ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துருச்சு. நமக்குத் தெரிஞ்ச அஞ்சு பேரின் கதை, கட்டுரைகள் ஒரே இதழில் இடம்பிடிச்சுக்குங்க!
நம்ம ராம்சுரேஷ்(பினாத்தலார்) அவர்களின் சிறுகதை, 'திரைகடல் ஓடியும்... '
நம்ம எல்லேராமின் நகைச்சுவைக் கட்டுரை, 'டீ குடி குடித்தபின் அடி'
நம்ம கமகம் லலிதாராமின் கட்டுரை. சிறப்பு என்னன்னா நம்ம பதிவர் ஈரோடு நாகராஜ் அவர்களைப் பற்றி. 'பயமுறுத்தும் படிகள்' (ஆஹா.... இதுதான் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா)
அஞ்சாவது யாருன்னா...... நம்ம ஞாநிதாங்க. 'ஓ' அவரும் நமக்குத் தெரிஞ்சவர்தானே?
அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
கல்கி இதழ்: 19.9.2010
PIN குறிப்பு: வார இதழ்கள் எல்லாம் இங்கே சண்டிகரில் ஒரு வாரம் லேட்டாத்தான் கிடைக்குது. தமிழ்நாட்டுலே போன வாரம் விக்காம நின்னுபோன சரக்கை அனுப்பிவிடறாங்களோன்னு ஒரு சம்சயம்.
Monday, September 27, 2010
இந்தவாரம் கிடைச்ச போனவாரத்து கல்கி
Posted by துளசி கோபால் at 9/27/2010 04:35:00 PM
Labels: பதிவர் சதுரம்
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
anaivarukkum vaalthukkal
பதிவர் நாகராஜ் அவர்களைப் பற்றிய கட்டுரை அவரது தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதை எழுதியவருக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இனிய வாழ்த்து(க்)கள்.
வாழ்த்துகள் உள்ளே வந்து இந்த க் வந்து உட்கார்ந்து இருப்பதன் அர்த்தம் ஏதாவது இருந்தால் சொல்லுங்க.
மேலே இன்னும் சிறிது நேரத்தில் பக்கத்தில் வந்து விடுவேன். கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.........
தமிழ்நாட்டுலே போன வாரம் விக்காம நின்னுபோன சரக்கை அனுப்பிவிடறாங்களோன்னு
ஒரு சம்சயம்.////
இப்படி ஒரு வ்யூ இருக்கா :)
ஒரு வாரம் கழிச்சாவது கிடைக்குதே சந்தோஷப் பட்டுக்குங்க :))
ஆனா நீங்க நேரடியா சந்தாதாராகிவிட்டால் அடுத்த நாளே வீடு தேடி வரும்.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
சந்தா கட்டினாலும் தபாலில் வரும்போது புத்தகங்கள் சரியா வராமால் இருந்த அனுபவங்களும் உண்டு! அதனால் ஒரு வாரம் தாமதமாய் ஆனாலும் கடையிலே வாங்கிப் படிக்கிறது தான் உத்தமம்! :))))))))))
அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
என் கதை வந்த கல்கியை விக்காத சரக்கு என்று கூறும் உங்கள் நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன்.
//என் கதை வந்த கல்கியை விக்காத சரக்கு என்று கூறும் உங்கள் நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன்.//
சிரிச்சி வயத்துவலியே வந்துடுச்சுங்க:)))))
கல்கியப் படிக்க முடியலன்னாலும் கல்கியப் படிச்ச நீங்க அந்தக் 'கல்கி'யப் பத்தி சுவாரஸ்யமாச் சொன்னதப் படிச்சேன்.
(நாங்கள் இங்குள்ள ஏஜெண்டிடம் பணம் கட்டினாலும் 5 நாட்கள் கழிந்தபின் தான் வருகின்றன,
நாங்கள் வாங்கும் இதழ்கள்.)
வாழ்த்துக்கள் அனைவருக்கும் டீச்சர்.
கல்கி வின்னர்சுக்கு வாழ்த்துக்கள்
ஃபாலோயர்ஸ் பேஜ் எங்கே?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
விஜயவாடா தாண்டிவிட்டாலே கல்கி,விகடன் குமுதம் அத்துணையும் ஒருவாரம் கழித்துத்தான் வருகின்றன. இந்தப் பத்திரிகைகளின் நிர்வாகங்கள் யோசிக்க வேண்டும்.வலைதளத்தில் படிக்க அநியாயத்திற்கு காசு கேட்கிறார்கள் ' உள் நாட்டு வலைதளத்திற்கு கட்டணத்தைக் குறைக்கலாம்.---காஸ்யபன்
வாங்க எல்.கே.
நால்வரின் சார்பில் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி.
நால்வர் சார்பில் நன்றி. நானும் நாகராஜின் வலைப்பூவைப் பார்த்தேன். நல்லா ஸ்கேன் செஞ்சு போட்டுருக்கார்.
வாங்க ஜோதிஜி.
நன்றி. நட்சத்திரமாகும் வேளையிலும்
இங்கேயும் வந்து கொஞ்சம் ஒளியைச் சிந்திட்டீங்களே!
அந்த 'க்' வேணுமா வேண்டாமான்னு ஒரு விவாதம் ஒரு காலத்துலே நடந்தபோது, முடிவு தெரியாத நிலையில் வேணுமுன்னா வச்சுக்குங்க. வேணாமுன்னா வீசி எறிஞ்சுருங்கன்னு அடைப்புக்குள்ளே போட்டது. இப்போ நம்ம ஸ்டைலாப் போயிருக்கு.
இப்ப நான் 'க்' இல்லாம வாழ்த்தினால் நம்ம மக்களுக்குப் பிடிக்காது:-)))))
வாங்க கயலு.
இவ்வளோ நாள் கழிச்சு வர்றதாலே அப்படி ஒரு சம்சயம் வந்துருக்குப்பா. அதான் எல்லாத்தையும் மாத்தி யோசிக்கவே மூளை பழகிருச்சே:-)
வாங்க டி.பி.ஆர்.
இருக்கும் சில மாதங்களுக்காக சந்தா எடுக்கணுமான்னுதான்......
கீதா சொன்னதையும் பாருங்க:-)
வாங்க சதீஷ் குமார்.
நால்வர் சார்பில் நன்றி.
வாங்க கோமதி அரசு.
அவர்கள் சார்பில் நன்றி.
வாங்க கீதா.
நீங்க சொன்னது ரொம்பச் சரி.
உள்ளே விஷயம் ஒன்னும் ரொம்ப முக்கியமில்லை. எப்ப படிச்சாலும் ஓக்கேதான். ஆனால்...இப்ப பத்திரிகைகள் எல்லாம் பதிவர்களையும், அவுங்க இடுகைகளையும், பதிவர் எழுதி அனுப்பும் கட்டுரை குறிப்புகளையும் போட்டு நமக்கு தூண்டில் போட்டுக்கிட்டு இருக்கு.
நம்ம மக்களைப்பற்றி வருதேன்ற ஆர்வத்தில் வாங்க வேண்டிருக்கு.
அதுவும் இந்தியாவில் இருக்கும் வரைதான்.
வாங்க வல்லி.
நால்வர் சார்பில் நன்றிப்பா.
வாங்க பினாத்தலாரே.
இண்டு இடுக்கில் போய் தேடிப்பிடிக்கும் உம் நுண்ணறிவைப் பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை:-))))
கல்கியைத்தவிர வேறு எந்தெந்த இதழில் எழுதுறீங்க?
தெலுங்கு மலையாளம் கணக்கில் உண்டா? அதெல்லாம் கூடத்தான் இங்கே கண்ணே கண்ணு ஒன்னே ஒன்னுன்னு இருக்கும் நமக்கான கடையில் குவிஞ்சுருக்கு.
வாங்க நிகழ்காலத்தில்.
வயித்துவலிக்கான மருந்தை நம்ம பினாத்தலார்தான் எதிர்காலத்தில் அனுப்பி வைக்கணும்:-)))))
வாங்க நிஜாமுதீன்.
அஞ்சே நாளிலே கிடைச்சுருதா! அப்ப புதுசுதான்:-)
ஒரு காலத்துலே விமானத்தபால் மூலம் ஆவியையும் குமுதத்தையும் வாங்கிக்கிட்டு இருந்தோம். அதுவும் பத்துப்பனிரெண்டு நாள் கழிச்சுதான் வரும்.
வாங்க சுமதி.
நால்வர் சார்பில் நன்றி.
வாங்க செந்தில்குமார்.
நால்வர் சார்பில் நன்றி.
நம்மை யாரு மெனெக்கெட்டு ஃபாலோ செய்யப்போறாங்கன்னு ஃபாலோயர்ஸ் பேஜ் வச்சுக்கலை:(
வாங்க மாதேவி.
நால்வர் சார்பில் நன்றிப்பா.
வாங்க காஸ்யபன்.
கொள்ளைதாங்க. நாங்க முந்தி வாங்கிக்கிட்டு இருந்த காலக்கட்டத்தில் குமுதம், கிளைகள் ஏதும் இல்லாம ஒரே ஒரு புத்தகம்தான். அதுக்கே வருசம் 95 நியூஸி டாலர்கள். திடீர்னு அதை 210ன்னு ஆக்குனாங்க. செலவை நியாயப்படுத்துனா அநியாயமுன்னு தோணுச்சு. அப்போ விட்டுட்டேன். இப்பப் பாருங்க பலகிளைகள் விட்டு கொழிச்சுக்கிட்டு இருக்கு!
வாங்க மாதேவி.
நால்வர் சார்பில் நன்றிப்பா.
வாங்க காஸ்யபன்.
கொள்ளைதாங்க. நாங்க முந்தி வாங்கிக்கிட்டு இருந்த காலக்கட்டத்தில் குமுதம், கிளைகள் ஏதும் இல்லாம ஒரே ஒரு புத்தகம்தான். அதுக்கே வருசம் 95 நியூஸி டாலர்கள். திடீர்னு அதை 210ன்னு ஆக்குனாங்க. செலவை நியாயப்படுத்துனா அநியாயமுன்னு தோணுச்சு. அப்போ விட்டுட்டேன். இப்பப் பாருங்க பலகிளைகள் விட்டு கொழிச்சுக்கிட்டு இருக்கு!
Post a Comment