Wednesday, August 18, 2010

தெருவில் பூத்தத் தங்கத் தாமரை...............( கம்போடியாப் பயணம் 10 )

இதழ் இதழா விரிஞ்சு சாலை ஓரம் பூராவும் தங்கத்தாமரை!! அது என்னவா இருக்கும்? டுக்டுக்கை நிறுத்தச் சொன்னதும் கேட்டுக்குள்ளே திருப்பி உள்ளே கொண்டுபோய் நிறுத்தினார் 'வேன்'. புது டுக்டுக் ஓட்டுனர்.

பண்டெய் சாம்ரே பார்த்துட்டு வரும் வழியில் PRE RUP கோவில் வழியாத்தான் வந்தோம். காலையில் போகும்போதும் இதைக் கவனிச்சேன் என்றாலும் அப்புறம் வரலாமுன்னு விட்டு வச்சதுதான். இந்தக் கோவில்தான் அரச குடும்பத்தில் இறந்தவர்களுக்கு கருமங்கள் செய்யும் இடமாம். சிவன் கோவில்.

இங்கே நிறுத்துனதும் கோபாலுக்கு இறங்கி வரச் சோம்பல். நல்ல உச்சி வெய்யில் ஆரம்பிச்சுருச்சு. பகல் மணி பனிரெண்டரை. நான் மட்டும் இறங்கி பாஸைக் காமிச்சுட்டு உள்ளே போய் ரெண்டு படம் க்ளிக்கிட்டு வந்தேன். பெரிய கோவிலாத்தான் இருக்கு. உள்ளே போனால் எப்படியும் ஒரு மணி நேரமாகிரும். வெள்ளரிக்காய் ஆசையில் இறந்த அரசருக்கு நம்ம பௌ ஈமச்சடங்குகள் செய்தது இந்தக் கோவிலில்தான். நம்ம கானா ப்ரபா இந்தக் கோவிலை நல்லா விவரிச்சு இருக்கார். அதைத்தான் நானும் படிச்சேன்.

இன்னிக்குப் பகல் உணவுக்கு இடம் தேடுனப்ப அசல் க்மெர் சாப்பாடு இருக்குமிடம் ஒன்னு இருக்கு. கொண்டு போறேன்னு நம்ம ஸ்மெய் கூட்டிக்கிட்டுப்போன இடம் Kitchen Angkor Chey Restaurant. மூங்கிலும் மரமும் வச்சுக் கட்டுன இடம். பழைய கம்போடியன் வீட்டை வாங்கி இங்கே கொண்டுவந்து உணவகமா மாத்தி இருக்காங்க. உசரமான மரத்தூண்கள் மேல் நிக்கும் வீடு. படிகளேறி மேலே வந்தால் எல்லாமே மரப்பலகை தரை. மேசை, நாற்காலிகள், உள்கூரை எல்லாம் மூங்கில்கள். எளிமையா, அழகா டேபிள் செட்டிங்ஸ் இருக்கு. நீளமான உருளை வடிவ ஓலைப்பெட்டியில் முள்கரண்டி, கத்தி, ஸ்பூன் எல்லாம் வச்சுருக்காங்க. என்னமோ ப்ளேன்லே போறமாதிரி ஹாட் டவல்ஸ் கொண்டுவந்து கொடுத்தாங்க.

சாப்பாடு ஐட்டங்கள் எல்லாம் அவ்வளவா விலை இல்லை. ட்ரெடிஷனல் க்மெர் கறி 6 டாலர்தான். ஒரு சின்ன கப் சோறு அம்பது செண்ட்ஸ். கூடவே ஒரு ஃப்ரைடு ரைஸ் சொன்னோம். மெனுவைக் கவனமாப் பார்க்க வேண்டி இருந்துச்சு. நான் வெஜ் சேர்க்காத ஐட்டங்கள் ரொம்பக் குறைவு. எனக்கென்னமோ தாய் சாப்பாடு டேஸ்ட்தான் அநேகமா இங்கேயும்ன்னு தோணல்.

சாப்பாடு முடிச்சுட்டு அறைக்குத் திரும்பி ஒரு குட்டித்தூக்கம் போட்டுட்டு மாலை ஒரு அஞ்சரைக்கு குளிச்சுட்டுக் கிளம்பினோம், இந்த ஊர் டவுனைச் சுத்திப் பார்க்க. முதல்லே எங்கியாவது போய் ஒரு 'நல்ல காஃபி' குடிக்கணும். ரெண்டு நாளா நாக்குச் செத்துக்கிடக்கு:(

சுத்தத்தைச் சொற்களால் வர்ணிக்க 'இலை போட்டுச் சாப்பிடலாமு'ன்னு சொல்வாங்க பாருங்க. இங்கே அந்த இலைகூட வேணாம். தரையிலேயே (மண்) சோறு சாப்பிடலாம். அப்படி கண்ணுலே ஒத்திக்கற மாதிரி இருக்குதுங்க இந்த தாமரைபீடக் கட்டிடம். வெளியே கம்பவுண்டுச்சுவரில் ஆரம்பிக்கும் தங்கத் தாமரை உள்ளே அப்படியே வரிசையா ஓடுது.

கோவில் முழுக்க தாமரை பீடம்

அழகான தோட்டத்தில் ஒரு நீளமான படகு. அதுலே புத்தர் நிக்கிறார். பறவை இனங்கள் ஓய்வா கூடவே தண்ணீரில் நிக்குதுங்க. இந்தப் பக்கம் பகோடா ஸ்டைலில் ஒரு பெரிய கோபுரம். இன்னொரு பக்கம் சின்னதும் பெருசுமா ஏழெட்டுப் பகோடாக்கள் (தாய்லாந்து கோவில்களில் உள்ளவை போல ச்செடிகள்) தங்க நிறத்திலும் சாம்பல் நிறத்திலும். எல்லாத்திலும் அஞ்சு தலையார் அஞ்சாமல் நிற்கிறார். சீராக வெட்டிவிட்டுப் பராமரிக்கும் புல்தரைகள் பளபளக்கும் பெரிய மண்தொட்டிகளில் செடிவகைகள். 'கவனம் எடுத்துச் செய்தல்' என்பதின் பொருளை இதைப் பார்த்தே தெரிஞ்சுக்கணும். வெளியே தண்ணீர் உள்ள தொட்டிகூட தங்கத்தாமரைத் தொட்டிதான். ஒரு பக்கம் வெள்ளைக்குதிரையில் அரசர், ஆடும் மயில்கள் இப்படி அமர்க்களமா இருக்கு!

இது சீன மடாலயம். Preah Prohm Rath Monastery. வயசு 500. பௌத்தர்களுக்கு ரொம்பவே புனிதமான இடமாம் இது. Han Hoy என்ற புத்தபிக்ஷூ, வெளியிடங்களில் இருந்து வரும் மற்ற பிக்ஷுகள் தங்க ஒரு இடம் வேணுமேன்னு இதை ஆரம்பிச்சு இருக்கார். அப்போ இருந்த செல்வந்தர் Ta Pum Yeay Rath. தன்னுடைய நிலத்தை இலவசமாக் கொடுத்துருக்கார். (இதுக்கு பக்கத்துலேதான் கம்போடிய அரசரின் அரண்மனைப் பகுதியும் தோட்டமும் இருக்கு) பொதுமக்கள் அனைவரும் பாகுபாடில்லாம இங்கே வந்து புத்த தருமத்தைப் பரப்பும் சொற்பொழிவுகளைக் கேட்டு, புத்தரை வணங்குவாங்களாம். அரசரும் அப்படியே அரண்மனையில் இருந்து ஒரு எட்டு இங்கே வந்து புத்தரையும் பிக்ஷூவையும் வணங்குவாராம். நாட்டில் நிலையில்லாத ஆட்சியும் கலவரங்களும் போர்களும் நடந்து கொண்டிருந்த காலக் கட்டம் அது. அரசர் Ang Chang குழப்பங்கள் எல்லாம் சரியாகணுமுன்னு இங்கே வந்து வேண்டிக்குவாராம். எல்லாம் சரியானதும் அரசர் கட்டிக்கொடுத்த மடம்தான் இது.
சமீபத்தில் ஒரு எழுபது வருசங்களுக்கு முன் (1940) மடத்தைப் பழுதுபார்த்து இப்போ இருக்கும் நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் அண்ணனும் தம்பியுமா இருந்த இரண்டு புத்தபிக்ஷுகள். பெரிய கோவில் ஒன்னும் கட்டி இருக்காங்க.
தெருவில் இருந்து உள்ளே வரும் தோரண வாயில் முகப்பில் அங்கோர் கோவில்களின் முகப்பில் பார்த்த டிஸைனில் புத்தரை வணங்கும் பிக்குகளும் மக்களுமா ஒன்னு ஒருக்கு.


வெராந்தாவில் பூஜை


கோவிலின் முன்வாசலில் நுழைஞ்சால் நேரெதிரா இருக்கும் கட்டிடத்தின் முன் வெராந்தாவுலே புத்தர் சிலைகள் ரெண்டு வச்சு பூஜிக்குறாங்க. வர்றவங்க அப்படியே வணங்கிட்டுக் கோவிலைச் சுத்திட்டுப் போகலாம். வெராந்தவைக் கடந்து உள்ளே போனால் பெரிய புத்தர் தனிமையில் உக்கார்ந்து மோனத் தவம் செய்யறார். நாமும் அவரை ஏகாந்தமா
சேவிச்சோம்.
ஏகாந்த சேவை
வெளிப்புறப்பிரகாரத்தின் சுவர்களில் புத்தரின் 'வாழ்க்கை வரலாறு'முழுசும் அவர் தாய் மாயாதேவி கருவுற்று இருக்கும் சமயம் அவர் கனவில் வெள்ளையானை தாமரை மலருடன் வந்தது முதல் சித்தார்த்தனின் பிறப்பு, வளர்ப்பு, சாலையில் முதியவரைக் கண்டது, யசோதரையையும் குழந்தை ராஹுலையும் விட்டுப் பிரிந்து செல்வது, தன் தலைமுடியை களைந்து சந்நியாசி ஆனது, போதிமரச் சுவட்டில் தவம் பின்னே.... அவரே கடவுளாக்கப்பட்டு ஏழு, ஒன்பது பதினொன்னு என்று தலைகளுடைய சேஷவாகனத்தில் அமர்ந்து எல்லோருக்கும் அருள் புரிவதுன்னு பெரிய அளவுச் சித்திரங்களா வரைஞ்சு தள்ளி இருக்காங்க. எல்லாம் நேர்த்தியா இருக்கு. விவரங்கள் எல்லாம் சித்திரங்களுக்கு அடியில் க்மெர் மொழியில் எழுதி வச்சுருக்காங்க. கவனிச்சுப் பார்த்தால் ஒன்னுரெண்டு தமிழ் எழுத்துருவங்கள் தெரிஞ்சது.







க்மெர் மொழி


கோவிலுக்குப் பின்புறமா இருக்கும் வளாகத்தில் பிக்குகள் தங்குவதற்கான கட்டிடங்கள். அவுங்களுக்கு வகுப்பு நடத்த வகுப்பறைகள்ன்னு மடம் ரொம்பப் பெருசா இருக்கு. ஒரு பக்கத்துலே சுவரையெல்லாம் இடிச்சுப் புதுசாக் கட்டிடங்களை விரிவுபடுத்தும் வேலை ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு.

புத்த மடங்களில் பொதுவா எந்தப்பொருளையும் வீணாக்கறதில்லை. தொட்டிச்செடியின் அலங்காரம் பாருங்க!!!!!


தோட்டத்தின் ஒரு மூலையில் புல் வேய்ஞ்ச ஒரு பர்ணசாலைகூட இருக்குங்க. வயதில் (என்னைக்காட்டிலும்) முதிர்ந்த பிக்குணிகள் சிலரையும் முதல்முறையா இங்கே பார்த்தேன்.


சேஷவாகனம்

ஊருக்கு நடுவிலே மெயின் ரோடிலே இப்படி ஒரு அமைதியான இடமான்னு எனக்கு ஒரே வியப்புதான்! ரோடுக்கு அடுத்தபக்கம் அழகான சியெம் ரீப் நதி வேற 'ஓடுது'!!!!! நதிக்கரையில் வரிசையா ஆசனங்கள் வேற போட்டு வச்சுருக்காங்க. ( ஹூம்............. மனசுக்குள்ளே ஒரு நினைப்பு வந்து மணை போட்டுச்சு. இப்ப இங்கே வேணாம். மகிழ்ச்சியை ஏன் தொலைப்பானேன்?)

தொடரும்..................:-)

22 comments:

said...

டீச்சர்

ரொம்ப அற்புதமா இருக்கு தாமரை பூக்கள்.புத்தர் சிலையும் அழகா அமைதியா இருக்கு பார்க்க.நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க இதெயெல்லாம் பார்க்க.அவ்ளோ குழம்பு ம் சாதமும் 6 டாலர் தானா.பரவயில்லையே .
11 வது படத்துல ஒன்னு குடை மாதிரி இருக்கே அது என்ன?
அந்த ஒவியங்கள பார்க்கும் பொது பெருமாள் கோவில் ஓவியங்கள் மாதிரி இருக்குல?
அந்த தொட்டில வெள்ளை நிறத்துல இருக்குறது முட்டை ஓடா?
மொத்ததுல பார்க்க கலர்புல்ல மனசுக்கு அமைதிய இருக்கு டீச்சர்.

said...

நானும் கூடவே வந்துக்கினு இருக்கேன்

said...

க்மெர், ஜிலேபியை பிச்சு போட்டா மாதிரி இருக்கே
//அரச குடும்பத்தில் இறந்தவர்களுக்கு கருமங்கள் செய்யும் இடமாம். சிவன் கோவில்.//

இப்போவும் இதைக் கடைபிடிக்கறாங்களா?

said...

பார்க்க, படிக்கன்னு ரெண்டு கண்களுக்கும் திருப்தி ஆகிடுச்சு. அந்த தொட்டியில அலங்காரமா கவுத்து வெச்சுருக்கிறது முட்டை ஓடுதானே.. புத்தர் கோயில்ல முட்டையா???? மூளைக்குள்ள இடிக்குதே :-)))))

said...

ஒரு சின்ன சந்தேகம்.

இது போன்ற கோவில்களில் புகைப்படம் எடுக்க தனி கட்டணம் ஏதும் வசூல் செய்கிறார்களா?

said...

ம்ம்ம்..பிள்ளையை பத்தி முன்னாடியே அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சா!!!

said...

Teacher,

Chinna chinna vishayanalayum detaila solli score pannitinga...

sooper...

said...

முட்டி வலி தேவலாமா இப்போ...

எப்போதும் போல சூப்பர் பயணம்.. கொஞ்சம் அசந்து போய்டீங்க போலருக்கே, வழக்கமான கவர்சிகரமான தலைப்பு காணோமே.. :))

படங்கள் எல்லாமே அருமை அம்மா.

said...

தங்கத்தாமரைக் கோவில் படு அழகு. 5,7.9 தலை நாகங்கள்!! குண்டலினி யோகப் பிரகாரம் இருக்குமோ?
சுத்தம் கண்ல ஒத்திக்கிற மாதிரி இருக்கு.
காப்பி கிடைச்சுதா?

said...

தங்கத்தாமரை கோவிலும் படங்களும் அருமை டீச்சர்:))))))

said...

வாங்க விஜி.

இது என்ன அநியாயம்!!!

வெறுங் குழம்புதான் ஆறு டாலர். வெறுஞ்சோறு 50 செண்ட்ஸ். அந்த ஃப்ரைடு ரைஸ் 6.50.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

கூடவே வர்றதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க விருட்சம்.

இப்போதா?

ஊஹும்.... தெரியலை.


ஆனா அங்கே கருமங்கள். எரித்தல் எல்லாம் நடக்குது. அரசகுடும்பம் மட்டுமான்னு தெரியலை.

said...

வாங்க அமைதிச்சாரல்.

முட்டை மட்டுமில்லை. மற்ற நான்வெஜ்ஜும் அவுங்க சாப்பிடறாங்கன்னுதான் கேள்வி.

அஹிம்சை மே பீ எக்ஸ்க்ளூஸிவ்லி ஃபார் புத்தர்!!!

said...

வாங்க ஜோதிஜி.

பாங்காக், சியெம் ரீப் எல்லாம் தனிச்சார்ஜ் ஒன்னும் இல்லை. படம் எடுக்கக்கூடாதவைன்னா ஒரு அறிவிப்பு வச்சுடராங்க.

இந்தியாவில் கோவில்களில் படம் எடுக்க ஏகப்பட்டக் கட்டுப்பாடு. அதிலும் அங்கே வேலை செய்யும் கீழ்நிலைப் பணியாளர்கள் கெமெராவைக் கண்டதும் அடிச்சுப்புடிச்சு ஓடி வந்து அதட்டுவாங்க.

சில கோவில்களில் கட்டணம் அடைச்சு ரசீது வாங்கி இருக்கேன். பல கோவில்களில் அலுவலக அறைக்குப்போய் மேலாளரிடம் அனுமதி வாங்கி இருக்கேன்.


ஒரு முறை (1994) சென்னை காதி கிராஃப்டில் வாசலில் இருக்கும் காந்தி சிலையை படமெடுக்க விடலை:(

said...

வாங்க கோபி.

தேவலோக சேதி அவுங்களுக்குப் பாதிதான் புரிஞ்சு இருக்கும். கடைசி பகுதி தெரிஞ்சுருந்தா நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பாங்க.

said...

வாங்க ஸ்ரீநிவாசன்..

சின்னதுலேதான் (அசல்)ருசி இருக்கு:-))))

said...

வாங்க விதூஷ்.

வலி இப்போ ரொம்பவே தேவலைப்பா. விசாரிப்புக்கு நன்றி.

ஜூஸி தலைப்புகள் இந்தமுறை சட்னு தோணலை. ஒருவேளை மூளைக்கு வயசாயிருச்சோ என்னவோ!!!!

said...

வாங்க வல்லி.

குண்டலினி......!!!!!

என்னப்பா இப்படிக் குண்டைத் தூக்கிப் போடறீங்க?

புத்தமதத்துலே இதெல்லாம் இருக்கா என்ன?

said...

வாங்க சுமதி.

அழகை அனுபவிச்சதுக்கு நன்றிப்பா

said...

இந்தக் கோவில்தான் அரச குடும்பத்தில் இறந்தவர்களுக்கு கருமங்கள் செய்யும் இடமாம்.

------------------------

கோயிலுக்குள்ள பிணத்தைக் கொண்டு போனால் தீட்டு என்று இலங்கையிலும் தமிழகத்திலும் நடைமுறையில் இருக்கிறது.

said...

Pre Rupஐ வெளியில் இருந்தே பார்த்துவிட்டு கடந்து போனோம். உங்கள் தளத்தில் தான் இப்புத்த கோவிலைப் பற்றி படித்து தெரிந்து கொண்டு, பயணப் பட்டியலில் இணைத்தும் கொண்டேன். புத்த கோவிலில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/cCgxjAPJHuWJLwuC6

- ஞானசேகர்