Friday, August 27, 2010

மரம் நடவேண்டாம்

"புதுசா கண்ட மரங்களை நடறேன்னு கிளம்பாதே. இங்கே பாரு. இந்தப் படங்களை நல்லா உத்துப்பாரு. எது எது எங்கே இருக்குன்னு தெரியுதா? அதான் நம்பர் எல்லாம் போட்டு வச்சுருக்கே. இதுகளைக் காப்பாத்து. அதுவே போதும்."
விக்ரம்சேத் சிங் (வெண்தாடி)

விக்ரம்சேத் சிங் சொல்லிக்கிட்டு இருந்தார். நாங்க ஒரு அம்பதுபேர் இருக்கும், அவர் முன்னால் நின்னு கேட்டுக்கிட்டு இருக்கோம். சண்டிகர் வந்த நாள் முதல் கலைநிகழ்ச்சியோ இல்லை மத்த ஏதுமோ பார்க்கலை. அப்படியே காய்ஞ்சுபோய் இருந்தேன். எப்போ எங்கே என்ன நடக்குதுன்னே தெரியலை. இவ்வளவு பெரிய நகரத்துலே அப்படி ஒன்னுமே இல்லாமலா போகும்?

வீட்டு ஓனரம்மாவிடம் பேசுனப்ப, 'இங்கே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை'

'எப்படிங்க? எப்படி? தினசரியில் சிலசமயம் நடந்து முடிஞ்ச நிகழ்ச்சி படத்துடன் வருதே!'

அது எங்கியாவது நடக்கும். பொதுவா இங்கே அவ்வளவா ஒன்னும் நடக்கறதில்லை.

அப்போ நீங்க எல்லாம் எப்படிதான் பொழுது போக்குவீங்க? தினமும் இல்லைன்னாலும் என்னைக்காவது............

தினம் டிவி பார்ப்போம்.

வெளங்கிரும்.....மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன். புலம்பல் மரத்துக்குக் கேட்டுருக்கலாம்.

தினசரியில் சிடி பீட் (City Beat) என்னும் பகுதியில் 'ROOT CAUSE" ஹெரிடேஜ் ட்ரீ ஃபோட்டோ எக்ஸிஃபிஷன் மாலை 5 முதல் 7 வரை. லீஷர் வேலி எய்ஃபில் டவர்கிட்டே வந்துருங்கன்னு போட்டுருக்கு. இதென்னடா எப்போ பாரீஸ்லே இருந்து பிடுங்கி இங்கே நட்டாங்க? போய்ப் பார்க்கணும். போனோம்.
ரூட் காஸ்

இந்த Leisure valley என்றது சண்டிகர் நகரின் செக்டர் ஒன்னுலே லேசா ஆரம்பிச்சு அடுத்துள்ள செக்டர்களையெல்லாம் கடந்து ஒரு எட்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு இருக்கு. இங்கே இருக்கும் ரோஸ் கார்டன், 1 போகன்வில்லா கார்டன் எல்லாம் இதுலே சேர்ந்திருக்கும் தோட்டங்கள்தான். இப்ப நாம் போக வேண்டியது சண்டிகர் ம்யூஸியத்துக்கு எதிரில் இருக்கும் லீஷர்வேலியின் பகுதி. இது செக்டர் பத்து. (போதுண்டா சாமி. எண்களை மனப்பாடம் செஞ்சே நொந்து போயிருவோம். ஒரு நாள் ஹரே கிருஷ்ணா கோவிலுக்குப் போயிட்டுப்போகலாமுன்னு திடீர்னு பாதி வழியில் தோணுச்சு. ட்ரைவரிடம் சொன்னால் செக்டர் நம்பர் சொல்லுங்கன்றார். யாருக்கு நினைவிருக்கு? பெயரைச் சொல்லிப் பழகின மக்கள் அல்லவா நாம்!)

பத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அட! ஆமாம். எய்ஃபில் டவர் நிக்குது கொஞ்சம் சின்னதா:-))))
வாசலுக்குள் நுழைஞ்சு போனால் சரியா புல் வெட்டப்படாத காடு போல ஒன்னு. மழைக்காலம் அதான் புல் வெட்டலை- கோபால். எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் கொடுத்துருவார். ஒரு கிடார் வச்சு வாசிச்சுக்கிட்டு ஒரு இளைஞர் அவரைச்சுத்தி ஒரு பத்துப் பதினைஞ்சு பேர். இன்னொரு பக்கம் ஒரு பெரிய மரம். நிறைய படங்களைக் கட்டித் தொங்க விட்டுருக்காங்க. போட்டோ கண்காட்சி!!

வெவ்வேறு செக்டர்களில் இருக்கும் புராதன மரங்கள் விலாசத்தோடு படங்களில் இருக்கு. வேணுமுன்னா நேரில் போய்ப் பார்த்துக்கலாம். எல்லாம் புகைப்படக்கலை படிக்கும் மாணவர்கள் எடுத்தவை.

சண்டிகர் நகரம் உருவாகுமுன் இங்கே பதினெட்டு கிராமங்கள் இருந்துச்சு.(ஆஹா..... நம்ம பதினெட்டுப்பட்டி!!!) அப்போ இந்த பதினெட்டு கிராமங்களும் ரொம்ப பின் தங்கிய நிலையில் இருந்துருக்கு. இப்ப சண்டிகர்தான் இந்தியாவிலேயே பணக்கார நகரம். இப்போ நகரத்துக்கு வயசு 58.

அமெரிக்கக் கட்டகலை நிபுணர் ஆல்பர்ட் மெயர் (நியூயார்க்) (Albert Mayer, Whittleslay, Glass & Mathew Nowicki) மேத்யூ நோவிக்கி என்றவருடன் கூட்டாகச் சேர்ந்து இன்னும் சிலபல கட்டிடக்கலை நிபுணர்களுடன் திட்டம் வகுக்க ஆரம்பிச்ச வேலை, சட்னு நின்னுபோச்சு. காரணம்? மேத்யூ ஒரு விமானவிபத்தில் போய்ச் சேர்ந்துட்டார். கொஞ்சநாள் இடைவெளிக்குப்பிறகு மறுபடி திட்டத்துக்கு உயிர்வந்து 1952 இல் கட்டிடம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ ப்ரான்ஸ் நாட்டுக் கட்டடக்கலை நிபுணர் Le Corbusier கூட்டுச் சேர்ந்துக்கிட்டார்.

ப்ரெஞ்சுக்காரர், நகரை 'டிஸைன் செய்யறேன்'னு குறுக்கும் நெடுக்கும் வீதிகள் நேரா வருவதுபோல க்ரிட் அமைப்பில் வரைஞ்சுட்டார். இவுங்களுக்கு நூல் பிடிச்சாப்போல தெருக்கள் இருக்கணும் போல. நம்ம பாண்டிச்சேரியிலும் இப்படித்தானே நேர் நேரா தெருக்கள் உண்டாக்கி வச்சுருக்காங்க!


ராக்கெட்?
சுதந்திர நினைவுச்சின்னம்?
மேலே உள்ள படங்கள் ரெண்டும் அங்கே தோட்டத்தில் எடுத்தவை.

பாதைக்குக் குறுக்கே நிற்கும் மரங்களையெல்லாம் போட்டுத் தள்ளிட்டாங்க. அதுலேயும் குறுக்கிடாமத் தப்பிப் பிழைச்சதுகள் தான் இந்த ஃபோட்டோக்களில். முக்கியமா ஆலமரங்களும் அரசமரங்களுமாத்தான் இருக்கு. சில மாமரங்களும் உண்டு. புதுசாச் சாலைகளை நிர்மாணிக்கும்போது கெட்டிக்காரத்தனமா மாமரங்களை நட்டுவச்சுருக்காங்க. ஊர் முச்சோடும் விதவிதமான மாதான்..
மரங்களில் நீண்ட ஆயுள் உள்ள மரங்களா இங்கே அஞ்சு வகைகள் இருக்காம். ஆல், அரசு, வேம்பு, மா அப்புறம் இன்னொன்னு என்னவோ சொன்னார். எப்படி இதுகளைமட்டும் பூச்சிகள் அரிக்காம ரொம்ப நாள் வாழுதுன்னா..... இதெல்லாம் பால் மரங்கள். பூச்சிகள் துளைச்சு உள்ளே போனதும் அதுகளை கபால்னு இந்தப் பிசினு, பால் பிடிச்சு வளைச்சுக்குது. நகரமாட்டாம அவை கைது செய்யப்பட்டு உடனே மரணதண்டனைதான்.

அப்படியும் வில்லனுக்கு வில்லனான பூச்சிகள் நம்ம அடையாறு ஆலமரத்தையே அரிச்சு எடுத்துருச்சே:(

இந்த மரங்கள் நெடுநாள் வாழ்வதால்தான் பறவை இனங்கள் கூடுகட்டி வசிக்க ஏதுவா இருப்பதோடு பறவைகள் அழியாம இருக்கவும் உதவுது. பொதுவா மாமரத்துலேயும் ஆலமரத்துலேயும் இயற்கையாவே பொந்துகள் இருக்கும். இவைதான் கூடு கட்டிக்கத் தெரியாத இனங்களுக்கு வீடு கட்டித்தருபவை.

அந்தக் காலத்துலே மனிதர்கள் மரங்களின் அருமைகளைத் தெரிஞ்சவுங்க. இரு கிராமம் உருவாகுதுன்னா ஊருக்கு நடுவிலே ஒரு கோவிலைக் கட்டும்போதே கோவிலுக்குப் பக்கத்துலே ஒரு மரமும் நட்டுருவாங்க. பிள்ளை குட்டிகளை வளர்ப்பதுபோல் கண்ணும் கருத்துமா அந்த மரத்தை வளர்த்துப் பெருசானவுடன், ஊர் பெரியவர்கள் வந்து உக்கார்ந்து பேச ஒரு இடமா ஆகிருது. ( அதானே நாட்டாமை செய்யவும் இடம் வேணுமே! இந்தப் பக்கம் சொம்பு டிஸைன் வேற மாதிரி இருக்குமோ?)

வயசான முதியவர்களுக்கு இப்படி 'மரத்தடி'தான் சோஸியல் க்ளப் இல்லீங்களா? விக்ரம்சேத் சிங் இப்படி ஒரு 95 வயசுக்கிழவரை அஞ்சு வருசத்துக்கு முன்னே ஒரு செக்டரில் ( பழைய பதினெட்டில் ஒன்னு) கோவில் மரத்தடியில் சந்திச்சாராம். அவர் ரிஷிகேஷ் கடந்து 250 கி.மீட்டரில் இருக்கும் கோவிலுக்கு இதுவரை பத்து முறை போயிட்டு வந்தவராம். அதனால் என்னன்னு கொஞ்சம் அலட்சியமாக் கேட்டப்ப, வந்து விழுந்த விஷயத்தைக் கேட்டதும் கப்சுப் ஆனாராம். அந்தப் பத்து முறையும் இங்கிருந்து நடந்தே..... இங்கேயிருந்து ரிஷிகேஷ் 250. அங்கிருந்து கோவில் ஒரு 250ன்னு மொத்தம் 500 கி.மீ. போகவர ஆயிரம் கி,மீ. நடந்து போய் வருவாராம். என்கூட வர்றியா போய் வரலாமுன்னு அவர் கூப்புட்டப்ப..... இதோன்னு ஓடிவந்தவர் அப்புறம் அந்த கிராமத்துப்பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்கலைன்னார்.

அந்தக்காலத்து மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததுலே நல்ல பலசாலிகளாவும் ஆரோக்கியமாவும் இருந்துருக்காங்கன்னு சொல்றார். இப்போதான் நாம் சாப்பிடும் பொருட்களில் எல்லாம் ரசாயனக்கலப்படம் வந்து மனுஷன், மிருகம், தாவரம் சுற்றுச்சூழல் இப்படி எல்லாத்துக்கும் கேடு பண்ணிக்கிட்டு இருக்குன்னு வருத்ததோடு சொன்னார். உண்மைதான் :(


அவர் சொன்ன அஞ்சு மரங்கள் என்னென்னன்னு தேடுனப்ப இன்னொரு சுவையான விஷயம் கண்ணுலே பட்டுச்சு. நாம் கும்பிடும் சாமிகள் கூட ஆளுக்கு நாலு மரமுன்னு புடிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்க!

வில்வமரம், ஆலமரம், ருத்ராக்ஷமரம், இலந்தைமரம் சிவனுக்கு

அரசமரம், நாகலிங்க மரம்,விஷ்ணுவுக்கு

கடம்பமரம் கிருஷ்ணனுக்கு

மாமரம் ஹனுமனுக்கு

முள்ளிலவு மரம் (சில்க் காட்டன் ட்ரீ) மகாலக்ஷ்மிக்கு (இந்த மரத்தைப்பற்றி சீக்கியர்களின் புனிதநூலான குரு க்ரந்த சாஹிப்லே கூட ஒரு குறிப்பு இருக்குதுங்க)

அசோகமரம் காமதேவனுக்கு,

தென்னை மரம் வருணனுக்கு

வேப்பமரம், சீதளாதேவி(மாரியம்மனுக்கு)க்கு இப்படி................

இந்திர லோகத்துலே பாரிஜாதம், சந்தனம், கற்பகமரம் (ஆலமரம்), மந்தாரம், samtanaka மரம்( இது ஆண்களுக்கான குடும்ப விருத்திக்கு பயன்படுமாம். சந்தான மரமோ? ) இப்படி அஞ்சு மரங்கள் இருக்காம். பைபிளிலும் ( Book of Genesis & Gospel of Thomas) சொர்கத்தில் அஞ்சு மரங்கள் இருக்குன்னு சொல்லி இருக்காம்.

ஒரு மரத்தைப்பத்தித் தெரிஞ்சுக்க, தெரியாமக் காட்டுக்குள்ளே நுழைஞ்சுட்டேன் போல. படு சுவாரஸியமான தகவல்கள் கொட்டிக்கிடக்கு. கற்றது கைமண் அளவெல்லாம் இல்லைங்க. நம்ம கை அளவுன்னு சொன்னதெல்லாம் ச்சும்மா. நகமளவுகூட நாம் இதுவரை கத்துக்கலை என்பதுதான் நிஜம். தெரியாத விஷயத்துக்கு எல்லையே இல்லை!!!!

ஆலமரத்துக்கு 'பேன்யன் ட்ரீ' என்ற பெயர்க்காரணம் என்ன? (இதுதான் நம் தேசிய மரமும்கூட)

பனியாக்கள் சில்லரை வியாபாரத்தைக் கிராமம் கிராமமாப்போய் செஞ்சுட்டு இளைப்பாறுவதற்கு அங்கங்கே அதன் நிழலில் உக்கார்ந்துருப்பாங்களாம். ரொம்பசரி. குல்லாய் வியாபாரியும் குரங்குகளும் நினைவுக்கு வருதா?
ஒரு பதினைஞ்சு நிமிசத்துலே பேச்சை முடிச்சுக்கிட்டார் விக்ரம்சேத் சிங். இந்தப்பக்கம் ஒரு ஏழெட்டு இளைஞர்கள் ஃபேஸ் பெயிண்டிங் செஞ்ச முகங்களோடு ஒரே மாதிரி கருப்பும் சிவப்புமா உடையில்.என்ன நடக்கப்போகுது? தெருநாடகமா? இந்தப்பக்கம் தெருநாடகங்கள் கொஞ்சம் அதிகம் போல. ரோஸ் கார்டன் ஒரு நாள் போனப்ப, சிலர் ஒத்திகை பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

மரங்களைப்பற்றி ஒரு (மைம்) ஊமை நாடகம் போடறாங்களாம்.... இருந்து பார்க்கணுமுன்னு கேட்டுக்கிட்டார் எனக்கு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தவர். இதுவும் பதினைஞ்சு நிமிச நாடகம்தான். இவுங்க தயாராகும் வரை கொஞ்சம் அக்கம்பக்கம் சுத்திப்பார்த்தோம். சாக்குப்படுதாக்களால் ஸ்டால்ஸ் காட்டி வச்சுருக்காங்க, அங்கக்கே. திருவிழா சமயத்துலே வந்து பார்க்கணும்.


மரத்தை வெட்டிப் போட்டுட்டாங்கைய்யா....

பொருத்தமான இசைமட்டும் ஒரு டேப்லே போட்டுட்டு நாடகம் ஆரம்பிச்சது. மொத்தம் பத்து பேர். மரங்கள் இருந்த காலம். எல்லோரும் மகிழ்ச்சியா இருக்காங்க. காதலர்கள் கடலைபோடச் சரியான இடமா இருக்கு. மரம் வெட்டறவன் வந்து மரங்களை வெட்டிப்போட்டுடறான். சொல்ல வாயில்லைன்னாலும் கீழே விழுந்த மரம் துடியாத் துடிக்குது:( அப்புறம் சாலை போட்டுட்டாங்க. வண்டிகள் ஏராளமாப் போகத்தொடங்குது. ஊரெல்லாம் காற்றில் மாசு படிஞ்சு போயிருது. மக்களுக்கெல்லாம் வியாதிகள், தொண்டை எரிச்சல் வந்து கஷ்டப்படுறாங்க. மழை வேறு இல்லை. சூடு எரிக்குது. குடிக்கவும் தண்ணீர் கிடைக்கலை. அப்போ இயற்கை நலன் விரும்பி வந்து மரங்களால் ஆகும் நன்மைகளைச் சொல்றார். எல்லோரும் மரக்கன்னுகளை நட்டுவச்சுப் பராமரிக்கிறாங்க. மரங்கள் பெருசாகி நிழல்தருது. நாட்டில் மழையும் பொழியுது. அனைவரும் மகிழ்ச்சியா இருக்காங்க. சுபம்.

பார்வையாளர்களா ஒரு நூறு பேர் இருந்துருப்போம். ஊமை நாடகம் என்பதால் எங்களையும்(சளசளன்னு) பேச அனுமதிக்கலை. ஆனால் நல்லா இருக்கும் பகுதிகளுக்கு கைதட்டலாம். விஸிலும் அடிக்கலாம். அடடா.....விஸிலடிக்கக் கத்துக்கலையேன்னு கவலையாப் போச்சு எனக்கு.

நாடகம் முடிஞ்சதும் விக்ரம்சேத் சிங் அவர்களுடன் கொஞ்சம் பேசிட்டுக் கிளம்பினோம். இது(வும்) ஒரு புது அனுபவம்தான்.

நல்ல மரங்களாப் பார்த்து நட்டால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை.
மரத்தை எங்கே நடுவது? வேணுமுன்னா....இருக்கறதை வெட்டாமப் பார்த்துக்கிறேன்

32 comments:

said...

சன்டிகரில் உங்க ஞாபகமாக ஒன்று நட்டுவிட்டு தான் வாங்களேன்!!
வீட்டுக்கு பின் புறம் இடமில்லை?

said...

அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்

said...

சிறந்ததொரு சமூகப்பதிவு நண்பா.

said...

ஒருஒரு கோயிலுக்கு ஒரு மரம்.. . வீட்டிலும் ஒரு மரம் அதுக்கு தண்ணீர் ஊற்றி காலையில் பூஜை என்று பெரியவங்க செய்ததுல எலலம் ஆழமான காரணங்கள் பொதிஞ்சிருந்திருக்கு... .ம்ம்

said...

நல்ல விசயம் பாத்துட்டு வந்ததுமில்லாம பகிர்ந்திருக்கீங்க..

said...

நம் ஊரில் இதை கண்டிப்பாக பின்பற்றினால் நன்றாக இருக்கும் டீச்சர். இருக்கும் மரங்களை அழிக்காமல் இருந்தால் போதும் டீச்சர்.

said...

வாங்க குமார்.

மாடியில் ஏதுங்க இடம்? மூணு பூச்செடிகள் வாங்கி தொட்டியில் வச்சுருக்கேன். அதுதான் ஞாபகார்த்தம்.

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சத்ரியன்.

முதல்வருகை போல இருக்கே!

நன்றி. மீண்டும் வருக,

said...

வாங்க கயலு.

ஸ்தலவிருக்ஷம்னு காரணம் வேற சொல்லி வளர்த்துருக்காங்க பாருங்க!!!!

said...

வாங்க சுமதி.

மரம் வெட்டும் அரசியல் கட்சி கூட இருக்கும் பகுதி நம்மது. எங்கே போய் முட்டிக்க? :(

said...

தூங்கப் போற சமயத்துல மறுபடியும் உங்களோட இம்சை(?)

பக்கத்து விட்டுகாரங்க ரொம்ப வளர்ந்து விட்டதுன்னு வெட்டிக்கிட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட கொஞ்சப் போய் அவங்க வினோதமா பார்த்தாங்க.

கொக்கு பூ மரம் வெட்டினத ஒரு கவிதையாவே எழுதினேன்.

மரங்களின் காதலன் போல் அத்தனை ஆர்வம். படித்த படிப்பும் இது தான்.

கோவையில மொழிக்காக வெட்டின மரங்கள் உங்களுக்குத் தெரியுமா?

குழந்தைங்க போலத்தான் இந்த மரங்கள் எனக்குத் தெரியுது.

இதை படிக்கிறவுங்க கூட என்னைப் பார்த்து சிரிக்கப் போறாங்க.

அடப் போங்க. மனசு என்னமோ போலஇருக்கு.

said...

நல்ல பகிர்வு டீச்சர் ;)

said...

வாங்க ஜோதிஜி.


உங்க கவிதையைப் படிச்சேன்.

பொதுவா எனக்கு கவிதைகள் அலர்ஜின்னாலும் இது கொஞ்சம் (வசனநடையா இருக்கோ?) புரிஞ்சது.

மரம் வெட்டுறதும் மனுசனை வெட்டுறதும் ஒன்னுதான்னு எப்போ மக்கள் புரிஞ்சுக்கப்போறாங்களோ:(

said...

வாங்க கோபி.

நன்றிப்பா.

said...

டீச்சர்,

நல்ல சேவை.

சொல்ல சொல்ல, ஒன்னு ரெண்டு பேர் மனம் மாறாதா. பின் சந்ததிக்கு செய்யும் நன்மை.

நன்றி.

said...

இதையாவது கண்டிப்பா மனுஷங்க செய்யணும்.

ஆக்கலைன்னாலும் அழிக்க கூடாது.

நல்ல பகிர்வு.

said...

// வில்வமரம், ஆலமரம், ருத்ராக்ஷமரம், இலந்தைமரம் சிவனுக்கு

அரசமரம், நாகலிங்க மரம்,விஷ்ணுவுக்கு

கடம்பமரம் கிருஷ்ணனுக்கு

மாமரம் ஹனுமனுக்கு

முள்ளிலவு மரம் (சில்க் காட்டன் ட்ரீ) மகாலக்ஷ்மிக்கு (இந்த மரத்தைப்பற்றி சீக்கியர்களின் புனிதநூலான குரு க்ரந்த சாஹிப்லே கூட ஒரு குறிப்பு இருக்குதுங்க)

அசோகமரம் காமதேவனுக்கு,

தென்னை மரம் வருணனுக்கு

வேப்பமரம், சீதளாதேவி(மாரியம்மனுக்கு)க்கு இப்படி................//

இந்த முருங்கை மரம், தூங்குமூஞ்சி மரம், நெட்டிலிங்க மரம் இவற்றிற்கெல்லாம் யாரு ?

தூங்கு மூஞ்சி மரத்துக்கு ! ஹை ! கண்டுபிடிச்சாச்சு ! கும்பகர்ணனுக்கு..
மத்தது யார் யாருக்கு ?

அது சரி. அது என்ன மஹாலக்ஷ்மி காலத்துலேயே சில்க் காட்டன் இருந்துச்சா என்ன !!

சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com

said...

லேட்டா வரேன்பா. இன்னிக்குத்தான் ஒரு வழியா கணினிக்கு உயிர் வந்தது:)
//பெரியவர்கள் வந்து உக்கார்ந்து பேச ஒரு இடமா ஆகிருது. ( அதானே நாட்டாமை செய்யவும் இடம் வேணுமே! இந்தப் பக்கம் சொம்பு டிஸைன் வேற மாதிரி இருக்குமோ?)//
இது!!!!:)நினைவுச் சின்னம் பக்கம் வீரமா போஸ் கொடுக்கிறவரைக் கூட எங்கயொ பார்த்திருக்கோம். எங்களைப் பொறுத்தவரைக்கும் நரசிம்ஹன் சார் பசுமைப் புரட்சி செய்திருக்கிறார்.
எந்த மதமாயிருந்தாலும் மரத்துக்கு மதிப்பு கொடுத்துதான் வந்திருக்காங்க. இன்னிக்கு வேளுக்குடி கதையில் மரமாவும் நாம இருந்திருப்போம். அப்ப நிழலும் பழமும் கொடுத்ததற்கு இந்த ஜன்மத்தில நல்ல உணவு கிடைக்க சான்ஸ் உண்டு. என்று கேட்டேன்,(சிடி)

said...

வெட்டிட்டு போயிடக்கூடாதுன்னுதான் நம்மூர்ல புள்ளையார் அரசமரத்துக்கு கீழே இருந்து காவல் காக்கிறார் போலிருக்கு :-)))

said...

Dear author,
I enjoyed reading the chandhigar '' maram nada vendam ' ..( Dont plant trees) !
I would like to submit an old poem which I had written in poemhunter . This is as good a time as any to
recall it in this site . Hope my thulasidhalam friends enjoy this.

BIRDS
by Shivayadav

Creech.........Creech
'Oh my dear birds' the mom calls
The little birds peep and protrude from the nest
Creech, Creech 'oh my dear birds
Here is the prey for you, come out'
Fluttering wings with awesome eye
They hold the prey and begin to eat..
'Dear,' the mother bird calls her young
With anxiety and full of uncertainty..
The mother begin to speak..
'Creech.....Creech!
This is the last feeding in this nest
The strangers, Oh that evil devil man
Is going to cut this tree to pave the road!'
'Creech...Creech..' All the birds cry..'Oh mom
How can we survive from evil Man?'
'I don't know'..the mother bird replied..
'Let us wait and watch for the next day'.
God provided the trees for all
But man takes even that away...

sivashanmugam

said...

பள்ளியில் போட ஒரு அருமையான தீம் கிடைத்திருக்கிறது!பூங்கொத்துடன் நன்றி!

said...

வாங்க நன்மனம்.

அதே அதே. மாற்றங்கள் மெள்ள வந்தாலும் சரிதான். ஒரேடியா அழிக்காம இருக்கணும்.

நம்ம வீட்டுலே ஒரு ஜாப்பனீஸ் நீடில் பைன் மரத்தை பழைய வீட்டை இடிச்சுப் புதுசு கட்டும்போது காப்பாத்தி எடுத்துவச்சு புதுவீடு ரெடியானதும் மீண்டும் நட்டோம்.

அதைப் பார்க்கும்போது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு. அட்லீஸ்ட் ஒருத்தரைக் காப்பாத்தினோமேன்னு!

said...

வாங்க சுசி.

நீங்க சொன்னதை நம் சந்ததிகளுக்கு வலியுறுத்தணும்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

கும்பகர்ணனுக்கு தூங்குமூஞ்சி மரமா? பேஷ் பேஷ்.

அதென்ன அந்தக் காலத்துலே மஹாலக்ஷ்மிக்கு சில்க் காட்டன் இருந்துச்சான்னு ஒரு கேள்வி? அவுங்க கட்டி அலுத்துப்போய்தான் இப்ப எங்களுக்குக் கொடுத்துட்டாங்க(ளாம்)

said...

வாங்க வல்லி.

அப்ப நான் என்ன மரமா இருந்துருப்பேனோன்னு இப்ப யோசனை.

முண்டும் முடிச்சுமான மரம்தான் சந்தேகமில்லை. கை மட்டும் குண்டாகிக்கிட்டே போகுது!!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அவரையே கடத்திக்கிட்டுப் போயிடறாங்களேப்பா!!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அவரையே கடத்திக்கிட்டுப் போயிடறாங்களேப்பா!!!!!

said...

வாங்க சிவஷண்முகம்.

அட! கவிதையெல்லாம் எழுதறீங்களா?

அருமையா இருக்கே!!!!

பேசாம ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு அதுலே வெளியிடுங்களேன்.

ஒரு இடத்திலே சேமிப்பா இருக்கட்டுமே!

said...

வாங்க அருணா.

அப்ப...இது பயனுள்ள பதிவு!!!!!

நீங்க அன்புடன் சொன்னது மகிழ்ச்சியே!

said...

இந்தப் பதிவிற்கு நன்றி எதற்கு நன்றி என்று கொஞ்ச நாள் கழிச்சு சொல்றேன்...:-) அப்புறம் மதுரை புத்தக கண்காட்சியில் உங்க படத்தைப் பார்த்தேன்.

said...

வாங்க பிரபு ராஜதுரை.

எழுத வச்சவர் நீங்கதான்னு எல்லா இடத்துலேயும் சொல்லி வச்சுட்டேன்.

பார்த்து கவனமா இருங்க. ஆட்டோ கீட்டோ வந்துறப்போகுது:-))))))