Saturday, August 16, 2008

நியூஸியின் தங்க மங்கையர்.



இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஒலிம்பிக்ஸ் விளையாட்டின் படகுப்போட்டியில் நியூஸி வீரர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடந்து முடிஞ்சது.

நாங்க எல்லோரும் ரொம்ப ஆவலாவும், நிச்சயமாவும் எதிர்பாத்துக்கிட்டு இருந்தது மாஹே ட்ரைஸ்டேல் தங்கம் ஜெயிச்சுருவாருன்னு. நம்ம போதாத காலம் பாருங்க..... அவருக்கு பெய்ஜிங் பெல்லி வந்துருச்சு. பாவம். ரொம்பவே ----ட்டார் போல. நாலு கிலோ எடை பளிச்சுன்னு குறைஞ்சுருச்சு. உடம்பும் ரொம்ப நீர்ச்சத்து இல்லாமப்போய் நிஜமாவே ட்ரை ஆகிருச்சாம். அப்படியும் இறுதிப் போட்டியில் மூச்சைப்பிடிச்சுப் படகு வலிச்சு மூணாவதா வந்துட்டார். போட்டி முடிஞ்ச அடுத்த நிமிஷமே வாந்தி & மயக்கம். பாதுகாப்பா அவரைக் கரைக்குக் கொண்டுவந்த மெடிக்கல் டீம், சிகிச்சை கொடுத்தது. பரிசளிப்பு விழாவுலே பங்கெடுக்க முடியாமப்போகுமோன்னு எனக்கு ஒரே கவலை. இதுவரை எந்த பரிசளிப்பையும் இந்த விழாவில் நான் பார்க்கவே இல்லை. நல்லவேளையா பரிசளிப்புக்கு அஞ்சு நிமிசம் இருக்கும்போது அவர்வந்து கலந்துக்கிட்டார். விழா முடிஞ்சதும் நாலுபேர் வந்து கைத்தாங்கலாக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.

அதுக்கப்புறம் இரட்டையர் போட்டியிலும் நியூஸி மூணாவதாவே வந்துச்சு. பெண்கள் இரட்டையர் போட்டியில் கலந்துக்கிட்ட ரெண்டு பெண்களும் ரொம்ப ஹாயா முதலில் இருந்தே பின் தங்கி முதலாவதா...... அதாவது கடைசிக்கு முதலாவதா வந்து அஞ்சாம் இடம் பிடிச்சாங்க.

இன்னொரு போட்டியில் நியூஸிக்காக படகு வலிச்ச சகோதரிகள் (Georgina and Caroline Evers-Swindell )தான் நம்பிக்கை நட்சத்திரமா எங்களுக்குத் தோன்றினார்கள். அதெல்லாம் அவ்வளோ சீக்கிரம் நம்பிக்கை இழந்துறமாட்டோம் நாங்க.

ஆரம்பத்தில் கொஞ்சம் பின் தங்குனாலும் ஆயிரம் மீட்டர் கடக்கும்போது வேகம் எடுத்தாங்க. நாங்க கத்துன கத்தல்( இதுக்கு ஊக்குவித்தல் என்று பெயர்) நெசமாவே கேட்டுச்சுபோல. 1500 மீட்டர் கடந்ததும் அருமையான வேகம். ஜெர்மனி மங்கையர் ஆரம்பத்தில் இருந்தே ஒரே வேகத்தில் முதலாகவே போய்க்கிட்டு இருந்தாங்க. கடைசியில் ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் ஜெயிச்சதுபோல. ஃபோட்டோ ஃபினிஷுக்காக சில நிமிசம் காத்துருந்தோம். நியூஸியுமே ஜெர்மனிதான் ஜெயிச்சாங்கன்னு நினைச்சோம்.

ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா..... நூத்துலே ஒன்னுன்னு சொல்றது போல ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கு வித்தியாசத்தில் நியூஸி ஜெயிச்சே ஜெயிச்சுத் தங்கம் வாங்கிட்டது, இந்த ஒலிம்பிக் விழாவின் முதல் தங்கம் இது.

இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

வெல்டன் ஜார்ஜினா & கேரலின்.Georgina and Caroline Evers-Swindell

சொல்ல மறந்துட்டேனே..... இவுங்க ரெண்டுபேரும் ஒரே நாளில் பிறந்தவுங்க. பிறந்த ஊரும், ஆஸ்பத்திரியும்கூட ஒன்னுதான். இன்னும் சொல்லப்போனா ரெண்டு பேருக்கும் அம்மா அப்பாகூட ஒன்னு.
ரெட்டைப்பிறவிகள்:-)))))

கடைசிச் செய்தி (இப்போதைக்கு)

குண்டு எறியும் போட்டியில் நியூஸியின் Valerie Vili முதலிடம்.

வாலரிக்கு வில் பவர் அதிகம், ஜெயிச்சுட்டேம்மா.....ஜெயிச்சுட்டே.

25 comments:

said...

ஜார்ஜினா கோஷ்டிக்கும் அவங்களைப் பத்தி எழுதின உங்களுக்கும் தங்க வாழ்த்துக்கள்.
அட என்னமா வலிக்கறாங்கப்பா படகை!!!!!!!!

said...

ரீச்சர்,

உங்களுக்கே இப்பதான் முதல் தங்கம் கிடைக்குதா? ஆச்சரியமா இருக்கு.. அதென்ன படகு போட்டி, பாய்மரப் போட்டின்னா மட்டும் நியூஸிலாந்து பேர் பெரிசா தெரியுது..?

said...

சிங்கப்பூருக்கும் ஒரு பதக்கம் காத்திருக்குது- மேஜை பந்து போட்டியில்.
48 வருடங்கள் கழித்து ஒலிம்பிக்ஸ் பதக்கம் பார்க்கிறார்கள்,இதற்காக பிரதமர் தேசிய தின ஆங்கில உரையை கூட மாத்திவெச்சிட்டாங்க.

said...

இரட்டையர் பிரிவில் இரட்டைப் பிறவியர் அடைந்த வெற்றியில் அளவிலா ஆனந்தம் அடைந்து அதைப் பதிவாக்கி விட்டீர்கள் உடனே எம் பார்வைக்கு. இப்பல்லாம் நியூசி பற்றி என்ன ந்யூஸ் படித்தாலும் பார்த்தாலும் கேட்டாலும் உங்க நினைவுதான் வருகிறது (எல்லோருக்கும், இல்லையா நண்பர்களே?)!

said...

வாங்க வல்லி.

இந்த ஜோடி போன ஒலிம்பிக்ஸ்லேயும் தங்கம் ஜெயிச்சவங்கதான்.

இப்ப இன்னொரு பெண் குண்டு எறிஞ்சு தங்கம் வாங்கியிருக்காங்க.

எங்க கா(நா)ட்டில் தங்க மழை பொழிகிறது:-)))

said...

வாங்க உண்மைத்தமிழன்.

இது இந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ்லே வாங்குன முதல் தங்கம் என்பதால் பரபரப்பு கூடுதலா இருந்துச்சு. அதுவும் ரொம்பக் கடினமான போட்டி. ஒரு வினாடியில் நூத்தில் ஒரு பங்குலே ஜெயிச்சது.

ரிஸல்ட் போட்டப்பவும் முதல் இரண்டு இடம் எதுன்னு குழப்பத்தால் ஒன்னுமே போடாம மூணாவது இடம் மட்டும் முதலில் சொன்னாங்க. த்ரில்லிங் !!!


ஒலிம்பிக் சரித்திரத்தில் இதுவரை நியூஸி 35 தங்கம் வாங்கி இருக்கு.

எங்களுக்குத் 'தண்ணி'ன்னாவே உயிர். அதுதான் வாட்டர் ஸ்போர்ட்ஸ்ன்னா வெல்லம்:-)))))

said...

வாங்க குமார்.

நாட்டுக்கே ஒரு பெருமைதானே?

விளையாட்டுவீரர்களை மதிக்கத் தெரிஞ்ச நாடுகளில் இருக்கோம்.

நீங்கள் வெற்றிபெற நல் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ரொம்ப மகிழ்ச்சி. அதுக்காக நில நடுக்கம் செய்தி பார்த்தால்...அது நான் குதிச்சதாலேயோ இல்லை நடந்ததாலேயோ நிகழ்ந்துருக்குமுன்னு நினைக்கக்கூடாது ஆமாம்:-)))

(இங்கே பொழுதன்னிக்கும் நிலநடுக்கம்தான்)

நியூஸின்னதும் என்னை மட்டும் நினைக்காமல், நம்ம சின்ன அம்மிணியையும் நினைக்கணும். சொல்லிப்புட்டேன்:-)

Anonymous said...

நேத்துன்னு பாத்து வெலிங்கன்ல மூணு விழா, 1. தமிழ்ச்சங்கம் நடத்திய வெள்ளி விழா, 2. விவேக் கின்ரா வின் தசாவதாரம்(கருணை இல்லத்துக்கு பண்ட் சேக்க, 3.ஆசிய கலாச்சார விழா.
முதலாவது விழாக்குத்தான் போனேன். வரும்போது கமெண்ரி கேட்டுட்டே வந்தேன். பாத்தா ஒரே நாள் எத்தனை மெடல் வாங்கிருக்கு நியூஸி

said...

//அதுக்காக நில நடுக்கம் செய்தி பார்த்தால்...அது நான் குதிச்சதாலேயோ இல்லை நடந்ததாலேயோ நிகழ்ந்துருக்குமுன்னு நினைக்கக்கூடாது ஆமாம்:-)))
//

:)))))!

//குண்டு எறியும் போட்டியில் நியூஸியின் Valerie Vili முதலிடம்.//

எல்லோரும் சந்தோஷத்தில் மெதுவாவே குதிக்க வாழ்த்துக்கள்:)))!

//நியூஸின்னதும் என்னை மட்டும் நினைக்காமல், நம்ம சின்ன அம்மிணியையும் நினைக்கணும். சொல்லிப்புட்டேன்:-)//

தெரியுங்க. ஜூன் பிட்டில் மெல்பெர்ன் ஜூ காட்சி போட்டிருந்தாங்களே. அதில "உங்க" பசங்க கொடுத்திருந்த போஸை மறக்க முடியுமா:)?

said...

வெற்றி பெற்றவர்களுக்கும், எங்களுக்கு அறியத் தந்தவ்ர்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

இந்தியாவிற்கும் குத்துசண்டையில் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன. அகில் குமார், ஜிதேந்தர், விஜேந்தர் குமார் ஆகிய மூன்று வீரர்கள் காலிறுதியில் உள்ளனர், அடுத்த ஒரு வெற்றி பெற்றாலும் பதக்கம் நிச்சயம்.

வெற்றிக்கு பிரார்த்திப்போம்.

said...

மேடம் வடுவூர் குமார் கூறியபடி இன்னைக்கு சிங்கப்பூர் க்கு ஒரு வெள்ளி இல்லேன்னா தங்கம் கிடைக்க போகுது. இந்தியா நேரப்படி மாலை 5 மணிக்கு நேரலை :-)

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

said...

வாங்க சின்ன அம்மிணி.

அது என்ன வெள்ளி விழா?

சங்கம் ஆரம்பிச்சு 25 வருசமாச்சா?

said...

ராமலக்ஷ்மி.

தாயை மறந்தாலும் பசங்களை மறக்கலாமா? :-))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

எங்களுக்கு இங்கே டிவி கவரேஜ் இருக்குமான்னு தெரியலை(-:

said...

வாங்க கிரி.

நியூஸி டிவி ஒன், ரொம்பத்தான் அநியாயம் செய்யுதுப்பா.ஃபோகஸ் ப்பூராம் கிவிக்கள் மேலேதான்.

சிங்கை வெற்றிபெற வாழ்த்துகின்றோம்

said...

சாதாரண மக்கள் பங்கேற்கக்கூடிய ஓட்டம், நீச்சல் போன்றில்லமல், மேட்டுக்குடி மக்கள் கைக்காசைப் போட்டி பயிற்சி பெற்று பதக்கம் பெரும் இவ்விளையாட்டுகளுக்கு நீங்கள் பெருமை படக்கூடாது. சமூகத்தின் அடித்தட்டில் இருந்து வெற்றியாளர்களை உருவாக்க வக்கில்லாத நாடு பணக்காரர்களின் வெற்றியை தன்னுடையதாக கொண்டாடுவது ஏன்னு புரியல !

ஒண்ணுமில்லை ரீச்சர், நம்ம அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றதுக்கு நம்மாளுங்க சில பேர் சொல்லி இருக்கும் ஸ்டேட்மெண்ட்ஸ். இந்த மாதிரி பேசின ஞாநிக்கு சப்போர்ட் வேற! அப்படி எல்லாம் இல்லாம அழகா வாழ்த்து சொன்ன உங்களுக்கு நன்னி. உங்களைப் படிப்பவர்களுக்கு இந்த நல்ல பழக்கம் தெரிஞ்சா சரி! :)

said...

//குண்டு எறியும் போட்டியில் நியூஸியின் Valerie Vili முதலிடம்.//

அந்த விளையாட்டைப் பார்த்தேன். சூப்பராக எறிஞ்சாங்க. நியூசி வீரவீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள் !

Anonymous said...

தமிழ்ச்சங்கம் தொடங்கி 25 வருஷம் ஆச்சாம். அதுக்குத்தான் போனேன்

said...

வாங்க கொத்ஸ்.

நம்ம வாலரி விலி, ரொம்பக்கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவங்கதான். சின்ன வயசிலேயே பெற்றோர்களை இழந்து, இன்னொரு குடும்பத்தால் வளர்க்கப்பட்டாங்க.

எல்லாத்துக்கும் அரசே செய்யணுமுன்னு இருந்தா எப்படி? அதேசமயம், நாட்டுக்குப் பெருமைதேடித்தரும் விளையாட்டு வீரர்களிடமும் அரசியல் விளையாண்டால் ..............

said...

வாங்க கோவியாரே.

பாராட்டுகளுக்கு நன்றி.

said...

சின்ன அம்மிணி,

நிகழ்ச்சிகள் எப்படி இருந்துச்சு?

மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

said...

நானும் தொடர்ந்து பார்த்துட்டு வரேன், வீரங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.

said...

வாங்க க.ஜூ.

பாராட்டுகளுக்கு நன்றி.

இங்கே அநேகமா எல்லா ஊர்களுக்கும் பதக்கங்களைக் கொண்டுவந்து காட்டிட்டுப் போவாங்க. அந்தந்த ஊர்களில் அவுங்களுக்கு வரவேற்பு வைப்போமில்ல!!!