Thursday, August 26, 2010

உள்ளூர் சமாச்சாரம்

கம்போடியா நாட்டு இடிபாடுகளைக் கொஞ்சநாளா பார்த்துக்கிட்டு இருந்தீங்கல்லே? கையோடு கையா, சூட்டோடு சூடா நம்ம பக்கத்து சமாச்சாரத்தையும் சொல்லிட்டா....மனசுலே தங்கும் என்ற நப்பாசையில்......

சண்டிகரில் இருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு, பிஞ்சோர் என்னும் ஊர். முதல்முறை இங்கே வந்தப்ப அஞ்சு மணிக்கே கேட் மூடிட்டாங்கன்னு புலம்பி இருந்தேன். இந்தமுறை தாய்லாந்துப் பயணம் புறப்படுவதுக்கு முதல்நாள் மாம்பழத் திருவிழா நடந்துச்சுன்னு ஓடிவந்து பார்த்தப்ப, இதையும் கண்டுக்கிட்டுப்போனேன்.

பீமாதேவி கோவில். என்ன சாமின்னு தெரியலை:( இல்லை பீமன் வனவாசத்துலே வந்து வழிபட்ட இடமா? ஒருவேளை பீமனே கைப்படக் கட்டி இருப்பானோ?

தொல்பொருள் இலாகா 'போற்றிப் பாதுகாப்பா' வச்சுருக்கு 'இப்போ'. அதுக்குள்ளே, சும்மா விழுந்துகிடக்கும் கற்களை இங்கிருந்து மக்கள்ஸ் கொண்டுபோய்ட்டாங்க. எங்கே அடுப்பாவோ, துணி துவைக்கும் கல்லாவோ, வீட்டுத்தரையாவோ இன்னும் என்னென்னவாகவோ கிடக்கோ? :(
அழகாச் சுத்துச்சுவர் வச்சு நடைபாதையெல்லாம் போட்டுப் பராமரிக்கிறாங்க. பீமாதேவி ம்யூஸியம். இதுக்குப் பக்கத்துலே கோவில்(இருந்த) இடம். போனவருசம்தான் இந்த ம்யூஸியத்தைக் கட்டி, நம்ம ஹரியானா முதல்வர் திரு புபிந்தர் சிங் ஹூடா அவர்கள், சுற்றுலா, வனத்துறை, சுற்றுச்சூழல், விளையாட்டுத்துறை இத்தியாதிகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் திருமதி கிரண் சௌத்ரி அவர்களும், தொல்பொருள்துறை அமைச்சர் திருமதி மீனா மாண்டல் அவர்களும் 'சாட்சி' நிற்க திறந்து வச்சுருக்கார்.

(நம்ம தமிழ்நாடு அரசில் மேற்கண்ட துறைகளுக்கு பொறுப்பேற்று நடத்தும் அமைச்சர்கள் யாருன்னு தெரியலை. தெரிஞ்சவுங்க சொல்லுங்க)
நடைபாதிக்கு ரெண்டு புறமும் ஆராய்ச்சியாளர்கள் அலுவலர்கள் பயனுக்குச் சில அறைகளும் நடுவாக மரம் வச்ச மேடையோடு இருக்கும் முற்றத்தின் மூணு பக்கமும் அருங்காட்சியகமுமா இருக்கு.
சின்னச்சின்ன அறைகளில் சுத்திவரச் சிற்பங்களை வச்சு பெயரெல்லாம் போட்டு வச்சுருக்காங்க. சிதையாத சிற்பமுன்னா ஒன்னுகூட இல்லை:(

வெல்லப்பிள்ளையாரைக் கிள்ளியெடுத்து அவருக்கே நிவேதனமா செஞ்சது போல இங்கே இடிபாடுகளில் கிடைத்த சிற்பங்களையே அங்கங்கே சின்ன மேடைகளில் வச்சு அலங்கரிச்சுட்டாங்க. அதனால் உள்ளே நுழைவதில் இருந்தே ஒவ்வொரு சிற்பமாக் கவனிச்சுப் பார்த்துக்கிட்டே மெதுநடையாப் போகலாம்.
பத்தாம் நூற்றாண்டுக்கும் பதினோராம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 1 காலக் கட்டத்தில் இந்தக் கோவிலைக் கட்டி இருக்காங்கன்னு சில கற்களில் செதுக்கப்பட்டிருந்ததை ஆராய்ஞ்சு சொல்லி இருக்காங்க நிபுணர்கள். (இதே சமயம்தான் கம்போடியாவிலும் பல கோவில்கள் கட்டிக்கிட்டு இருந்துருக்காங்க. அங்கே இருக்கும் அப்ஸராக்கள், காந்தர்வர்கள் சிலைகளைப்போல் இங்கேயும் இருக்கு!!!)
கஜ்னி முகமதுவின் படையெடுப்பினால் அழிக்கப்பட்ட ஏராளமான இந்துக்கோவில்களில் இதுவும் ஒன்னு.


அப்சரா

அட! அதே வாலில்லா சிங்கம்!


இந்து மதக் கடவுளர்களான விஷ்ணு, சிவன், உமா, கிருஷ்ணன், வராக மூர்த்தி, பிரம்மா, பிள்ளையார் சிலைகள் இருந்துருக்கு. பஞ்சாயன சம்பிரதாயம்

ஈசுவரன், அம்பாள். விஷ்ணு விநாயகர். சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.

இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்கரேக் ஓடியகல் விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது.

விநாயகருக்கு உருவமான சோனபத்ரக் கல். கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்றுசேர்த்து வைத்ததுபோலாகும்.

நன்றி: காஞ்சி சங்கராச்சாரியாரின்( பெரியவர்) தெய்வத்தின் குரல்


கஜூராஹோ கோவில் சிற்பங்களைப்போல் இங்கேயும் இருந்ததாம். இப்போ சாம்பிளுக்கு ஒன்னு ரெண்டு இருக்கு. கம்போடியாக் கோவில்களில் பாலியல் சிற்பங்கள் ஒன்னுமே இல்லை. எல்லாம் படு நீட் என்னும்போது இந்தியக் கோவில்களில் மட்டும் ஏன் இப்படி?


கோவில்களுக்கு மக்களை வரவழைக்கத்தான் இப்படி சீப் பப்ளிசிட்டி பண்ணதுன்னு படிச்சேன். இன்னொரு இடத்தில் இப்படி இருக்கு,


'மனித வாழ்வில் பாலியலும் ஒரு பகுதியாக இருப்பதால் இனப் பெருக்கத்தின் அவசியம் காரணமாக அமைக்கப்பட்டிருக்கலாம்.'

ஐயோ..... போதும் போதும், மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகி பூமியே வெடிக்கப்போகுது:(




சின்ன பீடங்களில் தனித்தனியாக விஷ்ணு, கங்கா, கணேசா, சிவா, உமான்னு பெயர்களுடன் வச்சுருக்கும் சிற்பங்களை அருங்காட்சியகத்தில் பார்த்துட்டு அடுத்துள்ள ஒரு கேட் வழியாப் போனால் 'கோவில்'. அடி பீடம் மட்டுமே மேடையா நிக்க, இடிஞ்சுப்போன கோபுரத்தின் கற்களை எடுத்து ஒரு பெயருக்கு கோபுரமா அடுக்கி நடுவில் வச்சுருக்காங்க.
நிறைய மரங்கள் இருப்பதும் வசதிதான். எல்லா மரங்களைச் சுற்றியும் சிற்பவேலைப்பாடுகளுடன் இருக்கும் இடிஞ்சு விழுந்த கற்கள். சில மரங்களைச்சுத்தி மேடை அமைச்சும் வச்சுருக்காங்க. இதிலும் சிற்பங்கள் உக்கார்ந்துருக்கு. கூடவே இங்கே வந்து தூங்கும் சிலரும்:(



நல்லா சுத்தமாப் பராமரிச்சுக்கிட்டு வர்றாங்க போல! நடைபாதையிலும், சிற்பங்களுக்கும் மின்சார விளக்கெல்லாம் போட்டுருக்கு. ராத்திரி வந்து தூங்கும் ஆட்கள் பயமில்லாமத் தூங்கலாம் இல்லே? ஆமாம்.... அதான் அஞ்சு மணிக்கெல்லாம் கேட்டை அடைச்சு வச்சுடறாங்களே, அப்ப எதுக்கு இந்த லைட்டாம்? மழைத்தண்ணீர் போய் சேர குளம் ஒன்னு ஒரு பக்கம் கட்டி வச்சுருக்காங்க பழங்காலத்துலேயே! அதுலே இருந்து தண்ணீர் வெளியேறி மரங்களுக்கு போகுதாம். காவலுக்கு இருந்தவர் சொன்னார்.
நல்லவேளை அரசாங்கம் 1964 இல் முழிச்சுக்கிச்சு. இங்கிருந்து இனி கற்களைத் திருடினால் மூணு மாசம் சிறையும் அபராதம் 5000 ரூபாயும்.

28 comments:

said...

//சின்னச்சின்ன அறைகளில் சுத்திவரச் சிற்பங்களை வச்சு பெயரெல்லாம் போட்டு வச்சுருக்காங்க. சிதையாத சிற்பமுன்னா ஒன்னுகூட இல்லை:(//

:( கஷ்டம், தென்னிந்திய கோவில்களில் இந்த அவலம் எதுவும் இல்லை.

said...

north india suffered badly because of muslim invasion. e

said...

இங்கிருந்து இனி கற்களைத் திருடினால் மூணு மாசம் சிறையும் அபராதம் 5000 ரூபாயும்.
ஒரு கல்லுக்கா இல்ல அவ்வளவுக்குமா? :-)

said...

உள்ளங்கை அளவு கருங்கல்லில் செய்த நாகமே 500பக்கம் சொல்லி 400 ரூ க்கு குடுத்தாங்க.. நீங்க் படத்தில் போட்டிருக்கிற கல்லுங்க 5000 ஆகாம என்ன..? மக்களுக்கு இப்படியா கிடைக்கிற பொருளுன்னா சக்கரை..

said...

அக்கா!
செய்தி படங்கள் வருத்தமளிக்கிறது.எனினும் இதைத் திரட்டி இக்காட்சிப்படுத்தலை ஒழுங்கு செய்தோர் பாராட்டுக்குரியோர்.
இதைத் திருடுபவர்களுக்கான தண்டனை போதாது. இச்சிலையில் ஒன்றையே மேல்நாட்டு அருங்கலை விற்போர் குறைந்தது 500 யூரோவுக்கு வாங்குவார்கள்.நீங்கள் அறியாததல்ல!
திருடி விற்றுவிட்டு அபராதமும் கட்டி; சிறையிலும் இருக்கப் பயபடமாட்டார்கள்.
தண்டனை கூட்டப்படவேண்டும்.

said...

தயவு செய்து இந்த தொடரை புத்தகமாக போடும் போது இதே மாதிரி வண்ணத்தில் போடும் நபர்களை தேர்ந்தெடுத்து அவஸ்யம் உருவாக்கவும்.

எழுத்துக்களை விட படம் தான் அதிகம் பேசுது.

said...

படிச்சிட்டேன் டீச்சர் ;)

said...

nice, thanks for sharing, waiting for you to come back from those countries.

said...

கோவிலின் தற்போதைய நிலையை பார்க்கும்போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது டீச்சர்:(

said...

மரத்தைச்சுத்திலும் சிற்பங்களை காட்சிக்கு வெச்சுருக்காங்களா? இல்லை.. முட்டுக்கொடுத்து வெச்சுருக்காங்களான்னே தெரியலை :-((

said...

வாங்க கோவியாரே.

தென்னிந்தியக் கோவில்களில் பாழடைஞ்சு ஒரு நாள் ஒருவேளை பூஜைக்கும் வழி இல்லாமல் கிடக்கும் பலதும் இருக்கு.

இடிபாடுகளா இல்லைன்னா.... எல்லாக் கல்லையும் கொண்டு போயிருப்பாங்க. அப்படியெல்லாம் பாதி வேலை செய்யமாட்டாங்க நம்ம மக்கள்.

said...

வாங்க எல் கே.

ஆமாம். இது உண்மைதான்:(

said...

வாங்க குமார்.

எல்லாக் கற்களுக்கும் என்றால் ரொம்ப சல்லிசு இல்லை? :-))))

said...

வாங்க கயலு.

நாகம் எதுக்கு வாங்குனீங்க? பூஜிக்கவா?

said...

வாங்க யோகன் தம்பி.

நலமா? ரொம்ப நாளா ஆளையே காணோம்?

எங்க ஊரில்கூட சில சாமி சிலைகள் விற்பனைக்கு வந்துருந்துச்சு.

நமக்குதான் வாங்கினால் எங்கே வைப்பதுன்னு பிரச்சனை. நம்ம வீடுகளுக்கு வந்தால் குறைந்தபட்சம் ஒரு விளக்காவது வைப்போம்.

said...

வாங்க ஜோதிஜி.

தீர்மானமே செஞ்சுட்டீங்களா இது புத்தகமா வரப்போகுதுன்னு:-))))

பதிப்பாளர் கிடைக்கணும். கலர்ப்படம் போடுபவர்களாவும் இருக்கணும்.

எல்லாத்தையும் தாண்டி, நம்ம ஆன்மீகச் சுற்றுலா(?) ஆன்மீகத்துலே வருமான்னு தெரியலை:(

இந்தக் கோவில் இன்ன நாள் இந்த பரிகாரம் இந்த ராசிக்குன்னு ஒன்னும் இல்லாம சும்மா சப் னு கிடக்குதே:))))

said...

வாங்க கோபி.

நல்ல பிள்ளை:-)))))

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

அதென்ன, வெளிநாடுன்னா அத்தனை வெறுப்பா?????

said...

வாங்க சுமதி.

அங்கே கோவில்ன்னு சொல்லிக்க இப்ப ஒன்னும் இல்லைதான். ஆனால்........
எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் இருப்பார் இல்லையா?

said...

வாங்க அமைதிச்சாரல்.

இன்னும் முட்டுக்கொடுக்கும் நிலை வரலை.
மூட்டு சரியாத்தான் இருக்கு, மரங்களுக்கு:-)))))

said...

கோயிலுக்கு வாங்கி வைக்கத்தான் பரிகாரத்திற்கு.. அதை வச்ச ரெண்டுநாளில் யாரோ திருடிட்டாங்க.. திரும்ப விலைபோட்டு
விக்கப்பட்டிருப்பாரோ என்ன்வோ

said...

எல்லாத்தையும் தாண்டி, நம்ம ஆன்மீகச் சுற்றுலா(?) ஆன்மீகத்துலே வருமான்னு தெரியலை:(

இந்தக் கோவில் இன்ன நாள் இந்த பரிகாரம் இந்த ராசிக்குன்னு ஒன்னும் இல்லாம சும்மா சப் னு கிடக்குதே:))))

சும்மா மு.சொ அப்டின்னு நினைக்காம கல்லூரியில் படிக்கும் தமிழ் படிக்க ஆர்வம் உள்ள ஒரு மாணவர் மாணவியர் யாரிடமாவது இதை கொடுத்து படிக்கச் சொல்லிப்பாருங்க.
என்ன விவரம்ன்னு தெரியலைன்னாக்கூட அவங்களுக்கு இந்த நடையும் படமும் ரொம்ப பிடிக்கும்.

பரிகாரத்திற்கு எல்லாம் வேறு கோஷ்டிகள் உண்டு. அது எதற்கு நமககு.

said...

கயலு,

இவரும் சட்டையை உரிச்சுட்டு ரீ ஸேலுக்கு ரெடி ஆகிட்டாரா?

அடப்பாவமே:(

வரவர எதைத்தான் திருடறதுன்னு இல்லை......

said...

ஜோதிஜி,

தமிழ் படிக்கத் தெரிஞ்ச கல்லூரி மாணவமாணவி..... நானெங்கே போவேன் சண்டிகரில் :(


ஆன்மீகப்புத்தகம் வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நம்மது சுவாரசியப்படாதுங்க.

மக்கள் சிந்திப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

said...

Teacher
As someone said please make a good book about your Thai, Cambodia trip in Tamil.(English and Hindi as well) I hope it is possible by you working with translators like Dondu.

Sorry for English no Tamil font available.

said...

வாங்க குடுகுடுப்பை.

ஜக்கம்மாவே சொல்லிட்டா!!!!!

பார்க்கலாம். யாருக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கோ:-)))))

உலகமொழிகள் அனைத்திலும் முதன்முதலாக.........

said...

பீமா தன் பொண்டாட்டிக்காகக் கட்டின கோவில்னு யாரும் சொல்லலியா??
இப்பவாவது கவனிக்கைறாங்களே. நம்ம ஊரில மியூசியத்துக் குள்ள இருந்தே சிலையெல்லாம் காணமப் போயிருக்கேப்பா.:(

said...

வாங்க வல்லி.

பீமன் மனைவி????? இன்னும் அவ்வளவுக்கு இங்கே யாரும் யோசிக்கலைபோல:-)))))

நம்ம அருமை நமக்கே தெரியலை என்பதுதான் விசனம்:(