கால் வலிக்க வலிக்க அரண்மனையைச் சுத்திப்பார்த்துட்டு வெளியே வந்து இங்கே இறக்கிவிட்ட 'டுக் டுக்' ஆளைத் தேடுனா..............கண்ணில் தெம்படலை. ஏற்கெனவே எனக்கு நம்பிக்கை இல்லாமல்தான் ஒப்புக்குத் தேடுனேன்னு வையுங்க. சாலையைக் கடந்து நடைபாதைக் கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டே போனப்ப அங்கிருந்த டுக் டுக் வண்டியில் விசாரிச்சால் 'சிட் லொம்' எரவான் கோயிலுக்கு 200 கொடுன்னு கேக்கறாங்க. இது கூடிப்போச்சே.... இன்னும் கொஞ்சம் தேடலாமுன்னு மெதுநடை போட்டேன். எதிரில் வந்த டுக்டுக் நின்னுச்சு. 120 கொடுத்தால் போதுமாம். ஆளைவிடு. 60தான் தருவேன். அதுவே கூடுதல். வரும்போது 30தான் கொடுத்தேன்..... மனசுலே ஒரு சுருக். அடடா..... எங்கே கொடுத்தேன்? அட ராமா!!!
திரும்பிவந்து என்னைக் கொண்டுபோய் ஹொட்டேலில் விட்டால் கொடுப்பதாகத்தானே பேச்சு. அந்தப் பையன் (பெயர் : காங்)தான் வரவே இல்லையே. நம்மால் ஒரு 300 பத் பெட்ரோல் கிடைச்சுருக்கே. அதுதான் சார்ஜ்னு மனசை சமாதானப்படுத்திக்க வேண்டியதாப் போச்சு. இந்த அழகுலே யாரைப்பார்த்தாலும் அந்த காங் மாதிரியே இருக்கு. அதெப்படி எல்லா தாய்களுக்கும் ஒரே முகம்? நமக்குத்தான் என்னவோ ஆகிக்கிடக்கு:(
120 கேட்ட ஆள் தடதடன்னு பின்னாலேயே ஓடிவந்து 30 கொடுத்தாப்போதும். ஒரு நகைக்கடை ஸ்டாப் போட்டுக்குவேன்னு இறங்கிவந்தார். நானுமொரு இரக்கத்தால் சரின்னேன்.
இடுகைத் தலைப்பு இங்கே வரணும்:-)
'மவனே....ஏற்கெனவே போன கடையா இருக்கணும். அப்ப இருக்கு உனக்கு......'
நமக்கும் ஆறுமணிக்குள்ளே அறைக்குப்போனால் போதாதா? நல்லவேளை இது வேறொரு நகைக்கடை. ஊர் முழுக்க இந்தக் கடைகள்தான் போல! யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு இருக்கும் ஏராளமான விற்பனைப்பிரிவு ஆட்கள், காவல்காரர், கேட் மேன் இப்படி கடையை மெயிண்டெய்ன் செய்யவே நிறைய செலவாகுமே. உள்ளே வரும் டூரிஸ்ட்களைப் பார்த்தால் என்னைப்போல ஒன்னுமே வாங்காம வேடிக்கைமட்டும் பார்த்துப் போறவங்கதான் அதிகம். பின்னே எப்படிக் கட்டுபடி ஆகுது? சரி. ஆண்டிக்கு எதுக்கு அம்பாரம் கணக்கு?
பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பத்து நிமிசம் பார்த்தோமா வந்தோமான்னு இருக்கணும். அப்படியும் ஒரு பெண்டெண்ட் கண்ணுலே விழுந்துருச்சு:(
விலை பேரம் படியலை. நானும் கொஞ்சம் மோசம். அடிவிலைக்குக் கேட்டால் எப்படி?
நேராக்கொண்டுபோய் மாரியம்மன் கோவிலில் நின்னுச்சு டுக்டுக். வந்தாச்சுன்னு கைநீட்டுன ஆளைப்பார்த்து .ஏம்ப்பா..... இது சிலோம் கோவிலாச்சே. நான் சிட் லொமுன்னு சொன்னது மறந்து போச்சா? எரவான் கோவில்னு 'அபிநயத்துலே' காமிச்சேனே!
அச்சச்சோ...... அந்தக் கோவிலா? தப்பா நினைச்சுட்டேன். ஸாரி ஸாரி....ன்னு வண்டியைத் திருப்புனார். இதுவே சென்னையா இருந்தா?
சுத்திச்சுத்திவந்த ஸீன் இங்கே:-))))
இதுக்குள்ளே ரெண்டு முறை செல்லில் கூப்பிட்டுட்டார் கோபால். அறைக்குத் திரும்பிட்டாராம். இளநீர் ஒன்னு வாங்கிக் குடிச்சுட்டு அறைக்கு வந்தேன். மாலை உலாவுக்குக் கிளம்பி நடை மேம்பாலம் வழியாவே SIAM ரயில் நிலையம் நோக்கி நடந்தோம். மேலே தடதடன்னு ரயில்கள் பறந்துக்கிட்டே இருக்கு. எந்த நெரிசலிலும் சிக்கிக்காம நிம்மதியா நடக்க இதைவிட சூப்பரா ஒரு இடம் இருக்கமுடியுமா? அறை ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும் புத்தர் கோவில் இங்கேதான் இருக்கணும். அடையாளம் பார்த்து வச்சுருக்கேன்னு தேடிக்கிட்டே போனதில் வலதுபக்கம் கீழே அதுக்குண்டான நுழைவு வாசல் தெரிஞ்சது. இப்ப மூடி இருக்கு. நாளைக்குக் கட்டாயம் வந்து பார்க்கணுமுன்னு மூளையில் முடிச்சு போட்டு வச்சேன்.
மேம்பாலத்தில் நடக்க நடக்க சியாம், செண்ட்ரல் வொ(ர்)ல்ட் என்னும் பெரிய மால் வருது. சிட்லோம் ரயில் நிலையத்தில் இறங்கி மேம்பாலத்தோடு நடந்து அப்படியே மாலுக்குள்ளே போயிரலாம். தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய மாலாம் இது. எட்டு லட்சத்து முப்பதாயிரம் சதுர மீட்டர்கள் பரப்பளவு. உள்ள வளாகத்துலே கடை கண்ணிகளுக்கு ஒதுக்குனது அஞ்சு லட்சத்து அம்பதாயிரம் சதுர மீட்டர்.
சம்பாரிக்கும் காசு முழுசையும் தொலைக்கச் சரியான இடம். எனக்கு எதாவது வாங்கித் தரணுமாம் கோபாலுக்கு. ஆசையா ஒரு ஹேண்ட் பேகை எடுத்துப் பார்த்துட்டு ஸேல் நடக்குது. வேணுமுன்னா வாங்கிக்கம்மான்னார். நம்ம தேடலே தனி. இந்த ஹேண்ட்பேக் புளிக்குது வேணாமுன்னுட்டேன். விலை ஜஸ்ட் 25000 பத். அஞ்சு சதமானம் டிஸ்கவுண்ட். இப்பச் சொல்லுங்க அதை வாங்கி இருந்தா அதுக்குள்ளே ஒரு லிப்ஸ்டிக் வைக்கத்தான் மீதிக் காசு இருக்கும். முப்பத்தியேழாயிரம் ரூபாய்ன்றது அநியாயமில்லையோ? இது இப்படின்னா மற்ற பொருட்களின் விலையை உங்க ஊகத்துக்கே விட்டுடலாம்.
"நாளைக்கு மத்தியானம் கிளம்பறோம். பாங்காக் எல்லாம் நல்லாச் சுத்திட்டதானே?"
" இல்லையே..... எனக்கு ச்சைனா டவுன் போகணுமே."
"இன்னிக்கு ரொம்ப லேட்டாகிருச்சு. நாளைக்குப் போகலாம். அரைநாள் மட்டும் வேலை. சீக்கிரம் வந்துருவேன்."
"எனக்கும் காலையில் புத்தர்கோவில் பார்க்கணும்"
Pathum Wanaram
அட! வானரம்!!! நம்ம ஹனுமானா? அதுவும் பாத்தும்.... ஒரு வேளை மலையாளமோ? சிரிப்புதான் வந்துச்சு..... (மலையாள ஸ்லாங்லே சொன்னால் 'ஒன்' போகும் குரங்கன்னு............)
இருக்காது...பார்க்கும் வானரமாக இருக்கணும். பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ரெண்டுக்கும் இடையில் (சியாம் பாரகன் & செண்ட்ரல் வொர்ல்ட் ) அமைதியா உக்கார்ந்துருக்கு இந்தக் கோவில்.
மால்களுக்கு நடுவில் (பெரு)மாள்.
பெரிய தோட்டமா இருக்கு. ரொம்பவே வயசான போதிமரச் சுவட்டில் புத்தர் சிலைகளைவச்சு பூஜை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதுக்கும் சின்னதா ஒரு ஃபென்ஸ் போட்ட தாற்காலிகத் தடுப்பு.
அடுத்துள்ள ஒரு பெரிய கூடாரத்தில் வார புத்தர்கள். சின்னதா உசரம் இருக்கும் ஒரு பெரிய நீளமான மேடையில் புத்த பிக்ஷூ ஒருத்தர் உக்கார்ந்து வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கறார். ஒன்னும் ரெண்டுமா மக்கள் வந்துபோய்க்கிட்டே இருக்காங்க.
புத்தரைப் பணியும் யானையும் , பின்னே எலியா இல்லை குரங்கான்னு தெரியாத ஒன்னும்!
அடுத்த சுற்றுச்சுவர் வாசல் வழியாக் கோவிலுக்குப்போனேன். கோவில் கதவு மூடி இருக்கு. ஏழுதலையார், என்ன? எப்ப வந்தேன்னு விசாரிக்கும் பாவனையில் தலை தூக்கி நிற்கிறார். அழகான கோவிலுக்குப் பின்புறமா ஒரு அழகான ச்செடி. கோவிலில் பழுதுபார்க்கும் வேலை நடக்குது. ஓஹோ.... அதனால்தான் சாமிச்சிலைகளை வழிபாடு முடங்காமல் இருக்க மரத்தடியில் வச்சுருக்காங்களோ?
விஹார்னுக்குப் பின்னே வெள்ளை ச்செடி
ஊஹூம்.............. இல்லை. ஒரு ஆறு பேர் கோவிலில் கொல்லப்பட்டாங்களாம்:(
ஐயோ!! எப்போ? ஏன்?
இந்த வருசம் மே மாசம் செஞ்சட்டைக்கும் ராணுவத்துக்கும் சண்டை நடந்துச்சுன்னு, ஷாப்பிங் செண்டருக்குத் தீ வச்சுட்டாங்கன்னு ( ஒரு 18 மாடிக் கட்டிடம் ) சொன்னேன் பாருங்க. அப்ப நடந்த கலாட்டாவில் இந்த சோகம் நடந்துபோச்சு. எல்லோரும் சிவிலியன்ஸ். அஞ்சு பொதுமக்களும் ஒரு நர்ஸம்மாவும். கோவிலுக்குள்ளே சுவரெல்லாம் குண்டு துளைத்த அடையாளம் இருக்காம். இத்தனைக்கும் அரசரோட காவல்படை மேலே பறக்கும் ரயில் பாதையிலே இருந்து கோவிலைப் பாதுகாக்கக் கண்காணிச்சுக்கிட்டே இருந்துருக்காங்க. கோவிலுக்கும் இவுங்களுக்கும் 300 மீட்டர்தான் இடைவெளி.
அடிபட்டு உயிர் பிழைச்ச ஒருத்தர் துப்பாக்கிக்குண்டு தாக்கியது மேலே ரயில்பாதையில் இருந்துதான்னு சொல்றார். புத்தர் கோவில் என்பதுஅடைக்கலம் கொடுக்கும் இடம். ஆனால் கலாட்டாவுலே பயந்துபோய் புகலிடமா இங்கு வந்து ஒடுங்கின மக்கள் மேல் துப்பாக்கியைத் திருப்புனது பயங்கரம். நடந்த அநியாயத்தைப் பார்த்து நடுங்கிப்போய் கிடக்கறாங்க அக்கம்பக்கம் கோவிலையொட்டிக் குடி இருக்கும் மக்கள்.
அதுதான் இப்போ இந்த இடம் ஜிலோன்னு கிடக்கு. இது ஒன்னும் தெரியாமலேயே உள்ளே போய் சுத்திப்பார்த்துப் படம் எடுத்துக்கிட்டு இருந்தேன் அப்போ.
அரசர் நாலாம் ராமா, 1857 இல் இந்தக் கோவிலைக் கட்டி இருக்கார். அப்போ இந்த ஏரியா முழுசும் நெல் வயல்கள்தானாம். அரண்மனைக்கு (Sa Pathum Palace) பக்கத்துலே ஒரு கோவில் இருக்கட்டுமேன்னுதான். முழுப்பெயர் Wat Pathum Wanaram Ratcha Wora Viharn அரசகுடும்பத்துக்கோவில்கள் வரிசையில் இதுக்கு மூணாம் இடம் கிடைச்சுருக்கு.
விஹார்ன் கூரை முகப்பு
அரசகுடும்பத்தில் இறந்தவர்களை எரியூட்ட இங்கே ஒரு க்ரெமெடோரியம்கூடக் கட்டி இருக்காங்க. 'மேரு மலை' போல டிஸைன் செஞ்சுருக்காங்களாம். ஆனால் பார்க்கக் கிடைக்கலை. இந்த வளாகத்துக்குள்ளே புத்தபிக்குகளுக்கான மடாலயமும் பயிற்சிக் கல்லூரியும் இருக்கு.
காலாற நடந்துபோய் கிடைச்சதையெல்லாம் கேமெராவில் சுட்டுக்கிட்டு வரும்வழியில் வழக்கம்போல் எரவானையும் வணங்கி போயிட்டுவாரேன்னு சொல்லிட்டு நிதானமா அறைக்கு வந்து சேர்ந்து கோபால் வருகைக்குக் காத்திருந்தேன். எண்ணித்துணிந்த 'கருமத்தை' முடிக்காமல் கிளம்ப முடியாது:-))).
தொடரும்................................:-)
Tuesday, August 03, 2010
தலைக்குமேலே வெள்ளம் போனால் சாண் என்ன, முழம் என்ன?........................(தாய்லாந்து பயணம் பகுதி 12)
Posted by துளசி கோபால் at 8/03/2010 05:46:00 PM
Labels: Bangkok. அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
தாய் நாட்டில் தனி வகைகள் சல்லிசாக கிடைக்குமே.. சகோதரி சாந்தி சொல்லலையா..?
மன்னிக்கவும் துணி வகைகள்.
என்னதான் இருந்தாலும் தாய்லாந்துக்காரர்கள் இப்படிக் ”குப்பை கொட்டத் தெரியாமல்” எப்படித்தான் வாழ்க்கை நடத்துகிறார்களோ! நமது சிங்காரச் சென்னையின் சப்வேக்களை ஒருமுறை வந்து பார்க்கச் சொல்லவேண்டும்.
இன்னிக்கு ரொம்ப லேட்டாகிருச்சு. நாளைக்குப் போகலாம். அரைநாள் மட்டும் வேலை. சீக்கிரம் வந்துருவேன்."
"எனக்கும் காலையில் புத்தர்கோவில் பார்க்கணும்"
இதுக்கபுறம்.."Pathum Wanaram "
...ம்ம்ம் நான், நீங்க 2 பேரும் சேர்ந்துதான் இங்க போனீங்கன்னு நினச்சுட்டேன். கடைசில பார்தா..."நிதானமா அறைக்கு வந்து சேர்ந்து கோபால் வருகைக்குக் காத்திருந்தேன். " /ஹி..ஹி...ஹிஹி கொஞ்சம் குழம்பிட்டேன் (பெரியவங்கள 'குழப்பிட்டீங்க' -/னு சொல்லக்கூடாதில்ல...அதான்) /ஹி..ஹி...ஹிஹி
கோவில் கோபுரம் கேரளத்து பாணியை நினைவுபடுத்துகிறது.
பூஜை வழிபாடு எல்லாம் புத்த கோவில்களில் எந்த வகையில் நடக்கிறது?
புத்த கோவில்களில் ராமர் தெய்வம் இல்லை இல்லையா? ஆனால் மன்னர் பெயர் ராமர், ஓவியம் சிற்பம் எல்லாம் ராமர். இது ஏன்? உங்க அனுபவத்தை வைத்து கொஞ்சம் தெரிந்து சொல்லுங்களேன். இவங்களோடு ராமாயண version வேறே என்று நினைக்கிறேன்.
எங்கேயாவது புத்தரின் வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் இருக்கா?
வழக்கம் போல ஆப்செண்ட ஆயிட்டேன்...மிச்சத்த படிச்சுட்டு வந்திடுறேனே டீச்சர்.
எவ்வளவு மேம்பாலங்கள் அதனிடையே மரங்கள் என பார்க்க அழகாக உள்ளது டீச்சர்.அப்படியே அந்த டுக்டுக்கையும் எப்படி இருக்கும்னு ஒரு போட்டோ போட்ருங்க டீச்சர்.
//உள்ளே வரும் டூரிஸ்ட்களைப் பார்த்தால் என்னைப்போல ஒன்னுமே வாங்காம வேடிக்கைமட்டும் பார்த்துப் போறவங்கதான் அதிகம். பின்னே எப்படிக் கட்டுபடி ஆகுது? //
கரெக்ட்டு. அதேசமயம், நகைக்கடைக்குள்ள, சும்மா பாத்துட்டு போற இவ்ளோ கூட்டத்தை எப்படி அனுமதிக்கிறாங்கன்னே டவுட்டா இருக்கு.
கலவர பூமியில் தனியா சுத்தி இருக்கிங்க ரொம்ப தெகிரியம் தான்
நல்லா சுத்தினீங்க போங்க. சுத்தறதுமில்லாம இன்னோரு லின்க்,நான் சுத்த. 2006 க்கு ஒரு தடவை போய்ட்டு வந்துட்டேன்./ எல்லாரும் கேள்வி கேட்டிருக்காங்க நீங்க சொல்லப் போற பதில்களுக்கு காத்திட்டிருக்கேன்.ஆடிகிருத்திகைக்கு முருகனைப் பார்க்கப் போயீட்டீங்களோ:)
வாங்க செந்தில்.
அங்கத்து துணி வகைகள் இப்போ இங்கே நமக்குத் தேவை இல்லீங்க. துணி ஷாப்பிங் எனக்கு எப்பவும் சென்னைதான்.
சாந்தி, ஒரு ஷோ நடக்குதுன்னு விவரம் சொன்னாங்க. இப்பெல்லாம் இரைச்சலாவும் கூட்டமாவும் இருக்கும் இடத்திற்கு போக அவ்வளவா விருப்பம் இல்லை:(
28 வருச வெளிநாட்டு வாழ்க்கையில் ஏகப்பட்ட ஷோக்கள் பார்த்தாச்சு.
வாங்க பிரகாசம்.
இங்கேயும் கொஞ்சம் உள்ளே போனால் சென்னையைப்போல் இருக்கும் இடங்கள் கட்டாயம் இருக்கத்தான் செய்யும் என்றாலும் சி.செ.யைப்போல் அவ்வளவு மோசமா இருக்காதுன்னு ஒரு நினைப்புதான்.
வாங்க டாடி அப்பா.
அந்த இடத்துலே கட் பண்ணி ஸீன் மாறுது:-))))
வாங்க விருட்சம்.
புத்தர் கோவில்களில் உள்சுவர்களில் எல்லாம் புத்தர் கதைதான் வரைஞ்சு வச்சுருக்காங்க.
ராமாவா இருப்பது வழிவழியா வரும் பட்டப்பெயர்கள். முதலில் ஹிந்துவா இருந்து அப்புறமா புத்தமதத்துக்கு மாறி இருக்கலாம்.
தசாவதாரத்துலே புத்தர் அவதாரமும் ஒன்னு சிலர் சொல்றாங்க. அப்ப ஏன் தனி மதம்?
ரொம்பவும் 'உள்ளே' போய் ஆராய்ஞ்சு பார்க்கவேண்டிய சப்ஜெக்ட் இது!!!!
வாங்க சிந்து.
நிதானமா வாசிச்சுட்டு வாங்க. நோ ப்ராப்ஸ்.
வாங்க சுமதி. ஏரியா பளிச்னு சுத்தமா இருப்பது பார்க்க ஒரு தனி அழகுதான்.
உங்களுக்காக ஒரு டுக்டுக் படம் அடுத்த
பதிவில் போட்டுருக்கேன்.
வாங்க அமைதிச்சாரல்.
என்னமோ நடக்குது ..... மர்மமா இருக்குது.............
இதுலே அவ்வஞ்சு லிட்டர் பெட்ரோல் வேற!
ஒன்னும் புரியலைப்பா:(
வாங்க கோவியாரே.
முத்துலட்சுமி சொன்ன 'அறியாமையே ஒரு ஆனந்தமோ'தான்!!!!
முதல்லேயே 'விஷயம்' தெரிஞ்சுருந்தா.... மனசு பக்பக்ன்னு இருந்துருக்குமோ என்னவோ!
வாங்க வல்லி.
முந்தாநாள் ஹரியானா பஞ்ச்குலாவில் ஒரு சிவன்கோவில் போனப்ப சின்னதா மாடிப்படி வளைவில் ஒரு சந்நிதி. எட்டிப்பார்த்தால்...... பாபா பாலக் நாத்.
தோகை விரிக்கும் மயிலின் அருகில் கோவணாண்டி முருகன் நிற்கும் படம் வச்சுருக்காங்க அங்கே.
'யாமிருக்க பயம் ஏன்' எழுத்துகள் மட்டும் மிஸ்ஸிங்:-))))
அன்புள்ள ஆசிரியருக்கு ,
சண்முகம் அன்புடன் எழுதிகொண்டது
விரைவில் தங்களின் பாங்காங் பதிவை
படித்து விடுகிறேன்
நன்றி
வாங்க சண்முகம்.
தாய்லாந்தைத் தொடர்ந்து கம்போடியாவும் வருது.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது படிச்சுட்டு, அப்படியே உங்க கருத்துக்களையும் ஒரு வரி சொன்னால் மகிழ்வேன்.
நன்றி
Post a Comment