Tuesday, August 12, 2008

ஜொலிம்பிக் ஜோக்ஸ்.:-))))))))

நிறையச் சொல்லணுமுன்னு இருக்கு. ஆனா எல்லாம் இப்ப மறந்து போச்சு.....

===============

ஆமாம்..... ஒலிம்பிக் முதல்நாள் விழாவுக்கு ஏன் நம்ம பிரதமர் போகலை?

ஐயோ.... அங்கே புஷ் வராரே. எதுலேயாவது கையெழுத்து வாங்கிட்டா??


====================

அதென்னங்க அந்த அமெரிக்கப் பையன் ஆறு மெடல், எட்டு மெடலுன்னு கணக்கு சொல்லிக்கிட்டு இருக்கார்?

வேற வழி? பின்னாலே நின்னுக்கிட்டு புஷ் புஷ்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காராம் புஷ்.

==============================

இந்தமுறை எப்படியாவது நாம மெடல் வாங்கிறணுமுன்னு தலைவர் புலம்புறாரே......

அவருக்கு ஒன்னும் தெரியலை..... நம்ம டாக்டர் விஜய்யை அனுப்பி இருந்துருக்கணும். எல்லா மெடல்களையும் வாரிக் குவிச்சுக் கொண்டுவந்துருப்பாருல்லே!

==================

ஆமாம் அது என்ன ஒரே நாடு, ஒரே கனவு?

சிம்பிள். உலகமெல்லாம் சீனா. அங்கே முழுசுமாய் சீனமக்கள்

============

தாலி கட்ட மாட்டேன்னு மாப்பிள்ளை ஏன் கடைசி நிமிசத்தில் தகராறு செய்யறாராம்?

எல்லாம் வரதட்சிணைத் தகராறுதான்.

ரெண்டு ஒலிம்பிக் தங்கமெடலாவது சீர்வரிசையில் வைக்கணுமாம்.....


========================

எதுக்கு ஆதரவு வாபஸ்ன்னு தலைவர் கத்திக்கிட்டு இருக்கார்?

அவர் பேரனை ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அனுப்பலையாம்.

வேடிக்கை பார்க்கத்தானே? அனுப்பி இருக்கலாம்லெ.

அடப் போப்பா. எதுலேயாவது கலந்து வெளையாடணுமாம்.

=============================

டாக்டர் விஜய் எங்ண்ணா இருக்காரு?

ஷூட்டிங் லே பிஸிங்ணா.

அட! ரைஃபிள் ஷூட்டிங்கா? தங்கப்பதக்கம் உறுதிதாங்ணா....

அடப்போங்ணா .... இவர் சினிமா ஷூட்டிங்லே இருக்காருங்ணா.

=====================

200 மீட்டர் ஓட்டப் பந்தயம்.

கடைசியில் மெதுவா நடந்துவரும் 'வீரரிடம்' (அரசியல்வாதியின் மகன்)

அண்ணே இது ஓட்டப்பந்தயம்.................

ஏய்ய்ய்ய்ய்ய்ய் .........நான் யாருன்னு தெரியும்லே.............


====================

தலைவர் ஏன் சோகமா இருக்கார்?

பீச் வாலிபால் பார்க்கத் தடா போட்டுட்டாங்களாம் சின்னம்மா.


====================
எங்கேய்யா சூட்கேஸோட கிளம்பிட்டீர்?

மெடல் 'வாங்க'த்தான்.

===================

31 comments:

said...

தங்கம் வென்ற அபிநவ்க்கு மனமார்ந்த பாராட்டுகள்.

said...

நாங்க தான் வரோமே.அதுக்குள்ள நீங்களாவே ஒரு பின்னூட்டமா??
ஜோக்ஸ் அபார்ட்(??!!) ஜோக்ஸ் சூப்பர்

said...

//ஐயோ.... அங்கே புஷ் வராரே. எதுலேயாவது கையெழுத்து வாங்கிட்டா??
//

;)
not to fear. i dont think Bush is in politics mood. he is enjoying his last few months.

said...

நம்ம எம்.பி. ஓட்டத்திலே ஒலிம்பிக்ல தங்க பதக்கம் வாங்கிட்டார்
எப்படி
முன்னாலே ஒருத்தர் 25 கோடி பணத்தை அவர் கண் முன்னாலே காட்டினாராம்

ஏல்லா ஜோக்கும் ஃபைன் பாராட்டுக்கள்.

said...

தங்கம் வென்ற அபிநவ்க்கு மனமார்ந்த
பாராட்டுகள்!

ர்ர்ரிப்ப்பீட்டேய்

said...

ஹா! ஹா!
நன்றாக இருக்கு.

said...

:-))))))

said...

வங்க பிரேம்ஜி.

பதிவு எழுதிவச்சே ரெண்டு நாளாச்சு.

அப்ப தங்கம் நமக்கில்லைன்னு எரிச்சலில் இருந்தேன்.

இப்ப வாயெல்லாம் (தங்கப்)பல்:-)

said...

வாங்க சர்வேசன்.

//he is enjoying his last few months.//


ரொம்பச் சரி. இல்லேன்னா பீச் வாலிபால் மங்கையரின் 'பின்பக்கத்தை'த் தட்டிக் கொடுத்துருப்பாரா?:-))))

said...

:) ;) :)

நீங்க ஜோக்ஸ் எல்லாம் எழுதுவீங்களா டீச்சர்? ரொம்ப நல்லா இருக்கு

said...

அத்தனையும் ஹா ஹா என்றால்

//200 மீட்டர் ஓட்டப் பந்தயம்.

கடைசியில் மெதுவா நடந்துவரும் 'வீரரிடம்' (அரசியல்வாதியின் மகன்)

அண்ணே இது ஓட்டப்பந்தயம்.................

ஏய்ய்ய்ய்ய்ய்ய் .........நான் யாருன்னு தெரியும்லே.............//

இது ஹா ஹா ஹா ஹா.........

said...

:)) டாக்டர் விஜய் வேறயா இதுல?

ரைஃபில் ஷூட்டிங்க் சூப்பரு..

said...

:)))))))))
நானும் சிரிச்சிக்கிறேன்.... :))))

said...

வாங்க காஞ்சனா.

உங்க ஜோக்ஸ்:-)))))

said...

வாங்க சிஜி.

இனிமேலாவது மக்கள் மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்துனா நல்லது.

said...

வாங்க குமார்.

வயித்தெரிச்சலில் வந்து விழுந்தது இதெல்லாம்:-)))

said...

வாங்க ச்சின்னப் பையன்.

வருகைக்கும் சிரிச்சதுக்கும் நன்றி;-)

said...

வாங்க க.ஜூ.

வீட்டுலே சொல்லிக்கிட்டு இருந்த ஜோக்ஸ்களை, கோபால்தான் பதிவுலே போடச் சொன்னார்.

அப்படியும் நிறைய மறந்துபோச்சு.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றியோ நன்றி:-)

said...

வாங்க கயலு.

டாக்டரால் முடியாததுன்னு ஒன்னு உண்டா? :-)))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

நன்றி.

said...

//ஆமாம்..... ஒலிம்பிக் முதல்நாள் விழாவுக்கு ஏன் நம்ம பிரதமர் போகலை?

ஐயோ.... அங்கே புஷ் வராரே. எதுலேயாவது கையெழுத்து வாங்கிட்டா??//

ஹா ஹா ஹா

Anonymous said...

ஹஹஹா டாக்டர் விஜய் கிரிக்கெட்டுல ஒரு இன்னிங்ஸ் முடிச்சுட்டாரு, அடுத்தது ஒலிம்பிக்ஸ்தானே :)

said...

//வீட்டுலே சொல்லிக்கிட்டு இருந்த ஜோக்ஸ்களை, கோபால்தான் பதிவுலே போடச் சொன்னார்.//

இத சொல்லுங்க முதல்ல. அதான் நல்லா இருக்கு. :D

//அப்படியும் நிறைய மறந்துபோச்சு.
//

என்ன வில்லத்தனம்..? :p

said...

வாங்க கிரி.

வயித்து எரிச்சலைச் சிரிச்சுத் தணிச்சுக்கணுமுன்னு 'டாக்டர்' சொல்லி இருக்கார்:-)))

said...

வாங்க சின்ன அம்மிணி.

கிரிக்கெட்டுலே நல்லா 'கோல்' போடறவங்க இருக்காங்கப்பா:-))))

said...

வாங்க அம்பி.

லொள்ளூதான். சூர்யாகிட்டே சொல்லி வைக்கணும்.

நான் என்ற அகந்தை இல்லாததால் நான் போடாம விட்டதுக்கு இப்படியா?

வீட்டுலே நான் சொல்லிக்கிட்டு இருந்த ஜோக்ஸ்களை,

said...

ரீச்சர், நாம உண்டு, நம்ம பாடங்கள் உண்டுன்னு இல்லாம என்ன இதெல்லாம்.

எல்லாம் ஆனந்தவிகடன், குமுதம் தரம். சிரிப்பே வரலைன்னு உண்மையைக் கூட சொல்ல முடியாம பண்ணிட்டீங்களே!!

said...

ஹா ஹா ஹா... இதெப்படி நான் மிஸ் பண்ணிட்டு இருக்கேன். வயிற்று எரிச்சலுக்கு ஜெலுசில் சாப்பிட்ட மாதிரி இருக்கு, சிரிப்போ...சிரிப்பு.

ஆமா, மேலே ஒருத்தர் (koths)உட்கார்ந்துட்டு சிரிப்பே வரலைன்னு சொல்றாரே any problem :)))?

said...

வாங்க கொத்ஸ்.

எனி ப்ராப்ளம்?

வாய் விட்டுச் சிரிக்கலைன்னா..... நோய் விட்டுப் போகாதாம்.

உடனே டாக்டரைப் பார்க்கவும்:-))))

said...

வாங்க தெகா.

அவர் கவலை அவருக்கு!!!