Wednesday, September 08, 2010

ப்ரேக்ஃபாஸ்டுக்கு பால்பாயசம் ஓக்கேவா? .......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 7)

ஆட்டோ ரிக்ஷாக்கள் நிறைய இருந்தாலும் சைக்கிள் ரிக்ஷா ஏகப்பட்டது தெருவில் ஓடிக்கிட்டு இருக்கு. ரொம்பச் சின்ன தூரமுன்னா இது பரவாயில்லைதான். சண்டிகரில் பார்க்கணும் ஏழெட்டுப்பேர் இருக்கும்
ஒரு முழுக்குடும்பமே சைக்கிள் ரிக்ஷாவில் போகும்.

ஆட்டோக்கள் சைஸ்வேற இங்கு ரொம்ப 'படா'வா இருக்கு. சென்னைபோல மூணு பேர் அட்ஜஸ்ட் செஞ்சு உக்காரும் இருக்கை இல்லை. இதிலும் முன்னாலும் பின்னாலும் இருக்கைகள் போட்டு மினி பஸ் மாதிரி ஆளுகளை ஏத்திக்கிறாங்க. நம்மூர் ஷேர் ஆட்டோன்னு வச்சுக்குங்களேன்.
இதுலே ஏறினோமுன்னா ஆட்டோ நிறையும்வரை நாம் காத்திருக்கணும்:(

காலையில் கோவிலுக்குக் கிளம்பினோம். மணி எட்டரை. போகும் வழியில் நேத்துப் 'பார்த்துவச்ச' சாகர் ரத்னாவில் காலை உணவை முடிச்சுக்கலாமுன்னு திட்டம். சவுத் இண்டியன் ரெஸ்டாரண்ட். இட்லி கிடைக்கும்.

நம்ம அதிர்ஷ்டமுன்னு ஒன்னு இருக்கு பாருங்க. அது நமக்கு முன்னால் போய் சாகர் வாசலில் நின்னு கதவை இழுத்து மூடிருச்சு. போயிட்டுப்போகுது. நம்மை உபசரிக்கும் வாய்ப்பு அவனுக்கில்லைன்னு கோவிலுக்கே வண்டியை விடச் சொன்னோம். வட இந்தியாவில் எல்லா நகரமும் சோம்பல் முறிச்சு எழவே காலை பத்து பதினொன்னு ஆகிருது. குளிர்காலமுன்னா இன்னும் சுத்தம். 12 மணிக்குத்தான் கடைவீதிக்கே உயிர்வரும்.

போலீஸ் தலைகளை ஒன்னும் காணோம். ஆனால் சாமர்த்தியமா தெருவைக் கடக்க முடியாம தடுப்புகள் வச்சுட்டுப் போயிருக்காங்க! பார்க்கிங்லே வண்டியைப் போட்டுட்டு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிப் பக்கத்து சந்தில் திரும்பிக் கோவிலுக்குப் போனோம். பார்க்கிங் டு கோவில் பத்து ரூபான்னு ஒரு ஃபிக்ஸட் ரேட்.

கோவிலுக்குக் கொஞ்சதூரம் முன்னாலேயே இறங்கிக்கணும். அங்கேயும் தடுப்புகள். வெளிவளாகம் கடந்து உள்வளாகம் போயாச்சு. வலதுபக்கம் போய்ப் பார்க்கலாமுன்னு கோபால் சொல்றார். ஊஹூம்..... இடப்பக்கமாப்போய் சுற்றிவந்தால் வலம் வந்த மாதிரியும் ஆச்சு. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்ன்னு நேத்து இரவு போன வழியிலே போனோம். நானும் அங்கங்கே படங்கள் எடுத்துக்கிட்டேன். புங்காவை அடுத்து ஒரு பெரிய வாசல் இருக்கு அது எங்கே போகுதுன்னு பார்க்க நுழைஞ்சால், அது லங்கர்! இடப்பக்கம் உணவுக்கூடம்.
உணவுக்கூட நுழைவு வாசல்

பெரிய பெரிய இரும்புச்சட்டங்கள் வச்ச bin களில் தட்டுகளை அடுக்கி வச்சுருக்காங்க. மக்கள்ஸ் வரவர தட்டுகளை எடுத்துக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. கிண்ணம், ஸ்பூன் எல்லாம் இதே மாதிரி கிடைக்குது. எடுத்துக்கிட்டு மாடிக்குப் போனோம்.
பெரிய கூடத்துலே ஜனங்கள் சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க. உள்ளே போனதும் நமக்கு இடம் பார்த்து உக்காரவச்சுட்டாங்க. உணவுக்கூடத்துலே தரையிலேதான் உக்காரணும், அது எப்பேர்ப்பட்டக் கொம்பனா இருந்தாலும் சரி. பால்பாயஸம், சின்னதா போண்டா போட்ட கடி என்னும் ஒருவகை மோர்க்குழம்பு, பஞ்சாபி தால், மசாலா சேர்த்த காய்கறி. இது ப்ரேக் ஃபாஸ்ட் டைம் என்பதால் ரொட்டி. பகலுணவில் சாதம் கிடைக்கும். வேணும் என்ற அளவுக்கு வாங்கிக்கலாம். ஆனால் வாங்கிவச்சுக்கிட்டு உணவை வீணக்குவது தவறு, இது எல்லோருக்கும் உள்ள பொதுவிதி.
சாமி கொடுத்த காலை உணவை முடிச்சுக்கிட்டுத் தட்டுகளோடு கீழே வந்தோம். அங்கே நாம் சாப்பிட்ட தட்டுகளை வாங்கிப்போக நிறைய சேவார்த்திகள் இருக்காங்க. தட்டில் மிச்சம் மீதி இருக்கும் பதார்த்தங்களை அதுக்குண்டான எவர்சில்வர் தொட்டியில் போடுபவர் டண்டண்னு தொட்டியிலே தட்டை அடிச்சுக் கவிழ்க்கிறார். இந்தப்போடு போட்டால் அந்தத் தட்டு எத்தனை நாளைக்கு வரும்?
வரிசையா சேவார்த்திகள் நின்னு தட்டுக்களைத் தேய்ச்சுக் கழுவி இன்னொரு பின்னில் அடுக்கி வைக்கறாங்க. ஒரு பெரிய ஃபேக்டரியில் அஸெம்ப்ளி லைனைப் பார்ப்பதுபோல் தோணுச்சு.

அங்கே வேலைகளை மேற்பார்வை பார்த்துக்கிட்டு இருந்த பெரியவர் அன்போடு நம்மைப்பற்றி விசாரிச்சுட்டு, 'சரியான இடத்துக்கு வந்துருக்கீங்க. சாப்பிடுங்க'ன்னு உபசாரம் செஞ்சார். இப்போதான் மாடியில் சாப்பிட்டேன்னு சொன்னதும் டீ வரவழைக்கவான்னார். நீங்க கேட்டதே குடிச்சமாதிரி இருக்குன்னுட்டு அங்கே கொஞ்சம் படங்கள் எடுத்துக்கிட்டேன். ஒரு நாளைக்குச்சராசரியா அம்பதாயிரம் பேர் சாப்புடறாங்க. விசேஷ நாட்களில் கூட்டம் ஒரு லக்ஷத்தைத் தாண்டுமாம். இந்த உணவுக்கூடம் மூடப்படுவதே இல்லை. எந்த நேரம் போனாலும் சுடச்சுடச் சாப்பாடு.

வளாகத்தின் இடதுபுறம் அடுக்களை ஒன்னு பரபரப்பா இயங்குது. பெண்கள் சப்பாத்தியைத் திரட்டிப்போடப்போட இந்தப்பக்கம் பெரிய ராட்சஸ சைஸ் தவா வச்சு ஆண்கள் ரொட்டியைச் சுட்டுத்தள்ளிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் ப்ரமாண்டமான பாத்திரத்தில் பாயசம் ரெடியாகுது. பக்கத்துலே விறகு மலை. காய்கறிகள் அடுத்த கூடத்தில் நறுக்கிக்கிட்டு இருக்காங்களாம். பெரியவர் சொன்னதுதான்.
கருவறையில் பக்தர்கள் இடும் காணிக்கைகள் எல்லாம் இந்த அன்னதானத்துக்கே செலவு செய்யறாங்களாம்.
பக்தர்கள் வந்து தங்குவதற்கு இங்கே ஆறேழு கட்டிடங்கள் கட்டிவிட்டுருக்காங்க. மலிவு விலையில் அறைகள் கிடைக்குமாம்.
கோவிலோட ப்ளான் இங்கே விளக்கத்தோடு இருக்கு பாருங்க.

நிறைஞ்ச வயிறோடு வலம்வந்து பாலத்துக்கிட்டே நின்னோம். கருவறைக்குப்போகும் கூட்டம் நெருக்கியடிச்சு நிக்குது. உள்ளே போகவேணாமுன்னு ஏற்கெனவே முடிவு செஞ்சதால் வெளியே இருந்தபடியே கூட்டத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். இங்கே பாலத்து நுழைவு வாசலுக்கு முன் லாச்சீ பேர்ன்னு ஒரு இலந்தை மரம் இருக்கு. வடக்குக் கரையில் பாபா புத்தா பேர் ன்னு இன்னொரு மரம். வளாகத்துக்குள்ளே மொத்தம் மூணு மரங்கள். கோயிலுக்கு மூத்தவைகள். ஏற்கெனவே இங்கே இருந்துச்சாம்.
இசை நிகழ்ச்சியா பஜன் பாடறாங்க வெளியில் இருக்கும் ஜனங்களுக்காக.

புரா ( Bura) என்றவர் 1506 வது வருசம் பிறந்தார். அடுத்த வருசம் 1507 இல் நானக் ஜி குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்தப் பிள்ளை புரா கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் (15 வயசு முதல்) குரு நானக்ஜி அவர்களிடம் மிகவும் பக்தியோடும் கீழ்படிதல் உள்ளவராவும் இருந்துருக்கார். குருஜியின் பூரண ஆசிகள் கிடைச்சுருக்கு. இவருக்கு பாபா புத்தா என்ற பெயரைக்கூட குருஜிதான் வச்சாராம். நூற்றுப்பத்து வருசம் இவர் மிகுந்த ஈடுபாடுகளுடன் முதல் ஆறு மதகுருஜிக்களுக்கு பலவிதங்களில் உதவி இருக்கார். கோவிலுக்கு அம்ரித் ஸரோவர் குளம் வெட்டும் வேலைகள் நடக்கும்போது அவற்றை மேற்பார்வையிட வந்து ஒரு இலந்தை மர நிழலில் வழக்கமா உக்காருவாராம். அந்த மரம் தன்னுடைய கிளைகளைத் தாழ்த்தி அவர் தலைக்கு மேல் குடைபோல் விரிந்து நிழல்தருமாம். கருணையோடு இருந்த மரத்தை பேர் பாபா புத்தான்னு சொல்லி வழிபடறாங்க. பாபா புத்தா அவர்கள்தான் இந்த ஹர்மந்திர் கோவில் கட்டி முடிச்சதும், அதுக்கு முதல் பூஜாரியா இருந்துருக்கார்.

கோவில் கட்டுனப்ப மார்பிள் கற்களால்தான் கட்டி இருக்காங்க. பஞ்சாப் சிங்கம் மகாராஜா ரஞ்ஜீத் சிங் அவர்கள்தான் நூறு கிலோ தங்கத்தைக் கொடுத்து, தாமிரத்தகடுகளின் மேல் தங்கம் பூசி கோவிலைப் பொற்கோவில் ஆக்கினார். இந்த வேலை முடிஞ்சது 1830வது ஆண்டு.
பளிங்கு எல்லாம் காலப்போக்கில் கருப்பா ஆகிருது. அதை அப்படியே விட்டுடாமல் சுத்தம் செஞ்சு பளிச்ன்னு பாலீஷ் போட்டுக்கிட்டே இருக்காங்க.

வெராந்தாக்களில் உள்ள தூண்கள் எல்லாம் நம்ம டெல்லி செங்கோட்டை உள்ளே இருக்கும் அரண்மனைத்தூண்கள் போலவே இருக்கு.

அஞ்சாவது குரு அர்ஜன் தேவ் அவர்களுக்குக் குழந்தை செல்வம் இல்லாதிருந்த சமயம், இங்கே மர நிழலில் அமர்ந்திருந்த பாபா புத்தாவை வலம் வந்து வணங்கினாராம். அவருக்கு அதன் பின் புத்திரபாக்கியம் கிடைச்சதாம். அதனால் குழந்தைவரம் வேண்டி பக்தர்கள் இந்த மரத்தை வலம்வந்து வழிபடறாங்க.

உங்களுக்கு இப்படி இலந்தை மரங்கள் கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கும்போது மூணாவது மரத்தின் 'கதை'யையும் சொல்லாம விடமுடியுதா? அது லாச்சீ பேர் மரம். கோவிலை இடிச்சுத்தள்ள ஒரு முஸ்லீம் தளபதி வந்த விவரம் தெரிஞ்சு அவரை விரட்டியடிக்க ராஜஸ்தானில் இருந்து வந்த வீரர் மெஹ்தாப் சிங் தன்னுடைய குதிரையை லாச்சி இலந்தை மரத்துலே கட்டி வச்சுருந்தாராம். சின்ன உதவின்னாலும் அதை மறக்கக்கூடாதுன்ற நன்றியோடு மரத்தை அப்படியே வளாகத்துலே விட்டுவச்சுருக்காங்க. இந்த மூணு மரங்களும் கிட்டத்தட்ட 600 வயசானதுகள். இன்னும் நல்லாவே இருக்குது. இதுக்குப் பக்கத்துலே கோவிலுக்கான கொடிமரங்கள் ரெண்டு செங்காவியோடு வானளாவ நிக்குது.

சேவார்த்திகளுக்கு வயசு ஏது?

வெளியே இருந்தே கோவிலைப் பார்த்துக் கும்பிடும் கூட்டத்தில் நாமும் சேர்ந்துக்கிட்டு நமஸ்கரிச்சு வடக்கு வாசலில் வெளியே வந்தோம். அங்கேதான் சிக் அருங்காட்சியகத்துக்குப்போகும் மாடிப்படி இருக்கு. படியேறி மேலே போனோம். வடக்கு வாசல் முகப்புக் கட்டிடத்தின் மேல்மாடி முழுசும் ஓவியங்களா வரைஞ்சு வச்சுருக்காங்க. ஒரு பத்துப்பனிரெண்டு பெரிய ஹால்கள். மதம் ஆரம்பித்தநாள் முதல் நடந்த முக்கிய சம்பவங்கள் நிறைஞ்சு கிடக்கு.

புனித நூலில் முஸ்லீம்களுக்கு எதிரா இருக்கு என்று நினைத்த சில பகுதிகளை நீக்கச் சொல்லியும் இவர்களை இஸ்லாமியராக மதமாற்றம் செஞ்சுக்கச் சொல்லியும் அக்பருக்குப் பின் ஆட்சிக்கு வந்த முகலாயமன்னர்கள் ரொம்பத் துன்புறுத்திக் கொடுமை செஞ்சதெல்லாம் ஓவியங்களா இருக்கு. படம் எடுக்க இங்கே அனுமதி இல்லை.

பிரமாண்டமான அடுப்பின்மேல் இருக்கும் பெரிய தோசைக்கல்லில் மணலைப்பரப்பி அடுப்பை திகுதிகுன்னு எரியவிட்டு அந்த சுடுமணலின்மேல் உக்காரவைச்சு சுத்திவர நின்னு ஈட்டியாலே குத்தி..... அப்பப்பா...... பயங்கரம்.

இந்தக் கொடுமைகளைப் பார்த்ததும்தான் மதத்தைக் காப்பற்ற வீரமும் வேணும் என்று வீரர்களை சேர்த்துக் கொள்வதை மதத்தின் ஒரு பகுதியா ஆக்கி இருக்காங்க.

ஐந்தாம் குரு அர்ஜன் தேவ் அவர்களை அரசர் ஜஹாங்கீர் கொன்னுட்டார். ஒன்பதாம் குரு தேக்பஹதூர் அவர்களை அரசர் ஔரங்கஸேப் கைது செய்து டில்லிக்குக் கொண்டுபோய் சாந்தினி சௌக்கில் பொதுமக்கள் முன்னிலையில் தலையைக் கொய்தார்.

நின்னு நிதானமாப் பார்க்க ஆயிரக்கணக்கான ஓவியங்கள் சரித்திரச் செய்திகளைச் சுமந்து நிற்குதுன்னாலும் நமக்கு ஏது நேரம். கொஞ்சம் சுமாராப் பார்த்துக்கிட்டே வந்து வெளியேறும் படிகளில் இறங்கினால் கோவிலின் வடக்கு வாசல்கள் ஒன்றில் வெளியே வர்றோம். ஜாலியன்வாலா பாக் மொட்டைக்கிணற்றில் மக்கள் பதறி ஓடும்போது விழுவதை ஒரு பெரிய ஓவியமா வச்சுருக்காங்க. மனசு அப்படியே விம்முச்சு:(


வாழ்நாளில் பார்க்க வேண்டிய தங்கக்கோவிலைப் பார்த்த திருப்தியுடன் வரும்வழியில் 'பார்த்து வச்சக் 'கடை'யை நோக்கிப்போனோம்.

தொடரும்.......................:-)

28 comments:

said...

நாங்க ரெண்டாவது முறை போகும் போது கோயிலில் தங்கலாம்ன்னு நினைச்சோம்.. ஆனா எப்பவும் ஃபுல்லா இருக்கும் போல அறைகள்..

அங்க இருந்த நாள் பூரா ஜாலியா இருந்தேன் ரொட்டின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்..நினைக்கவே இப்ப ஆசையா இருக்கு.. படிக்க படிக்க..

said...

அருமையாக‌ சொல்லியிருக்கீங்க‌.

said...

குருத்வாராக்குள் சென்று பயணித்து வந்தது போல் இருந்தது- உங்கள் விவரிப்பு.

said...

Teacher,

Arumayana episode, Kovil manasukkum Lankar vayathukkum thriupthi. Its clear that, Sikhs are dedicated in whatever they do.

-Sri

said...

அன்பின் துளசி நான் டெல்லியில் இருந்தும் செல்லாத ஒரு ஊர் அம்ரித்ஸர் .. அதை அருமையா உங்க பதிவுல பார்த்தேன்.. படங்களும் அருமை.. கோபாலுக்கும் நன்றி..

மதுமிதா நீங்க ரெண்டு லிங்க் எனக்கு அனுப்புவீங்கன்னு சொன்னாங்க..
எதிர்பார்க்கிறேன்.

said...

உங்கள் புண்ணியத்தில் நல்ல தரிசனம் துளசி. படிக்கப் படிக்கப் பிரமிப்பாக இருக்கு. இப்படி உபசாரம் செய்ய முடியுமா. இப்படி லட்சக்கணக்கில சாப்பாடு போட முடியுமா.
நம் திருப்பதியிலும் தினம் அன்னதானம் உண்டு. சுத்தமாகவும் இருக்கிறது என்று கேள்வி. எங்கள் நண்பர் வருஷாவருஷம் ஒரு வாரம் அங்கேயே இருந்து சேவை செய்துவிட்டு வருவார். ஒவ்வொரு புதன் கிழமையும் டிடி தேவஸ்தானத்திலிருந்து பஸ் போய்க் கொண்டே இருக்கும்.
சரித்திரம் கொடுமையாகத் தான் இருக்கிறது.

said...

//நம்மை உபசரிக்கும் வாய்ப்பு அவனுக்கில்லைன்னு கோவிலுக்கே வண்டியை விடச் சொன்னோம்//

உண்மைதான் :)

said...

உணவுக்கூடமும், அடுக்கிவைக்கப்பட்ட தட்டுக்களும், சமையல் செய்யும்மிடமும் பார்த்ததும் பசியை தூண்டுகின்றன டீச்சர்:)))))

said...

Teacher, the post had your "signature" everwhere, including the end :-)

தமிழ்ல சொல்ல வரல அதனால சொல்லவர்றத கெடுக்க வேண்டாம்னு, ஆங்கிலத்திலயே சொல்லிட்டேன். :-)

said...

ada thani signature veraya!! ;)

said...

வாங்க கயலு.

எப்பவுமே அடுத்தவங்க உக்காரவச்சு சமைச்சுப் போட்டா ஜாலியாத்தான் இருக்கும் எனக்கும்:-)

கிராமத்துலே இருந்து வர்ற மக்கள், பெரும்பாலும் கோவிலிலேயே அறை எடுத்துக்கறாங்க. அப்படி அறை கிடைக்கலைன்னாலும் வளாகத்துக்குள்ளேயே படுத்துத் தூங்கிடறாங்க. இவுங்க கோயிலை மட்டுமே பார்க்க வர்றவுங்க.

நாமோ...?

said...

வாங்க குமார்.

போரடிக்காம இருந்துச்சா?

நன்றி.

said...

வாங்க தமிழ் உதயம்.

முதல் வருகையோ????

வணக்கம். நலமா?

அடிக்கிற வெயிலுக்குச் சில்லுன்னு தர்பூசணி!!!!

தொடர்ந்து வரணும். வருவீங்கதானே?

நன்றி.

said...

வாங்க ஸ்ரீநிவாசன்.

வந்தமா, சாமியைக் கும்பிட்டுட்டுப் பலனை வாங்கிக்கிட்டுப் போனோமான்னு இல்லாம........
சரீர உழைப்பைக் காணிக்கையாக் கொடுக்கறாங்க.

அதிலும் பெண்கள், வருசம் முழுசும்தான் அடுப்பைக் கட்டிக்கிட்டு அழறோம். இங்கேயுமான்னு இல்லாம பரபரன்னு ரொட்டியைத் திரட்டிப்போடுவதை நின்னு பார்க்கணும்!

குருஜிகா லங்கர் இல்லாத குருத்வாராக்களே கிடையாதாமே!!!!

எங்க கிறைச்ட்சர்ச்சிலும் ஞாயிறுகளில் குருத்வாரான்னு ஒரு இடம் வாடகைக்குப் பிடிச்சு நடத்தறாங்க. லங்கர் உண்டு. கூடிய விரைவில் பக்காவா குருத்வாரா கட்டப்போறாங்க.

said...

வாங்க தேனம்மை.

அடடா..... ச்சான்ஸை விட்டுட்டீங்களே!


தனிமடலில் சுட்டிகளை அனுப்பிட்டேன்.

said...

வாங்க வல்லி.

எல்லாம் அடியார்க்கு அடியார் பாலிசி தான்ப்பா.

said...

வாங்க நிகழ்காலத்தில்.

சாகர் ரத்னா இட்லியில் நம்ம பெயரை ஆண்டவன் எழுதலை:(

said...

வாங்க சுமதி.

வருசம் 365 நாட்களும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கு. வாங்க போய் பசியாறலாம்!

said...

வாங்க நன்மனம்.

ரொம்பச்சரி. ஏற்கெனவே நம்ம பதிவுகளைக் காப்பியடிச்சால் சுலபமாக் கண்டுபிடிச்சுடலாம். இப்போ க கை நா கையெழுத்துப் போட வேற கத்துக்கிட்டேன்:-))))

said...

வாங்க பொற்கொடி.

நம்ம சசிகுமார் கையெழுத்துப்போடக் 'கையைப் பிடிச்சுச் சொல்லிக் கொடுத்துருக்கார்'.

விடமுடியுமோ!!!!

said...

பால்பாயசத்துடன் பதிவு படங்கள் அசத்தல்.

said...

வாங்க மாதேவி.

இனிப்பு தூக்கலா இல்லாம பாயஸம் ரொம்ப அருமையா இருந்துச்சுப்பா.

said...

Dear author
I am not going to justify the actions of any religion, caste or creed; all religious systems are in the same track in my view.
Needless to state that all religious groups engage in some form of suppression of the rights of non-adherents - and try to win them over. It is my considered opinion that no caste, creed or religion is exempt from this practice.

At this juncture,we are confused by the alchemy of power, politics and religion.





----------------------------------



Readers may recall that Mrs Indira Gandhi's govt ordered the military to enter the Amritsar Gurudwar, The Golden Temple.
From one perspective, this act may be justified; it facilitated the rooting out of a virulent terrorist outfit. We cannot deny, tough that it negatively affected the harmony among the people.



Jahangir faced serious problems from his rebel son Kushroo. After the assassination
of Kushroo, Jahangir turned his anger towards the Sikh Guru Arjun Dev. Guru Arjun Dev was most pious and humble. Jahangir was annoyed with him because he had given an amount of Rs 5000/-to Prince Kushroo.
When Jahangir questioned Guru Dev about this, and Guru Dev justified his actions.. Jahangir responded with anger, sentencing Guru Dev to death..

sivashanmugam

said...

வாங்க சிவஷண்முகம்.

நாம் எதையுமே நியாயப்படுத்த தேவை இல்லை.

பொதுவா நியாயங்களே வெவ்வேறு காலங்களில் மாறுபடுபவைதான்.

சரித்திர ஈடுபாடு உள்ள உங்களை வாசகரா அடைஞ்சதுலே எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு.

said...

Dear author,
Butting in.Powerful versions coming in a Sentence.. I would say that it is pretty much up there in terms of emotions.Rock with u.
sivashanmugam

said...

Dear Madam, It is really very nice to see your Blog.I just see about your Blog in a magazine. Thanks. Padmasury

said...

சிவஷன்முகம்,

நன்றி.

said...

வாங்க பத்மாசூரி.

அப்பப் பத்திரிகையில் வந்ததுக்கு பொருள் உண்டு:-)))))

ரொம்ப நன்றிங்க.
அடிக்கடி வந்து போகணும்.