சாதாரணக்காலங்களில் 2700 சதுர கிலோமீட்டர் இருக்கும் இந்த டொன்லே ஸாப் ஏரி, மழைக்காலத்தில் ஆறுமடங்கு பெருசா ஆகிருமாம். சுமார் 16000 சதுர கிலோமீட்டர். ஆழமும் இப்படித்தான் இப்ப இருக்கும் ஒரு மீட்டர் ஆழம் மழையில் ஒம்போது மீட்டரா ஆகும்!!!! அட!
இன்னிக்கு பகல் 12க்கு செக்கவுட் செய்யணும். விமானம் நாலே முக்கால் என்றபடியால் 'லேட் செக்கவுட்' கேட்டுருந்தோம். ரெண்டு மணி நேரம் கிடைச்சது. பெட்டிகள் எல்லாத்தையும் ஒழுங்கா அடுக்கி தயாரா வச்சுட்டுக் காலை உணவுக்கு வரவே கொஞ்சம் லேட்டாயிருச்சு. காத்துருந்த ஸ்மெய் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிட்டுக் கிளம்பும்போதே எட்டரை.
ஊரைவிட்டு வெளியில் ரொம்பத்தள்ளி இருக்கும் இடம் என்பதால் 15 டாலர் கேட்டார். அப்புறம் அவரே....'நீங்க நல்லவங்களா(?) இருக்கீங்க. அதனால் 12 கொடுத்தால் போதும்'ன்னார்!
நானும் ரொம்பதூரம் போகணுமேன்னு இருந்தால், ஒரு 15 கிலோமீட்டர் தூரம்தான். வரும்வழியில் நிறைய வயல்களையும் ரெண்டு கிராமங்களையும் கடந்தோம். ஒரு கிராமத்துலே புத்த பிக்ஷுகள் பிக்ஷைக்கு வந்து ஒரு வீட்டுமுன்னால் நின்னுக்கிட்டு இருந்தாங்க. இப்படிக் கூட்டமா ஏழெட்டுப்பேர் வந்தா என்னன்னு கொடுப்பாங்களோ? ஒரு இடத்துலே மலைக்கோவிலுக்குப் போகும் பாதைபோல மண்டபங்களோடு படிகள் மேலே போகுது. வரும்போது கண்டுக்கணும்.
மலைக்கோவில்
சாலையின் ரெண்டு பக்கங்களிலும் கிடுகிடு பள்ளம். ஆனால் அதில் மரத்தூண்களை சாலை உயரத்துக்கு நட்டு அதுலே மரவீடுகளைக் கட்டி வீட்டுக்கும் சாலைக்கும் மரப்பலகை போட்டு இணைச்சு வச்சுருக்காங்க. ரொம்ப ஏழமை நிலைன்னு வீடுகளைப் பார்த்தாலே தெரியுது. வரும் வழியில் சியெம்ரீப் டவுனுக்கு வெளியில் வந்ததுமே சில இடங்களில் நதிக்கரையிலே குடிசைகள் போட்டுக்கிட்டு மக்கள் வசிக்கறாங்க. நல்லவேளை ..... அது இன்னும் கூவம் ஆகலை . துர்நாற்றம் மிஸ்ஸிங்.
டொன்லே ஸாப் என்ற நல்லதண்ணீர் ஏரியைப் பார்க்க இப்போ போறோம். டொன்லே என்ற பெயருக்கு பெரிய ஏரின்னுதான் பொருள்.
திடீர்னு வெட்ட வெளியில் முளைச்சுருந்த ஒரு கட்டிடத்துக்கு வந்து சேர்ந்தோம். Chong Khneas படகுத் துறை. கட்டணம் ஒரு ஆளுக்கு 20 டாலர். படகில் கூட்டிட்டுப்போய் மிதக்கும் கிராமத்தைக் காமிச்சுக் கொண்டுவந்து விட்டுருவாங்களாம். தனிப்படகுன்னாதான் 20. இல்லைன்னா பத்து டாலருக்கு மற்ற கூட்டத்தோடு சேர்ந்து பயணிக்கலாம்.
தனிப் படகே இருக்கட்டும். ஒருமுறை வெனிஸ் நகரில் இப்படிப் படகுலே உலவும் தென்றல் காற்றினிலே பாடிக்கிட்டு ஜாலியாப் போகலாமுன்னு திட்டம் தீட்டி வச்சுருந்தா, ஒரு பத்துப்பேரை ஏத்திக்கிச்சு படகு. அதிலும் கோபால் ஒரு மூலையில் நான் ஒரு மூலையில்:( நம்ம திருமண வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா இந்த டூர். வந்த எரிச்சலில்
வெனிஸ் நகரத்தண்ணி வழிகள் எல்லாம் ட்ரிப்பிள் நாத்தமாத் தோணுச்சு எனக்கு!
நூறு டாலர் நோட்டை எடுத்து நீட்டுனார் கோபால். அதை வாங்கித் திருப்பித் திருப்பி மூணுபேர், (முன்னாடு சென்ற வழி பின்னாடு ) பார்த்துட்டு அது செல்லாது. வேற நோட்டு கொடு'ன்னால் இவர் பர்சை துழாவறார். அதுலே இருவதுச் சொச்சம்தான் கிடக்கு. அதெப்படி? காசையெல்லாம் என்ன செஞ்சீங்கன்னா....... நூறுக்கு மேலேயா செலவாகப் போகுதுன்னு ஒரு நோட்டை மட்டும் எடுத்துக்கிட்டு மீதியை பெட்டியில் 'ஒளிச்சு' வச்சுட்டு வந்துருக்கேன்றார், முன் ஜாக்கிரதை முத்தண்ணா!!!!
என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு 'தாய் பத்' எடுப்பீங்களான்னா..... 'பிரச்சனை இல்லை 1600 பத் கொடுங்க.'ன்னார். என் கைப்பையில் இந்த பத்துகளை எடுத்துக் கொடுத்தேன். டிக்கெட்டை வாங்கிக்கிட்டு தபதபன்னு ஓடி (தேவையில்லாத ஓட்டம்) சரிச்சு வச்சுருக்கும் கப்பல் கேங் வே போல ஒரு இரும்புத் தகடில் இறங்கிக் கீழே போனால் ஆட்கள் எண்ணிக்கையை அனுசரிச்சு சின்னதும் பெருசுமா இருக்கும் படகுகளில் நமக்கு ஒன்னு ஒதுக்கினாங்க. சிக்ஸ் ஸீட்டர்ஸ்! பிரம்பு நாற்காலி போட்டு வச்சுருக்கு. ரெண்டு லைஃப் ஜாக்கெட் ஒரு பேருக்கு முன் சீட்டிலே வச்சுருக்காங்க.
படகு அலாட்மெண்ட். வலது பக்கம் கடைசி நமக்கு. இந்தப் பையன்தான் ஓட்டுனர்.
நம்ம படகு ஓட்டி ஒரு சின்னப்பையன். ஒரு பதினாறு இருந்தாவே அதிகம். நம்ம கைடு ஒரு கல்லூரி மாணவராம். அவர் பேசுவது அவருக்கே கேக்குமான்னு எனக்கு சந்தேகம். படகின் பக்கவாட்டு கட்டையில் கோபாலுக்கு எதிரில் உக்காந்துகிட்டு முணுமுணுன்னு என்னவோ சொல்லிக்கிட்டே வர்றார். நானும் என்னதான் சொல்றாருன்னு காதை பயங்கரமாத் தீட்டிக்கிட்டே இருக்கேன். ஊஹூம். ஒன்னு ரெண்டு சொற்கள் லேசா விழுது. விடிஞ்சது போ:( இவர்கிட்டே அப்புறம் கேட்டுக்கலாமுன்னா..... நம்மாளு சுத்தம். அதே காதுலே கேட்டு(?) அதே காதுலே விட்டுருவார். இங்கேயும் விட்டுட்டார்.
நம்ம கைடு
இதுக்கு நடுவில் நாப்பது டாலருக்கு நாம் அதிகம் கொடுத்துட்டோமோன்னு அது ஒரு கவலை. இங்கே கம்போடியர்களுக்கு எல்லாம் வட்டவட்டமா இருக்கணும். எல்லாத்தையும் சராசரியா ரவுண்டப் பண்ணிடறாங்க. 'வேற வேலை இல்லை.....யாராலே கணக்கெல்லாம் போட்டுக் கஷ்டப்படமுடியும்' என்ற எண்ணம். ஒரு டாலருக்கு நாலாயிரம் ரியெல். தினப்படி ஏத்தம் இறக்கமெல்லாம் நோ. அதே போல ஒரு டாலருக்கு 400 பத். இதுவும் அப்படித்தான். கணக்குன்னு பார்த்தால் 1270 பத் வருது. நம்மிடம் 330 அதிகம் வாங்கிட்டாங்க.
'கணக்கு பிடிபட்டதும் ' நான் ஒருபக்கம் முணுமுணுன்னு ஓத ஆரம்பிச்சேன். அது இந்தக் காதில் போய் இதுலேயே வெளிவர பரப்ரம்மம் மாதிரி இவர் சாந்தமா உக்கார்ந்துருக்கார்.
நம்ம படகு மெதுவாத்தான் போகுது. செயற்கை கால்வாய் மாதிரி இருக்கும் இந்த இடத்தின் ரெண்டு கரையையும் ஒட்டிச் சின்னச்சின்ன மீன்பிடிப்படகுகள் நிறைய. தண்ணீரெல்லாம், மண்தரையில் ஓடும் மழைத்தண்ணி நிறம். படகுத்துறையிலிருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர்வரை ஆழமே இல்லை. ரெண்டடி ஆழமிருந்தாலே அதிகம். பெட்ரோல் போட்டுக்கணுமுன்னு பெட்ரோல் பங்குலே ஒரு ஸ்டாப். ஒரு பக்கம் நாலைஞ்சு பேரல்கள், ப்ளாஸ்டிக் ஜெர்ரி கேன்கள் வச்சு உள்ளே ஒரு கடையும் இருக்கு. இதுவும் ஒரு படகுக்கடைதான்.
பெட்ரோல் பங்க்
சர்ச்
கொஞ்சம் அகலமான பகுதி வந்ததும் ஒரு சர்ச்( இதுலேயும் ரெண்டுவகையா கொஞ்ச தூரத்தில் ஒரு கத்தோலிக் சர்ச் வேற), ஒரு போலீஸ் ஸ்டேஷன், தொலைதூரத்தில் கண்ணுக்குத்தெரிஞ்ச ஒரு மசூதி, இந்தப்பக்கம் அடர்த்தியா வரிசைகட்டி நிற்கும் படகு வீடுகள்,
மிதக்கும் கிராமம்
எதிரில் வரும் சின்னச்சின்னப்படகுகளில் ரெண்டு மூணு கோக் டின்களை வச்சுக்கிட்டு வியாபாரம் செய்யும் பசங்க. இதுலே ஒரு பையன் மலைப்பாம்புக் குட்டியைக் கழுத்தில் மாலையாப் போட்டுக்கிட்டு ரெண்டு டாலர்ன்னு கை காமிச்சான். வேணாமுன்னா ஒரு டாலர்னு பேரம் காட்டுறான். ஒன்னும் வேணாமுன்னா 'டக்'னு நம்ம படகுலே தாவி ஏறிட்டான். நொடிப்பொழுதில் பாம்பைக் கூடையில் போட்டுட்டு, ஜூஸ் கேன்களை வச்சுருக்கும் கூடையை ஏந்தி வந்துருக்கான். என்னிக்காவது கூடை மாறணும்.... அப்ப இருக்கு.
நமக்கு எதிரில் ஒவ்வொரு படகு வரும்போதும், நம்மைக்கடந்தி= வேறு படகுகள் போகும்போதும் மற்ற படகின் வேகம், சைஸ் அனுசரிச்சு நம்ம படகு ஆட்டமான ஆட்டம். இதுலே ஒரு படகு நம்மைக் கடந்தப்ப 'சளார்'னு தண்ணீரை வாரி அடிச்சு என் முதுகுப்பக்கம் தொப்பையா நனைஞ்சு போச்சு. yuck:( எனக்கு அருவருப்பா இருக்கு. இவர் வேற 'இவ்வளவு நாசூக்குப் பார்த்தா நீ பயணம் வரவே லாயக்கில்லை'ன்றார்:( அதுக்காக எல்லாத்தையும் வாரிப் பூசிக்கணுமா?
கடைத்தெருப்பக்கம் படகு ஒரு சுத்துப்போச்சு. படகுகளுக்குத் தேவையான ஐட்டங்கள், பேட்டரிகள் எல்லாம்தான் விற்பனைக்கு வச்சுருக்காங்க. ராத்திரி விளக்கு எரியணுமே!
மொத்தம் இப்போ ஒரு 400 குடும்பங்கள்தான் இந்தக் கிராமத்துலே இருக்காங்க. அரசாங்கம் இவுங்களைக் கரையில் வாழ்வைக்க முடியாதா என்ன? இதுலே பலவிதமான கருத்துக்கள் இருக்காம். அரசாங்கம் இவுங்களை இப்படிக் காட்சிப்பொருளாவே வச்சு வருமானம் பாக்குதுன்னு ஒரு கருத்து. இன்னொன்னு இங்கே இப்படி வாழ்ந்து பழக்கப்பட்ட மக்கள் கரை வாழ்வை விரும்பலை. மீன்பிடித் தொழிலாளர்கள் பிழைப்பு இங்கே நடப்பதால் அவுங்களும் வெளியேற விரும்பலை. இங்கே வசிக்கும் மக்களுக்கு ஏதோ உதவிப்பணம் அரசு கொடுக்குது இப்படி.......
ஒரு காலத்துலே ஏகப்பட்ட மக்கள் இங்கே இந்தக் கிராமங்கள் போல அங்கங்கே மிதக்கும் கிராமங்கள் அமைச்சு இருந்தவங்கதானாம். அது மெல்லமெல்லக் குறைஞ்சு இப்போ ரொம்பக் கொஞ்சம்தான்னு பேச்சு. இந்த கிராமம் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக ரொம்பக் கிட்டத்துலே இருக்கு. பெரிய ஏரிக்கு நடுவிலே போனால் அற்புதமான பறவை இனங்கள், முதலைகள், நீர்நாய் போல இன்னும் சில நீர்ப்பிராணிகள் ஏராளமா இருக்கு. தனியா ஒரு நாள், ரெண்டு நாள் பெரிய படகுலே போய்ப் பார்த்துவரும் டூர்கள் எல்லாம் இருக்காம்.
ஒரு பக்கம் கம்போடியர்களும், இன்னொரு பகுதியில் வியட்நாமியர்களும் இருக்காங்க. சீனர்கள் பலர் இன்னொரு பகுதியில். இஸ்லாமியர்கள் தனிப்பகுதியா ஒரு இடத்தில் மிதக்கறாங்க. அங்கேதான் மசூதி இருக்கு. அக்கம்பக்கம் வீடுகளுக்குப் போய்வர சின்னதா ஒருவர் போகும் படகுகளை வீட்டுக்கு முன்னால் ( இல்லை பின்னாலா?) பார்க் செஞ்சு கட்டிப்போட்டு வச்சுருக்காங்க. சணல்கயிற்றில் ஹெம்மாக் (hammock) மாதிரி வலைபின்னி ரெண்டு தூணுக்கிடையில் கட்டி அதில் படுத்துக்கிட்டே வேடிக்கைபார்க்கும் ஒரு இல்லத்தரசியைக் கண்டேன். அவுங்க பிள்ளைகள் போல ரெண்டு பசங்க வீட்டு முன்பக்கத்தண்ணீரில் குதிச்சு விளையாடிக்கிட்டு இருந்தாங்க. தண்ணீரில் மிதவைக்காக காலி 'ஸ்ப்ரைட்' பாட்டில்களைக் கையில் புடிச்சுருந்தா ஆச்சு!
நல்ல விளைஞ்ச தடியான பெரிய மூங்கில் துண்டங்களை மிதவையாக் கட்டி விட்டுருக்காங்க இந்த வீடுகளுக்கு. வீடுக:ளின் தரங்களும் வெவ்வேறு விதத்தில். அங்கே குளிச்சு, அங்கேயேஎ துவைச்சு அங்கேயே சமைச்சு., அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே மற்ற 'எல்லாமுமா' இருக்காங்க. அந்தத் தண்ணீரைப் பார்த்ததும் எனக்கு பேஜாராப் போச்சு. நோய் நொடி வராம இருக்குமா? :(
ஒரு படகு உணவகமா ஹோம் டெலிவரி செஞ்சுக்கிட்டு இருக்கு. சுடச்சுட என்னமோ எடுத்து ஒரு பாத்திரத்துலே போட்டுச் சின்னப்பிள்ளைக்குக் கொடுத்தாங்க. வாத்துப்பண்ணை வேற ஒருத்தருக்கு பிஸினஸ்! இங்கத்துப் பிள்ளைகளுக்காக விளையாட்டுத்திடல் போல ஒன்னு. கொஞ்சம் பெரிய கட்டிடம். பள்ளிக்கூடம் அதுக்குள்ளேயே நடத்துறாங்களான்னு தெரியலை. ஆனா இன்னொரு கட்டிடத்துலே 'இங்கிலீஷ் லேங்குவேஜ் ஸ்கூல்'வேற இருக்கு. இது வியட்நாம் மக்கள் இருக்கும் பகுதி.
வாத்துப்பண்ணை
போலீஸ் ஸ்டேஷன் & கத்தோலிக் சர்ச்
ப்ளே க்ரவுண்ட்
திரும்பி வரும்போது கரையை ஒட்டி ரெண்டு பக்கமும் வலைவீசி மீன் பிடிக்கும் பலரைக் கண்டோம்.
டொன்லே ஏரிக்கு தண்ணீர் சப்ளை செய்வதில் இந்த ஸாப் நதியும் மீகாங் என்ற இன்னொரு பெரிய நதியும் உதவுது.
இந்த மீகாங் நதியைப்பத்துன சுவாரஸியமான தகவல் ஒன்னு , இது இமயமலையில் இருந்து உற்பத்தியாகி, திபெத் பள்ளத்தாக்குகளின் வழியா ஓடி சீனா, பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா வியட்நாம் இப்படி ஏழு நாடுகள் வழியாப்போய்க் கடலில் சேருது. ஆசியாவிலேயே நீளமான நதிகளில் ஏழாவது நிலை.
தாய் மொழியில் இதை "Mae Nam Khong" ன்னு சொல்றாங்க. முதல் சொல் Mae= மாதா Nam = நதி Khong = கங்கா.
இன்னொரு கங்கா மாதா! இந்த நதி போற போக்குலே ஒரு இடத்துலே ஸாப் நதியில் போய்க் கலக்கும்போது தண்ணீரின் வேகத்துலே ஸாப் நதி தன்னுடைய ஓட்டத்தை எதிர்பக்கமா திருப்பிருதாம். அப்படித் திரும்பும்போது அது போய் நிகும் இடம் இந்த டொன்லே ஏரி. மழைக்காலத்தில் இமயமலையில் இருந்து அடிச்சுக்கிட்டு வரும் பனிப்பாறைகள் வரவர உருகி வெள்ளம் கூடிப்போகுதாம்.
மழைக்காலங்களின் ஸாப் நதியின் தண்ணீர் இங்கே வந்து சேருவதால் தண்ணீர் வரத்து அதிகமாகிவிடும் காலங்களில் சின்னதாக ஓலைக்குடிசைவீடு வச்சுருக்க மக்கள் வீட்டை அப்படியே கரைக்குக் கொண்டுவந்து சேர்த்து எடுத்துக்கிட்டுப் போய் கொஞ்சநாளைக்கு நிலத்துலே தங்குவாங்களாம்.
ஒன்னேகால் மணி நேரம் சுத்துனது போதுமுன்னு படகுத்துறைக்கு விடச் சொன்னோம். ஏறுமிடம் ஒன்னு இறக்கி விடும் இடம் ஒன்னு. மண் மேட்டுலே ஏறிப் போகணும். இது கரையை ஒட்டி இருக்கும் மார்கெட் ஏரியா. ஒரே மீன் கடைகள். ஸ்மெய் அங்கே வந்து காத்திருந்தார்.
தொடரும்.....................:-)
Friday, August 20, 2010
ஏரிக்கரைப் பூங்காற்றே நீ போகுமிடம்? ...............( கம்போடியாப் பயணம் 12 )
Posted by துளசி கோபால் at 8/20/2010 03:43:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
குட்டிப்பையன் க்யூட் லிட்டில் புத்தா :)
//நூறுக்கு மேலேயா செலவாகப் போகுதுன்னு ஒரு நோட்டை மட்டும் எடுத்துக்கிட்டு மீதியை பெட்டியில் 'ஒளிச்சு' வச்சுட்டு வந்துருக்கேன்றார், முன் ஜாக்கிரதை முத்தண்ணா!!!!//
:)))))
வாண்டுப்பையன் போட்டோ:P
பேரம் பேசும் குட்டி பையன் போட்டோ நன்றாக உள்ளது டீச்சர். தண்ணீர் நன்றாகவே சேறாக தெரிகிறது டீச்சர் எப்படி அந்த மக்கள் அனைத்தும் அங்கேயே செய்கிறார்கலோ கஷ்டம்தான் டீச்சர்:(
உருவாக்கிய தாக்கத்தோடு தூங்க போகக்கூடாது என்பதற்காக உள்ளே வந்தேன்.
திருப்தியாய் தூங்கச் செல்கின்றேன்.
துளசி, எல்லாமே அங்கதான்னால் படு கஷ்டமாச்சேப்பா.சரியாப் படவில்லை.
அந்தப் பையந்தான் என்ன சுட்டியா இருக்கான்.கூடை மாறமல் இருக்க ,அதுவும் அந்த மலைக்குப் பசிக்காமல் இருக்க அவங்க புத்தாவையே வேண்டிக்கறேன்.
வாங்க சின்ன அம்மிணி.
ஆமாம்ப்பா:-)
வாங்க ரசிகன்.
ரசிப்புக்கு நன்றி.
பையன் படு சுட்டி!
வாங்க சுமதி.
அதான்ப்பா விசனம். அதுவும் அங்கே கிட்டே போய்ப்பார்த்தபின் முதுகில் வாரியடிச்ச தண்ணிரின் அருவருப்பு ரொம்பக் கூடிப்போச்சு:(
வாங்க ஜோதிஜி.
தூக்கம்.....
ஓகே.... குட் நைட்
வாங்க வல்லி.
மலைக்கு ரொம்பப் பசி இருக்காதாமே!
டைம் பாஸுக்குன்னு தின்னுவதெல்லாம் மனுசந்தானே!!!
கம்போடியாவை நேரில் சென்று பார்த்த அனுபவம். நல்ல பகிர்வு.
டீச்சர், வந்து படித்துவிட்டு, ரசித்துவிட்டு சென்றேன்.
கோபால் சாரிடம் சொல்லுங்கள், நிறைவு வந்தால் என்ன சொல்வது என்றே தெரியாது அதனால் பலர் படித்துவிட்டு பின்னூட்டம் இடாமல் செல்கிறோம்.
அருமையான பணி. வளர்க (சுயநலம் தான் :-) )
அந்த புத்த பிச்சுக்கள பார்த்த பாவமா இருக்கு.நம்ப ஊரு இதிகாசங்கள படிச்சு இருக்கோம்ல,முனிவர்கள் பொய் பிச்சை எடுத்து வருவாங்கனு.அது மாதிரி போல.
டீச்சர் ,என்னாகும் venice nagaratha சுத்தி பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை .இத பார்த்ததும் அதான் தோணுது.என்ன கொஞ்சம் ஏழ்மையான venice ;-)
அப்பா கிளம்பிடீங்கள கம்போடியால இருந்து .அடுத்த பயணம் எங்கே chandigarh or newzealand ? எங்க இருந்தாலும் எங்களுக்கு கண்ணுக்கும் மூளைக்கும் விருந்து தான்.நன்றி.
வாங்க இளம் தூயவன்.
முதல் வருகைபோல இருக்கு?
வணக்கம் நலமா?
நீங்க சொன்னது மகிழ்ச்சியைத் தருது.
நன்றி.
வாங்க நன்மனம்.
கோபால் பின்னூட்டப்ரேமி அல்லவா?
அவரே படிச்சுருப்பார்:-)))
வாங்க விஜி.
வெனிஸ் நகரமெல்லாம் போனபிறகுதான் தெரிஞ்சது நம்மூர்லேயே அழகான இடங்கள் இருக்குன்னு.
முடிஞ்சால் இதைப்பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2009/05/2009-26.html
சான்ஸ் கிடைச்சால் விடாதீங்க.
மிதக்கும் கிராமத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:
https://goo.gl/photos/CffWRmzBk8GJx6tJ8
- ஞானசேகர்
Post a Comment