Wednesday, August 25, 2010

மூன்று நாடுகள்...............( தாய்லாந்து, கம்போடியாப் பயணம் நிறைவுப்பகுதி )

ஹொட்டேல் வரவேற்பறையில் ஒரு ரெட்டை மாட்டுவண்டி டிஸைன் கண்ணை இழுத்துச்சு. சக்கரம் அச்சுலே இருந்து கழண்டு வராதபடி அருமையா ஒரு எக்ஸ்டென்ஷன் கட்டை கொடுத்து அமைச்சுருக்காங்க. அந்தக் காலத்து டிஸைனா இருக்கலாம். கண்டு பிடிச்சவர் தமிழ் சினிமா பார்த்துருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். வில்லன் கடையாணியைப் பிடுங்கி வச்சுருவார். இதை அறியாத நாயகன், காளைகளை விரட்ட, அது ஓடு ஒடுன்னு ஓட, கடையாணி இல்லாத சக்கரம் கொஞ்சம் கொஞ்சமா அச்சுலே இருந்து கழல..... நாமெல்லாம் பல்லைக் கடிச்சபடி இருக்கை நுனிக்கு வர ( இயக்குனர் விருப்பப்படி) பயங்கர த்ரில், இப்படிக் கட்டை வச்சு இருந்தா...பாழாய்ப் போகாதோ!!!!!

ரெண்டு மணிக்கெல்லாம் கிளம்பினோம். விமானநிலையம் வர மெயின் சாலையில் போகும்போது ரெண்டு பக்கமும் அட்டகாசமான ஹொட்டேல்கள் அணிவகுத்து நிக்குது. ஆஹா...... வரும்போது இருட்டுனதாலே இதெல்லாம் கண்ணில் படலை. சொல்லிவச்சாப்போலே எல்லாத்திலும் நுழைவு வாசலில் அஞ்சு தலை. அதென்னடா..... இங்கே இவர் மேலே அப்படி ஒரு ஈர்ப்பு!!!!
மெயின் ரோடிலேயே நடைபாதையை அடுத்து தாமரைக் குளங்கள். பச்சைக்குப் பச்சை, அழகுக்கு அழகு. காசுக்குக் காசு.

ஏர்போர்ட் வாசலிலே போய் இறங்கிக்கலாம்

இருவது நிமிசத்துலே விமான நிலையம் வந்து சேர்ந்தாச்சு. உள்ளே செக்கின் செய்யப்போனால்...... ஒரு ஈ காக்கா இல்லை. சின்ன விமான நிலையம்தான். நாட்டின் டூரிஸம் வருமானத்துக்கு இதில்தான் முதலிடம். ராத்திரி எட்டரைக்கு ஒரு ப்ளைட் பாங்காக் போக இருக்குன்னாலும் பலநாட்களில் அது ரத்து ஆயிருமாம். நம்ப முடியாதுன்னு பாங்காக் ஏர்லைன்ஸ்காரர்களே சொல்றாங்க. நமக்கோ மறுநாள் காலை ஏழரைக்கு டெல்லி ப்ளைட் பிடிக்கனும். வம்பு வேணாமுன்னுதான் இப்பவே கிளம்பிட்டோம்.

எண்ணி ஒன்பது பேர் நம்ம ஃப்ளைட்டில். வரும்போது கொடுத்த மாதிரியே வெஜிடபிள் சேண்ட்விச். ஒருவேளை வருசத்துக்கு மொத்தமா வாங்கி வச்சுருக்காங்களோ??? அதே 50 நிமிசப்பயணம். பாங்காங் நகரைக் கொஞ்சம் தாழ்வான உயரத்தில் பார்த்தேன். வாட்டுகள் அங்கங்கே தாரளமா இடம்பிடிச்சு இருக்குது.
பாங்காக் நகரின் நதி 'ச்சாவ் ப்ராயா'
சுவர்ணபூமியில் இறங்கினோம். பறந்த நேரத்தில் பாதியை விமானத்திலிருந்து எங்களைக் கூப்பிட்டுப் போன பேருந்தில் செலவு செஞ்சோம். அது என்னங்க, வேற ஊரிலே இறக்கிட்டாங்களா என்ன? போறோம் போறோம் போய்க்கிட்டே இருக்கோம். ஏழெட்டு கிலோமீட்டர் மெதுப்பயணம்.

எட்டு நாளைக்கு முன் இங்கே வந்து இறங்கினவுடன் ஓடுன வேகத்தில் அர்ரைவலில் இருக்கும் அழகான விஷயங்களைப் படம் எடுக்க விட்டுப்போச்சு. அதை இப்ப எடுத்து நம் கடமையை முடிச்சுக்கலாமுன்னு கேமெராவைத் தீட்டி வச்சுக்கிட்டுக் காத்திருந்தேன். ஆனா.....

பேருந்தைவிட்டு இறங்கி விமானநிலையக் கட்டடத்துக்குள் நுழைஞ்சால் கண்ணெதிரே குடியுரிமை வழங்கும் இடம். இந்தமுறையும் நோ ச்சான்ஸ்:(

நாளைக்குக் காலை ஆறு மணிக்கு இங்கே இருக்கணுமே என்பதால் நகருக்குள் போகாமல் விமானநிலைய ஹொட்டேலில் ஒரு இரவு தங்கிக்க ஏற்பாடு. நோவோடெல் (NOVOTEL). அவுங்களுடைய இலவச பிக்கப் வண்டியில் உக்கார்ந்தா..... அதுவும் இங்கே சுத்தி அங்கே சுத்தின்னு விமானநிலைய வளாகத்துலேயே வட்டம் போட்டு பத்துப் பதினைஞ்சு நிமிசம் சுத்திக்காட்டிட்டு நம்மளைக் கொண்டுவிட்டுச்சு.

தேவைக்கும் அதிகமான பிரமாண்டம் இங்கேயும். எங்கேயும் போக வேண்டாம். நல்லா ஓய்வு எடுக்கணுமுன்னு தீர்மானிச்சதால் சாப்பிடக்கூட கீழே போகாமல் ரூம்சர்வீஸில் முடிச்சுக்கிட்டோம். ஜன்னலில் பார்த்தால் கையெட்டும் தூரத்தில் விமானநிலையம் ஜொலிக்குது. நிமிசத்துக்கொரு விமானம் ஏறுவதும் இறங்குவதுமா இருக்கு. தரை ஊர்திகள் போக்குவரத்து ஏராளம். ஆனால் ஒரு சத்தமும் இல்லை. ஊமைப்படம் பார்த்துக்கிட்டு இருக்கேன்! நல்லத்தான் கட்டி இருக்காங்க! அமைதியோ அமைதி.

அதிகாலை அஞ்சரைக்கு எழுந்து குளிச்சுக் கிளம்பி விமானநிலையக் கட்டிடத்துக்குள் வந்து சேர்ந்தப்ப ஆறரை. அதான் இங்கே காஃபி வொர்ல்ட் இருக்கேன்னு அறையில் இருக்கும் காஃபியைச் சட்டை செய்யலை. ஆனா எப்படியோ அது இருந்தபக்கம் போகாம வேற பக்கம் திரும்பிட்டோம்போல! .

லேசான தலைவலி ஆரம்பிச்சது. இந்த காஃபிச் சனியனை விட்டொழிக்கணும். வேண்டாத சமாச்சாரத்தையெல்லாம் எப்படிப் பழக்கி வச்சுருக்கோமுன்னு லேசா ஒரு கோபம். (நல்ல காஃபி கிடைச்சதும் கோபத்தை மறந்துருவொம்லெ)

கோபால் புண்ணியத்துலே லவுஞ்சுக்குப்போய் லேசா ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் & காஃபியை முடிச்சுக்கிட்டு நம்ம கேட்டுக்கு வந்தோம்.
இந்த முறை 'தாய் ஏர்வேஸ்' விமானத்துலே நம்ம இருக்கைக்கு முன் டிவி ஸ்க்ரீன் இருக்கு. நிகழ்ச்சிகள் அவ்வளவா சுவாரசியப்படலை. பெண் பயணிகளுக்கு 'ஆர்கிட் பூ ப்ரோச்' ஒன்னு கொடுத்தாங்க.

நாலரை மணிப் பயணம் முடிச்சு டெல்லியில் வந்து இறங்கினோம். அதே பழைய டெர்மினல்தான். புதுசு மறுநாள் முதல் பயனுக்கு வருதாம். 2 நமக்காக வந்து காத்துருந்த வண்டியில் சண்டிகரை நோக்கிக் கிளம்பிட்டோம். டெல்லி மா 'நரக'த்துக்குள்ளே போகலை. அதென்னவோ டெல்லி ட்ராஃபிக்லே மாட்டிக்க மனசே வரமாட்டேங்குது:( ஆனாலும் பிதாம்பூர் வரை கொஞ்சம் மெதுவான பயணம்தான். பகல் பனிரெண்டு மணி ஆகுது. போக்குவரத்து அதிகமில்லைன்னு ஓட்டுனர் சொன்னார்.

எல்லாம் நாம் விட்டுட்டுப்போன மாதிரியே இருக்கு. பத்து நாளுக்கு ஒரு மாற்றமும் இல்லை. வழியில் சாப்பிடன்னு இடம் தேடிக்கிட்டே ஹைவேயில் வந்து மூணு மணி நேரப் பயணத்தில் 'ஹவேலி'யை அடைஞ்சோம். அழகான செடிகள். கார் பார்க்கிங் ஏரியா நல்லாவே இருக்கு. அங்கேயே ரெஸ்ட் ரூம்ஸ் ஒரு பக்கம். நாட் பேட். சுத்தமாத்தான் இருக்கு. தோட்டத்தின் ஒரு பக்கம் ஒட்டைச்சிவிங்கி குடும்பம் ஒன்னு.

ஹவேலி
பஞ்சாபி தாபாதான். ஆனால் மாளிகை செட்டிங்ஸ். பெரிய வளாகத்தில் இருக்கு. ஒரு பக்கம் ரெஸ்டாரண்ட், அதுக்கு நேர் எதிர்ப்புறம் கொஞ்சம் கடைகள். பயணிகளுக்கான பொருட்களா கேமெரா, பேட்டரிகள், குடிதண்ணீர் பாட்டில், ஷால், பரிசுப்பொருட்கள்ன்னு கிடக்கு. இடைவெளியில் கயித்துக் கட்டில்கள், ஒரு கிணறு. அதுலே தண்ணி இறைச்சுக் குடத்தைத் தலையில் சுமந்துகிட்டுப்போறாங்க ஒரு பெண். இன்னொருத்தர் தண்ணி இறைச்சுக்கிட்டு இருக்காங்க.
இந்தப்பக்கம் ரெண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமா பாங்ரா நடனம் ஆடிக்கிட்டே இருக்காங்க.

ரெஸ்டாரண்டை ஒட்டி வெளியே பானிபூரி, குல்ஃபி, லஸ்ஸி, ஆலு டிக்கா, சாட் வகைகள் இப்படி தனித்தனியா அடுப்பு வச்சு சமைச்சுத்தரும் வகையில் அமைச்சுருக்காங்க. சாயந்திர வேளையில் கயித்துக்கட்டில்களில் ஹாயா உக்கார்ந்து வேணும் என்பதை வாங்கி உள்ளே தள்ளலாம். காசை வாங்கிப்போட்டுக்க கணக்குப்பிள்ளை ஒருத்தர், ஆனால்........... இந்தப்பக்கம் அம்மாவும் பொண்ணுமா ரெண்டு லேடீஸ், உக்காந்து தலைவாரி விட்டுக்கிட்டு இருக்காங்க. சாப்பாட்டுக் கடைவாசலில் இப்படி இருந்தா நல்லாவா இருக்கு? கண்டுக்காம உள்ளே போகவேண்டியதுதான்:)

மினி மீல்ஸ் வித் ஸ்வீட்ன்னு கொஞ்சம் சோறு, பருப்பு, கூட்டு, அப்பளம், கொஞ்சூண்டு பாயசம் நமக்கு. ஆனால் விலை கொள்ளை. 250 ரூ. ரெண்டு மீல்ஸ், அதிகமில்லையோ? ஹைவேன்னா இப்படித்தானாம். கோபால் சொல்றார்.
அங்கிருந்து ஒரு ரெண்டரை மணிப்பயணத்துலே வீடு வந்து சேர்ந்தோம். மணி சரியா நாலே முக்கால். முதல்லே நல்லதா ஒரு காஃபி போட்டுக் குடிச்சுட்டுத்தான் மறுவேலை.

இப்படியாக நம் தாய்லாந்து கம்போடியாப் பயணம் நிறைவுற்றது. இதுவரை பொறுமையாகக் கூடவே வந்த நம் வகுப்புக் கண்மணிகளுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

என்றும் அன்புடன்,
உங்கள் டீச்சர்.


பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!

36 comments:

said...

அந்த‌ மாட்டுவ‌ண்டி க‌ட்டை, அச்சு புடுங்காம‌ இருக்க‌ அல்ல‌...மேலே வைக்க‌முடியாத‌ பொருட்க‌ளை கீழே வைக்க‌,என்று நினைக்கிறேன்.மாட்டுவ‌ண்டி ஓட்டி 2 மாமாங்க‌த்துமேலே ஆகிவிட்ட‌து. :-))

said...

அந்த ஆறு வளைவுதான் நம்ம வீடு டீச்சர்.

நாம போனோமே அந்த பாலம் அதுதான்..

:))

said...

டீச்சர் அந்த ஆறு படத்தை சுட்டுகிடவா?..

:))

said...

வாங்க குமார்.

அகலமில்லாத இடமாச்சே. எப்படிப் பொருட்களை வைப்பாங்க. அதுவும் அதுக்கு அடிப்பாகம் காலியா இருக்கே.

அச்சு புடுங்காமல் இருக்கத்தான் அதுன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க புன்னகை தேசம்.

பயணம் முழுசும் உங்க நினைப்புதான். ஆற்றைப் பார்த்ததும் இங்கே இதுக்கு எதிரில்தான் இருக்கீங்கன்னு கோபாலிடமும் சொன்னேன்.


படம் சுட்டுக்கணுமா? என்ன கேள்விப்பா இது? உங்க ஊர் உங்க ஆறு. எடுத்துக்குங்க. எல்லாம் உமக்கே:-)))

இன்னும் கொஞ்சம் ப்ரைட்டா இருந்துருக்கலாம். லேசா ஒரு மேக மூட்டம்:(

said...

ஆதலினால் பயணம் செய்வீர்!//

:) வாட் நெக்ஸ்ட் ?

said...

//பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்//

ரொம்பச்சரி.. கூடவே வந்துக்கிட்டிருக்கேன் :-)))

said...

ஓ!!முடிஞ்சு போச்சா. அனத அம்மாவும் பொண்ணும் தான் என்ன அழகு. நீங்க இன்னும் இரண்டு நாள் சுத்திட்டு வந்திருக்கலாம்.
மாட்டுவண்டி அருமையா இருக்குமா. நான் கூடப் போயி வாங்கி வரப் போறேன்.அருமையான படங்கள்.
கொஞ்ச நாட்களுக்கு உங்களுக்குத் தூக்கத்தில அஞ்சு தலையார் வந்தாரோ:)

said...

http://www.virutcham.com/?p=3571
எனக்குப் பிடித்த பதிவுகளைச் சொல்லி இருக்கிறேன். அதில் உங்களது தளத்தையும் சேர்த்து இருக்கிறேன்.
டெல்லி வந்துட்டீங்களா?

said...

படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது டீச்சர்.அந்த பஞ்சாபி தாபாவில் உள்ள அனைத்து சிலைகளும் அருமை டீச்சர்:))))

said...

http://thulasidhalam.blogspot.com/2006/11/blog-post_27.html
டீச்சர், உங்க பழைய பதிவு கண்ணுல பட்டுது. அடுத்து எங்க.

said...

உள்ளேன் டீச்சர்... பயண கட்டுரையிலே பரிட்சை வச்சீங்கன்னா நான் பாஸ் ஆகிடுவேன்னு சொல்லிகிறேன்

said...

wonderful teacher.

said...

இங்கேயெல்லாம் போனதே இல்லை. கம்போடியா போக ரொம்ப நாளா ஆசை... ரசித்துப் படிக்கும்படி விவரமாக எழுதியிருக்கிறீர்கள். பாரதியார் தலைப்பாகையோடு இருக்கும் சந்தனப்பொட்டுக்காரரைக் கொஞ்சம் சிரிக்கச் சொல்லியிருக்கக் கூடாதோ?

said...

வணக்கம் டீச்சர்,

ரொம்ப நாள் கழித்து உங்கள் வலைப்பக்கம் வந்தேன்... சிங்கப்பூர் திரும்பி வந்தவுடன் இன்னும் போகாமலிருக்கும் நாடு கம்போடியா. உங்கள் பயணக்கட்டுரை படித்த்வுடன் உடனே போகவேண்டும் என்ற எண்ணம்.

ஒரு சில பகுதிகள் படித்து விட்டேன். திரும்பி வந்து முழுவதும் படிக்கிறேன். வழக்கம் போல் டீச்சர்ரோட பயணக்கட்டுரை அருமை.

நான் “மரத்தடி” பையன்:)

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

said...

வாங்க கயலு.

உங்க பக்கம் வரலாமான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

அநேகமா கூடிய சீக்கிரம் போகலாம். ரெடியா இருங்க:-)

said...

வாங்க வல்லி.

அஞ்சு தலையாருக்கு இங்கே அஞ்சலை.
வந்தால் பதிவு போடலாம்:-))))

ரெண்டு நாள் என்ன இன்னும் ஒரு வாரம் இருந்தாலும் அங்கிருக்கும் கோவில்களைப் பார்த்து மாளாது!

said...

வாங்க விருட்சம்.

நம்மையும் ஆட்டத்துலே சேர்த்ததுக்கு நன்றி.

டெல்லி வந்து சண்டிகரும் வந்தாச்சு. தொடர் ஆரம்பிச்சது வீட்டுக்கு வந்தபின்தான்.

said...

வாங்க சுமதி.

நல்லாதான் வச்சுருக்காங்க. ஆனா...உணவின் தரம் நல்லா இல்லை. ஒருவேளை அஸ்லி பஞ்சாபி வகைகள் மாலையில் வெளியே செய்வது நன்றாக இருக்கும்.

said...

வாங்க நன்மனம்.

ஆஹா..... லிஸ்ட் கிடைச்சுருச்சா?
அதுலே இருந்துதான் ஒன்னு எடுக்கணும்:-)

said...

வாங்க நசரேயன்.

ஒளிஞ்சு படிச்சாச்சா?

கேள்விகள் கடினமாத்தான் தயாரிக்கணும்:-))))

said...

வாங்க குடுகுடுப்பை.

ஜக்கம்மா சொல்லுக்கு அப்பீல் ஏது!!!!

நன்றி.

said...

வாங்க அப்பாதுரை.


அவருக்குச் சிரிக்கவே தெரியாதாம்:)

ஆரம்பம் முதல் இப்படி...கணக்குலே மட்டும் கவனமாம்:-)

தொடர் முழுசும் வாசிச்சதுக்கு நன்றி.

said...

வாங்க ரவிச்சந்திரன்.

ஆஹா...மரத்தடி பையரா!!!!!!

பசுமை நிறைந்த நினைவுகளே.... பாடலாமா????:-)

said...

Wonderful Trip experience. Felt like as if we travelled with you.

said...

நீங்க மாஞ்சு மாஞ்சு ஃபோட்டோ போட்டு, கை வலிக்க எழுதினதை மாசக் கணக்குல நோகாம கம்ப்யூட்டர்ல பாத்துட்டு 2 வரி கமெண்ட் கூடப் போடலேன்னா சோறு கிடைக்காது :-) தெடர் பிரம்மாதம்...அடுத்து எந்தப்பக்கம்?

said...

வாங்க சந்தியா.

கூடவே வந்ததுக்கு நன்றிப்பா.

said...

வாங்க சரவணன்.

இப்படித்தான் மனசாட்சி அப்பப்ப வந்து பேசிட்டுப்போகும்:-))))

அடுத்து உள்நாடுதான். கிளம்பிக்கிட்டு இருக்கேன்:-)

said...

பயணம் நல்லா இருந்ததோ இல்லையோ...
உங்க கட்டுரையும் போட்டோவும் நல்லா இருந்தது.

/ஆதலினால் பயணம் செய்வீர்!/

ஆமா. அடுத்த மாசம் போ்றேன்
நானும் தாய்லாந்துக்கு.

வாழ்த்துகள் டீச்சர்.

said...

வாங்க ஆடுமாடு.


மேய்ச்சலுக்குச் சிறந்த இடம்தான்.

எஞ்சாய்:-)))))

நீங்க பதிவுக்குப்பின் போகும் ரெண்டாவது நபர்.

said...

DEAR AUTHOR,
THANX FOR YOUR THAI , CAMBODIA ARTICLES.PERTAINING LOT OF THINGS SUCH AS CULTURE , FOOD AND CUSTOMS.WELL PENNED . IT IS AN ANOTHER FEATHER ON YOUR CAP. MR.GOPAL'S CAMERA SPEAKS WITH EACH AND EVERY FRAME . ALL, ROCK WITH YOU !

said...

வாங்க சிவஷண்முகம்.

அடடா.... நீங்களுமா???????

எக்ஸ்ட்ராவா இன்னொரு இறகையும் சேர்த்துக்கவா?

ஒரு நாலைஞ்சு படங்களைத்தவிர மற்றவையெல்லாம் துளசி எடுத்தவைகள்தான். கோபால் எடுத்த படங்களுக்கு அங்கங்கேயே க்ரெடிட் கொடுத்துருந்தேனே. கவனிக்கலையா?


கோபாலின் கேமெரா என்பது ஒரு வகையில் சரிதான். அவர்தான் அதை வாங்கிக் கொடுத்தார்:)

சரி போகட்டும் மறுபாதிக்கு சொல்லிடறேன்.

நீங்க தொடர்ந்து வாசிச்சது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.

அடிக்கடி நம்ம வீட்டுக்கு வரணும்.

நன்றி.

said...

"ஆதலினால் பயணம் செய்வீர்!"

ஆமாம் :) இங்கும் சில தொடர்ந்ததில் மிஸ் செய்த அனைத்தையும் கண்டுகொண்டேன் மிக்க நன்றி.

said...

வாங்க மாதேவி.

விட்டுப்போனது எல்லாம் முடிச்சதுக்கு தேங்ஸ்.

நோ அர்ரியர்ஸ்:-))))

said...

நிறைவான பயணக் கட்டுரை. இவையும் ஆங்கூர் வாட் பயணக் கட்டுரைகள்தாம்.
http://srivijivijaya.blogspot.com/2013/09/blog-post_12.html

http://vaazkaipayanam.blogspot.com/2013/12/blog-post.html

http://www.kalachuvadu.com/issue-95/page48.asp

http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_5780.html

http://ulaathal.blogspot.com/2008/03/blog-post.html