நாலுபக்கமும் தளதளன்னு தண்ணீர் ததும்பி இருக்க, நல்ல உசரமான இடத்துலே நிக்கும் அழகான கோவிலுக்குப் போகக் குட்டித்தூண்கள் மேல் அமைச்ச அழகான நடைமேடை. கோவில் முழுசும் அந்தத் தண்ணீரில் பிரதிபலிக்கும் விதம்...... நினைச்சாலே ஒரு ஆஹா போட வச்சிருக்கணும். அமைப்பு இப்படித்தான் இருக்கு. ஆனால் ................வறண்டு போன அகழியும் உடைஞ்சு சிதிலமா நிற்கும் நடைபாலமும்தான் நம்மை வரவேற்குது இங்கே:(
Baphuon Temple அரசர் உதயாதித்ய வர்மன் காலத்தில் பதினோராம் நூற்றாண்டின் நடுவில் கட்டப்பட்டது. வருசம் 1060 லே அநேகமா இருக்கணும். இந்த அங்கோர் தொம் ( அங்கோரின் பெரிய நகரம் என்று பொருள். பிக் சிட்டி)நகரை நிர்மாணிக்கும் போது இந்தக் கோவிலையே மையப்பகுதியா அமைச்சுருக்காங்க. அப்புறம் வெவ்வேற கட்டிடங்கள் மாளிகைகள் வந்தபிறகு பார்த்தா இது கொஞ்சம் ஓரமாத் தள்ளி தென் மேற்குலே போயிருக்கு!
இது ஒரு ஹிந்துக் கோவிலாக இருந்துருக்கு. சிவாலயமா இருந்துருக்கணும். இப்போ சயனித்திருக்கும் புத்தர் கோவிலா ஒரு காலக்கட்டத்தில் மாற்றப்பட்டிருக்கு. பதினைஞ்சாம் நூற்றாண்டுவாக்கில் சிவன் காணாமப்போயிட்டார் போல.நல்ல பெரிய கோவில்தான். இல்லைன்னா ரெண்டாம் நிலையில் ஒரு எழுபது மீட்டர் நீளமுள்ள பள்ளி கொண்ட புத்தர் இங்கே எப்படி இடம் பிடிக்கமுடியும்?
அஞ்சடுக்கா மேலே மேலே போகும் கோவிலை இப்போ பழுதுபார்த்துக்கிட்டு இருக்காங்க. வறண்டு போன அகழி எல்லாம் புல்த்தரையா மாறிக்கிடக்கு.
இந்தக் கோவில் ஒன்னுதான் ஆரம்பகாலத்துலே இருந்தே கொஞ்சம் நிலையில்லாம இருந்துருக்கு. கட்டுன இடத்தில் மணல் கூடுதலா இருந்ததைக் கவனிக்காம நிர்மாணம் செஞ்சுட்டாங்கன்னு பேச்சு. சிலபல தடவைகள் அங்கங்கே இடிஞ்சு அப்புறம் கட்டின்னுதான் அந்தக் காலத்துலே இருந்துச்சாம்.
இந்தக்கோவிலைப் பழுதுபார்க்கும் பொறுப்பை பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் ஏற்றெடுத்துருக்கு. கற்களுக்கு எண்கள் கொடுத்து அப்படியே அலேக்கா பிரிச்சு எடுத்து திரும்ப வச்சுக் கட்டும்வேலையாம். ஆனா ஏராளமான கற்கள் குவியல் குவியலா ஏற்கெனவே கொட்டிப்போய்க் கிடந்ததாலும் ரெண்டுவிதமான கட்டிடக்கலைகள் இங்கே பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்படும் குழப்பம் காரணமாவும் வேலை ரொம்பவே மெதுவா நடக்குது. பத்து வருசத்துலே முடிக்கலாமுன்னு கையில் எடுத்த வேலை இப்ப முப்பதுவருசமா இடையிடையே தடைகளோடு நடந்துக்கிட்டு இருக்கு. இதுதான் நாயர் பிடிச்ச புலிவால். பிடிச்சதை விடமுடியலை!
நடைபாதை கோவிலுக்கருகில் வந்து சேருமிடத்தில் முழுசாவே உடைஞ்சு போச்சு. அதுலே நடந்து வந்து கோவில் படிகளில் ஏறிப்போனால் கனகம்பீரமாக இருக்கும். 200 மீட்டர் நீளமான பாதையாமே!!!!
அதைத்தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் சீன ஸ்டைலில் கட்டுன சின்ன ,மண்டபம் ஒன்னில் பெரிய புத்தர் உட்கார்ந்த நிலையில் சேவை சாதிக்கிறார். சமீபத்திய சமாச்சாரமுன்னு பார்த்தவுடனே தெரியுது. அக்கம்பக்க கிராமங்களில் இருந்து ஒரு பெரிய குடும்பம் சந்நிதிக்கு முன்னால் கூடி பத்தி கொளுத்திப் பிரார்த்தனை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பிள்ளையார் பூன்னு சொல்வோம் பாருங்க தங்கரளி... ஏராளமா சின்ன மரங்களா நின்னு பூத்துக்கிடக்கு.
கெஞ்சும் கால்களுக்கு ஓய்வுன்னு கட்டைச்சுவரில் அஞ்சு நிமிசம் உக்கார்ந்தது தப்பாப் போயிருச்சு. 'அதான் உனக்கு உக்காரத் தெரியுதே அப்போ ஏன் என்னை இப்படி இம்சிக்குறே'ன்னு ............ இந்த கால்களுக்கு என்னமோ அப்படி ஒரு திமிர்!
ம்ம்ம்ம் நட நடன்னு மெள்ள எழுந்து எதிர்பக்கம் பேயோனைப் பார்க்க நகர்ந்தேன். BAYON என்றால் உயர்ந்த தரத்தில் அலங்கரிக்கப்பட்ட என்று பொருள். இந்த வகைக் கட்டிடக்கலை ரொம்பவே 'ரிச்'ஆக இருக்குமாம்.
பனிரெண்டாம் நூற்றாண்டின் இறுதிகளில் அரசர் ஏழாம் ஜெயவர்மனால் புத்தருக்காகக் கட்டப்பட்டது. லோகேஸ்வரா கோவில். பக்கத்துக்கு ஒன்னா நாலு திசைகளிலும் பார்க்கும் நான்கு பெரிய முகங்கள். போதிசத்வரின் முகமோ? இருக்காது. அவர்தான் பட்டினியில் உடல் மெலிஞ்சு கன்னமெல்லாம் ஒட்டி இப்பவோ அப்பவோன்னு இல்லே இருந்தார். இது நல்ல செழிப்பான ஆரோக்கியமான முகம். அரசர் ஜெயவர்மனின் முகச்சாடை அச்சுஅசலா அப்படியே இருக்குன்னு அரும்பொருள் & அருங்கலையகத்தில் இருக்கும் ஜெயவர்மனின் உருவப்படத்தைப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
நவ்வாலு முகங்கள் இருக்கும் கும்மாச்சி கோபுரங்கள் 39 நிக்குது. இது இல்லாமல் அங்கங்கே இன்னும் முகங்கள், முகங்கள்னு மொத்தம் 216 முகங்கள். எங்கே நாம் நின்னாலும் எதாவது ஒரு முகத்தின் பார்வையில் இருந்து தப்பவே முடியாது.
கீழ்த்தளத்தின் அஞ்சாறு படிகளில் ஏறிப்போனால் சின்னதா ஒரு புத்தர் வாசப்படியிலேயே இருக்கார். எல்லாம் இது போதும் என்ற வகையில் கொஞ்சமா ஊதுவத்தி கொளுத்தி வச்சுருக்காங்க. வெளிச் சுவர்களில் எல்லாம் அப்சரஸ்களின் உருவங்கள்.
சிவதாண்டவமோ?
உள்ளே போனால் என்னமோ சிமெண்டுலே செஞ்சு வச்ச மாதிரி இருக்கும் ஆவுடையார்மேல் ஒரு தலை இல்லாத சாமி. புத்தரா? அடுத்த நிலைக்கு படிகள் ஏறணும். நல்லவேளை பலகையில் மரப்படிகள்தான். ஆனாலும் கால்கள் வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பிச்சதால் நான் அதுகளொடு ஒன்னும் பேசாம படிகளில் உக்கார்ந்துட்டேன். சொன்ன பேச்சை கேக்காததுகளொடு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு? கோபால் படிகளில் ஏறிப்போனார். இனி என் கண்ணே அவர்தான்!
ஆவுடைபுத்தர்
ஒருமுறை ஆக்ரா போனப்ப, ஜூன் மாசம் வெய்யில் ஆளை அப்படியே உருக்குது. ஒன்பது வயசு மகள் கூட இருக்காள். அவளுக்கும் வெய்யில் ஒத்துக்காம உடம்பெல்லாம் கொப்புளம் வருது. கஷ்டப்பட்டு நடந்து தாஜ்மஹால் சுத்தியாச்சு. ஆக்ரா கோட்டை வரும்போது ரெண்டு பேரும் இப்பவோ எப்பவோன்னு ஆகிட்டோம். கோபால் மட்டும் உள்ளே போய் எல்லாத்தையும் வீடியோவா எடுத்துக்கிட்டு வந்தார். அவர் கண் வழியேதான் ஆக்ரா கோட்டையைப் பார்த்தோம்.
நியூஸி மவோரி வெல்கம் செஞ்சுட்டு வந்துருக்கார் கோபால். தேசப்பற்று:-)
அவரும் வீராவும் திரும்பி வந்ததும் எல்லோருமா கீழ்த்தளத்தில் சுற்றிப் பார்க்கப்போனால் அங்கே ஒரு சந்நிதியில் சிவலிங்கம் இருக்கு. லோகேஸ்வரா!!!!
இப்போ ஒரு பதினைஞ்சு வருசமா ஜப்பான் அரசாங்கம் இந்தப் பேயோனைப் பழுதுபார்த்து முடிஞ்சவரை அப்படியே பராமரிப்புக்கு உதவி செய்யுது.
ஏழ்மையான நாடு என்றதாலும் உலகின் அபூர்வ ரகக் கோவில்கள் என்பதாலும் ஐக்கியநாடுகள் சபையில் முடிவு செஞ்சு ஒவ்வொரு நாடு ஒவ்வொரு கோவிலுன்னு தத்து எடுத்து உதவி செய்யுது. இப்போ கம்போடியாவின் வருமானத்துக்கு இந்தக் கோவில்கள்தான் உழைக்குதுன்னு சொல்லலாம். எப்பவோ கட்டிப்போட்டு வச்சது இப்போ காசு கொடுக்குது பாருங்க. அதான் உண்மையான ரியல் எஸ்டேட்!!!!
மணி இப்போ நாலரைதான். இன்னும் கொஞ்சம் சுத்திப்பார்த்துட்டு மலையடிவாரம் போகலாம். அங்கே யானை சவாரியில் குன்றின் மேல் ஏறிப்போய் சூரிய அஸ்தமனம் பார்த்துட்டோமுன்னா இன்றைய சுற்றுலா முடிஞ்சுருமுன்னு வீரா சொன்னார்.
பாவம் யானை. அதுமேலே ஏறணுமா? யானையே யானைக்கு எதிரியா? களைச்சுப்போன உடலால் இனி ஒரு காலடி எடுத்து வைக்க முடியாது. நம்ம லிமிட் இவ்வளோதான். ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னே இங்கே வந்துருக்கணும் டூ லேட் நௌ.
பார்த்தவரை போதும் இன்னொரு நாள் பாக்கியை வச்சுக்கலாம். ஸ்மெயை இங்கே வரச் சொல்லுங்கன்னேன். வரும் வழியில் மூதாதையர்கள் பலர் நீர்நிலைகளுக்குப் பக்கத்திலே ஜாலியா ஓய்வெடுத்துக்கிட்டு இருந்தாங்க. போற போக்கில் க்ளிக்கிட்டு ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்து வீராவுக்கு ஒரு லட்சம், ஸ்மெய்க்கு அம்பதாயிரமுன்னு பட்டுவாடா செஞ்சுட்டு அறைக்குப் போய் கட்டிலில் விழுந்Thom''.
மறுநாள் சுற்றுக்கு வழிகாட்டி வேணுமுன்னால் ஹொட்டேல் வரவேற்பில் சொன்னால் ஆச்சு.
தொடரும்......................:-)))))
Thursday, August 12, 2010
பாபுனும் பேயோனும்...............( கம்போடியாப் பயணம் 6 )
Posted by துளசி கோபால் at 8/12/2010 01:37:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
Teacher...
Super...
இவ்வளவு அருமையான பழங்காலக்கோயில்களை பராமரிச்சு வைக்கணும்ன்னு அவங்களுக்கு தோணினது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அப்ப...மவோரி வெல்கம் போட்டோ நீங்க எடுக்கலையா?????
// இனி என் கண்ணே அவர்தான்!//
கண்ணும் கண்ணும் NOKIA (connecting people ... )
நம்ம சிவனை பார்க்கவே கஷ்டமா இருக்கு...'சிவனே'-ன்னு தனியா இருக்கார் ...
முகங்கள் வைக்கப்பட்டிருக்கும் கோவில் கோபுரம் நன்றாக உள்ளது டீச்சர். வனத்தில் ஏகாந்தமாக சேவை சாதித்துக்கொண்டிருக்கும் புத்தரும் அழகு டீச்சர்:)))))
கோபால் தான் கண்ணுன்னு இப்பதான் தெரிஞ்சதா:)
என்னப்பா, எங்க போனாலும் உங்க ஈஸ்வரன் உங்களை விடறதில்லை போலிருக்கே.
மிகப் பிரம்மாண்டமான முகங்கள். இது என்ன விதமான கல்ச்சரா இருந்திருக்கும்!! இவ்வளவு கோவில்கள் கட்டணுன்னு ஏன் தோன்றித்து!!
என்ன? 30 வருடங்களாக மராமத்துவேலையா? இந்த பழையகால வேலைகள் எல்லாமே இப்படித்தான் இழுத்துக்கொண்டே போகும்.இப்படி தான் எங்கள் நிறுவனம் ஜோர்டானில் ஒரு வேலை 1 வருடம் என்று ஆரம்பித்து போய்கொண்டே இருக்கு.
அருமையான இடமா இருக்கு .. நாங்க உங்களோட கண்ணாலயும் கேமிராகண்ணாலயும் பாத்துக்கிட்டோம்..:)
\\வல்லிசிம்ஹன் said...
கோபால் தான் கண்ணுன்னு இப்பதான் தெரிஞ்சதா:)//
:))
அவரு க்கு பார்வையும் இவங்களுக்கு பேச்சையும் எடுத்துக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்
வாங்க ஸ்ரீனிவாசன்.
வருகைக்கு நன்றி.
வாங்க அமைதிச்சாரல்.
இதுக்குத்தான் 'கைடு' வேணுங்கறது:-)
அது ஃபோட்டோ பாய்ண்ட் னு நமக்குச் சொல்லவாவது ஒருத்தர் வேணும்தானே?
வாங்க டாடி அப்பா.
அண்ணலும் அவளும் நோக்கியே காலம் பல ஆனது:-)
பாவம் சிவன்.
சட்னு பார்த்தா ஆட்டுக்கல்லாக் கிடக்கறார்:(
வாங்க சுமதி.
ஒரு முகமானாலும் திருமுகமா வைக்காம, 216 முகங்கள்!!!!
வாங்க வல்லி.
அதே காலக்கட்டத்துலே கட்டுன வீடுகளும் அரண்மனைகளும், ஏன்..ஊர்களுமே காணாமப் போயிருக்கு. நிற்பது கோவில்கள் மட்டுமே என்பதுதான் வியப்பு.
அதையும் ஒன்னு ரெண்டு கட்டாம இப்படிக் கூட்டங்கூட்டமா ஏன் கட்டுனாங்க என்பதுதான் 'புதிர்'!
வாங்க குமார்.
அங்கே கூட்டிச் சேகரிச்சு வச்சப் பழைய கற்களைப்பார்த்தால் இன்னும் 300 வருசங்களுக்கு வேலை நடக்கும் போல!
கணினியை வச்சுத்தான் கண்டுபிடிக்கணும் எந்தக் கல்லு எங்கே போகுமுன்னு!!!!
வாங்க கயலு.
அதே அதே. நல்ல தீனிகளை அவர் கண்ணால் மட்டும் பார்க்க, நான் பேசிக்கிட்டே உள்ளே தள்ளிருவேன்:-))))
;)))
டீச்சர் உங்களுக்கு கோபால் சார்...எங்களுக்கு நீங்க ;))
ஒருமுறை ஆக்ரா போனப்ப, ஜூன் மாசம் வெய்யில் ஆளை அப்படியே உருக்குது. ஒன்பது வயசு மகள் கூட இருக்காள். அவளுக்கும் வெய்யில் ஒத்துக்காம உடம்பெல்லாம் கொப்புளம் வருது. கஷ்டப்பட்டு நடந்து தாஜ்மஹால் சுத்தியாச்சு. ஆக்ரா கோட்டை வரும்போது ரெண்டு பேரும் இப்பவோ எப்பவோன்னு ஆகிட்டோம். கோபால் மட்டும் உள்ளே போய் எல்லாத்தையும் வீடியோவா எடுத்துக்கிட்டு வந்தார். அவர் கண் வழியேதான் ஆக்ரா கோட்டையைப் பார்த்தோம்.
/////////////////
Sema touch.En kanavara padika solren ;-)
அன்புள்ள ஆசிரியருக்கு ,
சிவஷன்முகம் அன்புடன் எழுதிக்கொண்டது,
வணக்கம்.
"பாபுனும் பேயோனும்...............( கம்போடியாப் பயணம் 6 )"
மிகவும் அருமை ..எதை படிப்பது ,எதை விடுவது என்றே
தெரியவில்லை..ஒவோரு தகவலும் மிகவும் நேர்த்தியாக
அமைந்துள்ளது .கோபால் சார் எடுத்த வீடியோ பட காட்ச்சிகளை முடிந்தால் அனுப்பிவையுங்கள் ..நன்றி
படங்கள் அருமை அக்கா:) மறக்காம மாம்ஸ்க்கும் பாராட்டுல பங்கு கொடுத்துடுங்க:)
வாங்க கோபி.
என் வகுப்புக் கண்மணிகளே.... டீச்சரா உங்கள் 'கண்'மணி!!!!!
ஆஹா ஆஹா....
வாங்க விஜி.
பெட்டர் ஹாஃப், அடுத்த ஹாஃபுக்கு கண்:-))))
வாங்க சிவஷண்முகம்.
மகிழ்ச்சியா இருக்கு.
கோபால் வீடியோ எடுக்கலை இந்த முறை. பயணத்துக்காகவே சாதாரண பேட்டரி போடும் வகை வச்சுருக்கார். ரீசார்ஜ் செய்ய வேணாமேன்னு. அதுலே வீடியோ எடுக்க வசதி இருந்தாலும் ரொம்ப நேரம் தாங்காது:(
ஆக்ராவுலே படங்கள், அசல் வீடியோ கெமெராவில் எடுத்தவை.
வாங்க ரசிகன்.
உங்க மாம்ஸ்க்கு முழுப்பங்கையும் கொடுத்துட்டேன்:-)))))
மவுரி வெல்கம் போட்டோ சூப்பர்
அரசர் ஜெயவர்மனின் காதுகள் புத்தரின் காதுகளைப் போலப் பெரிதாக இருக்கிறது.
வாங்க சின்ன அம்மிணி.
டேங்கீஸ்.
அப்படியே ஒரு 'ஹாக்கா' செஞ்சுட்டு வந்துருக்கலாம் இவர்!
நான் கூடவே போயிருக்கணும் அதுக்கு. 'கம்மத்தே கம்மத்தே' சொல்ல:-))))
வாங்க அரவிந்தன்.
இவர் புத்தரைத்தான் காப்பி அடிச்சுருப்பார், இல்லே:-)))))
பாபுன் மற்றும் பாயோனில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:
https://goo.gl/photos/4fMvYdUWnAoptRpP8
https://goo.gl/photos/rwJx2kSvVz7Y8pmB8
- ஞானசேகர்
நாங்க போயிருந்தப்ப (2019) அந்த மஞ்சள் துணி போர்த்திய புத்தம் இடுப்புக்கு கீழ் அங்க ஹீனர் ஆகி தலைக்குப்புற கிடந்தார் போங்க
நாங்க போயிருந்தப்ப (2019) அந்த மஞ்சள் துணி போர்த்திய புத்தம் இடுப்புக்கு கீழ் அங்க ஹீனர் ஆகி தலைக்குப்புற கிடந்தார் போங்க
மங்களகெளரி மலேசியா
வாங்க எழுத்தாணி என்னும் மங்களகௌரி,
என்ன தலைகுப்புறவா ? அடப்பாவமே............
எழுத்தாளரின் புனைப்பெயரோ ! அருமை !
Post a Comment