Wednesday, August 11, 2010

இளமை இதோ இதோ...............( கம்போடியாப் பயணம் 5 )

சியெம்ரீப் நதிக்கரையையொட்டிப்போகும் சாலையில் போகும்போது, இதுதான் ராஜகுடும்பம் குளிக்கும் படித்துறைன்னு கையைக் காட்டினார் வீரா. (ஆங்.....ஆங்... இருக்கட்டும் அப்புறமா வந்து குளிச்சுக்கலாம்.......) நிறைய தண்ணி ஓடிக்கிட்டு இருக்கு. சாலையின் அடுத்தபக்கத்தில் அங்கங்கே சின்னதும் பெருசுமா உணவகங்கள். கடைகண்ணிகள். இங்கே ஒரு இடத்துலே அருமையான வெஜிடேரியன் சாப்பாடு கிடைக்கும்னு குறிப்பால் உணர்த்தியதும் சரின்னு அங்கே போனோம். ( ரெஸ்ட் ரூமும் சுத்தமா இருக்குன்னு சொன்னதும் ஒரு காரணம்.) மூங்கில் ப்ளாச்சுகளால் ஜன்னல், சுவர், கூரைன்னு கட்டிவச்சுருக்காங்க. தென்னையும் வாழையும் பூச்செடிகளுமா ஒரு தோட்டம்.

தாகத்துக்கு ஒரு இளநீர் சொன்னவுடன் ஒரு அஞ்சாறு க்ளாஸ் தண்ணீர் இருக்கும் மெகா சைஸ் இளநீர் வந்துச்சு. சாப்பாடும் பரவாயில்லை. கொஞ்சம் தாய் ஸ்டைல் போல இருக்கு. வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ். ப்ளெயின் ரைஸ், கம்போடியன் வெஜி கறின்னு ஒரு குழம்பு. வெள்ளைக்காரர்கள் கூட்டம் நிறைய இருக்கு. ஓய்வறைக்குப் பக்கத்துலே இருக்கும் இன்னொரு கூரைபோட்ட சின்ன ஹாலில் நிறைய வழிகாட்டிகள் உக்கார்ந்து கதையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. இங்கே நாம் வந்த காரணம் புரிஞ்சது:-))))
ஒன்னேமுக்கால் போலக் கிளம்பி 'அங்கோர் தாம்' ANGKOR THOM நோக்கிப்போறோம். போகும் வழியில் சாலையில் இடதும் வலதுமா நேரெதிரா ரெண்டு கோவில்கள். பார்க்க நல்லாவும் இருக்கு. இடிபாடுகள் அவ்வளவா இல்லை. எப்படி? நிறுத்துங்க, பார்த்துட்டே போகலாமுன்னு இறங்கிட்டோம். ச்சாவ் ஸே டெவோடா Chau Say Tevoda ஹிந்துக் கோவில்கள். மரத்தடியில் வாலில்லா சிங்கம் ஓய்வா உக்கார்ந்துருக்கு. ரெண்டாம் சூரியவர்மன் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டுன கோவில்களாம். போன பதிவில் பார்த்தோமே மரம் பிடிச்ச கோவில், அதைவிட இதுக்கு 35 வயசு கூடுதல். வெட்டவெளியில் கட்டுனதால் தப்பிச்சுப் பிழைச்சுருக்கு போல!
சீன அரசாங்க உதவியுடன் சமீபத்துலே புதுப்பிச்சுருக்காங்க.
இந்தக் கோவில்களைக் கடந்துதான் அங்கோர் மாநகரத்துக்குள்ளே போகணும். அங்கோர் தாம்னு சொல்றமே அதுக்கு இந்தப் பொருள்தான். அங்கோர்வாட் கோவிலைக் கட்டுன அதே சமயம் புதுத் தலைநகரம் ஒன்னு வேணுமுன்னு க்மெர் மன்னர்கள் நிர்மாணிச்சது இது.

இந்த மன்னர்கள் கோவில்கள் கட்டுவதையும் அண்டை நாடுகளுடன் 1 போரிடுவதையும் மட்டுமே செஞ்சுருக்காங்க போல இருக்கே! இந்த ஊர் சியெம் ரீப் என்ற பெயர்கூட சயாம் மன்னர்கள் இங்கே வந்து பிடிச்சுக்கிட்ட ஆட்சியை எதிர்த்து அவுங்களோடு நடந்த போரில் சயாம் வீரர்களை ஓடஓடத்துரத்தி வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமா வச்ச பெயர்தானாம்.

ஒன்பது சதுர கிலோமீட்டர் பரப்பு வரும் பெரிய நகரைச்சுற்றிக் கட்டுன கோட்டைக்கு அஞ்சு வாசல்கள். கிழக்குப் பக்கம் மட்டும் ஒன்னுக்கு ரெண்டா வாசல்கள் இருக்கு. நான்முகன் வடிவங்களுடன் மூணு கோபுரங்கள் டிஸைன். இதுலே வெற்றிக்கொரு வாசலும் தோல்விக்கு ஒரு வாசலும் வேற! போரில் வெற்றிபெற்ற மன்னன் வருகைக்கு வெற்றி வாசல். தோற்ற அரசனை 'பொலி ' போட்டுருவாங்கன்னு அவன் வெளியேறும் வாசல் மரணவாசலாம்:(

நாம் போய்ச் சேர்ந்த தெற்கு வாசலுக்கு முன்னால் ரெண்டு பக்கமும் கயிறு இழுக்கும் போட்டி நடப்பதைப்போல பாவம் அந்த வாசுகியைப் பிடிச்சுக்கிட்டு தேவர்களும் அசுரர்களுமா பாற்கடலைக் கடைஞ்சுக்கிட்டு இருக்காங்க. தேவர்கள் 54 பேரும் அசுரர்கள் 54மா ( ஆஹா... மொத்தம் 108 வருது பாருங்க!) பெரிய பெரிய சிலைகள். ஆனால் தலையில்லாத முண்டங்களா நிக்குது. ஆனாலும்., இப்படி ஒரேதா தலையைச் சீவி இருக்கவேணாம்:(

அங்கங்கே நடுக்கண்டங்கள் மிஸ்ஸிங். இந்த ஊரில் எங்கே பார்த்தாலும் பாம்புகளுக்குச் சிலைகள்! காடுகளுக்கிடையில் வரும்போது ஏகப்பட்டப் பாம்புப் புத்துக்கள் வேற இருக்கே..... பாம்புன்னா அவ்வளவு பிரியமான்னு கேட்டதுக்கு வீரா சொன்ன பதில், ' ஆமாம் பாம்புன்னா எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். பாம்பு ஸூப் அருமையான சுவை' அட ராமா..... 'அப்போ பாம்பு இந்தப் புத்துக்களில் இருந்து பிடிப்பீங்களா'ன்னா.... 'இப்ப அதுலே ஒன்னும் இருக்கச் சான்ஸ் இல்லை. எப்பவோ அதுகளையெல்லாம் பிடிச்சுத் தின்னாச்சு'ன்றார்.
கோட்டைக்குள்ளே அருமையான சாலை. நேராப்போய் ஒரு பாம்பு சிங்க மேடைக்குப்பக்கம் இறங்கினோம். விளையாட்டு அரங்கத்தை மன்னர் பார்வையிடும் மேடையாம்! யானைமீது வீரர்கள் அமர்ந்து சண்டை நடக்கும் பொல! டெர்ரஸ் ஆஃ எலெபெண்ட்ஸ்ன்னு பேர் இந்த மேடைக்கு!

யானை டெர்ரஸ்
இங்கே ஒரு கருடன் இருக்கார் பாருங்க!


அடுத்து நிற்கும் 'லெபர் கிங் டெர்ரஸ்'ஸுக்கு ஏறும் வழியெல்லாம் அட்டகாசமான சிற்பங்கள் வரிசை கட்டி நிக்குது. கருங்கல்லா இல்லை சுட்டமண் சிலைகளான்னு ஒரு மயக்கம் வந்தது உண்மை. நிறங்கள் அப்படி இருக்கே! இங்கேயும் யானைகளுக்குப் பஞ்சமே இல்லை. சுத்தி வளைச்சு மேலே போகும் பாதையில் சிற்பங்களோ சிற்பங்கள்.


கடைசியில் படிகளில் ஏறி மேலே போனால்..... இது 'மேலே போனவர்களுக்கு' செய்யப்படும் கடைசிச் சடங்குக்கான எரியூட்டும் இடம். ஆனால் அரச குடும்பத்தினருக்கு மட்டுமே இந்த இடம். அங்கே ஒரு சிலை. 'லெப்பர்கிங் ' சிலையாம். உயிர்களின் இன் சார்ஜ். அட ராமா? இது நம்ம எமன் இல்லையோ???? இல்லைன்னா..... வெட்டியானா இருக்குமோ? இவர் முன்னால்தானே கொளுத்தறாங்க! எத்தனை சவங்களுக்கு சாட்சியோ? வெட்டியான் நம்ம ஹரிச்சந்திரன் மாதிரி, அரசனா இருந்தால் சிலை வச்சுருக்கமாட்டாங்களா என்ன? என்னோட எந்த கேள்விக்கும் வீராவிடம் பதில் இல்லை. இப்படியே விட்டுறக்கூடாதுன்னு 'வலை ஆண்டவரைக் கேட்டதில் விஷயம் பிடிபட்டுருச்சு.
மேற்படியாளர் நம்ம தருமராஜனேதான். இப்படித்தான் இவருடையை சிலையின் அடியில் பெயர் பொறிச்சு வச்சுருக்காம். இந்தப்பகுதிகளையெல்லாம் தேடி ஆராய்ஞ்ச ப்ரெஞ்சுக்குழுவினர் எமனை எங்கே கண்டாங்க? முதல்முதலில் பார்த்தப்ப சிலையில் அங்கங்கே நிறம் மங்கி வெள்ளை வெள்ளையா காளான் புடிச்சுக் கிடந்திருக்கு. இதென்னடா.... குஷ்டம் பிடிச்சமாதிரின்னு நினைச்சுருக்காங்க. அப்போ அங்கிருந்த குழுவினரில் ஒருத்தர், 'அண்ணே.... அங்கோரியன் அரசர்களில் ஒருத்தர் உண்மையிலேயே குஷ்டரோகியா இருந்துருக்காரே. அவரோட சிலையாத்தான் இது இருக்குமுன்னு சொல்ல.....ஆஹா.... அப்படித்தான் போலன்னு இவருக்கு 'லெபர் கிங்'ன்னு பெயரே வச்சுட்டாங்கப்பா. இந்த நிமிசம் இங்கே இருக்கும் சிலை டூப்ளிகேட்டாம். வெறும் நகல். அசலைக்கொண்டுபோய்க் காப்பாத்தறேன்னு அருங்காட்சியகத்துலே வச்சுட்டாங்களாம்!!!!

கொஞ்சம் உசரமான இடம் என்பதால் சுத்துப்பக்கம் எல்லாம் இங்கிருந்து பார்க்கும்போது அட்டகாசாமா இருக்கு.

இதைக்கடந்து அரண்மனை இருந்த இடத்துக்குப்போனோம். வழியில் ரெண்டு குளங்கள். பெருசு ஒன்னு அரண்மனைப்பெண்டிர்களுக்கும். கொஞ்சம் சின்னதா இருப்பது அரசருடைய தனிப்பட்ட குளமுன்னும் வீரா சொன்னார். தினமும் இங்கே நீராடி, பக்கத்துலே இருக்கும் கோவிலுக்குள் போய் இறைவனை வழிபடுவாராம் அரசர்.

அந்தப்புரம் இருந்த இடம் இப்போ காலி மனை. மரத்தால் கட்டுன கட்டிடமாம். காலத்தால் போயே போச். இதுலே முன்னூறு மனைவிகளோடு அரசர் வாழ்ந்துருக்கார். ஆனாலும்............. இதைத் தொட்டடுத்து இருக்கும் உசரமா மேலேபோகும் படிகளோடுள்ள கோவில் கட்டிடத்துக்குள்ளே அரசர் மட்டுமே தினம் இரவில் போய் தங்கிட்டுக் காலையில் திரும்பிவருவாராம்?

ஏனாம்?

இளமையைத் தங்கவச்சுக்கும் விசேஷ மருந்து அவருக்கு அங்கே மேலே கிடைச்சதாம். எப்படி?

அங்கே ஒரு நாக கன்னிகை இருந்தாளாம். தினம் ராஜா அங்கே போகும்போது (அவளும் மானிட உரு எடுத்தாளோ இல்லை ராஜாதான் நாக உரு எடுத்தாரோன்னு தெரியாது..............) நாகத்துடன் கூடி மகிழ்ந்து இருந்துட்டு வருவாராம். ஒரு நாள் அங்கே போகலைன்னா.... இவர் கிழ உருவமாயிடுவார்னு ஒரு சங்கதி / சாபம். இருந்துருக்கு.

இல்லைன்னா முன்னூறைக் கட்டி மேய்ச்சுருக்க முடியுமா?
படிக்கட்டுகளைப் பாருங்க. இதுலே இருக்கும் பலகைப் படிகள் நம்மைப்போன்ற சுற்றுலாப்பயணிகளுக்காக இப்போ வச்சது. ராஜா காலத்துலே வெறும் கல்லுப் படிகள்தான். இதுலே ஏறி இறங்கவே பயங்கர உடல் பலம் வேணாமோ?

கோவிலின் இன்னொரு பக்கத்தில் அங்கோர்வாட்டில் பார்த்தது போலவே 'சரசர'ன்னு இருக்கும் படிகள் வேற இருக்கு. ஒருவேளை அது நாகத்துக்கான ஸ்பெஷல் படிகளாவும் இருந்துருக்கலாம்!!!
இளமைன்னதும் இன்னொன்னும் சொல்லிக்கிறேன். உண்மையிலேயே அழகான இளம்பெண்கள் மூவர் இங்கே 'ஷால், மேசைவிரிப்பு, டேபிள் நாப்கின்' எல்லாம் விற்கறதுக்காக வட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. 'பள்ளிக்கூடம் போகலையா, என்ன படிக்கிறீங்க'ன்னு கேட்டேன். 'இன்னிக்கு சனிக்கிழமை. லீவு. நாங்கெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கிறோமு'ன்னு சொன்னாங்க. 'நல்லாப் படிங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.



தொடரும்.....................:-)))))

28 comments:

said...

Teacher
ennaku romba naala oru santhegam.Ivlo kuripugalum eppadi nabagam vachukareenga.Notes edupeengala.

said...

அந்த படிகள பாக்கவே terrora இருக்கு.எபாடி தன ராஜா ஏறினாரோ .300 மனைவிகளா?? தாங்காது.எப்படி பேரு ஞாபகம் வச்சு இருப்பாரு.
எங்க அப்பா அம்மா உங்கள மாதிரி தான் நெறைய கோவில் போறாங்க.ஆனா tamilnadukulara தான்.திருவையாறு சைடு கோவில் பொய் இருக்கீங்களா டீச்சர்.

said...

//இங்கே ஒரு கருடன் இருக்கார் பாருங்க!//
அக்காவுக்கு கழுகு பார்வை :-))

//கோவிலின் இன்னொரு பக்கத்தில் அங்கோர்வாட்டில் பார்த்தது போலவே 'சரசர'ன்னு இருக்கும் படிகள் வேற இருக்கு. ஒருவேளை அது நாகத்துக்கான ஸ்பெஷல் படிகளாவும் இருந்துருக்கலாம்!!!//

'சரசர' இல்லை 'சரச' ன்னு 'படி'க்கணும் :-))

//உண்மையிலேயே அழகான இளம்பெண்கள் மூவர் இங்கே 'ஷால், மேசைவிரிப்பு, டேபிள் நாப்கின்' எல்லாம் விற்கறதுக்காக வட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க.//
இவங்களை மத மாற்றம் செய்யலையா? :P

said...

வாங்க விஜி.

மனுசன் தன் மூளையை 5 சதவீதத்துக்கும் குறைவாத்தான் பயன்படுத்தறானாம். ஆராய்ச்சி சொல்லுது!

எனக்கும் அப்பப்ப மறதி வந்துருது. அன்னிக்கு சாப்பிட உணவகம் பெயரை மறந்துட்டேன்:(

போனவருசம் தமிழ்நாட்டுலே ஒரு அஞ்சு சதவீதம் இடங்கள் போயிருந்தோம். அதுலே திருவையாறும் ஒன்னு.

சுட்டி இங்கே இது.
http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-9.html
நூல்பிடிச்சுப் போகலாம்.

said...

வாங்க டாடி அப்பா.

'ராரா...சரசகு ராரா' பாடி இருக்குமா அந்த நாகம்?

said...

சரித்திர டீச்சர் ல இருந்து சரித்திர பேராசியர் சரித்திரமுனைவர் பட்டமெல்லாம் குடுத்துடலாம் உங்களுக்கு.. பாருங்க.. எவ்ளோ ஆராய்ச்சி எவ்ளோஒ ஆராய்ச்சி. :)

said...

ராஜகுடும்பம் குளிக்கும் படித்துறைன்னு கையைக் காட்டினார் வீரா. (ஆங்.....ஆங்... இருக்கட்டும் அப்புறமா வந்து??// iஎப்படிப்பா இத்தனை டாஷ் டாஷ் புத்துகளைப் பார்த்து சாவகாசமா வந்து சொல்றீங்க:) எல்லாத்தையும் சாப்பிட்டாலும் அத்தோட குட்டிகள்ளெல்லாம் வந்து பழி வாங்காதோ!!
பறவைப் பார்வையில் எல்லாம் அமர்க்களமா தான் இருக்கு.thu~~:)

said...

ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் அருமையா பச்சை பசேல்னு இருக்கு டீச்சர். அந்த கருடன் கீழே விழாமல் எப்படி பறப்பது என பயந்துகிட்டு இருக்கமாதிரி இருக்கு டீச்சர்.

said...

கோவிலின் இன்னொரு பக்கத்தில் அங்கோர்வாட்டில் பார்த்தது போலவே 'சரசர'ன்னு இருக்கும் படிகள் வேற இருக்கு. ஒருவேளை அது நாகத்துக்கான ஸ்பெஷல் படிகளாவும் இருந்துருக்கலாம்!!!
adadaa:)))))TOO MUCH:)))))

said...

வாங்க கயலு.

பட்டமளிப்பு விழாவை எப்போ வச்சுக்கலாம்?

தோ........ கிளம்பிட்டேன்:-)))))

said...

வாங்க வல்லி.

அதுகள் விட்டலாச்சாரியா படம் பார்த்துருக்குமா? நோ ச்சான்ஸ்!!!!

நம்மாளுதான் பீதியில் உறைஞ்சு கிடந்தாருப்பா:-))))))

நானே சிலசமயம் டேஷ் டேஷ் மாதிரி சீறுகிறேனாம் தூக்கத்துலே:-))))

பாவம்........

said...

வாங்க சுமதி.

அது கொழந்தைப்புள்ளெப்பா! சரியா இறக்கைகூட முளைக்கலை பாருங்க:-))))

said...

சரித்திர ஆராய்ச்சியும், படங்களும் சூப்பரோ சூப்பர்....

said...

வாங்க அமைதிச்சாரல்.


ரொம்ப ஆழமான ஆராய்ச்சி எல்லாம் இல்லை. ச்சும்மா மேலோடு......


'அசோகர் மரங்களை நட்டார்' வகை:-))))

said...

சரித்திர டீச்சர் ல இருந்து சரித்திர பேராசியர் சரித்திரமுனைவர் பட்டமெல்லாம் குடுத்துடலாம் உங்களுக்கு.. பாருங்க.. எவ்ளோ ஆராய்ச்சி எவ்ளோஒ ஆராய்ச்சி. :)

said...

இலங்கைப் போலவே இந்த கம்போடியா மேலே ஒரு ஈர்ப்பு உண்டு. நம்ம மன்னர்கள் கதை நிறைய படித்த காரணத்தால்.

said...

நாளுக்கு நாள் பொறாமையா இருக்கு.

ரசிக்க மனம் வேண்டும்
எழுத திறமை வேண்டும்
கோர்க்க பொறுமை வேண்டும்.

முத்துக்களை அணிய மனம் வேண்டும்.

ம்ம்ம் நடக்கட்டும் நாங்களும் உங்களப் போல ஒரு நாள் எழுதுவோம்ல.......

said...

Dear Author,
Mr.Gopal's camera speaks the legends of cambodia..One of the easiest methods to separate your photos from "the crowd" would be to concentrate more on your photography background.need not to say that his camera fascinating well and trying to capture the hearts of the peoples.thanx

said...

வாங்க ஜோதிஜி.

மும்முத்துக்கள் எனக்கே எனக்கா!!!!!

நல்லா இருக்குன்னு மனம் திறந்து பாராட்டவும் ஒரு 'மனம்' வேணுமே!!!

நன்றி நன்றி நன்றி.

உண்மையில் சரித்திரம் ஒரு சமுத்திரம்.
உள்ளெ போனால் வெளிவருவது சுலபமில்லை.

பாரபட்சமில்லாமல் எழுதுன 'உண்மை'கள் காணக் கிடைப்பதுதான் கஷ்டம்:(

இல்லையா?

said...

வாங்க சண்முகம்.

மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதிக்கிட்டு இருக்கேன். ஆனாக் கடைசி நிமிசத்துலே
'கண்ணுலே காட்டி' கோபால் அடிச்சுட்டார் மெகா பரிசு:-))))

இருக்கட்டும். பெட்டர் ஹாஃப் புகழில் ஹாஃப் எனக்கு:-)

நன்றி நன்றி.

கோபால் சார்பில் இன்னொரு நன்றி.

said...

நல்லா இருக்குன்னு மனம் திறந்து பாராட்டவும் ஒரு 'மனம்' வேணுமே!!!


மனமெல்லாம் பாதி நேரம் இங்கு பலருக்கும் பொணம் போலத்தான் இருக்கு. அதுவும் இந்த இடுகையில சொல்லவே வேண்டாம்????????????

நண்பர் சொன்னார்?

எப்படி ஈழம் குறித்து இத்தனை புதிய ஆச்சரியமான தகவல்கள் திரட்டுனீர்கள்?

நீங்கள் படித்து உள்ளீர்களா?

என்ன இப்படி கேட்டுட்டீங்க? பயங்கரமான ஆச்சரியம் உங்க எழுத்து?

ஒரு நாள் கூட நீங்க கமெண்டு போட வில்லையே?

ஐயோ அத மட்டும் செய்யமாட்டேன்?

ஏனுங்க?

சோம்பேறித்தனம்,(?)

இது கூகுள் சாட்டில் ஒரு நண்பருடன் பேசிய போது உருவான முத்துகள்.

என்னுடைய பார்வையில உங்களுடைய எழுத்துக்கள் சிந்தனைகள் ஆதாரங்கள், கோர்வைகள் ஒருவருக்கு புரியவில்லை பிடிக்கவில்லை என்றால் அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்று அர்த்தம்.

said...

ஜோதிஜி,

மு.சொ.ன்னு சொல்லிடப்போறாங்க!

கவனம் தேவை நமக்கு:-)))))

said...

மு.சொ.ன்னு சொல்லிடப்போறாங்க!

என்ன இப்படி சொல்லிட்டீங்க,

கண்டதுக்கும் சொறிய சொறிந்து விட, சொறிந்ததை அதிகப்படுத்த, அதையே வேலையாய் வைத்து இருப்பவர்கள் தான் இங்கு அதிகம் பேர்கள் இருக்கிறார்களே?

இவர்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு வார்த்தை கூட நாம் நினைத்ததை எழுத முடியுமா?

இது தடைகள் தாண்டிய பந்தயம்.

said...

பாம்பு சூப் குடிக்கிறவர்கள் கம்போடியாவில் இருப்பதினால் பாம்புக்களுக்கு பயப்பிடாமல் கம்போடியாவுக்கு பயணிக்கலாம்

said...

ஜோதிஜி,

அப்ப 'ஃப்ளாட் ரேஸா'? ;-)))))

said...

வாங்க அரவிந்தன்.

நியூஸி, ஃபிஜின்னா இன்னும் நல்லது. நோ பாம்பு அட் ஆல்!!!!

said...

இப்பத்தான் வந்து இறங்கினேன். பெரிய கடிதம் கரையை கடந்து வந்து கொண்டுருக்கிறது.

said...

அருமையான வெஜிடேரியன் சாப்பாடு சாப்பாட்டுக்கடைக்கு பேரு ஏதும் உண்டா?!