Thursday, August 19, 2010

டாக்டர்ஸ், கொஞ்சம் என் காலைக் கடிங்க...............( கம்போடியாப் பயணம் 11 )

"பத்து........"


"ம்..... நாலு"

"எட்டு"

" ஊஹூம்...நாலு"

"ஏழு....."

"அஞ்சு"

டீல் சரியாச்சு:-)

கேக்க அநியாயமா இருந்தாலும் பேரம் பேசும் ஆட்கள் மனநிலையைத் தெரிஞ்சுக்கிட்டு வியாபாரிகளும் ரெட்டிப்பா விலையைச் சொல்றாங்களே!

தங்கத்தாமரைகளைப் பார்த்த கையோடு 'ஓல்ட் மார்கெட்' என்னும் பகுதியில் ஒரு காஃபி ஷாப்லே இறக்கி விட்டார் 'வேன்' இப்ப மணி ஆறு. சரியா எட்டரைக்கு வந்து அறைக்கு எங்களைத் திரும்பக் கூட்டிட்டுப்போகணும். போகவர ரெண்டுக்கும் சேர்த்து மூணு டாலர். எதிர்வரிசையில் வந்து நிப்பேன்னு சொல்லிட்டு போனார்.
நல்லா நீட்டா இருக்கு இந்தக் கடை. ரெண்டு கப்புச்சீனோவுக்குச் சொல்லிட்டு வெளியில் நடைபாதையை அடைச்சுப்போட்டு வச்சுருக்கும் இருக்கைகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம். சிங்கை லிட்டில் இந்தியாப்பகுதி செராங்கூன் ரோடை நினைவுபடுத்து சில பழைய கட்டிடங்களோடு இருக்கேன்னு பார்த்தால் கண்னுக்கு நேரா எதிர்வரிசையில் லிட்டில் இண்டியான்னு ஒரு உணவகம்!
நம்ம பக்கத்துக் கடையிலே மொலுமொலுன்னு 'டாக்ட்டர்ஸ்' ரொம்ப பிஸியா பேஷிண்டின் பாதங்களைத் தின்னுக்கிட்டு இருந்தாங்க. டாக்ட்டர் ஃபிஷ் மஸாஜ்.

( என்னடா....இது இன்னுமா இந்தியாவுக்கு வரலைன்னு நினைச்சேன். என் 'மனமுகூர்த்தம்' இந்தப்பதிவு எழுதும் நாள் இங்கே சண்டிகர் நகரத்திலும் டாக்குட்டர் ஃபிஷ் வந்துட்டார். படம் பார்க்கவும்)
நாங்க சாலக்குடியில் இருந்தப்ப, தினமும் சாலக்குடி புழை(ஆறு)யில்தான் குளியல். துணிதுவைக்கப் போட்டுருந்த கல்லில் காலை ஆட்டாமக் கொஞ்சநேரம் உக்கார்ந்தாப் போதும். மீன்கள் வந்து காலை மெள்ளக் கடிக்கும். கிச்சுக்கிச்சு மூட்டுவதுபோல் சிரிப்பாவும் கூச்சமாவும் இருந்தாலும் காலை அசைக்கவே கூடாது. தண்ணீரில் ஊறிப்போய் இருக்கும் இறந்த செல்களை நாசூக்காக் கடிச்சு எடுப்பதில் மீன்கள் கில்லாடிகள்.
காஃபியை குடிச்சுட்டு அப்படியே காலாற நடந்து போனது பழைய மார்கெட்கள் இருக்கும் இடம். இந்த ப்ளாக் முழுசுமே கடைகள் நெரிபட்டுக் கிடக்குன்னால் எதிர்வரிசையில் ஆற்றையொட்டி இருக்கும் பெரிய கட்டிடத்தில் அடுக்கடுக்கா கடைகள் வரிசை. பழையகால மெட்ராஸ் மூர்மார்கெட்டை நினைவு படுத்துது.
நகைநட்டு, நினைவுப் பொருட்களைப் பார்த்துக்கிட்டே நடக்கும்போது திடீர்னு, கட்டிப்போட்ட நண்டுகள் மெதுவாக் காலை உதறிக்கிட்டு இருக்குதுகள். நடுப்பகுதி முழுசும் உணவுப்பொருட்கள் காய்கறிகள் மீன்வகைகள்ன்னு நாலுவரிசை. நாம் கொஞ்சம் லேட்டாப் போயிருக்கோம். சில கடைகளை மூடத்தொடங்கி இருந்தாங்க. அவுங்கவுங்க கடைகளைக்கூட்டிப் பெருக்கி, குப்பைகள், ப்ளாஸ்டிக் பைகளையெல்லாம் ஒழுங்கா சேகரிச்சு பெரிய பொதிகளில் கட்டி நீட்டா வைக்கிறாங்க.
துணிமணிகள், கைக்கடிகாரங்கள், செருப்புகள், ஆபரணங்கள், நவரத்தினக் கற்கள் கண்ணாடிச் சாமான்கள், பொம்மைகள், வெள்ளிமுலாம் பூசிய ப்யூட்டர் கப், மக், பொம்மைகள் இப்படி ஏராளம் நம்ம பங்குக்கு ஒரு கால் மடிச்சு உக்கார்ந்துருக்கும் யானை, மகளுக்கு சில வெள்ளி ஆபரணங்கள் வாங்கிக்கிட்டு கட்டிடத்தைச் சுற்றிப்போகும் கடைவீதிக்குப் போனோம். பேரம் எல்லாம் கால்குலேட்டரை வச்சுத்தான். அவுங்க அடிக்கும் நம்பரை எடுத்துட்டு நாம் நம்ம விலையை அடிப்போம். நாலுமுறை கால்குலேட்டர் இங்கும் அங்கும் போனபிறகு பேரம் படிஞ்சுரும்:-))))

அந்திநேரக் கடைவீதி கலகலப்பா இருந்துச்சு. நம்ம 'பால் த ஆக்டோபுஸ்' போல புண்ணியம் செய்யாத பாவிகள், கருவாடாக் காய்ஞ்சு சுவற்றில் உக்காந்துருக்காங்க. ஒரு கடையில் தேள், பாம்பெல்லாம் பாட்டில் எண்ணெயில்! படத்தை விரிச்சு வச்சுருக்கும் பாம்பு! இந்த திரவத்தை என்ன செய்வாங்கன்னா.... குடிப்பாங்களாம்:(

உணவுக்கடைகள், ஓவியங்கள், துணிமணிகள், கைப்பைகளையெல்லாம் கடந்து போகும்போது ஆங்கோர் நைட் மார்கெட் கண் விழிக்க ஆரம்பிச்சது. மாலை 4 மணிக்கு இதைத் திறப்பாங்கன்னாலும் ஜிலுஜிலுன்னு விளக்கு வைக்கும் நேரம்தான் அழகு. இங்கே இரவு பனிரெண்டுவரை கடைகள் இருக்குமாம்.

மார்கெட் கட்டிடத்தில் பார்த்த அதே வகை சாமான்கள். ஆனால் இன்னும் விலை கொள்ளை மலிவு! அடாவடியா பேரம் பேசுனாலும் படிஞ்சுருது. ஆனால் நமக்கும் நியாயமுன்னு ஒன்னு இருக்குல்லே? டாலரை இந்திய ரூபாயா மாத்தி, இன்னொருக்கா நியூஸி டாலரா மாத்தி மனக்கணக்குப் போட்டுறமாட்டேனா என்ன? பார்கள் எல்லாம் கூட்டம் சேர ஆரம்பிச்சு.... எங்கே பார்த்தாலும் வெள்ளைக்கார சுற்றுலாப்பயணிகள். வறுத்த மோர் மிளகாயை வித்துக்கிட்டு வந்த பெண்ணிடம் அது என்னன்னு கேட்டேன். ஒன்னை எடுத்து வாயில் போட்டு 'கரக்'ன்னு கடிச்சு மென்னுக்கிட்டே என் கிட்டே கொண்டுவந்து காமிச்சாங்க...............அய்ய.............கரப்ஸ் நொறுக்ஸ் :(
கொஞ்சநேரம் சுத்திப்பார்த்துட்டு 'பனானா லீஃப்' என்ற கடையில் ராச் சாப்பாட்டை வாங்கிக்கிட்டு காஃபி ஷாப்புக்கு எதிரில் போய் நின்னா..... நமக்கான டுக்டுக் அங்கே ஏற்கெனவே வந்து காத்துருக்கு! உணவகங்கள் நடைபாதையில் அங்கங்கே பெரிய ஸ்க்ரீன் வச்சு உலகக் கோப்பைக் கால்பந்தாட்டம் காமிச்சுக்கிட்டு இருக்காங்க.

ஹொட்டேல் வாசலுக்கு வந்து இறங்கினா நம்ம ஸ்மெய் காத்துக்கிட்டு இருக்கார். சாயந்திரம் நாம் வெளியே கிளம்புன சமயம் நம்மைக் கூட்டிக்கிட்டுப் போகாதது மனசுக்கு வருத்தமாப் போயிருச்சாம். மன்னிக்கணுமாம்!!!!

மறுநாள் காலை எட்டுமணிக்கு வரச்சொன்னோம். நாளை பகல் 2 வரை நமக்கு ஊர்சுத்த நேரம் இருக்கு.

தொடரும்..........................:-)

20 comments:

said...

இதெல்லாம் பாத்துட்டு கடைசியில் பனானா லீஃபில் என்ன வாங்கி சாப்பிட்டீங்க சொல்லலையே.. :)
இருந்தாலும் கரப் நொறுக்ஸ் நல்ல பேரு. வறுத்தது பரவாயில்லை.

said...

hmmm... nama sapaatu thattulae poochi yeruntha sapidamattom... aana avanga thattu neriya poochiya thaan sapuduranga...

yethai yellam parkarthu kandipa oru nella anubhaveam thaan...

said...

படத்தில பார்க்கும் போதே பக்குன்னு இருக்கு எப்படி தான் சாப்பிடறாங்களோ!! ;)

said...

புழா தான் புழைக்கடை ஆச்சோ!! என்ன எல்லாம் நடக்கிறது இந்த தாய்லாந்தில:)
தெரிஞ்சிருந்தா நம்ம வீட்ல பூனைக்குப் பதிலா ஒரு பாங்காக் ஆளை வச்சிருக்கலாம், கரப்பைப் பிடிக்கத்தான்:)
அம்மா ஊர்ல கூட குளத்தில ,படிக்கட்டுல இப்படித்தான் உட்காருவாங்களாம். மீன் மருத்துவர்கள் உபயத்தில காலில் அழுக்கே இருக்காதுன்னு சொல்வாங்க.

said...

மீன் வைத்தியம் பரவாயில்லை மற்றதெல்லாம் பார்க்கவே பயமாயிருக்கு டீச்சர்:))))

said...

இன்னும் வேறு எதையெல்லாம் திம்பாங்களாம்? காய்கறி வேலை எறிடிச்சுனு கவலைப் படவேண்டாம். வீட்டிலேயே கரப்ஸ், பல்லி, இன்ன பிற பூச்சி எல்லாம்வளர்த்துக்கலாம்
.

said...

அன்புள்ள ஆசிரியருக்கு
அது எல்லாம் ஓகே ...fish
treatment எல்லாம் ஓகே ஆனா
அந்த பாம்பு திரவம் தான்
ஜீரணிக்க முடிலே
சிவஷன்முகம்

said...

டீச்சர், இப்படி பயங்கரமான படங்கள போடும் போது ஒரு "டிஸ்கி" கொடுத்திடுங்க.

மீன் மருத்துவம், மகத்தான மருத்துவம்... co-existence பண்ண பல வழிகள் இருக்கு ஆனா மனுசன்.... என்னமோ போங்க.:-(

said...

அவுங்கவுங்க கடைகளைக்கூட்டிப் பெருக்கி, குப்பைகள், ப்ளாஸ்டிக் பைகளையெல்லாம் ஒழுங்கா சேகரிச்சு பெரிய பொதிகளில் கட்டி நீட்டா வைக்கிறாங்க./////
ஏனோ தி.நகர் மார்கெட் நாபகம் வருது ;-)
அது என்ன அக்டோபுஸ் ஆஹ ?அட கடவுளே .இங்க food நெட்வொர்க் la. ஒரு நாள் மயில புடிச்சு samachanga பார்த்தேன்.என்ன கொடுமை இது.இதுல பாம்பு எண்ணெய் வேறயா.அப்புறம் என்னக்கு ஒன்னு புரியல டீச்சர்.அது மோர்மிளகாய இல்ல வேற எதாவது பூசிய.குழப்புதே.இங்கேயே banana லீப் restaurant இருக்கு.அங்க சிற்றுண்டிக்கு chapathi மாதிரி ஒன்னு தருவாங்க பாருங்க.supero சூப்பர்.

said...

வாங்க கயலு.

கோபாலுக்கு சப்பாத்தி ரோல் போல ஒன்னு. எனக்கு ஒரு மேங்கோ ஸாலட், ஒரு ஃப்ரெஞ்சு ஃப்ரை.

said...

வாங்க ஸ்ரீநிவாசன்.

சீனாவில் தேளை நம் டைனிங் டேபிளில் சின்ன ஸ்டவ் வச்சுக் கண்முன்னாலேயே கொதிக்கும் எண்ணையில் போட்டு வறுத்துத் தர்றாங்களாம்:(

said...

வாங்க கோபி.

ஆமாம். யோசனையா இருக்கேன். நம்ம சக்கரைப் பொங்கல் அவுங்களுக்கு எப்படி இருக்கும்???

said...

வாங்க வல்லி.

கம்போடியா ஆளை வச்சுக்கலாம்ப்பா.
அவருக்கும் ஃப்ரெஷா கிடைக்குமே!


முந்திக்காலத்துலே வீட்டுப் புழக்கடைக் கதவைத் திறந்தால் தோட்டத்து வாவி. இல்லேன்னா.... வாய்க்கால் முழுக்க ஓடும் தண்ணீர்.

இப்போ????? :(

said...

வாங்க சுமதி.

சண்டிகருக்கு வந்துச்சு இந்த வைத்தியம். சீக்கிரம் சென்னைக்கு வரும் பாருங்க!

said...

வாங்க விருட்சம்.

இங்கே நண்பர் ஒருவரின் பிள்ளைகளிடம் பேசும்போது நாங்க அவ்வளவா நான் வெஜ் சாப்பிடறதில்லைன்னு சொன்னப்ப, பசங்கள் சொன்ன பதில், 'நாங்க வெஜ் சாப்பிடறதில்லை'!!!

said...

வாங்க சிவஷண்முகம்.

பாம்பைப் பார்த்தவுடன் எனக்கும் 'பக்'னு ஆகிருச்சு:(

said...

வாங்க நன்மனம்.

பாட்டில் பாம்பு படத்தை முன் ஜாக்கிரதையா நான் போடலையே. கவனிக்கலையா?:-))))

said...

வாங்க விஜி.

அது கரப்பான் பூச்சி வறுவல்ப்பா.

வெள்ளைக்கரப்பு போல!

பனானா லீஃப் நிறைய இடங்களில் வச்சுருக்காங்க. ஊருக்கேத்த உணவு.

சியெம்ரீப்லே க்ரோக்கடைல் மீட் பர்கர் இருக்கு:(

said...

கரப்பான் பூச்சியா?ஒவ்வே....

முதலையும் விடு விகலிய.கொடுமை .அணிக்கு ஒரு நாள் தவளை kaala சமைக்கறத பார்த்தேன்.எங்க ஊருல தவளை தொட்டாலே சொறி வரும்னு சொல்லுவாங்க.

said...

விஜி,

பர்கர் செஞ்ச பிறகு அந்த முதலைகளையெல்லாம் இப்ப ஸ்டஃப்டு டாய்ஸாட்டம் ஒரு இடத்துலே விக்கறாங்க.