இவனுங்களை என்ன பண்ணினாத் தகும்? அப்படியே கொதிக்கும் வெந்நீரில் போட்டுத் தோலை உரிக்கலாமா? இல்லே பேசாமக் கூர்மையான கத்தியை வச்சுத் துண்டுதுண்டா நறுக்கலாமா? எப்படின்னாலும் நறுக்குனதுகளைத் தூக்கிப்போட முடியுமா? வேகவச்சுக் கறிபண்ணித் தின்னத்தானே வேணும்?
விருந்துச் சமையலோ இல்லை வெறும் ஞாயித்துக்கிழமைக்கான ஸ்பெஷலோ... அப்படி இல்லைன்னாலும் தினப்படிச் சமையலை ருசியாக்க அநேகர் பயன்படுத்தும் காய் என்ன?
ஒன்னுமே செய்யாமல் சும்மா சோஃபாவில் இருக்கும் ஆட்களை எப்படிக் கவுரவிக்கிறோம்? வேற எந்த காய்கறிகளுக்கும் இல்லாத ஒசந்த மரியாதை எதுக்கு இருக்கு? couch பூசனிக்காய்..... நல்லவா இருக்கு?
எல்லாத்துக்கும் விடை ஒன்னேதான். உருளைக்கிழங்கு. சாதாக்கறி, காரம்போட்டக் கறி, ரோஸ்ட், மசாலாக்கறி, பூரிக்கேத்த ஜோடியான கிழங்கு, மசியல் இப்படி எக்கச்சக்க ஐட்டம் செஞ்சுக்கலாம்.
பொதுவா நம்ம ஊர்ப் பக்கத்தில் உருளைக்கிழங்குன்னா அநேகமா ஒரே ஒரு வகைதான் கிடைக்கும். சிலசமயம் கோலிகுண்டுபோல சின்ன உருளை கிடைக்கும். என் தோழிவீட்டில் Ball curry ன்னு முழுசாப் போட்டுச் செய்வாங்க. ருசி அப்படியே தூக்கிக்கிட்டுப் போகும்.
இங்கே நியூஸி வந்த புதிதில் 20 கிலோ உருளைக்கிழங்கு 4 டாலருக்குக் கிடைக்கும். வாங்கினதே இல்லை. அவ்வளோ வாங்குனா திங்க ஆள் வேணாமா?
ஒருமுறை 'ரெட் ராஸ்கல்' என்ற பெயரில் அழகான இளம் பிங்க் நிறத்தில் உருளையைப் பார்த்தேன். பக்கத்தில் குவிச்சுவச்சுருந்தச் சக்கரைவள்ளிக்கிழங்குலே இருந்து சாயம் ஒட்டிக்கிச்சோன்னுகூட நினைச்சேன். இங்கே சக்கரைவள்ளிக்கிழங்குக்குப் பெயர் என்னன்னு சொல்லுங்க? குமரா Kumera. கூமெரா:-)))) இதுலேயும் வெளிர் மஞ்சள் நிறவகை ஒன்னு கிடைக்கும். அது கோல்டன் கூமெரா.
உருளையில் ஏராளமான வகைகள் இருக்குன்றதே இங்கே வந்தபிறகுதான் தெரிஞ்சது.
Red Rascals.இதுக்கு Van rosa, Desiree ன்னும் பெயர்கள் உண்டு.
Rocket, Swift , Liseta இதெல்லாம் 60 நாளில் பலன் கொடுக்கும் வகைகள்.
Jersey Bennes, Cliff Kidney, Ilam Hardy, Maris Anchor இதெல்லாம் 90 நாள் எடுக்கும்.
சிப்ஸ்க்கு , வேகவைத்து அப்படியே சாப்பிட, ஜாக்கெட்டோடு(தோலுடன்) அவனில் வச்சு ரோஸ்ட் செய்ய, Mashed Potato, ஸாலட் செய்யன்னு தனித்தனி வகைகள் இருக்கு. இங்கிலாந்தில் மட்டும் 450 வகைகள் விளையுதாம். இங்கே நியூஸிக்கு உருளையைக் கொண்டுவந்தவங்க பிரிட்டிஷ்காரர்கள்தான்.
இது நிறைஞ்ச சத்துள்ள உணவும்கூட. அரிசியைவிட கொழுப்புச் சக்தி கம்மின்னு பொடெடோ கவுன்ஸில் சொல்லுது. பொட்டாஸியம் அதிக அளவில் இருக்காம்.
உருளையின் வயசு 6000 வருசத்துக்கு மேலே. முதல்முதலில் பெரு நாட்டில் Inca Indians பயிரிட்டாங்களாம். (ஹைய்யா....'இண்டியன்ஸ்' இதுலே நம்ம பெயரும் பாதி இருக்கு )
இப்ப ஒரு அவசர சமையல் குறிப்புப் பார்க்கலாம்.
சிம்பிள் கறி:
வேகவைச்ச உ.கிழங்கு 3 ( தோலை உரிச்சுப் பெரிய துண்டுகளா நறுக்கி வச்சுக்கணும்)த் துண்டங்க
பூண்டு நாலு பற்கள்
இஞ்சி - ஒரு ரெண்டு செ.மீ நீளத்துண்டு
குழம்புப்பொடி இல்லைன்னா சாம்பார்ப்பொடி இதுலே ஒரு டீஸ்பூன்( இது எதுவும் கைவசல் இல்லையா? நோ ப்ராப்லம். மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி இருக்குமில்லை? அதுலே தலா அரை டீஸ்பூன்)
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
உப்பு முக்கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
ஆம்ச்சூர் இல்லைன்னா கெட்டியானப் புளிக்கரைச்சல் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 டீஸ்பூன்
கருவேப்பிலை - தனித்தனி இலையா ஒரு பத்து. ( ஒரு இணுக்குன்னு சொன்னா பலருக்குப் புரியலையே)
பூண்டு & இஞ்சியை நல்லா சதக் சதக்குன்னு நசுக்கிக்குங்க. கல்பத்தாவுலே வச்சு நசுக்கினா நல்லா இருக்கும். (பின்னே? நான் புதுசா ஒரு கல்பத்தாவை வாங்குனதை இப்பச் சொன்னாத்தானே உண்டு)
கல்பத்தா= சின்னக் கல் உரல்.
(பத்தர்ன்னா இந்தியிலே கல்லுன்னுதான் பொருள். அது என்னமோ அவுங்க கல்பத்தான்னு பெயர் வச்சுருக்காங்க.ஒருவேளை..... இப்ப வேணாம். இன்னொருநாள் பார்க்கலாம்)
செய்முறை:
ஒரு ஃப்ரையிங் பேனை அடுப்பில் வச்சுச் சூடானதும் எண்ணெய் ஊத்துங்க. அதுலே நசுக்குன இஞ்சி & பூண்டு, கருவேப்பிலை போட்டு வதக்கணும். லேசா புரவுன் நிறம் ஆனதும் குழம்பு, மஞ்சள், பெருங்காயப்பொடிகளைச் சேர்த்து வறுத்துக்கிட்டு உப்பையும் போட்டுக்குங்க. புளிக்கரைச்சலையும் இப்ப சேர்த்துக்கலாம். எண்ணெயில் வறுபட்டதும் உருளைக்கிழங்குத் துண்டங்களைச் சேர்த்து ரெண்டு நிமிஷம் நல்லா வதக்கி எடுத்தா வேலை ஆச்சு. அடுப்பு இளம் தீயா எரியணும். சாம்பார், ரசத்துக்குத் தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.
புதுவரவும் பொட்டேட்டோக் கறியுமுன்னுகூடத் தலைப்பு வச்சுருக்கலாம். அன்னிக்கு அதான் கல்பத்தா வாங்குன வீகெண்ட் ஒரு யானையும் வாங்குனோம்:-)))))
சரி. உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம். இன்னிக்கு அவுங்கவுங்க வீட்டுலே எதாவது உருளைக்கிழங்கு வகை சமைச்சுச் சாப்பிடுங்க. கொஞ்சமாச் சாப்பிடுங்க. என்னதான் சக்தி இருக்குன்னு சொல்லிக்கிட்டாலும் இது வாய்வுப் பதார்த்தம். ஆளைத் தூக்கிட்டுப்போயிறப்போகுது, உஷார்:-)
Wednesday, August 27, 2008
ரெட் ராஸ்கல்ஸ்
Posted by துளசி கோபால் at 8/27/2008 09:15:00 AM
Labels: Potato, சமையல் குறிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
ரீச்சர்,
ரெட் ராஸ்கல்ஸ் என்ற தலைப்பின் மூலம் கலைஞருக்கு தாங்கள் தரும் ஆதரவு நன்றாகப் புரிகிறது.
வகுப்பறையில் அரசியல் கலக்கலாமா என்ற கேள்வி கேட்க முனைந்தால் எனக்கு முத்திரை குத்தப்படுவது நிதர்சனம் என்பதால் அந்தக் கேள்வி சாய்ஸில் விடப்படுகிறது.
//இது வாய்வுப் பதார்த்தம்//
அதுதான் இஞ்சி பூண்டு போடறோமே, பர'வாய்'இல்ல
இங்கே பிங்க் ராஸ்கல்ஸ் பார்த்திருக்கிறேன். ரெட் பார்கல, நான் ராஸ்கல் ரசிகன், எப்படி இருந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சமயத்தில் துளிர்விட்டு இருப்பதை வெட்ட மனது வராது !
மேடம் நான் கூட பயந்து போய்டேன்..என்னடா இது துளசி மேடம் இப்படி கொலை வெறி ஆகிட்டாங்கன்னு ;-)
உங்க குழம்பு சூடாகுதோ இல்லையோ உங்க பதிவு சூடாகிடும்னு நினைக்கிறேன் :-))))
//கிரி said...
மேடம் நான் கூட பயந்து போய்டேன்..என்னடா இது துளசி மேடம் இப்படி கொலை வெறி ஆகிட்டாங்கன்னு ;-)
உங்க குழம்பு சூடாகுதோ இல்லையோ உங்க பதிவு சூடாகிடும்னு நினைக்கிறேன் :-))))
8/27/2008 1:45 PM //
இவரு பதிவை படிக்காமல் பின்னூட்டுகிறார். பதிவில் குழம்பு இல்லை வறுவல் / பொறியல் தான்
என்ன இது... வழக்கமாக இப்படியெல்லாம் எழுதுகிறவர் இல்லையே என்று நினைத்துக்கொண்டு வந்தேன். என்ன கொலைவெறி என்று பார்க்கத்தான்:) அவிச்சுட்டீங்களே துளசீ...
வாங்க கொத்ஸ்.
எனக்கொரு உண்மை இப்பத் தெரிஞ்சாகணும்.
கலைஞர்..... 'ரெட் ராஸ்கல்ஸ்' என்ற சொற்களைத் தமிழ்ச் சொற்களா அறிவிச்சுட்டாரா?
இதுலே என்ன அரசியலும் நுண் அரசியலும்?
ஆமாம்னு பதில் சொன்னீங்கன்னா...அடுத்த தமிழ் படத்துக்கு டைட்டில் ரெடி:-))))
ஆஹா...சின்ன அம்மிணி.
பரு'வாய்'இல்லையா?:-)))
தலைப்பைப் பார்த்து மிரண்டுட்டோம்ல... :)
உருளைக் கிழங்கு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். இங்க கேண்டீனில் விதவிதமா உருளைக் கிழங்கு பொடிமாஸ், பிரெஞ்ச் பிரை, Etc என்று பல டிசைனில் செய்வார்கள். ஆனால் சாப்பிடத்தான் முடியாது. வாயுத் தொல்லை.
வாங்க கோவியாரே.
அதான் இங்கேயும். ஆன்னா ஊன்னா மொளைச்சுருது. நானும் தொட்டியிலே நட்டு வச்சுருவேன். வாழணுமுன்னு ஒரு துடிப்பு அதுக்கும் இருக்கு பாருங்க!!!
வாங்க கிரி.
அடுத்தமுறை கோவியாரைச் சந்திக்கும்போது கவனமா இருங்க.
பதிவுகளைப் படிக்காமப் பின்னூட்டறீங்கன்னு உங்க மேல் இ.பி.கோ( இணையப் பின்னூட்டக் கோட்)111 எண்ணில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது:-))))
வாங்க தமிழ்நதி.
ஆஹா.... இப்படியெல்லாம் தலைப்பிட்டால்தான் உங்களையெல்லாம் இங்கே வரவைக்க முடியுது:-))))
இங்கே இந்த வகை உருளைக்கிழங்குக்கு இந்தப் பெயர்தான் வச்சுருக்காங்க.இப்படித்தான் விளம்பரமும் செய்யறாங்க.
தினம் தின்னும் உருளைக்கும் விளம்பரம் வேண்டித்தானே இருக்கு!!!!
வாங்க தமிழ் பிரியன்.
இங்கேயும் உருளையோ உருளைதான். அதிலும் தமிழ்ச்சங்க விழாக்களில் 'பாட்லக்'ன்னா இதுவேதான் வகைவகையா மேசை நிறைய இருக்கும்.
ஒரே 'பேட் லக்'தான்:-)
டீச்சர்,
தலைப்ப பார்த்து, என்னடா டீச்சர் யாரைத்திட்டுறாங்கன்னு பார்க்க வந்தா, நீங்க உருளைகிழங்கப் பத்தி சொல்லியிருக்கீங்க.
நீங்க சொல்லிருக்கத படிச்சா, ரொம்ப சுலபமாத்தான் இருக்கும் போல , நான் அருமையா சுடுதண்ணி சமைப்பேன், இப்ப இதையும் செஞ்சு பார்க்குறேன்.
//கோவி.கண்ணன் said...
இவரு பதிவை படிக்காமல் பின்னூட்டுகிறார். பதிவில் குழம்பு இல்லை வறுவல் / பொறியல் தான்//
அடடடா! ஒரு flow க்கு சொன்னா ..மேடம் கோவி கண்ணன் கூறியதை வன்மையா கண்டிக்கிறேன்...இவர் குற்றம் கூறியே பெயர் வாங்கும் புலவர் அதனால இவர நம்பாதீங்க.
உருளை என்றால் பாய்ந்து காலி செய்துடுவாங்க எல்லாரும்..
நேற்று பூரா காரம்போட்ட உருளை சிப்ஸை தட்டு நிறைய போட்டுட்டு சாப்பிட்டுக்கிட்டே இணையத்துல வாசிச்சிட்டிருந்தேன்..
கல்பத்தாவுக்கும் புது யானைக்கும் வாழ்த்துக்கள்... கல்பத்தாவை வச்சு இன்னொரு பதிவு ரெடி போலயே..
// இது வாய்வுப் பதார்த்தம். ஆளைத் தூக்கிட்டுப்போயிறப்போகுது, உஷார்:-)//
இம்புட்டு சொல்லியும் இந்த மனுசன் கேட்கலியே !
இப்ப பண்ணிப்போட்டாத்தான் ஆச்சுன்னு வீம்பு பண்ண
நானும் பண்ணிப்போட, வாய்வு அமக்களம் பண்ண,
இவரு போடற சத்தத்திலே காலனிலே இருக்கறவங்க
சண்டைக்கே வந்துட்டாக !
மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
பி.கு: நான் பொன் கலர் வரும்போது கொஞ்சம் அஜினமோட்டோ
போட்டு, கால் ஸ்பூன் நெய் விட்டுப்பாத்தேன். மொறு மொறுன்னு
பாருங்க.. தின்னு பாத்தா ஸ்வர்க்கம்தான்.
தலைப்பை பார்த்து என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன். :)
உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
நீங்க அமிதாப் பச்சனை துரத்தி கிட்டு இருக்கீங்க.
அவரு 3 ஆவது இடத்தில். நீங்க 13 ஆவது இடத்தில். வாழ்த்துக்கள்.
http://news.linq.in/
best blogs of all time categoryil urs in 13th place
உருளைக்கிழங்கை வேக வச்சதுமே பாதி தீர்ந்து போயிடும்:0
இப்படியெல்லாம் வேற சமைச்சுட்டக் கேக்கணுமா. வாயு மிரட்டறதால வாரம் ஒரு முறைதான் இங்க அதற்கு வரவேற்பு. நம்ம சென்னையிலே ஒரு நாள் விட்டு ஒரு நாள் இவரு வந்துடுவாரு மேஜைக்கு. நீங்க சொல்லியிருக்கிற அழகுக்கு படத்தைப் பார்த்தாலே ருசியா இருக்கு துளசி:)
பசி நேரத்திலா இதை திறப்பேன், நாக்குல ஜலம் கொட்டுதுங்க.!
உருளைக்கிழங்க்குக்கு இப்படி ஒரு பேரா, சிப்ஸ் ருசியா இருந்தா சரி
வாங்க ஜோசப் பால்ராஜ்.
முதல்முறையா வந்துருக்கீங்க போல!!!!
நலமா?
நம்ம பதிவர்களில் 'இவன்' அட்டகாசமாச் சுடுதண்ணி சமைப்பார். நீங்க ரெண்டாவது ரேங்க்:-)))))
கிரி,
அவரது 'எண்ண ஓட்டத்துலே' பிழை வந்துருக்குன்னு சொல்றீங்களா? :-))))
வாங்க கயலு.
கல்பத்தா ரொம்ப அழகா அம்சமா அமைஞ்சுருக்குல்லே? நம் தேவைகளுக்குன்னே பார்த்துப்பார்த்துச் சீனாக்கார(ன்)ர் செஞ்சு அனுப்புவதுதான்:-))))
யானை மட்டும் நம்ம ஊர்து. 'இன் லே' வேலைப்பாடு அருமையா இருக்கு. 120/60/30ன்னு வாங்கினேன்.இன்னும் காத்திருந்தால்....ம்ஹூம்... 15க்கு வராதுல்லே ?
இது 'பிடி'ப்பா:-)
வாங்க மீனாட்சி அக்கா.
ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு!! சுகமா இருக்கீங்களா?
நம்மூட்டுலே அஜினோமோட்டோ போடறதில்லை.msg கூடாதுன்னு இங்கே சொல்றாங்க.
நெய்யும் தற்சமயம் பொய்தான்(-:
கொ. கூடிக்கிட்டு இருக்காம்!!!
வாங்க புதுகை தென்றல்.
ஆஹா.... இப்படித் தென்றல் வந்து சொல்லும் சேதி தேனாய் இனிக்குதே.
ராஸ்கலை உங்களுக்குப் பார்ஸலா அனுப்பவா?
வாங்க வல்லி.
வாயு புத்திரர்களா இருக்காங்கப்பா எல்லாரும்:-)))
இங்கே எப்பவாவதுதான் சமைப்பேன்.
அதான் ஏகப்பட்ட வகை இருக்கே....
நாளைக்கு மொய்மொய்:-)
வாங்க தாமிரா.
முதல்முறை??????
வணக்கம்.
பத்தும் பறந்துருச்சா?
அடடா.....
வாங்க குடுகுடுப்பை.
இந்த வகை 'ஆல்ரவுண்டர்'தான். சிப்ஸ்க்கும் நல்லா இருக்கும். ஆனா சிப்ஸ் கடைக்காரர்களுக்கு விலை கட்டுப்படி ஆகாது.
பார்ஸலா அனுப்பவா?//
பிள்ளைகளுக்காக செஞ்சாலும் நான் சாப்பிடுவதே இல்லை.
வங்காய செஞ்சு அனுப்புங்க :)))
புதுகை தென்றல்,
வங்காயக்கு எங்கே போவேன்? வெங்காயம்தான் எக்கச்சக்கமாக் கிடைக்குது.
ஃபிஜியில் இருந்து வரும் வங்காய், வந்த அன்னிக்கே வாடலாத்தான் கிடைக்கும்(-:
செய்து பார்த்திடறேன். பாட்டி வேறு மொறு மொறுக்கு கூடுதல் டிப்ஸ் கொடுத்து இன்னும் நாவில் நீருறச் செய்து விட்டார்கள்.
உருளைப் பற்றிய பதிவிலும் உருளைக்கால்களுடன் ஒய்யாரமா போஸ் கொடுக்க வந்துட்டார் ஆனையார்:)))!
பதிவில் யாணை
புரபைலில் பூணை
சமையலில் உருளை
ஆ
கவிதை கவிதை
வாங்க ராமலக்ஷ்மி.
'பாட்டி சொல்லைத் தட்டாதே'
எங்கும் எதிலும் இருப்பான் அவன் யாரோ.......
யானை(முகத்)தான் வேறென்ன?:-)))
வாங்க முரளிகண்ணன்.
கொஞ்சம் 'அழுத்தாம' அன்பாத் தடவிக் கொடுக்கணுமாம். ஒரே புகார் செய்யுதுங்க.
யாரா?
யானை யும் பூனையும் தான்:-)
Post a Comment