நேத்து ஒரு ஹிந்திப்படம் பார்த்தேன். சுவாரசியம் இல்லாமல் 'ச்சும்மாப் பார்த்து வைக்கலாம்' ஓசியில் கிடைச்சதைத் திருப்பிக் கொடுக்கணுமேன்னு.........
எப்படி, எப்போ, இப்படி ஆழ்ந்து போனேன்னு தெரியலை. லண்டனில் இருந்து மும்பை வரும் ஏர் இந்தியா விமானத்தில் ஆரம்பிக்கும் முதல் காட்சி.
சரியாச் சொன்னால், வந்து இறங்கிய ஆறு மணிநேரத்தில் நாயகனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள்.........
தெரிஞ்ச முகமுன்னு ஒன்னுமே கிடையாது. படம் பூராவும் மும்பை நகரில் எடுத்துருக்காங்க போல. 'செட்'ன்னு எதையும் கவனிச்சதாத் தோணலை.
தன் வீட்டில் இருந்துக்கிட்டே...... விதவிதமான சாப்பாட்டுடன், குழந்தையைக் கொஞ்சிக்கிட்டு 'அலைபேசி'யிலேயே நாயகனை விலைபேசும் ஆள். வில்லன்னு சொல்லலாமோ? இல்லே தலைவனா?
எப்படிப்பட்ட 'நெட் ஒர்க்' என்ற வியப்பு இன்னும் மாறலை!!!!!
அபத்தமான பாடல் காட்சிகள், வலிந்து வைக்கப்பட்ட ஆட்டங்கள், நடனம் என்ற பெயரில் கைகால் வலிப்புகள் இப்படி ஒன்னுமே இல்லைப்பா. ஆனா பாட்டு இருக்கு. எங்கியோ மெல்லிசா, ஒலிச்சும் ஒலிக்காமலும்.
படம் முடிஞ்சு டைட்டில் ஓடும்போதுதான் அட! இத்தனைப் பாட்டு எங்கே இருந்துச்சு? ஆங்கிலப்படங்களில்தான் இப்படி வந்துக்கிட்டு இருக்கும்.
விமரிசனம் எழுதப்போறேன்னு சொன்னதும் ...............
வழக்கம்போல் 'அஸ்து' கேட்டது.. ஆனாலும் முடியலை.
ஒரு பக்கத்தை மட்டும் சொல்லுதோன்னு நினைக்க வைக்கும் கதை. 'அடுத்த பக்கம்' ஒருவேளை இன்னொரு படம் எடுக்கலாம்.
இந்தியாவில் வெளியிட்டாங்களான்னு தெரியலை.
படம் கிடைச்சாக் கண்டிப்பாப் பாருங்க. சின்னப் படம்தான். அதான் அஞ்சு டூயட்டும் ஆறு ஃபைட்டும் வைக்கலையே.
ஆமீர்ன்னா என்ன அர்த்தம்? தலைவன்.
இயக்கம் & எழுத்து ராஜ் குமார் குப்தா
கதை நாயகன்... ராஜீவ் கண்டேல்வால்
தயாரிப்பு ..... ரோனி ஸ்க்ரூவாலா
இசை....அமீத் த்ரிவேதி
Thursday, August 14, 2008
ஆமீர்
Posted by துளசி கோபால் at 8/14/2008 09:40:00 AM
Labels: திரைப்படம் விமரிசனம் சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
தமிழ் துணைத்தலைப்புகள் இருக்கா? இல்லைன்னா நாங்க ஈரானிய படமே பார்ப்போம். இது என்னாத்துக்கு!
வாங்க கொத்ஸ்.
அட! ஈரானியப்படத்துலே தமிழ் துணைத்தலைப்புகள் இருக்கா? அடடா.... இதுவரை தெரியாமப்போச்சே......
இந்தப் படம் அவ்வளவு பாக்கியம் பண்ணலை. வெறும் ஆங்கில சப் டைட்டில்ஸ்தான் இருக்கு:-))))
ப்ரஸெண்ட் டீச்சர்!
//வழக்கம்போல் 'அஸ்து' கேட்டது.. ஆனாலும் முடியலை.
//
அஸ்து என்றால் என்ன டீச்சர்?
வாங்க சிஜி.
வருகைக்கு நன்றி.
நல்ல நாளிலேயே நாழிப்பால்.....:-)
வாங்க க.ஜூ.
நம்ம கண்ணுக்குத் தெரியாமல் ஆகாய மார்க்கத்தில் தேவதைகள் பறந்துக்கிட்டு இருப்பாங்களாம். 'அப்படியே நடக்கட்டும், அவ்வண்ணமே ஆகுக' (சதாஸ்து) சொல்லிக்கிட்டே சஞ்சரிப்பாங்களாம்.
நல்ல எண்ணமா நல்லது நாம் சொன்னால் அது நடக்கும். அதே சமயம் நம்ம வாயில் இருந்து ஏதாவது கெட்டதாச் சொல்லிட்டோமுன்னா அதுவும் நடந்துருமாம். அதனால் கெட்டதா ஏதும் பேசக்கூடாதுன்னு எங்க பாட்டி சொல்வாங்க.
இப்ப ஏதாவது புரிஞ்சதா? இந்த அஸ்து போடறது பற்றி:-)))
ஹீரோயின், ஹீரோ யாருன்னு சொல்லலியே? ஆர்ட் பிலிமோ?
வாங்க தமிழ் பிரியன்.
கதைதான் ஹீரோயின். கடைசி நிமிஷம்வரை த்ரில்லிங்காக் கொண்டுபோன இயக்குனர்தான் ஹீரோ.
ப்லிம் மேக்கிங்கே ஒரு ஆர்ட்தானே?
ராஜீவ் தான் கதைநாயகன்.
தமிழ் சினிமா போகவேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கேன்னு பெருமூச்சுதான் விட முடிஞ்சது.
ரொம்ப நாளைக்கப்புறம் வந்தேன்!நல்ல படம் ஒண்ணு சொல்லி இருக்கீங்க கண்டிப்பா பார்க்கணும்
பாத்துபுட்டு நானும் சொல்வேனில்ல (உங்ககிட்டத்தான்:)
மேடம்!நீங்க இன்று முதல் எனக்கு டீச்சர்.புதுப்புது வார்த்தைகள் சொல்லித்தருவதால்.
படம் பேர் என்னன்னு சொன்னீங்க?ஆமீரா?பக்கத்துல வெயிலில் ஒரு பொடி நடை படக்கடைக்குப் போயிட்டு வருகிறேன்.
போகும்போது உங்க கோபத்துக்கு என்ன பின்னூட்டம் போட்டீங்கன்னு நினைவு வருது.ஏதாவத் சொன்னீங்களான்னு அதையும் பார்த்துட்டுப் போறேனே?
ஆமிரா??? கிடச்சாப் பார்க்கிறேன்.
நல்லா இருக்குப் படிக்க. நானும் ஒரு இந்திப்படம் ஃப்ளைட்ல பார்த்தேன்மா. சண்டேன்னு பேரு.
அதைப்பத்தி எழுதத்தான் தெரியலை:)
நல்லா இருக்குங்கறீங்க பார்த்துடலாம்.. :)
என் பக்கம் வந்ததுக்கு நன்றி. கலக்கலா பல தலைப்புகள்ல எழுதுறிங்க. வாழ்த்துக்கள். சமையல் குறிப்பு எல்லாம் சூப்பர். bawarchi க்கு பதிலா அடுத்த தடவை இங்கு வந்து தேடலாம்ன்னு இருக்கேன்.
ஆமீர்-ன்னு கேட்டதும்..
ஆ.. மீரூ..தெலுகா-ன்னு தசாவதாரத்துல கமல் பேசற வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.. :))
அமீர்/எமீர்ன்னு உருது/அரபியிலே சொல்றாங்களே அந்த மாதிரியா?
யார் அந்த அஸ்து பாடும் தோஸ்து? :-)))
வாங்க தமாம் பாலா.
Aamir ன்னுதான் தலைப்பில் வருது.
நல்ல த்ரில்லர்.
வாங்க மீனா.
நலமா?
அதானே ....நல்லதை விட முடியுமா? :-))))
வாங்க ராஜ நடராஜன்.
எனக்கு இங்கே எப்பவுமே யாருக்குமே கிடைக்காத, எனக்கு மட்டுமுன்னே எடுத்த படங்கள் மாட்டும்.
நம்ம பதிவர்களில் பலருக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு. அதெப்படி ஒருத்தருக்குன்னே படம் எடுக்கறாங்கன்னு:-)))))
நம்ம (வீட்டு) தியேட்டர் ராசி இப்படி:-)))))
கோபத்துக்கு பதில் சொல்லியாச்சு.
இப்படிப் பதில் சொல்லிச் சொல்லியே ஒரு கோபம் வரப்போகுது ஆமாம்:-)))
வாங்க வல்லி.
சண்டே யைப் பத்தி எழுதத் தெரியலையா?
அப்ப 'மண்டே(யி)லே எழுதுங்களேன்:-)))
வாங்க கயலு.
கிடைச்சா விடாதீங்க.
வாங்க சுந்தர்.
நானும் பாவர்ச்சி, இண்டியன் குக்கிங், தரலா தலால் எல்லாம்பார்த்துட்டு, எனக்குத் தோணுனமாதிரி சமைச்சுருவேன்:-))))
No comment... ;-)
வருகைக்கு நன்றி என் இனியவளே புனிதா!!!
Post a Comment