களே இருக்கமுடியாது..

'ஒரு நாள் ஏழெட்டுப்பேர் படகுல சவாரி செஞ்சுக்கிட்டு இருந்தாங்களாம். அப்போ பார்த்து திடீர்ன்னு நதியில வெள்ளம் வந்து, படகு கவுந்திடுச்சு.. எல்லோரும் வெள்ளத்துல விழுந்து, தத்தளிச்சாங்க. அவரவரும், அவரவர் கடவுள்களை கூப்பிட்டு கதறினாங்க. மத்த கடவுள்களெல்லாம் வந்து அவரவரை காப்பாத்தினாங்க. புள்ளையார் மட்டும் நடனம் ஆடிக்கிட்டேயிருந்தார். முழுகிக்கிட்டிருந்தவங்களில் ஒருத்தர் கேட்டார்,"புள்ளையாரப்பா,.. இப்படி எங்களை தண்ணியில முழுக விட்டுட்டு டான்ஸ் ஆடுறியே.. நல்லாவா இருக்கு?"

புள்ளையார் பதில் சொன்னார்,"வருஷா வருஷம் என்னை தண்ணியில மூழ்கவிட்டுட்டு நீங்க டான்ஸ் ஆடுறீங்களே.. நான் ஏதாவது உங்ககிட்ட குறைப்பட்டேனா?".

said...

Madam, it is very nice to see your views today.I have received your Blog Address from the Tamil Magazine "LADIES SPECIAL'.......pADMA sURY

said...

வாங்க பத்மாசூரி.

புது வாசகர் கிடைச்சதுக்கு லேடீஸ் ஸ்பெஷலுக்கு நன்றி சொல்லணும்.

உங்கள் வருகைக்கு நன்றி.

தொடர்ந்து வருவீர்கள் என நம்புகின்றேன்.