ஊருக்கு மேற்கே பனிரெண்டு கிலோமீட்டர் பயணிச்சால் BSF கட்டிடம் வருது.. இந்தப் பக்கமெல்லாம் பாகிஸ்தானை நோக்கிப்போகும் சாலைகளில் எல்லைப் பாதுகாப்புக்குன்னு அங்கங்கே பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ்க்கு கட்டிடங்கள் கட்டி ஆர்மி ஆட்கள் காவலுக்கு இருக்காங்க. நம் தென்னிந்தியாவில் வேற நாட்டு எல்லைகள் ஒன்னும் இல்லாதபடியால் இதன் தீவிரம் நமக்குப் புரிவதில்லை. அதிசயமாக் கண்கள் விரிய பார்த்துக்கிட்டே போனேன். இந்தக் கட்டிடம் தாண்டி வலதுபக்கம் ஒரு கிலோமீட்டர் போனா, நேரா அந்த சாலை போய் ஒரு குளக்கரையில் முடியுது! இதுதான் ராம் தீரத். Ram Tirath. வால்மீகி முனிவரின் ஆஸ்ரமம் இருந்த இட(மா)ம். பெரிய செவ்வக வடிவமான குளம். எதிர்க்கரையில் ஒரு பெரிய கட்டிடம். அதன் தலையில் ஒரு ஆஞ்சநேயர் குளத்தைப் பார்த்தபடி நிற்கிறார். தண்ணி இல்லாத குளம்தான் அது இப்போதைக்கு. இதுலேதான் வருசத்துக்கு ஒருமுறை பெரிய திருவிழா நடக்குதாம். தீபாவளி அமாவாசை முடிஞ்சு வரும் பவுர்ணமி சமயம். அஞ்சு நாள் திருவிழாவாம். ஊரே ஜே ஜேன்னு இருக்குமாம். இங்கே வரும் 12 கிலோ மீட்டர் சாலையைச் செப்பனிடும் வேலை நடப்பதை வரும்போது பார்த்தோம்.
ராம்தீரத் ஹனுமன் . எதிர்க்கரைக் கோவில்
இந்தப்பக்கம் குளக்கரையில் ஒரு சின்னக் கோவில். சீதை பிரவிச்ச இடம்? இருக்கலாம். உள்ளே ஸ்ரீ ராம்ன்னு ஹிந்தியில் எழுதி, அதன் கீழே கழுத்துலே பாம்போடு இருக்கும் சிவன் உருவம் உள்ள டைல்ஸ் பதிச்சு, பீடத்தில் மூணு சிலைகள். ராம் லக்ஷ்மணன் சீதா இல்லைன்னா ராம், குசன், லவன்.. எது விருப்பமோ அப்படி நினைச்சுக்கலாம்.
அதுக்குக் கொஞ்சம் தள்ளி இன்னொரு கோவில் ரெண்டு சந்நிதிகளுடன். ஒன்னு ராதாகிருஷ்ணன், இன்னொன்னு பூரி ஜெகந்நாத். க்ருஷ்ணன், பலராமன், சுபத்ரான்னு மர உருவங்கள்
சாலையின் கடைசியில் வலது பக்கம் லவகுசா மந்திர் மாதா லால்தேவிஜி ராம்தீர்த். பார்க்க ரொம்ப சாதாரணமா கடைவீதியில் இருக்கும் கடைகளுக்கிடையில் இருக்கு. உள்ளே போய்த்தான் பார்க்கலாமேன்னு நுழைஞ்சோம். வலப்பக்கச் சுவரில் சட்டம் போட்டு மாட்டுன படம் மாதிரி பெருசா ஒரு ம்யூரல்.
இந்தப்பக்கங்களில் இருக்கும் எல்லா வட இந்தியக் கோவில்கள்போலவே கலந்துகட்டி எல்லா சாமிகளும். ஒரு பக்கம் கண்ணாடி போட்டுருக்கும் ஒரு சாமியார் பெண்மணியின் உருவச்சிலை. ஹரே கிருஷ்ணா கோவில்களில் ஸ்ரீபிரபுபாதாவின் உருவச்சிலை இருக்குது பாருங்க அதேமாதிரின்னு நினைச்சுக்குங்க. மாதா லால் தேவி ஜி. இவுங்களுக்குன்னு ஒரு அறைவேற அலங்கரிச்சு வச்சுருக்காங்க.
இந்த மாதாவைபற்றி முதல்முறையாக் கேள்விப்படறேன். விசாரிச்சதுலே.... இவுங்க பெரிய மகான். உணவு சாப்பிட்டறதையே விட்டுட்டாங்களாம்! மெய்யாவா? பின்னே எப்படி ஜீவிச்சுருந்தாங்க? சமைச்ச உணவை விட்டுட்டாங்களாம். பால் பழங்கள் மட்டுமே உணவாம். மொத்தம் ஏழு கோவில்கள் கட்டி இருக்க்காங்களாம். அவுங்க காலத்துக்குப்பிறகு மாதா லால் தேவிஜி ட்ரஸ்ட் எல்லாத்தையும் கவனிச்சுக்குது.
மாடிக்குப்போகும் வழியில் ஏறும்போது கஜேந்திர மோட்சம் காட்சியை தோட்டத்தில் கவனிச்சேன். பெரிய யானை! கண்ணுலே படாம இருக்குமா? அதன் கால் முதலையின் வாய்க்குள்ளே! கருடன் மேலேறி மகாவிஷ்ணு பறந்து வர்றார்!
மாடிக்குபோனா அங்கே இன்னொரு அதிசயம். எம்பதடி ஆஞ்சநேயர் வானத்துக்கும் பூமிக்குமா நின்னு குளத்தையும் எதிர்க்கோவிலின்மேல் இருக்கும் 'தன்னையும்' (முறைச்சு) பார்த்துக்கிட்டு இருக்கார்! அகட்டிவச்ச ரெண்டு கால்களுக்கும் முன்னால் சின்னதா ஒரு சந்நிதியில் கஜஹனுமன்!
சூரியன் மறையும் நேரம். மேற்கில் தூரத்தில் இருக்கும் வேறெதோ ஒரு கோவிலும் அதன் பின் ஜொலிக்கும் சூரியனுமா சூப்பரா ஒரு தரிசனம் போனஸ்! ஆஞ்சநேயருக்கு வணக்கம் சொல்லி வரும்போது இன்னொரு சின்ன வாசலில் 'வைஷ்ணவோதேவிக்குப் போகும் வழி'! இப்படியே கண்டுக்கிடலாமான்னு போனால்....
சின்னப்பிள்ளையாரைச் சுமந்து ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பெருச்சாளி வாயைத்திறந்து வான்னதும் உள்ளே நுழைஞ்சுட்டோம்:-)
நாலடி வச்சதும் நல்லாவே குனிஞ்சு போகும்படியா ஒரு குகைவாசல். உடலை ரெண்டா மடிச்சுக்கணும். மெல்லிய ஸீரோ வாட் வெளிச்சத்தில் வளைஞ்சு வளைஞ்சு போகும் குகையினூடே போகும்போது அங்கங்கே உள்வாங்கி இருக்கும் சின்னக்குகைகளில் ராதாகிருஷ்ணர், பத்ரகாளி, கோவர்தனக்குன்றைக் குடையாய் பிடிக்கும் கிருஷ்ணன், ராம லக்ஷ்மணர்களுக்கு நடுவில் சீதா இப்படி பார்த்துகிட்டே போக இன்னொரு சின்ன வாசல். உடலை மூணா மடிக்கணும்! உள்ளே சின்ன மேடையில் வைஷ்ணவோ தேவியின் சிரம் இருக்க சுவரில் லால்தேவிஜியின் படம் மாலையோடு. (பண்டிட் ) இளைஞர் ஒருத்தர் உக்கார்ந்து பக்தர்களுக்கு தரிசனம் செஞ்சு வைக்கிறார். இவர்தான் மாதா சாப்பிடறதில்லைன்னு விவரம் கொடுத்தவர்.
குன்றைக் குடையாய்
வைஷ்ணவோதேவி
பக்கவாட்டில் இருக்கும் வழியா வெளியேறினால் நாலைஞ்சு படிகள். அதிலேறி இருட்டான கண்ணாடி அறையை அடைஞ்சோம். சுற்றிவர கண்ணாடிகள் பதிச்சுக் கலர்ஃபுல்லா இருக்கும் அறையின் நடுவில் ஒரு பெரிய கண்ணாடிக்கூண்டில் நிக்குது மரத்தோடு கட்டப்பட்ட ஒரு குதிரை. இந்தப்பக்கம் அனுமனையும் கட்டிப்போட்டுருக்கு அதே மரத்தில் பக்கத்திலே லவனும் குசனும்.
இங்கே மட்டும் விளக்கு இருந்தால் எப்படி ஜொலிச்சு இருக்குமுன்னு லைட் ஸ்விட்ச்சைத் தேடிப்பார்த்தும் கிடைக்கலை. மேலே மின்விசிறிகள் இருக்கு. அப்ப லைட் இருந்துதானே ஆகணும், எடு செல்ஃபோனை. அங்கங்கே ஆபரேஷனே இந்த வெளிச்சத்தில் பண்ணும்போது ஒரு ஸ்விட்ச் இருப்பது தெரியாதா என்ன? கண்ணாடிப் பிரதிபலிப்புகள் கண்ணுலே அடிக்குதே தவிர ஸ்விட்சைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை:(
இந்த வெளிச்சம் வெறும் ( இதய ) ஆபரேஷனுக்கு மட்டும்தான் போல:-))))
அடுத்த படிக்கட்டு நம்மைக் கீழே தளத்தில் கொண்டு விடுது. அங்கே சங்குசக்கரத்தைக் கைமாற்றிப் பிடிச்ச விஷ்ணு. சிற்பி தெரியாமச் செஞ்சுருக்கணும். ஆனா இதுக்கு ஒரு கதையைக் கண்டுபிடிச்சுட்டா தேவலை. இருங்க யோசிக்கலாம்!
ரெட்டைப்பிள்ளைகளைத் தொட்டிலில் போட்டு ஆட்டும் சீதை. பிள்ளைகள் நல்ல உறக்கத்தில். பிள்ளைகள் பிறந்த இடத்தைக் கன்ஃபர்ம் செஞ்சுட்டாங்க,இல்லை?
பூமி பிளக்கச் சீதை அதனுள்ளே இறங்குதல்
எக்கச்சக்க சந்நிதிகள், எல்லாவற்றிலும் காணிக்கைப்பெட்டி. தீம் பார்க்கு போல அலங்காரம். குழந்தைகள் விரும்பிவரச் செய்யவாக இருக்கலாம். ஆரஞ்சு உடுத்திய ராம லக்ஷ்மணர், சீதை & அனுமன், பிள்ளையார், கிருஷ்ணர், சிவன், சிம்மவாஹினின்னு ஏராளமா இருக்காங்க. இங்கே தீம் கலர் ஆரஞ்சு!
நல்லாவே இருட்ட ஆரம்பிச்சது. போனவழியே திரும்பி நாம் தங்கி இருக்கும் ஹொட்டேல் பகுதியில் இருந்த கடைத்தொகுதிகளில் நுழைஞ்சு, தென்னிந்தய தோசையை விற்கும் கடையில் பார்ஸல் வாங்கிக்கிட்டு, கொஞ்சமா ஒரு ஷாப்பிங் செஞ்சுக்கிட்டு (நம்மூட்டு சாமிகளுக்குத் திருமஞ்சனம் பண்ண ஒரு பாத் டப்) அறைக்குத் திரும்பினோம்.
தொடரும்....................:-)
Tuesday, September 14, 2010
ஆக்ச்சுவலி, இதுதான் பிள்ளைகள் பிறந்த இட(மா)ம்.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 11 )
Posted by துளசி கோபால் at 9/14/2010 03:55:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
இந்த கோயில் தான் குட்டீஸுக்கு செம ஜாலியா இருந்தது.. :) அட்வென்ச்சர் டிரிப் மாதிரி.. :)
அமிர்தசரஸ் லயே கூட ஒரு லால் மாதா வைஷ்ணோதேவி இருக்கு.. எல்லாம் குனிஞ்சி வெளியே வந்து தவழ்ந்துன்னு.. கடவுளைப்பாக்கறதுன்னா சும்மாவான்னு :))
//அங்கே சங்குசக்கரத்தைக் கைமாற்றிப் பிடிச்ச விஷ்ணு. சிற்பி தெரியாமச் செஞ்சுருக்கணும். ஆனா இதுக்கு ஒரு கதையைக் கண்டுபிடிச்சுட்டா தேவலை. இருங்க யோசிக்கலாம்!//
உங்களு...க்குன்னு கண்ணில் படுதே!!
தகவல்கள் சுவாரஸ்யமாயிருக்குது.
டிஸ்னிலாண்டில் ஒரு குகைக்குள்ளே..அங்கெல்லாம் உடம்பை ரெண்டா, மூணாவெல்லாம் மடிக்க வேண்டாம். சொகுசாக ட்ராக் வண்டிகளில் அழைத்துப் போகிறார்கள், அதில் டிஸ்னியின் சிண்ட்ரெல்லா, ஏழு குள்ளர்கள் போன்ற கதைகளையெல்லாம் பொம்மை வடிவில் ஆங்காங்கே வைத்து இனிமையான இசையோடு நடனமாடவும் அமைத்திருக்கிறார்கள்.
ஆனால் இது ஓர் ஆன்மீகப் பயணம் போல் இருக்கிறது.
எங்களுக்கெல்லாம் சேத்து சுத்தி வாருங்கள்.
வைஷ்ணோதேவி அழகு,.. ஒரு பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்கேட் போர்டு ஒண்ணை கையில் கொண்டு போயிட்டா, மூட்டுவலிக்காரர்கள் உடம்பை மடிச்சு, தவழ்ந்துன்னு சிரமப்படாம ஜிவ்வ்வுன்னு போயி தரிசனம் பண்ணலாம். அதுவரை உங்க பதிவுகளில் மட்டுமே தரிசனம் செஞ்சுக்கறோம் :-)))))
Teacher,
Chinna chinna kovil kooda nella cover panniyerukinga.
-Sri
நம் ஊரில் கொலுவிற்கு கோவில்களில் பொம்மை வைப்பதுபோல் உள்ளது டீச்சர். அனுமன், பெரிய எலி எல்லாம் பார்க்க நன்றாக உள்ளது டீச்சர்:))))
சரித்திரம் படைச்ச ஊராகிட்டதே. சாலிட் ப்ரூஃப் வைத்திருக்காங்க.:(
சரிதான் 80அடி ஆஞ்சனேயர் கதை என்ன. யாரு கட்டினாங்கனு சொல்லலியேம்மா.அவ்வளவு உயர்த்தௌக்கு எப்படித்தான் கட்டினங்களோ!!!வைஷ்ணொ தேவி கோவிலுக்கு நல்ல ஐடியா கொடுத்திருக்காங்க சாரல்.தான்க்ஸ் பா.
கோயம்பேடு வரை வந்து குதிரியை பிடிச்சாங்களா அங்கேயே பிடிசுட்டாங்களா?
வாங்க கயலு.
ஆமாம்ப்பா. எதையும் விட்டுவைக்கலை:-))))
வாங்க நானானி.
அது அமெரிக்கர்களால் ரெண்டா மூணா மடிச்சுக்க முடியாதுன்னுதான்!
நாம் தான் பாம்பாட்டி நாடாச்சே. நெளிஞ்சு ஊர்ந்து போயிறமாட்டோமா சாமி பார்க்க:-)
வாங்க அமைதிச்சாரல்.
ரொம்ப டேஞ்சரான ஐடியாவா இருக்கு!
வழுக்கிப்போகும் நேரத்தில் சட்னு குனியலைன்னா நாம் தலையில் இடிச்சுக்கமாட்டோம்?
பேசாம கன்வேயர் பெல்ட் போடச்சொல்லிட்டா படுத்துக்கிட்டே ஊர்ந்துறலாம்.
வாங்க ஸ்ரீநிவாஸன்.
கோவில்களில் சிறிதென்று இகழ்தலும் இலமே...பெரிதென்று போர்றுதலும் இலமே:-)
உண்மையான ஆன்மீகவாதிக்கு எல்லாமே ஒன்னு இல்லையோ!!!!!!
வாங்க சுமதி.
பிள்ளைகளைக் கவர்ந்திழுக்க இது ஒரு நல்ல டெக்னிக். இல்லேன்னா ஒரு கட்டத்துலே கோவிலுக்கு ஆட்களே வராமப் போயிருவாங்க:(
வாங்க வல்லி.
சாரல் ஐடியா.... சிந்திச்சேன். ஒர்க்கவுட் ஆகலை:(
இந்த லால் தேவி ட்ரஸ்ட்தான் சிலை வச்சுருக்கு.
இனிமே எல்லாத்திலும் பிரமாண்டத்தைத் தவிர வேறொன்றுமில்லைன்னு சிலைகள் வளர்ந்துக்கிட்டே போகுது வடக்கில்.
பஞ்ச்குலாவில் ஒரு கோவிலில் ஒரு முப்பதடி சிவலிங்கம் இருக்கு!
வாங்க விருட்சம்..
இது வால்மீகி ராமாயணக்குதிரை!
அக்கா.. நான் ஸ்கேட்ல ஒக்காந்துக்கிட்டே போகத்தான் அந்த ஐடியா சொன்னேன்.. நீங்க படுத்துக்கிட்டே யோசிச்சிட்டீங்க. கன்வேயர் பெல்ட்டும் சூப்பர்தான் :-))
பிரயாணத்துடன் விபரங்கள் பிரமிப்பை ஏற்படுத்துது.
அமைதிச்சாரல்.
உக்காந்து போனா பேலன்ஸ் தவறிடுமேப்பா:-)
வாங்க குமார்.
இந்தியா வந்துட்டீங்களா?
சி.செ. எப்படி இருக்கு?
பெருச்சாளியின் வாய் த்ரில்..முழுங்கிடுச்சா :)
வாங்க மாதேவி.
முழுங்கப் பார்த்துட்டு அப்புறம் பதிவர்ன்னு தெரிஞ்சதும் 'தொலை'ன்னு விட்டுருச்சு:-)
//இது வால்மீகி ராமாயணக்குதிரை!//
இந்த பதிலை மிகவும் ரசிச்சேன். அப்போ கம்ப ராமாயணத்தின் அயோத்தி எங்கே?
ஆனா பெரும்பான்மை விஷயங்கள் அதன் புராண இடங்களோடு ஒத்துப் போவதாகவே தோணுது. சரி தானே
Post a Comment